டிவிஎஸ் (TVS) இன்சூரன்ஸ்

எளிய வழிமுறையில் டிவிஎஸ் (TVS) டூ-வீலர் இன்சூரன்ஸ் வாங்குதல்/புதுப்பித்தல்

Third-party premium has changed from 1st June. Renew now

டிவிஎஸ் பைக்குகள் பற்றி கொஞ்சம் பேசுவோம் - அது ஏன் பிரபலமாக உள்ளது, டிவிஎஸ் இன்சூரன்ஸ் பாலிசிகள் மற்றும் உங்கள் நன்மைகளை அதிகரிக்கக் கூடிய பாலிசி ஒன்றைத் தேர்வு செய்தல் போன்றவற்றைப் பற்றி அறிவோம். 

உலகத்திலேயே இந்தியா தான் அதிக அளவில் டூ-வீலர்களை உற்பத்தி செய்கிறது. 2018-19 நிதியாண்டில் 24.5 கிட்ட தட்ட மில்லியன் யூனிட்ஸ் உற்பத்தி செய்துள்ளது. 22 உற்பத்தியாளர்கள் கொண்டு, இந்தியாவில் மோட்டார் உற்பத்தி செக்டார் 2018-ல்  21.18 மில்லியன் யூனிட்ஸ் ஆவரேஜ் டொமெஸ்டிக் சேல் கொண்டிருந்தது. (1)

மற்ற உற்பத்தியாளர்களை விட டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் நம்பகத் தன்மைக்கு பெயர் போனது. டிவிஎஸ் நிறுவனம் இரு சக்கர வாகன உற்பத்தியில் மூன்றாவது பெரும் நிறுவனமாக திகழ்ந்து வருடத்திற்கு ரூ.20,185.43 கோடி வருவாய் ஈட்டுகிறது. இந்த புள்ளிவிவரங்களிலிருந்து, இந்தியாவில் டிவிஎஸ் உற்பத்திகளுக்கான சந்தை சற்று கணிசமாக உள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது.

இப்போது உங்கள் டிவிஎஸ் டூ-வீலரை இன்சூர் செய்வது பற்றி பேசலாம். நீங்கள் சாலையில் வண்டி ஓட்டும் போது உங்கள்  டிவிஎஸ் டூ-வீலருக்கு ஏற்படும் எதிர்பாராத இழப்புகளுக்கு ஈடு செய்ய இந்த  டிவிஎஸ் பைக் இன்சூரன்ஸ் பெரும் உதவியாக இருக்கும்.

1988, மோட்டார் வாகன சட்டத்தின் படி, நீங்கள் உங்கள் டிவிஎஸ் டூ-வீலருக்கு இந்த இன்சூரன்ஸ் பாலிசியை (தேர்டு பார்ட்டி லையபிலிட்டி கவர்) வைத்திருப்பது என்பது கட்டாயமாகும். அது மட்டும் அல்ல, இது எதிர்பாராத விபத்தின் காரணமாக உங்கள் வண்டிக்கு ஏற்படும் சேதங்களையும் ஈடு செய்ய உதவும் ஒரு தேவையான கவர் ஆகும்.

நீங்கள் ஏன் ஜாவா பைக் இன்சூரன்ஸை வாங்க வேண்டும்?

இதில் பாதுக்காக்கப்படாதது எது

உங்கள் டூ-வீலர் இன்சூரன்ஸ் பாலிசியில் எவையெல்லாம் கவர் செய்யப்படவில்லை என்பதை அறிவது  முக்கியம், இதனால் நீங்கள் கிளைம் செய்யும் போது எந்த ஆச்சரியமான சூழலும் ஏற்படாது. அத்தகைய ஆச்சரியமூட்டும் சில சூழ்நிலைகள் இங்கே:

 

தேர்டு பார்ட்டி பாலிசி வைத்திருப்பவருக்கு ஏற்படும் சொந்த சேதங்கள்

தேர்டு பார்ட்டி அல்லது லையபிலிட்டி ஒன்லி பைக் பாலிசி இருக்கும் பட்சத்தில், சொந்த வாகனத்திற்கு ஏற்படும் சேதங்கள் இன்சூர் செய்யப்படாது.

 

குடிபோதையில் வாகனம் ஓட்டுதல் அல்லது உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுதல்

நீங்கள் குடிபோதையில் அல்லது செல்லுபடியாகும் டூ-வீலர் உரிமம் இல்லாமல் வண்டி ஓட்டும் சூழ்நிலைகளில், உங்கள் பைக் இன்சூரன்ஸை நீங்கள் கிளைம் செய்ய முடியாது.

செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுதல்

நீங்கள் கற்றல் உரிமத்தை மட்டும் வைத்திருந்து, செல்லுபடியாகும் உரிமம்  இல்லாமல் உங்கள் டூ-வீலரை பில்லியன் இருக்கையில் இருந்தால்- அந்தச் சூழ்நிலைகளில் நீங்கள் கிளைம் செய்ய முடியாது.

 

பின்விளைவினால் ஏற்படும் சேதங்கள்

விபத்தின் நேரடி விளைவாக இல்லாத ஏதேனும் சேதம் (எ.கா. விபத்துக்குப் பிறகு, சேதமடைந்த டூ-வீலர் வாகனம் தவறாகப் பயன்படுத்தப்பட்டு, என்ஜின் சேதமடைந்தால், அதனை கிளைம் செய்ய முடியாது)

 

அலட்சியத்தினால் ஏற்படும் சேதங்கள்

ஏதேனும் அலட்சியத்தினால் ஏற்படும் சேதங்கள் (எ.கா. வெள்ளத்தில் டூ-வீலர் வாகனத்தை ஓட்டுவதால் ஏற்படும் சேதம், உற்பத்தியாளரின் ஓட்டுநர் கையேட்டின்படி பரிந்துரைக்கப்படாதது, இன்சூர் செய்யப்படாது)

 

வாங்கப்படாத ஆட்-ஆன்கள்

சில சூழ்நிலைகளை ஆட்-ஆன்கள் மூலம் கவர் செய்யலாம். நீங்கள் அந்த ஆட்-ஆன்களை வாங்கவில்லை என்றால், அதற்குத் தொடர்புடைய சூழ்நிலைகள் இதில் உள்ளடக்கப்படாது.

 

நீங்கள் ஏன் டிவிஎஸ் பைக் இன்சூரன்ஸை வாங்க வேண்டும்?

உங்கள் தேவைகளுக்கு பொருந்தும் பைக் இன்சூரன்ஸ்

தேர்டு பார்ட்டி காம்ப்ரிஹென்சிவ்

விபத்து காரணமாக சொந்த டூ-வீலருக்கு ஏற்படும் சேதங்கள்/இழப்புகள்

×

தீ விபத்தினால் சொந்த டூ-வீலருக்கு ஏற்படும் சேதங்கள்/இழப்புகள்

×

இயற்கைப் பேரிடரினால் சொந்த டூ-வீலருக்கு ஏற்படும் சேதங்கள்/இழப்புகள்

×

தேர்டு பார்ட்டிக்கு ஏற்படும் சேதங்கள்

×

தேர்டு பார்ட்டி சொத்துக்கு ஏற்படும் சேதங்கள்

×

பர்சனல் ஆக்சிடென்ட் கவர்

×

தேர்டு பார்ட்டிக்கு ஏற்பட்ட காயங்கள்/இறப்பு

×

உங்கள் ஸ்கூட்டர் அல்லது பைக் திருட்டுப் போதல்

×

உங்கள் ஐடிவி-யை (IDV) தனிப்பயனாக்குதல்

×

தனிப்பயனாக்கப்பட்ட கூடுதல் ஆட்-ஆன்ஸ்

×
Get Quote Get Quote

Know more about the காம்ப்ரிஹென்சிவ் மற்றும் தேர்டு பார்ட்டி பைக் இன்சூரன்ஸைப் பற்றி மேலும் அறிந்துக்கொள்ள

எவ்வாறு கிளைமை தாக்கல் செய்ய வேண்டும்?

எங்கள் டூ-வீலர் இன்சூரன்ஸ் திட்டத்தை நீங்கள் வாங்கிய பிறகு அல்லது புதுப்பித்த பிறகு, நீங்கள் எந்த வித டென்ஷன் இல்லாமல் வாழலாம். ஏனெனில், இந்த டிஜிட்டல் கிளைம் செயல்முறையை 3 எளிய ஸ்டெப்களில் செய்துவிடலாம் உள்ளது!

ஸ்டெப் 1

1800-258-5956-க்கு அழைக்கவும். எந்த படிவங்களும் நிரப்பப்பட வேண்டியதில்லை.

ஸ்டெப் 2

உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் சுய பரிசோதனைக்கான இணைப்பைப் பெறுங்கள். வழிகாட்டப்பட்ட படிப்படியான செயல்முறை மூலம் உங்கள் ஸ்மார்ட்போனிலிருந்து உங்கள் வாகனத்தின் சேதங்களை பதிவு செய்யவும்.

ஸ்டெப் 3

உங்களுக்கு விருப்பமான பழுதுபார்க்கும் முறையைத் தேர்வுசெய்யவும். அதாவது எங்களின் கேரேஜ் நெட்வொர்க் மூலம் ரீஇம்பர்ஸ்மெண்ட் அல்லது கேஷ்லெஸ் ஆகிய இரண்டில் ஒன்றை தேர்வு செய்யவும்.

டிஜிட் இன்சூரன்ஸ் கிளைம்கள் எவ்வளவு விரைவாக தீர்க்கப்படுகின்றன? உங்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்தை மாற்றும்போது உங்கள் மனதில் எழும் முதல் கேள்வி இது தான். அது சரியானதும் கூட! டிஜிட்டின் கிளைமஸ் ரிப்போர்ட் கார்டை வாசிக்கவும்

டிவிஎஸ் (TVS) மோட்டார் நிறுவனம் - சுருக்கமான வரலாறு

டிவிஎஸ் மோட்டார் கம்பனி லிமிட்டெட் தான் அளவு மற்றும் டர்ன் ஓவரைப் பொறுத்தவரை டிவிஎஸ் குரூப்புக்கு மிகப் பெரிய பங்களிப்பு அளிக்கிறது. இதன் தலைநகர் சென்னையில் உள்ளது. இது 1972-ல் சுந்தரம் கிளேட்டன் நிறுவனத்தின் மூலம் தொடங்கப்பட்டது. ஜப்பானின் முன்னணி வாகன உற்பத்தியாளர்களில் ஒன்றான சுசுகியுடன் இணைந்து அதன் தொழில்நுட்ப ஒத்துழைப்பு மூலம் நிறுவனம் மோட்டார் சைக்கிளை உற்பத்தி செய்யத் தொடங்கியது. 

சுஸுகி உடனான ஒப்பந்தம் முடிவடைந்த பின்னர், டிவிஎஸ் மோட்டார்ஸ் 2001-ல் தனி நிறுவனமாக நிறுவப்பட்டது. பல விருதுகள் மற்றும் பாராட்டுக்களை ஈன்று இந்நிறுவனமானது இந்தியாவின் மோட்டார் சைக்கிள் உற்பத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தது. 

இந்நிறுவனத்தின் சில சமீபத்திய உற்பத்திகள்:

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் (RTR) 200

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் (RR) 310

டிவிஎஸ் எக்ஸ்எல் (XL) 100

டிவிஎஸ் விக்டர்  

 

சிறந்த தயாரிப்புகளை வழங்கி, டிவிஎஸ் நிறுவனமானது மோட்டார்சைக்கிள் உற்பத்தியில் பெரும் பங்கு வகித்து ஒரு மாபெரும் மாற்றத்தை கொண்டு வந்தது என்றும் சொல்லலாம். இதனால் தான், மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள் மத்தியில், டிவிஎஸ் பைக்கிற்கு மட்டும் அன்றி, அதன் இன்சூரன்ஸ் பாலிசிக்கும் ஒரு தனி டிமாண்ட் உள்ளது. 

டிவிஎஸ் (TVS) மோட்டார் நிறுவனம் பிரபலமாக இருப்பதற்கு காரணம் என்ன?

ஒரு பிராண்ட் பிரபலமாக இருப்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அதில் சிலவற்றை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம்:

  • இந்தியாவின் முதல் உள்நாட்டு பைக்கை அறிமுகப்படுத்திய முதல் நிறுவனம் இது தான் - விக்டர்.
  • நம் அன்றாட பயன்பாட்டிற்கு சரியான மற்றும் கம்யூட்டர் (மலிவு விலையிலான) பைக்குகளை உற்பத்தி செய்கிறார்கள். பேன்சி (ஆடம்பரமான) பைக்குகள் கவர்ச்சிகரமாக உள்ளது என்றாலும், கம்யூட்டர் (மலிவு விலையிலான) பைக்குகள் வசதியாக இருப்பதோடு சாமானியர்களுக்கு உகந்ததாக உள்ளது. 
  • டிவிஎஸ் தான் இந்தியாவின் முதல் எத்தனால் அடிப்படையிலான மோட்டார் சைக்கிளை 2019-ல் அறிமுகப்படுத்தியது. பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள்களுக்கு பதிலாக எத்தனால் பயன்படுத்துவது மாசுபாட்டைக் கட்டுப்படுத்த மிகவும் பயனுள்ள வழிகளில் ஒன்றாகும். அது மட்டும் அல்ல, இது இந்த காலத்திற்கு தேவையான ஒன்றாகும்.
  • இந்நிறுவனத்தின் பைக்குகள் யாவுமே சமீபத்திய தொழில்நுடபத்திற்கு ஏற்ப இருப்பதோடு, டிசைன் மற்றும் செயல்திறனில் சிறந்து விளங்குகின்றன. 

இதனால் தான் டிவிஎஸ் இந்தியர்களின் மத்தியில் பிரபலமாக உள்ளது. அதுவும் தங்கள் தினசரி பயன்பாட்டிற்கு மோட்டார் சைக்கிளை நம்பி இருப்பவர்களுக்கு இது உகந்தது.

டிவிஎஸ் (TVS) டூ-வீலரின் அம்சங்கள் - எது மக்களை கவர்கிறது?

இந்திய உற்பத்தியாளர்களால் உற்பத்தி செய்யப்படும் பைக்குகள் என்று வரும்போது, டிவிஎஸ் இதுவரை சிறந்ததை தான் வழங்கியுள்ளது.

இதைக் கொஞ்சம் பாருங்கள்!

  • நிலையான தன்மை - பெரும்பாலும் பைக்கின் ஆயுள் என்பது அவை எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன மற்றும் பராமரிக்கப்படுகின்றன என்பதைப் பொறுத்தது தான். இருந்தாலும், டிவிஎஸ் டூ-வீலர் மார்க்கெட்டில் நீடித்து உழைக்கும் பைக்குகளில் ஒன்றாக தங்களை நிலைநிறுத்திக் கொண்டுள்ளன. குறைந்த பராமரிப்பு செலவிலான டிவிஎஸ் மாடல்கள், மற்ற மலிவு விலையிலான பைக்குகளில் சிறந்து விளங்குகின்றது.
  • நம்பகத் தன்மை - டிவிஎஸ் பைக்குகள் நம்பகத் தன்மைக்கு பெயர் போனவை.  மலிவு விலையிலான பைக் என்றாலே நம் இந்தியர்களின் முதல் சாய்ஸ் டிவிஎஸ் விக்டர் தான். அதோடு, நல்ல மைலேஜ் மற்றும் சிறந்த எஞ்சின் உடனான அப்பாச்சி சீரீஸ் மூலம் டிவிஎஸ் சந்தையையே புரட்டிப் போட்டுள்ளது.
  • வாங்கக் கூடியது - என்னதான் செயல்திறனில் சிறந்து விளங்கினாலும், இது நாம் அனைவரும் வாங்கக் கூடிய விதத்தில் விலை குறைவாகவே உள்ளது. டிவிஎஸ்-ன் விலையுயர்ந்த பைக்கான டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 ஆனது 2.28 லட்சம் என்றாலும், நம்மால்  டிவிஎஸ் ஸ்போர்ட்டை நாற்பதாயிரத்தில் வாங்கிவிட முடியும்.
  • பலவகையிலான தயாரிப்புகள் - இத்தகைய வேறுபாட்டுடன் தனித்திறன் வாய்ந்து திகழ்வதற்கு முக்கியமான காரணம் இந்நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் பலவகையான பலதரப்பட்ட வியக்கத் தக்க தயாரிப்புகளை உற்பத்தி செய்வது தான். "ஒவ்வொருவருக்கும் ஒரு வண்டி" (அதாவது அனைவருக்கும் கிடைக்கத்தக்க வகையில் வாகனம் இருக்க வேண்டும்) என்ற டேக்லைனின் அடிப்படையில் பல வகையிலான மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர்கள், மொப்பெட்களை உருவாகியுள்ளது.
  • சமீபத்திய தொழில்நுட்பம்  - நாட்டில் பிஎஸ்-VI-ன் கோட்பாடுகள் படி டிவிஎஸ் நிறுவனம் தான் உற்பத்தியாளர்கள் மத்தியில் முதலில் மோட்டார் சைக்கிளை கொண்டு வந்துள்ளது. அதோடு, டிவிஎஸ் பைக்குகள் தான் சிறந்த எஞ்சின்களைக் கொண்டுள்ளது.  

எவ்வளவு தான் சிறப்பு அம்சங்கள் கொண்டிருந்தாலும், விபத்து ஏற்பட்டால் டிவிஎஸ் பைக்குகளும் தான் சேதத்திற்கு உள்ளாகும். விபத்து அல்லது திருடு போவது எல்லாம் பொதுவான விஷயம் தான்.

அதனால் தான், இத்தகைய இழப்புகளினால் ஏற்படக் கூடிய பண இழப்பை ஈடு செய்யும் விதத்தில் பல இன்சூரன்ஸ் நிறுவனங்கள் உங்கள் டிவிஎஸ் ஸ்கூட்டர், மொப்பெட் மற்றும் பைக்குகளுக்கு தனிப்பயனாக்கப்பட்ட டூ-வீலர் இன்சூரன்ஸ் கவர்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

நீங்கள் டிவிஎஸ் பைக் இன்சூரன்ஸ் பாலிசி வைத்திருக்க வேண்டியதன் அவசியம் என்ன எனபதைப் பாருங்கள்.

நீங்கள் டிவிஎஸ் (TVS) பைக் இன்சூரன்ஸ் பாலிசி வைத்திருக்க வேண்டியதன் அவசியம் என்ன

1988, மோட்டார் வாகனங்கள் சட்டத்தின் படி, உங்கள் டிவிஎஸ் பைக்கிற்கு தேர்டு பார்ட்டி லையபிலிட்டி கவர் வைத்திருப்பது கட்டாயமாகும். ஆனால், உங்கள் டூ-வீலருக்கு முழுமையான பாதுகாப்பு அளிக்கக் கூடிய ஒரு காம்பரிஹென்சிவ் (முழுமையானது) பாலிசியை வைத்திருப்பது நல்லது. 

நீங்கள் ஏன் இன்சூரன்ஸ் கவர் வாங்க வேண்டும் அல்லது டிவிஎஸ் பைக் பாலிசியை புதுப்பித்துக் கொள்ள வேண்டும்? 

இதைக் கொஞ்சம் பாருங்கள்!

  • உங்கள் வண்டிக்கு ஏற்பட்ட இழப்பு/சேதத்தில் இருந்து காத்துக் கொள்ளுதல் - டிவிஎஸ் பைக் இன்சூரன்ஸ் பாலிசியின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று, விபத்துக்கள், தீ, இயற்கை பேரிடர்கள் போன்ற சம்பவங்களின் காரணமாக உங்கள் சொந்த வாகனத்திற்கு ஏற்படும் இழப்பு அல்லது சேதத்திலிருந்து ஏற்படும் செலவுகளுக்கு இழப்பீடு வழங்குகிறது. மேலும், என்னதான் நீங்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், உங்கள் டிவிஎஸ் பைக் அல்லது ஸ்கூட்டி திருடு போவதற்கான வாய்ப்பு கண்டிப்பாக உள்ளது. இந்த சூழ்நிலையில் ஏற்படக் கூடிய நிதி இழப்பைத் தடுக்க, உங்கள் டூ-வீலரை காம்ப்ரிஹென்சிவ் (முழுமையானது) பாலிசி மூலம் காத்துக் கொள்ளலாம். 
  • தேர்டு பார்ட்டி வெஹிக்கிள் அல்லது சொத்துக்கு ஏற்படும் சேதத்திற்கான ரீஇம்பர்ஸ்மென்ட் - இந்த கவர தேர்டு பார்ட்டி லையபிலிட்டி மற்றும் காம்ப்ரிஹென்சிவ் பைக் இன்சூரன்ஸ் பாலிசிகள் ஆகிய இரண்டாலும் வழங்கப்படுகிறது. இந்த பெனிஃபிட்டின் மூலம், உங்கள் இன்சூரன்ஸ் செய்யப்பட்ட இரு சக்கர வாகனத்தால் தேர்டு பார்ட்டி சொத்து அல்லது வாகனத்திற்கு ஏற்பட்ட சேதத்திலிருந்து உங்களை நிதி ரீதியாக பாதுகாத்துக் கொள்ள முடியும். உங்கள் வாகனத்தினால் மற்றொவருக்கு ஏற்படும் காயம் அல்லது மரணம் போன்றவற்றிற்கும் இது பொறுப்பேற்கிறது. இது போன்ற சூழ்நிலைகளில் உங்களுக்கு ஏற்படக்கூடிய எந்தவொரு செலவிற்கும் நீங்கள் ரீஇம்பர்ஸ் செய்து கொள்ளலாம்.

 

  • தனிப்பட்ட விபத்திற்கான கவர் - இந்த பெனிஃபிட் உடன், நீங்கள் உங்கள் டூ-வீலர் மூலம் உடல் ஊனம் ஆவதற்கு நேரிட்டால் நிதி ரீதியிலான பாதுகாப்பு உங்களுக்கு கிடைக்கும். அது மட்டும் அல்ல, இது நீங்கள் இறக்க நேரிட்டாலும், உங்கள் குடும்பத்தாருக்கு இழப்பீடு கொடுக்கும். 
  • ஹை இன்சுர்டு டெக்லேர்டு வேல்யூ – டிவிஎஸ் பைக் இன்சூரன்ஸ் வைத்திருப்பதன் மற்றொரு குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் என்னவென்றால், உங்கள் பைக்/ஸ்கூட்டிக்கு ஏற்படும் சேதம் அல்லது திருடப்பட்டால் அதற்கான செலவை நீங்கள் ரீஇம்பர்ஸ் செய்து கொள்ளலாம். இன்சுர்டு டெக்லேர்டு வேல்யூ என்பது இத்தகைய சூழ்நிலைகளில் வழங்கப்படும் உத்தரவாதம் அளிக்கப்பட்ட தொகையாகும். இது உங்கள் டூ-வீலருக்கான டிவிஎஸ் விற்பனை விலையில்  தேய்மானத்தை கழித்து வழங்கப்படுகிறது.
  • உங்கள் இன்சூரன்ஸ் பாலிசியின் மூலம் அதிக நன்மைகளைப் பெற உயர் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட ஐடிவி-யுடன் கூடிய பாலிசி ஒன்றைப் பெறுவது சிறந்தது.

நீங்கள் டிவிஎஸ் பைக் இன்சூரன்ஸ் புதுப்பித்தல் செய்ய வேண்டுமெனில் மற்றும் உங்கள் இன்சூரன்ஸ் வழங்குநரை மாற்றுவது குறித்து யோசனை செய்து கொண்டிருந்தால், ஆட்-ஆன்கள் மற்றும் ரைடர்களை ஒப்பிட்டு பார்ப்பது முக்கியமான விஷயங்களில் ஒன்றாகும்.

டிவிஎஸ் பைக் இன்சூரன்ஸ் பாலிசிகள் ஏன் முக்கியம் என்று இப்போது உங்களுக்குத் தெரியும்,. அதனால், இது ஒரு திறம் வாய்ந்த சேவை வழங்குநரைத் தேர்வு செய்ய வேண்டிய நேரம்.

நீங்கள் டிஜிட் இன்சூரன்ஸை கருத்தில் கொண்டுள்ளீர்களா?

நீங்கள் ஏன் உங்கள் TVS டூ-வீலருக்கு அவசியம் இன்சூரன்ஸை தேர்வு செய்ய வேண்டும்?

இந்தியாவில் முன்னணியிலும், மிகவும் மரியாதைக்குரிய இன்சூரன்ஸ் வழங்குநர்களில் ஒருவராக இருப்பதுடன், உங்கள் டிவிஎஸ் டூ-வீலருக்கு பைக் இன்சூரன்ஸ் பாலிசிகளை வழங்கும் டிஜிட், ஏராளமான நன்மைகளுடன் வருகின்றன.

அவற்றில் சில பின்வருமாறு:

1. அதிக எண்ணிக்கையிலிருக்கும் நெட்வொர்க் கேரேஜ்கள் - டிஜிட் இன்சூரன்ஸ் அவர்கள் டிவிஎஸ் டூ-வீலர் வாகன இன்சூரன்ஸ் திட்டத்தின் கீழ் பணமில்லா பழுதுபார்த்தல்(கேஷ்லெஸ் ரிப்பேர்) வசதிகளை வழங்குகிறது. இந்த வசதி மூலம், உங்கள் இன்சூரன்ஸ் வழங்குநரின் கீழ் உள்ள எந்தவொரு நெட்வொர்க் கேரேஜ்களிலும் உங்கள் டூ-வீலர் வாகனத்தை பணம் செலுத்தாமல் சரி செய்யலாம். டிஜிட்டில் 2900-க்கும் மேற்பட்ட நெட்வொர்க் கேரேஜ்கள் உள்ளன, இதனால் பணமில்லா பழுதுபார்ப்புகளை வழங்கும் கேரேஜை தேடும் உங்கள் நோக்கத்திற்கு ஏற்ற இடம் கிடைக்க அதிக வாய்ப்புள்ளது. 

2. டூ-வீலர் இன்சூரன்ஸ் பாலிசிகளுக்கான விருப்பங்கள்- டிஜிட்டில் நீங்கள் உங்கள் டிவிஎஸ் பைக்கை பின்வரும் இன்சூரன்ஸ் பாலிசிகளின் மூலம் இன்சூர் செய்யலாம்: அவை 

  • தேர்டு-பார்ட்டி டூ-வீலர் இன்சூரன்ஸ்- இந்த பாலிசி தேர்டு-பார்ட்டி உடமைகளுக்கோ அல்லது வாகனத்திற்கோ ஏற்படும் இழப்பு அல்லது சேதம், இன்சூர் செய்யப்பட்ட வாகனத்தால் ஏற்படும் காயம் அல்லது உயிரிழப்பு போன்றவற்றினால் எழும் ஃபினான்சியல் லையபிலிடிஸ்களை (நிதி பொறுப்புகளை) ஈடு செய்யும்.
  •  காம்ப்ரிஹென்சிவ் டூ-வீலர் இன்சூரன்ஸ்-  இந்த இன்சூரன்ஸ் கவர், தேர்டு பார்ட்டி லையபிலிட்டிஸ் மட்டுமின்றி விபத்து, இயற்கை சீற்றம் போன்ற எதிர்பாராத சூழ்நிலையால் உங்கள் சொந்த வாகனத்திற்கு ஏற்படும் சேததிற்கும் காப்பீடு வழங்கும்.

நீங்கள் ஒருவேளை 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கு பிறகு உங்கள் டிவிஎஸ் டூ-வீலரை வாங்கியிருந்தால் நீங்கள் உங்களால் ஏற்பட்ட சேதத்திற்கு வழங்கப்படும் நிதி உதவியையும் பெறலாம். இந்த காப்பீடு உங்களுக்கு காம்ப்ரிஹென்சிவ் பாலிசி வழங்கும் நன்மைகளான தேர்டு பார்ட்டி லையபிலிடிகளுக்கான காப்பீட்டையும் வழங்கும். ஒருவேளை ஏற்கனவே உங்களிடம் தேர்டு-பார்ட்டி பைக் இன்சூரன்ஸ் கவர் இருக்கும் பட்சத்தில் இதை ஸ்டாண்ட்அலோன் கவராக வாங்க முடியும்.

3. யர் கிளைம் செட்டில்மென்ட் ரேஷியோவுடன் விரைவான மற்றும் எளிதான கிளைம் செட்டில்மென்ட் - பொதுவாக, உங்கள் இன்சூரன்ஸ் பாலிசிக்கான கிளைமை தாக்கல் செய்த பிறகு, உங்கள் பைக்கை ஆய்வு செய்யவும,  உங்கள் கிளைமை சரிபார்க்கவும் நிறுவனத்திலிருந்து ஒரு பிரதிநிதி அனுப்பப்படுவார். ஆனால் டிஜிட்டில், நீங்கள் ஒரு ஸ்மார்ட்போன் எனேபிள்ட் சுய ஆய்வு செயல்முறைக்கான(செல்ப் இன்ஸ்பெக்ஷன்) நன்மைகளை பெற முடியும். இது செயல்முறையை விரைவாக செய்ய அனுமதிப்பதுடன் விரிவான பேப்பர்ஒர்க் தொந்தரவுகளைகயும் குறைக்கிறது. 

அவர்களின் ஆன்லைன் செயல்முறை மூலம், டிஜிட் அவர்களது  கிளைம் செட்டில்மென்ட்டை ஒரு அளவிற்கு சீர்மைப்படுதியுள்ளது. உங்கள்  கிளைமை செட்டில் செய்ய நிறுவனம் வெகு சில நாட்களை மட்டுமே எடுக்கும், இது நாட்டில் உள்ள பல முன்னணி இன்சூரன்ஸ் வழங்குநர்களை விடவும் மிக குறைவானது என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும், நிறுவனம் அதிக  கிளைம் செட்டில்மென்ட் ரேஷியோவைக் கொண்டுள்ளது, இது உங்கள் கிளைம் நிராகரிக்கப்படுவதற்கான வாய்ப்புகளைக் குறைக்கிறது.

4. எளிதாக காப்பீடு வாங்குதல் மற்றும் புதுப்பித்தல் செயல்முறை - நீங்கள் உங்கள் டிவிஎஸ் டூ-வீலர் வாகனம் அல்லது டிவிஎஸ் ஸ்கூட்டி இன்சூரன்ஸ் புதுப்பித்தலை ஆன்லைனில் தேடுகிறீர்கள் என்றால், இந்த செயல்பாட்டில் உங்களுக்கு உதவ டிஜிட்டல் விட சிறந்தது வேறு யாரும் இல்லை. இங்கு நீங்கள் ஒரு இன்சூரன்ஸ் பாலிசியை எந்தவித தொந்தரவும் இல்லாத வாங்குதல் மற்றும் புதுப்பித்தல் சேவையை பெறலாம். மேலும், உங்கள் முந்தைய பாலிசியிலிருந்து நோ கிளைம் போனஸை அடுத்த இன்சூரன்சிற்கு  முன்னெடுத்துச் சென்று உங்கள் பிரீமியம் தொகையில் தள்ளுபடியை பெறலாம்.

5.  ஹை இன்சுர்டு டெக்லேர்டு வேல்யூ - நாங்கள் ஏற்கனவே ஐடிவியை பற்றி விவாதித்துள்ளோம். எனவே, உங்கள் டிவிஎஸ் பைக் இன்சூரன்ஸப் பெறும் போது அல்லது புதுப்பிக்கும் போது, உங்கள் பைக்கிற்கு மொத்த இழப்பு அல்லது சேதம் ஏற்பட்டால் அதிகபட்ச நன்மைகளைப் பெற, அதிக ஐடிவியை வழங்கும் இன்சூரன்ஸை தேடுவதே உங்கள் முதன்மை நோக்கமாக இருக்க வேண்டும். உங்கள் தேவைகளுக்கு ஏற்ப உங்கள் டூ-வீலர் வாகனத்திற்கான ஐடிவியை தனிப்பயனாக்கும் வாய்ப்பை டிஜிட் உங்களுக்கு வழங்குகிறது.

6.பல வகையிலான ஆட்-ஆன் கவர்கள் - டிஜிட் டிவிஎஸ் டூ-வீலர் இன்சூரன்ஸ் பாலிசி பல்வேறு ஆட்-ஆன்களை வழங்குகிறது, அவை உங்கள் பைக்கின் பாதுகாப்பை அதிகரிக்கிறது. உங்கள் டிவிஎஸ் பைக்கிற்கு நீங்கள் எடுத்துக்கொள்ளக்கூடிய சில ஆட்-ஆன்கள் பின்வருபவற்றை உள்ளடக்கியிருக்கும்.

ஜீரோ டிப்ரிஸியேஷன் கவர்.

எஞ்சின் மற்றும் கியர் புரட்டக்ஷன் கவர்.

இன்வாய்ஸ் கவருக்கான ரிட்டர்ன்.

பிரேக் டவுன் அசிஸ்டன்ஸ்.

கன்ஸ்யூமபிள் கவர்.

இந்த ஆட்-ஆன்கள் மிக அவசியம், ஏனெனில் இவை உங்கள் பைக்/ஸ்கூட்டிக்கு அட்வான்ஸ்ட் புரட்டக்ஷன் வழங்க அனுமதிக்கும்.

7. 24x7 மணி நேர வாடிக்கையாளர் சேவை- டிஜிட்டின் குழு உங்களுக்கு சிறந்த சேவையை வழங்க அயராது உழைக்கிறது. அதனால்தான் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் அவர்களது வாடிக்கையாளர் சேவையை அழைக்கலாம், குறிப்பாக உங்கள் வசதிக்கேற்ப - இவ்வளவு ஏன்?  தேசிய விடுமுறை நாட்களில் கூட அழைக்கலாம்! 

எனவே இதுவே உங்களுக்கு சிறந்த வாய்ப்பு! 

குறைந்த விலையில் பிரீமியங்கள் மற்றும் இலாபகரமான ஆட்-ஆன் சலுகைகள் மூலம், டிஜிட் இன்சூரன்சினால் உங்கள் டிவிஎஸ் பைக், ஸ்கூட்டர் அல்லது மொபெட்டின் என ஆல்-ரவுண்ட் பாதுகாப்பையும் வழங்க முடியும்! 

இன்னும் இன்சூரன்ஸ் கவர் பெறுவது பற்றி யோசனையாக இருக்கிறதா?

வாருங்கள்!! உங்கள் டிவிஎஸ் டூ-வீலர் வாகன இன்சூரன்ஸ் பாலிசிக்கான பிரீமியம் கட்டணத்தை எவ்வாறு குறைக்கலாம் என்பது பற்றி இரகசியத்தை தெரிந்துக்கொள்வோம்.

टीवीएस इंश्योरेंस पॉलिसी का प्रीमियम आप कैसे कम कर सकते हैंஉங்கள் டிவிஎஸ் (TVS) இன்சூரன்ஸ் பாலிசிக்கான உங்கள் பிரீமியத்தை உங்களால் எவ்வாறு குறைக்கலாம்?

உங்கள் டிவிஎஸ் டூ-வீலர் வாகன இன்சூரன்ஸ் பாலிசிக்கான பிரீமியத்தை குறைக்க நீங்கள் பயன்படுத்தக்கூடிய சில நடைமுறைகள் உள்ளன அவை பின்வருமாறு: 

எடுத்துக்காட்டிற்கு: ·    

  • கிளைம் செட்டில்மென்டின் போது உங்கள் வாகனத்திற்கான பழுதுபார்ப்பு செலவில் நீங்கள் செலுத்த வேண்டிய ஒரு பகுதி தொகைக்கான டிடக்டபிள்ஸை நீங்களாகவே முன்வந்து தேர்வு செய்தல்.·    

  • உங்கள் இன்சூரன்ஸ் பாலிசிக்கான ஆட்-ஆன் கவர்களை தேர்ந்தெடுக்கும் போது நீங்கள் கவனமாக இருக்க வேண்டும், ஏனெனில் நீங்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு ஆட்-ஆன்களுக்கும் நீங்கள் ஆரம்பத்திலிருக்கும் பிரீமியம் தொகையை விட அதிகமாக செலுத்த வேண்டியிருக்கும்.

  • உங்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் நோ கிளைம் போனஸ் பாலிசியை சரிபார்த்து, அதிலிருந்து அதிகபட்ச பலன்களை நீங்கள் பெற முடியுமா என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

  • உங்கள் இன்சூரன்ஸ் பாலிசியை நேரடியாக காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து வாங்கவும். ஒருவேளை நீங்கள் ஒரு ஏஜெண்ட் அல்லது பிரோக்கர் மூலம் சேவைகளைப் பெற்றால், அவர்களின் சேவைகளுக்கு நீங்கள் கூடுதல் கட்டணம் செலுத்த நேரிடும். இது நீங்கள் உங்கள் இன்சூரன்ஸ் பாலிசிக்கு செலவழிக்கும் தொகையை தானாகவே அதிகரிக்கும்.

இந்த சில உதவிக்குறிப்புகளை மனதில் கொண்டு, உங்கள் இன்சூரன்ஸ் பாலிசிக்கான பிரீமியம் பேமெண்ட்டுகளை சேமிப்பதை நீங்கள் உறுதி செய்யலாம். 

எனவே, இப்போது நீங்கள் உங்கள் டிவிஎஸ் பைக் அல்லது ஸ்கூட்டருக்கு ஒரு இன்சூரன்ஸ் பாலிசியை வாங்கும் ஒவ்வொரு அம்சத்தையும் கற்று விரைவாக இன்றே உங்கள் வாகனத்திற்கான இன்சூரன்ஸை பெற்றிடுங்கள்!·

ஆன்லைனில் டிவிஎஸ் (TVS) டூ-வீலர் இன்சூரன்ஸ் பாலிசியைப் பற்றி அடிக்கடிகேட்கப்படும் கேள்விகள்

நான் எனது டிவிஎஸ் பைக் இன்சூரன்ஸ் பாலிசியை ஆன்லைனில் புதுப்பிக்கலாமா?

ஆம், நீங்கள் உங்கள் டிவிஎஸ் பைக் இன்சூரன்ஸ் பாலிசியை ஆன்லைனில் புதுப்பிக்க தேர்வு செய்யலாம். இருப்பினும், தற்போதுள்ள பாலிசி காலாவதியாவதற்கு முன்பு உங்கள் பாலிசியை நீங்கள் புதுப்பிப்பதற்கு இது முக்கியமானது, ஏனெனில் அதிலிருந்து நோ கிளைம் போனஸ் பெறுவதை நீங்கள் உறுதிப்படுத்தவும்.

எனது இன்சூரன்ஸ் வழங்குநரை மாற்ற விரும்பினால் எனது டிவிஎஸ் டூ-வீலர் இன்சூரன்ஸின் நோ கிளைம் போனஸை என்னால் பெற முடியுமா?

ஆம், உங்கள் இன்சூரன்ஸ் வழங்குநரை மாற்ற நீங்கள் விரும்பினாலும், உங்கள் டிவிஎஸ் டூ-வீலர் டூ-வீலர் இன்சூரன்ஸின் நோ கிளைம் போனஸை உங்களால் பெறமுடியும்.

எனது டிவிஎஸ் பைக்கின் காப்பீட்டு பாலிசியை புதுப்பிக்க நான் வழங்க வேண்டிய விவரங்கள் என்ன?

உங்கள் TVS பைக் இன்சூரன்ஸ் பாலிசியைப் புதுப்பிக்க, நீங்கள் பின்வரும் விவரங்களை வழங்க வேண்டும் -

  • வாகன பதிவு எண்.

  • வாகனம் வாங்கும் தேதி மற்றும் இடம்.

  • உங்கள் பெயர்.

  • உங்கள் முகவரி மற்றும் தொடர்பு விவரங்கள்.

  • உங்கள் TVS டூ-வீலர் வாகனத்தின் மாடல் மற்றும் அதன் மேனுபாக்ச்சரிங் தேதி.