டிராவல் இன்சூரன்ஸ் என்பது பயணத்துடன் வரும் அபாயங்களை ஈடுசெய்ய நீங்கள் வாங்கும் ஒரு அத்தியாவசிய ஆவணமாகும், மேலும் இது சர்வதேச அளவில் அல்லது உள்நாட்டு பயணத்திற்கும் மற்றும் எதிர்பாராத சூழ்நிலைகளிலும் கூட பயன்படுத்தப்படலாம்.
ஆன்லைனில் டிராவல் இன்சூரன்ஸை வாங்குவதற்கான சிறந்த நேரம் உங்கள் பயணத்திற்கான முதல் வைப்புத்தொகை (ஹோட்டல் அல்லது விமான டிக்கெட்டுகளை முன்பதிவு) செய்த 15 நாட்களுக்குள் செய்ய வேண்டும். உங்கள் பயணத்தைத் திட்டமிடுவதை முடித்தப் பிறகு, உங்கள் மொத்த ப்ரீபெய்ட் பயண செலவுகளை நீங்கள் மதிப்பிட முடியும். இது உங்கள் பயணத்தைப் பாதுகாப்பதற்கான உங்கள் திட்டத்திற்கானத் துல்லியமான தோராய மதிப்பீட்டினைப் பெற உங்களை அனுமதிக்கிறது.
டிராவல் இன்சூரன்ஸை முன்கூட்டியே வாங்குவது பெரும்பாலும் பயண ரத்து, குறுக்கீடு, விமான தாமதம் போன்ற டேக் ஆஃப் செய்வதற்கு முன்னர் ஏற்படும் நிகழ்வுகளுக்குகான கவரேஜ்களுக்கு உங்களை தகுதிப்படுத்துகிறது. பல நிறுவனங்கள் (எங்களைப் போன்றவை) நீங்கள் புறப்படுவதற்கு முந்தைய நாள் வரை பிளான்களை வாங்க அனுமதிக்கின்றன. நீங்கள் தேர்வு செய்யும் பிளானில் எது கவர் செய்யப்படுகிறது மற்றும் எது கவர் செய்யப்படவில்லை என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் அனைத்து நன்மைகளையும் பெறாவிட்டாலும், லக்கேஜ் மற்றும் பாஸ்போர்ட் இழப்பு, மெடிக்கல் கவர்கள், அட்வென்ச்சர் ஆக்டிவிடி கவரேஜ், பர்சனல் லையபிலிட்டி மற்றும் பெயில் பாண்ட் போன்ற முக்கியமான கவர்களை நீங்கள் பெறுவீர்கள்.
உங்கள் பிளானை எவ்வளவு சீக்கிரம் வாங்குகிறீர்களோ, அவ்வளவு சீக்கிரம் நீங்கள் கவர் செய்யப்படுவீர்கள். ஆனால், நீங்கள் தொடர்ச்சியான நாடோடியாக இருந்தால், புறப்படுவதற்கு முன்பு உங்கள் பயணத்தைப் பாதுகாக்கலாம். நீங்கள் இப்போது டிஜிட்டின் இன்டர்நேஷனல் டிராவல் இன்சூரன்ஸ் பாலிசியை ஆன்லைனில் பெறலாம்!
இந்தியாவில் உள்ள ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனங்களிடமிருந்து விமான நிலையத்தில் குடியேற்றத்தை முடித்த பிறகு நீங்கள் டிராவல் இன்சூரன்ஸை வாங்க முடியாது.
தொழில்நுட்ப ரீதியாக, உங்கள் பாலிசி நீங்கள் புறப்படும்போதிலிருந்து உங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்பும் வரை கவர் செய்யப்படுகிறது. சில சம்பவங்கள் நடந்த பிறகு நீங்கள் ஒரு டிராவல் இன்சூரன்ஸ் பாலிசியை வாங்க முடியாது. எடுத்துக்காட்டாக, தாய்லாந்து பயணத்தின் போது, உங்கள் காலில் காயம் ஏற்பட்டது, அல்லது உங்கள் லக்கேஜ்கள் திருடப்பட்டன. துரதிர்ஷ்டவசமாக, இது போன்ற சூழ்நிலைகளுக்கு நீங்கள் டிராவல் இன்சூரன்ஸை கோர முடியாது. ஒரு சூழ்நிலை ஏற்கனவே ஏற்பட்டிருந்தால் அல்லது நிகழும் என்று எதிர்பார்க்கப்பட்டால், உங்கள் பாலிசியின் கீழ் நீங்கள் கவர் செய்யப்பட மாட்டீர்கள்.
டிராவல் இன்சூரன்ஸ் ஆன்லைன் பாலிசியை முன்கூட்டியே வாங்குவது ஒரு புத்திசாலித்தனமான தேர்வாகும், எனவே, பின்னர் இன்சூரன்ஸ் எடுக்க நீங்கள் மறக்க மாட்டீர்கள்.
டிராவல் இன்சூரன்ஸ் இல்லாமல் பயணம் செய்வது நீங்கள் எடுக்க விரும்பக்கூடாத ஒரு ரிஸ்க். ஏன் என்பது இங்கே:
ஆம், ஏனென்றால் எதிர்பாராத தடைகள் அல்லது பேரழிவுகள் ஏற்பட்டால் பயணம் தொடர்பான செலவுகளில் ஆயிரக்கணக்கான ரூபாய்களை ஈடுசெய்ய இது உதவுகிறது. சில சந்தர்ப்பங்களில், டிராவல் இன்சூரன்ஸை வாங்கும் பல பயணிகள் கிளைமை தாக்கல் செய்ய வேண்டிய அவசியமில்லை. கிட்டத்தட்ட முழு விஷயமும் இதுதான்!
உங்கள் பயணத்தில் ஏதேனும் இடையூறு ஏற்பட்டால், அந்நேரத்தில் உங்களை காப்பாற்ற டிராவல் இன்சூரன்ஸ் ஒரு பாதுகாப்பு போர்வையாக வாங்கப்படுகிறது. இதுபோன்ற சூழ்நிலைகளிலிருந்து நிதி விளைவுகள் கடுமையானதாக இருக்கலாம், எனவே உங்கள் பாக்கெட் பணம் காலியாவதைத் தவிர்க்க உங்கள் வெளிநாட்டு பயணங்களுக்கு இன்டர்நேஷனல் டிராவல் இன்சூரன்ஸை வாங்குகிறீர்கள். வருமுன் காப்பதே சிறந்தது.
உங்கள் டிராவல் இன்சூரன்ஸைப் பெறுவதற்கான இன்னும் சில முக்கியமான காரணங்கள் மற்றும் நன்மைகளை நாங்கள் கீழே குறிப்பிட்டுள்ளோம்:
உங்களை மருத்துவமனையில் அவசரமாக அனுமதித்தல், வெளியேற்றம், உங்கள் பயணம் ரத்து செய்யப்படுதல் அல்லது உங்கள் முன்பதிவுகள் பவுன்ஸ் ஆனால், உங்கள் டிராவல் இன்சூரன்ஸ் உங்கள் செலவுகளை ஈடுசெய்ய உதவும், இது முதலீட்டின் மதிப்பை நிரூபிக்கும்.
டிராவல் இன்சூரன்ஸ் ஏன் முக்கியமானது மற்றும் வாங்க சரியான நேரம் எது என்று இப்போது உங்களுக்குத் தெரியும், முன்னோக்கிச் சென்று உங்கள் பாலிசியை டிஜிட்டிலிருந்து பெறுங்கள்.