Fetching Your Data...
- Team Digit
ஆன்லைனில் ஹெல்த் கிளைமை எவ்வாறு தாக்கல் செய்வது
ஹெல்த் இன்சூரன்ஸ் கிளைமைத் தாக்கல் செய்ய உதவி வேண்டுமா?
எங்கள் ஹெல்ப்லைன் எண்களான 1800-258-4242-க்கு அழைக்கவும் அல்லது எங்களுக்கு மின்னஞ்சல் healthclaims@godigit.com செய்யவும். மூத்த குடிமக்களுக்கு என்றால், seniors@godigit.com-இல் எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும். தேசிய விடுமுறை நாட்களில் கூட 24/7 எங்களை நீங்கள் அணுகலாம்.
ஹெல்த் இன்சூரன்ஸ் கிளைம்கள் டிஜிட்டுடன் எளிமையாகப்பட்டுள்ளன
ஹெல்த் இன்சூரன்ஸ் கிளைம் என்பது அதிகாரப்பூர்வ கோரிக்கை மற்றும் செயல்முறையாகும். இதன்மூலம் உங்கள் உடல்நலம் மற்றும் மருத்துவ செலவுகளை ஹெல்த் இன்சூரன்ஸ் வழங்கும் நிறுவனமே கவனித்துக்கொள்ள முடியும். உதாரணத்திற்கு; ஒரு குடும்ப உறுப்பினர் துரதிர்ஷ்டவசமாக நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டத்தில் பாதுகாப்பு செய்யப்பட்டிருந்தால், கேஷ்லெஸ் சிகிச்சையைத் தொடர நீங்கள் ஒரு ஹெல்த் இன்சூரன்ஸ் கோரிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் அல்லது அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சைக்காக செலுத்தப்பட்ட தொகையை ரீயிம்பர்ஸ்மென்ட் பெற விண்ணப்பிக்கலாம்.
ஹெல்த் இன்சூரன்ஸ் கிளைம்களின் வகைகள்
கேஷ்லெஸ் கிளைம் செய்வது எப்படி?
வெளிப்படைத்தன்மையை நாங்கள் நம்புகிறோம், எனவே ஹெல்த் இன்சூரன்ஸ் கிளைமின் போது என்ன எதிர்பார்க்கலாம் என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள், எங்களின் 5900+ நெட்வொர்க் மருத்துவமனைகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் தேர்வுசெய்யக்கூடிய கேஷ்லெஸ் கிளைம் மூலம் செல்வதற்கான முழுமையான படிகளை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம்.
படி 1: திட்டமிடப்பட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு குறைந்தது இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு முன் அல்லது அவசரகால சூழ்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் எங்களுக்குத் தெரிவிக்கவும்.
படி 2: உங்கள் இ-ஹெல்த் கார்டைக் காட்டி, மருத்துவமனையில் உள்ள மருத்துவ ஹெல்ப் டெஸ்க்/இன்சூரன்ஸ் ஹெல்ப் டெஸ்கில் முன் அனுமதிப் படிவத்தைக் கேட்கவும்.
படி 3: படிவத்தை பூர்த்தி செய்து கையொப்பமிட்டு ஹெல்ப் டெஸ்க்கில் சமர்ப்பிக்கவும்.
படி 4: எல்லாம் சரியாக இருந்தால், கேஷ்லெஸ் வசதியைப் பயன்படுத்தி சிகிச்சையைத் தொடரலாம். அனுமதிக்கப்பட்ட 15 நாட்களுக்குள் சிகிச்சை செய்யப்படுவதை உறுதிசெய்யவும்.
ரீயிம்பர்ஸ்மென்ட் கிளைமை எவ்வாறு செய்வது?
படி 1: உங்கள் அட்மிஷன் தேதியிலிருந்து இரண்டு நாட்களுக்குள் எங்களை அழைக்க வேண்டும். எங்களை அழைத்து விவரத்தை தெரிவித்த பிறகு, அனைத்து அசல் ஆவணங்களின் (பில்கள், அறிக்கைகள் போன்றவை) மற்றும் உங்கள் வங்கிக் கணக்கின் விவரங்களைப் பதிவேற்றக்கூடிய லிங்க்கை நாங்கள் உங்களுக்கு அனுப்புவோம்.
படி 2: ஆவணங்களைப் பதிவேற்றுவதற்கு முன், எல்லா ஆவணங்களிலும் நீங்களே கையொப்பமிட வேண்டும். அவற்றில் ‘டிஜிட் இன்சூரன்ஸுக்கு’ என்றும் எழுத வேண்டும். அனைத்து அசல் ஆவணங்களையும் கையில் வைத்திருக்கவும், தேவைப்பட்டால் நாங்கள் அவற்றைக் கேட்போம்.
படி 3: டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் அல்லது லிங்க்கைப் பெற்றவுடன் ஆவணங்களைப் பதிவேற்றவும்.
படி 4: ஏதேனும் கூடுதல் தேவைகளுக்கு நாங்கள் உங்களை தொடர்பு கொள்வோம்.
படி 5: கடைசியாக தேவையான கிளைம் ஆவணம் கிடைத்ததிலிருந்து 30 நாட்களுக்குள் நீங்கள் பணம் பெறுவீர்கள்.
ஹெல்த் இன்சூரன்ஸ் கிளைமுக்குத் தேவையான ஆவணங்கள்
நீங்கள் கேஷ்லெஸ் கிளைமுக்குச் சென்றாலும் அல்லது ரீயிம்பர்ஸ்மென்ட் செய்தாலும், ஹெல்த் இன்சூரன்ஸ் கிளைமை மேற்கொள்ளும்போது நீங்கள் பதிவேற்றம் செய்ய வேண்டிய அல்லது சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்களின் முழுமையான பட்டியல் இங்கே. கவலைப்பட வேண்டாம், ஆவணங்கள் கிளைமுக்கு கிளைம் வேறுபடுகின்றன. ஆனால் இந்த பட்டியல் சாத்தியமான அனைத்தையும் கொண்டுள்ளது. உங்கள் சூழ்நிலையின் அடிப்படையில் உங்களுக்கு சில அல்லது அனைத்தும் தேவைப்படலாம்.
ஆவணங்களின் பட்டியல் | மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கான கிளைம் | தீவிர நோய்க்கான கிளைம் | தினசரி மருத்துவமனை கேஷ் கிளைம் |
முறையாக நிரப்பப்பட்ட மற்றும் கையொப்பமிடப்பட்ட கிளைம் படிவம் | |||
டிஸ்சார்ஜ் சம்மரி | |||
மெடிக்கல் ரெக்கார்டுகள் (தேவையின் அடிப்படையில் ஆப்ஷனலாக ஆவணங்கள் கேட்கப்படலாம்: இன்டோர் கேஸ் பேப்பர், ஓ.டி (OT) குறிப்புகள், பி.ஏ.சி (PAC) குறிப்புகள் போன்றவை) | |||
ஒரிஜினல் மருத்துவமனை முதன்மை பில் | |||
பிரேக் அப்புடன் அசல் மருத்துவமனை முதன்மை பில் | |||
மருந்துச் சீட்டுகளுடன் கூடிய அசல் பார்மஸி பில்கள் (மருத்துவமனை சப்ளை தவிர) மற்றும் மருத்துவமனைக்கு வெளியே செய்யப்படும் விசாரணைகள் | |||
ஆலோசனை & விசாரணை ஆவணங்கள் | |||
விசாரணை நடைமுறைகளின் டிஜிட்டல் இமேஜஸ்/சி.டி.(CD)-கள் (தேவைப்பட்டால்) | |||
கே.ஒய்.சி (KYC) (புகைப்பட ஐ.டி கார்டு) கேன்சல்டு செக் உடன் வங்கி விவரங்கள் | |||
குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் மட்டுமே தேவைப்படும் மேலும் சில ஆவணங்கள் உள்ளன, அவை: | |||
கர்ப்பம் தொடர்பான கிளைமின் போது- குழந்தை பிறப்பதற்கு முந்தைய பதிவு, பிறந்த பிறகு டிஸ்சார்ஜ் சம்மரி | |||
விபத்து அல்லது காவல்துறையின் ஈடுபாடு இருந்தால்- எம்.எல்.சி (MLC)/எப்.ஐ.ஆர் (FIR) அறிக்கை | |||
இறப்பு அல்லது ஊனம் ஏற்பட்டால்- பிரேத பரிசோதனை அறிக்கை, இறப்புச் சான்றிதழ் அல்லது ஊனமுற்றோர் சான்றிதழ் அசல் இன்வாய்ஸ்/ஸ்டிக்கர் (பொருந்தினால்) | |||
கவனித்த மருத்துவரின் சான்றிதழ் (பொருந்தினால்) |
கேஷ்லெஸ் வசதிக்கான நெட்வொர்க் மருத்துவமனைகள்
டிஜிட் இணையதளத்தில் காட்டப்பட்டுள்ள எம்பேனல் செய்யப்பட்ட மருத்துவமனைகள் நிகழ்நேரத்தில் புதுப்பிக்கப்படவில்லை, புதுப்பிக்கப்பட்ட தகவலுக்கு, கீழே உள்ள டி.பி.ஏ (TPA) பட்டியல்களையும் தொடர்புடைய டி.பி.ஏ(TPA)-களையும் சரிபார்க்கவும்.
டி.பி.ஏ இன் பெயர் |
பாலிசியின் வகை |
லிங்க் |
மெடி அசிஸ்ட் இன்சூரன்ஸ் டி.பி.ஏ (TPA) பிரைவேட் லிமிடெட். |
ரீடைல் & குரூப் |
|
பாராமென்ட் ஹெல்த் சர்வீசஸஸ் & இன்சூரன்ஸ் டி.பி.ஏ (TPA) பிரைவேட் லிமிடெட் |
குரூப் |
|
ஹெல்த் இந்தியா இன்சூரன்ஸ் டி.பி.ஏ (TPA) சர்வீசஸஸ் பிரைவேட் லிமிடெட் |
குரூப் |
|
குட் ஹெல்த் இன்சூரன்ஸ் டி.பி.ஏ லிமிடெட் |
குரூப் |
|
ஃபேமிலி ஹெல்த் பிளான் இன்சூரன்ஸ் டி.பி.டி லிமிடெட் |
குரூப் |
நாங்கள் சில மருத்துவமனைகளுடன் நேரடி தொடர்புக்கு ஏற்பாடு செய்துள்ளோம். இவை எங்கள் டி.பி.ஏ (TPA)-க்களுடன் நாங்கள் பராமரிக்கும் மருத்துவமனை நெட்வொர்க்குடன் கூடுதலாக உள்ளன