சூப்பர் டாப்-அப் ஹெல்த் இன்சூரன்

Zero Paperwork. Quick Process.

சூப்பர் டாப்-அப் ஹெல்த் இன்சூரன்ஸ் என்றால் என்ன?

ஒரு சூப்பர் டாப்-அப் ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான் என்பது, உங்கள் கார்ப்பரேட் இன்சூரன்ஸில் அதிகபட்ச கிளைம் தொகையை (ஆண்டின் போது) நீங்கள் ஏற்கனவே பயன்படுத்தியிருக்கும் போது அல்லது உங்கள் பணத்தில் இருந்து சிறிதளவு தொகையை மருத்துவ செலவுக்காக செலுத்த நீங்கள் தயாராக இருக்கும் போது நீங்கள் பயன்படுத்தக்கூடிய ஒரு ஹெல்த் இன்சூரன்ஸின்  நீட்டிப்பு போன்றது. இது விலையுயர்ந்த மருத்துவ செலவுகளை நீங்கள் சமாளிக்க உதவும் ஒரு ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான்.

ஒரு சூப்பர் டாப்-அப் திட்டத்தின் சிறப்பு என்னவென்றால், பாலிசியின் ஒரு வருடத்திற்குள் ஒட்டுமொத்த மருத்துவச் செலவுகளுக்கான கிளைம்களை இது ஈடுசெய்கிறது.

ஒரு உதாரணத்துடன் சூப்பர் டாப்-அப்பை இப்போது புரிந்து கொள்ளுங்கள்

சூப்பர் டாப்-அப் இன்சூரன்ஸ் (டிஜிட் ஹெல்த் கேர் பிளஸ்) மற்ற டாப்-அப் திட்டங்கள் மற்ற டாப்-அப் திட்டங்கள்
தேர்ந்தெடுக்கப்பட்ட டிடக்டபிள்ஸ் 2 லட்சம் 2 லட்சம்
தேர்ந்தெடுக்கப்பட்ட 10 லட்சம் 10 லட்சம்
ஆண்டின் 1வது கிளைம் 4 லட்சம் 4 லட்சம்
நீங்கள் செலுத்தும் பணம் 2 லட்சம் 2 லட்சம்
உங்கள் டாப்-அப் இன்சூரர் செலுத்தும் பணம் 2 லட்சம் 2 லட்சம்
ஆண்டின் 2வது கிளைம் 6 லட்சம் 6 லட்சம்
நீங்கள் செலுத்தும் பணம் ஒன்றுமில்லை! 😊 2 லட்சம்(டிடக்டபிள் தேர்ந்தெடுக்கப்பட்டது)
உங்கள் டாப்-அப் இன்சூரர் செலுத்தும் பணம் 6 லட்சம் 4 லட்சம்
ஆண்டின் 3வது கிளைம் 1 லட்சம் 1 லட்சம்
நீங்கள் செலுத்தும் பணம் ஒன்றுமில்லை! 😊 1 லட்சம்
உங்கள் டாப்-அப், இன்சூரர் செலுத்தும் பணம் 1 லட்சம் ஒன்றுமில்லை☹️

சூப்பர் டாப்-அப் ஹெல்த் இன்சூரன்ஸின் நன்மைகள் என்ன?

தொற்றுநோய்க்கு இன்சூரன்ஸ் செய்யப்படுகிறது - கோவிட்-19 நம் வாழ்வில் நிறைய நிச்சயமற்ற தன்மையைக் கொண்டு வந்துள்ளது என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். மற்ற நோய்களைத் தவிர, கோவிட்-19 ஒரு தொற்றுநோயாக இருந்தாலும் கூட அதுவும் இதில் காப்பீடு செய்யப்படுகிறது.· 

உங்களின் டிடக்டபிள்ஸை ஒரு முறை மட்டுமே செலுத்துங்கள் -சூப்பர் டாப்-அப் இன்சூரன்ஸில், நீங்கள் ஒரு முறை மட்டுமே கழிக்கக்கூடிய தொகையைச் செலுத்த வேண்டும். அதன் பிறகு ஒரு வருடத்தில் பலமுறை கிளைம் செய்யலாம். இது ஒரு உண்மையாலேயே டிஜிட்டின்  சிறப்பு! 😊

ஹெல்த்கேர்  தேவைகளுக்கு ஏற்ப உங்களின் சூப்பர் டாப்-அப் பாலிசியைத் தனிப்பயனாக்குங்கள்:  நீங்கள் 1, 2, 3 மற்றும் 5 லட்சம் டிடக்டபிள்களில் இருந்து தேர்வு செய்து, உங்கள் இன்சூரன்ஸ் தொகையாக ரூ. 10 லட்சம் முதல் 20 லட்சம் வரை தேர்வு செய்யலாம்.

அறை வாடகைக்கு வரம்பு இல்லை: ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விருப்பத்தேர்வுகள் உள்ளன, அதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். அதனால்தான், எங்களுக்கு அறை வாடகைக் கட்டுப்பாடுகள் இல்லை! நீங்கள் விரும்பும் எந்த மருத்துவமனை அறையையும் தேர்வு செய்யவும்.😊 

 எந்த மருத்துவமனையிலும் சிகிச்சை பெறுங்கள்: கேஷ்லெஸ் கிளைம்களுக்காக இந்தியாவில் உள்ள 16400+ நெட்வொர்க் மருத்துவமனைகளில் இருந்து தேர்வு செய்யவும் அல்லது நீங்கள் ரீஇம்பர்ஸ்மென்டைத் தேர்வுசெய்யலாம்.

 எளிதான ஆன்லைன் செயல்முறை: சூப்பர் டாப்-அப் ஹெல்த் இன்சூரன்ஸ் வாங்குவது முதல் உங்கள் கிளைம் செய்வது வரை, அனைத்துமே காகிதம் இல்லாதது, எளிதானது, விரைவானது மற்றும் தொந்தரவு இல்லாதது! கிளைம்களுக்கு கூட ஹார்டு காப்பிகள் தேவையில்லை!

நீங்கள் ஏன் சூப்பர் டாப்-அப் ஹெல்த் இன்சூரன்ஸ் பெற வேண்டும்?

சூப்பர் டாப்-அப் ஹெல்த் இன்சூரன்ஸை யார் வாங்க வேண்டும்?

சூப்பர் டாப்-அப் ஹெல்த் இன்சூரன்ஸில் எவை எல்லாம் உள்ளடக்கப்படுகிறது?

பயன்கள்

சூப்பர் டாப் - அப்

ஒரு பாலிசி ஆண்டிற்குள், டிடக்டிபிள்ஸை விட அதிகமாகும் போது, இது ஒட்டுமொத்த மருத்துவ செலவுகளுக்கான கிளைம்களை செலுத்துகிறது, அதற்கு மாறாக ஒரு வழக்கமான டாப்-அப் இன்சூரன்ஸ் ஆனது குறிப்பிட்ட வரம்புக்கு மேல் ஒரே ஒரு உரிமைகோரலை மட்டுமே கவர் செய்கிறது.

உங்கள் டிடக்டிபிள்ஸை ஒரு முறை செலுத்தினால் போதும் - டிஜிட் ஸ்பெஷல்

மருத்துவமனையில் அனுமதிக்கப்படுதல்

உடல் சார்ந்த பிரச்சனை, விபத்து, அல்லது ஏதேனும் கொடிய நோயின் காரணமாக மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுத்துக் கொள்ளும் செலவுகளை இது உள்ளடக்குகிறது. உங்கள் டிடக்டிப்பிள் வரம்பை மீறிவிட்டால், உங்கள் சம் இன்சூர்ட்டுக்குள் இருக்கும் பட்சத்தில், நீங்கள் எத்தனை முறை வேண்டுமானலும் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.

டே கேர் செயல்முறைகள்

பொதுவாக ஹெல்த் இன்சூரன்ஸ் ஆனது 24 மணிநேரங்களுக்கு மேல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதற்கு ஆகும் மருத்துவ செலவுகளை உள்ளடுக்குகிறது. டே கேர் செயல்முறை என்பது தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக 24 மணிநேரத்திற்குள் மருத்துவமனைக்கு சென்று தக்க சிகிச்சை எடுத்துக் கொள்வதைக் குறிக்கும்.

ஏற்கனவே இருக்கும்/குறிப்பிட்ட நோய்களுக்கான காத்திருப்பு காலம்

இது ஏற்கனவே இருக்கும்/குறிப்பிட்ட நோய்களுக்காக கிளைம் செய்வதற்கு முன்பாக நீங்கள் காத்திருக்க வேண்டிய காலத்தைக் குறிக்கிறது

4 ஆண்டுகள்/2ஆண்டுகள்

அறை வாடகைக்கான கேப்பிங்

ஒவ்வொரு வகையான அறைக்கும் வாடகையானது வித்தியாசப்படும். ஆம், ஹோட்டல் அறைகளுக்கு டேரிஃப் இருப்பதைப் போலத் தான். உங்கள் சம் இன்சூர்ட்டிற்குள் இருக்கும் வரை, டிஜிட் வழங்கும் சில திட்டங்கள் மூலம் நீங்கள் அறை வாடகைக்கு எந்த வரம்பும் இன்றி அனுபவிக்கலாம்.

அறை வாடகைக்கு எந்த வரம்பும் இல்லை - டிஜிட் ஸ்பெஷல்

ஐசியூ (ICU) அறை வாடகை

ஐசியூ (தீவிர சிகிச்சைப் பிரிவு) என்பது இக்கட்டான நிலையில் உள்ள நோயாளிக்கானது ஆகும். இதில் நோயாளிகள் மிகுந்த கவனுத்துடன் பார்த்துக்கொள்ளப்படுவதால், அறைக்கான வாடகை அதிகமாக இருக்கும். டிஜிட் இந்த கட்டணத்திற்கு எந்த வரம்பும் விதிப்பது இல்லை, ஆனால் இது உங்கள் சம் இன்சூர்ட்டிற்குள் இருக்க வேண்டும்.

வரம்பு இல்லை

ரோட் ஆம்புலன்ஸ் கட்டணங்கள்

ஆம்புலன்ஸ் சேவைகள் என்பது மிகவும் அத்தியாவசியமான ஒரு மருத்துவ சேவையாகும். இது நோயாளிகளை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு சேர்ப்பதோடு, அவசர கால சிகிச்சைக்கு ஏற்ற வசதிகளையும் கொண்டுள்ளது. இதற்கான செலவு அனைத்துமே இந்த சூப்பர் டாப் அப் பாலிசியில் கவர் செய்யப்படுகிறது.

இலவச வருடாந்திர மருத்துவ பரிசோதனை

உங்கள் உடல் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் தொடர்பான விவரங்களை தெரிந்து கொள்வது மிகவும் அவசியமாகும். உங்களுக்கு விருப்பமான மருத்துவமனையில், நீங்கள் செய்து கொள்ளும் வருடாந்திர மருத்துவ பரிசோதனைகளுக்கான செலவுகளைப் திரும்பப் பெற இந்த அம்சம் ஆனது உதவுகிறது.

மருத்துவனையில் அனுமதிக்கப்படுத்தலுக்கு முன்/பின்

இது நோய் கண்டறிதல், சோதனைகள் போன்ற மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன் மற்றும் பின்னான செலவுகளை கவர் செய்கிறது.

மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றதற்குப் பின் கிடைக்கும் ஒட்டுமொத்த தொகை - டிஜிட் ஸ்பெஷல்

மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுத்து வீடு திரும்பும் போது, அதற்குப் பின் ஆகும் செலவுகளை இது கவர் செய்கிறது. இதற்கு பில்கள் தேவையில்லை. நீங்கள் இந்த சலுகையைப் பயன்படுத்தலாம் அல்லது ஸ்டாண்டர்டு போஸ்ட் ஹாஸ்பிடலைசேஷன் சலுகையை, ரீஇம்பர்ஸ்மெண்ட் மூலம் பயன்படுத்திக் கொள்ளலாம்.

சைக்கியாட்ரிக் இல்னஸ் கவர்

காயம் ஏற்பட்டு சைக்கியாட்ரிக் சிகிச்சை எடுத்துக் கொள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டி இருந்தால், அதற்கான செலவுகள் இந்த பெனிஃபிட்-ல் கவர் செய்யப்படுகிறது. இருப்பினும் ஓபிடி ஆலோசனை இதன் கீழ் அடங்காது.

உடல் எடைக் குறைப்பு சிகிச்சை

உடல் எடை அதிகமாக இருப்பதன் (பிஎம்ஐ/BMI> 35) காரணமாக ஏதேனும் பாகங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை இது கவர் செய்கிறது. இருப்பினும், உணவு உண்பது தொடர்பான கோளாறுகள், ஹார்மோன்கள் அல்லது ஏதேனும் சிகிச்சையளிக்கக் கூடிய நிலையின் காரணமாக உடல் எடை அளவுக்கு அதிகமாக இருந்தால், அதற்கான சிகிச்சை செலவுகள் இதில் அடங்காது.

Get Quote

இதில் உள்ளடக்கப்படாதது எது?

உங்களின் டிடக்டபிள்ஸ் முடிவடையும் வரை நீங்கள் கிளைம் செய்ய முடியாது

ஏற்கனவே உள்ள உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி கிளைம் தொகையை நீங்கள் ஏற்கனவே முடித்துவிட்டாலோ அல்லது உங்கள் பணத்திலிருந்து  கழிக்கக்கூடிய தொகையை ஏற்கனவே செலவழித்திருந்தாலோ மட்டுமே உங்கள் டாப்-அப் ஹெல்த் இன்சூரன்ஸில் நீங்கள் கிளைம் செய்ய முடியும். இருப்பினும், இதில் சிறப்பு என்னவென்றால், நீங்கள் ஒரு முறை மட்டுமே உங்கள் டிடக்டபிள்ஸை  செலுத்த வேண்டும்.

ஏற்கனவே இருக்கும் நோய்கள்

உங்களுக்கு ஏற்கனவே நோய் இருக்கும் பட்சத்தில், காத்திருப்பு காலம் முடிந்தால் தவிர, அந்த நோய் அல்லது நோய்க்கான கிளைமை நீங்கள் செய்ய முடியாது.

மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் மருத்துவமனையில் அனுமதித்தல்

மருத்துவரின் மருந்துச் சீட்டு இல்லாமல் எந்த ஒரு காரணத்திற்காக நீங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாலும், அது இத்திட்டத்தில் உள்ளடக்கப்படாது.

பிரசவத்திற்கு முந்தைய & பிரசவத்திற்குப் பிந்தைய செலவுகள்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய கட்டாயத்தைத் தவிர மகப்பேறுக்கு முந்தைய மற்றும் பிரசவத்திற்குப் பிந்தைய மருத்துவ செலவுகள் இதில் கவர் செய்யப்படாது.

கிளைமை எவ்வாறு செய்வது?

ரீஇம்பர்ஸ்மென்ட் கிளைம்கள் - மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இரண்டு நாட்களுக்குள் 1800-258-4242 என்ற எண்ணில் எங்களுக்குத் தெரியப்படுத்தவும் அல்லது healthclaims@godigit.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும். ரீஇம்பர்ஸ்மென்ட் செய்வதற்கு உங்கள் மருத்துவமனை கட்டணங்கள் மற்றும் தொடர்புடைய அனைத்தையும் பதிவேற்றக்கூடிய இணைப்பை நாங்கள் உங்களுக்கு அனுப்புவோம். 

 கேஷ்லெஸ் கிளைம்கள் - நெட்வொர்க் மருத்துவமனையைத் தேர்வு செய்யவும். நெட்வொர்க் மருத்துவமனைகளின் முழுமையான பட்டியலை இங்கே காணலாம். மருத்துவமனை உதவி மையத்தில் இ-ஹெல்த் கார்டைக் காட்டி, கேஷ்லெஸ் கிளைம்  படிவத்தைக் கேட்கவும். எல்லாம் சரியாக இருந்தால், உங்கள் கிளைம் அப்போதே செயல்படுத்தப்படும்.

நீங்கள் கொரோனா வைரஸுக்கு கிளைம் செய்துள்ளீர்கள் எனில், புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனமான ICMR-ன் அங்கீகரிக்கப்பட்ட மையத்தில் பரிசோதனை செய்து பாசிட்டிவ் என்று நீங்கள் பெற்ற அறிக்கை உங்களிடம் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.·  

சூப்பர் டாப்-அப் ஹெல்த் இன்சூரன்ஸின் முக்கிய நன்மைகள்

டிடக்டபிள்ஸ் ஒரு முறை மட்டுமே பணம் செலுத்துங்கள்!
கோ-பேமெண்ட் வயது அடிப்படையிலான கோ-பேமெண்ட் இல்லை
கேஷ்லெஸ் ஹாஸ்பிடல் இந்தியா முழுவதும் 16400+ கேஷ்லெஸ் ஹாஸ்பிடல்கள்
அறை வாடகை கேப்பிங் அறை வாடகைக்கு எந்த விதமான வரம்பும் இல்லை. நீங்கள் விரும்பும் எந்த அறையையும் தேர்வு செய்யவும்.
கிளைம் செயல்முறை டிஜிட்டல் செயல்முறை என்பதால் ஹார்டு காப்பிகள் எதுவுமே தேவையில்லை!
கோவிட்-19க்கான சிகிச்சை கவர் செய்யப்படுகிறது

இந்தியாவில் சூப்பர் டாப்-அப் ஹெல்த் இன்சூரன்ஸ் பற்றிய அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

சூப்பர் டாப்-அப் ஹெல்த் இன்சூரன்ஸ் எப்படி வேலை செய்கிறது?

ஒரு சூப்பர் டாப்-அப் பிளான் ஆனது செலவு-பகிர்வு அடிப்படையில் செயல்படுகிறது. இதன் பொருள், முழுச் செலவையும் உங்களின் சூப்பர் டாப்-அப் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனம் ஏற்காது, ஆனால் உங்கள் டிடக்டபிள் என்ன என்பதன் அடிப்படையில் ஒரு பகுதி மட்டுமே இன்சூர் செய்யப்படுகிறது. உங்கள் சூப்பர் டாப்-அப் திட்டத்தின் டிடக்டிபிள் ரூ. 2 லட்சம் என்றால், உங்கள் சூப்பர் டாப்-அப் திட்டமானது 2 லட்சத்துக்கும் அதிகமான கிளைம்களுக்கு ஈடுசெய்யும். 

சூப்பர் டாப்-அப் ஹெல்த் இன்சூரன்ஸ் மற்றும் வழக்கமான ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டத்திற்கு என்ன வித்தியாசம்?

ஒரு சூப்பர் டாப்-அப் ஹெல்த் இன்சூரன்ஸ் மற்றும் உங்களின் வழக்கமான ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டத்திற்கு இடையே உள்ள முக்கிய வேறுபாடு என்னவென்றால், உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான் உங்கள் முழுமையான அல்லது 70% உங்கள் மருத்துவமனையில் சேர்க்கும் செலவுகளை (உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியைப் பொறுத்து) ஈடு செய்யும்.

இருப்பினும், ஒரு சூப்பர் டாப்-அப் ஹெல்த் இன்சூரன்ஸ் உங்கள் செலவினங்களை ஒரு குறிப்பிட்ட வரம்பிற்கு மேல் இருந்தால் மட்டுமே உள்ளடக்கும்.

 

எடுத்துக்காட்டாக: உங்களின் சூப்பர் டாப் அப் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி 5 லட்சத்திற்குப் பிறகு மட்டுமே உங்களுக்குக் காப்பீடு செய்தால்... உங்கள் பில் 8 லட்சமாக இருக்கும் பட்சத்தில், உங்கள் பணத்தில் இருந்து 5 லட்சங்களைச் செலவழித்த பிறகு அல்லது நிலையான ஹெல்த் இன்சூரன்ஸில் இருந்து செலவு செய்த பிறகு, 3 லட்சத்துக்கு மட்டுமே அது இன்சூர் செய்யும்.

ஏன் ஒரு சூப்பர் டாப்-அப் ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான் மலிவானது?

சூப்பர் டாப்-அப் ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான் மலிவானதாக இருப்பதற்கான முதன்மைக் காரணம், முழுச் செலவுகளையும் சூப்பர் டாப்-அப் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனம் ஏற்காது. கூடுத

டாப்-அப் ஹெல்த் இன்சூரன்ஸ் மற்றும் சூப்பர் டாப்-அப் ஹெல்த் இன்சூரன்ஸ் இடையே உள்ள வித்தியாசம் என்ன?

டாப்-அப் மற்றும் சூப்பர் டாப்-அப் ஹெல்த் இன்சூரன்ஸ் இரண்டையும் பற்றி நீங்கள் படித்திருக்கலாம், அவற்றுக்கிடையே உண்மையில் என்ன வித்தியாசம் என்று குழப்பமடைந்திருக்கலாம்.

எளிமையான வார்த்தைகளில், ஒரு டாப்-அப் ஹெல்த் இன்சூரன்ஸ், ஒரு கிளைம் டிடக்டபிள்ஸ் வரம்பை மீறிச் செல்லும் போது மட்டுமே செலவுகளை ஈடு செய்யும்.

இருப்பினும், ஒரு சூப்பர் டாப்-அப் ஹெல்த் இன்சூரன்ஸ், வருடத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கிளைம்கள் டிடக்டபிள்ஸ் வரம்பிற்கு அப்பால் சென்றாலும் கூட, செலவுகளை ஈடு செய்யும்.

எடுத்துக்காட்டாக: 5 லட்சம் டிடக்டபிள்ஸ் கொண்ட டாப்-அப் திட்டத்தை நீங்கள் தேர்வுசெய்து, அந்த ஆண்டில், தலா 4 லட்சத்திற்கு இரண்டு கிளைம்கள் இருந்தால், உங்கள் டாப் அப் ஹெல்த் இன்சூரன்ஸ் கிளைமை கவர் செய்யாது. ஏனெனில், அந்த சிங்கில்  கிளைம் 5 லட்சத்தை தாண்டவில்லை.

இருப்பினும், ஒரு சூப்பர் டாப்-அப் திட்டமானது இதனை செய்கிறது. வருடத்தின் மொத்த கிளைம் தொகை ரூ. 8 லட்சமாக இருப்பதால், மீதமுள்ள 3 லட்சத்திற்கு இன்சூரன்ஸ் செய்யப்படும்.

சூப்பர் டாப்-அப் ஹெல்த் இன்சூரன்ஸில் டிடக்டபிள்ஸ் என்றால் என்ன?

உங்களின் சூப்பர் டாப்-அப் இன்சூரன்ஸ் உங்களுக்குச் பணம் செலுத்தும் முன், நீங்கள் அல்லது உங்கள் முதன்மைக் இன்சூரர் செலுத்த வேண்டிய தொகையே டிடக்டபிள்ஸ் ஆகும்.

எனவே, எடுத்துக்காட்டாக, 2 லட்ச ரூபாய்க்கான டாப்-அப் அல்லது சூப்பர் டாப்-அப் திட்டத்தை நீங்கள் தேர்ந்தெடுத்திருந்தால், உங்கள் டிடக்டபிள்ஸ் தொகையாக ரூ. 20 லட்சமும், உங்கள் இன்சூரன்ஸ் தொகையாக ரூ.20 லட்சமும் இருக்கும்.

கிளைம் செய்யும் போது, ​​உங்களிடம் மொத்தம் ரூ. 3 லட்சம் கிளெய்ம் இருந்தால், மீதமுள்ள 1 லட்சத்துக்கு உங்களின் சூப்பர் டாப்-அப் இன்சூரன்ஸ் கிளைம் செய்யப்படும். அதே சமயம் முதல் 2 லட்சத்திற்கான பணத்தை நீங்கள் செலுத்த வேண்டும். 

ஆயுஷ் ஒரு சூப்பர் டாப்-அப் ஹெல்த் இன்சூரன்ஸில் உள்ளதா?

ஆம், டிஜிட்டின் சூப்பர் டாப்-அப் ஹெல்த் இன்சூரன்ஸ் ஆயுஷ் மூலம் சிகிச்சைகளையும் வழங்குகிறது. 

சூப்பர் டாப்-அப் ஹெல்த் இன்சூரன்ஸ் வாங்க யார் தகுதியானவர்?


18 முதல் 65 வயது வரை உள்ள எவரும் சூப்பர் டாப்-அப் ஹெல்த் இன்சூரன்ஸ் வாங்க தகுதியுடையவர்கள்.

சூப்பர் டாப்-அப் ஹெல்த் இன்சூரன்ஸ் எனது பெற்றோருக்கு எப்படிப் பயனளிக்கும்?

ஒருவருக்கு வயதாகும்போது, ​​மருத்துவச் செலவும் கூடுகிறது. இதன் பொருள், ஒரு வருடத்தில் ஹெல்த்கேர் பராமரிப்புக்கான ஒட்டுமொத்தச் செலவுகள், உங்கள் கார்ப்பரேட் பிளான் அல்லது அடிப்படை ஹெல்த்கேர் இன்சூரன்ஸ் உள்ளடக்கியதை விட அதிகமாக இருக்கலாம்.

டாப்-அப் அல்லது சூப்பர் டாப்-அப் பிளான்- இவற்றில் நான் எதை தேர்வு செய்ய வேண்டும்?

பெரும்பாலான மக்கள் நிதி நிச்சயமற்ற நிலையை எளிதாக்க டாப்-அப் ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டங்களை வாங்குகிறார்கள். டாப்-அப் மற்றும் சூப்பர் டாப்-அப் இரண்டும் செலவினங்களை நிர்வகிப்பதற்கு உதவும் போது, ​​அவை நிர்ணயிக்கப்பட்ட டிடக்டபிள்ஸிற்கு மேல் செல்லும் போது, ​​சூப்பர் டாப்-அப் திட்டங்கள், வருடத்தில் மொத்த செலவுகள் டிடக்டபிள்ஸை விட அதிகமாக இருக்கும் போது பொருந்தும், அதே சமயம் ​​டாப்-அப் திட்டங்கள் சிங்கில் கிளைம்களுக்கு மட்டுமே பொருந்தும். 

 

எனவே, நிதியின் அடிப்படையில், சூப்பர் டாப்-அப் பிளான்கள் உங்களுக்கு நிறையச் சேமிக்கவும் பயன்பெறவும் உதவுகின்றன!

சூப்பர் டாப்-அப் ஹெல்த் இன்சூரன்ஸ் எனது இன்சூரன்ஸ் தொகையை எவ்வாறு உயர்த்துகிறது?

நீங்கள் ஒரு சூப்பர் டாப்-அப் ஹெல்த் இன்சூரன்ஸினைப் பெற்றால், ஒரு வருடத்தில் உடல்நலம் தொடர்பான கிளைம்களில் நீங்கள் டிடக்டிபிள் தொகை வரை செலவிட்டிருந்தால், கூடுதல் கவரேஜுக்கு உங்கள் சூப்பர் டாப்-அப் திட்டத்தைப் பயன்படுத்தலாம். இதன் பொருள், உங்களிடம் ரூ. 3 லட்சம் வரையிலான கார்ப்பரேட் ஹெல்த் இன்சூரன்ஸ் மற்றும் ரூ. 10 லட்சம் சூப்பர் டாப்-அப் ஹெல்த் இன்சூரன்ஸ் இருந்தால், உங்களிடம் மொத்தம் 13 லட்சம் இன்சூரன்ஸ் தொகை இருக்கும். இவ்வாறு உங்கள் சூப்பர் டாப்-அப் உங்களுக்கு முதன்மை உதவியை வழங்கும்.

எனது சூப்பர் டாப்-அப் ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியத்தை பாதிக்கும் காரணிகள் என்ன?

உங்களின் சூப்பர் டாப்-அப் ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியத்தைப் பாதிக்கும் காரணிகளில் உங்கள் வயது, இருப்பிடம் மற்றும் உங்கள் சூப்பர் டாப்-அப் ஹெல்த் இன்சூரன்ஸ் பிளானின் ஒரு பகுதியாக நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள டிடக்டபிள்ஸ் மற்றும் இன்சூரன்ஸ் தொகை ஆகியவை அடங்கும்.