டிஜிட் இன்சூரன்ஸ் பண்ணுங்க

எம்ப்ளாயி ஸ்டேட் இன்சூரன்ஸ் (இ.எஸ்.ஐ பிளான்) பற்றி அனைத்தும்

பிஸியான கால அட்டவணைகள் மற்றும் உட்கார்ந்த படியே வேலை செய்தல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, சராசரி மனிதர்கள் ஆரோக்கியமான இருப்புக்காக தினசரி ஏதேனும் மருந்துகளை நாடுகிறார்கள் என்பதை மறுக்க முடியாது.

இருப்பினும், அதிகரித்து வரும் சுகாதாரச் செலவுகளை நிலையாக சமாளிப்பதற்கு கவலையை எதிர்கொள்ள நேரிடும் சமயத்தில் இன்சூரன்ஸ் பிளான் உங்களுக்கு உதவ வருகிறது. 

இந்த தொழிலாளர்களின் தேவைகளை கருத்தில் கொண்டு, மருத்துவ அவசர காலங்களில் அவர்களுக்கு உதவுவதற்காக இந்திய அரசு இ.எஸ்.ஐ (ESI) பிளானை அறிமுகப்படுத்தியது.

தொடர்ந்து படியுங்கள்!

எம்ப்ளாயி ஸ்டேட் இன்சூரன்ஸ் பிளான் (ESIS): அது என்ன, அது உங்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்துகிறது?

பல பரிமாண சமூகப் பாதுகாப்புத் திட்டமான எம்ப்ளாயி ஸ்டேட் இன்சூரன்ஸ் பிளான், அமைப்பு சார்ந்த துறையில் பணிபுரிவர்களுக்கும் அவர்களைச் சார்ந்துள்ள உறுப்பினர்களுக்கும் சமூக-பொருளாதார பாதுகாப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த இன்சூரன்ஸ் திட்டத்தின் கீழ், தொழில் ரிஸ்குகள், நோய் மற்றும் மகப்பேறு காரணமாக மருத்துவ அவசரநிலைகளின் போது தனிநபர்கள் நிதி உதவியைப் பெறலாம். 

இந்த ஒருங்கிணைந்த பிளானை நிர்வகிக்கும் கார்ப்பரேட் அமைப்பு எம்ப்ளாயி ஸ்டேட் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் என்று அழைக்கப்படுகிறது. 

பிளான் எம்ப்ளாயி ஸ்டேட் இன்சூரன்ஸ் பிளான் எனும் சட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் ஒவ்வொரு வேலை தரும் நிறுவனமும் இந்த திட்டத்தின் கீழ் ஒரு புதிய ஊழியரின் சேர்க்கையை உறுதி செய்ய வேண்டும்.

எம்ப்ளாயி ஸ்டேட் இன்சூரன்ஸ் பிளான் சட்டத்தின் ஒரு கண்ணோட்டம்

 

இந்திய நாடாளுமன்றம் 1948-ஆம் ஆண்டில் எம்ப்ளாயி ஸ்டேட் இன்சூரன்ஸ் சட்டத்தை அறிமுகப்படுத்தியது மற்றும் 1952ஆம் ஆண்டில் டெல்லி மற்றும் கான்பூரில் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது சுமார் 1.20 லட்சம் ஊழியர்களை உள்ளடக்கி இருந்தது. இந்த ஆரம்பகட்ட அமலாக்கத்திற்குப் பிறகு, மாநில அரசுகள் இந்த முயற்சியை பல கட்டங்களாக நாட்டின் பல பகுதிகளையும் சேர்க்க மேற்கொண்டன. 

இன்சூரன்ஸ் செய்யப்பட்ட ஊழியர்களின் தகுதி மற்றும் எம்ப்ளாயி ஸ்டேட் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் கடமைகள் மற்றும் பொறுப்புகள் உட்பட திட்டத்தின் செல்லுபடியாகும் தன்மை தொடர்பான பல விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை இந்த சட்டம் வரையறுக்கிறது. 

 

இ.எஸ்.ஐ (ESI) கீழ் குடும்ப உறுப்பினர் இன்சூர் செய்யப்பட்ட தனிநபரைச் சார்ந்திருப்பதற்கான சில தேவைகளையும் இது குறிப்பிடுகிறது. இச்சட்டத்தின்படி, தகுதி வாய்ந்த சார்ந்திருப்பவர்கள் பின்வருமாறு:

இ.எஸ்.ஐ (ESI) கீழ் குடும்ப உறுப்பினர் இன்சூர் செய்யப்பட்ட தனிநபரைச் சார்ந்திருப்பதற்கான சில தேவைகளையும் இது குறிப்பிடுகிறது. இச்சட்டத்தின்படி, தகுதி வாய்ந்த சார்ந்திருப்பவர்கள் பின்வருமாறு:

1. கணவரை இழந்த தாய் உட்பட எந்தவொரு பெற்றோரும்.

2. தத்தெடுக்கப்பட்ட அல்லது இல்லெஜிடிமேட் ஆஃப் ஸ்பிரிங் உள்பட மகன்கள் மற்றும் மகள்கள்.

3. விதவை அல்லது திருமணமாகாத சகோதரி.

4. ஒரு மைனர் சகோதரர்.

5. பெற்றோர் இறந்துவிட்டால் தந்தைவழி தாத்தா பாட்டி.

6. விதவை மருமகள்.

7. குழந்தையின் பெற்றோர் எவரும் உயிருடன் இல்லையெனில், மகன் அல்லது மகளின் மைனர் ஆஃப்ஸ்பிரிங்.

எம்ப்ளாயி ஸ்டேட் இன்சூரன்ஸ் சட்டம் 1948 பங்களிப்பு காலங்கள் 2 மற்றும் 2 பணப் பலன் காலங்களை பின்வருமாறு பின்வருமாறு:

காலம் மாதங்கள்
பங்களிப்பு காலங்கள் ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 30 வரை, அக்டோபர் 1 முதல்- மார்ச் 31 வரை
பணப் பலன் காலங்கள் ஜனவரி 1 முதல்-ஜூன் 31 வரை, ஜூலை 1 முதல் டிசம்பர் 31 வரை

பங்களிப்பு காலத்தில் ஒரு ஊழியரின் பங்களிப்பு நாட்களைப் பொறுத்து, அதற்கேற்ப அடுத்த பணப்பலன் காலத்தில் அவர்கள் இழப்பீட்டை பெறலாம்.

இ.எஸ்.ஐ.சியின் (எம்ப்ளாயி ஸ்டேட் இன்சூரன்ஸ் பிளான்) அம்சங்கள் என்னென்ன?

அரசு வழங்கும் இந்த இன்சூரன்ஸ் பிளானை பற்றி தெரிந்து கொள்ள நீங்கள் ஆர்வமாக இருந்தால், அதன் சில முக்கிய பண்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

  • எம்ப்ளாயி ஸ்டேட் இன்சூரன்ஸ் பிளான் அனைத்து தொழிலாளர்களுக்கும் மாதந்தோறும் ரூ.21,000-க்கும் குறைவாகவோ அல்லது அதற்கு சமமாகவோ இன்சூரன்ஸ் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 
  • குறிப்பிட்ட நோய்களுக்கு எதிரான சுகாதார நன்மைகளை இன்சூரன்ஸ் போடப்பட்டவரும் அவர்களைச் சார்ந்த உறுப்பினர்களும் பெறலாம். 
  • வேலை தரும் நிறுவனங்களுக்கான தற்போதைய பங்களிப்பு விகிதம் 3.25% மற்றும் ஊழியர்களுக்கு, செலுத்த வேண்டிய ஊதியத்தில் 0.75% ஆகும். 2019 ஆம் ஆண்டில் மொத்த பங்களிப்பை 6.5 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாக அரசாங்கம் குறைத்தது. தினக்கூலி ரூ.137-க்கும் குறைவாக உள்ள தொழிலாளர்களுக்கு அவர்களின் பங்கை செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
  • மாதத்தின் 21 நாட்களுக்குள் உரிய பங்களிப்பை வேலை தரும் நிறுவனங்கள் செலுத்த வேண்டும்.
  • இ.எஸ்.ஐ (ESI) திட்டத்தின் கீழ் மொத்த மருத்துவச் செலவில் 1/8 பங்கு ஒரு நபருக்கு ரூ.1500 வரை மாநில அரசுகள் வழங்க வேண்டும்.
  • முன்கூட்டிய ஓய்வு பெற்ற பிறகும் அல்லது வி.எச்.எஸ் (VHS) திட்டத்தின் கீழ் உள்ளவர்களுக்கும் இன்சூரன்ஸ் செய்யப்பட்ட நபர்களுக்கு இந்த பிளான் தொடர்ந்து நன்மைகளை வழங்கும். வேலைவாய்ப்பற்ற ஒரு நபர் கூட 3 ஆண்டுகள் வரை இந்த திட்டத்தின் மூலம் தொடர்ந்து பயனடையலாம். இருப்பினும், அவர்கள் தங்கள் ஆட்குறைப்பு கடிதம் மற்றும் அவர்களின் கடைசி பணியிடம் குறித்த அனைத்து விவரங்களையும் வழங்க வேண்டும்.
  • இந்த பிளான் சுகாதார நபர்களின் தரத்தை மேம்படுத்த உதவும் வகையில் அதிக மருத்துவ கல்லூரிகளை திறக்க ஊக்குவிக்கிறது.
  • இத்திட்டத்தில் தொழில் ரீதியான இடர்பாடுகளின் கீழ் பயணிக்கும்போது ஏற்படும் விபத்துக்களும் அடங்கும்.
  • பெண் ஊழியர்கள் கர்ப்பம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டால் சிறப்பு சலுகைகளைப் பெறலாம். அவர்கள் 26 வார மகப்பேறு விடுப்பை 1 மாதம் வரை ஊதியத்தை பாதிக்காத வகையில் நீட்டிக்கலாம்.

 ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டத்தின் இந்த அம்சங்கள் அனைத்தும் பல நன்மைகளைப் பெற உங்களை அனுமதிக்கின்றன.

இ.எஸ்.ஐ.சி (ESIC)-இன் நன்மைகள் என்னென்ன?

நீங்கள் இ.எஸ்.ஐ.சி (ESIC) திட்டத்தின் கீழ் பதிவு செய்திருந்தால், இ.எஸ்.ஐ (ESI) மருத்துவமனை/ மருந்தகத்தில் பின்வரும் சலுகைகளைப் பெறலாம்.

1. நோய் நன்மைகள்

இன்சூரன்ஸ் செய்யப்பட்ட ஊழியர்கள் ஆண்டுக்கு 91 நாட்கள் வரை செல்லுபடியாகும் நோய் காலங்களுக்கு தங்கள் ஊதியத்தில் 70% ரொக்க இழப்பீட்டை அனுபவிக்க முடியும். இத்தகைய நன்மைகளைப் பெற, தனிநபர்கள் பங்களிப்பு காலத்தில் குறைந்தது 78 நாட்களுக்கு பங்களிக்க வேண்டும்.

நீண்டகால நோய்கள் உள்ள நபர்கள் எம்ப்ளாயி ஸ்டேட் இன்சூரன்ஸ் சட்டம் 1948-இன் நீட்டிக்கப்பட்ட நோய் நன்மைகளின் கீழ் 2 ஆண்டுகள் வரை 80% அதிக இழப்பீட்டு விகிதங்களைப் பெறலாம்.

2. மருத்துவ நன்மைகள்

இன்சூரன்ஸ் செய்யப்பட்டவர் மற்றும் அவரைச் சார்ந்துள்ள குடும்ப உறுப்பினர்கள் இந்த திட்டத்தின் கீழ் மருத்துவர் ஆலோசனை, மருந்து மற்றும் ஆம்புலன்ஸ் சேவைகள் உள்ளிட்ட முழுமையான மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை கவனிப்பைப் பெறலாம்.

அத்தகைய செலவுகளுக்கான அதிகபட்ச வரம்பை இந்த பிளான் குறிப்பிடவில்லை.

3. ஊனமுற்றோர் (தற்காலிக மற்றும் நிரந்தர) நன்மைகள்

இன்சூரன்ஸ் செய்யப்பட்ட தொழிலாளர்கள் வேலையின்போது காயத்தால் தற்காலிக ஊனத்தை எதிர்கொண்டால் அவர்களின் ஊதியத்தில் 90% இழப்பீடாகப் பெறலாம்.

நீங்கள் ஏதேனும் பங்களிப்பை செலுத்தியிருந்தாலும் இல்லாவிட்டாலும், இந்த நன்மை வேலையின் முதல் நாளிலிருந்து ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

விபத்து நடந்த தேதிக்குப் பிறகு ஊனம் 3 நாட்களுக்கு மேல் நீடித்தால், சம்பாதிக்கும் திறனை இழந்த முழு காலத்திற்கும் இழப்பீடு வழங்கப்படுகிறது.

4. மகப்பேறு நன்மைகள்

கர்ப்பம், கருச்சிதைவு, மருத்துவ கருக்கலைப்பு, குறைப்பிரசவம் அல்லது பிரசவத்தால் ஏற்படும் ஏதேனும் உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால் பெண் ஊழியர்கள் பணப் பலன்களைப் பெறலாம்.

இழப்பீட்டுக்கான அதிகபட்ச காலம் மருத்துவ தேவையின் வகையைப் பொறுத்து 6-12 மாதங்களுக்கு இடையில் மாறுபடும். மேலும் 1 மாதத்திற்கு நீட்டிக்கப்படலாம்.

உங்கள் பண நன்மை காலத்திற்கு முந்தைய 2 தொடர்ச்சியான பங்களிப்பு காலங்களில் குறைந்தது 70 நாட்களுக்கு நீங்கள் பங்களிப்பு செய்திருந்தால் மட்டுமே நீங்கள் பயனடைய முடியும் என்பதை நினைவில் கொள்க.

5. இறப்பு நன்மைகள்

இன்சூரன்ஸ் செய்யப்பட்ட ஊழியர் ஒரு தொழிலில் ஈடுபட்டிருக்கும்போது விபத்தில் இறக்க நேரிட்டால், அவரைச் சார்ந்துள்ள குடும்ப உறுப்பினர்கள் இறந்த நபரின் சம்பளத்தில் 90% மதிப்புள்ள மாதாந்திர இழப்பீட்டை பெறலாம்.

சார்ந்திருக்கும் வாழ்க்கைத் துணை மற்றும் பெற்றோர் இறக்கும் வரை இந்த நன்மைகளை அனுபவிக்க முடியும் என்றாலும், அவர்களின் வாரிசுகள் 25 வயதிலிருந்து பயனடையலாம்.

6. ஈமச்சடங்கு செலவு

நீங்கள் சார்ந்திருக்கும் குடும்ப உறுப்பினராக இருந்தால், இறந்த நபரின் இறுதிச் சடங்குகளைச் செய்ய ரூ.10,000 வரை கிளைம் கோரலாம்.

7. ஓய்வுக்குப் பிந்தைய நன்மைகள்

நீங்கள் குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்கு எம்ப்ளாயி ஸ்டேட் இன்சூரன்ஸ் கீழ் பாதுகாக்கப்பட்டிருந்தால், உங்கள் ஓய்வுக்குப் பிறகும் நீங்களும் உங்கள் வாழ்க்கைத் துணையும் தொடர்ந்து மருத்துவ நன்மைகளை அனுபவிக்க முடியும்.

திட்ட சலுகைகளைப் பெற நீங்கள் ஒவ்வொரு ஆண்டும் ரூ.120 என்ற பெயரளவிலான கட்டணத்தை செலுத்த வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்க.

8. வேலைவாய்ப்பற்றோருக்கு நிதி ஒதுக்கீடு

குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் இன்சூரன்ஸ் செய்யப்பட்ட ஊழியராக இருந்த பிறகு ஆட்குறைப்பு, நிறுவனத்தை மூடுதல் அல்லது நிரந்தர ஊனம் காரணமாக நீங்கள் வேலையில்லாமல் இருந்தால், ராஜீவ் காந்தி ஷ்ராமிக் கல்யாண் யோஜனாவின் கீழ் நீங்கள் இன்னும் குறிப்பிட்ட நன்மைகளை அனுபவிக்க முடியும்.

இந்த நன்மைகளில் மருத்துவப் பராமரிப்பு மற்றும் 1 வருடம் வரை உங்கள் சம்பளத்தில் 50% மதிப்புள்ள வேலையின்மை கொடுப்பனவு ஆகியவை அடங்கும்.

வேலைவாய்ப்பற்ற பயனாளிகள் அடல் பீமிட் வியாக்தி கல்யாண் யோஜனாவின் கீழ் ரொக்க இழப்பீட்டை கிளைம் செய்யலாம். பாலிசிதாரர்கள் இ.எஸ்.ஐ (ESI) சட்டத்தின் பிரிவு 2 (9) இன் கீழ் மூன்று மாதங்களுக்கு அவர்களின் மாதாந்திர ஊதியத்தில் 25% பெறுவார்கள்.

இ.எஸ்.ஐ (ESI) திட்டத்தின் மேற்கூறிய பயன்களைத் தவிர, எம்ப்ளாயி ஸ்டேட் காம்பன்சேஷன் மருத்துவமனைகள்/ மருந்தகங்கள் தவிர வேறு எந்த இடத்திலும் தங்க வைக்கப்பட்டிருந்தால் தனிநபர்கள் ரூ.5000 வரை இழப்பீடு பெறலாம். இருப்பினும், அத்தகைய கிளைம்கள் 2 முறை வரை மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன.

எம்ப்ளாயி ஸ்டேட் திட்டத்தின் கீழ் இன்சூரன்ஸ் கவரேஜ் அளவு

கடைகள் மற்றும் ஸ்தாபன சட்டம் அல்லது தொழிற்சாலை சட்டத்தின் கீழ் 10 க்கும் மேற்பட்ட அல்லது அதற்கு சமமான பணியாளர்களைக் கொண்ட இந்தியா முழுவதும் உள்ள அனைத்து பிசினஸ் நிறுவனங்களுக்கும் இந்த பிளான் பொருந்தும்.

ஈ.எஸ்.ஐ.சி (ESIC) கவரேஜ் எதை உள்ளடக்கியது என்பதை நீங்கள் விரிவாகப் புரிந்து கொள்ள விரும்பினால், பின்வரும் பட்டியலைப் பார்க்கவும்.

  • எம்ப்ளாயி ஸ்டேட் இன்சூரன்ஸ் சட்டம் 1948 பிரிவு 2 (12) இன் கீழ் நான்-சீசனல் தொழிற்சாலைகளையும் உள்ளடக்கியது.
  • பிரிவு 1 (5) இந்த பிளான் அனைத்து உணவகங்கள், திரையரங்குகள், கடைகள், செய்தித்தாள் நிறுவனங்கள், சாலை-மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் மற்றும் ஹோட்டல்களுக்குப் பொருந்தும். தனியார் கல்வி மற்றும் மருத்துவ நிறுவனங்களை இ.எஸ்.ஐ (ESI) திட்டத்தின் கீழ் சேர்க்க அடுத்தடுத்த நீட்டிப்புகள் செய்யப்பட்டுள்ளன.

ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, ரூ.21,000 வரை மொத்த ஊதியம் பெறும் தொழிலாளர்கள் இந்த இன்சூரன்ஸ் திட்டத்தில் சேரலாம். அதே நேரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சம்பள வரம்பு ரூ.25,000 வரை உள்ளது.

இ.எஸ்.ஐ.சி (ESIC)-க்கு பதிவு செய்வது எப்படி?

நீங்கள் ஒரு நிறுவனத்தை நடத்தினால், அதை இ.எஸ்.ஐ.சி (ESIC)-இன் கீழ் பதிவு செய்ய விரும்பினால், இங்கே படிப்படியான வழிகாட்டி உள்ளது.

  • படி 1: அதிகாரப்பூர்வ இ.எஸ்.ஐ.சி (ESIC) போர்ட்டலுக்குச் சென்று "சைன் அப்" என்பதை கிளிக் செய்யவும்.
  • படி 2: சரியான விவரங்களுடன் அடுத்த திரையில் உள்ள படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும்.
  • படி 3: அடுத்து, உங்கள் பதிவுசெய்யப்பட்ட இமெயில் ஐடியில் உங்கள் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டு விவரங்களைக் கொண்ட உறுதிப்படுத்தல் மெயிலைப் பெறுவீர்கள்.
  • படி 4: நீங்கள் பெற்ற யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டைப் பயன்படுத்தி, இ.எஸ்.ஐ.சி (ESIC) போர்ட்டலில் உள்நுழைந்து "நியூ எம்ப்ளாயி பதிவு" என்பதைக் கிளிக் செய்யவும். கீழ்தோன்றும் மெனுவிலிருந்து "அலகு வகை" என்பதைத் தேர்ந்தெடுத்து "சமர்ப்பி" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  • படி 5: இப்போது "தொழில் வழங்குநர் பதிவு படிவம் 1" ஐ முறையாக பூர்த்தி செய்து அனைத்து கட்டாய ஆவணங்களுடன் சமர்ப்பிக்கவும். 
  • படி 6: நீங்கள் "முன்கூட்டிய பங்களிப்பு செலுத்துதல்" என்ற பக்கத்திற்கு திருப்பிவிடப்படுவீர்கள், அங்கு நீங்கள் 6 மாத முன்கூட்டிய பங்களிப்புக்கான தொகையை உள்ளிட்டு கட்டண முறையைத் தேர்வு செய்ய வேண்டும்.

பணம் செலுத்திய பின்னர், 17 இலக்க இ.எஸ்.ஐ.சி (ESIC) பதிவு எண்ணைக் கொண்ட பதிவுக் கடிதம் (சி -11) உங்களுக்கு கிடைக்கும்.

இ.எஸ்.ஐ.சி (ESIC) பதிவுக்கு தேவையான ஆவணங்கள் யாவை?

இ.எஸ்.ஐ.சி (ESIC)-இன் கீழ் ஆன்லைனில் பதிவு செய்வதற்கு முன், பின்வரும் ஆவணங்களை கையில் வைத்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

  • கடைகள் மற்றும் ஸ்தாபன சட்டம் அல்லது தொழிற்சாலை சட்டத்தின் கீழ் பதிவு சான்றிதழ் அல்லது உரிமம்.
  • கூட்டாண்மை நிறுவனங்களுக்கான கூட்டாண்மை பத்திரம் மற்றும் தனியார் வரையறுக்கப்பட்ட கம்பனிகளுக்கான பதிவுச் சான்றிதழ்.
  • அனைத்து தொழிலாளர்களின் மாதாந்திர இழப்பீட்டு விவரங்களுடன் பட்டியல்.
  • அனைத்து ஊழியர்கள் மற்றும் வணிக நிறுவனத்தின் முகவரி சான்று மற்றும் பான் கார்டு.
  • நிறுவனத்தின் பங்குதாரர்கள், கூட்டாளிகள் மற்றும் இயக்குநர்களின் பட்டியல்.
  • பணியாளர் வருகைப் பதிவேடுகள்.

இந்த திட்டத்தின் கீழ் பிசினஸ் உரிமையாளர்கள் வெற்றிகரமாக தங்களை பதிவு செய்தவுடன், அவர்கள் நிறுவனத்தில் சேரும்போது புதிய ஊழியர்களை சேர்க்கலாம். வெற்றிகரமான பதிவுக்குப் பிறகு, ஒவ்வொரு தொழிலாளியும் ஒரு இ.எஸ்.ஐ.சி (ESIC) அல்லது பெசான் அட்டையைப் பெறுவார்கள், இது மருத்துவ சிகிச்சைகளுக்கு எதிராக இந்த திட்டத்தின் நன்மைகளைப் பெற விரும்பும் ஒவ்வொரு முறையும் அவர்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

எம்ப்ளாயி ஸ்டேட் இன்சூரன்ஸ் அட்டை அல்லது பெசான் அட்டை பற்றி அறிவோம்

இ.எஸ்.ஐ.எஸ் (ESIS) பதிவுக்கான உங்கள் சான்று என்ன என்று நீங்கள் யோசிக்கிறீர்கள் என்றால், இ.எஸ்.ஐ (ESI) அல்லது பெசான் கார்டு தான் அந்த ஆவணமாகும். இது மருத்துவமனை அதிகாரிகளுக்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்டவர் யார் என்பதை அடையாளம் காணவும், அவரது மருத்துவ வரலாற்றைக் கண்டறியவும் உதவுகிறது மற்றும் பின்வரும் விவரங்களைக் காட்டுகிறது.

  • இன்சூரன்ஸ் செய்யப்பட்ட நபரின் பெயர்
  • அவரது இன்சூரன்ஸ் நம்பர்
  • முகவரி விவரங்கள்
  • இன்சூரன்ஸ் செய்யப்பட்ட நபரின் பிறந்த தேதி
  • குடும்பப் புகைப்படம்

ஒரு ஊழியராக, உண்மையான இ.எஸ்.ஐ (ESI) அட்டை வழங்கப்படும் வரை 90 நாட்கள் வரை செல்லுபடியாகும் தற்காலிக அடையாள அட்டையை நீங்கள் பெறுவீர்கள். பிந்தையது ஒரு நிரந்தர அட்டையாகும், இது உங்கள் வாழ்நாள் முழுவதும் ஒரே மாதிரியாக இருக்கும். இருப்பினும், ஒவ்வொரு முறையும் நீங்கள் வேலை மாறும்போது உங்கள் புதிய வேலை தரும் நிறுவனத்தின் போர்ட்டலில் உங்களைப் பதிவு செய்ய வேண்டும் என்பதை நினைவில் கொள்க. 

நீங்கள் இன்னும் உங்கள் பெசான் அட்டையைப் பெறவில்லையா?

மிகவும் அடிப்படையான மருத்துவ இன்சூரன்ஸ் பாலிசிகள் கூட நம் நாட்டின் பெரும்பாலான மக்களுக்கு கட்டுப்படியாகாததாகத் தெரிகிறது - அதன் மக்கள்தொகையில் 22% பேர் ஒரு நாளைக்கு ரூ.143-க்கும் குறைவாக சம்பாதிக்கும் ஒரு நாடு, சர்வதேச தினசரி ஊதிய அளவுகோல் (1)

சரி, இ.எஸ்.ஐ (ESI) திட்டத்தின் ஒரு பகுதியாக இருப்பதன் மூலம் நீங்கள் வேலை மாறிய பிறகும் விண்ணப்பிக்கலாம் மற்றும் அதிகரித்து வரும் சுகாதார செலவுகள் குறித்த உங்கள் கவலைகள் அனைத்தையும் அகற்றலாம்!

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எம்ப்ளாயி ஸ்டேட் இன்சூரன்ஸ் பங்களிப்பு காலத்தில் எனது மாத சம்பளம் ரூ.21,000-க்கு மேல் இருந்தால் என்ன நடக்கும்?

பங்களிப்புக் காலத்தின் நடுவில் உங்கள் மொத்த சம்பளம் ரூ.21,000-ஐத் தாண்டினாலும், குறிப்பிட்ட பங்களிப்புக் காலம் முடியும் வரை நீங்கள் எம்ப்ளாயி ஸ்டேட் இன்சூரன்ஸ் திட்டத்தின் கீழ் கவரேஜைத் தொடர்ந்து பெறுவீர்கள். இந்த இன்சூரன்ஸ் திட்டத்திற்கு வேலை தரும் நிறுவனம் 3.25% செலுத்தும், ஊழியர் 0.75% பங்களிப்பார்.

இ.எஸ்.ஐ (ESI) பிளான் எந்த தொகையையும் எடுக்க அனுமதிக்கிறதா?

இ.எஸ்.ஐ (ESI) பிளானை வேறு எந்த இன்சூரன்ஸ் பாலிசியாகவும் கருதி, உங்கள் மாதாந்திர பங்களிப்பை பிரீமியமாகவும் நினைத்துப் பாருங்கள். பிரீமியத்தை பண வடிவில் திரும்பப் பெற முடியாததைப் போலவே, இ.எஸ்.ஐ (ESI) திட்டமும் பணத்தை எடுக்க அனுமதிப்பதில்லை. அதற்கு பதிலாக, இந்த பிளான் நீங்களும் உங்களைச் சார்ந்துள்ள குடும்ப உறுப்பினர்களும் இ.எஸ்.ஐ (ESI)-ஆல் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்களில் இலவச மருத்துவ சிகிச்சைகளைப் பெறுவதற்கான கிளைமை கோர அனுமதிக்கிறது.

இ.எஸ்.ஐ.எஸ் (ESIS)-க்கு எதிராக கிளைமைத் தாக்கல் செய்வதற்கான செயல்முறை என்ன?

இ.எஸ்.ஐ.எஸ் (ESIS)-க்கு எதிரான கிளைமைத் தொடங்க கொடுக்கப்பட்ட படிகளைப் பின்பற்றவும்.

  • அதிகாரப்பூர்வ இ.எஸ்.ஐ (ESI) போர்ட்டலைப் பார்வையிடவும்.
  • படிவம் 15-ஐ பதிவிறக்கம் செய்து, துல்லியமான விவரங்களுடன் நிரப்பவும்.
  • பூர்த்தி செய்யப்பட்ட இந்தப் படிவத்தை தொழிலாளர் மாநில இன்சூரன்ஸ் கார்ப்பரேஷனில் சமர்ப்பிக்கவும்.

பிடித்தம் செய்யப்பட்ட ஊழியர் பங்களிப்பை செலுத்த ஒரு வேலை தரும் நிறுவனம் தாமதித்தால் அல்லது செலுத்தத் தவறினால் என்ன நடக்கும்?

எம்ப்ளாயி ஸ்டேட் இன்சூரன்ஸ் சட்டம் 1948-இன் பிரிவு 40 (4) ஒவ்வொரு வேலை தரும் நிறுவனமும் ஊதியத்திலிருந்து பிடித்தம் செய்யப்படும் எந்தவொரு தொகையையும் அதன் உண்மையான நோக்கத்திற்கான பங்களிப்பாக செலுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறது. ஒழுங்குமுறை 31 இன் கீழ் பரிந்துரைக்கப்பட்ட வரம்பிற்குள் பணம் செலுத்துவதில் தாமதம் அல்லது தோல்வி ஏற்பட்டால், தாமதம் அல்லது தவறிய மொத்த நாட்களுக்கு வேலை தரும் நிறுவனத்திற்கு ஆண்டுக்கு 12% எளிய வட்டி செலுத்த வேண்டியிருக்கும். இது "நம்பிக்கை மீறல்" என்று கருதப்படுகிறது மற்றும் சட்டத்தின் பிரிவு 85 (ஏ)-இன் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும்.