டாடா டியாகோ இன்சூரன்ஸ்
Get Instant Policy in Minutes*

Third-party premium has changed from 1st June. Renew now

டாடாவின் ஹேட்ச்பேக் கார்கள் பல தசாப்தங்களாக இந்திய நுகர்வோரின் தீராத விருப்பமாக இருந்து வருகின்றன, மேலும் அதன் டியாகோ மாடல் நிச்சயமாக அந்த ஆரவாரத்தை கூட்டியுள்ளது. 2016 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட, அதன் BS-VI இணக்கமான வேரியண்ட் 2020 இல் வெளியிடப்பட்டது, டாடா டியாகோ 5 இருக்கைகள் கொண்ட திறனுடன் வருகிறது, இது நகர்ப்புற இந்திய மக்களுக்கு பொருத்தமான மாடலாக அமைகிறது.

2018 ஆம் ஆண்டில் அதிகம் விற்பனையான முதல் பத்து வாகனங்களில் டியாகோ ஒரு இடத்தைப் பெற்றுள்ளதால், இந்தியாவில் டாடா டியாகோ இன்சூரன்ஸ் பாலிசிகளை வாங்குவதும் அதிகரித்துள்ளது.

மோட்டார் வாகனச் சட்டம் 1988 இன் படி, இந்தியாவில் சாலைகளை சட்டப்பூர்வமாக இயக்க தேர்டு பார்ட்டி கார் இன்சூரன்ஸ் பாலிசி வைத்திருப்பது கட்டாயமாகும் என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். சரியான தேர்டு பார்ட்டி லையபிளிட்டி பாலிசி இல்லாமல் உங்கள் டியாகோவை நீங்கள் ஓட்டுவது கண்டறியப்பட்டால், மீண்டும் மீண்டும் குற்றத்திற்காக உங்களுக்கு ரூ.2000 அல்லது ரூ.4000 போக்குவரத்து அபராதம் விதிக்கப்படலாம்.

சட்டப்பூர்வமாக கட்டாயப்படுத்தப்படுவதைத் தவிர, தேர்டு பார்ட்டி டாடா டியாகோ இன்சூரன்ஸ் ரினியூவல் செய்தல் அல்லது வாங்குதல் உங்கள் டியாகோ மற்றொரு நபர், வாகனம் அல்லது அவர்களின் ப்ராபர்டியுடன் ஆக்சிடென்டல் கோலிஷன் ஏற்படும் ஃபைனான்ஷியல் லையபிளிட்டிகளை உள்ளடக்கியது. மறுபுறம், ஒரு காம்ப்ரிஹென்சிவ் இன்சூரன்ஸ் பாலிசி உங்கள் டியாகோவுக்கு ஆக்சிடென்டல் டேமேஜ்களுக்கு நிதி உதவியை வழங்குகிறது.

ஆனால், இன்சூரன்ஸ் பாலிசி வாங்கினால் மட்டும் போதுமா?

சரி, உங்கள் பிரியமான காருக்கு உகந்த பாதுகாப்பைப் பெற கார் இன்சூரன்ஸ் பாலிசியின் கீழ் வழங்கப்படும் பெனிஃபிட்களையும் நீங்கள் பார்க்க வேண்டும். இந்த விஷயத்தில், டிஜிட்டின் கார் இன்சூரன்ஸ் பாலிசி சிறந்த தேர்வாக இருக்கலாம்!

டாடா டியாகோ இன்சூரன்ஸ் ரினியூவல் விலை

ரெஜிஸ்டரேஷன் தேதி பிரீமியம் (காம்ப்ரிஹென்சிவ் பாலிசிக்கு)
ஜுலை-2018 5,306
ஜுலை-2017 5,008
ஜுலை-2016 4,710

**பொறுப்புத் துறப்பு - டாடா டியாகோ மாடல் HTP பெட்ரோல் 1199 க்கான பிரீமியம் கணக்கீடு செய்யப்படுகிறது. ஜி.எஸ்.டி, விலக்கு

சிட்டி - பெங்களூர், பாலிசி காலாவதி தேதி - 31 ஜூலை, NCB - 50%, ஆட்-ஆன்கள் இல்லை. பிரீமியம் கணக்கீடு ஜூலை-2020 இல் செய்யப்படுகிறது. மேலே உங்கள் வாகன விவரங்களை உள்ளிடுவதன் மூலம் இறுதி பிரீமியத்தை சரிபார்க்கவும்.

டாடா டியாகோ கார் இன்சூரன்ஸில் என்னென்ன கவர் செய்யப்படுகிறது

நீங்கள் ஏன் டாடா டியாகோ கார் இன்சூரன்ஸை டிஜிட் மூலம் வாங்க வேண்டும்?

டாடா டியாகோ கார் இன்சூரன்ஸ் பிளான்கள்

தேர்டு பார்ட்டி காம்ப்ரிஹென்சிவ்

விபத்து காரணமாக சொந்த வாகனத்திற்கான டேமேஜ்கள்/இழப்புகள்

×

தீ விபத்து ஏற்பட்டால் சொந்த காருக்கான டேமேஜ்கள்/இழப்புகள்

×

இயற்கை சீற்றம் ஏற்பட்டால் சொந்த காருக்கு ஏற்படும் டேமேஜ்கள்/இழப்புகள்

×

தேர்டு பார்ட்டி வாகனத்திற்கு டேமேஜ்கள்

×

தேர்டு பார்ட்டி ப்ராபர்டிகளுக்கு டேமேஜ்கள்

×

பர்சனல் ஆக்சிடென்ட் கவர்

×

காயங்கள்/தேர்டு பார்ட்டி நபரின் மரணம்

×

உங்கள் கார் திருட்டு

×

டோர்ஸ்டேப் பிக்-அப் & டிராப்

×

உங்கள் வாகன ஐ.டி.வியை கஸ்டமைஸ் செய்யவும்

×

கஸ்டமைஸ் செய்யப்பட்ட ஆட்-ஆன்களுடன் கூடுதல் புரட்டெக்ஷன்

×
Get Quote Get Quote

Know more about the difference between comprehensive and third party insurance

கிளைமை எவ்வாறு தாக்கல் செய்வது?

எங்கள் கார் இன்சூரன்ஸ் பிளானை நீங்கள் வாங்கிய பிறகு அல்லது ரினியூவல் செய்த பிறகு, எங்களிடம் வெறும் 3-ஸ்டெப்தான், அதுவும் முற்றிலும் டிஜிட்டல் கிளைம் ப்ராசஸ் மூலம் நீங்கள் பதற்றமின்றி வாழ்க்கையில் முன்னேறலாம்!

ஸ்டெப் 1

1800-258-5956 என்ற எண்ணில் அழைக்கவும் ஃபார்ம்களை பூர்த்தி செய்ய வேண்டியதில்லை

ஸ்டெப் 2

உங்கள் ரெஜிஸ்டர் செய்யப்பட்ட மொபைல் எண்ணில் செல்ஃப்-இன்ஸ்பெக்ஷனுக்கான லிங்க்கைப் பெறுங்கள். உங்கள் ஸ்மார்ட்போனிலிருந்து உங்கள் வாகனத்தின் டேமேஜ்களை ஒரு வழிகாட்டப்பட்ட ஸ்டெப் பை ஸ்டெப் ப்ராசஸ் மூலம் போட்டோ எடுக்கலாம்.

ஸ்டெப் 3

எங்கள் கேரேஜ்களின் நெட்வொர்க் மூலம் நீங்கள் தேர்வு செய்ய விரும்பும் ரிப்பேர் மோடைத் தேர்வுசெய்யலாம், அதாவது ரீஇம்பர்ஸ்மென்ட் அல்லது கேஷ்லெஸ்.

டிஜிட் இன்சூரன்ஸ் கிளைம்கள் எவ்வளவு விரைவாக செட்டில் செய்யப்படுகின்றன? உங்கள் இன்சூரன்ஸ் கம்பெனியை மாற்றும்போது உங்கள் மனதில் தோன்றும் முதல் கேள்வி இதுதான். நீங்கள் அதைக் கேட்பது நல்லது! டிஜிட்டின் கிளைம் ரிப்போர்ட் கார்டைப் படிக்கவும்

டாடா டியாகோ கார் இன்சூரன்ஸ் பாலிசியை தேர்வு செய்வது ஏன்?

கார் இன்சூரன்ஸ் பாலிசியை சட்டப்பூர்வமாக வாங்குவதை காட்டிலும்/ ரினியூவல் செய்வதை காட்டிலும் கார் இன்சூரன்ஸ் பாலிசி பற்றிய உங்கள் முடிவில் தீர்க்கமாக/தெளிவாக இருக்க வேண்டும்.

உங்கள் டாடா டியாகோவுக்கான இன்சூரன்ஸ் பாலிசியை நீங்கள் வாங்கும் இன்சூரரின் நம்பகத்தன்மையை நீங்கள் கருத்தில் கொள்ள விரும்பலாம்.

நீங்கள் தேர்டு பார்ட்டி லையபிளிட்டி பாலிசி அல்லது டாடா டியாகோ பம்பர் டூ பம்பர் இன்சூரன்ஸ் பாலிசிக்கு செல்கிறீர்கள் என்றாலும், இதன் பெனிஃபிட்களை பெரிதாக்க முடியும் என்பதை உறுதிப்படுத்த அவ்வாறு செய்வது முக்கியம்.

டிஜிட் போன்ற ஒரு புகழ்பெற்ற இன்சூரன்ஸ் நிறுவனத்துடன், உங்கள் டியாகோவுக்கான இன்சூரன்ஸ் பாலிசியை வாங்குவது அல்லது ரினியூவல் செய்வதில் நீங்கள் ஒரு சாதகமான நிலையைத் தேர்வு செய்கிறீர்கள் என்று நீங்கள் உறுதியாக நம்பலாம்.

டிஜிட்டின் டாடா டியாகோ இன்சூரன்ஸ் பாலிசியின் சில அம்சங்கள் அதன் போட்டியாளர்களிடையே தனித்து நிற்கின்றன:

  • முழுமையான டிஜிட்டல் ப்ராசஸஸ் - இந்த டிஜிட்டல் சகாப்தத்தில், கிளைம்களை கோருவது தடுக்கப்படக்கூடாது. அதனால்தான், டிஜிட் மூலம், உங்கள் கிளைம்களை கோரவும், அதை எளிதாக செட்டில் செய்யவும் முற்றிலும் டிஜிட்டல்மயமாக்கப்பட்ட மற்றும் ஆன்லைன் செயல்முறையை நீங்கள் அனுபவிக்க முடியும். உங்கள் டியாகோவுடன் நீங்கள் ஒரு விபத்தில் சிக்கியுள்ளீர்கள் என்று வைத்துக்கொள்வோம், மேலும் கார் கணிசமான டேமேஜ்களை சந்திக்கிறது. டிஜிட் உடன் ஒரு காம்ப்ரிஹென்சிவ் டியாகோ இன்சூரன்ஸ் பாலிசியை நீங்கள் வைத்திருந்தால், உங்கள் ஸ்மார்ட்போனுடன் அந்த டேமேஜின் படத்தைக் கிளிக் செய்து, உங்கள் கிளைமை உயர்த்த எங்களின் ஆய்வுக்கு அனுப்பலாம். அது முடிந்ததும், டேமேஜை கணக்கிட்டு, பின்னர் இழப்பீடு வழங்குவோம். இவை அனைத்தும் குறைந்தபட்ச தொந்தரவுடன் ஆன்லைனில் இருக்கும்.
  • பொருந்தக்கூடிய இன்சூர்டு டிக்லேர்ட் வேல்யூ - உங்கள் டியாகோவுக்கான உங்கள் பாலிசியின் ஐ.டி.வியை டிஜிட்டுடன் கஸ்டமைஸ் செய்ய நீங்கள் தேர்வு செய்யலாம். பொதுவாக, ஐ.டி.வியைக் கணக்கிட விற்பனையாளரின் பட்டியலிடப்பட்ட விலையிலிருந்து பொருந்தக்கூடிய டிப்ரிஸியேஷனனைக் கழிப்போம் - உங்கள் டியாகோவின் திருட்டு அல்லது சரிசெய்ய முடியாத டேமேஜ் ஏற்பட்டால் உங்கள் பாலிசிக்கு எதிராக நீங்கள் பெறும் தொகை. நீங்கள் அதை விட அதிக ஐ.டி.வியைப் பெற விரும்பினால், டாடா டியாகோ இன்சூரன்ஸ் செலவை ஓரளவு மாற்றியமைப்பதன் மூலம் அதைச் செய்யலாம்.
  • விரைவான கிளைம் செட்டில்மெண்ட் - விபத்தில் சிக்குவது அல்லது வேறு சில காரணங்களால் உங்கள் டியாகோவை டேமேஜ் செய்வது போன்ற எதிர்பாராத நிகழ்வை கடந்து செல்வது எவ்வளவு சவாலானது என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். எனவே, உங்கள் கிளைமை விரைவில் தீர்க்க முயற்சிப்பதன் மூலம் உங்கள் சிக்கலை உடனடியாகக் குறைப்பதை நாங்கள் உறுதி செய்கிறோம்.
  • பரவலான நெட்வொர்க் கேரேஜ்களின் சங்கிலி - ஆக்சிடென்டல் ரிப்பேர்களைப் பெறுவதற்கு பணம் குறைவாக உள்ளதா? உங்கள் டேமேஜ் ஆன டியாகோவை கேஷ்லெஸ் ரிப்பேர்களைப் பெற எங்கள் 1400+ நெட்வொர்க் கேரேஜ்களில் ஏதேனும் ஒன்றுக்கு கொண்டு வரலாம். எங்கள் நெட்வொர்க் கேரேஜ்களின் விரிவான சங்கிலி நாடு முழுவதும் பரவியுள்ளது, எனவே அவசர காலங்களில் உதவிக்கு உங்களுக்கு எப்போதும் அருகிலேயே ஒரு ஃப்ரென்ட்லி கேரேஜ் இருக்கும்.
  • ஆட்-ஆன்களின் வரம்பு - டிஜிட்டுடன், உங்கள் இன்சூரன்ஸ் பாலிசியை பல ஆட்-ஆன்களுடன் வலுப்படுத்தலாம். இந்த ஆட்-ஆன்கள் மூலம், குறைந்தபட்ச கூடுதல் டாடா டியாகோ இன்சூரன்ஸ் செலவுக்கு எதிராக உங்கள் டியாகோ மற்றும் முழுமையான ஃபைனான்ஷியல் கவரேஜுக்கான பாலிசியை கஸ்டமைஸ் செய்யலாம். நாங்கள் 7 ஆட்-ஆன்களை வழங்குகிறோம், அவற்றில் சில ரிட்டர்ன் டு இன்வாய்ஸ் கவர், ரோட்சைடு அசிஸ்டன்ஸ் கவர், பேசஞ்சர் கவர், ஜீரோ டிப்ரிஸியேஷன்‌ கவர், என்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் புரட்டெக்ஷன் கவர் போன்றவை. உங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டைக் கொடுக்க, உங்கள் டியாகோ சாலையின் நடுவில் மெக்கானிகல் பிரேக்டவுனை சந்தித்தால் உதவியைப் பெற உங்கள் பாலிசியில் ரோட்சைட் அசிஸ்டன்ஸ் கவரை சேர்க்கலாம்.
  • மணி நேரமும் உதவி - தேசிய விடுமுறை நாட்களில் கூட 24/7 உங்களுக்கு உதவ எங்கள் கஸ்டமர் சப்போர்ட் டீம் கிடைக்கிறது. எனவே, அது ஒரு வார நாளாக இருந்தாலும் சரி அல்லது சோம்பல்மிக்க ஞாயிற்றுக் கிழமையாக இருந்தாலும் சரி, உங்கள் ஏதேனும் சந்தேகம் இருந்தால் எங்கள் சப்போர்ட் டீமை தொடர்பு கொள்ளுங்கள், நாங்கள் முன்னுரிமை அடிப்படையில் உங்களுக்கு உதவுவோம்.
  • உங்கள் வாசலில் சேவையில் - டிஜிட்டின் டாடா டியாகோ இன்சூரன்ஸ் பாலிசியுடன், எங்கள் நெட்வொர்க் கேரேஜ்களின் உதவியைப் பெற்றால் உங்கள் டியாகோவுக்கான டோர்ஸ்டெப்பில் சேவையைப் பெறலாம். எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள், உங்கள் இடத்திலிருந்து காரை எடுக்க ஏற்பாடு செய்வோம், ரிப்பேர் பார்ப்பு முடிந்ததும் அதை மீண்டும் விடுவோம்.

எனவே, நீங்கள் டாடா டியாகோ கார் இன்சூரன்ஸ் ரினியூவல் அல்லது டிஜிட்டில் இருந்து வாங்க விரும்புவதற்கான பல காரணங்களில் சில இங்கே உள்ளன.

இருப்பினும், பாலிசியை வாங்குவதற்கு முன், அதிகபட்ச பெனிஃபிட்களைப் பெற என்ன கவர் மற்றும் எதைஎவற்றையெல்லாம் பெறக்கூடாது என்பதை நீங்கள் கடந்து செல்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

டாடா டியாகோ கார் இன்சூரன்ஸை வாங்குவது/ரினியூவல் செய்வது ஏன் முக்கியம்?

டியாகோ உங்கள் ஸ்டைல் ஸ்டேட்மெண்ட் ஆகும், அதை அப்படியே வைத்திருக்க, உங்களுக்கு கார் இன்சூரன்ஸ் தேவைப்படும். இது உங்கள் டியாகோவை எதிர்பாராமல் ஏற்படும் விபத்திலிருந்து பாதுகாக்கும்.

  • ஃபைனான்ஷியல் லையபிளிட்டிகளிலிருந்து பாதுகாத்தல்: ஒரு திருட்டு, விபத்து அல்லது இயற்கை பேரழிவு, உங்கள் நிதியில் ஒரு பெரிய அதிர்ச்சியாக இருக்கலாம். எதிர்பாராத தேர்டு பார்ட்டி டேமேஜ்களின் கீழ் இன்சூரன்ஸ் உங்களுக்கு நிதி நிவாரணம் அளிக்கிறது. இன்சூரன்ஸ் நிறுவனம் இங்கு உங்களை காப்பாற்றி பெரிய இழப்பில் இருந்து மீள முடியும்.
  • சட்டரீதியான இணக்கம்: கார் இன்சூரன்ஸ் வைத்திருப்பது கட்டாயம்; முறையான இன்சூரன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமானது. பாலிசி இல்லையென்றால், உங்களிடம் ரூ. 2,000 அபராதம் விதிக்கப்படலாம் மற்றும் உங்கள் லைசென்ஸ் ரத்து செய்யப்படலாம். 3 மாதம் சிறைக்கு கூட அனுப்பப்படலாம்.
  • தேர்டு பார்ட்டி லையபிளிட்டியை கவர் செய்தல்: தேர்டு பார்ட்டி லையபிளிட்டிகளை உள்ளடக்கிய குறைந்தபட்சம் தேர்டு பார்ட்டி கார் இன்சூரன்ஸ் பாலிசியை வைத்திருப்பது கட்டாயமாகும். எதிர்பாராத சூழ்நிலைகளில், ஒரு விபத்தில் தேர்டு பார்ட்டி அல்லது பயணிகளுக்கு ஏற்படும் டேமேஜ்கள் மிகப்பெரியதாக இருக்கலாம், மேலும் ரீஇம்பர்ஸ்மென்ட் அளவு திறனுக்கு அப்பாற்பட்டதாக இருக்கலாம். உங்கள் டியாகோவுக்கான இன்சூரன்ஸ் உங்களிடம் இருந்தால், நீங்கள் மன அழுத்தமின்றி இருக்கலாம்.
  • நீட்டிக்கப்பட்ட கவரேஜுடன் காம்ப்ரிஹென்சிவ் கவர்: காம்ப்ரிஹென்சிவ் கார் இன்சூரன்ஸை தேர்ந்தெடுப்பது ஒரு சிறந்த பந்தயமாகும், ஏனெனில் இது தேர்டு பார்ட்டி லையபிளிட்டிகளிலிருந்து உங்களைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், விபத்துகள், இயற்கை பேரழிவுகள், திருட்டு போன்ற அனைத்து எதிர்பாராத சூழ்நிலைகளிலும் உங்கள் ஓன் டியாகோவிற்கும் உங்களுக்கும் ஏற்படும் டேமேஜ்கள் மற்றும் இழப்புகளையும் உள்ளடக்கியது. பம்பர் டூ பம்பர், பிரேக் டவுன் அசிஸ்டன்ஸ், என்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் புரட்டெக்ஷன், டயர் புரட்டெக்ஷன் கவர் போன்ற ஆட்-ஆன்களுடன் எடுத்துக் கொள்ளும்போது. உங்கள் காருக்கு விரிவான பாதுகாப்பைச் சேர்க்கலாம்.

டாடா டியாகோ கார் பற்றி மேலும் அறிய

ஆண்டின் சிறந்த கார், ஹேட்ச்பேக் ஆஃப் தி இயர், மேக் இன் இந்தியா விருது, வேல்யூ ஆஃப் மணி விருது, என நீங்கள் எந்த விருதை குறிப்பிட்டாலும் அதை டியாகோ ஏற்கனவே அதன் கைவசம் கொண்டிருக்கும், அந்தளவிற்கு மிகவும் பிரபலமான தயாரிப்பு. டாடா டியாகோ ஒரு சக்திவாய்ந்த, ஸ்டைலான மற்றும் சமகால கார், நீங்கள் பிரீமியம் வசதி மற்றும் செயல்திறனை விரும்பினால்இது மிகவும் சரியான முடிவாக இருக்கும்.

மலிவு விலையில் ஸ்மார்ட் தோற்றம் கொண்ட ஹேட்ச்பேக்கின் தேவையை டியாகோ பூர்த்தி செய்துள்ளது மற்றும் சக்திவாய்ந்த அம்சங்களுடன் விசாலமான, பிரீமியம் தோற்றமுடைய உட்புறத்தைக் கொண்டுள்ளது. ரூ.4.4 லட்சம் முதல் மலிவு விலையில் கிடைக்கும் டியாகோ நிச்சயம் பணத்திற்கான மதிப்புடையது.

மொத்தத்தில், கவர்ச்சியான, ஏராளமான அம்சங்களைக் கொண்ட மற்றும் விசாலமான ஹேட்ச்பேக்கை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், டியாகோ உங்களுக்குத் தேவையானது.

டாடா டியாகோவை ஏன் வாங்க வேண்டும்?

  • சமீபத்திய அம்சங்கள்: ஆண்ட்ராய்டு ஆட்டோவுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், 15 இன்ச் அலாய் வீல்கள் மற்றும் ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள், பளபளப்பான க்ளாஸி பிளாக் ரூஃப் மற்றும் ஸ்பாய்லர், பாடி ஹக்கிங் சீட் போஸ்டர்கள் போன்ற அம்சங்களுடன் டாடா டியாகோ செக்மென்ட்டில் மிகவும் சிறப்பம்சங்கள் நிறைந்த கார்களில் ஒன்றாகும்.
  • வேரியண்ட்கள்: டியாகோ கார் XE, XM, XM, XT, XT (O), XZ மற்றும் XZ+ ஆகிய எட்டு வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது, மேலும் இரண்டு என்ஜின் விருப்பங்களில் கிடைக்கிறது: 1.2 லிட்டர் (85PS/114Nm) பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.05 லிட்டர் (70PS/140Nm) டீசல் மோட்டார். இது மட்டுமல்லாமல், நீங்கள் தேர்வு செய்ய 8 வண்ண விருப்பங்கள் உள்ளன. பெர்ரி ரெட், கேனியன் ஆரஞ்சு, ஓஷன்புளு, எக்ஸ்பிரசோ பிரவுன், பிளாட்டினம் சில்வர், டைட்டானியம் கிரே முதல் பியர்லெஸ்ஸண்ட் ஒயிட் வரை; டாடா உங்களுக்கு தேர்வு செய்ய அழகான வண்ணங்களை வழங்குகிறது.
  • ரேஸிங் விரும்பிகளுக்கு: டாடா டியாகோவில் கிடைக்கும் வேரியண்ட்டுகளில் புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட கூடுதலாக டியாகோ JTP உள்ளது. JTP என்பது உங்களுக்குள் உள்ள பந்தய வீரருக்கானது, இது ஸ்டைலானது மற்றும் தைரியமானது, மேலும் நீங்கள் வேகமாக இருக்கவும் பிரமிக்கத்தக்க வகையில் இருக்கவும் தேவையான அனைத்து அம்சங்களுடன் இது உள்ளது. ஒரு பந்தய வீரருக்கு, இந்த கார் ஒரு முழுமையான ஷோ ஸ்டாப்பர் ஆகும்.

என்ஜினில் நம்பகத்தன்மையுடன் ஸ்போர்ட்டி தோற்றம் கொண்ட ஹேட்ச்பேக் காரை தேடுபவர்களை இந்த கார் ஈர்க்கிறது. மேலும் இது பட்ஜெட்டுக்கு ஏற்றதாக இருப்பதால், இது நிறைய இள வயது வாங்குபவர்களை ஈர்க்கும்.

டாடா டியாகோ - வேரியண்ட்டுகள் மற்றும் எக்ஸ்ஷோரூம் விலை

வேரியண்ட்டுகள் எக்ஸ்-ஷோரூம் விலை (நகரத்திற்கு ஏற்ப மாற்றப்படலாம்)
XE1199 cc, மேனுவல், பெட்ரோல், லிட்டருக்கு 23.84 கிமீ ₹ 4.39 லட்சம்
XM1199 cc, மேனுவல், பெட்ரோல், லிட்டருக்கு 23.84 கிமீ ₹ 4.74 லட்சம்
எக்ஸ்இசட்1199 cc, மேனுவல், பெட்ரோல், லிட்டருக்கு 23.84 கி.மீ ₹ 5.14 லட்சம்
XEடீசல் 1047 cc, மேனுவல், டீசல், லிட்டருக்கு 27.28 கி.மீ ₹ 5.24 லட்சம்
XZ ஆப்ட்1199 cc, மேனுவல், பெட்ரோல், லிட்டருக்கு 23.84 கி.மீ ₹ 5.34 லட்சம்
XZA1199 cc, ஆட்டோமேட்டிக், பெட்ரோல், லிட்டருக்கு 23.84 கிமீ ₹ 5.59 லட்சம்
XM டீசல் 1047 cc, மேனுவல், டீசல், லிட்டருக்கு 27.28 கி.மீ ₹ 5.59 லட்சம்
XZ பிளஸ் 1199 cc, மேனுவல், பெட்ரோல், லிட்டருக்கு 23.84 கி.மீ ₹ 5.69 லட்சம்
XZ பிளஸ் டூயல் டோன் 1199 cc, மேனுவல், பெட்ரோல், லிட்டருக்கு 23.84 கி.மீ ₹ 5.76 லட்சம்
XZ டீசல்1047 cc, மேனுவல், டீசல், லிட்டருக்கு 27.28 கி.மீ ₹ 5.99 லட்சம்
XZA பிளஸ் 1199 cc, ஆட்டோமேட்டிக், பெட்ரோல், லிட்டருக்கு 23.84 கி.மீ ₹ 6.14 லட்சம்
XZ ஆப்ட் டீசல் 1047 cc, மேனுவல், டீசல், லிட்டருக்கு 27.28 கி.மீ ₹ 6.19 லட்சம்
XZA பிளஸ் டூயல் டோன் 1199 cc, ஆட்டோமேட்டிக், பெட்ரோல், லிட்டருக்கு 23.84 கி.மீ ₹ 6.21 லட்சம்
XZ பிளஸ் டீசல் 1047 cc, மேனுவல், டீசல், லிட்டருக்கு 27.28 கி.மீ ₹ 6.54 லட்சம்
XZ பிளஸ் டூயல் டோன் டீசல் 1047 cc, மேனுவல், டீசல், லிட்டருக்கு 27.28 கி.மீ ₹ 6.61 லட்சம்

இந்தியாவில் டாடா டியாகோ கார் இன்சூரன்ஸ் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

நான் எனது டியாகோவில் ஒரு பயணியுடன் பயணம் செய்கிறேன், அவர்கள் விபத்து காரணமாக காயமடைந்தால் என்ன செய்வது? அவ்வாறான ஃபைனான்ஷியல் லையபிளிட்டிக்கான கவரேஜை நான் பெறுகின்றேனா?

ஒரு நிலையான இன்சூரன்ஸ் பாலிசியில், ஒரு பயணிக்கு ஏற்படும் காயங்களுக்கு கவர் இல்லை. இருப்பினும், உங்கள் டாடா டியாகோ இன்சூரன்ஸ் பாலிசியுடன் பேசஞ்சர் கவரை சேர்க்க நீங்கள் தேர்வுசெய்தால் அதற்கான உதவியைப் பெறலாம்.

டியாகோ இன்சூரன்ஸ் பாலிசிக்கான கம்பள்சரி டிடெக்டிபள் தொகை என்ன?

1500-க்கும் குறைவான கன கொள்ளளவு கொண்ட கார்களுக்கு ரூ.1,000 முதல் ரூ.2,000 வரை கம்பள்சரி டிடெக்டிபள் அளிக்கப்படும் என்று ஐ.ஆர்.டி.ஏ.ஐ தெரிவித்துள்ளது. டியாகோவின் என்ஜின் cc 1500-க்கும் குறைவாக இருப்பதால், ரூ.1000 டிடெக்டிபள் தொகையாகும்.

என் காரின் என்ஜினுக்கு ஏற்படும் டேமேஜ் டிஜிட்டின் டியாகோ கார் இன்சூரன்ஸ் பாலிசியால் கவர் செய்யப்படுகிறதா?

பொதுவாக, இது கவர் செய்யப்படுவதில்லை. ஆனால், என்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் புரட்டெக்ஷன், ஆட்-ஆனுக்குச் செல்வதன் மூலம் உங்கள் டியாகோவின் என்ஜின் ஏதேனும் ஆக்சிடென்டல் டேமேஜை தாங்கினால் நீங்கள் நிதி உதவியைப் பெறலாம்.

எனது டாடா டியாகோ இன்சூரன்ஸ் பாலிசியில் பர்சனல் ஆக்சிடன்ட் கவரரை சேர்க்க முடியாதா?

ஐ.ஆர்.டி.ஏ.ஐ உத்தரவின்படி, கார் இன்சூரன்ஸ் பாலிசியுடன் பர்சனல் ஆக்சிடன்ட் கவரை வைத்திருப்பது கட்டாயமாகும்.

எனது டியாகோ கார் இன்சூரன்ஸ் பாலிசி மீதான பிரீமியத்தை குறைப்பது எப்படி?

டாடா டியாகோ இன்சூரன்ஸ் விலையைக் குறைப்பதற்கான ஒரு வழி, வாலண்டரி டிடெக்டிபள் தொகையைத் தேர்ந்தெடுப்பதாகும். அந்த தொகை அதிகமாக இருந்தால், உங்கள் பிரீமியம் குறைவாக இருக்கும்.

இருப்பினும், இந்த வழக்கில், உங்கள் இன்சூரன்ஸ் பாலிசிக்கு எதிராக நீங்கள் ஒரு கிளைமை எழுப்ப வேண்டியிருந்தால், உங்கள் பாலிசி மீதமுள்ளவற்றை உள்ளடக்குவதற்கு முன்பு ஒரு கணிசமான தொகையை டிடெக்டிபளாக செலுத்த வேண்டும்.