டிஜிட் ஹெல்த் இன்சூரன்ஸ் விபத்து, இல்னெஸ் (நோய்கள்) மற்றும் கோவிட்-19 சிகிச்சைக்கு மருத்துவமனையில் சேர்க்கப்படுவதை உள்ளடக்கியிருக்கிறது.
இந்தியாவில் அதிக மக்கள்தொகை இருப்பதால் ஹெல்த் இன்சூரன்ஸ் மிகவும் விரும்பப்படும் புராடக்ட் ஆகும். முதன்முறையாக, 1948-ஆம் ஆண்டில், ஊழியர்களுக்காக அரசாங்கத்தால் ஹெல்த் இன்சூரன்ஸ் வழங்கப்பட்டது. ஆனால் இந்த இன்சூரன்ஸ் ப்ளூ காலர் தொழிலாளர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, மத்திய அரசு பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தியது.
1973-இல் ஜெனரல் இன்சூரன்ஸ் தேசியமயமாக்கப்பட்ட பின் சில ஆண்டுகளில் நான்கு நிறுவனங்களும் மெடிகிளைம் பாலிசியை அறிமுகப்படுத்தின. படிப்படியாக, இந்தத் துறை தனியார் துறை இன்சூரன்ஸ் வழங்குநர்களுக்கு விரிவாக்கப்பட்டது. இது ஹெல்த் புராடக்ட்களின் பல்வகைப்படுத்தலுக்கு பங்களித்தது.
மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சைச் செலவுகளுக்கு இன்சூரன்ஸ் தொகையை கொண்டிருப்பதுதான் இன்சூரன்ஸ் பாலிசி. இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு பிரீமியம் செலுத்தப்படும் கவரேஜ் வரம்பை பாலிசிதாரர் தேர்வு செய்கிறார். கிளைம் செய்யும்போது, பாலிசிதாரருக்கு இல்னெஸ் அல்லது காயத்துக்கு செய்யப்படும் சிகிச்சைக்காக ஏற்படும் செலவுகள் திருப்பி அளிக்கப்படும்.
ஹெல்த் இன்சூரன்ஸ் வயதானவர்களுக்கு மட்டுமே என்று பலர் நம்புகிறார்கள். ஹெல்த் இன்சூரன்ஸ் என்பதை மக்கள் கிரிட்டிகல் இல்னெஸுக்கானது என நம்புகின்றனர். இருப்பினும், ஹெல்த் இன்சூரன்ஸ் அனைத்து வகையான மருத்துவ அவசரநிலைகளையும் உள்ளடக்கும் என்பதால் இதில் உண்மை இல்லை - விபத்து தொடர்பாக மருத்துவமனையில் அனுமதிப்பது, இல்னெஸ் மற்றும் மேலும் சில சந்தர்ப்பங்களில் ஹெல்த் இன்சூரன்ஸ் பயன்படுகிறது. ஆண்டுதோறும் ஹெல்த் செக்-அப் செய்யக் கூட இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும், சிறு வயதிலேயே ஹெல்த் இன்சூரன்ஸ் வாங்குவதன் நன்மைகளை மக்கள் பெரும்பாலும் புரிந்துகொள்வதில்லை. ஒவ்வொரு கிளைம் இல்லாத ஆண்டிற்கும், இன்சூரன்ஸ் செய்தவர் ஒரு போனஸைப் பெறுகிறார், அது ஒட்டுமொத்தமாக சேர்க்கப்படுகிறது.
தனிநபர்கள் தங்களுடைய ஹெல்த் பாலிசியின் தொடக்க நாளிலிருந்து அனைத்து இல்னெஸுக்கும் சிகிச்சைகளுக்கும் இன்சூரன்ஸ் வழங்கப்படும் என்று நம்புகிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல.
பல இல்னெஸ்களுக்கு 1 வருடம், 2, 3 மற்றும் 4 ஆண்டுகள் காத்திருக்கும் காலம் உள்ளது. பாலிசியின் கீழ் வராத சில பட்டியலிடப்பட்ட இல்னெஸ்கள் உள்ளன. பொதுவாக, பாலிசியின் முதல் 30 நாட்களுக்கு எந்த இல்னெஸுக்கும் இன்சூரன்ஸ் கவரேஜ் இருக்காது.
குரூப் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி வேலை தரும் நிறுவனங்களால் வழங்கப்படுவது. இது தனிநபர்களுக்கு போதுமானது என புரிந்து கொள்ளப்படுகிறது. ஆனால் குரூப் கிளைம் விகிதத்தைப் பொறுத்தே ஆக்சுவல் லிமிட்கள் நிர்ணயிக்கப்படுகின்றன.
மேலும், இது குடும்ப உறுப்பினர்களை உள்ளடக்கி இருக்க வேண்டியது அவசியமில்லை. அனைத்து இழப்புகளுக்கும் இன்சூரன்ஸ் நிறுவனமே ஈடுசெய்யும் என்றும் அதற்கு மேல் ஏற்படும் எந்த செலவையும் வேலை தரும் நிறுவனங்களே கவனித்துக்கொள்ளும் என்றும் பணியாளர்கள் நம்புகிறார்கள்.
குரூப் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியைத் தவிர, ஒருவர் தனக்கென தனியாக ஒரு ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை வாங்குவது புத்திசாலித்தனம். ஏனென்றால், நீங்கள் நிறுவனத்தில் பணியில் இருக்கும் வரை நீங்கள் குரூப் பாலிசியின் கீழ் வருவீர்கள்.
நீங்கள் நிறுவனத்தை மாற்றினால், இதுவரை பெற்ற பலன்களை இழக்க நேரிடும். ஆனால் ஒரு தனிநபர் பாலிசியின் கீழ், பாலிசியை இடைவெளி இல்லாமல் சரியான நேரத்தில் புதுப்பித்தால் அனைத்து நன்மைகளும் தொடரும்.
மெட்டர்னிட்டி கவர் இன்சூரன்ஸ் நிறுவனங்களால் வழங்கப்படுவதில்லை என்பது பொதுவான கட்டுக்கதை. எந்தவொரு ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் இருந்தும் மெட்டர்னிட்டி கவரை வாங்க முடியும் என்பதால் இது உண்மையல்ல.
உண்மை என்னவென்றால், மெட்டர்னிட்டி அல்லது கர்ப்பகால இன்சூரன்ஸ் சுமார் 24 மாதங்கள் காத்திருக்கும் காலத்துடன் வருகிறது. எனவே, நீங்கள் விரைவில் பெற்றோராகத் திட்டமிட்டால், ஹெல்த் இன்சூரன்ஸைத் தேர்ந்தெடுப்பது பயனளிக்கும்.
பாலிசி எடுக்கும்போது ஏற்கனவே இருக்கும் இல்னெஸ் போன்ற உண்மைகளை வெளியிடாமல் இருப்பது நல்ல யோசனையாக இருக்கும் என்று மக்கள் நம்புகிறார்கள். அதனால், அவர்கள் உண்மை விவரங்களை மறைக்க முயற்சிக்கிறார்கள். ஆனால் இந்த எண்ணத்தால் கூடுதல் பணத்தை இழக்கிறார்கள். பாலிசி எடுக்கும் போது தெளிவான ஹெல்த் ஹிஸ்டரியை வெளிப்படுத்துவது எப்போதும் நல்லது.
ஐ.ஆர்.டி.ஏ (IRDA) பொது ஒழுங்குமுறையின்படி, சில இல்னெஸ்களுக்கு காத்திருக்கும் காலம் இருக்கும். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உங்களுக்கு ஏற்கனவே இருக்கும் ஹெல்த் ஹிஸ்டரியை மருத்துவரால் கண்டறிய முடியும். எனவே, விவரங்களை மறைப்பதில் அர்த்தமில்லை.
ஹெல்த் இன்சூரன்ஸ் விற்பனை படிப்படியாக ஆன்லைனில் வளர்ந்து வருகிறது. ஆனால் ஆன்லைனில் வாங்குவது சில மோசடிகளில் இறங்கக்கூடும் என்று மக்கள் நினைக்கிறார்கள்.
இது உண்மையல்ல, ஏனெனில் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் பாலிசியை வசதியாக வாங்குவதற்கு தங்கள் ஆன்லைன் போர்ட்டல்களை டிசைன் செய்துள்ளனர். மக்கள் பாலிசிகளை இணையத்தில் ஒப்பிட்டு பார்த்து வாங்கலாம். இது விரைவானது மற்றும் பாதுகாப்பானது.
குறைந்த விலையில் ஹெல்த் இன்சூரன்ஸ் புராடக்ட்களை வழங்கும் நிறுவனங்கள் உண்மையானவை என்று மக்கள் நம்புகிறார்கள். குறைந்த பிரீமியத்தில் ஒவ்வொரு கிளைம் இல்லாத ஆண்டிற்கும் பணத்தைச் சேமிப்பார்கள் என்று அவர்கள் நம்புகிறார்கள். ஆனால் உண்மை என்னவென்றால், இந்த குறைந்த விலை பாலிசிகள் சில கட்டுப்படுத்தப்பட்ட சலுகைகளுடன் வரலாம்.
தேவைப்படும் மற்றும் வழங்கப்படும் கவரேஜிற்காக புராடக்ட்டை ஒருவர் எப்போதும் சரிபார்க்க வேண்டும். சரியான ஹெல்த் இந்சூரன்ஸ் புராடக்ட் ஒப்பீடு பெரும் உதவியாக இருக்கும்.
மக்கள் பொதுவாக பழைய ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி ஆவணங்களை அழிப்பார்கள். மற்ற பாலிசிகளைப் போல் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியால் எந்தப் பயனும் இருக்காது என்று நம்புகிறார்கள். ஆனால், இந்த இன்சூரன்ஸ் கடந்த பல ஆண்டுகளாகத் தொடர்கிறது என்பதற்கு இந்தப் பழைய பாலிசிகள் சான்றாக இருக்கும் என்பதை அவர்கள் அறிந்திருக்க வேண்டும். இது ஒரு முக்கியமான தகவலாகும். குறிப்பாக உரிமைகோரலின் போது டி.பி.ஏ (TPA)-ஆல் பயன்படுத்தப்பட வேண்டும்.
இன்றைய வாழ்க்கை முறை மற்றும் மன அழுத்தத்தின் அளவைக் கருத்தில் கொண்டு, உடல்நலக் கேடுகள் அதிகரித்துள்ளன. ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை வைத்திருப்பது அவசியம். ஆனால் மக்கள் தங்கள் தேவை மற்றும் புராடக்ட் கிடைக்கும் தன்மையுடன் தங்கள் எண்ணங்களில் தெளிவாக இருக்க வேண்டும்.
படிக்கவும்: கோவிட் 19 இன்சூரன்ஸ் பாலிசியின் கவரேஜ்கள் பற்றி மேலும் அறியவும்.