சப்போர்ட்
closeஎங்கள் வாட்ஸ்அப் எண்ணை அழைப்புகளுக்கு பயன்படுத்த முடியாது. இது வெறும் அரட்டை எண்.
கேட்ராக்ட் ஹெல்த் இன்சூரன்ஸ் எனும் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியானது கண்புரை கோளாறுக்கு சிகிச்சை அளிக்க காப்பீடு செய்யும் இன்சூரன்ஸ் ஆகும். கண்புரை வயது முதிர்ச்சியில் பொதுவாக ஏற்படும் கண் குறைபாடு, ஆனால் இது கண்களில் ஏற்படும் காயத்தினாலும் ஏற்படலாம்.
டிஜிட்டில், இதற்கான சிகிச்சை செலவு எங்களது டேகேர் செயல்முறைகளில் உள்ளடக்கப்படுகிறது - எந்தவித கூடுதல் செலவும் இல்லாமல்.
கேட்ராக்ட்(கண்புரை) என்பது கண்ணின் லென்ஸில் உருவாகும் அடர்த்தியான, வெள்ளையான பகுதியின் காரணத்தினால் உருவாகும் கண்ணின் நிலை. இது பொதுவாக வயது முதிர்ந்தவர்களில் காணப்படும், கவனிக்காமல் விட்டுவிட்டால் கண் பாதியாகவோ அல்லது முற்றிலுமாகவோ தெரியாமல் போய்விடும்.
கேட்ராக்ட்(கண்புரை) ஏற்படுவதற்கு எந்த ஒரு தனிப்பட்ட காரணமும் இல்லை . பொதுவாக வயதானவர்களுக்கு ஏற்படக்கூடியதாக இருந்தாலும், இந்தியாவில் 50 வயதுக்கு மேற்பட்டோர்க்கு அதிகமாக பாதிப்பு ஏற்படுவது அதிகரித்து உள்ளது.!
இந்தியாவில் நீரிழிவு நோய் அதிகமாக இருப்பதும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். நீரிழிவு நோய் மற்றும் வயது முதிர்ச்சி தவிர கீழே குறிப்பிடப்பட்ட காரணங்களாலும் கேட்ராக்ட் ஏற்படும்:
ஆக்ஸிடண்ட்டின் அதீத உற்பத்தி ,i.e தினசரி வாழ்க்கையின் காரணத்தினால் ஆக்சிஜன் மூலக்கூறுகளில் ஏற்படும் வேதியல் மாற்றம்.
புகை பிடித்தல்
புறஊதா கதிர்கள்
நீண்ட நாள் ஸ்டீராய்டு மற்றும் மற்ற மருந்துகளின் பயன்பாடு
நீரிழிவு போன்ற சில நோய்கள்
கடந்த காலத்தில் கண்ணில் ஏற்பட்ட காயத்தினால் ஏற்பட்ட அதிர்ச்சி
கதிர்விச்சு தெரப்பி
மங்களான பார்வை
இரவு நேரங்களில் பார்வை பாதிப்பு
நிறங்கள் மங்கி தெரிவது
கண் பார்வையில் கூசும் திறன் அதிகரிகரிப்பது
வெளிச்சத்தை சுற்றி ஒளிவட்டம்
பாதிக்கப்பட்ட கண்ணில் இரட்டை பார்வை
கண்ணுக்கு அணியும் கண்ணாடிகளில் அடிக்கடி ஏற்படும் மாற்றத்திற்கானத் தேவை
பொதுவாக மக்கள் கேட்ராக்ட்(கண்புரை) பற்றிய தவறான எண்ணம் கொண்டுள்ளனர். அதாவது, கேட்ராக்ட் என்பது வயதோடு தொடர்புடையது என்று .
இருப்பினும், இது உண்மை இல்லை, கேட்ராக்ட்(கண்புரை) கண்ணில் எந்த பகுதியைத் தாக்குகிறது என்பதைஇ
ப் பொறுத்து பல வகைகளாக உள்ளது. பல்வேறு வகையான கேட்ராக்ட் பற்றி பின்வருமாறு:
நியூக்ளியர் கேட்ராக்ட்ஸ்: கண்ணின் மைய பகுதியில் ஏற்பட்டு கருவிழிகள் மஞ்சள் & பழுப்பாக ஆக மாறும்.
கோர்ட்டிகள் கேட்ராக்ட்ஸ்: இது கருவிழியின் ஓரத்தில் வெட்ஜ் வடிவில் உருவாகும்.
போஸ்டிரியர் கேப்சுலர் கேட்ராக்ட்ஸ் : மற்ற கேட்ராக்டுடன் ஒப்பிடும் போது இது வேகமாக கண் லென்ஸின் பின்புறம் பரவுகிறது.
கான்ஜென்டினல் கேட்ராக்ட்ஸ்: இந்த வகையான கேட்ராக்ட் வயது அதிகரிப்பதனால் ஏற்படுவதில்லை, ஆனால், பிறப்பின் போது
அல்லது குழந்தையின் முதல் வயதில் இருந்தே உருவாகிறது.
செகண்டரி கேட்ராக்ட்ஸ்: இந்த கேட்ராக்ட் மற்ற எதாவது ஒரு நோய் அல்லது டையபடிஸ் மற்றும் க்ளுக்கோமா போன்ற அடிப்படை உடல்நலக் குறைவால் ஏற்படுகிறது. கூடுதலாக ஸ்டீராய்டு மற்றும் இதர மருந்து உட்கொள்வதன் மூலமாக கேட்ராக்ட் ஏற்படலாம்.
ட்ரௌமெட்டிக் கேட்ராக்ட்ஸ்: சிலநேரத்தில், ட்ரௌமா கேட்ராக்ட்ஸ் கண்களில் ஏற்பட்ட காயத்தினால் ஏற்படுகிறது, ஆனால், காயங்கள் ஏற்பட்டு பல ஆண்டுகளுக்குப் பிறகும் ஏற்படலாம்.
ரேடியேஷன் கேட்ராக்ட்: ஒருவர் புற்றநோய்க்காக ரேடியேஷன் சிகிச்சை எடுத்தப் பிறகு கேட்ராக்ட் உருவாகிறது .
ஆம், உங்கள் கண் ஆரோக்கியம் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வைப் பராமரிப்பதன் மூலம் கேட்ராக்(கண்புரை) தடுக்கப்படலாம். கண்புரை வராமல் தடுக்கும் சில வழிகள்:
UVB கதிரிலிருந்து கண்களை பாதுகாக்க சன் கிளாஸ்-ஐ அணிய வேண்டும்
65 வயதுக்கு மேற்பட்டோர் குறிப்பாக கண் பிரச்சனை உள்ளவர்கள் தொடர்ந்து கண் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
புகை பிடிப்பதை நிறுத்துவது!
ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் உள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை வழக்கமாக உண்ண வேண்டும் .
எப்போதும் ஆரோக்கியமான எடையுடன் இருக்க வேண்டும், இதன் மூலம் மற்ற நோய்கள் வராமல் தடுக்கலாம்.
நீங்கள் நீரிழிவு நோயாளியாக இருந்தால், உங்கள் நீரிழிவு அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.
ஆம், துரதிர்ஷ்டவசமாக மற்றவர்களை விட கண்புரை நோயால் அதிகமாக பாதிப்புக்குள்ளாகும் சிலர் உள்ளனர். இந்த ஆபத்து காரணிகளில் சில:
வயது முதிர்ச்சி
அதிக மது உட்கொள்தல்
தொடர்ந்து புகை பிடித்தல்
பருமனான உடல்
அதிக ரத்த அழுத்தம்
முன்பு ஏற்பட்ட கண் காயங்கள்
கேட்ராக்ட் உள்ள குடும்ப தலைமுறை
அதிக சூரிய வெளிச்சம் படுதல்
நீரிழிவு
புற்றுநோய் சிகிச்சையில் இருந்தும் x கதிரில் இருந்தும் வெளியேறும் கதிர் வீச்சுகள்
பாகோஎமல்சிஃபிகேஷன் கண்புரை அறுவை சிகிச்சையானது கண்புரை அறுவை சிகிச்சைகளில் மிகவும் பொதுவானதாக இருந்தாலும், பிற வகையான கண்புரை அறுவை சிகிச்சைகளும் உள்ளன..
உங்கள் மருத்துவரின் பரிந்துரை, நீங்கள் வசிக்கும் நகரம், நீங்கள் தேர்ந்தெடுக்கும் மருத்துவமனை மற்றும் உங்கள் வயது போன்றவையின் அடிப்படையில் இந்தியாவில் கண்புரை அறுவை சிகிச்சைக்கான செலவு மாறுபடும். இந்தியாவில் உள்ள மூன்று வெவ்வேறு வகையான கண்புரை அறுவை சிகிச்சைகளுக்கு தோராயமாக என்ன செலவாகும் என்பது கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
பாகோஎமல்சிஃபிகேஷன் கண்புரை அறுவை சிகிச்சை |
கேப்சுலார் கண்புரை அறுவை சிகிச்சை |
பிளேட்லெஸ் கண்புரை அறுவை சிகிச்சை |
இது என்ன: கண்புரைக்கான மிகவும் பொதுவான அறுவை சிகிச்சையில், கண்புரையை உடைத்து அதனை அகற்றும் பொருட்டு, பாதிக்கப்பட்ட கார்னியாவில் சிறிய கீறல்கள் செய்வதற்கு முன், மயக்க மருந்துகள் பயன்படுத்துகிறது. |
இது என்ன: இதுவும் பாகோஎமல்சிஃபிகேஷன் கண்புரை அறுவை சிகிச்சையைப் போன்றது. ஆனால் இதில் கீறல்கள் வழக்கத்தை விட பெரியதாக இருக்கும். |
இது என்ன: இந்த அறுவை சிகிச்சை எந்த கீறல் செயல்முறைகளையும் பயன்படுத்துவதில்லை, மாறாக கண்புரையைக் கரைக்கும் பொருட்டு கணினி வழிகாட்டுதலுடன் ஃபெம்டோசெகண்ட் லேசர் மூலம் கண்புரைக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. |
விலை: பாதிக்கப்பட்ட கண்ணுக்கு சுமார் 40,000 ரூபாய் செலவாகும். |
விலை: பாதிக்கப்பட்ட கண்ணுக்கு 40,000 ரூபாய் முதல் 60,000 ரூபாய் வரை செலவாகும். |
விலை : இந்த அறுவை சிகிச்சை மிகவும் சமீபத்தியது. இது தொழில்நுட்ப இயல்புடையது என்பதால், இது மற்ற அறுவை சிகிச்சைகளை விட விலை அதிகமானது. அதாவது பாதிக்கப்பட்ட கண்ணுக்கு ரூ.85,000 முதல் 1,20,000 வரை செலவாகும். |
பொறுப்பு துறப்பு: மேற்குறிப்பிட்டுள்ளது தோராயமான செலவுகள் மட்டுமே மற்றும் ஒரு மருத்துவமனையிலிருந்து மற்றொன்றிற்கு மற்றும் நகரத்திற்கு நகரம் வேறுபடலாம்.
கோ–பேமெண்ட் |
இல்லை |
ரூம் ரெண்ட் கேப்பிங் |
இல்லை |
கேஷ்லெஸ் மருத்துவமனைகள் |
இந்தியா முழுவதும் 10500+ நெட்வொர்க் மருத்துவமனைகள் |
இன்பில்ட் பர்சனல் ஆக்சிடன்ட் கவர் |
ஆம் |
உடல்நலம் சார்ந்த பெனிஃபிட்கள் |
10+ உடல்நலம் சார்ந்த பார்ட்னர்கள் மூலம் கிடைக்கிறது |
நகரம் சார்ந்த தள்ளுபடி |
10% வரை தள்ளுபடி |
உலகளவு கவரேஜ் |
ஆம்* |
ஆரோக்கியத்தை பராமரிப்பதற்கான தள்ளுபடி |
5% வரை தள்ளுபடி |
கன்ஸ்யூமபிள் கவர் |
ஆட்-ஆன் ஆக உள்ளது |
*வேர்ல்டுவைட் ட்ரீட்மெண்ட் பிளானில் மட்டுமே கிடைக்கும்
திட்டமிடப்பட்ட அறுவை சிகிச்சை மற்றும் மருத்துவமனையில் அனுமதிப்பது குறித்து முன்கூட்டியே அல்லது இரண்டு நாட்களுக்குள் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். இருப்பினும், பொதுவாக கண்புரை அறுவை சிகிச்சை முன்கூட்டியே திட்டமிடப்படுவதால், கடைசி நிமிடத்தில் ஏதேனும் பிரச்சனை ஏற்படுவதைத் தவிர்க்க, முன்னதாகவே எங்களுக்குத் தெரிவிப்பது நல்லது!
1800-258-4242 என்ற எண்ணில் எங்களை அழைத்து தெரிவிக்கலாம் அல்லது healthclaims@godigit.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம். மேலும், உங்களுக்குத் தேவையான அனைத்து ஆவணங்களையும் பதிவேற்றுவதற்கான இணைப்பை நாங்கள் உங்களுக்கு அனுப்புவோம். அறுவை சிகிச்சைக்குப் பிறகு, விரைவில் ரீஇம்பர்ஸ்மென்ட் ஆவதை நாங்கள் உறுதி செய்வோம்.
நீங்கள் கேஷ்லெஸ் கிளைம் செய்ய விரும்பினால், முதலில் நீங்கள் கண்புரை அறுவை சிகிச்சை செய்ய விரும்பும் நெட்வொர்க் மருத்துவமனையைத் இங்கு தேர்வு செய்ய வேண்டும்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள எண் அல்லது மின்னஞ்சலில் குறைந்தது 72-மணிநேரத்திற்கு முன்னதாக எங்களுக்குத் தெரியப்படுத்தவும்.
நெட்வொர்க் மருத்துவமனை டெஸ்கில் உங்கள் இ-ஹெல்த் கார்டைக் காட்டி, கேஷ்லெஸ் கிளைம் செய்வதற்கான படிவத்தைக் கேட்கவும். எல்லாம் சரியாக இருந்தால், உங்கள் கோரிக்கை அங்கேயே செயல்படுத்தப்படும்!