Third-party premium has changed from 1st June. Renew now
ஜீப் கார் இன்சூரன்ஸ் திட்டத்தை வாங்கவும் அல்லது ரீனியூவல் செய்யவும்
பன்னாட்டு நிறுவனமான ஸ்டெல்லாண்டிஸுக்குச் சொந்தமான ஜீப், அமெரிக்காவில் தோன்றிய ஒரு ஆட்டோமொபைல் நிறுவனமாகும். தற்போது, அதன் தயாரிப்பு வரம்பில் க்ராஸ்ஓவர் மற்றும் ஆஃப்-ரோடு எஸ்யூவிகள் இரண்டும் ஸ்போர்ட் யுடிலிட்டி வாகனங்கள் உள்ளன.
2016 இல் சுமார் 1.4 மில்லியன் கார் விற்பனையானதால், இந்நிறுவனத்தின் எஸ்யூவிகள் உலகம் முழுவதும் பிரபலமடைந்தன.
வ்ராங்லர் மற்றும் கிராண்ட் செரோகி மாடல்களை வெளியிட்டதன் மூலம், ஜீப் நேரடியாக 2016ல் இந்திய பயணிகள் சந்தையில் நுழைந்தது. இதற்கு முன், 1960களில் இருந்து, மஹிந்திரா மற்றும் மஹிந்திராவின் உரிமத்தின் கீழ் மட்டுமே ஜீப் கார்கள் தயாரிக்கப்பட்டன.
மேலும், ஜீப் காம்பஸ் மற்றும் வ்ராங்லர் போன்ற மாடல்கள் இந்தியாவில் கார்களை வாங்குபவர்களிடையே பரவலாக பிரபலமாக உள்ளன. இந்த அதிகரித்த தேவையின் காரணமாக, இந்த நிறுவனம் 2021 இல் 11,000 யூனிட்டுகளுக்கு மேல் விற்றது.
ஒரு ஜீப் கார் மாடலை வாங்குவதற்கு முன், விபத்து ஏற்பட்டால் அதனால் ஜீப்பிற்கு ஏற்படக்கூடிய அபாயங்கள் மற்றும் டேமேஜ்களை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். இதைக் கருத்தில் கொண்டு, நீங்கள் ஜீப் கார் இன்சூரன்ஸ் பெற வேண்டும் மற்றும் அத்தகைய டேமேஜ்களை சரிசெய்வதால் ஏற்படும் நிதிச்சுமையை குறைக்க வேண்டும்.
உங்கள் ஜீப் காருக்கான நன்கு வடிவமைக்கப்பட்ட இன்சூரன்ஸ் பாலிசி இரண்டு வகைகளில் கிடைக்கிறது- தேர்டு பார்ட்டி மற்றும் காம்ப்ரிஹென்சிவ் ஆனது. ஜீப் கார்களுக்கான அடிப்படை தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸை நீங்கள் வாங்க பரிசீலிக்கலாம் மற்றும் தேர்டு பார்ட்டி விபத்துகளால் ஏற்படும் லையபிளிட்டிகளை ஈடுசெய்யலாம்.
கூடுதலாக, நீங்கள் காம்ப்ரிஹென்சிவ் ஜீப் கார் இன்சூரன்ஸை ஆன்லைனில் பெறலாம் மற்றும் தேர்டு பார்ட்டி மற்றும் சொந்த கார் டேமேஜ்களுக்கு எதிராக கவரேஜ் பெனிஃபிட்களைப் பெறலாம். இருப்பினும், மோட்டார் வெஹிக்கில்ஸ் ஆக்ட், 1988 இன் படி உங்கள் ஜீப் காருக்கான அடிப்படை இன்சூரன்ஸ் திட்டத்தையாவது வைத்திருப்பது கட்டாயமாகும். எந்த இன்சூரன்ஸ் பாலிசியும் இல்லாத நிலையில், உங்கள் சொந்த பணத்தில் இருந்து டேமேஜிற்கான ரிப்பேர் செலவை நீங்கள் ஏற்க வேண்டும் மற்றும் அதிக போக்குவரத்து அபராதங்களையும் செலுத்த வேண்டும்.
ஜீப்பிற்கான கார் இன்சூரன்ஸைத் தேர்ந்தெடுக்கும் போது, நீங்கள் பல இன்சூரர்களையும் அவர்களது திட்டங்களையும் பார்வையிடலாம். உங்கள் விருப்பங்களை சீரமைக்க, திட்டங்களை அவற்றின் பாலிசி பிரீமியங்கள் மற்றும் பிற சேவைப் பலன்களுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.
இது சம்பந்தமாக, நியாயமான ஜீப் கார் இன்சூரன்ஸ் விலை, ஆன்லைன் கிளைம் செயல்முறை, நோ கிளைம் பெனிஃபிட்கள் மற்றும் முடிவற்ற பிற அம்சங்களின் பட்டியல் ஆகியவற்றின் காரணமாக நீங்கள் டிஜிட் இன்சூரன்ஸைக் கருத்தில் கொள்ளலாம். எனவே, உங்கள் ஜீப் கார் இன்சூரன்ஸ் குறித்து தகவலறிந்த முடிவை எடுப்பதற்கு முன், நீங்கள் டிஜிட்டின் சலுகைகளைப் பார்க்க விரும்பலாம்.
ஜீப் கார் இன்சூரன்ஸில் என்னென்ன கவர் செய்யப்பட்டுள்ளது
எது கவர் செய்யப்படவில்லை
உங்கள் கார் இன்சூரன்ஸ் பாலிசியில் என்ன கவர் செய்யப்படவில்லை என்பதை அறிந்து கொள்வதும் மிகவும் முக்கியம், அதனால் நீங்கள் கிளைம் செய்யும் போது எந்த அதிர்ச்சியும் இருக்காது. அத்தகைய சில சூழ்நிலைகள் இதோ:
தேர்டு பார்ட்டி அல்லது லையபிளிட்டி மட்டுமான கார் பாலிசியில், சொந்த வாகனத்திற்கு ஏற்படும் டேமேஜ்கள் இன்சூரன்ஸ் செய்யப்படாது.
நீங்கள் குடிபோதையில் அல்லது முறையான ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டும்போது கவர் செய்யப்படாது.
நீங்கள் கற்றல் உரிமத்தை வைத்திருக்கிறீர்கள் மற்றும் முன் பயணிகள் இருக்கையில் முறையான ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர் இல்லாமல் வாகனம் ஓட்டும்போது கவர் செய்யப்படாது.
விபத்தின் நேரடி விளைவாக இல்லாத எந்த டேமேஜும் (எ.கா. விபத்துக்குப் பிறகு, டேமேஜ்டு காரை தவறாக ஓட்டி, இயந்திரம் டேமேஜ்டு ஆனால், அது கவர் செய்யப்படாது)
எந்தவொரு அலட்சியத்தினால் (எ.கா. வெள்ளத்தில் காரை ஓட்டுவதால் ஏற்படும் டேமேஜ், உற்பத்தியாளரின் ஓட்டுநர் கையேட்டின்படி பரிந்துரைக்கப்படாத வகையில் வாகனம் ஓட்டுவது) ஏற்படும் டேமேஜ்களும் கவர் செய்யப்படாது.
சில சூழ்நிலைகள் ஆட்-ஆன்களில் கவர் செய்யப்படும். நீங்கள் அந்த ஆட்-ஆன்களை வாங்கவில்லை என்றால், தொடர்புடைய சூழ்நிலைகள் கவர் செய்யப்படாது.
டிஜிட்டின் ஜீப் கார் இன்சூரன்ஸை ஏன் வாங்க வேண்டும்?
ஜீப்பிற்கான கார் இன்சூரன்ஸ் திட்டங்கள்
தேர்டு பார்ட்டி | காம்ப்ரிஹென்சிவ் |
விபத்து காரணமாக சொந்த காருக்கு ஏற்படும் டேமேஜ்கள்/இழப்புகள் |
|
தீயினால் சொந்த காருக்கு ஏற்படும் டேமேஜ்கள்/இழப்புகள் |
|
இயற்கை பேரிடரின் போது சொந்த காருக்கு ஏற்படும் டேமேஜ்கள்/இழப்புகள் |
|
தேர்டு பார்ட்டி வாகனத்திற்கு ஏற்படும் டேமேஜ்கள் |
|
தேர்டு பார்ட்டி ப்ராபர்ட்டிக்கு ஏற்படும் டேமேஜ்கள் |
|
பர்சனல் ஆக்சிடன்ட் கவர் |
|
தேர்டு பார்ட்டி நபருக்கு ஏற்படும் காயங்கள்/இறப்பு |
|
கார் திருட்டு |
|
வீட்டு வாசலில் பிக்-அப் & டிராப் |
|
ஐ.டி.வி கஸ்டமைஷேஷன் |
|
கூடுதல் பாதுகாப்பு தரும் கஸ்டமைஸ் செய்யப்பட்ட ஆட்-ஆன்கள் |
|
Get Quote | Get Quote |
காம்ப்ரிஹென்சிவ் மற்றும் தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸ் இடையே உள்ள வித்தியாசத்தைப் பற்றி மேலும் அறியவும்.
கிளைமை எவ்வாறு தாக்கல் செய்வது?
எங்களிடன் 3-ஸ்டெப், முற்றிலும் டிஜிட்டல் கிளைம் செயல்முறை உள்ள கார் இன்சூரன்ஸ் திட்டத்தை நீங்கள் வாங்கிய பிறகு அல்லது ரீனியூவல் செய்த பிறகு, நீங்கள் கவலையில்லாமல் வாழலாம்!
ஸ்டெப் 1
1800-258-5956க்கு அழைக்கவும். ஃபார்ம்கள் நிரப்பப்பட வேண்டியதில்லை
ஸ்டெப் 2
உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் சுய பரிசோதனைக்கான இணைப்பைப் பெறுங்கள். வழிகாட்டப்பட்ட படிப்படியான செயல்முறை மூலம் உங்கள் ஸ்மார்ட்போனிலிருந்து உங்கள் வாகனத்தின் டேமேஜ்களை படம்பிடிக்கவும்.
ஸ்டெப் 3
நீங்கள் தேர்வுசெய்ய விரும்பும் ரிப்பேர் முறையைத் தேர்வுசெய்யவும், அதாவது எங்கள் கேரேஜ் நெட்வொர்க் மூலம் ரீஇம்பர்ஸ்மென்ட் அல்லது கேஷ்லெஸ் முறை.
ஜீப் பற்றி மேலும் அறிக
பிரமாண்டமான மற்றும் கம்பீரமான காரை ஓட்டி நீங்கள் சாலைகளை ஆளும்போது அது நன்றாகத் உணர்கிறதல்லவா? உறுதியாக, நீங்கள் இதை ஒப்புக்கொள்வீர்கள். ஜீப்பை வைத்திருப்பது இந்த சாதனையை அடையும் மகிழ்ச்சியை அளிக்கும். 1960 களில் இருந்து மஹிந்திரா மற்றும் மஹிந்திராவுடன் கார்களை தயாரித்தாலும், நேரடியாக 2016 ஆம் ஆண்டில், ஜீப், இந்தியாவிற்குள் நுழைந்தது. மேலும், இது நிறுவனத்திற்கு மிகவும் மகிழ்ச்சியான முடிவாக அமைந்தது.
இந்தியாவில் ஜீப் வாங்குபவர்கள் காத்திருந்து முழு மனதுடன் இந்த பிராண்டை வரவேற்றனர். காம்பஸ், வ்ராங்லர், செரோகி மற்றும் காம்பஸ் டிரெயில்ஹாக் உள்ளிட்ட நான்கு மாடல்களை ஜீப் நம் நாட்டில் அறிமுகப்படுத்தியது. பிராண்டின் மலிவான மாடல் (காம்பஸ்) ரூ.14.99 லட்சத்திற்கு வருகிறது. மிக உயர்ந்த மாடலான ஜீப் கிராண்ட் செரோகி, ரூ.1.14 கோடியில் கிடைக்கிறது. இரண்டு மாடல்களும் டீசல் மற்றும் பெட்ரோல் வகைகளில் கிடைக்கும்.
2016 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட உடனேயே இந்த கார்கள் பிரபலமடைந்தன. மேலும் வெற்றிக் கதையை உயிர்ப்பிக்கும் வகையில், ஜீப் காம்பஸ், NDTV கார் மற்றும் பைக் மூலம் 2017 ஆம் ஆண்டின் சிறந்த காருக்கான விருதை பெற்றது. அதே ஆண்டு நியூஸ்18 டெக் மற்றும் ஆட்டோவின் ‘2017 ஆம் ஆண்டின் சிறந்த எஸ்யூவி’ விருதையும் வென்றது.
ஜீப்பின் ஆண்டு பராமரிப்புச் செலவு அதிகம் இல்லை, உதிரி பாகங்களும் எளிதாகக் கிடைக்கும். ஆனால் இந்த கார்கள் விலை உயர்ந்தவை என்பதால், கார் இன்சூரன்ஸ் வாங்குவது பற்றி யோசிக்க வேண்டும். இன்சூரன்ஸ் செய்யப்படாத காரை ஓட்டுவது சட்டப்பூர்வ குற்றமாக இருப்பதால், கார் இன்சூரன்ஸ் உங்களுக்கு முக்கியமானது.
இந்தியாவில் ஜீப் கார்களை வாங்குவதற்கான முக்கிய காரணங்கள்?
- கச்சிதமானது, வலுவானது மற்றும் விசாலமானது: எந்த சவாரிக்கும் இதை வசதியாக எடுத்துச் செல்லுங்கள். ஜீப் சிறிய கார் வகை மற்றும் கரடுமுரடான எஸ்யூவிகள் என்பதால், நீங்கள் எங்கும் சுலபமாக ஓட்டும் வாய்ப்பை உங்களுக்கு வழங்குகிறது. ஆனாலும், உங்கள் ஜீப் விசாலமானது மற்றும் நிறைய பொருட்களை சேமித்து கொண்டுசெல்ல உதவும். ஃப்ளோர் ஸ்பேஸ் நன்றாக உள்ளது.
- பெருமைக்குரிய விஷயம்: சொந்தமாக ஜீப் வைத்திருப்பது பெருமைக்குரிய விஷயம்.
- சக்தி வாய்ந்தது: ஜீப் என்பது 4X4 டிரைவ் சக்திவாய்ந்த எஸ்யூவி ஆகும். இதன் மாடல்களில் டர்போசார்ஜ் செய்யப்பட்ட என்ஜின்கள் உள்ளன, அவை நெடுஞ்சாலைகளில் மட்டுமின்றி நகரங்களிலும் சுமூகமான பயணத்தை அளிக்கின்றன. ஜீப்பில் இருந்து வரும் கார்கள் பலதரப்பட்டவை. காம்பஸ் மற்றும் செரோகி போன்ற மாடல்கள் இரண்டு வகையான - பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்களுடன் வருகின்றன.
- வசதியானது: க்ரூஸ் கன்ட்ரோல், 7-ஸ்பீக்கர் ஸ்டீரியோ, இரண்டு ஹூக்குகள், பவர் ஸ்டீயரிங் மற்றும் பல ஆஃப்-ரோடிங் அம்சங்களுடன் கூடிய பேக் லேம்ப்களுடன் ஜீப் கிடைக்கும்
- பாதுகாப்பு நிரம்பியுள்ளது: ஜீப்பில் 6 ஏர்பேக்குகள், லேன் சப்போர்ட் சிஸ்டம், ஆட்டோனமஸ் எமர்ஜென்சி பிரேக்கிங், எலக்ட்ரானிக் பிரேக்-ஃபோர்ஸ் டிஸ்ட்ரிபியூஷன் மற்றும் டிராக்ஷன் கன்ட்ரோல் கொண்ட ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் ஆகியவை உள்ளன. பேனிக் பிரேக் அசிஸ்ட், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், எலக்ட்ரானிக் ரோல் மிட்டிகேஷன் மற்றும் டிஸ்க் பிரேக்குகள் நான்கு சக்கரங்களிலும் கிடைக்கும். ஜீப் ரிவர்ஸ் பார்க்கிங் உதவி, குழந்தை இருக்கை ஆன்கர்கள் மற்றும் டூவல்-ஸோன் கிளைமேட் கன்ட்ரோல் ஆகியவற்றை வழங்குகிறது.
- டிரைவ் மோடுகள்: ஆட்டோ, ஸ்னோ, சாண்ட் மற்றும் மட் போன்ற டிரைவ் மோடுகளுடன் கூடிய ஜீப்பைப் பெறுவீர்கள், ஒவ்வொன்றும் அந்தந்த சூழ்நிலைகளில் டிரைவிங் சுமையை எளிதாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
- ஸ்டைல் மற்றும் தோற்றம்: சாலையில் ஒரு அற்புதமான பார்வையை கொடுக்க ஜீப் உதவுகிறது. நீங்கள் 7 கிரைல் ஃப்ரண்ட், கூர்மையான வீல் ஆர்சுகள் மற்றும் நன்கு வட்டமான ரியர்களை ஆகியவற்றைப் பெறுவீர்கள்.
ஜீப் கார் இன்சூரன்ஸ் வாங்குவது ஏன் முக்கியம்?
- சொந்த டேமேஜ் ரிப்பேர்கள்: உங்கள் காருக்கு டேமேஜ்/நஷ்டம் ஏற்பட்டால் ரிப்பேரின் போது கார் இன்சூரன்ஸ் பாலிசி உங்களுக்குப் பணம் செலுத்தும். தீ, திருட்டு, விபத்து மற்றும் இயற்கை சீற்றங்களால் இழப்பு ஏற்படலாம். ஜீப்பின் விஷயத்தில் இந்த செலவுகள் பெரியதாக இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
- தேர்டு பார்ட்டியின் லீகல் லையபிளிட்டி: உங்கள் ஜீப் ஒருவரை காயப்படுத்தினால் அல்லது தேர்டு பார்ட்டி நபரின் சொத்துக்களை டேமேஜ் செய்தால், அத்தகைய இழப்புகளுக்கு நீங்கள் பொறுப்பேற்க வேண்டும். அத்தகைய இழப்புகளுக்கு உங்கள் கார் இன்சூரன்ஸ் பணம் செலுத்தும்.
- லீகல் கம்ப்ளையண்ஸ்: மோட்டார் வெஹிக்கில் ஆக்ட்படி, கார் இன்சூரன்ஸ் வைத்திருப்பது கட்டாயமாகும். இன்சூரன்ஸ் பாலிசி இல்லாமல் கார் ஓட்ட உங்களுக்கு அனுமதி இல்லை. நீங்கள் அவ்வாறு செய்தால், உங்களுக்கு ரூ.2000/- அபராதம் மற்றும்/அல்லது 3 மாத சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
- ஆட்-ஆன்களுடன் அடிப்படை கார் இன்சூரன்ஸ் பாலிசியை மேம்படுத்தவும்: நீங்கள் ஒரு ஜீப்பை வைத்திருக்கும் போது, நீங்கள் அதன் மீது காதல் கொள்வீர்கள், மேலும் உங்கள் ஜீப்பை ஏதேனும் அசம்பாவிதங்களில் இருந்து பாதுகாக்க விரும்புவீர்கள் என்பது உண்மை, எனவே நீங்கள் சில ஆட்-ஆன் கவர்களை வாங்கலாம். அடிப்படை காம்ப்ரிஹென்சிவ் பாலிசியின் கீழ் வராத இழப்புகளுக்கு உங்கள் காரைப் பாதுகாக்க ஆட்-ஆன் உதவும்.
ஜீப் கார் இன்சூரன்ஸ் பிரீமியத்தை பாதிக்கும் காரணிகள்
- வாகனத்தின் வயது: புதிய வாகனத்திற்கு, கார் இன்சூரன்ஸ் பிரீமியத்தில் நல்ல தள்ளுபடியைப் பெறலாம். ஆனால் பழைய காருக்கான பிரீமியம், ரிப்பேர் செலவு மற்றும் உதிரி பாகங்கள் கிடைக்கும் தன்மையைப் பொறுத்தது.
- என்ஜின் திறன்: கார் இன்சூரன்ஸ் பிரீமியத்தின் தேர்டு பார்ட்டி கூறு, காரின் என்ஜின் திறனைப் பொறுத்தது. அதிக CC இருப்பின், அதிக பிரீமியம் இருக்கும்.
- இன்சூரன்ஸ் பாலிசியின் வகை: நீங்கள் ஒரு காம்ப்ரிஹென்சிவ் பேக்கேஜ் பாலிசியை வாங்கினால், பிரீமியம் அதிகமாக இருக்கும், ஏனெனில் அது சொந்த டேமேஜ் மற்றும் தேர்டு பார்ட்டி லையபிளிட்டி இரண்டையும் உள்ளடக்கும். ஆனால் நீங்கள் ஸ்டாண்ட் அலோன் டிபி பாலிசியைத் தேர்வுசெய்தால், பிரீமியம் குறைவாக இருக்கும் மற்றும் தேர்டு பார்ட்டி கவரேஜின் ஒரு கூறு மட்டுமே இருக்கும்.
- ஐ.டி.வி: நீங்கள் இன்சூரன்ஸ் செய்ய விரும்பும் காரின் இன்சுர்டு டெக்லேர்டு வேல்யூ பிரீமியத்தை நேரடியாகப் பாதிக்கிறது.
- ஆட்-ஆன் கவர்கள்: ஆட்-ஆன் கவர்களை வாங்குவது பிரீமியத்தை அதிகரிக்கும், ஏனெனில் அவை தனியான பிரீமியங்களுடன் வருகின்றன.
- காரின் வயது: குறைந்து வரும் ஐ.டி.வி மற்றும் அதிகரித்து வரும் டிப்ரிஸியேஷன் செலவு, காலப்போக்கில் உங்கள் பிரீமியம் தொகை குறைய வழிவகுக்கும்.
- நோ கிளைம் போனஸ்: கிளைம்-ஃப்ரீ வருடம் என்றால், நீங்கள் காரை நன்றாக கவனித்துள்ளீர்கள். இது உங்கள் விசுவாசத்தையும் கிளைமைக் கேட்பதில் தவறான நோக்கங்கள் இல்லை என்பதையும் பிரதிபலிக்கிறது. எனவே, இன்சூரன்ஸ் நிறுவனம் ரீனியூவல் செய்யும்போது நோ-கிளைம் போனஸை உங்களுக்கு வழங்குகிறது.
- இடம்: உங்கள் இருப்பிடம் அல்லது நீங்கள் வசிக்கும் நகரம் பிரீமியத்தை நிர்வகிக்கிறது. பெருநகரங்களில், அதிக எண்ணிக்கையிலான வாகனங்களால், விபத்துகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். எனவே, பிரீமியம் அதிகமாக இருககும்.
- பாதுகாப்பு சாதனங்கள்: உங்கள் காரில் அலாரங்கள் கொண்ட பாதுகாப்பு இயக்கங்கள் நிறுவப்பட்டிருந்தால், நீங்கள் தள்ளுபடியைப் பெறுவீர்கள். இது பிரீமியத்தைக் குறைக்கும்.
- வாலண்டரி டிடெக்டிபள்: கிளைம் தொகையில் ஒரு பங்கை நீங்கள் செலுத்த ஒப்புக்கொண்டால், அது வாலண்டரி டிடெக்டிபள் தேர்வு என்று அழைக்கப்படுகிறது. அதிக வாலண்டரி டிடெக்டிபள், பிரீமியத்தைக் குறைக்கும் மற்றும் குறைந்தால் நேர்மாறாகவும் இருக்கும்.
ஜீப் கார் இன்சூரன்ஸ் வாங்க டிஜிட்டை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?
- எளிய இன்சூரன்ஸை வழங்குகிறது: உங்கள் அவசர காலங்களில், டிஜிட் இன்சூரன்ஸ், இன்சூரன்ஸ் செயல்முறையை எளிதாக்க உறுதியளிக்கிறது. கிடைக்கக்கூடிய அனைத்து தகவல்களுடன் ஆன்லைனில் இன்சூரன்ஸை வாங்குவதற்கு டிஜிட் உங்களை அனுமதிக்கின்றது. இன்சூரன்ஸ் வாங்குவதைத் தவிர, கிளைம் செயல்முறையும் எளிதானது. உங்கள் ஸ்மார்ட்போனைப் பயன்படுத்தி ஆவணங்களை உங்கள் பக்கமிருந்தே பதிவேற்றலாம்.
- பிரீமியம் ரேட்: டிஜிட் இன்சூரன்ஸ் வழங்கும் பிரீமியம் ரேட்கள் மிகவும் சிறந்தவை. மறைமுக செலவுகள் எதுவும் இல்லை.
- இன்சூரன்ஸ் கவர் தேர்வு: நீங்கள் தேர்வு செய்யக்கூடிய இரண்டு வகையான பாலிசிகள் உள்ளன. ஒன்று, உங்கள் சொந்த டேமேஜ் மற்றும் தேர்டு பார்ட்டி இழப்புகளை உள்ளடக்கிய காம்ப்ரிஹென்சிவ் பேக்கேஜ் பாலிசி. மற்றொன்று ஒரு ஸ்டாண்ட் அலோன் டிபி பாலிசி ஆகும், இது நீங்கள் மற்றவர்களுக்கு உடல் காயம் அல்லது சொத்து டேமேஜை ஏற்படுத்தினால் ஏற்படும் எந்தவொரு லையபிளிட்டிக்கும் பணம் செலுத்தும்.
- ஆட்-ஆன் கவர்களை வழங்குகிறது: இன்சூரன்ஸ் நிறுவனம் டயர் புரட்டெக்ட் கவர், ஜீரோ டிப்ரிஸியேஷன் கவர், பிரேக் டவுன் அசிஸ்டன்ஸ், என்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் பாதுகாப்பு மற்றும் கன்ஸ்யூமபில் கவர் போன்ற கூடுதல் கவர்களை வழங்குகிறது. ஜீப்பைப் பொறுத்தவரை, தேவைப்படும் போதெல்லாம் உதவியைப் பெற, பிரேக்டவுன் அசிஸ்டன்ஸ் கவரை நீங்கள் வாங்கலாம். இந்த ஆட்-ஆன் மூலம், ஆஃப்-ரோடிங்கில் உங்கள் ஜீப் ரிப்பேர் ஆனால் நீங்கள் அதே இடத்தில் சிக்கிக்கொள்ள மாட்டீர்கள். உங்கள் கார் மற்றும் அதன் பாகங்களில் ஏற்படும் டிப்ரிஸியேஷனைக் குறைக்க ஜீரோ டிப்ரிஸியேஷன் கவரை நீங்கள் வாங்கலாம் மற்றும் கிளைமின் போது ரிப்பேர்களுக்கான முழு செலவையும், பாகங்களை மாற்றுவதற்கான செலவுகளையும் பெறலாம்.
- ஐ.டி.வி கஸ்டமைஷேஷன் விருப்பங்கள்: டிஜிட் இன்சூரன்ஸ் ஒரு ஐ.டி.வியைத் தேர்வுசெய்து அதற்கேற்ப பிரீமியத்தைச் செலுத்த அனுமதிக்கிறது. சிறந்த பாதுகாப்பிற்காக அதிக ஐ.டி.வியை நீங்கள் தேர்வு செய்யலாம்.
- கேரேஜ்களின் பரந்த நெட்வொர்க்: கேஷ்லெஸ் கேரேஜ்களின் பரந்த நெட்வொர்க் உங்களுக்கு தொந்தரவு இல்லாத ரிப்பேர் வசதிகளை வழங்குகிறது.
- உயர் கிளைம்-செட்டில்மென்ட் ரேஷியோ: டிஜிட் இன்சூரன்ஸ் மிக உயர் கிளைம் செட்டில்மென்ட் ரேஷியோ கொண்ட கிளைம் சேவைகளை வழங்குவதில் மிக விரைவானது.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
ஜீப் கார் இன்சூரன்ஸ் திட்டத்தின் கீழ் டயர் டேமேஜ் ரிப்பேர் இன்சூரன்ஸ் கிடைக்குமா?
இல்லை, ஒரு ஸ்டாண்டர்ட் இன்சூரன்ஸ் பாலிசியானது டயர் டேமேஜ்களை ஈடுசெய்யாது. இதற்கு எதிராக கவரேஜைப் பெற, உங்கள் பாலிசி பிரீமியத்திற்கு மேல் கூடுதல் கட்டணங்களைச் செலுத்தி, ஆட்-ஆன் கவரை பெற வேண்டும்.
நான் தேர்டு பார்ட்டி ஜீப் கார் இன்சூரன்ஸைப் பெற்றால், ஆட்-ஆன் வசதி பெற தகுதி உண்டா?
இல்லை, உங்கள் இன்சூரன்ஸ் திட்டத்திற்கு மேல் ஆட்-ஆன் கவர்களை சேர்க்க, உங்கள் ஜீப் காருக்கான காம்ப்ரிஹென்சிவ் இன்சூரன்ஸ் திட்டத்தைப் பெற வேண்டும்.
எனது ஜீப் கார் இன்சூரன்ஸை ரீனியூவல் செய்த பிறகு நான் நோ கிளைம் போனஸைப் பெறலாமா?
காலாவதியான 90 நாட்களுக்குள் உங்கள் பாலிசியை ரீனியூவல் செய்தால், நீங்கள் நோ கிளைம் போனஸைப் பெறுவீர்கள். இந்த காலத்திற்கு அப்பால், இந்த பெனிஃபிட் கிடைக்காது.