சிஎன்ஜி(CNG) கார் இன்சூரன்ஸ்
6000+ Cashless
Network Garages
Zero Paperwork
Required
24*7 Claims
Support
I agree to the Terms & Conditions
6000+ Cashless
Network Garages
Zero Paperwork
Required
24*7 Claims
Support
I agree to the Terms & Conditions
நீங்கள் சிஎன்ஜி வண்டியை வைத்திருந்தால் அல்லது பெட்ரோலில் இயங்கும் உங்கள் வண்டியை சிஎன்ஜிக்கு மாற்றும் எண்ணம் இருந்தால், வழக்கமாக நீங்கள் வைத்திருக்கும் கார் இன்சூரன்ஸ் அதற்கு போதும் என்று நினைத்தால், நீங்கள் இதை கட்டாயமாக படிக்க வேண்டும். ஏனெனில் இது நீங்கள் நினைத்ததைப் போல அல்ல.
உங்கள் மோட்டார் இன்சூரன்ஸை சிஎன்ஜி வண்டிக்கான இன்சூரன்ஸ் ஆக மேம்படுத்தும் போது நீங்கள் குறிப்பிட்ட விதிமுறைகள் பலவற்றைக் கடைப்படிக்க வேண்டியது அவசியம் ஆகும். அதிலும் குறிப்பாக சிஎன்ஜி கிட் ஆனது உங்கள் வண்டியின் செயல்திறன் முதல் இன்சூரன்ஸ் பிரீமியம் வரை, இத்துடன் சுற்றுச்சூழல் போன்ற அனைத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
சமீபகாலமாக சிஎன்ஜி வண்டிகளைப் பற்றி அடிக்கடி பேசப்பட்டு வருகிறது. நீங்கள் நீடித்து உழைக்கும் மற்றும் குறைந்த பராமரிப்பு செலவு கொண்ட வண்டியைத் தேடுகிறீர்கள் என்றால் நீங்கள் இதைத் தேர்வு செய்யலாம்.
வழக்கமான எரிபொருள் உங்கள் வண்டியிற்கு அளிக்கும் மைலேஜை, எரிபொருளின் மூன்றில் ஒரு பங்கு விலையிற்கே சிஎன்ஜி (அல்லது கம்பிரஸ்ட் நேச்சுரல் கேஸ்) வழங்குகிறது. எனவே, இது பெரும்பாலும் பயன்படுத்தப்படும் பெட்ரோல் அல்லது டீசலினால் இயங்கும் வண்டிக்கு சிறந்த மாற்றாக அமைகிறது.
இதுமட்டுமல்லாமல், சிஎன்ஜியினால் ஓடும் வண்டிகள் அனைத்தும் மிகக் குறைந்த அளவிலான கார்பன்-ஐ வெளியிடுகிறது , எனவே சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் எரிபொருளில் இதுவும் ஒன்றாகும்.
இது அனைவராலும் அவசியமாக கேட்கப்படும் கேள்வி ஆகும். சிஎன்ஜி கிட் பொருத்திய வண்டியைப்பெற இரண்டு முக்கிய வழிகள் உள்ளன.
பெட்ரோலில் இயங்கும் உங்கள் காரை சிஎன்ஜி காராக மாற்ற முடியும். நீங்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கும் உங்களின் பழைய காரில் புதிய சிஎன்ஜி கிட்-ஐ பொருத்தலாம். நல்லத் தரமான சிஎன்ஜி கிட்-ன் விலையானது சுமார் ரூ. 50,000 வரை இருக்கும். பொதுவாக. இது கார்-ன் டிரங்கில் பொருத்தப்படும்.
இருப்பினும், இது எளிதில் சேதமடையக்கூடும் என்பதால் உங்கள் இன்சூரரிடம் நீங்கள் இந்த கிட்-டிற்கு என்று தனியாக இன்சூர் செய்ய வேண்டும்.
இதில், சிஎன்ஜி கிட்-ஆனது உங்கள் காரில் முதலிலேயே பொருத்தப்பட்டிருந்தால், அதாவது உங்கள் உற்பத்தியாளரால் முன்பே பொருத்தப்பட்டிருக்கும். எனவே நீங்கள் வாங்கும் இன்சூரன்ஸில் சிஎன்ஜி தேர்வு ஏற்கனவே சேர்க்கப்பட்டிருக்கும்.
கார் இன்சூரன்ஸ் பிரீமியமானது எரிபொருளின் வகை மற்றும் இன்சுர்டு டெக்லேர்டு வேல்யூ (ஐடிவி) போன்ற பலக் காரணிகளால் பாதிக்கப்படும். உங்கள் வண்டியில் சிஎன்ஜி கிட்-ஐ சேர்ப்பதினால் இவ்விரண்டும் பாதிப்பிற்கு உள்ளாகும்.
பொதுவாக, சிஎன்ஜி கார்களுக்கான பிரீமியத் தொகையானது ரூ. 60 கூடுதலாக இருக்கும். இது மட்டுமல்லாமல், தேர்டு பார்ட்டி ஒன்லி பாலிசிகளோடு சேர்த்து சில கூடுதல் வரிகளும் வசூலிக்கப்படும். காம்ப்ரிஹென்சிவ் (விரிவான) பாலிசித் தொகையானது சிஎன்ஜி கிட் -ஆனது உங்கள் காரில் முதலிலேயே பொருத்தப்பட்டுள்ளதா அல்லது கார் வாங்கிய பின் பொருத்தப்பட்டதா என்பதன் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.
உங்கள் காரில் புதிதாக சிஎன்ஜி கிட்டைப் பொருத்தும்போது, அதைப் பற்றிய தகவலை உங்கள் இன்சூரர்ரிடம் தெரிவிக்க மறக்காதீர்கள். இது உங்கள் பாலிசியை மேம்படுத்த உதவியாக இருக்கும்.
பொதுவாக, சிஎன்ஜி வண்டியின் பராமரிப்பு செலவு அதிகம். மேலும் சிஎன்ஜி (CNG) கிட்-ஐ பொருத்துவதற்கும் அதிக அளவில் செலவு ஆகும். (நல்ல தரமான சிஎன்ஜி கிட் வாங்குவதற்கு சுமார் ரூ. 50,000 செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது). அதாவது உங்கள் பிரீமியத் தொகையானது கிட் மதிப்பைக் காட்டிலும் 4-5% அதிகமாக இருக்கலாம்.
சிஎன்ஜி உடன் வரும் வண்டிகளை மற்ற வகை வண்டியை இன்சூர் செய்வததைப் போல் இன்சூர் செய்யலாம். உங்கள் RC பூத்தில் சிஎன்ஜி சீல் உடன் எளிதாகப் புதுப்பிக்கலாம். மேலும் இன்சூரன்ஸ் வாங்கும் போதோ அல்லது புதுப்பிக்கும் போதோ எரிபொருள் வகையைக் குறிப்பிடுங்கள்.
இருப்பினும், பெட்ரோல் அல்லது டீசலில் இயங்கும் காரின் இன்சூரன்ஸ் பிரீமியத்தோடு ஒப்பிடுகையில் இந்த வண்டிக்கான பிரீமியமானது சற்று அதிகமாக இருக்கும் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ளுங்கள்.
வெஹிக்கில் /வண்டியின் CC |
தேர்டு பார்ட்டி பிரீமியம் (GST சேர்க்காமல்) |
1000 சிசி(cc)க்கு குறைவாக |
₹2,094 |
1000 சிசி(cc)க்கு மேல் ஆனால் 1500 சிசி(cc)க்கு குறைவாக |
₹3,416 |
நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களை விஐபி-கள் போல நடத்துகிறோம், அது எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
உங்கள் வாகனத்தில் சிஎன்ஜி கிட்டை பொருத்துவது அல்லது முன்பே பொருத்தப்பட்ட சிஎன்ஜி வண்டியை வாங்குவது என்பது இன்றைய எரிபொருள் விலையேற்ற சூழ்நிலைக்கு ஒரு சிறந்த மாற்றுத்தீர்வாக இருக்கும்.
உங்கள் காரை சிஎன்ஜியில் இயங்கும் வகையில் மாற்றுவதற்கு முன்பு ஒரு புதிய சிஎன்ஜி காருக்கான இன்சூரன்ஸ் வாங்குவதைத் தவிர, நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய இன்னும் சில தகவல்கள் உள்ளன. அவை:
உங்கள் காரை சிஎன்ஜி)க்கு மாற்ற வேண்டும் என்று நீங்கள் முடிவெடுப்பதற்கு முன்பு, நீங்கள் வசிக்கும் இடத்திற்கு அருகில் சிஎன்ஜி எரிபொருள் கிடைக்கிறதா என்பதை தெரிந்துகொள்ளுங்கள். இதோடு சிஎன்ஜி எரிபொருள் கிடைக்கும் இடத்தை அடைய நீங்கள் எவ்வளவு தூரம் செல்ல வேண்டியதிருக்கும் என்பதையும் பாருங்கள். சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால் எரிபொருள் நிரப்ப அதிக எரிபொருளைச் செலவழிக்க வேண்டிய நிலை இருக்கக்கூடாது!
சிஎன்ஜியில் இயங்கும் வண்டியானது அதிக எரிபொருள் திறன் (ஃப்யூல் எஃபிசியன்சி) கொண்டது. அதாவது, குறைந்த அளவிலான எரிபொருளை பயன்படுத்தும் வண்டிகள் ஆகும். ஆனால், பெட்ரோல் எஞ்சினுடன் ஒப்பிடும் போது வண்டியின் செயல்திறனானது குறைவானதாக இருக்கும்.
சிஎன்ஜியில் காரை இயக்குவதினால் அதிக எரிபொருள் செயல்திறனை (ஃப்யூல் எஃபிசியன்சி) அளிக்கும், ஆனால், இதில் இருக்கும் ஒரு முக்கிய குறைபாடு என்னவென்றால், இது காரின் செயல்திறனை பாதிக்கும்.
பெட்ரோல் எஞ்சினுடன் ஒப்பிடும் போது, த்ரோட்டிலுக்கான ரெஸ்பான்ஸ் குறையும்; சிஎன்ஜியில் இயங்கும் மோட்டாரிலிருந்து அந்த அளவிலான சரியான ரெஸ்பான்ஸை பெற முடியாது. மேலும், உங்கள் காரை அடிக்கடி சர்வீஸ் செய்ய வேண்டியிருக்கும்.
ஏனென்றால், எரிபொருளானது வால்வு மற்றும் சிலிண்டருக்கும் இடையே லூபிரிகன்டாக செயல்படும், ஆனால், சிஎன்ஜி ஆனது அப்படி செயல்படாது. இதுவே சீக்கிரமாக துருப்பிடிப்பதற்கான காரணமாக இருக்கலாம்.
உங்கள் வண்டியில் சிஎன்ஜி கிட்-ஐ பொருத்துவதற்கு இரண்டு வழிகள் உள்ளன - பழைய காரில் கிட்-ஐ பொருத்துவது அல்லது முன்பே பொருத்தப்பட்டிருக்கும் வண்டியை வாங்குவது. ஆனால் இதில் எது சிறந்தது? என்று ஒப்பிடும் போது, நீங்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கும் வண்டியில் புதிய சிஎன்ஜி கிட்டை பொருத்துவது மலிவானதாக இருந்தாலும், அதை செய்வதற்கு முன்பு கிட்-க்கும் வண்டிக்கும் இடையேயான இணக்கத்தன்மையை முதலில் சரிபார்க்க வேண்டும். தொழிற்சாலையில் பொருத்தப்பட்ட சிஎன்ஜி கிட் உடன் வண்டியை பயன்படுத்துமாறு பெரும்பாலும் பரிந்துரைக்கப்படுகிறது, ஏனெனில், அவை உத்தரவாதத்தோடு வருவதோடு மட்டுமல்லாமல் அவற்றை சர்வீஸ் செய்வதற்கு என்று கூடுதலாக ஆகும் செலவுகள் அனைத்தும் அதில் அடங்கிவிடும் போன்ற கூடுதல் நன்மையும் இருக்கிறது.
பெட்ரோலில் இயங்கும் வண்டியைக் காட்டிலும் சிஎன்ஜி வண்டியை பராமரிக்க ஆகும் செலவானது அதிகமாக இருக்கும். லீக்கேஜ், வையரில் இருக்கும் இன்சுலேஷன் சேதம் ஆவது போன்றவற்றைத் தடுக்க, உங்கள் வண்டியை அவ்வப்போது சரிபார்க்க வேண்டியிருக்கும்.
வழக்கமான பெட்ரோல்/டீசலில் இயங்கும் காருகளோடு ஒப்பிடும்போது, சிஎன்ஜி பொருத்தப்பட்ட காரை இன்சூர் செய்வதற்கு அதிக பிரீமியம் செலுத்த வேண்டும். ஆனால், நீங்கள் செய்யும் செலவிற்கு சிஎன்ஜி வாகனங்கள் தகுதியானவை தான்.
சிஎன்ஜி என்பது வழக்கமான பெட்ரோல் அல்லது டீசலுக்கான ஒரு மலிவான மாற்றாகும். இது சுற்றுச்சூழலுக்கு எவ்வித தீங்கையும் ஏற்படுத்தாது. குறைந்த அளவிலான எமிஷன் என்பதால் இது உங்கள் காரின் ஆயுளை நீட்டிக்கும்.
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் , உங்கள் எரிபொருள்(ஃப்யூல்) பட்ஜெட்டுக்கும் ஏற்றதாக இருப்பதால், உங்கள் காரில் சிஎன்ஜி கிட்டை இன்றே பொருத்திடுங்கள்!