ஹெல்த் இன்சூரன்ஸ் ஏஜென்டாக மாறுங்கள்

60,000+ பார்ட்னர்கள் டிஜிட் மூலம் 1000 கோடி+ சம்பாதித்துள்ளனர்.
  • {{itemType}}
Please Select the Type
Full Name is required Maximum 150 characters allowed
RM Code is required
  • {{item}}
POSP Code is required
Enter Valid Email Address Please Enter Valid Email ID Email Id Of Digit Employee Is Not Allowed
Pincode is required Please enter 6 digit pincode
Mobile Number is required Enter valid mobile number Mobile Number Of Digit Employee Is Not Allowed
Please Enter IMF Number
Please Enter IRDA Number

I agree to the Terms & Conditions

Please accept terms and conditions

Work

in spare time

Earn

side income

FREE

training by Digit

ஹெல்த் இன்சூரன்ஸ் ஏஜென்ட்/பிஓஎஸ்பி (POSP) என்றால் யார்?

ஹெல்த் இன்சூரன்ஸ் ஏஜென்ட் என்பவர் நம் உடல்நலம் சார்ந்த இன்சூரன்ஸ் திட்டங்களை விற்பனை செய்ய ஒரு இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து பணிபுரியும் ஒருவராவார். நீங்களும் அவர்களில் ஒருவராக இருக்க விரும்பினால், பிறரின் தேவைகளுக்கு இணங்க சரியான பாலிசியைத் தேர்வு செய்ய உதவி புரிய வேண்டும்.  

டிஜிட்-ன் மூலம், தனிநபர்கள் மற்றும் குடும்பங்கள் என எதுவாக இருந்தாலும், அவர்களுக்கு ஏற்றவாறு சீரான உடல் நலத்தை உறுதி செய்யும் வகையிலான தனிப்பயனாக்கப்பட்ட ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டங்களை நீங்கள் விற்கலாம்.

 

ஹெல்த் இன்சூரன்ஸ் என்றால் என்ன?

ஹெல்த் இன்சூரன்ஸ் என்பது ஏதேனும் உடல் நலக் குறைவு அல்லது உடல் நலம் தொடர்பான பிரச்சனை ஏற்படும் போது அதற்கு செலவிடுவதன் மூலம் நேரக்கூடும் நிதி இழப்புகளிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் ஒரு வகையான இன்சூரன்ஸ் ஆகும். இது இன்சூரன்ஸ் செய்யப்பட்ட நபர் நோய்வாய்ப்பட்டிருக்கும் போதோ அல்லது காயமடையும் போதோ அதனை சரி செய்ய ஏற்படும் மருத்துவ ரீதியிலான மற்றும் அறுவை சிகிச்சை செய்வது போன்ற செலவுகளுக்கு ஈடு செய்ய உதவுகிறது.

ஹெல்த் இன்சூரன்ஸ் என்பது ஒரு வளர்ந்து வரும் சந்தையாக இருக்கின்றது. அதாவது, இந்தியாவில் 1.3 பில்லியனுக்கும் அதிகமான சாத்தியமான பயனாளிகள் உள்ளனர். அதோடு, இதில் சுமார் 20% மக்களுக்கு தற்போது இன்சூரன்ஸ் கவர் செய்யப்பட்டுள்ளது. 

*பொறுப்புத்துறப்பு - ஏஜென்ட்டுகளுக்கு குறிப்பிட்ட வகைகள் என்று எதுவும் கிடையாது. நீங்கள் ஒரு ஹெல்த் இன்சூரன்ஸ் ஏஜென்டாக ஆவதற்கு பதிவு செய்திருந்தால், நீங்கள் அனைத்து வகையான ஜெனரல் இன்சூரன்ஸ் திட்டங்களையும் விற்கலாம்.

 

Read More

இந்தியாவின் ஹெல்த் இன்சூரன்ஸ் துறை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்

1
இந்தியாவில் 2018 ஆம் ஆண்டில் இருந்து 24% வளர்ச்சியுடன் அதி விரைவாக வளர்ந்து வருவது ஹெல்த் இன்சூரன்ஸ் ஆகும். (1)
2

இந்திய ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் எஃப்ஒய்’20-ல் (FY/நிதியாண்டில்) (டிசம்பர் 2019 வரை) ரூ.40.17 லட்சம் கோடி பிரீமியம் வருமானத்தை பெற்றுள்ளது. (2

 

3
இந்திய மக்கள் தொகையில் 20%-க்கும் குறைவானவர்களே தற்போது ஹெல்த் இன்சூரன்ஸ் மூலம் பாதுகாக்கப்படுகின்றனர், இதனால் இந்தத் துறை எதிர்காலத்தில் மேன்மேலும் வளர்ச்சியடையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. (3)

ஏன் டிஜிட்-ன் ஹெல்த் இன்சூரன்ஸ் ஏஜென்டாக/POSP ஆக இருக்க வேண்டும்?

நீங்கள் ஏன் ஹெல்த் இன்சூரன்ஸ் ஏஜென்ட் ஆக வேண்டும் என்றும் அதற்கு ஏன் டிஜிட்டை தேர்வு செய்ய வேண்டும் என்றும் அறிந்து கொள்ளுங்கள்

டிஜிட் உடன் நேரடியாக வேலை செய்தல்

எங்கள்பிஓஎஸ்பி (POSP) பார்ட்னராக இருக்கும் பட்சத்தில், நீங்கள் நேரடியாக எங்களுடன் பணிபுரிவீர்கள். அதாவது வேறு எந்த இடைத்தரகர்களும் இதில் ஈடுபடமாட்டார்கள். டிஜிட் தான் இன்று இந்தியாவில் அதி விரைவாக வளர்ந்து வரும் ஒரு ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனமாகும். நாங்கள் தான் 2019 ஆம் ஆண்டின் ஆசியாவின் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவன அவார்டை பெற்ற இளம் நிறுவனம் ஆவோம்.

 

இன்சூரன்ஸ் இப்போது எளிது

இன்சூரன்ஸை எளிமைப்படுத்துதல் சாத்தியம் என்பதை நாங்கள் நம்புவதினால் தான், எங்களது எல்லா ஆவணங்களும் 15 வயது சிறுவர்களால் கூட புரிந்துகொள்ளும் அளவிற்கு எளிமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

வலுவான பேக்கெண்ட் சப்போர்ட்

தொழில்நுட்பத்தின் உதவியோடு, நாங்கள் உங்களுக்கு பிரத்யேகமான சேவை குழுவை வழங்குவது மட்டுமின்றி 24x7 மணி நேரமும் விற்பனை செய்ய அனுமதிக்கும் வகையிலான மேம்படுத்தப்பட்ட வெப் மட்டும்  மொபைல் ஆப்பையும் வழங்குகிறோம்.

பேஸ்புக்கில் 4.8 ரேட்டிங்

எங்கள் வாடிக்கையாளர்களை திருப்தியடையச் செய்ததினால் தான், மற்ற இன்சூரன்ஸ் நிறுவனங்களை விட பேஸ்புக்கில் மிக உயர்ந்த ரேட்டிங்கான 4.8/5 மதிப்பீட்டை பெற்றுள்ளோம் என்று நாங்கள் நம்புகிறோம்.

மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட பாலிசிகள்

எங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் திடங்கள் யாவும் ஏஐஐஎம்-ன் (AIIM) முன்னாள் இயக்குனரான டாக்டர்.எம்.சி.மிஷ்ராவின் உதவியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன.

உயர்ந்த கிளைம் செட்டில்மெண்ட் ரேஷியோ

தனியார் கார்களுக்கு எங்களிடம் உயர்ந்த கிளைம் செட்டில்மெண்ட் ரேஷியோ இருக்கிறது, அதோடு நாங்கள் ஹெல்த் தொடர்பான 93% கிளைம்களை செட்டில் செய்துள்ளோம்.

கேஷ்லெஸ் கிளைம்ஸ்

எங்களிடம் 5900+ மேற்பட்ட நெட்வொர்க் மருத்துவமனைகள் இருக்கின்றன, அங்கு எங்கள் வாடிக்கையாளர்கள் கேஷ்லெஸ் கிளைம்களுக்கான வசதியைப் பெறலாம். இதன் பொருள் என்னவென்றால், கிளைம் தொடங்கிய பிறகு, அவர்கள் கவலையின்றி சிகிச்சையைத் தொடரலாம்!

பேப்பர்லெஸ் செயல்முறை

கிளைமை பதிவு செய்வதிலிருந்து பாலிசியை வழங்குவது வரை எங்கள் செயல்முறை முற்றிலும் ஆன்லைன் சார்ந்ததாகும். இதற்கு எந்த பேப்பர்வொர்க்கும் தேவையில்லை. இதற்கு உங்களுக்கு தேவையானதெல்லாம் ஸ்மார்ட்போன்/கம்பியூட்டர் மற்றும் இணைய இணைப்பு மட்டுமே. எனவே, நீங்கள் இப்போது வீட்டில் இருந்து  அல்லது வேறு எங்கிருந்து வேண்டுமானாலும் எளிதில் இதனை செய்து விடலாம்!  

 

விரைவான கமிஷன் செட்டில்மெண்ட்

கவலைப்படாதீர்கள், உங்களுக்கு பக்க பலமாக நாங்கள் இருக்கிறோம்! பாலிசி வழங்கப்பட்ட 15 நாட்களில் உங்கள் அக்கவுண்ட்டில் கமிஷன் செலுத்தப்படும்.

ஒரு ஹெல்த் இன்சூரன்ஸ் ஏஜென்ட்/பிஓஎஸ்பி (POSP) ஆக ஆவது எப்படி?

டிஜிட்-ல் ஹெல்த் இன்சூரன்ஸ் ஏஜென்ட்/பிஓஎஸ்பி (POSP) ஆக மாறுவது எப்படி?

படி 1

மேலே கொடுக்கப்பட்டுள்ள எங்கள் பிஓஎஸ்பி (POSP) படிவத்தை பூர்த்தி செய்வதன் மூலம் பதிவு செய்யவும். பின்னர், அனைத்து விவரங்களையும் நிரப்பி தேவையான ஆவணங்களை பதிவேற்றவும்

படி 2

நாங்கள் வழங்கும் உங்கள் 15-மணிநேர பயிற்சியை நிறைவு செய்யுங்கள்.

படி 3

பரிந்துரைக்கப்பட்டத் தேர்வை முடிக்கவும்

படி 4

எங்களுடன் ஒப்பந்தத்தை கையொப்பமிடுங்கள் அவ்வளவுதான்! நீங்கள் பிஓஎஸ்பி (POSP) ஆக சான்றளிக்கப்படுவீர்கள்.

உங்களால் எவ்வளவு சம்பாதிக்க முடியும்?

ரு ஹெல்த் இன்சூரன்ஸ் ஏஜென்டாக உங்கள் வருமானம் நீங்கள் விற்கும் பாலிசிகளின் எண்ணிக்கையைப் பொறுத்து அமைகிறது. இது அதிக வருமானம் ஈட்டுவதற்கான ஒரு பெரிய வாய்ப்பாகும். ஏனெனில், மருத்துவ சிகிச்சைகளுக்கான செலவு படிப்படியாக அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இன்றைய காலக்கட்டத்தில் மருத்துவ சிகிச்சைப் பெற மக்கள் அதிக பணம் செலவழிக்க வேண்டியிருக்கும், எனவே, அவர்கள் தங்களையும் தங்களின் குடும்பத்தினரையும் இத்தகைய அதிக செலவுகளிலிருந்து பாதுகாக்க ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டங்களை வாங்க விரும்புகிறார்கள். ஒரு இன்சூரன்ஸ் ஏஜென்டாக  நீங்கள் எவ்வளவு சம்பாதிக்க முடியும் என்பது பற்றிய ஒரு யோசனையைப் பெற கீழே உள்ள கமிஷன் தொடர்பான அமைப்பைப் பாருங்கள்:

மாதந்திர நெட் பிரீமியம்

Monthly net premium மாதந்திர நெட் பிரீமியம் Commission & *Reward as % of net premium கமிஷன் & *நெட் பிரீமியத்தில் பெறக்கூடிய ரிவார்ட் %

ஆரோக்கியா சஞ்சீவனி

<25ஆயிரம்

1 வருடம் - 25% | 2 வருடங்கள் - 23% | 3 வருடங்கள் - 22%

15%

>=25ஆயிரம் & <50ஆயிரம்

1 வருடம் - 28% | 2 வருடங்கள் - 26% | 3 வருடங்கள்- 25%

15%

>50ஆயிரம் & <1லட்சம்

1 வருடம் - 30% | 2வருடங்கள் - 28% | 3 வருடங்கள்- 26%

15%

>=1லட்சம்

1 வருடம் - 35% | 2 வருடங்கள் - 30% | 3 வருடங்கள் - 28%

15%

நிபந்தனைகள்: ·      

  • இரண்டு மாதத்திற்கு ஒரு முறை பேமெண்ட் செய்யப்படும்      

  • மாதத்தை தீர்மானிப்பதற்கு, பாலிசி வழங்கப்பட்ட தேதி கருத்தில் கொள்ளப்படும்  

  • தனித்தனியாக ஒவ்வொரு ஸ்லாபுக்கும் பணம் கருத்தில் கொள்ளப்படும்.   

  • * விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பொருந்தும், ரெகுலேஷனில் குறிப்பிட்டுள்ளபடி அதிகபட்ச வரம்பிற்கு உட்பட்டு இருக்கும்.

  • நெட் பிரீமியம் என்றால் ஜிஎஸ்டி (GST) அல்லாத பிரீமியம்.

நான் ஏன் ஹெல்த் இன்சூரன்ஸ் ஏஜென்டாக மாற வேண்டும்?

நீங்களே உங்களுக்கு முதலாளி

பிஓஎஸ்பி (POSP) ஆக இருப்பதன் முதன்மையான நன்மைகளில் ஒன்று உங்கள் வசதிக்கேற்ப வேலை செய்வதற்கான சுதந்திரம் இருப்பதேயாகும். ஆம், இனி நீங்கள் தான் உங்களுக்கு முதலாளி!

நேர வரம்புகள் இனி இல்லை!

நீங்கள் இனி முழு நேரமாகவோ அல்லது பகுதி நேரமாகவோ (பார்ட்-டைம் ஆகவோ) உங்கள் விருப்பத்திற்கேற்ப வேலை செய்யலாம். அதற்கேற்ப உங்கள் சொந்த வேலைக்கான நேரத்தை வடிவமைத்துக்கொள்ளலாம்.

 

வீட்டிலிருந்தப்படியே வேலை (ஒர்க் ஃபிரம் ஹோம்)

டிஜிட் இன்சூரன்ஸில், நாங்கள் முதன்மையாக இன்சூரன்ஸ் பாலிசிகளை ஆன்லைனில் விற்கிறோம். இதன் பொருள், நீங்கள் ஒரு பிஓஎஸ்பி (POSP) ஆக வீட்டில் இருந்து வேலை செய்யலாம் மற்றும் எங்கள் ஆன்லைன் செயல்முறைகளைப் பயன்படுத்தி பாலிசிகளை எளிதில் விற்கவும் வழங்கவும் முடியும்.

15 மணி நேர பயிற்சி

பிஓஎஸ்பி--யாக(POSP) சான்றளிக்கப் பெற, ஐஆர்டிஏ (IRDA) வழங்கும் 15 மணி நேர கட்டாயப் பயிற்சியை நிறைவு செய்வது முக்கிய அளவுகோல்களில் ஒன்றாகும்; உண்மையைச் சொன்னால், இது அவ்வளவு ஒன்றும் கடினமானது இல்லை! இதற்கு தேவையானதெல்லாம் நீங்கள் பணியைத் துவங்க முதலீடு செய்யும் அந்த 15 மணி நேரம் மட்டுமே! 

 

அதிக வருவாய் ஈட்டும் திறன்

உங்கள் வருவாய் நீங்கள் வேலை செய்த நேரத்தின் அளவைப் பொறுத்தது அல்ல, நீங்கள் வழங்கும் பாலிசிகளின் எண்ணிக்கையைப் பொறுத்தது ஆகும். அதைப்பற்றிய ஒரு நல்ல புரிதலுக்கு, எங்கள் வருமானத்திற்கான கால்குலேட்டரை பாருங்கள், மேலும், நீங்கள் விற்கும் ஒவ்வொரு பாலிசியிலும் எவ்வளவு சம்பாதிக்க முடியும் என்பதைப் பார்க்கவும்.

முதலீடு எதுவும் இல்லை (ஜீரோ இன்வெஸ்மென்ட்)

ஒரு ஸ்மார்ட்போன், ஒரு சிறந்த இன்டெர்னட் இணைப்பு, மற்றும் 15 மணி நேர பயிற்சியைத் தவிர, நீங்கள் ஒரு பிஓஎஸ்பி (POSP) ஆவதற்கு வேறு எதுவும் தேவையில்லை. எனவே, உங்கள் தரப்பிலிருந்து எந்த பண முதலீடும் தேவையில்லை, அதே நேரத்தில் சம்பாதிக்கும் வாய்ப்பும் இதில் அதிகமாக உள்ளது.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்