இன்டிஜுவல் ஹெல்த் இன்சூரன்ஸ் என்பது இளம் வயதினருக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி வகைகளில் ஒன்றாகும். ஒருவரின் வாழ்நாளில் ஏற்படக்கூடிய பல்வேறு நோய்கள், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுதல், குழந்தையின் பிரசவத்திற்கு ஆகும் செலவுகள் மற்றும் மற்ற பெரிய, சிறிய அளவிலான மருத்துவ செலவுகள் ஆகியவற்றிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள உதவம். மேலும் அதற்கான செலவுகளையும் ஈடு செய்யும்.
என்ன தான் இன்டிஜுவல் ஹெல்த் இன்சூரன்ஸ் குடும்பம் இல்லாத இளவயதினருக்காக வடிவமைக்கப்பட்டிருந்தாலும், உங்கள் பெற்றோர், மனைவி மற்றும் குழந்தைகள் போன்ற உங்களைச் சார்ந்திருப்பவர்களுக்காக இந்த பிளானை பிரத்தியேகமாக்கிக் கொள்ளலாம்.
இன்டிஜுவல் ஹெல்த் இன்சூரன்ஸ் பிளானில் கிடைக்கும் மருத்துவ நன்மைகள் மற்றும் வரிச் சலுகைகளினால் இன்றைய சூழலில் அதிகமான மக்கள் இந்த பிளானை வாங்க விரும்புகின்றனர்.
ஏனென்றால், நீங்கள் உட்கொள்ளும் ஓட்ஸோ பிரவுன் பிரட்டோ உங்கள் ஆரோக்கியத்தையும் செல்வத்தையும் முழுமையாக பாதுகாக்காது.
இது, அதிக கனவுகளை நினைவாக்கத் துடிப்பவர்களுக்கு, அதே சமயம் அதிக அளவிலான மன அழுத்தம் கொண்டுள்ள தலைமுறையினருக்கு, எதையும் விட்டுக் கொடுக்காமல் இந்த உலகத்தில் இருக்கும் எல்லாவற்றையும் சாதிக்கத் துடிப்பவர்களுக்கு, ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அளிப்பவர்களுக்கு, உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மதிக்கிறவர்களுக்கு, வசதியையும் பணத்தையும் விரும்புபவர்களுக்கு மற்றும் அனைத்தையும் ஒரு கிளிக்கில் கிடைக்க பழகிக்கொண்டவர்களுக்கு.
கவரேஜ்கள்
டபுள் வாலட் பிளான்
இன்ஃபினிட்டி வாலட் பிளான்
வேர்ல்டுவைட் ட்ரீட்மெண்ட் பிளான்
முக்கிய அம்சங்கள்
இது உடல்நலக்குறைவு, விபத்து, தீவிர சிகிச்சை அல்லது கோவிட் 19 போன்ற தொற்றுநோய்கள் உட்பட அனைத்திற்கும் தேவையான மருத்துவமனை செலவுகளை உள்ளடக்கியது. உங்களின் மொத்த மருத்துவமனை செலவுகள் நீங்கள் இன்சூர் செய்த தொகைக்கு உள்ளாக அடங்கும் வரை மல்டிபிள் ஹாஸ்பிட்டலைசேஷன் செலவுகளும் இதில் அடங்கும்.
விபத்து அல்லாத உடல்நலக்குறைவு சார்ந்த சிகிச்சை செலவுகளைப் பெற நீங்கள் பாலிசி எடுத்த முதல் நாளில் இருந்து ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு நீங்கள் காத்திருக்க வேண்டும். இதுவே ஆரம்ப காத்திருப்பு காலம் ஆகும்.
வீட்டில் இருந்தபடியே சுகாதார பராமரிப்பு, போன் மூலம் கன்சல்டேஷன், யோகா மற்றும் மனந்தெளிநிலை மற்றும் பல பிரத்யேகமான உடல்நலம் சார்ந்த நன்மைகள் எங்கள் ஆப்-ல் கிடைக்கும்
நீங்கள் இன்சூர் செய்யப்பட்ட தொகைக்கான பேக் அப் வழங்குவதன் மூலம் உங்களின் 100% இன்சூரன்ஸ் தொகையை கட்டாயமாக பெறுவீர்கள். இன்சூர் செய்யப்பட்ட தொகைக்கான பேக் அப் எப்படி செயல்படுகிறது? உங்களின் பாலிசிக்கான இன்சூர் செய்யப்பட்ட தொகை 5 லட்சம் ரூபாய் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் 50,000 ரூபாய்க்கு கிளைம் செய்கிறீர்கள். இந்த நேரத்தில் டிஜிட் வாலட் பெனிஃபிட்டை தொடக்கி வைக்கும். அதனால் இந்த வருடத்தில் நீங்கள் 4.5 லட்சம் + 5 லட்சத்தை இன்சூர் செய்யப்பட்ட பணமாக வைத்திருப்பீர்கள். இருப்பினும், ஒவ்வொரு முறை செய்யும் கிளைமானது, மேற்கூறிய வழக்கில், அடிப்படை இன்சூரன்ஸ் தொகையான 5 லட்சத்தை விட அதிகமாக இருக்கக்கூடாது.
பாலிசி ஆண்டில் நீங்கள் எந்தவொரு கிளைமும் செய்யவில்லையா? அப்படி என்றால் உங்களுக்கு போனஸ் காத்திருக்கிறது- ஆரோக்கியமாக இருந்ததற்கும் & எந்தவொரு கிளைமும் செய்யாமல் இருந்ததற்கும் உங்களின் மொத்த இன்சூர் செய்யப்பட்ட தொகையுடன் ஒரு கூடுதல் தொகை சேர்க்கப்படும்!
வெவ்வேறு வகையைச் சார்ந்த அறைகளுக்கு வெவ்வேறு வாடகைகள் வசூலிக்கப்படும். ஹோட்டல் ரூம்களுக்கு வசூலிக்கப்படுவதை போல தான் இதுவும். நீங்கள் இன்சூர் செய்யப்பட்ட தொகைக்கு குறைவாக இருக்கும் வரை டிஜிட் எந்த விதமான ரூம் ரெண்ட் கேப்பிங்கும் விதிப்பதில்லை.
24 மணிநேரத்திற்கு அதிகமாக மருத்துவமனையில் இருந்தால் மட்டுமே அதற்கான மருத்துவ செலவுகளை ஹெல்த் இன்சூரன்ஸ் ஏற்றுக்கொள்ளும். தொழில்நுட்ப முன்னேற்றம் காரணமாக 24 மணிநேரத்திற்கு குறைவாக தேவைப்படும் கண்புரை, டயாலிசிஸ் போன்ற மருத்துவமனையில் மேற்கொள்ளப்படும் மருத்துவ சிகிச்சைகள் டே கேர் செயல்முறைகள் ஆகும்.
உலகளவு கவரேஜுடன் உலகத்தரம் வாய்ந்த சிகிச்சைகளை பெறுங்கள்! இந்தியாவில் நீங்கள் ஒரு மருத்துவ பரிசோதனை செய்தபோது உங்களுக்கு உடல்நலகுறைவு இருப்பது கண்டறியப்பட்டால், ஒரு வேலை நீங்கள் அதற்கான சிகிச்சையை அயல்நாடுகளில் மேற்கொள்ள விரும்பும் பட்சத்தில், உங்களுக்கு உதவ நாங்கள் உள்ளோம். உங்களுக்கு தேவையான பாதுகாப்பு பாலிசியில் உண்டு!
உங்களின் ஹெல்த் செக்-அப்பிற்கு ஆகும் செலவுகளை உங்கள் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தொகை வரை நாங்களே செலுத்துவோம். நீங்கள் எடுக்கும் பரிசோதனைகளுக்கு எந்த ஒரு கட்டுப்பாடும் கிடையாது! அது இசிஜி அல்லது தைராய்டு சோதனை எதுவாக இருந்தாலும் சரி. உங்கள் கிளைம் லிமிட் என்ன என்பதை பாலிசி அட்டவணையில் பார்க்க மறந்து விடாதீர்கள்.
உயிருக்கு ஆபத்தான சில அச்சுறுத்தும் நிலைகளில் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல போக்குவரத்து தேவைப்படலாம். இதனை நாங்கள் முழுவதுமாக புரிந்துகொள்கிறோம். ஏர்பிளேன் அல்லது ஹெலிகாப்டர் வைத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்ற செலவுகளை ரீஇம்பர்ஸ் செய்து கொள்ளலாம்.
கோ–பேமெண்ட் என்பது ஒரு ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியின் கீழ் உள்ள செலவினப் பகிர்வுத் தேவையாகும், இது பாலிசிதாரர்/இன்சூர் செய்தவர் கிளைம் செய்யப்பட்ட தொகையில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை ஏற்க வேண்டும். இது இன்சூர் செய்யப்பட்ட தொகையைக் குறைக்காது. இந்த சதவீதமானது வயது போன்ற ஒரு சில காரணிகள், அல்லது ஒரு சில நேரங்களில் சோன் சார்ந்த கோ–பேமெண்ட் என்று அழைக்கப்படும் நீங்கள் சிகிச்சை பெறும் நகரத்தை பொறுத்து அமையும். எங்களது திட்டத்தில், வயது சார்ந்த அல்லது சோன் சார்ந்த கோ–பேமெண்ட் கிடையாது.
ஒரு வேலை நீங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், சாலைவழி ஆம்புலன்ஸுக்கான செலவுகளை ரீஇம்பர்ஸ் செய்து கொள்ளலாம்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கு முன்னும், பின்னரும் நோயறிதல், பரிசோதனைகள் மற்றும் குணமடைதல் போன்ற செலவுகளுக்கான கவர் இது.
பிற அம்சங்கள்
உங்களுக்கு ஏற்கனவே இருக்கும் ஒரு நோய் அல்லது மருத்துவ நிலை குறித்து நீங்கள் எங்களிடம் பாலிசி எடுப்பதற்கு தெரிவித்து, நாங்கள் அதை ஒப்புக்கொண்டும் இருப்பதற்கு எங்களின் திட்டப்படி ஒரு குறிப்பிட்ட காத்திருப்பு காலம் உண்டு. இது உங்களின் பாலிசி அட்டவணையில் குறிப்பிடப்பட்டு இருக்கும்.
ஒரு குறிப்பிட்ட உடல்நலக்குறைவிற்கு கிளைம் செய்ய நீங்கள் காத்திருக்க வேண்டிய காலத்தை இது குறிக்கிறது. டிஜிட்டில் இது 2 ஆண்டுகள் ஆகும். இது உங்கள் பாலிசி ஆக்டிவேட் ஆன நாளில் இருந்து துவங்கும். விலக்குகளுக்கான முழு பட்டியலுக்கு, உங்கள் பாலிசி வொர்டிங்களின் ஸ்டான்டர்டு விலக்குகளைப் (Excl02) படிக்கவும்.
பாலிசி காலத்தில் உங்களுக்கு ஏதேனும் விபத்தின் விளைவாக காயம் ஏற்பட்டு, விபத்து ஏற்பட்ட தேதியில் இருந்து பன்னிரண்டு (12) மாதங்களுக்குள் ஏற்பட்ட உங்களின் இறப்பிற்கு அது மட்டுமே காரணமாக இருந்தால், பின்னர் பாலிசியில் குறிப்பிட்டுள்ளபடி இன்சூர் செய்யப்பட்ட தொகையில் 100% வழங்கப்படும்.
உங்களுக்கு உறுப்பு தானம் கொடுத்த நபரும் இந்த பாலிசி மூலம் பாதுகாக்கப்படுவார். தானம் கொடுப்பவரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்பும், பின்னரும் ஆகும் செலவுகள் ஏற்கப்படும். உடலுறுப்பு தானம் செய்வது மிகப்பெரிய பண்புகளில் ஒன்றாகும். ஆதலால், நாங்களும் இதில் பங்குபெற ஆசைப்படுகிறோம்!
மருத்துவமனைகளில் காலியான படுக்கைகள் இல்லாமல் போகலாம் அல்லது நோயாளியின் நிலை கருதி அவரை மருத்துவமனையில் அனுமதிக்க முடியாத சூழ்நிலை ஏற்படலாம். பதட்டப்படாதீர்கள்! நீங்கள் வீட்டில் சிகிச்சை பெற்று வந்தால் கூட, அதற்கான செலவுகளை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்.
பல உடல்நல பிரச்சினைகளுக்கு உடல் பருமன் ஒரு காரணமாக உள்ளது. இதனை நாங்கள் முழுவதுமாக புரிந்துகொள்கிறோம். ஆகவே, உடல் பருமனியல் அறுவை சிகிச்சை செய்வதற்கான மருத்துவ தேவை ஏற்பட்டால் அதற்கான செலவுகளையும் நாங்கள் ஏற்கிறோம். இருப்பினும், இந்த சிகிச்சை அழகு சார்ந்த தேவைகளுக்கு செய்யப்படும்போது, அதற்கான மருத்துவ செலவுகளை நாங்கள் ஏற்க மாட்டோம்.
மனஉளைச்சல் காரணமாக மனநோய் மருவத்துவம் செய்ய ஒருவரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், இந்த பலன்களின் கீழ் 1,00,000 ருபாய் வரை கிடைக்கும். இருப்பினும், ஓபிடி ஆலோசனைகள் இந்த பலன்களின் கீழ் வராது. குறிப்பிட்ட உடல்நலகுறைவுக்கான காத்திருப்பு காலம் சைக்கியாட்ரிக் இல்னஸுக்கான காத்திருப்பு காலம் குறிப்பிட்ட உடல்நலகுறைவுக்கான காத்திருப்பு காலத்திற்கு ஒத்தது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்பும், மருத்துவமனையில் இருக்கும்போதும், அதற்கு பின்னரும் வாக்கிங் எய்டுகள், கிரீப் பேண்டேஜ்கள், பெல்ட்டுகள் போன்ற பல மருத்துவ எய்டுகள் மற்றும் செலவுகளுக்காக அவசியம் ஏற்படலாம். பாலிசியில் சேர்க்கப்படாத இந்த செலவுகளையும் நாங்களே ஏற்றுக்கொள்வோம்.
கோ–பேமெண்ட் |
இல்லை |
ரூம் ரெண்ட் கேப்பிங் |
இல்லை |
கேஷ்லெஸ் மருத்துவமனைகள் |
இந்தியா முழுவதும் 10500+ நெட்வொர்க் மருத்துவமனைகள் |
இன்பில்ட் பர்சனல் ஆக்சிடன்ட் கவர் |
ஆம் |
உடல்நலம் சார்ந்த பெனிஃபிட்கள் |
10+ உடல்நலம் சார்ந்த பார்ட்னர்கள் மூலம் கிடைக்கிறது |
நகரம் சார்ந்த தள்ளுபடி |
10% வரை தள்ளுபடி |
உலகளவு கவரேஜ் |
ஆம்* |
ஆரோக்கியத்தை பராமரிப்பதற்கான தள்ளுபடி |
5% வரை தள்ளுபடி |
கன்ஸ்யூமபிள் கவர் |
ஆட்-ஆன் ஆக உள்ளது |
*வேர்ல்டுவைட் ட்ரீட்மெண்ட் பிளானில் மட்டுமே கிடைக்கும்
இன்டிஜுவல் ஹெல்த் இன்சூரன்ஸ் என்பது ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியின் வகை ஆகும். பொதுவாக 40 வயதுக்கு உட்பட்ட தனிநபருக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட பாலிசி ஆகும். உங்கள் வாழ்நாளில் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் நோய்கள், மருத்துவமனை அனுமதிப்பு மற்றும் எதிர்பாராமல் ஏற்படும் இதர மருத்துவ நிகழ்வுகளிலிருந்து பாதுகாத்து , அதற்காகும் செலவுகளை ஈடு செய்யும்.
என்னதான் இன்டிஜுவல் ஹெல்த் இன்சூரன்ஸ் குடும்பம் இல்லாத இளவயதினருக்காக வடிவமைக்கப்பட்டிருந்தாலும், உங்கள் பெற்றோர், மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் போல உங்களைச் சார்ந்திருப்பவர்களுக்காகவும் இந்த பிளானை நீங்கள் தேர்வு செய்யலாம்.
நீங்கள் விரைவில் திருமணம் செய்துகோண்டு குழந்தைகளைப் பெறத் திட்டமிட்டால், சரியான நேரத்தில் காத்திருப்பு காலத்தை (வெயிட்டிங் பீரியட்) முடிப்பதற்கு ஏதுவாக முன்கூட்டியே நீங்கள் மெட்டர்னிட்டி பெனிஃபிட்டை தேர்வு செய்யுங்கள்.
ஹெல்த் இன்சூரன்ஸ்கள் பெரும்பாலும் சிக்கலானதாகவும் தெளிவற்றதாகவும் பார்க்கப்படுகிறது. நோய்கள் மற்றும் மருத்துவ அவசரநிலைகளில் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிகள் நம்மை எப்படி பாதுகாக்கிறது என்கிற உண்மையான நன்மைகளை பெரும்பாலான மக்கள் பார்ப்பதில்லை. அதை விடுத்து அதனால் கிடைக்கும் வரிச் சலுகைகளுக்காகவே அதை வாங்குகின்றனர்.
இருப்பினும், காலம் மாறிக்கொண்டே இருக்கிறது. இன்றைய சூழலில் ஹெல்த் இன்சூரன்ஸ்கள் டிஜிட்டல் மயமாகிவிட்டன. இதனால் ஹெல்த் இன்சூரன்ஸ் வாங்கும் செயல்முறைகள் அனைத்தும் எளிதாகிவிட்டது. இத்துடன் பாலிசிகளைப் பற்றி அறிந்துகொள்ளவும், ஆன்லைனில் கிடைக்கும் ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான்களை ஒப்பிட்டு பார்க்கவும், உங்கள் தேவைக்கு ஏற்ப பிளானை பிரத்தியேகமானதாக்கும் வேலையையும் எளிதாகிறது. அனைத்து வேலையும் பேப்பர்ஓர்க் இல்லாமல் சில கிளிக்களில் முடிந்து விடும் அளவிற்கு எளிமையானது.
ஹெல்த் இன்சூரன்ஸை ஆன்லைனில் எளிதில் வாங்கலாம்:ஒரு ஹெல்த் இன்சூரன்ஸை வாங்குவது முதல் கிளைம் செய்வது வரை அனைத்துமே டிஜிட்டல் முறையில்!- இதுவே டிஜிட்-ன் சிறப்பு அம்சம் ஆகும். அப்படியென்றால் நீங்கள் ஒரு ஹெல்த் இன்சூரன்ஸ் பிளானை வீட்டில் இருந்தபடியே வாங்கலாம் மற்றும் அதை உங்கள் தேவைக்கு ஏற்ப பிரத்தியேகமாக்கலாம். இந்த ஆன்லைன் செயல்முறை அனைத்தையுமே வெளிப்படையானதாக்குகிறது, எனவே அடுத்தது என்ன என்பதை நீங்கள் அறிந்துகொள்ளலாம்.
கேஷ்லெஸ் செட்டில்மெண்ட்கள் உள்ளது : கேஷ்லெஸ் செட்டில்மெண்ட் என்பது நீங்கள் சிகிச்சைக்கு ஆகும் பணம் ஏதும் செலுத்தாமல், நேரடியாக கிளைம் செய்துவிடலாம் என்பதை குறிக்கும். இது உங்கள் கிளைம் செயல்முறையை எளிதாக்கும், அதே சமயம் செலவுகள் பற்றிய கவலையும் உங்களுக்குத் தேவையில்லை. நீங்கள் டிஜிட் நெட்வொர்க்கில் இருக்கும் மருத்துவமனையின் சேவைகளைப் பயன்படுத்தினால் மட்டுமே இதனால் பயனடைய முடியும்.
பரந்து விரிந்த நெட்வொர்க் ஹாஸ்பிடல்: கேஷ்லெஸ் செட்டில்மெண்ட்டினால் பயனடைய, நீங்கள் தேர்வு செய்வதற்கு ஏதுவாக நிறைய ஹாஸ்பிடல்கள்/ மருத்துவமனைகள் இருக்க வேண்டும். தனது பாலிசிதாரர்களுக்கு பலத்தரப்பட்ட மருத்துவமனையிலிருந்து ஒன்றை தேர்வு செய்யும் வாய்ப்பினை அளிப்பதற்காக இந்தியா முழுவதும் உள்ள பல் வேறு மருத்துவமனைகளோடு டிஜிட் கைகோர்த்துள்ளது.
பிரத்தியேகமான ஹெல்த் பிளான்கள்: உங்களின் ஹெல்த் இன்சூரன்ஸை டிஜிட்-ல் ஆன்லைன் மூலம் வாங்கும்போது, உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் பிளானை உங்களின் தேவைக்கு ஏற்ப பிரத்தியேகமானதாக வடிவமைத்துக் கொள்ளலாம். உதாரணத்திற்கு; உங்கள் இன்சூரன்ஸ் தொகையை / இன்சூர் செய்யப்பட்ட தொகையை குறிப்பிட்ட ஒரு பாலிசி ஆண்டிற்கு மட்டும் பிரத்தியேகமாக்கலாம். ஏனென்றால் உங்களின் தேவை என்ன என்பதை உங்களை விட வேறு எவராலும் புரிந்துகொள்ள முடியாது.
உங்கள் உடல் நலம் மற்றும் மன நலனில் அக்கறை செலுத்துகிறது: டிஜிட் உங்கள் உடல்நலத்தை பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், உங்கள் மனநலனையும் பாதுகாக்கிறது. ஒருவரின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் பராமரிக்க உடல் நலம் , மன நலம் ஆகிய இரண்டும் அவசியம் என்பதை நாங்கள் நம்புகிறோம்
இதற்கு முன்பு நீங்கள் ஹெல்த் இன்சூரன்ஸை ஆன்லைனில் வாங்கியதே இல்லை என்றால், இது சற்று குழப்பமானதாக இருக்கும் என்பது எங்களுக்குத் தெரியும். அதற்காகத் தான் எங்களின் இன்சூரன்ஸை எளிமையானதாக வைத்துள்ளோம். ஆன்லைனில் கிடைக்கும் பல்வேறு ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான்களை ஒப்பிட்டு, இறுதியில் சரியானதை தேர்வு செய்வதற்கான வழிகாட்டுதல்களை இங்கே பகிர்ந்துகொள்கிறோம்.
இன்சூர் செய்யப்பட்ட தொகை: இது மிகவும் முக்கியம்! ஏன்னென்றால் நீங்கள் கிளைம் செய்யும் போது உங்களுக்கு கிடைக்கும் தொகையை குறிக்கிறது. எனவே இன்சூரன்ஸ் தொகையை புத்திசாலித்தனமாகத் தேர்வுசெய்யுங்கள். குறைந்த பிரீமியம்(பொதுவாக, இதில் இன்சூரன்ஸ் தொகை குறைவாக இருக்கும் என்று அர்த்தம்!) என்ற காரணத்தால் ஏதோவொரு ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிகயை வாங்கி ஏமாறாதீர்கள்.
உண்மையான பயன்கள்: இன்டிஜுவல் ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான்களை வாங்குவதற்கு முன்பு பாலிசியின் விதிமுறைகள் & நிபந்தனைகளைப் படித்திடுங்கள். மேலோட்டமாக பார்ப்பதற்கு பயனுள்ளதாக தோன்றலாம் ஆனால் ஆனால் நீங்கள் அவர்களின் நிபந்தனைகளை பற்றி தெரிந்துகொள்ளும் போது அவர்களிடமிருந்து உங்கள் கிளைம்களை வாங்குவது சுலபம் இல்லை என்பது புரியும்.
கிளைம் செட்டில்மெண்ட் ரெகார்ட்: ஒரு ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் கிளைம் செட்டில்மெண்ட் ரெகார்டை பாருங்கள். அவர்கள் பின்பற்றும் செயல்முறைகள் என்ன? கிளைமை தருவதற்கு எடுத்துக் கொள்ளும் காலம் என்ன? அது எளிதான காரியமா? டிஜிட்டல் முறையா அல்லது பேப்பர்ஓர்க் நிறைந்த வேலையா? போன்ற கேள்விகளுக்கான பதில்களை முதலில் அறிந்துகொள்ளுங்கள். இதை வைத்து உங்கள் தேவைக்கு ஏற்ற ஒன்றை தேர்வு செய்வதற்கு உதவியாக இருக்கும்.
பிரீமியம்: இதை நீங்கள் நிச்சயமாக செய்வீர்கள்! ஆனால் மலிவான பிரீமியத்துடன் கிடைக்கும் ஹெல்த் இன்சூரன்ஸ் என்கிற ஒரே காரணத்திற்காக அதை தேர்ந்தெடுக்காதீர்கள். இன்சூரன்ஸ் தொகை / சம் இன்சூர்ட், பலன்கள், சேவைகள் போன்றவற்றைப் கருத்தில் கொண்டு இவை அனைத்திலும் சிறப்புமிக்க ஒன்றை தேர்வு செய்யுங்கள்.
பெயர் குறிப்பிடுவது போல, கேஷ்லெஸ் கிளைம் என்பது நீங்கள் எவ்வித பணமும் செலுத்த வேண்டியதில்லை என்று அற்தம். இருப்பினும், எங்கள் நெட்வொர்க்கில் இருக்கும் மருத்துவமனை ஒன்றில் நீங்கள் சிகிச்சை பெற்றால் மட்டுமே இது சாத்தியமாகும்.
கேஷ்லெஸ் ஹெல்த் கிளைம்-ஐ செட்டில் செய்வது எப்படி?
1. திட்டமிட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் 72 மணி நேரத்திற்கு முன்போ அல்லது எதிர்பாராத அவசரநிலை ஏற்பட்டால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் தொலைபேசி வாயிலாகவோ அல்லது மின்னஞ்சல் வாயிலாகவோ எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.
2. உங்கள் ஹெல்த் கார்டு/இ-கார்ட் உடன் அடையாளச் சான்றுடன் சம்பந்தப்பட்ட மருத்துவமனை அதிகாரியிடம் பகிருங்கள். மருத்துவமனையிலிருந்து முன் அங்கீகாரப் படிவத்தைப் பெறுங்கள்.
3. படிவத்தை பூர்த்தி செய்து, கையொப்பமிட்டு, சம்பந்தப்பட்ட மருத்துவமனை அதிகாரியிடம் சமர்ப்பியுங்கள்.
4. நீங்கள் கையொப்பமிடப்பட்டு சமர்ப்பித்த படிவத்தை மருத்துவமனை தரப்பிலிருந்து மூன்றாம் தரப்பு நிர்வாகி அல்லது சேவை வழங்குநரிடம் பகிர்ந்துவிட்டார்களா என்பதை உறுதி செய்யுங்கள்.
5. உங்கள் படிவத்திற்கான உரிய நடவடிக்கை எடுத்த பின், கிளைம் உங்களின் பாலிசி விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்குட்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்த பிறகு டிபிஎ (TPA) அதற்கான அங்கீகார (ஆதரைசேஷன்) கடிதத்தை மருத்துவமனையிடம் அளிப்பார்.
6. எல்லாம் அங்கீகரிக்கப்பட்ட பின், அந்தப் படிவம் நிரப்பப்பட்ட தேதியிலிருந்து 15 நாட்களுக்குள் தேவையான சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
ரீஇம்பர்ஸ்மென்ட் கிளைம் என்பது கிளைம்களை பெறுவதற்காக பலரால் பயன்படுத்தப்படும் வழி ஆகும். நீங்கள் எங்கள் நெட்வொர்க்கில் இருக்கும் மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்துக் கொண்டாலோ அல்லது இந்தியாவில் இருக்கும் எந்த மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டாலும் இந்த முறையின் மூலம் கிளைம் செய்யலாம். நீங்கள் உரிய நேரத்தில் தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து எங்களிடமிருந்து ரீஇம்பர்ஸ்மென்ட் தொகையை பெறலாம்.
What is the process to settle a reimbursement claim?
ரீஇம்பர்ஸ்மென்ட் கிளைம்-ஐ செட்டில் செய்வது எப்படி?
1. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அல்லது மருத்துவமனை சேவைகளை பெற்ற 48 மணிநேரத்திற்குள் எங்களிடமோ அல்லது டிபிஎ (TPA) விடமோ தெரிவிக்கவும்.
2. டிஸ்சார்ஜ் ஆன 30 நாட்களுக்குள் நீங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அல்லது சிகிச்சை பெற்றதற்கான அனைத்து அசல் ஆவணங்கள் மற்றும் பில்களை சமர்ப்பிக்கவும்.
3. சமர்ப்பித்த ஆவணங்களை சரிபார்த்து, கிளைம் தொகையானது 30 நாட்களுக்குள் உங்களிடம் வந்து சேர்வதற்கான வழிகளை எங்கள் குழுவினர் மேற்கொள்வர். அதை செய்ய முடியாவிடில், தற்போதைய வங்கி வட்டி விகிதத்தை விட கூடுதலான 2% வட்டியை நாங்கள் உங்களுக்கு செலுத்த வேண்டும்.
“என்னுடைய ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் எப்படி கணக்கிடப்படுகிறது? “ என்ற கேள்வி பரவலாக கேட்கப்படுகிறது. பல்வேறு காரணிகளின் அடிப்படையில், உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் கணக்கிடப்படுகிறது. அவை:
உங்கள் வயது: வயது வரம்புகள் ஏதும் இன்றி பெரியவர்கள், இளவயதினர்கள் வரை அனைவரும் பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர்.இதில் இளவயதினர் அதிக ஆரோக்கியத்துடன் இருப்பர். வயது எவ்வளவு குறைவாக இருக்கிறதோ, கிரிட்டிக்கல் இல்னஸ், மெட்டர்னிட்டி (பேறு காலத்திற்கான இழப்பீடு) போன்ற பலன்களை பெறுவதற்கான காத்திருப்பு காலமானது (வெயிட்டிங் பீரியட்) முடிப்பதற்கு நிறைய அவகாசம் கிடைக்கும். எனவே, நீங்கள் இளமையாக இருந்தால், உங்கள் பிரீமியம் குறைவாகத் தான் இருக்கும்! “இள வயதிலேயே ஹெல்த் இன்சூரன்ஸை பெற வேண்டும்” என்கிற ஆலோசனையை பலர் வழங்குவதற்கான காரணம் என்னவென்று இப்போது புரிகிறதா?
வாழ்க்கை முறை: இன்றைய சூழலில் அனைத்துமே வாழ்க்கை முறை பொறுத்து தான் அமைகிறது, அதை ஒப்புக்கொள்கிறீர்களா? அதுபோலத் தான், நமது உடல் ஆரோக்கியமும் நம்முடைய வாழ்க்கை முறை தேர்வுகளைப் பொறுத்து தான் இருக்கிறது. நல்ல வழக்கங்களோ அல்லது கெட்ட வழக்கங்களோ அவை உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியத்தை பாதிக்கும்.
எனவே, தயவு செய்து உங்களைப் பற்றிய அனைத்து தகவல்களையும் குறிப்பிடுங்கள். ஜிம்முக்கு செல்லும் பழக்கம் முதல் நீங்கள் புகைபிடிப்பவரா என்பது வரை அனைத்தையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள். நீங்கள் இங்கே தவறான விவரங்களை அளிக்க முயற்சித்தாலும், அது எதிர்காலத்தில் நீங்கள் கிளைம் செய்யும் போது கண்டுபிடிக்கப்படும், இதனால் உங்கள் கிளைமானது ஓட்டுமொத்தமாக ரத்து செய்யப்படலாம்!
ஏற்கனவே இருக்கும் நோய்கள் அல்லது அதன் நிலைகள்: நீங்கள் ஏற்கனவே நோய்வாய்ப்பட்டிருந்தாலோஅல்லது உங்களுக்கு அடிப்பட்டிருந்தாலோ உங்கள் முந்தைய பாலிசி காலத்திற்கு குறைந்தது 48 மாதங்களுக்கு முன்பு உங்களுக்கு ஏற்பட்ட அறிகுறிகள் போன்ற தகவல்களை நீங்கள் வாங்க/புதுப்பிக்க இருக்கும் உங்களின் இன்டிஜுவல் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியில் குறிப்பிட வேண்டும். நீங்கள் குறிப்பிட்டுள்ள நோய் அல்லது அடியின் தன்மை பொறுத்து உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் வேறுபடும்.
இடம் : உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் நீங்கள் வசிக்கும் இடத்தை பொறுத்து வேறுபடும். ஏன்னென்றால், ஒவ்வொரு நகரத்தின் மாசுபாடு நிலைகள், விபத்து, அபாயம் மற்றும் மருத்துவ செலவுகளும் வேறுபடுகின்றன. உதாரணத்திற்கு: வட இந்தியாவில் வசிக்கும் மக்கள் நுரையீரல் நோய்களால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர், அங்கு அதிக அளவவிலான மாசுபாடு மற்றும் காற்றின் தரமும் குறைவு.
ஆட்-ஆன்கள் மற்றும் கவர்கள்: உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் பிளானை உங்களுக்கும், நீங்கள் வாழ விரும்பும் வாழ்க்கைக்கும் பொருத்தமானதாக்க, உங்கள் இன்டிஜுவல் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி உங்களின் கூடுதல் பாதுகாப்பிற்காக குறிப்பிட்ட சில கவர்களை விருப்பத்தேர்வுகளாக அளிக்கிறது.
கிரிட்டிக்கல் இல்னஸ் கவர், மெட்டர்னிட்டி (பேறு காலத்திற்கான இழப்பீடு) மற்றும் இன்ஃபர்டிலிட்டி தொடர்பான செலவுகள் போன்ற பல கவர்கள் இதில் அடங்கும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் கவர்களை பொறுத்து உங்கள் இன்சூரன்ஸ் பிரீமியம் மாறுபடும்.
வயது: நீங்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருந்தால், அதிகமான இன்சூர்ஸ் தொகையை தேர்வு செய்யுங்கள். உங்களின் வயது குறைவாக இருந்தால், உங்கள் பிரீமியமும் குறைவாகத் தான் இருக்கும். இத்துடன் உங்களின் காத்திருப்பு காலமானது (மெட்டர்னிட்டி பெனிஃபிட் போன்றது) சரியான நேரத்தில் முடிவடையும்.
வாழ்க்கை நிலை: நீங்கள் உடல்நலக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டிருக்கிறீர்களா, உங்கள் நோய் எதிர்ப்புச் சக்தி எப்படி இருக்கிறது,உங்கள் உடல் ஆரோக்கியத்தின் நிலை, நீங்கள் தனியாக இருக்கிறீர்களா, விரைவில் திருமணம் செய்துகொள்ளத் திட்டமிட்டுள்ளீர்களா, குடும்பத்தைத் தொடங்க திட்டமிட்டுள்ளீர்களா, போன்ற இன்னும் நிலைகளில், உங்களின் தற்போதைய வாழ்க்கை நிலையை பொறுத்து உங்களின் இன்சூர்ஸ் தொகையை / சம் இன்சூர்ட்-ஐ தேர்வு செய்யுங்கள்.
உங்களை சார்ந்தவர்களின் எண்ணிக்கை: என்ன தான் இன்டிஜுவல் ஹெல்த் இன்சூரன்ஸ் உங்களுக்காக வடிவமைக்கப்பட்டிருந்தாலும் உங்கள் பெற்றோர், மனைவி மற்றும் குழந்தைகள் போன்ற உங்களை சார்ந்தவர்களை இதில் சேர்ப்பதற்கான வசதியும் உள்ளது. சார்ந்திருப்பவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில், இன்சூர்ஸ் தொகையை தேர்வு செய்யுங்கள். உங்கள் பிளானில் சார்ந்திருப்பவர்களின் எண்ணிக்கை அதிகமானால் நீங்கள் மருத்துவம் சார்ந்த கிளைமை எழுப்ப அதிக பணம் தேவைப்படும்.
தற்போதைய உடல்நலத்தின் நிலை:
உங்கள் குடும்பத்தில் பரம்பரை நோய் இருந்தாலோ அல்லது நீங்கள் வசிக்கும் நகரத்தில் ஏதேனும் ஒரு பாதிப்பு/நோய் அதிகரித்தாலோ, நீங்கள் அதிகமான இன்சூர்ஸ் தொகையை தேர்ந்தெடுக்கலாம்.
உங்களின் வாழ்க்கைமுறை: நீங்கள் ஒரு மாசு நிறைந்துள்ள மெட்ரோ நகரத்தில் வசிக்கிறீர்கள் என்றால், போக்குவரத்து நெரிசலில் பயணித்து, ஒவ்வொரு நாளும் அலுவலக வேலையினால் ஏற்படும் அழுத்தத்தோடு போராடிக்கொண்டிருக்கிறீர்கள் என்றால், நீங்கள் நோய்வாய்ப்படுவதிற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இதிலிருந்து தெரிவது என்னவென்றால், நீங்கள் அதிகமான இன்சூர்ஸ் தொகை கொண்டு உங்களை இன்சூர் செய்து கொள்ள வேண்டும், எனவே நீங்கள் அதிகமான இன்சூர்ஸ் தொகையை தேர்வு செய்வது சிறந்த முடிவாகும்.
வாடிக்கையாளர்கள் ரிவ்யூஸ் & டெஸ்டிமோனியல்கள்: இதற்கு முன்பே சேவைகளை பயன்படுத்திய வாடிக்கையாளர்களின் கருத்தினை நம்புங்கள். குறிப்பிட்ட நிறுவனத்தின் சமூக ஊடக பக்கத்தில் இருக்கும் ரிவ்யூஸ்கள் அல்லது இன்சூரன்ஸ் நிறுவனத்தின் இணையதளத்தை பாருங்கள், அதில் மற்றவர்கள் பகிர்ந்திருக்கும் அனுபவங்களை படியுங்கள்.
மருத்துவமனைகளின் நெட்வொர்க்: இன்சூரன்ஸ் நிறுவனத்தின் நெட்வொர்க்கில் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டால் நீங்கள் கேஷ்லெஸ் செட்டில்மெண்ட் வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம். இது ஒரு ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியின் முக்கிய அம்சங்களில் ஒன்று ஆகும். எனவே, எதுபோன்ற மருத்துவமனைகள் அவர்களின் நெட்வொர்க்கில் உள்ளது என்பதை பார்த்து, அவை உங்களுக்கு எந்த அளவிற்கு ஒத்துப்போகும் என்பதையும் கணக்கிடுங்கள்.
கிளைம் செய்யும் செயல்முறை: மெடிக்கல் கிளைம் மூலம் பயனடையவே நாம் ஹெல்த் இன்சூரன்ஸை வாங்குகிறோம். எனவே, உங்கள் இன்சூரரிடம் கிளைம் செய்வதற்கான செயல்முறைகளை பாருங்கள். அது பேப்பர்வொர்க் நிறைந்த வேலையா? டிஜிட்டலாக செய்து முடிக்கலாமா? அதிகமாக நேரம் எடுத்துக்கொள்ளுமா? போன்ற கேள்விகளை எழுப்பி, அதற்கான பதில்களைக் கருத்தில் கொள்ளுங்கள்.
கவரேஜ் பயன்கள்: இன்சூரன்ஸ் நிறுவனம் மற்றும் தனிநபர் விருப்பங்களைப் பொறுத்து ஒவ்வொரு ஹெல்த் இன்சூரன்ஸ் பிளானும் வேறுபடும். எனவே, நீங்கள் எந்த வகையான கவரேஜ் பெறுகிறீர்கள் மற்றும் அது உங்களுக்கு போதுமானதா என்பதை கவனியுங்கள்.
மற்ற பயன்கள்: அடிப்படை கவரேஜ்களைத் தவிர இன்சூரர் அளிக்கும் இதர சேவைகள் மற்றும் கூடுதல் பயன்களைப் பாருங்கள்.
உண்மையை சொல்ல வேண்டும் என்றால், எவ்வளவு சீக்கிரமோ அவ்வளவு நல்லது. இப்படி செய்வதனால் உங்களின் பிரீமியம் தொகை குறையும், மற்ற பயன்களை தேர்வு செய்வதற்கு அவசியமான காத்திருப்பு காலத்தை (வெயிட்டிங் பீரியட்) எளிதில் முடித்து விடலாம். இன்றைய காலக்கட்டத்தில் உடல் ரீதியான மற்றும் மன ரீதியான பிரச்சனைகள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதே சமயம் மருத்துவ செலவுகளும் அதிகரித்து வருகிறது.
ஹெல்த் இன்சூரன்ஸ் உங்கள் ஆரோக்கியத்தை பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல் வரி விலக்குகள் என்கிற பலனையும் உங்களுக்கு அளிக்கிறது. இதன் மூலம் உங்கள் சேமிப்பை அதிகரிக்கிறது. பின்வரும் வழிகளின் மூலம் இதை நீங்கள் செய்யலாம்:
தடுப்பு முயற்சியாக உடல் பரிசோதனைகள் செய்துகொள்ளலாம்: வருமான வரிச் சட்டம், பிரிவு 80D-ன் படி பாலிசி காலத்தில் தனிநபர் ஒருவர் நோய் தடுப்பிற்காக எடுத்துக்கொள்ளும் உடல் பரிசோதனைகளுக்கு ரூ.25,000 வரையில் ஆகும் செலவிற்கு வரிவிலக்கு பெறலாம்.
உங்கள் பெற்றோரை ஹெல்த் இன்சூரன்ஸ் பிளானில் சேர்த்துக் கொள்ளலாம்: வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80D-இன் படி, ஒருவர் தனது பெற்றோரை ஹெல்த் இன்சூரன்ஸ் பிளானில் தன்னை சார்ந்திருப்பவர்களாகச் சேர்த்தால் அல்லது அவர்களின் சீனியர் ஹெல்த் இன்சூரன்ஸிற்கான பிரீமியம் கட்டிவந்தால்; ஆண்டிற்கு ரூ. 50,000 வரை வரி விலக்கு பெறலாம்.
உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியத்தை பண பரிமாற்ற முறையில் செலுத்துவதை தவிர்க்கவும்: உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸுக்காக வரி விலக்கு பெறுவதற்கு, ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியத்திற்காக நீங்கள் செலுத்தும் தொகை அனைத்தையும் வங்கிப் பரிமாற்றங்கள், டெபிட்/கிரெடிட் கார்டுகள் அல்லது ஆன்லைன் பேங்கிங் முறைகள் மூலம் செலுத்த வேண்டும், ஏனெனில் பண பரிமாற்ற முறையில் நீங்கள் செலுத்திய எந்தத் தொகையும் உங்கள் வரிச் சேமிப்புக்காக ஏற்றுக்கொள்ளப்படாது.