பில்டிங் இன்சூரன்ஸ் என்றால் என்ன?
பில்டிங் இன்சூரன்ஸ் என்பது தீ விபத்து, கொள்ளைச் சம்பவங்கள், இயற்கை பேரழிவுகள் மற்றும் இது போன்ற பிற அபாயங்கள் போன்ற எதிர்பாராத சூழ்நிலைகளில் உங்கள் பில்டிங்-ஐ பாதுகாக்க உதவும் தனிப்பயனாக்கப்பட்ட இன்சூரன்ஸ் பாலிசியாகும். நீங்கள் கமர்ஷியல் பில்டிங் அல்லது உங்கள் ரெசிடென்ஷியல் அபார்ட்மெண்ட் என எதுவாக இருந்தாலும், அதனை பாதுகாப்பதற்கு பில்டிங் இன்சூரன்ஸை பயன்படுத்தலாம்.
பில்டிங் இன்சூரன்ஸ் ஏன் முக்கியமானது என்பது பற்றி உறுதியாக தெரியவில்லையா?
மேற்கொண்டு படிக்கவும்..
இந்தியாவில், 2,44,119 கொள்ளை, களவு, வழிப்பறி போன்ற சம்பவங்கள் குடியிருப்பு வளாகங்களில் பதிவாகியுள்ளன. (1)
இந்தியாவில் 64% மக்கள் வீடு சார்ந்த பாதுகாப்பு பிரச்சினைகளைக் கையாளத் தயாராக இல்லை. (2)
தொடர்ந்து தொழில் செய்வதில் சிக்கலைகளை ஏற்படுத்துவதில் தீ விபத்துகள் 3வது பெரிய ஆபத்தாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. (3)
இந்தியாவில் நடைபெறும் 70% திருட்டுகள் வீடுகளில் நடைபெறும் திருட்டுகள் ஆகும். (4)
டிஜிட்-ன் பில்டிங் இன்சூரன்ஸின் சிறப்பு என்ன?
பணத்திற்கான மதிப்பு : பில்டிங்கிற்கு காப்புறுதி எடுப்பது பெருஞ்செலவு பிடிக்கிற விஷயமாக தோன்றும். ஆனால், எங்கள் இன்சூரன்ஸ் முழுக்க ஆன்லைனில், டிஜிட்டல் முறையில் செய்யப்படுவதால், விலை குறைவானதுஎ. னவே, பிரீமியமும் குறைவாகவே இருக்கும், மற்ற இன்சூரன்ஸ்களை விடவும் இது கட்டுப்படியாகும் விலையில் கிடைக்கப்பெறும்.
டிஜிட்டல் மயமானது : இந்தியாவின் முதல் ஆன்லைன் இன்சூரன்ஸ் நிறுவனங்களில் ஒன்றான எங்களின் பெரும்பாலான ப்ராஸஸ்களை, பில்டிங் இன்சூரன்ஸ் வாங்குவதிலிருந்து கிளைம் செய்வது வரை, எல்லாவற்றையும் ஆன்லைனிலேயே செய்து கொள்ளலாம்! எனவே கிளைம் செய்வதற்கு ஆய்வு செய்ய வேண்டி வரும் போது, நீங்கள் அதனை ஆன்லைனிலேயே செய்து கொள்ளலாம். எனினும், ரூ.1 இலட்சத்திற்கு மேற்பட்ட கிளைம்களுக்கு, இந்தியக் காப்பீடு ஒழுங்காற்று மற்றும் வளர்ச்சி முகமையின் கூற்றுப்படி (ஐஆர்டிஏஐ/IRDAI), நேரடியாக வந்து தான் ஆய்வு செய்ய வேண்டும்.
எல்லா வகை பிசினஸ்களுக்கும் காப்புறுதி அளிக்கிறது : உங்கள் அலுவலக பில்டிங்கோ அல்லது சில்லரை வர்த்தக கடைகளோ, எதுவாக இருப்பினும், பெரியதோ அல்லது சிறியதோ, எல்லா வகையான பிசினஸ்களுக்கும் நாங்கள் காப்புறுதி வழங்குகிறோம்.
வாடகைக்கு குடியிருப்பவர்களுக்கான பிளான்கள் : இன்றைய தலைமுறையினர் சொந்தமாக வாங்குவதை விடவும், வாடகைக்கு எடுத்துக் கொள்ளவே விரும்புகிறார்கள். அதனால் தான் முழுமையான பில்டிங் இன்சூரன்ஸ் பிளான் என்பது அவர்களுக்கு ஏற்றதாக இருக்காது. ஆகவே தான் வாடகைக்கு குடியிருக்கும் அபார்ட்மெண்ட்களில் தங்களுக்கு சொந்தமான பொருட்களுக்கு மட்டும் காப்புறுதி வழங்குகின்ற வகையில் தனிப்பயனாக்கப்பட்ட பில்டிங் இன்சூரன்ஸ் பிளான்களை நாங்கள் உருவாக்கியுள்ளோம்.
டிஜிட்-இன் பில்டிங் இன்சூரன்ஸில் எதற்கெல்லாம் காப்புறுதி வழங்கப்படுகிறது?
பில்டிங் இன்சூரன்ஸ் பிளான்களின் வகைகள்
டிஜிட்டில் உள்ள எங்கள் இன்சூரன்ஸ் ஆனது வெள்ளம் மற்றும் நிலநடுக்கம் போன்ற இயற்கை சீற்றங்களில் இருந்து உங்கள் பில்டிங்கை எங்களது கோ டிஜிட், பாரத் லகு உத்யம் சுரக்ஷா, கோ டிஜிட், பாரத் சூக்ஷ்மா உத்யம் சுரக்ஷா மற்றும் கோ டிஜிட், பாரத் க்ரிஹா ரக்ஷா பாலிசிகள் மூலமாக பாதுகாக்கிறது. எனினும், பில்டிங்களில் களவு நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதால், களவுகளுக்காகவே நாங்கள் டிஜிட் பர்க்லரி இன்சூரன்ஸ் பாலிசியைக் கொண்டுள்ளோம். இதன் மூலம், உங்கள் பில்டிங்கானது தீ விபத்துகள் மற்றும் இயற்கை சீற்றங்களில் இருந்து பாதுகாக்கப்படுவது மட்டும் இல்லாமல், களவுகளுக்கும் காப்புறுதி வழங்குகிறது. இதனை உங்களுக்கு எளிதாக்க, இருக்கக்கூடிய கவரேஜ் ஆப்ஷன்களை கீழ்கண்டவாறு வேறுபடுத்தி உள்ளோம்:
ஆப்ஷன் 1 | ஆப்ஷன் 2 | ஆப்ஷன் 3 |
உங்கள் வீடு மற்றும் தொழில் சார்ந்த பொருட்களுக்கு மட்டும் காப்புறுதி வழங்குகிறது. | உங்கள் வீடு மற்றும் தொழில் சார்ந்த பொருட்கள் மற்றும் பில்டிங் ஆகிய இரண்டிற்கும் காப்புறுதி வழங்குகிறது | உங்கள் பில்டிங்கிற்கு மட்டும் காப்புறுதி வழங்குகிறது. |
நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது
- கண்டன்ட் - பில்டிங் இன்சூரன்ஸில் உள்ள ‘கண்டன்ட்’ என்பது எதைக் குறிக்கும் என்று நீங்கள் குழம்பி இருந்தால், உங்கள் வளாகத்தில் நிரந்தரமாக வைக்கப்படாத அல்லது பொருத்தப்படாத பொருட்களை இது குறிக்கிறது. உதாரணமாக, உங்கள் வீட்டில் களவு ஏற்பட்டு, அதன்போது உங்கள் லேப்டாப் திருடப்பட்டு இருந்தால்; உங்கள் பில்டிங் இன்சூரன்ஸ் கண்டன்ட்களுக்கு காப்புறுதி வழங்கும், அதாவது உங்கள் லேப்டாப்பிற்கும் காப்புறுதி வழங்கப்படும்.
பில்டிங்/அமைப்பு - உங்கள் பில்டிங் இன்சூரன்ஸில் உள்ள ‘பில்டிங்’ அல்லது ‘அமைப்பு’ என்பது நீங்கள் இன்சூர் செய்திருக்கும் ஒட்டுமொத்த ப்ராபர்டியையும் குறிக்கிறது. உதாரணத்திற்கு, உங்கள் குடும்பத்தின் தனித்த பில்டிங்கினை நீங்கள் பாதுகாக்க விரும்பினால், இங்கு காப்புறுதி அளிக்கப்பட்டிருக்கும் ‘பில்டிங்/கட்டிடம்’ என்பது உங்கள் ஒட்டுமொத்த பில்டிங்கையும் குறிக்கிறது.
நாங்கள் வழங்கும் பில்டிங் இன்சூரன்ஸ்கள்
பில்டிங் இன்சூரன்ஸ் யாருக்கு தேவைப்படும்?
நீங்கள் பல வருடங்களாக வாழும் வீடாக இருப்பினும், அல்லது உங்கள் புத்தம் புதிய கனவு இல்லமாக இருப்பினும், வீடு என்பது அனைவருக்குமே மிகவும் விலைமதிப்பற்ற சொத்தாக கருதப்படுகிறது. எனவே, உங்கள் கட்டுப்பாட்டிற்கு மீறிய சூழ்நிலைகளில் அதற்கு பாதுகாப்பளிப்பது தான் குறைந்தபட்சம் உங்கள் கையிருப்பையும், வீட்டினையும் பாதுகாப்பதற்கு நீங்கள் செய்யக் கூடியதாகும்.
பொதுவாகவே, பில்டிங் இன்சூரன்ஸ் என்பது சொந்தமாக சொத்துக்களை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே என்ற கருத்து இருக்கிறது. ஆனால், டிஜிட்-இல், வீடுகளை வாடகைக்கு எடுத்திருப்பவர்கள் அல்லது தங்களின் பிசினஸிற்காக அலுவலகங்களை வாடகைக்கு எடுத்திருப்பவர்களுக்கு கூட நாங்கள் தனிப்பயனாக்கப்பட்ட பில்டிங் இன்சூரன்ஸ் பாலிசிக்களை வழங்குகிறோம். எனவே, நீங்கள் இந்த வகையை சேர்ந்தவராக இருந்தால், பில்டிங் இன்சூரன்ஸ் உங்களுக்காகவும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது!
நீங்கள் சிறிய பல்பொருள் அங்காடி அல்லது நவநாகரீக பொருட்களும், கைவினை பொருட்களும் அடங்கிய சிறிய புட்டிக்-ஐ வைத்திருந்தால் கூட, டிஜிட்-ன் பில்டிங் இன்சூரன்ஸ் எல்லா வகையான பிசினஸுக்கும் ஏற்றது. நீங்கள் சுயமாக, சிறிய பிசினஸை நடத்துகிறீர்கள் என்றாலும், இயற்கை பேரிடர்கள் மற்றும் கொள்ளைச் சம்பவம் போன்ற உங்கள் கட்டுப்பாட்டினை மீறிய சூழ்நிலைகளில் நிகழக்கூடிய அபாயங்கள் மற்றும் இழப்புகளிலிருந்து பில்டிங் இன்சூரன்ஸ் உங்கள் பிசினஸை பாதுகாக்கிறது.
நீங்கள் ஜெனரல் ஸ்டோர்கள், ரெஸ்டாரண்டுகள் அல்லது நடுத்தர அளவிலான நிறுவனங்களின் தொகுப்பினை நடத்தி வரும் பட்சத்தில்; தீ, வெடிப்பு அல்லது வெள்ளம், புயல் மற்றும் பூகம்பங்கள் போன்ற இயற்கை சீற்றங்களால் ஏற்படக்கூடிய சேதங்கள் மற்றும் இழப்புகளுக்கு காப்புறுதி வழங்க நடுத்தர அளவிலான தொழில் செய்யும் உரிமையாளர்களுக்கும் பில்டிங் இன்சூரன்ஸ் பொருத்தமானதாக அமைகிறது.
நீங்கள் பெரிய அளவில் பிசினஸ் செய்பவராக இருந்து பல பில்டிங்குகளுக்கு சொந்தகாரராக இருக்கும் பட்சத்தில், பில்டிங் இன்சூரன்ஸ் உங்கள் அனைத்து பில்டிங்குகளையும் பாதுகாப்பதற்கு அவசியமாகும். இது பிசினஸில் ஏற்படக் கூடிய அபாயங்களை குறைக்க உதவுவது மட்டுமின்றி, பொறுப்பான முறையில் உங்கள் நிறுவனத்தை நடத்துவதின் காரணமாக உங்கள் மீதான நல்லெண்ணத்தையும் பெருக்குகிறது.
காப்புறுதி வழங்கப்பெறும் ஹோம் ப்ராபர்டிக்களின் வகைகள்
நீங்கள் ஹவுசிங் சொஸைட்டி அல்லது தனித்த பில்டிங்-ஐ சேர்ந்த தனிப்பட்ட ஃப்ளாட்-ஐ சொந்தமாக வைத்திருந்தாலும் அல்லது வாடகைக்கு குடியிருப்பவராக இருந்தாலும் சரி, எங்கள் தனிப்பயனாக்கப்பட்ட பிளான்கள் உங்களுக்கு நன்றாகவே பொருந்தும்.
ஒரு வேளை நீங்களும், உங்கள் குடும்பமும், ஒரு தனித்த பில்டிங்-ல் வசிக்கலாம், ஒட்டுமொத்த பில்டிங்-கிலும் உள்ள ஃப்ளாட்களை சொந்தமாகவோ அல்லது வாடகைக்கோ வைத்திருக்கலாம். டிஜிட்-ன் பில்டிங் இன்சூரன்ஸ் மூலம் அவை அனைத்திற்குமே நீங்கள் காப்புறுதிப் பாதுகாப்பளிக்கலாம்.
நீங்கள் தனி வீட்டை வாடகைக்கு எடுத்து வசித்து வந்தால், உங்கள் வீடு மற்றும் அதில் உள்ள உடைமைகளை வெள்ளம், புயல் மற்றும் பிற எதிர்பாராத நிகழ்வுகளில் இருந்து பாதுகாக்கவும் பில்டிங் இன்சூரன்ஸ் பொருந்தும்.
கடைகள் மற்றும் பிசினஸ் ப்ராபர்டிக்களின் வகைகள்
முதன்மையாக மொபைல் ஃபோன்கள், மொபைல் பாகங்கள் அல்லது பிற எலக்ட்ரானிக் பொருட்களை விற்பனை செய்யும் வணிகங்கள். குரோமா, ஒன்பிளஸ், ரெட்மி போன்ற கடைகள் இது போன்ற கட்டிடங்களுக்கு நல்லதொரு எடுத்துக்காட்டுகள். அத்தகைய சூழ்நிலையில், ஒரு பில்டிங் இன்சூரன்ஸ் என்பது கடையையும் அதிலுள்ள முதன்மை உடைமைகளையும் ஏதேனும் இழப்புகள் மற்றும் சேதங்களிலிருந்து பாதுகாக்க உதவும்.
அருகிலுள்ள மளிகை கடைகள் முதல் உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற சூப்பர்மார்க்கெட்களும் மற்றும் பல்பொருள் அங்காடிகளும்; அனைத்து மளிகை கடைகளுக்கும், பல்பொருள் அங்காடிகளுக்கும் கூட பில்டிங் இன்சூரன்ஸில் காப்புறுதி பாதுகாப்பளிக்கப்படுகிறது. பிக் பசார், ஸ்டார் பசார் மற்றும் ரிலையன்ஸ் சூப்பர்மார்க்கெட் போன்ற கடைகள் இதற்கான சில உதாரணங்களாகும்.
இது அலுவலக வளாகங்கள் மற்றும் கல்லூரிகள், பள்ளிக்கூடங்கள் மற்றும் கோச்சிங் கிளாஸ்கள் போன்ற கல்வி நிறுவனங்களுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. இது போன்ற ப்ராபர்டியை இன்சூர் செய்வது இழப்புகளிலிருந்து உங்களை பாதுகாப்பதற்கு முக்கியமானது மட்டுமின்றி, உங்கள் ஊழியர்கள் அல்லது மாணவர்களுக்கு உங்கள் கல்வி நிறுவனத்தின் மீது அதிக நம்பிக்கையை அளிக்கும்.
உங்களுக்கு விருப்பமான மால்கள் மற்றும் துணிக்கடைகளிலிருந்து, ஸ்பாக்கள், ஜிம்கள் மற்றும் பிற கடைகள்; பர்சனல் லைஃப்ஸ்டைல் மற்றும் ஃபிட்னஸ் துறையில் உள்ள அனைத்து பிசினஸ்களுக்கும் கூட டிஜிட்-ன் பில்டிங் இன்சூரன்ஸ் காப்புறுதி அளிக்கிறது. என்ரிச் சாலோன்கள், கல்ட் ஃபிட்னஸ் சென்டர்கள், ஃபீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி போன்றவை இது போன்ற ப்ராபர்டிக்களுக்கு சில உதாரணங்கள்.
ஆம், அனைவரும் உணவருந்தும் ஒரு இடம்! காஃபி ஷாப்கள் மற்றும் ஃபுட் ட்ரக்-களிலிருந்து உணவகங்கள் மற்றும் பேக்கரிக்கள் வரை; உணவருந்தும் அனைத்து விதமான இடங்களுக்கும் கூட டிஜிட்-ன் பில்டிங் இன்சூரன்ஸ் பொருந்தக் கூடியது.
பாதுகாக்கப்பட வேண்டிய மிக முக்கியமான ப்ராபர்டிக்களுள் ஒன்று; பில்டிங் இன்சூரன்ஸ் மருத்துவமனைகள், கிளினிக், நோய் கண்டறியும் மையங்கள் மற்றும் மருந்துக் கடைகள் மற்றும் பிற மெடிக்கல் ஸ்டோர்கள் ஆகியவற்றுக்கும் காப்புறுதி அளிக்கிறது.
கார்பென்ட்ரி (தச்சு வேலை) மற்றும் பிளம்பிங் ரிப்பேர்கள் (குழாய் பழுது நீக்குவது) முதல் மோட்டார் கேரேஜ்கள் மற்றும் என்ஜினியரிங் வொர்க் ஷாப்கள் வரையிலான அனைத்து பிசினஸ்களுக்கும் இது காப்புறுதி வழங்குகிறது.
மேற்குறிப்பிட்ட வகைகள் மட்டுமின்றி, டிஜிட்-இன் பில்டிங் இன்சூரன்ஸ் எல்லா அளவுகள் மற்றும் இயல்புகளிலான பிசினஸ்களுக்கும் ஏற்றது. உங்களுடைய பிசினஸ் வகையை இந்த பட்டியலில் கண்டுகொள்ள முடியவில்லையென்றால், உங்கள் வீடு அல்லது பிசினஸிற்கு பொருந்துகிற படியான சிறப்பான பில்டிங் இன்சூரன்ஸை தேர்வு செய்வதற்கு நாங்கள் உதவுவோம்.
பில்டிங் இன்சூரன்ஸ் பற்றி மேலும் தெரிந்து கொள்ளவும்
பில்டிங் இன்சூரன்ஸ் பிரீமியம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
உங்கள் பில்டிங் இன்சூரன்ஸ் பிரீமியம் கீழ்க்கண்ட காரணிகளால் பாதிக்கப்படுகிறது:
- பில்டிங் வகை : உங்கள் பில்டிங் இன்சூரன்ஸ் பிரீமியத்தின் மீது நீங்கள் இன்சூர் செய்கின்ற பில்டிங் வகையின் நேரடியான தாக்கம் இருக்கும். உதாரணத்திற்கு, ஒரு பல்பொருள் அங்காடியை விடவும் ஒரு தொழிற்சாலையின் ப்ரீமியம் அதிகமாக இருக்கும், இது இன்சூர் செய்கின்ற ப்ராபர்டியின் இயல்பினில் உள்ள வேறுபாட்டின் காரணமாக ஏற்படுகிறது.
- பில்டிங்-கின் வயது : எந்தவொரு இன்சூரன்ஸ் பாலிசியையும் போலவே, பிரீமியம் விலையை தீர்மானிப்பதில் வயது முக்கிய பங்கு வகிக்கிறது. பில்டிங் பழையதாக இருக்கும் போது அதன் பிரீமியம் குறைவாகவும், புதிதாக இருக்கும் போது அதன் பிரீமியம் அதிகமாகவும் இருக்கும்.
- ப்ராபர்டியின் பரப்பளவு : இன்சூர் செய்ய வேண்டிய பில்டிங்கின் பரப்பளவு பில்டிங் பிரீமியத்தின் மீது நேரடியான, பெரிய அளவு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஏனென்றால், பெரிய ப்ராபர்டி எனும் போது அதிக தொகைக்கு இன்சூர் செய்யப்படும், எனவே பில்டிங் இன்சூரன்ஸ் பிரீமியமும் அதிகமாகவே இருக்கும்.
- பாதுகாப்பு நடவடிக்கைகள்: இன்றைய காலகட்டத்தில் பல வீடுகள் மற்றும் வணிகங்கள் தங்கள் வீடுகளையும் கடைகளையும் தீ போன்ற அபாயங்களிலிருந்து பாதுகாக்க பல விதமான பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தேர்வு செய்கின்றனர். எனவே, உங்கள் வீடு அல்லது கடையும் இது போன்ற அபாயத்தில் இருந்தால், உங்கள் ஆபத்து மற்றும் அதனால் நீங்கள் செலுத்து பில்டிங் இன்சூரன்ஸிற்கான பிரீமியமும் குறைவாக இருக்கும்
- கூடுதல் கவரேஜ்கள்: ஒரு பில்டிங் இன்சூரன்ஸ் என்பது குறிப்பாக கட்டிடம் மற்றும் அதன் உடைமைகளை பாதுகாக்கும் அதே சமயம், ஒரு கடையிலோ அல்லது வீட்டிலோ வைத்திருக்கும் நகைகளுக்கு நிகழும் தற்செயலான சேதங்களுக்கும் காப்புறுதி அளிக்கிறது. இதனைப் பெறுவதற்கு நீங்கள் கூடுதல் கவரேஜை வழங்கும் ஆட்-ஆன்களைத் தேர்வு செய்யலாம் மற்றும் உங்கள் பில்டிங் இன்சூரன்ஸிற்கான பிரீமியம் அதிகரிக்கும்.
பில்டிங் இன்சூரன்ஸ் பிளான்களை ஒப்பிடுவதற்கான ஆலோசனைகள்
சரியான பில்டிங் இன்சூரன்ஸ் பிளானை தேர்வு செய்வது பலருக்கு சிக்கலாகவே இருக்கும். ஏனெனில், இது உங்களுடைய அழகிய வீடு அல்லது உங்கள் பிரியமான பிசினஸை பாதுகாப்பதற்கு நீங்கள் மேற்கொள்ளும் ஒரு முடிவு! நீங்கள் எளிதாக முடிவு செய்வதற்கு வசதியாக, நீங்கள் ஒப்பிட்டு பார்த்து, சிந்திக்க வேண்டிய மூன்று முக்கியமான விஷயங்கள் குறித்த எங்களுடைய பரிந்துரைகள் இதோ:
- காப்புறுதியின் நன்மைகள் : உங்கள் இன்சூரன்ஸில் உங்களுக்குக் கிடைக்கப்பெறும் காப்புறுதிப் பாதுகாப்பு தான் மிக முக்கியமாகும். கெடுவாய்ப்பான நிகழ்வின் போது உங்களுக்கு என்ன மாதிரியான காப்புறுதிப் பாதுகாப்பு வழங்கப்படுமென்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். எனவே, உங்களுக்கு ஏற்ற சரியான பிளானை பற்றித் தெரிந்து கொள்வதற்கு, எப்போதுமே எதற்கெல்லாம் காப்புறுதி வழங்கப்படுகிறது, எதற்கெல்லாம் வழங்கப்படவில்லை என்பதை கவனிக்கவும்.
- இன்சூர் செய்யப்படும் தொகை : உங்கள் பில்டிங் இன்சூரன்ஸில் இன்சூர் செய்யப்படும் தொகை என்பது நீங்கள் கிளைம் செய்யும் வேளையில் உங்களுக்கு இழப்பீடாக வழங்கப்பெறும் முழுத் தொகையை குறிக்கிறது. எனவே, நீங்கள் தேர்வு செய்ய விரும்பும் தொகையை குறித்து மிக கவனமாக இருக்கவும். ஏனென்றால் இது உங்கள் பில்டிங் இன்சூரன்ஸ் பிரீமியத்தை மட்டுமின்றி, சேதங்களும், இழப்புகளும் ஏற்படும் சூழ்நிலையில் நீங்கள் பெற போகும் கிளைம் தொகையையும் இது பாதிக்கும்!
- கிடைக்கப்பெறும் ஆட்-ஆன்கள் : சில நேரங்களில், அடிப்படையான பிளானில் இருக்கும் பெனிஃபிட்களையும் தாண்டி உங்களுக்கு காப்புறுதி தேவைப்படும். இங்கு தான் ஆட்-ஆன்கள் உதவி புரியும். வெவ்வேறு இன்சூரன்ஸ் வழங்குநர்கள் வெவ்வேறு விதமான ஆட்-ஆன்களை தேர்வு செய்து கொள்ளும் வாய்ப்பினை மக்களுக்கு வழங்குகிறார்கள். உங்கள் விருப்பத் தேர்வுகளை ஒப்பிட்டுப் பார்த்து, உங்களுக்கும், உங்கள் பில்டிங்கிற்கும் ஏற்ற ஒன்றை தேர்வு செய்யவும்!
சரியான பில்டிங் இன்சூரன்ஸ் பிளானை எப்படி தேர்வு செய்வது?
சரியான பில்டிங் இன்சூரன்ஸ் பிளானை தேர்வு செய்வதற்கு, எல்லா வாய்ப்புகளையும் ஒப்பிட்டு ஆய்வு செய்து பார்த்து, அதற்கேற்றாற் போல் முடிவெடுப்பது தான் சிறந்த வழியாகும். உங்களின் மிக முக்கியமான உடைமையினை பாதுகாப்பதற்கு தேர்வு செய்யும் முன்னர், உங்கள் காப்புறுதியின் நன்மைகள், இன்சூர் செய்யப்படும் தொகை, கிடைக்கப்பெறும் ஆட்-ஆன்கள், பில்டிங் இன்சூரன்ஸ் பிரீமியம், வாடிக்கையாளர் சேவை போன்ற அனைத்து அம்சங்களையும் பார்க்கவும்.
பில்டிங் இன்சூரன்ஸிற்கான சரியான இன்சூரன்ஸ் தொகையை எப்படி தேர்வு செய்வது?
இன்சூர் செய்யப்படும் தொகை என்பது உங்கள் ப்ராபர்டியின் மொத்த மதிப்பினை குறிக்கிறது; அதாவது கிளைம் செய்யும் சமயத்தில் உங்களுக்குக் கிடைக்கக் கூடிய அதிகபட்ச தொகையையும் குறிக்கும். அதனால், இந்த தொகை உங்கள் ப்ராபர்டியின் உண்மையான மதிப்பினை பிரதிபலிப்பதை நீங்கள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். உங்கள் பில்டிங் இன்சூரன்ஸிற்கு சரியான இன்சூரன்ஸ் தொகையை தேர்வு செய்வதற்கு, எங்கள் கால்குலேட்டரை நீங்கள் பயன்படுத்தலாம். இது உங்கள் பில்டிங் இன்சூரன்ஸ் பிரீமியத்தை தீர்மானிக்க உதவும் மற்றும் உங்கள் ப்ராபர்டியின் பரப்பளவின் அடிப்படையில் இன்சூர் செய்ய வேண்டிய தொகையையும் பரிந்துரைக்கும்.
பில்டிங் இன்சூரன்ஸின் நன்மைகள் என்னென்ன?
இந்தியாவில் பில்டிங் இன்சூரன்ஸின் முக்கியமான நன்மைகளைப் பற்றி சற்று பார்க்கலாம்:
- முழுமையான காப்புறுதி : பில்டிங் இன்சூரன்ஸ் உங்கள் ப்ராபர்டியையும் (அதாவது பில்டிங் அல்லது ஸ்டோர்) அதிலிருக்கும் பொருட்களையும் கூட பாதுகாத்து, ஏற்படக் கூடிய அனைத்து இழப்புகளிலிருந்தும் உங்கள் கையிருப்பை காக்க உதவுகிறது. கூடுதலாக, பல இன்சூரன்ஸ் வழங்குநர்கள் உங்கள் தேவைக்கேற்றவாறு உங்கள் காப்புறுதி பாதுகாப்பை அதிகப்படுத்திக் கொள்ள ஆட்-ஆன்களையும் வழங்குகின்றனர்.
- பிசினஸ் அபாயங்களை குறைக்கிறது : பில்டிங் இன்சூரன்ஸ் உங்கள் கடையையும், அதிலிருக்கும் பொருட்களையும் பாதுகாப்பதற்கு தனிப்பயனாக்கப்பட்ட பாலிசிக்களுடன் வருகிறது, இது தீவிபத்து, நிலநடுக்கம், வெள்ளம், கொள்ளை போன்ற நிகழ்வுகள் ஏற்படும் போது, அதனால் பிசினஸில் நஷ்டங்கள் ஏற்படக் கூடிய சூழ்நிலைகளில் பாதுகாப்பளிப்பதற்கு உதவும்.
- மன நிம்மதி : உங்கள் கடையோ அல்லது வீடோ, இரண்டுமே பொருளாதார ரீதியில் பெருமளவு முக்கியத்தை பெறுகிறது. எதிர்பாராத சூழ்நிலைகளில் ஏற்படக் கூடிய குறிப்பிடத்தக்க இழப்புகளிலிருந்து பில்டிங் இன்சூரன்ஸ் காக்க உதவுகிறது. எனவே இது போன்ற சூழ்நிலைகளில் உங்கள் இன்சூரன்ஸ் வழங்குநர் உங்களுடன் இருப்பதால், நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை!
இந்தியாவில் ஆன்லைன் பில்டிங் இன்சூரன்ஸ் பாலிசி குறித்து அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
பில்டிங் இன்சூரன்ஸ் பாலிசி எடுப்பது சட்டப்படி அவசியமா?
இல்லை, இந்தியாவில் பில்டிங் இன்சூரன்ஸ் எடுப்பது இன்னும் சட்ட ரீதியாக அவசியமானது அல்ல. எனினும், வணிக மற்றும் குடியிருப்பு கட்டிடங்களுக்கு ஏற்படும் இழப்புகள் மற்றும் சேதங்களால் விளையும் செலவு சற்று அதிகமானது என்பதால் இந்த பாலிசி எடுப்பது எப்போதும் பரிந்துரைக்கப்படுகிறது.
வணிகம் சார்ந்த சொத்துகளின் விஷயத்தில் பில்டிங் இன்சூரன்ஸ் பாலிசிக்கான பிரீமியத்தை யார் செலுத்த வேண்டும்?
வணிகம் சார்ந்த சொத்துக்களை பொறுத்தவரை, பில்டிங் இன்சூரன்ஸ் பாலிசியைப் பெறுவதற்கான பிரீமியத்தைச் செலுத்துவது உரிமையாளரின் பொறுப்பாகும். எனினும், கேட்டட் கம்யூனிட்டியில் வாழும் நபர்களுக்கு, பில்டர் தங்கள் சொத்தில் உள்ள அனைத்து கட்டிடங்களுக்கான பில்டிங் இன்சூரன்ஸ் பிரீமியத்தை செலுத்தலாம்.