Third-party premium has changed from 1st June. Renew now
பைக்கிற்கான கேஷ்லெஸ் இன்சூரன்ஸ் பற்றிய தகவல்கள்
நம் இந்தியாவின் மக்கள் தொகை 133.92 கோடி ஆகும். மக்கள் ஒவ்வொருத்தரும் பல்வேறு பின்னணிகள்,மற்றும் சமூக பிரிவுகளை சேர்ந்தவராக இருப்பார்கள்.
மக்களின் போக்குவரத்து பற்றி நினைக்கும் போதே, ஊர்ந்துச் செல்லும் போக்குவரத்து நெரிசல், சாலை எங்கிலும் மக்கள் கூட்டம் மற்றும் வண்டிகள் ஆகியவை தான் நம் கண்முன்னே வந்து செல்லும். ஓட்டுவதற்கு வசதியானதாகவும், பராமரிக்க எளிதானதாகவும், மற்றும் நியாயமான விலையில் கிடைக்கின்ற காரணத்தால் டூ வீலர்கள்/இரு சக்கர வாகனங்கள் அதிலும் குறிப்பாக பைக்குகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.
1988, மோட்டார் வாகனச் சட்டத்தின் படி, உங்கள் வண்டிக்கு தேர்ட் பார்டி இன்சூரன்ஸ் கவர் வாங்க வேண்டியது கட்டாயம் ஆகும். இன்சூரன்ஸ் நிறுவனங்கள் பொதுவாக இரண்டு வகையான மோட்டார் பாலிசிகளை வழங்குகிறன, ஒன்று காம்பிரிஹென்சிவ் இன்சூரன்ஸ் மற்றொன்று தேர்ட்-பார்டி லையபிலிட்டி (பொறுப்பு) இன்சூரன்ஸ் ஆகும்.
நீங்கள் சொந்தமாக ஒரு வண்டி வைத்திருந்தால், அதை போக்குவரத்துக்காக பயன்படுத்தினால்,நீங்கள் ஒரு இன்சூரன்ஸ் பாலிசி வைத்திருக்க வேண்டியது அவசியம் ஆகும்
கேஷ்லெஸ் பைக் இன்சூரன்ஸ் என்றால் என்ன?
விபத்து ஏற்பட்ட பின், தனிநபர்கள் தங்கள் வண்டியை சரி செய்வதற்காக ஒரு இடத்தை தேடுவார்கள், மேலும் தனது இன்சூரன்ஸின் உதவியை நாடுவார்கள். இதனால் இன்சூரன்ஸ் நிறுவனத்தால் பட்டியலிடப்பட்டுள்ள ஏதேனும் ஒரு டூ வீலர் கேரேஜ்லில் தனது பைக்கை பழுது/ரிப்பேர் பார்த்துக் கொள்வார்கள். பழுது பார்த்ததற்கான பில் தொகையினை பாலிசிதாரருக்கு பதிலாக இன்சூரன்ஸ் நிறுவனம் கட்டினால் அது கேஷ்லெஸ் பைக் இன்சூரன்ஸ் ஆகிறது. கிளைம் செய்யும் போது நீங்கள் இந்த கவர் மூலம் பயனடையலாம்.
கேஷ்லெஸ் பைக் இன்சூரன்ஸின் பயன்களைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன் நாம் மோட்டார் இன்சூரன்ஸ் பாலிசி கவர் வகைகளைப் பற்றி தெரிந்துகொள்வோம்.
காம்பிரிஹென்சிவ் பைக் இன்சூரன்ஸ் பாலிசி : உங்களை, உங்கள் பைக் மற்றும் மூன்றாம் தரப்பினர் ஆகிய அனைத்தையும் பாதுகாக்கும் மோட்டார் பாலிசி காம்பிரிஹென்சிவ் பைக் இன்சூரன்ஸ் பாலிசி எனப்படும். விபத்து, தீ, திருட்டு, இயற்கை சீற்றங்கள் மற்றும் உங்கள் கட்டுப்பாட்டில் இல்லாத பிற நிகழ்வுகளிலிருந்து உங்களைப் பாதுகாக்கும்.
Third-Party Liability Policy தேர்ட்-பார்டி லையபிலிட்டி (பொறுப்பு) பாலிசி: தேர்ட்-பார்டி பைக் இன்சூரன்ஸ் என்பது விபத்தில் சிக்கிய மூன்றாம் தரப்பினரை பாதுகாக்கும். விபத்தில் அவர்களுக்கு உடலில் காயம் மற்றும் சொத்துக்கு சேதம் ஏற்படலாம். இன்சூர் செய்த நபர் அல்லது வாகன உரிமையாளர் தவறு செய்திருந்தால், சட்ட மற்றும் மருத்துவ உதவிக்கான செலவை அவள்/அவர் அளிக்க வேண்டும்.
குறிப்பு: பைக் இன்சூரன்ஸ் கால்குலேட்டர்-ஐ பயன்படுத்தி தேர்ட்-பார்டி அல்லது காம்பிரிஹென்சிவ் பாலிசி பிரீமியத்தை கணக்கிடுங்கள்.
கேஷ்லெஸ் பைக் இன்சூரன்ஸ் பற்றிய ஒரு அலசல்
கேஷ்லெஸ் வசதியை பயன்படுத்திட கேஷ்லெஸ் பைக் இன்சூரன்ஸ் பற்றிய தெளிவான புரிதல் இருக்க வேண்டும். கேஷ்லெஸ் இன்சூரன்ஸ் எப்படி செயல்படுகிறது என்பதை பற்றி தெளிவுபடுத்துவதே இதன் நோக்கம் ஆகும். சிறப்பான முறையில் வாகனங்களை ரிப்பேர் செய்து தரும் கேரேஜ்கள் உடன் இன்சூரர்கள் கைகோர்த்துக் கொள்வார்கள். இன்சூர் செய்தவர் கிளைம் செய்யும் போது, அவர்களை குறிப்பிட்ட கேரேஜுக்குச் சென்று பழுதுபார்த்துக் கொள்ளும் படி அறிவுறுத்தப்படுவார். கேரேஜின் பிரதிநிதி பழுதுபார்த்ததற்கான பில்களை இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு அனுப்புவார். இன்சூர் செய்தவரான நீங்கள், சேதம்/விபத்தைப் பற்றி இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் விரிவாகத் தெரிவிக்க வேண்டும். கிடைத்த விவரங்களை சரிபார்த்த பிறகு, பாலிசியில் குறிப்பிடப்பட்டுள்ள வரம்புகளின்படி இன்சூரர் கேரேஜிற்கு பணத்தை செலுத்துவார்.
கேஷ்லெஸ் பைக் இன்சூரன்ஸ் கோருவது எப்படி?
நீங்கள் டிஜிட் இன்சூரன்ஸ் மூலம் இன்சூர் செய்திருந்தால், கேஷ்லெஸ் பைக் இன்சூரன்ஸுக்கான கிளைம் பெறுவதற்கான செயல்முறை இங்கே உள்ளது.
- படி 1: ஆன்லைன் மூலம் அல்லது ஸ்மார்ட்ஃபோன் மூலம் இன்சூரரின் ஆப் / செயலி / அப்ளிகேஷன் பயன்படுத்தி உங்கள் இன்சூரருக்கு தகவல் கொடுங்கள்.
- படி 2: 1800-258-5956 என்கிற எண்ணில் அழையுங்கள். கிளைம் செய்யும் நபர் ஒரு லிங்கை பெறுவார்.
- படி 3: சுய பரிசோதனை / செல்ஃப் இன்ஸ்பெக்ஷன் லிங்கை கிளிக் செய்யுங்கள். பைக்கிற்கு ஏற்பட்ட சேதங்கள் பற்றிய விவரங்களை பதிவிட்டு, அதை எங்களுக்கு அனுப்புங்கள்.
- படி 4: பட்டியலிடப்பட்டுள்ள கேரேஜ்களில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து, அங்கே உங்கள் பைக்கை பழுது பார்த்துக் கொள்ளுங்கள். அதற்காகும் செலவின் பில்களை கேரேஜின் பிரதிநிதி இன்சூரருக்கு அனுப்பி வைப்பார்.
- படி 5: இன்சூர் செய்தவர் டிஜிட் இன்சூரன்ஸ் நிறுவனத்திடமிருந்து ரீஇம்பர்ஸ்மென்ட் கிளைம் செய்துகொள்ளலாம்.
கேஷ்லெஸ் பைக் இன்சூரன்ஸுக்குத் தேவையான ஆவணங்கள்
டிஜிட் இன்சூரன்ஸ் கிளைம் பெறுவதற்கு எந்த ஆவணமும் தேவை இல்லை. ஸ்மார்ட்ஃபோன் அல்லது ஆன்லைன் மூலம் கிளைம் செய்யலாம். விரைவாக செய்யக்கூடிய பேப்பர் இல்லாத செயல்முறைகள்.
Few things to know about Cashless Bike Insurance
கேஷ்லெஸ் பைக் இன்சூரன்ஸ் பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய சில தகவல்கள்
நீங்கள் கேஷ்லெஸ் பைக் இன்சூரன்ஸை தேர்வுசெய்திருந்தால், கிளைம் செய்யும் போது ஆன அனைத்துச் செலவுகளையும் இன்சூரர் செலுத்திவிடுவார் என்பது உறுதி. ஆனால் பைக் இன்சூரன்ஸ் பற்றி நீங்கள் இன்னும் தெரிந்து கொள்ள வேண்டிய சில தகவல்கள் இதோ:
- சில சமயம் பட்டியலிடப்பட்ட கேரேஜ்களில் கேஷ்லெஸ் வசதியைப் பெறுவது கடினமாக இருக்கலாம். அப்படியானால் பைக்கை ரிப்பேர் செய்துவிட்டு நீங்கள் அதற்கு ஆகும் தொகையை செலுத்தி விடலாம். அதற்குப் பின், கேரேஜ் அளிக்கும் பில்கள் அனைத்தையும் சேகரித்து இன்சூரரிடம் சமர்ப்பிக்கவும். சர்வேயரின் அறிக்கையின்படி அவர்கள் உங்களுக்குத் தொகையைத் திருப்பித் தருவார்கள் / ரீஇம்பர்ஸ் செய்வார்கள்.
- பைக்கின் அனைத்து பாகங்களையும் இன்சூரன்ஸ் கவர் செய்யாது. எனவே உங்கள் இன்சூரன்ஸ் கவர் செய்யும் பகுதிகளின் விவரங்களைப் பற்றி நீங்கள் அறிந்திருக்க வேண்டியது அவசியம் ஆகும். இன்சூரன்ஸில் அடங்காத பகுதி சேதம் அடைந்த சமயங்களில் அதை பழுதுபார்ப்பதற்காக காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை, மேலும் அத்தகைய பாகங்களை பழுதுபார்ப்பதற்காக ஆகும் செலவுகளை இன்சூர் செய்தவர் செலுத்த வேண்டும்.
எல்லா இன்சூரன்ஸ் நிறுவனங்களும் கேஷ்லெஸ் பைக் இன்சூரன்ஸ் வசதியை எளிதாக்கிவிட்டது. கிடைக்கக்கூடிய அனைத்து இன்சூரன்ஸ்களையும் ஒப்பிட்டுப் பார்த்த பின் உங்கள் விருப்பத்தைத் தேர்வு செய்யுங்கள்.
இன்சூரன்ஸ்களையும் ஒப்பிட்டுப் பார்த்த பின் உங்கள் விருப்பத்தைத் தேர்வு செய்யுங்கள்.