சப்போர்ட்
closeஎங்கள் வாட்ஸ்அப் எண்ணை அழைப்புகளுக்கு பயன்படுத்த முடியாது. இது வெறும் அரட்டை எண்.
புதுப்பிப்பின் போது உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் அதிகரிப்பதை நீங்கள் கவனித்துள்ளீர்களா, இது ஏன் நடக்கிறது என்று உங்களுக்குத் புரியவில்லையா? ஒவ்வொரு ஆண்டும் ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியங்கள் ஏன் அதிகரிக்கின்றன, இந்த அதிகரிப்பை எப்படி குறைக்கலாம் மற்றும் டிஜிட்டின் ஹெல்த் இன்சூரன்ஸ் மூலம் நீங்கள் பெறக்கூடிய சில புதுப்பிப்பு நன்மைகள் என்ன என்பதை அறிய தொடர்ந்து படிக்கவும்.
உங்கள் சம்பளத்தில் தொடங்கி, உங்கள் வீட்டு வாடகை எரிபொருள் மற்றும் உணவு விலை வரை உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் உட்பட, நேரமும் பணவீக்கமும் உங்கள் செலவுகளை அதிக அளவில் பாதிக்கிறது.
வாழ்க்கையில் நடக்கும் பெரும்பாலான விஷயங்களைப் போலவே, இந்த அதிகரிப்புக்கான முதன்மைக் காரணங்களில் ஒன்று இன்ஃபிலேஷன் ஆகும். இது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம் அல்லது இல்லாமலும் போகலாம். ஆனால் ஹெல்த் இன்சூரன்ஸில் இன்ஃபிலேஷன் மற்ற தொழில்களை விட அதிகமாகவே உள்ளது.
இருப்பினும், ஹெல்த்கேர் இன்ஃபிலேஷனைத் தவிர, உங்கள் வயது, உங்கள் கவரேஜ் நன்மைகள், ஒரு வருடத்தில் நீங்கள் செய்த கிளைம்கள் மற்றும் நிச்சயமாக உங்கள் ஒட்டுமொத்த உடல்நலம் மற்றும் நல்வாழ்வு போன்ற பிற காரணங்களும் உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் புதுப்பிப்பின் போது அதிகரிக்க காரணமாக இருக்கலாம்.
இந்தக் காரணங்களில் ஒவ்வொன்றையும் ஆழமாகப் பார்த்து, புதுப்பிப்பின் போது உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் ஏன் அதிகரிக்கிறது, அதைக் குறைக்க நீங்கள் என்ன செய்யலாம் என்பதைப் பார்ப்போம்.
எகனாமிக் டைம்ஸின் கூற்றுப்படி, ஹெல்த்கேரில் இன்ஃபிலேஷன் என்பது 12 முதல் 18% வீதத்தில் வளர்ந்து வருகிறது! மருந்துகளின் விலை, மருத்துவமனையில் சேர்க்கும் கட்டணம், பல்வேறு சிகிச்சைகளுக்கான செலவு, மருத்துவ முன்னேற்றங்கள் மற்றும் பல போன்ற ஒட்டுமொத்தச் செலவுகளும் இதில் அடங்கும்.
இந்தச் செலவுகளின் அதிகரிப்பு காரணமாக, உங்கள் இன்சூரரும் ஒவ்வொரு ஆண்டும் உங்களின் இன்சூரன்ஸ் தொகையை அதிகரிக்க வேண்டும். அதாவது நீங்கள் கிளைம் செய்யும்து இந்தச் செலவுகளை ஈடுகட்டும் அளவுக்கு கவரேஜ் இருத்தல் அவசியம்.
புதிய பாலிசி ஆண்டிற்கு நீங்கள் புதுப்பிக்கும் போது, இதன் விளைவாக உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியத்திலும் அதிகரிப்பு ஏற்படுகிறது.
இதற்கு நாம் என்ன செய்யலாம்?
உங்களுக்கான கெட்ட செய்தி என்னவென்றால், இது மருத்துவச் செலவுகளுடன் நேரடியாக தொடர்புடையது மற்றும் உங்கள் இன்சூர் செய்யப்பட்ட தொகையில் ஏற்படும் தேவையான அதிகரிப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, இந்த விஷயத்தில் நம்மால் எதுவும் செய்ய முடியாது.
இருப்பினும், நல்ல செய்தி என்னவென்றால், உங்கள் கிளைமகளை கருத்தில் கொண்டு சில இன்சூரர்கள் புதுப்பித்தல் தள்ளுபடிகள் மற்றும் போனஸ்களை வழங்குகிறார்கள்.
எனவே, உங்கள் திட்டத்தில் இந்த நன்மைகள் ஏதேனும் உள்ளதா என உங்கள் இன்சூரரிடம் (அல்லது உங்கள் பாலிசி ஆவணத்தைச் சரிபார்க்கவும்) கேட்டு தெரிந்து கொள்ளவும். நீங்கள் டிஜிட்டில் ஹெல்த் இன்சூரன்ஸ் வைத்திருந்தால் - உங்கள் பாலிசிக்கான சுருக்கத்தை நீங்கள் சரிபார்க்கலாம்.
இருப்பினும், முந்தைய ஆண்டில் எந்த கிளைமகளையும் செய்யாதவர்களுக்கு குமுலேட்டிவ் போனஸ் பலனை நாங்கள் வழங்குகிறோம். இதன் பொருள், உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியத்தில் எந்த அதிகரிப்பும் இல்லாமல் உங்கள் இன்சூரன்ஸ் தொகையை அதிகரிக்கிறோம்! 😊
உங்கள் ஆரோக்கியத்தை நன்றாக கவனித்துக்கொண்டதற்கு இது ஒரு சிறிய வெகுமதியாக அமைகிறது!
கூடுதலாக, ஒவ்வொரு ஆண்டும் உங்கள் இன்சூர் செய்யப்பட்ட தொகையை ரூ. 25,000 அல்லது ரூ. 50,000 ஆக தானாக அதிகரிப்பதன் மூலம், உங்கள் திட்டத்தை இன்ஃபிலேஷன்-ஃப்ரூப்பாகத் தனிப்பயனாக்கக்கூடிய ஆட்-ஆன் கவரையும் நாங்கள் வழங்குகிறோம்!
நீங்கள் கிளைம்களைச் செய்துள்ளீர்களா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல், இந்த நன்மைக்கான பிரீமியத்தின் அதிகரிப்பு என்பது புதுப்பித்தலின் போது மட்டுமே பொருந்தும்.
சில இன்சூரர்கள் வருடத்தில் நீங்கள் செய்த கிளைம்களின் எண்ணிக்கை மற்றும் அளவைப் பொறுத்து உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியத்தை அதிகரிக்கின்றனர். இருப்பினும், இது போன்ற திட்டம் அனைத்து ஹெல்த் இன்சூரர்களிடமும் இருக்காது.
உங்கள் கிளைம் வரலாற்றின் அடிப்படையில் உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் உங்கள் பிரீமியத்தை அதிகரிக்கிறதா என்பதைச் சரிபார்க்க, உங்கள் பாலிசி ஆவணத்தைத் திறந்து, உங்கள் கிளைம் பிரிவை அல்லது உங்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் காட்டப்படும் பகுதியைச் சரிபார்க்கவும்.
உங்களிடம் டிஜிட்டின் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி இருந்தால், நீங்கள் செய்த கிளைம்களின் எண்ணிக்கை அல்லது இன்சூர் செய்யப்பட்ட தொகையின் அடிப்படையில் உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியத்தை நாங்கள் அதிகரிக்க மாட்டோம் என்பதால் நீங்கள் கவலைப்படத் தேவையில்லை.
இதற்கு நாம் என்ன செய்யலாம்?
உங்கள் இன்சூரர் உங்கள் கிளைம் வரலாற்றின் அடிப்படையில் உங்களின் பிரீமியத்தை அதிகரித்தால், உங்கள் தற்போதைய இன்சூரரின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் ஒரு பகுதியின் காரணமாக, இந்த விஷயத்தில் நம்மால் எதுவும் செய்ய முடியாது.
இருப்பினும், இந்த நிபந்தனையுடன் வராத வேறு ஒரு ஹெல்த் இன்சூரரிடம் நீங்கள் போர்ட்டிங் செய்யலாம். போர்டிங் என்பது புதுப்பித்தலின் போது மட்டுமே நீங்கள் செய்யக்கூடிய ஒன்றாகும். எனவே மற்ற விருப்பங்களை மதிப்பீடு செய்து அதற்கேற்ப உங்கள் முடிவை எடுக்கவும்.
உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் பொதுவாக உங்கள் வயது உட்பட பல்வேறு காரணிகளைச் சார்ந்தது என்பதை நீங்கள் ஏற்கனவே அறிந்திருக்க வேண்டும்.
சில சந்தர்ப்பங்களில், வயது அதிகரிப்பு, புதுப்பித்தலின் போது உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியத்தை பாதிக்கலாம். புதுப்பித்தலின் போது அல்லது அதற்கு முன்பு 60 வயதைத் தொடுபவர்களுக்கு இது குறிப்பாகபொருந்தும்.
இதற்கு நாம் என்ன செய்யலாம்?
உங்களால் கடந்து சென்ற நேரத்தைத் திருப்பி கொண்டு வர முடியாது, இளமையாக மாற முடியாது. இன்சூர் செய்யப்பட்ட தொகையைப் பற்றி கவனமாக இருப்பது மட்டுமே உங்களால் செய்ய முடிந்த ஒன்று. நீங்கள் ஒப்பீட்டளவில் இளமையாக இருந்தால், உங்களுக்கு அதிக கவரேஜ் தேவையில்லை, ஆனால் உங்கள் சீனியர் சிட்டிசனான உங்கள் வயதான பெற்றோருக்கான திட்டம் உங்களிடம் இருந்தால், அவர்களுக்கு அதிக கவரேஜ் தேவைப்படலாம்.
எனவே, உங்கள் மற்றும் உங்கள் குடும்பத்தினரின் வயது மற்றும் சுகாதாரத் தேவைகளின் அடிப்படையில் காப்பீடு செய்யப்பட்ட தொகையை எப்போதும் தனிப்பயனாக்கவும்.
உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் புதுப்பித்தலின் போது, உங்கள் இன்சூரரின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் பொறுத்து, உங்கள் கவரேஜ் மற்றும் நன்மைகளில் ஒரு சில மாற்றங்களை நீங்கள் தேர்வு செய்யலாம்.
உங்களுக்கு அதிக கவரேஜ் தேவை என்பதை நீங்கள் உணர்ந்ததன் காரணமாக அல்லது தனிப்பட்ட சூழ்நிலைகளில் ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாக இதைச் செய்ய நீங்கள் முடிவு செய்யலாம் (ஒருவேளை நீங்கள் மகப்பேறு ஆட்-ஆனைத் தேர்வுசெய்யத் திட்டமிட்டிருக்கலாம் அல்லது அதிக கவரேஜ் தேவைப்படும் உடல்நலக் கோளாறினால் சமீபத்தில் கண்டறியப்பட்டிருக்கலாம். )
எனவே, நீங்கள் ஒரு ஆட்-ஆனை தேர்வு செய்வதன் மூலம் ஏதாவது மாற்றங்களைச் செய்தால் அல்லது உங்கள் இன்சூர் செய்யப்பட்ட தொகையை அதிகரிக்க முடிவு செய்தால்; அதன் அடிப்படையில் உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியமும் அதிகரிக்கும்.
இதற்கு நாம் என்ன செய்யலாம்?
இந்த விஷயத்தில் செய்ய வேண்டிய சிறந்த விஷயம் என்னவென்றால், உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டத்தை விரிவாக மதிப்பாய்வு செய்வதாகும். இதன் மூலம் உங்கள் கவரேஜ் மற்றும் நன்மைகள் என்ன என்பதை நீங்கள் பார்க்கலாம். மேலும் அவை உங்கள் அதிகரித்து வரும் உடல்நலத் தேவைகளுக்கு அர்த்தமுள்ளதாக இருக்கிறதா இல்லையா என்பதையும் புரிந்து கொள்ளலாம். உங்கள் தற்போதைய இன்சூரர் வைத்துள்ள மற்ற திட்ட விருப்பங்களையும் ஆராய்ந்து மேம்படுத்தலாம்.
நீங்கள் செய்யக்கூடிய மற்றொரு விஷயம் என்னவென்றால், மற்ற ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டங்களை ஆன்லைனில் ஒப்பிட்டுப் பாருங்கள் - உங்கள் தற்போதைய சூழ்நிலைக்கு மிகவும் பொருத்தமான வேறு ஏதேனும் திட்டம் உள்ளதா என்பதைக் காண இது உதவும்.
இன்ஃபிலேஷன் காரணமாக உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைந்தபட்சமாக அதிகரிக்கும் என்பதை நீங்கள் ஏற்கனவே அறிந்திருக்க வேண்டும். இருப்பினும், பெரும்பாலான ஹெல்த் இன்சூரர்கள் முந்தைய ஆண்டில் நீங்கள் எவ்வளவு ஆரோக்கியமாக இருந்தீர்கள் என்பதைக் கருத்தில் கொண்டு அதற்கேற்ப உங்களுக்கு வெகுமதி அளிக்கிறார்கள்.
எடுத்துக்காட்டாக: டிஜிட்டில், இந்த ஆண்டில் நீங்கள் எந்த கிளைம்களையும் செய்யவில்லை என்றால் - நாங்கள் உங்களுக்கு குமுலேட்டிவ் போனஸ் பலனை வழங்குகிறோம். அதாவது புதுப்பித்தலின் போது உங்கள் பிரீமியத்தில் எந்த அதிகரிப்பும் இல்லாமல் உங்கள் கவரேஜை அதிகரிக்கிறோம்!
இதேபோல், சில ஹெல்த் இன்சூரர்கள், நீங்கள் சமீபத்தில் ஒரு நோய் அல்லது அதிக கவரேஜ் தேவைப்படும் நோய்களால் கண்டறியப்பட்டிருந்தால், புதுப்பித்தலின் போது உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியத்தை அதிகரிக்கலாம்.
இதற்கு நாம் என்ன செய்யலாம்?
இதற்கான தெளிவான பதில், உங்கள் ஆரோக்கியத்தை நீங்கள் நன்றாக கவனித்துக்கொள்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்துவதாகும்! இருப்பினும், வாழ்க்கை நிச்சயமற்றது என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். சில சமயங்களில் நீங்கள் எவ்வளவு கவனமாக இருந்தாலும், அசம்பாவிதங்களை நம்மால் தடுக்க இயலாது!
சிறிய கிளைம்களைச் செய்வதைத் தவிர்ப்பதன் மூலமாக, குமுலேட்டிவ் போனஸ் போன்ற நன்மைகளிலிருந்து பயனடையலாம்..
உதாரணத்திற்கு; இந்த ஆண்டில் உங்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டதாகக் வைத்துக்கொள்வோம் - இதற்கான செலவுகள் பெரிய அளவில் இருக்காது என்பதால் அதற்கான கிளைமைச் செய்யாமல் இருப்பது ஒரு நல்ல யோசனையாக இருக்கும்.
இதை செய்வதன் மூலம் நீங்கள் வருடத்தில் எந்த ஒரு கிளைம் வரலாற்றையும் கொண்டிருக்க மாட்டீர்கள். மேலும் உங்கள் பிரீமியத்தில் எந்த அதிகரிப்பும் இல்லாமல், உங்கள் இன்சூர் செய்யப்பட்ட தொகையில் அதிகரிப்பாக வெகுமதியைப் பெறலாம்.
உங்கள் தற்போதைய ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி காலாவதியாகும் முன்பாக, அதாவது குறைந்தது இரண்டு மாதங்களுக்கு முன், உங்கள் திட்டத்தை அப்படியே புதுப்பிக்கும் முன், உங்கள் திட்டத்தை மதிப்பாய்வு செய்து சில விஷயங்களைக் கருத்தில் கொள்வது நல்லது. உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியைப் புதுப்பிக்கும்போது நீங்கள் கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்:
வாங்கும் போது குறைந்தபட்ச இன்சூர் செய்யப்பட்டத் தொகையை நீங்கள் தேர்வு செய்திருக்கலாம் அல்லது அதிகமாக கூட இருக்கலாம் மற்றும் உங்கள் கவரேஜ் மிகக் குறைவாகவோ அல்லது உங்கள் தேவைகளுக்கு அதிகமாகவோ இருப்பதை நீங்கள் உணர்ந்திருக்கலாம்.
பெரும்பாலான இன்சூரர்கள், புதுப்பித்தலின் போது உங்கள் இன்சூர் செய்யப்பட்டத் தொகையை அதிகரிப்பதற்கான விருப்பத்தை உங்களுக்கு வழங்குவார்கள். உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியத்தை அதிகரிப்பதன் அடிப்படையில், உங்கள் இன்சூர் செய்யப்பட்டத் தொகையை எவ்வளவு அதிகரிக்க முடிவு செய்கிறீர்கள் என்ற காரணத்தை அவர்கள் உங்களிடம் கேட்கலாம்.
ஒருவேளை உங்களுக்கு திருமணம் ஆகி ஒரு குடும்பத்தைத் தொடங்கி இருக்கலாம் அல்லது உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டத்தில் உங்கள் மனைவியையும் சேர்க்க முடிவு செய்திருக்கலாம். இந்த விஷயங்களைக் கருத்தில் கொண்டு, புதிய உறுப்பினர் சேர்த்தல் பற்றி உங்கள் இன்சூரருக்குத் தெரியப்படுத்தவும்.
ஃபேமிலி ஃப்ளோட்டர் ஆப்ஷனை தேர்வு செய்வதன் மூலம் உங்கள் திட்டத்தில் உள்ள குடும்ப உறுப்பினர்களைhttps://www.godigit.com/health-insurance/individual-health-insurance சேர்த்துக்கொள்ளலாம் அல்லது ஒவ்வொரு உறுப்பினருக்கும் இன்டிஜுவல் திட்டங்களை வாங்கலாம்.
உங்கள் புதுப்பித்தலின் போது கருத்தில் கொள்ள வேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால், நீங்கள் புதிய ஆட்-ஆன் கவர்களைத் தேர்வுசெய்ய விரும்புகிறீர்களா இல்லையா என்பதுதான். எடுத்துக்காட்டாக: உங்கள் திட்டத்தில் இதுவரை நீங்கள் எந்த ஆட்-ஆன்களையும் தேர்வு செய்யவில்லை, ஆனால் இப்போது மெட்டர்னிட்டி கவர் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கான இன்சூரன்ஸ் பாலிசியைத் தேர்வுசெய்ய விரும்பலாம். இந்தச் சந்தர்ப்பத்தில், உங்கள் விருப்பத்தை இன்சூரருக்குத் தெரியப்படுத்தி, புதுப்பித்தலின் போது அதை உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டத்தில் சேர்க்கவும்.
பலர் தற்போதுள்ள இன்சூரரிடம் மகிழ்ச்சியடையாதபோது, தங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டங்களை போர்டிங் செய்கின்றனர். இது கவரேஜ் நன்மைகள் காரணமாக இருக்கலாம் அல்லது அதன் சேவை மற்றும் செயல்முறைகள் காரணமாகவும் இருக்கலாம்.
இருப்பினும், புதுப்பித்தலின் போது மட்டுமே போர்டிங் செய்ய முடியும். மிக முக்கியமாக, காலாவதி தேதிக்கு குறைந்தபட்சம் 45 நாட்களுக்கு முன்பே உங்களின் தற்போதைய இன்சூரருக்கு அதைத் தெரியப்படுத்த வேண்டும். இதனால் அவர்கள் மாற்றத்தை செய்ய சுலபமாக இருக்கும்.
உங்கள் இன்சூரருடன் நீங்கள் மகிழ்ச்சியடையவில்லை என்றால், உங்களுக்குச் சிறப்பாகச் செயல்படும் திட்டம் மற்றும் ஆன்லைனில் உள்ள பிற ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டங்களை மதிப்பீடு செய்து ஒப்பிட்டுப் பாருங்கள்.
இப்போது, உங்கள் இன்சூர் செய்யப்பட்ட தொகை மற்றும் புதிய ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டங்களைத் தேர்ந்தெடுப்பதைத் தவிர, உங்கள் கவரேஜில் வேறு ஏதேனும் மாற்றங்களை நீங்கள் விரும்புகிறீர்களா இல்லையா என்பதைப் பார்க்க, உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டத்தை ஒட்டுமொத்தமாக மதிப்பாய்வு செய்ய வேண்டும்.
எடுத்துக்காட்டாக: நீங்கள் அடிப்படை கவரேஜ் திட்டத்தைத் தேர்வுசெய்து, தற்போது மேலும் பலன்களுடன் கூடிய காம்ப்ரிஹென்சிவ் (விரிவான) திட்டத்திற்கு மாற விரும்புகிறீர்களா என்பதை சொல்லுங்கள். இந்தச் சந்தர்ப்பத்தில், உங்களின் திட்டத்தைத் தேர்ந்தெடுத்து, உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் புதுப்பித்தலின் போது அதைச் செய்து முடிக்க முடியுமா என்பதை உங்கள் இன்சூரரிடம் நீங்கள் சரிபார்க்கலாம்.