சப்போர்ட்
closeஎங்கள் வாட்ஸ்அப் எண்ணை அழைப்புகளுக்கு பயன்படுத்த முடியாது. இது வெறும் அரட்டை எண்.
கேஷ்லெஸ் ஹெல்த் இன்சூரன்ஸ் என்பது நீங்கள் எந்தப் பணமும் செலுத்தாமல், உங்களுக்குத் தேவையான சிகிச்சையைத் தேர்ந்தெடுப்பதற்கான ஆப்ஷனை வழங்கும் ஒரு இன்சூரன்ஸ் பாலிசியைக் குறிக்கிறது. அதற்கான செலவுகள் யாவுமே மருத்துவமனை மற்றும் உங்கள் இன்சூரருக்கும் (எங்களுக்கு!) இடையே நேரடியாக கவனித்துக் கொள்ளப்படும்.
உதாரணாமாக: நீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தினர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டியிருந்தால், கேஷ்லெஸ் ஹெல்த் இன்சூரன்ஸ் ஆனது, நீங்கள் இதற்கான செலவுகளை பணம் செலுத்தாமல் சமாளிக்க உதவுகிறது.
இதற்கு தேவையானதெல்லாம் உங்கள் ஹெல்த் இன்சூரர் அல்லது தேர்டு பார்ட்டி நிர்வாகியின் ஒப்புதல் மட்டுமே, மீதமுள்ளவற்றை உங்கள் ஹெல்த் இன்சூரரால் பார்த்துக்கொள்ளப்படும்!
இதனைப் பற்றி இன்னும் நன்றாகப் புரிந்துகொள்வோம். எனவே, பொதுவாக இந்தியாவிலுள்ள இன்சூரன்ஸ் பிளான்களில் என்ன நடக்கிறது என்றால், நோய் அல்லது விபத்து காரணமாக நீங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் கிளைம் செய்ய வேண்டியிருக்கும் போது - நீங்கள் உங்களுக்குத் தேவையான சிகிச்சையைத் தேர்வு செய்து, பின்னர் உங்கள் ஹெல்த் இன்சூரரிடமிருந்து உங்கள் மருத்துவமனை கட்டணங்களைத் திரும்பப் பெறலாம் அல்லது, அதற்குப் பதிலாக முன்கூட்டியே அல்லது சேர்க்கையின் போது (அவசர சிகிச்சை தேவைப்படும் நிலையில்) அனுமதிகளைப் பெற்று, கேஷ்லெஸ் கிளைம் செய்து கொள்ளலாம்; இதன் பொருள் நீங்கள் முன் பணம் எதுவும் செலுத்தத் தேவையில்லை மற்றும் உங்கள் மருத்துவமனை அதை உங்கள் உடல்நலக் காப்பீட்டாளரிடம் நேரடியாக கவனித்துக் கொள்ளும் என்பதாகும்.
இது உங்கள் நிறுவனத்திற்கும் ஹோட்டலுக்கும் இடையே உள்ள கூட்டாண்மை காரணமாக நீங்கள் ஹோட்டலில் தங்குவதற்கான செலவுகள் அனைத்தையும் நிறுவனம் ஏற்றுக் கொள்வது போலத் தான். ஆம், இன்சூரன்ஸ் பாலிசியிலும், உங்கள் ஹெல்த் இன்சூரரின் நெட்வொர்க்கின் ஒரு பகுதியாக இருக்கும் மருத்துவமனைகள் மட்டுமே (அதாவது உங்கள் இன்சூரருடன் தொடர்பு கொண்டவை), கேஷ்லெஸ் ட்ரீட்மெண்ட் ஆப்ஷனை உங்களுக்கு வழங்குகின்றன.
டிஜிட்-ல் இந்தியா முழுவதும் சுமார் 10500+ கேஷ்லெஸ் மருத்துவமனைகள் உள்ளன, அங்கு நீங்கள் கேஷ்லெஸ் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி மூலம் கேஷ்லெஸ் ட்ரீட்மெண்ட்டைத் தேர்வுசெய்யலாம்.
கேஷ்லெஸ் ஹெல்த் இன்சூரன்ஸ் என்பது நீங்கள் கிளைம் செய்யும் போது தான் நடைமுறைக்கு வருகிறது. இது எவ்வாறு செயல்படுகிறது மற்றும் உங்கள் கேஷ்லெஸ் ஹெல்த் இன்சூரன்ஸ் கிளைமை எவ்வாறு செய்யலாம் முதலியாவைப் பற்றி விளக்கமாகப் பார்ப்போம்.
குறிப்பு: பின்வரும் செயல்முறையானது டிஜிட்-ல் பின்பற்றக்கூடியதாகும், மேலும், இது ஒவ்வொரு இன்சூரருக்கும் வேறுபடலாம்.
கவரேஜ்கள்
டபுள் வாலட் பிளான்
இன்ஃபினிட்டி வாலட் பிளான்
வேர்ல்டுவைட் ட்ரீட்மெண்ட் பிளான்
முக்கிய அம்சங்கள்
இது உடல்நலக்குறைவு, விபத்து, தீவிர சிகிச்சை அல்லது கோவிட் 19 போன்ற தொற்றுநோய்கள் உட்பட அனைத்திற்கும் தேவையான மருத்துவமனை செலவுகளை உள்ளடக்கியது. உங்களின் மொத்த மருத்துவமனை செலவுகள் நீங்கள் இன்சூர் செய்த தொகைக்கு உள்ளாக அடங்கும் வரை மல்டிபிள் ஹாஸ்பிட்டலைசேஷன் செலவுகளும் இதில் அடங்கும்.
விபத்து அல்லாத உடல்நலக்குறைவு சார்ந்த சிகிச்சை செலவுகளைப் பெற நீங்கள் பாலிசி எடுத்த முதல் நாளில் இருந்து ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு நீங்கள் காத்திருக்க வேண்டும். இதுவே ஆரம்ப காத்திருப்பு காலம் ஆகும்.
வீட்டில் இருந்தபடியே சுகாதார பராமரிப்பு, போன் மூலம் கன்சல்டேஷன், யோகா மற்றும் மனந்தெளிநிலை மற்றும் பல பிரத்யேகமான உடல்நலம் சார்ந்த நன்மைகள் எங்கள் ஆப்-ல் கிடைக்கும்
நீங்கள் இன்சூர் செய்யப்பட்ட தொகைக்கான பேக் அப் வழங்குவதன் மூலம் உங்களின் 100% இன்சூரன்ஸ் தொகையை கட்டாயமாக பெறுவீர்கள். இன்சூர் செய்யப்பட்ட தொகைக்கான பேக் அப் எப்படி செயல்படுகிறது? உங்களின் பாலிசிக்கான இன்சூர் செய்யப்பட்ட தொகை 5 லட்சம் ரூபாய் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் 50,000 ரூபாய்க்கு கிளைம் செய்கிறீர்கள். இந்த நேரத்தில் டிஜிட் வாலட் பெனிஃபிட்டை தொடக்கி வைக்கும். அதனால் இந்த வருடத்தில் நீங்கள் 4.5 லட்சம் + 5 லட்சத்தை இன்சூர் செய்யப்பட்ட பணமாக வைத்திருப்பீர்கள். இருப்பினும், ஒவ்வொரு முறை செய்யும் கிளைமானது, மேற்கூறிய வழக்கில், அடிப்படை இன்சூரன்ஸ் தொகையான 5 லட்சத்தை விட அதிகமாக இருக்கக்கூடாது.
பாலிசி ஆண்டில் நீங்கள் எந்தவொரு கிளைமும் செய்யவில்லையா? அப்படி என்றால் உங்களுக்கு போனஸ் காத்திருக்கிறது- ஆரோக்கியமாக இருந்ததற்கும் & எந்தவொரு கிளைமும் செய்யாமல் இருந்ததற்கும் உங்களின் மொத்த இன்சூர் செய்யப்பட்ட தொகையுடன் ஒரு கூடுதல் தொகை சேர்க்கப்படும்!
வெவ்வேறு வகையைச் சார்ந்த அறைகளுக்கு வெவ்வேறு வாடகைகள் வசூலிக்கப்படும். ஹோட்டல் ரூம்களுக்கு வசூலிக்கப்படுவதை போல தான் இதுவும். நீங்கள் இன்சூர் செய்யப்பட்ட தொகைக்கு குறைவாக இருக்கும் வரை டிஜிட் எந்த விதமான ரூம் ரெண்ட் கேப்பிங்கும் விதிப்பதில்லை.
24 மணிநேரத்திற்கு அதிகமாக மருத்துவமனையில் இருந்தால் மட்டுமே அதற்கான மருத்துவ செலவுகளை ஹெல்த் இன்சூரன்ஸ் ஏற்றுக்கொள்ளும். தொழில்நுட்ப முன்னேற்றம் காரணமாக 24 மணிநேரத்திற்கு குறைவாக தேவைப்படும் கண்புரை, டயாலிசிஸ் போன்ற மருத்துவமனையில் மேற்கொள்ளப்படும் மருத்துவ சிகிச்சைகள் டே கேர் செயல்முறைகள் ஆகும்.
உலகளவு கவரேஜுடன் உலகத்தரம் வாய்ந்த சிகிச்சைகளை பெறுங்கள்! இந்தியாவில் நீங்கள் ஒரு மருத்துவ பரிசோதனை செய்தபோது உங்களுக்கு உடல்நலகுறைவு இருப்பது கண்டறியப்பட்டால், ஒரு வேலை நீங்கள் அதற்கான சிகிச்சையை அயல்நாடுகளில் மேற்கொள்ள விரும்பும் பட்சத்தில், உங்களுக்கு உதவ நாங்கள் உள்ளோம். உங்களுக்கு தேவையான பாதுகாப்பு பாலிசியில் உண்டு!
உங்களின் ஹெல்த் செக்-அப்பிற்கு ஆகும் செலவுகளை உங்கள் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தொகை வரை நாங்களே செலுத்துவோம். நீங்கள் எடுக்கும் பரிசோதனைகளுக்கு எந்த ஒரு கட்டுப்பாடும் கிடையாது! அது இசிஜி அல்லது தைராய்டு சோதனை எதுவாக இருந்தாலும் சரி. உங்கள் கிளைம் லிமிட் என்ன என்பதை பாலிசி அட்டவணையில் பார்க்க மறந்து விடாதீர்கள்.
உயிருக்கு ஆபத்தான சில அச்சுறுத்தும் நிலைகளில் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல போக்குவரத்து தேவைப்படலாம். இதனை நாங்கள் முழுவதுமாக புரிந்துகொள்கிறோம். ஏர்பிளேன் அல்லது ஹெலிகாப்டர் வைத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்ற செலவுகளை ரீஇம்பர்ஸ் செய்து கொள்ளலாம்.
கோ–பேமெண்ட் என்பது ஒரு ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியின் கீழ் உள்ள செலவினப் பகிர்வுத் தேவையாகும், இது பாலிசிதாரர்/இன்சூர் செய்தவர் கிளைம் செய்யப்பட்ட தொகையில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை ஏற்க வேண்டும். இது இன்சூர் செய்யப்பட்ட தொகையைக் குறைக்காது. இந்த சதவீதமானது வயது போன்ற ஒரு சில காரணிகள், அல்லது ஒரு சில நேரங்களில் சோன் சார்ந்த கோ–பேமெண்ட் என்று அழைக்கப்படும் நீங்கள் சிகிச்சை பெறும் நகரத்தை பொறுத்து அமையும். எங்களது திட்டத்தில், வயது சார்ந்த அல்லது சோன் சார்ந்த கோ–பேமெண்ட் கிடையாது.
ஒரு வேலை நீங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், சாலைவழி ஆம்புலன்ஸுக்கான செலவுகளை ரீஇம்பர்ஸ் செய்து கொள்ளலாம்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கு முன்னும், பின்னரும் நோயறிதல், பரிசோதனைகள் மற்றும் குணமடைதல் போன்ற செலவுகளுக்கான கவர் இது.
பிற அம்சங்கள்
உங்களுக்கு ஏற்கனவே இருக்கும் ஒரு நோய் அல்லது மருத்துவ நிலை குறித்து நீங்கள் எங்களிடம் பாலிசி எடுப்பதற்கு தெரிவித்து, நாங்கள் அதை ஒப்புக்கொண்டும் இருப்பதற்கு எங்களின் திட்டப்படி ஒரு குறிப்பிட்ட காத்திருப்பு காலம் உண்டு. இது உங்களின் பாலிசி அட்டவணையில் குறிப்பிடப்பட்டு இருக்கும்.
ஒரு குறிப்பிட்ட உடல்நலக்குறைவிற்கு கிளைம் செய்ய நீங்கள் காத்திருக்க வேண்டிய காலத்தை இது குறிக்கிறது. டிஜிட்டில் இது 2 ஆண்டுகள் ஆகும். இது உங்கள் பாலிசி ஆக்டிவேட் ஆன நாளில் இருந்து துவங்கும். விலக்குகளுக்கான முழு பட்டியலுக்கு, உங்கள் பாலிசி வொர்டிங்களின் ஸ்டான்டர்டு விலக்குகளைப் (Excl02) படிக்கவும்.
பாலிசி காலத்தில் உங்களுக்கு ஏதேனும் விபத்தின் விளைவாக காயம் ஏற்பட்டு, விபத்து ஏற்பட்ட தேதியில் இருந்து பன்னிரண்டு (12) மாதங்களுக்குள் ஏற்பட்ட உங்களின் இறப்பிற்கு அது மட்டுமே காரணமாக இருந்தால், பின்னர் பாலிசியில் குறிப்பிட்டுள்ளபடி இன்சூர் செய்யப்பட்ட தொகையில் 100% வழங்கப்படும்.
உங்களுக்கு உறுப்பு தானம் கொடுத்த நபரும் இந்த பாலிசி மூலம் பாதுகாக்கப்படுவார். தானம் கொடுப்பவரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்பும், பின்னரும் ஆகும் செலவுகள் ஏற்கப்படும். உடலுறுப்பு தானம் செய்வது மிகப்பெரிய பண்புகளில் ஒன்றாகும். ஆதலால், நாங்களும் இதில் பங்குபெற ஆசைப்படுகிறோம்!
மருத்துவமனைகளில் காலியான படுக்கைகள் இல்லாமல் போகலாம் அல்லது நோயாளியின் நிலை கருதி அவரை மருத்துவமனையில் அனுமதிக்க முடியாத சூழ்நிலை ஏற்படலாம். பதட்டப்படாதீர்கள்! நீங்கள் வீட்டில் சிகிச்சை பெற்று வந்தால் கூட, அதற்கான செலவுகளை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்.
பல உடல்நல பிரச்சினைகளுக்கு உடல் பருமன் ஒரு காரணமாக உள்ளது. இதனை நாங்கள் முழுவதுமாக புரிந்துகொள்கிறோம். ஆகவே, உடல் பருமனியல் அறுவை சிகிச்சை செய்வதற்கான மருத்துவ தேவை ஏற்பட்டால் அதற்கான செலவுகளையும் நாங்கள் ஏற்கிறோம். இருப்பினும், இந்த சிகிச்சை அழகு சார்ந்த தேவைகளுக்கு செய்யப்படும்போது, அதற்கான மருத்துவ செலவுகளை நாங்கள் ஏற்க மாட்டோம்.
மனஉளைச்சல் காரணமாக மனநோய் மருவத்துவம் செய்ய ஒருவரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், இந்த பலன்களின் கீழ் 1,00,000 ருபாய் வரை கிடைக்கும். இருப்பினும், ஓபிடி ஆலோசனைகள் இந்த பலன்களின் கீழ் வராது. குறிப்பிட்ட உடல்நலகுறைவுக்கான காத்திருப்பு காலம் சைக்கியாட்ரிக் இல்னஸுக்கான காத்திருப்பு காலம் குறிப்பிட்ட உடல்நலகுறைவுக்கான காத்திருப்பு காலத்திற்கு ஒத்தது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்பும், மருத்துவமனையில் இருக்கும்போதும், அதற்கு பின்னரும் வாக்கிங் எய்டுகள், கிரீப் பேண்டேஜ்கள், பெல்ட்டுகள் போன்ற பல மருத்துவ எய்டுகள் மற்றும் செலவுகளுக்காக அவசியம் ஏற்படலாம். பாலிசியில் சேர்க்கப்படாத இந்த செலவுகளையும் நாங்களே ஏற்றுக்கொள்வோம்.
கோ–பேமெண்ட் |
இல்லை |
ரூம் ரெண்ட் கேப்பிங் |
இல்லை |
கேஷ்லெஸ் மருத்துவமனைகள் |
இந்தியா முழுவதும் 10500+ நெட்வொர்க் மருத்துவமனைகள் |
இன்பில்ட் பர்சனல் ஆக்சிடன்ட் கவர் |
ஆம் |
உடல்நலம் சார்ந்த பெனிஃபிட்கள் |
10+ உடல்நலம் சார்ந்த பார்ட்னர்கள் மூலம் கிடைக்கிறது |
நகரம் சார்ந்த தள்ளுபடி |
10% வரை தள்ளுபடி |
உலகளவு கவரேஜ் |
ஆம்* |
ஆரோக்கியத்தை பராமரிப்பதற்கான தள்ளுபடி |
5% வரை தள்ளுபடி |
கன்ஸ்யூமபிள் கவர் |
ஆட்-ஆன் ஆக உள்ளது |
*வேர்ல்டுவைட் ட்ரீட்மெண்ட் பிளானில் மட்டுமே கிடைக்கும்
மேலே குறிப்பிட்டுள்ளபடி, ஹெல்த் இன்சூரன்ஸில்- கிளைம்களின் போது உங்களுக்கு தேர்வு செய்ய, கேஷ்லெஸ் கிளைம் அல்லது ரீஇம்பர்ஸ்மென்ட் கிளைம் ஆகிய இரண்டு வகையான செயல்முறைகள் இருக்கும். இரண்டுக்கும் இடையிலான முக்கிய வேறுபாடுகளைப் புரிந்துகொள்ளும் வகையிலான அட்டவணை கீழே கொடுக்கப்பட்டுள்ளது!
|
கேஷ்லெஸ் கிளைம் |
ரீஇம்பர்ஸ்மென்ட் கிளைம் |
அப்படியென்றால் என்ன? |
கேஷ்லெஸ் கிளைம் என்றால், நெட்வொர்க் மருத்துவமனையில் சேர்வதில் இருந்து தொடங்கி பில்களை செட்டில் செய்வது வரை உங்கள் ஹெல்த் இன்சூரர் கவனித்துக்கொள்வார். நீங்கள் இதற்கு முன் பணம் எதுவும் செலுத்தத் தேவையில்லை. |
ரீஇம்பர்ஸ்மென்ட் கிளைமில், நீங்கள் முதலில் மருத்துவமனை பில்களை செட்டில் செய்ய வேண்டும். உங்கள் கிளைம் அப்ரூவல் மற்றும் ரீஇம்பர்ஸ்மென்ட்டுக்கு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை எடுத்துக் கொண்ட பின்னர், நீங்கள் உங்கள் மருத்துவ ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். |
கிளைம்களுக்கு முன்னரே நீங்கள் அப்ரூவல் பெற வேண்டுமா? |
உங்கள் கிளைம் முன்கூட்டியே அங்கீகரிக்கப்பட வேண்டும். நீங்கள் சிகிச்சை எடுத்துக் கொள்ள திட்டமிட்டு மருத்துவமனையில் சேர்ந்தால், குறைந்தபட்சம் 72-மணிநேரத்திற்கு முன்பும், மருத்துவ அவசரநிலை ஏற்பட்டால் 24-மணி நேரத்திற்குள்ளும் நீங்கள் எங்களிடம் தெரிவிக்க வேண்டும். |
உங்கள் கிளைம் முன்னரே அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டிய அவசியமில்லை. இருப்பினும், உங்கள் சிகிச்சை இன்சூர் செய்யப்படுமா இல்லையா என்று உங்கள் இன்சூரரிடம் கேட்டு உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். ரீஇம்பர்ஸ்மென்ட் செயல்முறை உங்கள் சிகிச்சைக்குப் பின் தான் தொடங்கப்படும். பொதுவாக, அனைத்து செயல்முறையை முடிக்க 2 முதல் 4 வாரங்கள் வரை ஆகும். |
இது அனைத்து மருத்துவமனைகளிலும் செலுப்படியாகுமா? |
கேஷ்லெஸ் கிளைம் உங்கள் இன்சூரரின் நெட்வொர்க் மருத்துவமனைகளில் மட்டும் தான் செல்லுபடியாகும். |
ரீஇம்பர்ஸ்மென்ட் கிளைம் எல்லா மருத்துவமனைகளிலும் செல்லுபடியாகும். அது நெட்வொர்க் மருத்துவமனைகளில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் கூட எந்த பிரச்சனையும் இருக்காது. |