டிவிஎஸ்(TVS) ஸ்கூட்டி பெப் இன்சூரன்ஸ்

டிவிஎஸ் ஸ்கூட்டி பெப் இன்சூரன்ஸ் பாலிசி வெறும் ₹714 முதல்

Third-party premium has changed from 1st June. Renew now

ஆன்லைனில் டிவிஎஸ் (TVS) ஸ்கூட்டி இன்சூரன்ஸ் பாலிசியின் விலை & புதுப்பித்தல்

சொகுசான பயணம், குறைந்த செலவில் அதிக மைலேஜ் தந்து சுலபமாக இயக்கக்ககூடிய  வண்டியை வாங்க திட்டமிடுகிறார்களா? அப்படியென்றால், ஸ்கூட்டி பெப் வாங்குவது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அவ்வாறு அதை வாங்க முடிவு செய்துவிட்டால், அதற்கான ஸ்கூட்டி பெப் இன்சூரன்ஸ் பாலிசியையும் வாங்குவதற்குத் தேவையான அனைத்து தகவலையும் தெரிந்துகொள்ள மறவாதீர்கள்!

 டிவிஎஸ் வழங்கும் வண்டிகளில் மிகவும் பிரபலமான  ஒன்று ஸ்கூட்டி பெப். ஸ்கூட்டி பெப் தினசரி பயணத்திற்கு சிறந்தது ஏன் என்பதை நீங்கள் அறிந்து கொள்வதோடு  மட்டுமல்லாமல், நீங்கள் தேர்வு செய்ய இருக்கும்  சிறந்த டூ வீலர் இன்சூரன்ஸ்  மூலம் உங்கள் டூ வீலருக்கான நிதிப் பொறுப்புகளை எப்படிக் குறைக்கலாம் என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும்.

 

ஸ்கூட்டி பெப் - ஆட்டோமேடட் டூ வீலர் பிரிவில் ஆரம்ப-நிலை வண்டி ஆகும். இது 2003 ஆம் ஆண்டில் டிவிஎஸ்-ஆல் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் இது மேலும் மேம்படுத்தப்பட்டு, அதன் பெயரோடு ‘பிளஸ்' என்ற சொல் கூடுதலாக சேர்க்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த வண்டியானது, இந்தியாவின் இளம் வண்டி ஓட்டுநர்கள் மற்றும் பெண் வண்டி ஓட்டுநர்களிடையே  மிகவும் பிரபலமான ஸ்கூட்டியாகும். புள்ளிவிவரங்களின்படி, அறிமுகப்படுத்தப்பட்ட 10 ஆண்டுகளுக்குள், அதாவது 2009 ஆம் ஆண்டில் மாதமாதம் 25,000 வண்டிகளை டிவிஎஸ் விற்பனை செய்துள்ளது. 

ஸ்கூட்டி வாங்குவதோடு சேர்த்து, அதற்கான டூ வீலர் இன்சூரன்ஸ் பாலிசி பெறுவதன் முக்கியத்துவத்தையும் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

1988ஆம் ஆண்டின் மோட்டார் வாகனச் சட்டத்தின்படி தேர்டு பார்டி ஸ்கூட்டி பெப் இன்சூரன்ஸ் பாலிசியை வாங்க வேண்டியது கட்டாயமாகும். இன்சூரன்ஸ் கவரின் அவசியத்தை வலியுறுத்துவதற்காக, இந்த பாலிசியை வாங்காமல் இருப்பவர்களுக்கு ரூ.2,000 அபராதமும், அதைத் தொடர்ந்து வாங்காமல் விதிமீறல் செய்பவர்களுக்கு ரூ.4,000 அபராதமும் விதிக்கப்படலாம். மேலும், இளவயதினர் அதிகமாக பயன்படுத்தப்படக்கூடிய ஆரம்ப-நிலை ஸ்கூட்டியாக இருப்பதால், ஸ்கூட்டி மற்றும் அதை ஓட்டுபவரையும் பாதுகாக்கும் வகையில் இரண்டிற்கும் சேர்த்து  இன்சூரன்ஸ் பாலிசி எடுக்க வேண்டும்.

இருப்பினும், ஸ்கூட்டி பெப் இன்சூரன்ஸ் பாலிசி பற்றி அறிந்துகொள்ள வேண்டிய அம்சங்களை மேலும் ஆராய்வதற்கு முன், அவ்வாகனத்தைப் பற்றிய சில விஷயங்களை பார்ப்போம்!

 

டிவிஎஸ்(TVS) ஸ்கூட்டி பெப் இன்சூரன்ஸ் எவ்வித இழப்புகளை ஈடு செய்யும்?

டிஜிட்-ன் டிவிஎஸ்(TVS) ஸ்கூட்டி பெப் இன்சூரன்ஸ்-ஐ நீங்கள் ஏன் வாங்க வேண்டும்

ஸ்கூட்டி பெப் இன்சூரன்ஸ் பிளான்களின் வகைகள்

தேர்டு பார்ட்டி காம்ப்ரிஹென்சிவ்

விபத்து காரணமாக சொந்த டூ-வீலருக்கு ஏற்படும் சேதங்கள்/இழப்புகள்

×

ஒருவேளை தீ விபத்து ஏற்பட்டால், அதனால் உங்கள் சொந்த டூ-வீலருக்கு ஏற்படும் சேதங்கள்/இழப்புகள்

×

இயற்கைப் பேரிடரின் போது டூ-வீலருக்கு ஏற்படும் சேதங்கள்/இழப்புகள்

×

தேர்டு பார்ட்டி வாகனத்திற்கு ஏற்படும் சேதம்

×

தேர்டு பார்ட்டி சொத்துக்களுக்கு சேதம்

×

தனிப்பட்ட விபத்து காப்பீடு(பர்சனல் ஆக்சிடென்ட் கவர்)

×

தேர்டு பார்ட்டி நபருக்கு காயங்கள்/இறப்பு

×

உங்கள் ஸ்கூட்டர் அல்லது பைக் திருட்டு போய் விடுதல்

×

உங்கள் ஐடிவி-யைத் தனிப்பயனாக்குங்கள்

×

தனிப்பயனாக்கப்பட்ட ஆட்-ஆன்களுடன் கூடுதல் பாதுகாப்பு

×
Get Quote Get Quote

காம்ப்ரிஹென்சிவ் மற்றும் தேர்ட் பார்ட்டி டூ வீலர் இன்சூரன்ஸைப் பற்றி மேலும் தெரிந்துக்கொள்ளுங்கள்.

 

கிளைமை கோருவது எப்படி?

எங்கள் டூ-வீலர் இன்சூரன்ஸ் திட்டத்தை நீங்கள் வாங்கிய பிறகு அல்லது புதுப்பித்த பிறகு, நீங்கள் எந்த வித டென்ஷன் இல்லாமல் வாழலாம். ஏனெனில், இந்த டிஜிட்டல் கிளைம் செயல்முறையை 3 எளிய ஸ்டெப்களில் செய்துவிடலாம் உள்ளது!

ஸ்டெப் 1

1800-258-5956-க்கு அழைக்கவும். எந்த படிவங்களும் நிரப்பப்பட வேண்டியதில்லை.

ஸ்டெப் 2

உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் சுய பரிசோதனைக்கான இணைப்பைப் பெறுங்கள். வழிகாட்டப்பட்ட படிப்படியான செயல்முறை மூலம் உங்கள் ஸ்மார்ட்போனிலிருந்து உங்கள் வாகனத்தின் சேதங்களை பதிவு செய்யவும்.

ஸ்டெப் 3

உங்களுக்கு விருப்பமான பழுதுபார்க்கும் முறையைத் தேர்வுசெய்யவும். அதாவது எங்களின் கேரேஜ் நெட்வொர்க் மூலம் ரீஇம்பர்ஸ்மெண்ட் அல்லது கேஷ்லெஸ் ஆகிய இரண்டில் ஒன்றை தேர்வு செய்யவும்.

ஸ்கூட்டி பெப் பற்றிய ஒரு கண்ணோட்டம்

ஸ்கூட்டி பெப் இந்திய மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் தானியங்கி/ஆட்டோமேடட் ஸ்கூட்டர்களில் ஒன்றாகும். எனவே, இது  நாட்டின் இளம் தலைமுறையினர்  இடையே பிரபலமான டூ வீலர் ஆகும்.  இது பலருக்கும் பிடித்தமான வண்டியாக இருப்பதற்கான  சில அம்சங்கள் இதோ

  • ஸ்கூட்டி பெப்பின். எடை 95 கிலோ ஆகும். இது இந்தியாவின் லேசான வண்டிகளில் ஒன்றாகும். எளிதில் இயக்கி சவாரி செய்வதற்கு ஏற்ற வண்டிகளில் இதுவும் ஒன்று.

  • ஸ்கூட்டி  88 cc டிஸ்ப்ளேஸ்மென்ட் உடைய  என்ஜினைக் கொண்டது. இது  5PS ஆற்றலை அளிக்கக்கூடியது .

  • ஸ்கூட்டி பெப்பின் அதிகபட்ச ஆர்பிஎம் (RPM) 6500 ஆகும்.

  •  மற்ற வண்டிகளின் விலையைக் காட்டிலும் ஸ்கூட்டி பெப்-ன்  விலை குறைவாகும். அதிகப்பட்சமாக, 70 கி.மீ/லி வரையிலான  மைலேஜை அளிக்கும். இருப்பினும், சராசரியாக  65 கி.மீ/லி மைலேஜை அளிக்கிறது.

இது கரடுமுரடான நிலப்பரப்புகளில் பயணிக்கவும், நீண்ட பயணங்களுக்கும் ஏற்றது அல்ல. இந்த ஸ்கூட்டி நமது வழக்கமான தினசரி பயணத்திற்கு ஏற்றது. மேலும்,  ஸ்கூட்டி பெப்-ன் இரண்டு சக்திவாய்ந்த சக்கரங்களும் நெரிசலான இந்திய தெருக்களில் எளிதாக நுழைந்து செல்லக் கூடிய ஆற்றலைக் கொண்டது. 

​​ஸ்கூட்டி பெப் சாலையில் பயணம் செய்வதற்கு உகந்த வண்டியாக இருந்தாலும், சாலை விபத்துக்கள் அல்லது பேராபத்துக்கு உள்ளாக நேரிடலாம். இதனால் உங்களுக்கு இழப்புகள் ஏற்படலாம். சிறந்த டூ வீலர் இன்சூரன்ஸ் பாலிசியை வைத்திருப்பது மூலம் நீங்கள் இந்த செலவுகளை சமாளிக்கலாம்.

டிஜிட்-ன் ஸ்கூட்டி பெப் இன்சூரன்ஸ் பாலிசி எந்த வகையில் சிறந்தது என்பதை பாருங்கள்!

டிவிஎஸ்(TVS) ஸ்கூட்டி பெப் இன்சூரன்ஸை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?

டிஜிட் இன்சூரன்ஸ் அவ்வப்போது  வாடிக்கையாளர் அனுபவத்தை  மேம்படுத்தப்படுத்திக் கொண்டே இருக்கிறது. மேலும் வாடிக்கையாளருக்குத் தேவையான இன்னும் பல வசதிகளை செய்து தரும் காரணத்தால் இந்த நிறுவனம் பாலிசி உலகின்  முன்னணி முகங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. டூ வீலர் இன்சூரன்ஸ் பாலிசியை தேடிக் கொண்டிருக்கும் பெருமைக்குரிய ஸ்கூட்டி பெப்பின் உரிமையாளரான நீங்கள், டிஜிட்-ன் பாலிசிகள் உடன் சேர்ந்து வரும் மற்ற அம்சங்களையும் கவனியுங்கள். 

  • உங்களின்  தேவைகளை சரியாக பூர்த்தி செய்வதற்காக பல்வேறு பாலிசி வகைகள்  - பாதுகாப்புத் தேவைகளைப் பற்றி டிஜிட்-க்குத் தெரியும் என்பதால் நீங்கள் தேர்வுசெய்வதற்கு ஏதுவாக  சில பாலிசிகளை வழங்குகிறது. அவை

  • தேர்டு-பார்டி லையபிலிட்டி டூ- வீலர் இன்சூரன்ஸ் பாலிசிகள் : உங்கள் TVS ஸ்கூட்டி பெப்-ஆல் விபத்து ஏற்பட்டு, அதனால் மூன்றாம் தரப்பினருக்கு ஏற்படும் நிதி  இழப்புகளை  (  தேர்டு-பார்டி லையபிலிட்டி) இந்த பாலிசி ஈடு செய்யும். விபத்தில் பாதிக்கப்பட்ட   மூன்றாம் தரப்பு நபர், வண்டி அல்லது சொத்துக்கு ஏற்பட்ட இழப்புகளை தேர்டு-பார்டி ஸ்கூட்டி பெப் இன்சூரன்ஸ் பாலிசிகள் ஈடு செய்யும். ஆனால் இந்த விபத்தில்  உங்கள் ஸ்கூட்டிக்கோ  அல்லது உங்களுக்கோ இழப்பு ஏற்பட்டால், அதற்கான இழப்புகளை இந்த பாலிசி ஈடு செய்யாது.

  • காம்பிரிஹென்சிவ் டூ-வீலர் இன்சூரன்ஸ் பாலிசிகள்: தேர்டு-பார்டி லையபிலிட்டீஸ் மட்டுமல்லாமல் விபத்தில்  உங்கள்  டூ வீலருக்கு  ஏற்படும் இழப்புகளையும் இந்த பாலிசி ஈடுசெய்யும். மேலும் தீ, இயற்கை சீற்றம் அல்லது மனிதர்கள் ஏற்படுத்திய   சேதம் போன்றவற்றால் உங்கள் வண்டிக்கு ஏற்படும் இழப்புகளை இந்த பாலிசி ஈடு செய்யும்.

செப்டெம்பர் 2018 பின் நீங்கள் ஸ்கூட்டி பெப் வாங்கிருந்தால் , நீங்கள் உங்கள் வண்டியை பாதுகாக்க ஓன் டேமேஜ் டூ வீலர் இன்சூரன்ஸ்-ஐ தேர்வு செய்யலாம். ஆனால் ஓன் டேமேஜ் கவரை  வாங்குவதற்கு நீங்கள் தேர்டு-பார்டி லையபிலிட்டி கவரை முதலில் வைத்திருக்க வேண்டும், இல்லையென்றால் குறைந்த விலையில் கிடைக்கும்  ஸ்டாண்ட் அலோன் கவரை  நீங்கள் வாங்கலாம். 

முழுமையான பாதுகாப்பிற்காக எண்ணற்ற ஆட்-ஆன் கவர்கள்: காம்பிரிஹென்சிவ்  ஸ்கூட்டி இன்சூரன்ஸ் பாலிசி உடன் கிடைக்கும் பின்வரும்  ஆட்-ஆன் கவர்களை வாங்கி  உங்கள் டூ வீலரின்  பாதுகாப்பை அதிகரிக்கலாம்:

  • பிரேக் டவுன் அசிஸ்டன்ஸ் 
  • கன்ஸ்யூமபில் கவர் 
  • என்ஜின் & கியர் புரொட்டெக்ஷன்  
  • ரிட்டர்ன் டூ இன்வாய்ஸ் கவர் 
 

நெட்ஓர்க்கில் இருக்கும் கேரேஜ்களில் எளிதாக கேஷ்லெஸ் (பணமில்லாமல்) ரிப்பேர்செய்துகொள்ளலாம் - நாடெங்கலும் உள்ள 1,000 க்கும் மேற்பட்ட கேரேஜ்களோடு டிஜிட்  கைகோர்த்துள்ளது. விபத்து ஏற்பட்டால் உங்கள் ஸ்கூட்டி பெப்பை அங்கே எடுத்துச் சென்று  சரிசெய்து கொள்ளலாம். மேலும் எங்களோடு இணைந்திருக்கும் ரிப்பேர் சென்டர்கள் மற்றும் கேரேஜ்களில் நீங்கள் கட்டணம் செலுத்தாமல் ரிப்பேர் செய்து கொள்ளலாம்; இக்கட்டான நேரத்தில்  நீங்கள் பணத்தை பற்றிய கவலை ஏதும் இல்லாமல் இருக்கலாம். அதுவே இதன் நன்மை ஆகும்.

  • ஜீரோ டிப்ரிஸியேஷன்‌ கவர் 

உங்கள் ஸ்கூட்டி பெப்பை ரிப்பேர் செய்வதற்குகாக எங்கள்  நெட்வொர்க்கில் இல்லாத  கேரேஜ்களில் ஒன்றை தேர்வு செய்து அதில் சேவைகளைப் பெற்றால்,  உங்கள் ஸ்கூட்டி  இன்சூரன்ஸில் அதற்கான கிளைமை  தனியாக செய்யலாம். இதுபோன்ற சூழ்நிலைகளில், முதலில் பில் தொகையை  நீங்கள் செலுத்திவிட்டு, உங்கள் பணத்தை டூ வீலர் இன்சூரரிடமிருந்து திரும்பப் பெறுவதற்காக காத்திருக்க வேண்டும்.

குறைந்த ஆவணங்களுடன் விரைவாக கிளைம் செய்யலாம் -   வழக்கமாக கடைபிடிக்கப்படும் வழிமுறைகளை விட, டிஜிட்-ல்  கிளைம் செய்வது மிகவும் சுலபம். அதுவே வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதற்கான  முக்கிய காரணங்களில் ஒன்று ஆகும். 

நீங்கள் விபத்தில் பாதிக்கப்பட்டிருந்தால்,  சில நிமிடங்களிலேயே ஆன்லைன் மூலம் நீங்கள் கிளைம் செய்யலாம். இது  போன்ற வசதியை டிஜிட் உங்களுக்காக வழங்குகிறது. உங்கள் ஸ்கூட்டி பெப் இன்சூரன்ஸ் வழங்கும் ஸ்மார்ட்ஃபோன் மூலம் சரிபார்க்கும் செயல்முறையின் உதவியுடன் சிக்கல் இல்லாமல்  நீங்கள் கிளைம் செய்யலாம்.

விரைவான கிளைம் செயல்முறைக்கு ஈடு கொடுக்கும் வகையில்  அதற்கான எங்களின்  தீர்வும்  உடனடியாக கிடைக்கும். இத்துடன்  எங்களின், கிளைம் மற்றும் அதற்கான தீர்வுக்கான  விகிதம் அதிகம் என்பதை கூறுவதில்  நாங்கள் பெருமை அடைகிறோம்.

எல்லா நேரங்களிலும் வாடிக்கையாளர் சேவை பெறலாம் - விபத்துக்கள் மற்றும் எதிர்பாராத நிகழ்வுகளை சமாளிக்கத் நமக்குத் தேவையான சிலவற்றுள்  இன்சூரன்ஸ் பிளான்களும் ஒன்றாகும். அதுபோன்ற சூழலை, சமாளிப்பதற்கு ஏதுவாக வாரத்தின் எல்லா நாட்களிலும்,  24 மணிநேரமும் செயல்படும் வாடிக்கையாளர் சேவையை டிஜிட் வழங்குகிறது. உங்கள் ஸ்கூட்டி பெப் இன்சூரன்ஸ் கிளைம் செய்வதற்காக உதவி தேவைப்பட்டால் எங்கள் வாடிக்கையாளர் சேவையை நீங்கள் அழைக்கலாம்.

ஐடிவி (IDV )ஐ தனிப்பயனாக்கும் வசதி - ஐடிவி (IDV ) அல்லது இன்சுர்டு டெக்லேர்டு வேல்யூ (Insured Declared Value (IDV) ) என்பது உங்கள் டிவிஎஸ் ஸ்கூட்டி பெப் திருடப்பட்ட அல்லது சேதம் அடைந்த பின், உங்களுக்குக் கிடைக்கும் மொத்தத் தொகை ஆகும். உங்கள் வண்டியை சரிசெய்ய முடியாத பட்சத்தில், இந்த மொத்தத் தொகையானது  உங்கள் ஸ்கூட்டியை மாற்றுவதற்கு உதவியாக இருக்கும்.  டிஜிட்-ல், டிவிஎஸ் ஸ்கூட்டி பெப் இன்சூரன்ஸ் விலையின் அடிப்படையில்,  உங்கள் வசதிக்கேற்ப, உங்கள் ஐடிவி(IDV)-யைத் தேர்வுசெய்யலாம்.

நோ கிளைம்-ன் பயன்கள் - “ உங்கள் ஸ்கூட்டி-ஐ பாதுகாப்பாக ஓட்டுங்கள் என்பது பொதுவாக கூறப்படும் அறிவுரை ஆகும். அதையே தான் நீங்களும் விரும்புவீர்கள், அதை நடைமுறைபடுத்த  போக்குவரத்து விதிமுறைகளை நீங்கள் கடைபிடிப்பீர்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால், சில நேரங்களில் விபத்துக்களை தவிர்க்க முடியாது. குறிப்பிட்ட இன்சூரன்ஸ் ஆண்டில் உங்களால் விபத்தைத் தவிர்க்க முடிந்தால், உங்கள் இன்சூரன்ஸ்  பாலிசிக்கு வழங்கப்படும் நோ கிளைம் போனஸையும் நீங்கள் பெறலாம். இது, உங்கள் பாலிசியைப் பொறுத்து 50% வரை கூட கிடைக்கலாம், இதனால் உங்கள் பாலிசியைப் புதுப்பிப்பதற்கு ஆகும் செலவுத் தொகையைக் குறைக்கலாம்.

பாலிசிகளை எளிதாக வாங்கலாம்  மற்றும் புதுப்பிக்கலாம் - ஆன்லைன் மூலம் இன்சூரன்ஸ் பாலிசிகளை வாங்கும்/புதுப்பிக்கும் வசதியானது எங்களின் வாடிக்கையாளர்களின் வேலையை எளிதாக்குகிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள்  பல்வேறு பாலிசிகளை ஒப்பிட்டுப் பார்த்து, தங்களுக்கான சிறந்த பாலிசியை தேர்வு செய்துகொள்ளவும்  வழிசெய்கிறது. இத்துடன் ஸ்கூட்டி பெப் இன்சூரன்ஸை புதுப்பிக்கும் விலைகளைக் கூட தெரிந்துகொள்ளலாம்.

நீங்கள் ஒரு பாலிசியை வாங்கியதும், உங்கள் கிரெடென்ஷியல்ஸை பயன்படுத்தி லாக்-இன் செய்து விலைகள் மற்றும் பிற அம்சங்களை நீங்கள் சரிபார்க்கலாம்.

உங்கள் TVS ஸ்கூட்டி பெப்பை முழுவதுமாகப் பாதுகாக்கவும்,  எதிர்பாராமல் வரக்கூடிய சிக்கலை எதிர்கொள்ளவும் டிஜிட்-ன் டூ-வீலர்  இன்சூரன்ஸ் பாலிசிகள் சிறந்தது என்பதை இதிலிருந்து புரிந்துகொள்ளலாம்.

டிவிஎஸ்(TVS) ஸ்கூட்டி பெப் - வகைகள் மற்றும் எக்ஸ்-ஷோரூம் விலை

வகைகள் எக்ஸ்-ஷோரூம் விலை (நகரத்தைப் பொறுத்து மாறுபடலாம்)
ஸ்கூட்டி பெப் பிளஸ் எஸ்டிடி(STD), 87.8 சிசி(cc) ₹ 58,734

இந்தியாவில் உள்ள டிவிஎஸ்(TVS) ஸ்கூட்டி பெப் இன்சூரன்ஸ் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

என் ஸ்கூட்டிக்கு ஏற்படும் சிறிய சேதத்திற்காக இன்சூரன்ஸ் பாலிசியில் கிளைம் செய்யலாமா?

உங்கள் ஸ்கூட்டிக்கு சிறிய அளவில்  சேதம் ஏற்பட்டாலும், உங்கள்  இன்சூரன்ஸ் பாலிசியில் நீங்கள்  கிளைம் செய்யலாம். ஆனால் உங்கள் பாலிசியை புதுப்பிக்கும் போது,  நீங்கள்  கிளைம்  செய்யாத ஒவ்வொரு  ஆண்டிற்கும் NCB மூலம் பலன் அடையலாம்  என்பதையும் நீங்கள் கவனிக்க வேண்டும்.

இன்சூரன்ஸ் பாலிசிகள் வண்டியின் ஒரு பகுதியை மாற்றுவதற்கு ஆகும் செலவை ஈடு செய்யுமா?

விபத்து அல்லது இயற்கை சீற்றம் போன்ற எதிர்பாராத சூழ்நிலையால் உங்கள் ஸ்கூட்டியின் ஏதோ ஒரு பாகத்தை மாற்றவேண்டிய அவசியம் வந்தால், அதற்காகும் செலவுகளை இன்சூரன்ஸ் பாலிசிகள் ஈடு செய்யும்.

எனது டூ வீலர் இன்சூரன்ஸ் பாலிசியை தாமதமாக புதுப்பிக்கலாமா?

நீங்கள் உங்கள் டூ வீலர் இன்சூரன்ஸ் பாலிசியை புதுப்பிப்பதற்கான காலக்கெடுவைத் தவறவிட்டால், பாலிசியை புதுப்பிக்க இன்னும்