வோக்ஸ்வேகன் டைகுன் கார் இன்சூரன்ஸ்

Get Instant Policy in Minutes*

Third-party premium has changed from 1st June. Renew now

Taigun Insurance: Buy/Renew Volkswagen Taigun Car Insurance Online

ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த வோக்ஸ்வேகன்  நிறுவனம் தனது மிட்-சைஸ் எஸ்யூவி டைகுன் மாடலை எஸ்யூவிடபுள்யூ யுக்தியுடன் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. 5 சீட்டர் கொண்ட இந்த கார் வரும் செப்டம்பர் 23-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

எம்க்யூபி-ஏ0-இன் ஃபிளாட்பார்மில் டைகுன் நவீன அம்சங்கள், பிரீமியம் இன்டீரியர் மற்றும் பலவற்றுடன் தயாரிக்கப்பட்டிருக்கிறது. எனவே, இந்த வோக்ஸ்வேகன்  புத்தம் புதிய எஸ்யூவியை வாங்க திட்டமிடுபவர்கள் விபத்துகள் மற்றும் பிற எதிர்பாராத சூழ்நிலையினால் ஏற்படும் ஃபைனான்ஷியல் புரடெக்ஷனை உறுதி செய்ய வோக்ஸ்வேகன்  டைகுன் கார் இன்சூரன்ஸைத் தேர்வு செய்ய வேண்டும்.

மோட்டார் வெஹிக்கில்ஸ் ஆக்ட், 1988 இன் படி தெருக்களில் பறக்கும் ஒவ்வொரு காருக்கும் தேர்டு பார்ட்டி லையபிளிட்டி கார் இன்சூரன்ஸ் பாலிசி கட்டாயமாகும். இந்தத் திட்டம் மூன்றாம் தரப்பினரின் இழப்புகளைக் காப்புறுதி செய்கிறது. இதற்கு பதிலாக, தேர்டு பார்ட்டி லையபிளிட்டி மற்றும் உங்கள் சொந்த காருக்கான பாதுகாப்பு ஆகிய இரண்டிற்கும் நிதிக் கவரேஜைப் பெற, காம்ப்ரிஹென்சிவ் கார் இன்சூரன்ஸை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.

இந்தியாவில் பல இன்சூரன்ஸ் வழங்குநர்கள் தான் வோக்ஸ்வேகன்  டைகுன் கார் இன்சூரன்ஸை வழங்குவதாக மார்தட்டி சொல்வதுண்டு. அத்தகைய இன்சூரர்களில் டிஜிட் நிறுவனமும் ஒன்று.

அடுத்த பிரிவானது டைகுன் இன்சூரன்ஸ் குறித்து டிஜிட் நிறுவனம் சில அம்சங்கள், அதன் வேரியண்ட்டுகளின் விலைகள், கார் இன்சூரன்ஸின் முக்கியத்துவம் மற்றும் டிஜிட் நிறுவனம் வழங்கும் பயன்கள் ஆகியவற்றை வழங்குகிறது.

வோக்ஸ்வேகன் டைகுன் கார் இன்சூரன்ஸ் விலை

ரெஜிஸ்ட்ரேஷன் தேதி பிரீமியம் (சொந்த சேதத்திற்கான பாலிசிக்கு மட்டும்)
அக்டோபர்-2021 29,639

**பொறுப்புத் துறப்பு - வோக்ஸ்வேகன்  டைகுன் ஜிடி பிளஸ் 1.5 டிஎஸ்ஐ டிஎஸ்ஜி பெட்ரோல் 1498.0 பிரீமியம் கணக்கீடு செய்யப்படுகிறது. ஜிஎஸ்டி சேர்க்கப்படவில்லை.

நகரம் - பெங்களூர், வாகன பதிவு மாதம் - அக்டோபர், என்.சி.பி - 0%, ஆட்-ஆன்கள் இல்லை & ஐடிவி இருப்பதிலேயே மிகக் குறைவு. பிரீமியம் கணக்கீடு அக்டோபர்-2021 இல் செய்யப்படுகிறது. மேலே உங்கள் வெஹிக்கல் விவரங்களை உள்ளிடுவதன் மூலம் இறுதி பிரீமியத்தை உறுதிசெய்யுங்கள்.

வோக்ஸ்வேகன் டைகுன் கார் இன்சூரன்ஸில் கவர் செய்யப்படுவது எவை?

டிஜிட்டின் வோக்ஸ்வேகன் டைகுன் கார் இன்சூரன்ஸை நீங்கள் ஏன் வாங்க வேண்டும்?

வோக்ஸ்வேகன் ட-ரோக் கார் இன்சூரன்ஸ் பிளான்

தேர்டு-பார்ட்டி காம்ப்ரிஹென்சிவ்

விபத்தின் காரணமாக சொந்த காருக்கு ஏற்படும் டேமேஜ்கள்/இழப்புகள்

×

தீ விபத்து ஏற்படும் பட்சத்தில் சொந்த காருக்கு ஏற்படும் டேமேஜ்கள்/இழப்புகள்ses to own car in case of fire

×

இயற்கை பேரிடரின் போது சொந்த காருக்கு ஏற்படும் டேமேஜ்கள்/இழப்புகள்

×

தேர்டு-பார்ட்டி வாகனத்திற்கு ஏற்படும் டேமேஜ்கள்

×

தேர்டு-பார்ட்டி சொத்திற்கு ஏற்படும் டேமேஜ்கள்

×

பர்சனல் ஆக்சிடன்ட் கவர்

×

தேர்டு-பார்ட்டி நபருக்கு ஏற்படும் காயங்கள்/மரணம்

×

உங்கள் கார் திருடு போவது

×

வீட்டு வாசலிலேயே பிக்-அப் செய்து டிராப் செய்யும் வசதி

×

உங்கள் ஐடிவி-ஐ தனிப்பயனாக்குவது

×

தனிப்பயனாக்கிக் கொள்ளக் கூடிய ஆட்-ஆன்களுடன் கூடுதல் பாதுகாப்பு

×
Get Quote Get Quote

காம்ப்ரிஹென்சிவ் மற்றும் தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸ் ஆகியவற்றின் வேறுபாடுகளைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ளுங்கள்

எவ்வாறு கிளைம் செய்வது?

எங்களுடைய கார் இன்சூரன்ஸ் பிளானை வாங்கியவுடனோ ரீனியூவல் செய்தவுடனோ, நீங்கள் டென்ஷன் இல்லாமல் இருக்கலாம், ஏனெனில் எங்கள் 3-படி கிளைம் ப்ராஸஸ் முழுமையாக டிஜிட்டல்மயமானது!

ஸ்டெப் 1

1800-258-5956 என்ற எண்ணில் எங்களை அழைத்தால் போதுமானது. எந்த படிவங்களையும் நிரப்ப வேண்டிய அவசியமில்லை!

ஸ்டெப் 2

நீங்கள் பதிவு செய்த மொபைல் எண்ணில் சுய ஆய்விற்கான லிங்க் அனுப்பப்படும். ஸ்டெப் பை ஸ்டெப் செயல்முறையின் வழிகாட்டுதலுடன் நீங்கள்டேமேஜ்களை ஸ்மார்ட் போன் மூலம் படம் பிடிக்க வேண்டும்.

ஸ்டெப் 3

நீங்கள் விரும்பும் ரிப்பேர் செய்யும் முறையை தேர்வு செய்யுங்கள்: எங்கள் கேரேஜ் நெட்வொர்க்கின் மூலம் ரீஇம்பர்ஸ்மென்ட் அல்லது கேஷ்லெஸ் என எது வேண்டுமோ அதனை தேர்வு செய்யலாம்.

டிஜிட் இன்சூரன்ஸ் கிளைம்ஸ் எவ்வளவு விரைவாக செட்டில் செய்யப்படும்? உங்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்தை மாற்றும் போது உங்கள் மனதில் வர வேண்டிய முதல் கேள்வி இது தான். நீங்கள் அதை செய்வது பாராட்டுதலுக்குரியது! டிஜிட் கிளைமின் ரிப்போர்ட் கார்டுகளை படிக்கவும்

டிஜிட்டின் வோக்ஸ்வேகன் டைகுன் கார் இன்சூரன்ஸ் பாலிசியைத் தேர்ந்தெடுப்பதற்கான காரணங்கள் என்ன?

எந்த கார் வாங்க வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுப்பது ஒருபுறம் இருக்க, கார் இன்சூரன்ஸை வாங்குவது என்பது அவர்கள் வாழ்க்கையில் எடுக்க வேண்டிய மற்றொரு முக்கியமான முடிவாகும். இருப்பினும், நம்பிக்கையான அணுகக்கூடிய இன்சூரரைத் தேர்ந்தெடுப்பது என்பது பெரும் வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது. உதாரணத்திற்கு, டிஜிட் அதன் பலதரப்பட்ட கஸ்டமர்களுக்குச் சேவை செய்ய பின்வரும் பயன்களை வழங்குகிறது.

  • டிஜிட்டைஸ்ட் கிளைமிங் பிராசஸ் - டிஜிட் நிறுவனத்தில் நீங்கள் கிளைம் செய்த தொகை செட்டில் செய்யப்படும் வரை நீங்கள் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. இன்சூரன்ஸ் வழங்குநர் உடனடியாகக் கிளைம்களை ஃபைல் செய்ய ஸ்மார்ட்போனில் இயக்கப்பட்ட சுய ஆய்வு முறையை வழங்கியுள்ளார். இப்போது, நேரடியான ஆய்வினால் ஏற்படும் சங்கடங்களைத் தவிர்த்து, டைகுன் இன்சூரன்ஸிற்கான உங்கள் கிளைமை நியாயப்படுத்த புகைப்படங்களை அனுப்பினால் மட்டுமே போதுமானது.
  • உயர் கிளைம் செட்டில்மெண்ட் ரேஷியோ - பொறுப்பான இன்சூரன்ஸ் வழங்குநராக இருப்பதால், டிஜிட் மிகக் குறைந்த நேரத்திற்குள் கஸ்டமர்கள் அதிகபட்ச கிளைம் செட்டில்மெண்டுகளைப் பெற உத்தரவாதம் அளிக்கிறது. இது அதன் நம்பகத்தன்மையை அதிகரிக்கும் வகையில் உயர் கிளைம் செட்டில்மெண்ட் ரேஷியோவிற்கான ரெக்கார்டைக் கொண்டுள்ளது.
  • தனிப்பயனாக்கப்பட்ட ஐடிவி( IDV) தொகை - டிஜிட் நிறுவனம் இன்சுர்டு டெக்லேர்டு வேல்யூவைப் பெறுவதற்காக வாகனத்தின் எக்ஸ்-ஷோரூம் விலையில் இருந்து டிப்ரிஸியேஷனைக் கழிக்கிறது. இப்போது, உங்கள் வோக்ஸ்வேகன்  டைகுன் இன்சூரன்ஸிற்கான விலையைச் சற்று அதிகரிப்பதன் மூலம் உங்கள் ஐடிவி தொகையை தனிப்பயனாக்கலாம். ரிப்பேர் செய்யவே முடியாதடேமேஜ்கள், மீட்டெடுக்கவே முடியாத முழுமையான இழப்பு அல்லது திருட்டு போன்ற நிலைமைகளின் கீழ் அதிக காப்பீட்டைப் பெற இது உங்களுக்கு உதவும்.
  • பலதரப்பட்ட கூடுதல் பாதுகாப்புகள் - இந்த பயன்களைத் தவிர, டிஜிட் அதன் காம்ப்ரிஹென்சிவ் வோக்ஸ்வேகன்  டைகுன் கார் இன்சூரன்ஸ் பாலிசிதாரர்களுக்கு 7 கூடுதல் பாதுகாப்புகளுடன் உதவுகிறது. அவற்றுள் சில இதோ

இருப்பினும், உங்கள் பிரீமியம் தொகைகளின் குறைந்தபட்சம் உயர்வுக்கு இந்த கவர்களில் ஏதேனும் ஒன்றை உங்கள் பாலிசியில் சேர்க்கலாம்.

  • இந்தியா முழுவதும் உள்ள நெட்வொர்க் கேரேஜ்கள் - இந்தியா முழுவதும் 6000+ கேரேஜ்களின் நெட்வொர்க்கைக் கொண்டது டிஜிட் நிறுவனம், அவை ஒவ்வொன்றும் கேஷ்லெஸ் ரிப்பேரை வழங்குகின்றன. எனவே, நீங்கள் எங்கிருந்தாலும் அதை பொருட்படுத்தாமல் உங்கள் இருப்பிடத்திலும் அதைச் சுற்றியும் உள்ள நெட்வொர்க் கேரேஜைக் கண்டறிவீர்கள்.
  • வசதியான பிக்கப், ரிப்பேர் மற்றும் டிராப் சேவை - உங்கள் டைகுன் வாகனம் ஓட்ட சரியான நிலையில் இல்லை எனும் சூழ்நிலை ஏற்படலாம். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், தொந்தரவுகளைத் தவிர்க்க டிஜிட் நெட்வொர்க் கார் கேரேஜ்களிலிருந்து டோர்ஸ்டெப் பிக்கப், ரிப்பேர் மற்றும் டிராப் வசதியை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.
  • மிகச்சிறப்பான கஸ்டமர் கேர் சர்வீஸ் - இறுதியாக, வோக்ஸ்வேகன்  டைகுன் இன்சூரன்ஸ் ரீனியூவல் செய்தல் அல்லது வாங்குதல் செயல்முறை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால், உங்கள் வசதிக்கேற்ப டிஜிட் நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளுங்கள். டிஜிட்டின் கஸ்டமர் சேவை நிர்வாகிகள் 24X7 உங்களுக்காக உதவ காத்திருக்கின்றனர்.

இந்தப் பயன்கள் அனைத்தும் டிஜிட் நிறுவனம் இந்தியா முழுவதும் பிரசத்திப் பெற்றதற்குச் சான்றாகச் செயல்படுகின்றன. இருப்பினும், வெஹிக்கல் உரிமையாளர்கள், வோக்ஸ்வேகன்  டைகுன் கார் இன்சூரசிற்கான தங்கள் பிரீமியம் தொகையைக் குறைக்க சில உதவிக்குறிப்புகளையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

அதிக டிடெக்டிபள்களும் குறைந்த தொகைக்கான கிளைம்களும் பிரீமியம் தொகையைக் கணிசமாகக் குறைக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இருப்பினும், குறைவான பிரீமியங்கள் பெரிய அளவிலான நன்மைகளுக்கு உத்தரவாதம் அளிக்காது. எனவே, செயல்முறையை விரிவாகப் புரிந்துகொள்ள டிஜிட் போன்ற நம்பகமான இன்சூரரை அணுகுங்கள்.

வோக்ஸ்வேகன் டைகுன் கார் இன்சூரன்ஸை வாங்குவது ஏன் முக்கியமாகக் கருதப்படுகிறது?

காருக்கு டேமேஜ் ஏற்படுத்தும் எதிர்பாராத சூழ்நிலைகளுக்கும் ஒவ்வொரு இந்திய கார் உரிமையாளரும் தயாராக இருப்பது அவசியம். இதற்காக, உங்கள் நிதியைப் பாதுகாக்க சரியான கார் இன்சூரன்ஸைத் தேர்ந்தெடுப்பது அவசியம். மேலும், அபராதம் மற்றும்டேமேஜ்களை ரிப்பேர் செய்வதினால் ஏற்படும் இழப்பீடுகளைக் காட்டிலும் வோக்ஸ்வேகன்  டைகுன் இன்சூரன்ஸ் தொகையைச் செலுத்துவது அட்டகாசமான தேர்வாகும்.

இந்தியாவில் கார் இன்சூரன்ஸ் பாலிசியின் அவசியத்தை வலியுறுத்தும் காரணங்கள் பின்வருமாறு.

  • ஃபைனான்ஷியல் லையபிளிட்டிகளை காப்பீடு செய்கிறது- உங்கள் வோக்ஸ்வேகன்  டைகுன் விபத்தில் சிக்கி சேதமடைந்தால், நீங்கள் பின்வருவனவற்றின்படி ரீஇம்பர்ஸ்மென்ட்கள் அல்லது கேஷ்லெஸ் ரிப்பேர்களைத் தேர்வு செய்யலாம். இருப்பினும், உங்களிடம் காம்ப்ரிஹென்சிவ் பாலிசி இருந்தால் மட்டுமே இந்த நன்மைகளுக்கு நீங்கள் தகுதியுடையவர் ஆவீர்கள். மேலும், சந்தைக்கு டைகுன் கார் புதியது என்பதால், ரிப்பேர் மற்றும் உதிரி பாகங்களுக்கான செலவு மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கும். இதுவே கார் இன்சூரன்ஸ் பாலிசியின் முக்கியத்துவத்தை நியாயப்படுத்துகிறது.
  • தேர்டு பார்ட்டி கட்டணங்களிலிருந்து பாதுகாக்கிறது - தேர்டு பார்ட்டி கார் இன்சூரன்ஸ் எந்தவொரு தேர்டு பார்ட்டி கிளைம்களிலிருந்தும் நிதி பாதுகாப்பை வழங்குகிறது. இது நபருக்காகவோ சொத்துக்காகவோ இருக்கலாம். டிஜிட் போன்ற புகழ்பெற்ற இன்சூரன்ஸ் வழங்குநர்கள் விபத்தில் சம்பந்தப்பட்ட வழக்கு சிக்கல்களை நிர்வகிக்கப்பதற்காகப் பாலிசியை வழங்குகிறார்கள்.
  • கடுமையான அபராதங்கள் அல்லது தண்டனைகளிலிருந்து காப்பாற்றுகிறது - மோட்டார் வெஹிக்கல் ஆக்ட் 1988 இந்தியாவில் உள்ள ஒவ்வொரு கார் உரிமையாளருக்கும் தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸ் இருப்பது அவசியம் என்று தெளிவாகக் கூறுகிறது. எனவே, கார் இன்சூரன்ஸ் பாலிசி இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்கள் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும். முதல் முறையாக விதியை மீறினால் ரூ.2000 வரை அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். அதே குற்றத்தை மீண்டும் செய்தால் நீங்கள் ₹ 4000 செலுத்த வேண்டியிருக்கும். மோசமான சந்தர்ப்பங்களில், உங்கள் ஓட்டுநர் உரிமம் பறிமுதல் செய்யப்படலாம், அல்லது நீங்கள் 3 மாதங்கள் வரை சிறையில் அடைக்கப்படலாம்.
  • காம்ப்ரிஹென்சிவ் பாலிசியுடன் கூடுதல் பாதுகாப்புகளை வழங்குகிறது - பெயர் குறிப்பிடுவது போல, காம்ப்ரிஹென்சிவ் பாலிசி தீ, திருட்டு, இயற்கை பேரழிவுகள், மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவுகள் மற்றும் உங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட பிற காரணிகளால் ஏற்படும் அனைத்து வகையானடேமேஜ்களும் இதில் அடங்கும்.
  • நோ கிளைம் போனஸை நீட்டிக்கிறது - கிளைம் செய்யப்படாத ஒவ்வொரு ஆண்டும் உங்கள் வோக்ஸ்வேகன்  டைகுன் இன்சூரன்ஸ் ரீனியூவல் செய்தல் விலையில் தள்ளுபடிகளைப் பெறலாம். டிஜிட் போன்ற இன்சூரன்ஸ் நிறுவனங்கள், நீங்கள் தொடர்ந்து ஐந்து ஆண்டுகளுக்கு கிளைம் செய்யாவிட்டால் செலுத்தப்படும் பிரீமியங்களிலிருந்து 50% வரை தள்ளுபடியை வழங்குகின்றன.

இவ்வாறு வழக்கமாகக் கிடைக்கும் நன்மைகளைத் தவிர, டிஜிட் போன்ற பிரபலமான இன்சூரன்ஸ் வழங்குநர்கள் மேலும் தடையற்ற அனுபவத்தை உறுதிப்படுத்தவும் செயல்முறையை எளிதாக்குகிறார்கள். மேலும், நீங்கள் டிஜிட்டிலிருந்து வோக்ஸ்வேகன்  டைகுன் கார் இன்சூரன்ஸை வாங்கினால் அல்லது ரீனியூவல் செய்தல், திருட்டு, தீ விபத்தால் ஏற்படும் டேமேஜ், விபத்துகள், இயற்கை பேரழிவுகள் மற்றும் பலவற்றுக்கு அதிகபட்ச பாதுகாப்பை எதிர்பார்க்கலாம்.

வோக்ஸ்வேகன் டைகுன் குறித்து மேலும் அறிந்துகொள்ளுங்கள்

புதிய டைகுன் எஸ்யூவியில் அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இது மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்களை வழங்கும் நான்கு வேரியண்ட்டுகளிலும் கிடைக்கிறது.

டைகுன் நமக்கு என்ன வழங்குகிறது என்பதை சுருக்கமாகப் பார்ப்போம்.

  • டைகுன் காரில் 3-சிலிண்டர்கள் கொண்ட 1.0 லிட்டர் டர்போ சார்ஜ் மற்றும் 4 சிலிண்டர்கள் கொண்ட 1.5 லிட்டர் டிஎஸ்ஐ என்ஜின் உள்ளது. முந்தைய யூனிட்டால் 115 பிஎச்பி பவரை உருவாக்க முடியும், அத்துடன் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 6-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களும் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் புதிய ஜெனரேஷன் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 7-ஸ்பீடு டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கும்.
  • அதன் போட்டியாளர்களுடன் போட்டியிட, ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே இணைப்பை ஆதரிக்கும் 10 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை டைகுன் முன்னிலைப்படுத்துகிறது. அத்துடன் வென்டிலேட்டட் முன் இருக்கைகள், டிஜிட்டல் டிஸ்ப்ளே, ரியர் வியூ கேமரா, எலக்ட்ரிக் சன்ரூஃப், டைப்-சி சார்ஜிங் போர்ட்கள் மற்றும் பல அம்சங்களையும் கொண்டுள்ளது.
  • வோக்ஸ்வேகன்  அதன் சமீபத்திய மாடல்கள் அனைத்தையும் போலவே, டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், இஎஸ்சி, ஹில்-ஹோல்ட் கன்ட்ரோல், ஆறு ஏர்பேக்குகள், ஐசோஃபிக்ஸ் சைல்டு சீட் ஆங்கரேஜ் பாயிண்டுகள் போன்ற உலகத் தரம் வாய்ந்த பாதுகாப்பு அம்சங்களை நிறுவியுள்ளது.
  • வோக்ஸ்வேகன்  சிங்கிள் ஸ்லாட் குரோம் கிரில் மற்றும் சதுர வடிவ எல்இடி ஹெட்லைட்டுகள் மற்றும் ஒருங்கிணைந்த கிடைமட்ட எல்இடி டிஆர்எல்களை நேர்தியாகக் கொண்டிருக்கிறது. முன்பக்கத்தில், குரோம் கிரில் மற்றும் பனி விளக்குகளுடன் கூடிய டூயல் டோன் பம்பரைக் காணலாம். கீழே, இது ஃபாக்ஸ் சில்வர் பிளேட்டைக் கொண்டுள்ளது.
  • டைகுன் அதன் வகையில் மிகவும் நீட்டிக்கப்பட்ட வீல்பேஸைக் கொண்டுள்ளது. மேலும் சென்டர் கன்சோல், ஆர்ம்ரெஸ்ட் மற்றும் டோர் பேட்களில் போதுமான இடத்தை வழங்குகிறது. உறுதியான குஷன் முன் இருக்கைகள் பெரியவையாக இருப்பதுடன் லேட்டரல் போல்ஸ்டேரிங்கை ஆதரிக்கின்றன. அகலமான இடவசதி காரணமாக பின்புற இருக்கைகளுக்கு எளிதாக செல்லவும் இது உதவுகிறது.
  • டைகுன் காரின் விலை ரூ.10 லட்சமாகவும், டாப்-ஸ்பெசி வேரியண்ட்களின் விலை ரூ.16 லட்சமாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது (எக்ஸ்-ஷோரூம் விலைகள்).

எனவே, டைகுன் காருக்காக இந்த மொத்த தொகையை முதலீடு செய்வதற்கு முன், அதிகபட்ச நிதி பாதுகாப்பை உறுதிப்படுத்த கார் காப்பீட்டு பாலிசி விருப்பத்தேர்வுகளை நன்கு ஆராய்ந்து பாருங்கள். உங்கள் நிதிப் பொறுப்பைக் குறைக்க டிஜிட் குறைந்த விலை வோக்ஸ்வேகன்  டைகுன் கார் இன்சூரன்ஸை விரிவுபடுத்துகிறது.

வோக்ஸ்வேகன் டைகுன் - வேரியண்ட்டுகள் மற்றும் எக்ஸ்-ஷோரூம் விலை

வேரியண்ட்டுகள் எக்ஸ்-ஷோரூம் விலை (நகரத்திற்கு ஏற்ப மாறுபடும்)
வோக்ஸ்வேகன் டைகுன் 1.0 TSI கம்பர்ட்லைன் ₹10.49 லட்சங்கள்
வோக்ஸ்வேகன் டைகுன் 1.0 TSI ஹைலைன் ₹12.79 லட்சங்கள்
வோக்ஸ்வேகன் டைகுன் 1.0 TSI ஹைலைன் AT ₹14.09 லட்சங்கள்
வோக்ஸ்வேகன் டைகுன் 1.0 TSI டாப்லைன் ₹14.56 லட்சங்கள்
வோக்ஸ்வேகன் டைகுன் 1.5 TSI GT ₹14.99 லட்சங்கள்
வோக்ஸ்வேகன் டைகுன் 1.0 TSI டாப்லைன் AT ₹15.90 லட்சங்கள்
வோக்ஸ்வேகன் டைகுன் 1.5 TSI GT பிளஸ் ₹17.49 லட்சங்கள்

இந்தியாவில் வோக்ஸ்வேகன் டைகுன் காரைப் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

டைகுன் கார் இன்சூரன்ஸ் பாலிசியின் கீழ் உள்ள எக்ஸ்க்ளூஷன்கள் யாவை?

கார் இன்சூரன்ஸ் பிளான் பின்வரும் கவரேஜை வழங்காது:

  • டைகுனைப் பயன்படுத்துவதால் ஏற்படும் டிப்ரிஸியேஷன் மற்றும் பயன்படுத்தப்பட்ட காலம்
  • எலெக்ட்ரிக்கல் பிரேக்டவுன்
  • மது, போதைப்பொருள் மற்றும் பிற போதைப்பொருட்களால் ஏற்பட்டடேமேஜ்கள்
  • முறையான ஓட்டுனர் உரிமம் இல்லாமல் ஓட்டுனரால் ஏற்பட்ட டேமேஜ்
  • விளைவுவினால் ஏற்பட்ட இழப்பு
  • இந்தியாவிற்கு வெளியே ஏற்பட்ட டேமேஜ்

ஒரு வருடத்தில் எனது வோக்ஸ்வேகன் டைகுன் கார் இன்சூரன்ஸிற்கு நான் எத்தனை கிளைம்களை ஃபைல் செய்யலாம்?

ஒரு வருடத்தில் உங்கள் கார் இன்சூரன்ஸ் பாலிசிக்காக எத்தனை கிளைம்களை வேண்டுமானாலும் நீங்கள் ஃபைல் செய்யலாம். இருப்பினும், கார் இன்சூரன்ஸ் கிளைம்கள் நோ கிளைம் போனஸ் பெனிஃபிட்டை பாதிக்கும் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். மேலும், ஒரு வருடத்தில் அடிக்கடி கிளைம் செய்வது, உங்கள் இன்சூரன்ஸ் புதிப்பிப்பிற்குப் பிறகு செலுத்தவேண்டிய பிரீமியம் தொகையை அதிகரிக்கும்.