இந்திய அரசு ஊழியர்களுக்கு பணிபுரியும் போதும் ஓய்வு பெற்ற பின்னரும் கூட அரசாங்கத்தின் இன்சூரன்ஸ் திட்டங்கள் மூலம் ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டத்தைப் பெறும் உரிமை உண்டு. உதாரணமாக, மத்திய அரசு ஊழியர்களுக்கும் மத்திய அரசின் ஹெல்த் ஸ்கீமில் (சி.ஜி.எச்.எஸ்) ஹெல்த்கேர் பெனிஃபிட்களைப் பெறும் உரிமை உண்டு.
இருப்பினும், இந்தத் திட்டங்களை மட்டுமே நம்பியிருப்பதில் சில வரம்புகள் மற்றும் சவால்கள் உள்ளன. எனவே, அரசாங்கத் திட்டத்திலிருந்து இந்த பேசிக் கவரேஜைப் பெறுவதுடன், ஒரு துணை ஹெல்த் இன்சூரன்ஸை வாங்குதலும் நல்லது என பரிந்துரைக்கப்படுகிறது.
அரசு ஊழியர்கள் தங்கள் தற்போதைய கவரேஜுடன் பர்சனல் ஹெல்த் இன்சூரன்ஸைச் சேர்க்க வேண்டிய சில அவசியமான காரணங்கள் இதோ.
அரசாங்க ஊழியர்களின் முதன்மை கவலைகளில் ஒன்று, அரசாங்கத்தின் இன்சூரன்ஸ் ஸ்கீம்களின் கீழ் நெட்வொர்க் மருத்துவமனைகள் குறைவாக கிடைப்பதும் அடங்கும்.
பெரும்பாலான நேரங்களில், அரசு ஊழியர்கள் நாடு முழுவதும் மாற்றலாகி வேலை பார்க்கும் சூழ்நிலையிலேயே இருப்பார்கள், ஒரு சில சந்தர்ப்பங்களில், அவர்களுக்கு வெளிநாடுகளில் கூட போஸ்டிங் கிடைக்கிறது. இருப்பினும், அரசு ஹெல்த் ஸ்கீம்களின் நெட்வொர்க் மருத்துவமனைகள் எல்லா இடத்திலும் இருக்காது.
குறைவாகக் கிடைக்கும் தன்மை பிரச்சனை ஏற்படுத்துவதாக இருக்கலாம், மேலும் ஊழியர்கள் தங்கள் குடியிருப்புகளிலிருந்து நியாயமான தூரத்திற்குள் தரமான ஹெல்த்கேர் சேவைகளை அணுகுவதில் சிரமங்களை எதிர்கொள்ளலாம்.
பல அரசு ஊழியர்கள் தங்கள் பெற்றோருக்கும் ஹெல்த் இன்சூரன்ஸ் கவரேஜ் பெற விரும்புகிறார்கள். இருப்பினும், தற்போதுள்ள அரசாங்க இன்சூரன்ஸ் ஸ்கீம்கள் பெரும்பாலும் பெற்றோருக்குக் குறைவான கவரேஜையே வழங்குகின்றன, இதனால் மருத்துவ அவசரநிலைகள் ஏற்பட்டால் ஊழியர்கள் நிதி ரீதியாகப் பாதிக்கப்படுவார்கள். தனியார் ஹெல்த் இன்சூரன்ஸை வாங்குதல் என்பது அரசாங்க ஊழியர்கள் தங்கள் பெற்றோரின் ஹெல்த்கேர் தேவைகளுக்கு ஏற்ப குறிப்பாக அடிஷனல் கவரைப் பெற அனுமதிக்கிறது.
சில கிரிட்டிக்கல் இல்னஸ்களுக்கு சிறப்பு சிகிச்சை தேவைப்படுகிறது, இது எம்பேனல் செய்யப்பட்ட மருத்துவமனைகளில் கிடைக்காமல் போகலாம். பல நேரங்களில், இதுபோன்ற கிரிட்டிக்கல் இல்னஸ்களுக்கு உள்நாட்டில் அல்லது வெளிநாட்டில் கூட சில குறிப்பிட்ட சிகிச்சை மையங்கள் உள்ளன.
அரசாங்க இன்சூரன்ஸ் கவரேஜில் உள்ள கட்டுப்பாடுகளுடன், அரசாங்க ஊழியர்கள் அல்லது அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு இதுபோன்ற முக்கியமான சிகிச்சைகள் தேவையாக இருந்து நெட்வொர்க் வசதிகள் குறைவாக இருக்கும்போது அவர்கள் கடினமான சூழ்நிலைக்கு தள்ளப்படுவார்கள்.
தனியார் ஹெல்த் இன்சூரன்ஸைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், தனிநபர்கள் மருத்துவமனைகள் மற்றும் நிபுணர்களின் பெரிய நெட்வொர்க்கிற்கான அணுகலைப் பெறுகிறார்கள், கிரிட்டிக்கல் இல்னஸ்களுக்கான சிறந்த பராமரிப்பு அணுகலையும் அதிகரிக்கிறார்கள்.
அரசாங்க இன்சூரன்ஸ் ஸ்கீம்கள் பெரும்பாலும் குறிப்பிட்ட மருத்துவமனைகளுடன் மட்டுமே டை-அப்களைக் கொண்டுள்ளன, இது ஊழியர்களுக்கான விருப்பத்தேர்வுகளைக் குறைக்கிறது. சில சந்தர்ப்பங்களில், இந்த எம்பேனல் செய்யப்பட்ட மருத்துவமனைகள் வழங்கும் சேவைகளின் தரம் அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யாமல் போகலாம். தனியார் ஹெல்த் இன்சூரன்ஸில் முதலீடு செய்வதன் மூலம், தனிநபர்கள் தங்ககளுக்கு விருப்பமான மருத்துவமனைகள் மற்றும் இன்சூரன்ஸ் வழங்குநர்களைத் தேர்வு செய்து அதிக திருப்தி அடைவதுடன் மேம்பட்ட ஹெல்த்கேர் உதவிகளையும் பெற்று மகிழலாம்.
அரசாங்க இன்சூரன்ஸ் ஸ்கீம்கள் பெரும்பாலும் சிக்கலான நிர்வாக செயல்முறைகளைக் கொண்டிருப்பதால் எதிர்பார்ப்பதை விட தாமதங்களும் தடைகளும் ஏற்படலாம். தனியார் ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான்கள் பொதுவாக நெறிப்படுத்தப்பட்ட, செயல்திறமிகுந்த கிளைம் செட்டில்மெண்ட் செயல்முறைகளை வழங்குகின்றன. பெரும்பாலான நேரங்களில், டிஜிட்டல் மூலமான தொந்தரவு இல்லாத செயல்முறைகள், மக்கள் மீதான சுமையைக் குறைக்கிறது. அத்துடன் இது அவர்களின் உடல்நலம் மற்றும் நல்வாழ்விலும் கவனம் செலுத்த அனுமதிக்கிறது.
இப்போது சீனியர் சிட்டிஸன் வயதை எட்டிய ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு இது மேலும் முக்கியமாகக் கருதப்படுகிறது. மேலும் நீண்ட மற்றும் சிக்கலான செயல்முறைகளைக் கடந்து செல்வது என்பது அவர்களுக்கு இன்னும் கடினமாக இருக்கும்.
மருத்துவ அவசரநிலைகள் நிதி ரீதியாகப் பெரும் சிக்கலை ஏற்படுத்துவதாக இருக்கலாம், குறிப்பாகத் தற்போதுள்ள அரசாங்க இன்சூரன்ஸ் கவரேஜ் எதிர்பார்ப்பதை விட போதுமானதாக இல்லாவிட்டால் அது மேலும் சிரமம். அடிஷனல் தனியார் ஹெல்த் இன்சூரன்ஸைப் பெறுவதன் மூலம், அரசு ஊழியர்கள் எதிர்பாராத மருத்துவ அவசரநிலைகளின் போது தங்கள் நிதி பாதுகாப்பை அதிகரிக்கலாம்.
தனது பாக்கெட்டிலிருக்கும் தொகையை விட அதிகமாகும் செலவுகள் சுமையாகாமல் இருக்க தனிநபர்கள் சிறந்த ஹெல்த்கேர் சேவைகளை அணுகுவதை உறுதி செய்வதுடன் இந்த அடிஷனல் கவர்கள் பாதுகாப்பு வலையையும் வழங்குகின்றன. மேலும், அவசரநிலைகள் உடனடியாக அல்லது குறுகிய காலத்திற்குள் பூர்த்தி செய்ய வேண்டிய சந்தர்ப்பங்களில், அருகிலுள்ள பேனல் வசதி இல்லாத நிலையில், இந்த அடிஷனல் கவர் உங்களைக் காப்பாற்றும் சேவகனாகத் துணை நிற்கும்.
இந்தியாவில் உள்ள அரசு ஊழியர்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் பெனிஃபிட்களை அனுபவிக்கும் அதே வேளையில், அரசாங்க இன்சூரன்ஸ் திட்டங்களுக்குத் துணைபுரிவதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டவும் சரியான காரணங்கள் உள்ளன.
தனியார் ஹெல்த் இன்சூரன்ஸில் முதலீடு செய்வதன் மூலம், அரசு ஊழியர்கள் இதுவரை மேலே விவாதிக்கப்பட்ட வரம்புகளைச் சமாளிக்கலாம். அத்துடன் அவர்களின் ஹெல்த்கேர் விருப்பத்தேர்வுகள் மீது அதிக கட்டுப்பாட்டைப் பெறலாம், இது அவர்கள் பணிபுரியும்போது மட்டுமல்லாமல், பணியிலிருந்து ஓய்வுப்பெற்ற பிறகு கூடுதல் மற்றும் தொந்தரவு இல்லாத கவனிப்பு தேவைப்படும் போது அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் காம்ப்ரிஹென்சிவ் பாதுகாப்பு மற்றும் மன அமைதி கிடைப்பதையும் உறுதி செய்கிறது.