ராயல் என்ஃபீல்டு கிளாசிக் இன்சூரன்ஸ்

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் இன்சூரன்ஸ் பிரீமியத்தை உடனடியாக சரிபார்க்கவும்

Third-party premium has changed from 1st June. Renew now

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350/500 இன்சூரன்ஸ் விலை & ஆன்லைனில் பாலிசி புதுப்பித்தல்

பல கிலோமீட்டர்கள் ராஜாவைப் போல ராயல்  என்ஃபீல்டில் கிளைட் செய்ய நினைக்கிறார்களா? ஆனால், உங்கள் பைக்கில் சுற்றித் திரியும் முன், உங்கள் பைக்கிற்கு ராயல் என்ஃபீல்டு டூ-வீலர் இன்சூரன்ஸ் பாலிசி வாங்குவது குறித்து சிந்தித்துப் பார்த்து இருக்கிறீர்களா? அதிகப்படியான பலன்களைப் பெற ஒரு டூ-வீலர் இன்சூரன்ஸ் பாலிசி என்னவெல்லாம் அம்சங்கள் கொண்டுள்ளது என்று பார்ப்பது அவசியமாகும்!

ஒரு பிரிட்டிஷ் மோட்டார் சைக்கிள் நிறுவனமான ராயல் என்ஃபீல்டு 20 ஆம் நூற்றாண்டின் பெரும்பகுதியில், குறிப்பாக இரண்டு உலகப் போர்களின் போது ஆங்கிலேய ஆயுதப் படைகளுக்கு மோட்டார் சைக்கிள்களை வழங்கியது.

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் ஆனது டபுள்யூடபுள்யூ2 (WW2)-ன் சேவைக்கு மரியாதை செலுத்தும் வகையில் நிறுவனத்தால் நிறுவப்பட்டது. இது போரின் அடையாளமாக மட்டுமாக அல்லாமல், ரைடிங் கல்சர் மற்றும் அந்த காலத்தில் நிலவிய கிளாசிக் அவுட்லுக்கின் சின்னமாக இருந்தது. அந்நிறுவனம் அந்த ஒற்றை இலக்குடன், மோட்டார் பைக் ஆனது தற்போது உள்ள புல்லட்டின் மெயின்ஃபிரேமில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மற்ற அனைத்து ராயல் என்ஃபீல்டு மாடல்களைப் போன்று தான் கிளாசிக்கும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்களின் அதிக விலை கொண்ட மோட்டார் சைக்கிள் வகைகளின் கீழ் வரும். அதனால் தான், ஒரு விபத்தின் காரணமாக அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை காரணமாக ஏற்படும் சேதங்களை பழுதுபார்ப்பது என்பது உங்கள் கையிருப்பில் இருந்து அதிக தொகையை செலவு செய்யவேண்டி வரும்.

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் இன்சூரன்ஸ் பாலிசி என்பது, இது போன்ற இக்கட்டான சூழ்நிலைகளில் எழக்கூடிய  நிதி சார்ந்த பிரச்சனைகளைக் குறைக்கும் ஒரு முக்கியமான கருவியாகும். மேலும், மோட்டார் வாகனச் சட்டம் 1988-ன் படி, ஒவ்வொரு மோட்டார் வாகன உரிமையாளரும் தங்கள் வாகனத்திற்கான தேர்டு பார்ட்டி லையபிலிட்டி இன்சூரன்ஸ் பாலிசியை வாங்குவதையும் கட்டாயம் என்று வலியுறுத்துகிறது.

பாலிசி இல்லாத பட்சத்தில், உங்களுக்கு ரூ. 2000 போக்குவரத்து அபராதமாக விதிக்கப்படலாம். மீண்டும் மீண்டும் அவ்வாறு பிடிபட்டால், ரூ. 4000 அபராதமாக விதிக்கப்படும்.

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் இன்சூரன்ஸில் என்னவெல்லாம் காப்பீடு அடங்கும்?

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் இன்சூரன்ஸை நீங்கள் ஏன் வாங்க வேண்டும்?

ராயல் என்ஃபீல்டு கிளாசிக்-ற்கான இன்சூரன்ஸ் பிளான்களின் வகைகள்

தேர்டு பார்ட்டி காம்ப்ரிஹென்சிவ்

விபத்து காரணமாக சொந்த டூ-வீலருக்கு ஏற்படும் சேதங்கள்/இழப்புகள்

×

ஒருவேளை தீ விபத்து ஏற்பட்டால், அதனால் உங்கள் சொந்த டூ-வீலருக்கு ஏற்படும் சேதங்கள்/இழப்புகள்

×

இயற்கைப் பேரிடரின் போது டூ-வீலருக்கு ஏற்படும் சேதங்கள்/இழப்புகள்

×

தேர்டு பார்ட்டி வாகனத்திற்கு ஏற்படும் சேதம்

×

தேர்டு பார்ட்டி சொத்துக்களுக்கு சேதம்

×

பர்சனல் ஆக்சிடென்ட் கவர்

×

தேர்டு பார்ட்டி நபருக்கு காயங்கள்/இறப்பு

×

உங்கள் ஸ்கூட்டர் அல்லது பைக் திருட்டு போய் விடுதல்

×

உங்கள் ஐடிவி-யைத் தனிப்பயனாக்குங்கள்

×

தனிப்பயனாக்கப்பட்ட ஆட்-ஆன்களுடன் கூடுதல் பாதுகாப்பு

×
Get Quote Get Quote

காம்ப்ரிஹென்சிவ் மற்றும் தேர்ட் பார்ட்டி டூ வீலர் இன்சூரன்ஸூக்குள்ள வேறுபாடுகளைப் பற்றி மேலும் தெரிந்துக்கொள்ளுங்கள்.

எவ்வாறு கிளைமை தாக்கல் செய்ய வேண்டும்?

எங்கள் டூ-வீலர் இன்சூரன்ஸ் திட்டத்தை நீங்கள் வாங்கிய பிறகு அல்லது புதுப்பித்த பிறகு, நீங்கள் எந்த வித டென்ஷன் இல்லாமல் வாழலாம். ஏனெனில், இந்த டிஜிட்டல் கிளைம் செயல்முறையை 3 எளிய ஸ்டெப்களில் செய்துவிடலாம் உள்ளது!

ஸ்டெப் 1

1800-258-5956-க்கு அழைக்கவும். எந்த படிவங்களும் நிரப்பப்பட வேண்டியதில்லை.

ஸ்டெப் 2

உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் சுய பரிசோதனைக்கான இணைப்பைப் பெறுங்கள். வழிகாட்டப்பட்ட படிப்படியான செயல்முறை மூலம் உங்கள் ஸ்மார்ட்போனிலிருந்து உங்கள் வாகனத்தின் சேதங்களை பதிவு செய்யவும்.

ஸ்டெப் 3

உங்களுக்கு விருப்பமான பழுதுபார்க்கும் முறையைத் தேர்வுசெய்யவும். அதாவது எங்களின் கேரேஜ் நெட்வொர்க் மூலம் ரீஇம்பர்ஸ்மெண்ட் அல்லது கேஷ்லெஸ் ஆகிய இரண்டில் ஒன்றைத் தேர்வு செய்யவும்.

டிஜிட் இன்சூரன்ஸ் கிளைம்கள் எவ்வளவு விரைவாக தீர்க்கப்படுகின்றன? உங்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்தை மாற்றும்போது உங்கள் மனதில் எழும் முதல் கேள்வி இது தான். அது சரியானதும் கூட! டிஜிட்டின் கிளைமஸ் ரிப்போர்ட் கார்டை வாசிக்கவும்

ராயல் என்பீல்ட் கிளாசிக்: ஒரு அஞ்சலி கதை

2009 ஆம் ஆண்டு முதலில் இருந்தே தயாரிக்கப்பட்டு வரும் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் ஆனது ரெட்ரோ-பைக்கர் உணர்திறனை முழுமையாக நிறைவு செய்கிறது. புல்லட்டைப் போலவே, கிளாசிக் 350 ஆனது இந்திய பைக்கர்களின் சாகச பயனத்திற்கு ஏற்றதாக அமைந்துள்ளது.

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் ஆனது இந்திய சந்தையில் அதிக மக்களால் விரும்பப்படும் மோட்டார் சைக்கிள்களில் ஒன்றாக இருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. உதாரணமாக:

  • முன்புற ஃபோர்க்குடன் பொருத்தப்பட்ட பாரம்பரிய ரவுண்ட் ஹெட்லேம்ப் உடன், புல்லட்டிலிருந்து வேறுபட்டு கிளாசிக் ஒரு தனித்துவமான இருக்கை அமைப்பைக் கொண்டுள்ளது.

  • வேண்டுமானால், பின்பக்க மட்கார்டில் தனியாக இணைக்கப்பட்டுள்ள பில்லியன் இருக்கையை ரைடர்கள் அகற்றிக் கொள்ளலாம், இது ஒரு மேம்பட்ட ரெட்ரோ லுக்கைக் கொடுக்கிறது.

  • டபுள்யூடபுள்யூ2 (WW2) மாடலை கவுரவிக்கும் வகையில் தனித்துவமான வண்ண கலவையுடனான பேகசஸ் போன்ற மாடல்களும் குறிப்பிட்ட காலத்திற்கு வழங்கப்படுகின்றன.

இத்தகைய திறன் மிக்க பைக்கின் உரிமையாளர்கள் தங்கள் வாகனத்தைப் பராமரிப்பதில் மிகவும் கவனமாக இருப்பார்கள், ஆனால் விபத்துக்கள் எப்பொழுதும் சொல்லிக் கொண்டு வருவதில்லை. அதனால் தான் ராயல் என்ஃபீல்டு கிளாசிக்கிற்கான காம்ப்ரிஹென்சிவ் (விரிவான) இன்சூரன்ஸ் பாலிசியைத் வாங்குவதே பொருத்தமானதாக இருக்கும்.

ஆனால், எந்த டூ-வீலர் இன்சூரன்ஸ் பாலிசியை தேர்வு செய்வது?

குழப்பமாக உள்ளதா? டிஜிட்டில் என்னவெல்லாம் உள்ளது என்று பாருங்கள்!

டிஜிட்-ன் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் இன்சூரன்ஸை நீங்கள் ஏன் தேர்வு செய்ய வேண்டும்?

உங்களுக்கு பிரியமான என்ஃபீல்டு இன்சூரன்ஸை வாங்க டிஜிட் ஏன் சிறந்த தேர்வாக அமைகின்றது என்று பார்ப்போம்:

இந்தியாவில் ஏராளமான நெட்வொர்க் கேரேஜ்கள் உள்ளன

டூ-வீலர், 4-வீலர் என எந்த வாகனமாக இருந்தாலும், விபத்து ஏற்பட்டால், சேதங்கள் கண்டிப்பாக இருக்கும். அத்தகைய சூழலில், உங்களுக்கு அதனை தங்குதடையின்றி எளிதில் பணமில்லாமல் பழுதுபார்க்கும் வசதி கிடைத்தால், உங்கள் பிரச்சனை சற்று சுமூகமாக தீரும். இத்தகைய நோக்கத்துடன், இந்தியா முழுவதும் 1,000த்திற்கும் அதிகமான நெட்வொர்க் கேரேஜ்களை டிஜிட் கொண்டுள்ளது. இதனால் இன்சூரன்ஸ் வைத்திருப்பவர்கள் தங்கள் கிளாசிக் 350 அல்லது 500-ஐக் கூட அவசர சூழலிலும் சிரமமின்றி  பழுது பார்த்துக் கொள்ளலாம்.

வழங்கப்படும் பாலிசி வகைகள்

டிஜிட் உங்கள் ராயல் என்ஃபீல்டு மற்றும் கிளாசிக் 350க்கு வெவ்வேறு வகையான டூ-வீலர் பாலிசிகளை வழங்குகிறது. ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350-ன் இன்சூரன்ஸ் விலையானது நீங்கள் தேர்ந்தெடுக்கும் பாலிசியைப் பொறுத்து மாறுபடும் என்பதால், பாலிசிகளைப் பற்றி சரியாக புரிந்துகொண்டு உங்களுக்கு எது சரியாக இருக்கும் என்று யோசித்து தேர்ந்தெடுப்பது முக்கியம்.

  • மூன்றாம் தரப்பு லையபிலிட்டி டூ-வீலர் இன்சூரன்ஸ் பாலிசி- இந்த இன்சூரன்ஸ் பாலிசியானது உங்கள் டூ-வீலர் வாகனத்தால் ஏதேனும் மூன்றாம் தரப்பு வாகனம், சொத்து அல்லது தனிநபருக்கு ஏற்படும் சேதங்களால் உங்களுக்கு ஏற்படும் நிதி இழப்புகளை ஈடுசெய்கிறது.

  • விரிவான டூ-வீலர் இன்சூரன்ஸ் பாலிசி - உங்கள் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350-க்கான இந்த இன்சூரன்ஸ் ஆனது மூன்றாம் தரப்பு லையபிலிட்டி மற்றும் உங்கள் பைக் மற்றும் உங்களுக்கு ஏற்படும் சேதங்களை ஆகும் செலவுகளையும் உள்ளடக்குகிறது. உங்கள் ராயல் என்ஃபீல்டு கிளாசிக்குக்கு தீ விபத்து, இயற்கை பேரிடர்கள் மற்றும் மனிதனால் உருவாக்கப்படக் கூடிய பேரழிவுகள் போன்றவற்றால் ஏற்படும் விபத்துக்களுக்கு இந்த பாலிசிகள் கவரேஜை வழங்குகிறது. அது மட்டுமல்ல, இதன் மூலம், உங்கள் மோட்டார் சைக்கிள் திருடப்பட்டாலோ அல்லது மேலும் பழுதுபார்க்க முடியாத அளவுக்கு சேதமடைந்தாலோ அதன் விலையையும் நீங்கள் திரும்பப் பெறலாம். 

செப்டம்பர் 2018-க்குப் பின் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 அல்லது 500 வாங்கிய உரிமையாளர்களும் 'ஓன் டேமேஜ் ' உள்ளடக்கிய தனி பாலிசியைப் பெறலாம். இந்த பாலிசி மூன்றாம் தரப்புப் லையபிலிட்டிகளை உள்ளடக்கவில்லை என்றாலும், பைக்கும், அதன் உரிமையாளரும் இந்த பாலிசியின் கீழ் பாதுகாக்கப்படுவது உறுதியாகும்.

ஆன்லைனில் வாங்குதல் மற்றும் புதுப்பித்தல்

டிஜிட் மோட்டார் பைக் உரிமையாளர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் மற்றும் புதுப்பித்துக் கொள்ளும் வசதியை வழங்குகிறது. அதோடு இதற்கான முழு விண்ணப்ப செயல்முறையையும் விரைவாகவும் எளிதாகவும் செய்து விடலாம். நீங்கள் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 மற்றும் அதன் வேரியண்ட் 350-ன் இன்சூரன்ஸ் விலை மற்றும் பிற ஆப்ஷன்களை எல்லாம் சரிபார்த்து, உங்களுக்கு எது சரியாக இருக்குமோ அதனை தேர்வு செய்யலாம். அவ்வாறு தேர்வு செய்த பின்னர் விண்ணப்ப செயல்முறையை நிறைவு செய்ய சில நிமிடங்கள் மட்டுமே ஆகும்.

விரைவான கிளைம் செட்டில்மென்ட் செயல்முறை

எளிதான மற்றும் உடனடியான கிளைமை தாக்கல் செய்யும் செயல்முறையையும், விரைவான செட்டில்மென்ட்டையும் டிஜிட் கொண்டுள்ளது. கிளைமை தாக்கல் செய்வதன் அடிப்படையில், டிஜிட் தனது கஸ்டமர்களுக்கு ஸ்மார்ட்ஃபோன் மூலம் இயக்கப்படும் சுய ஆய்வு செயல்முறையை வழங்குகிறது. இதனால் சில நிமிடங்களில் கிளைம் தாக்கல் செய்து விடலாம். கூடுதலாக, டிஜிட்-ல் உயர்ந்த கிளைம் செட்டில்மென்ட் விகிதம் உள்ளது. இது உங்கள் கோரிக்கை நிராகரிக்கப்படும் வாய்ப்புகளை குறைக்கிறது.

நோ கிளைம் போனஸ் பெனிஃபிட்ஸ்

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 இன்சூரன்ஸ் புதுப்பித்தலை நீங்கள் தேர்வு செய்யும் போது, அதனோடு நீங்கள் ​​நோ கிளைம் போனஸின் பலனையும் பெறலாம். ஒரு குறிப்பிட்ட பாலிசி காலத்தில் நீங்கள் எந்த கிளைமும் செய்யவில்லை என்றால், புதுப்பித்தல் பிரீமியத்தில் தள்ளுபடியையும் பெறலாம். இந்த தள்ளுபடி 50% வரை இருக்கும். மேலும், தங்கள் இன்சூரன்ஸ் பாலிசியை டிஜிட்-ற்கு மாற்றிக் கொள்ளும் கிளாசிக் உரிமையாளர்களும் இந்த நன்மையைப் பெறலாம்.

பிரீமியம் கஸ்டமர் சேவை

டிஜிட்-ன் கஸ்டமர் சேவையானது 24*7 மணிநேரமும் செயல்படும், அதுவும் தேசிய விடுமுறை நாட்களிலும் கூட இருக்கும். அதோடு, நீங்கள் கஸ்டமர் சேவையை ஆன்லைன் அல்லது அழைப்பு மூலமும் எளிதில் தொடர்பு கொள்ளலாம். ஆன்லைனில் கிளைம் செய்வதோடு, நீங்கள் அழைப்பு மூலம் தேவையான ஆதரவையும் பெறலாம்.

தனிப்பயனாக்கப்பட்ட ஐடிவி

ஐடிவி அல்லது இன்சுர்டு டெக்லேர்டு வேல்யூ என்பது உங்கள் மோட்டார் சைக்கிள் மீது இன்சூரன்ஸ் செய்யப்பட்ட மொத்தப் தொகையாகும். இந்த மதிப்பானது உங்கள் மோட்டார் சைக்கிளின் தேய்மானத்திற்கான மதிப்பை அதனை வாங்கிய விலையிலிருந்து கழிப்பதன் மூலம் கணக்கிடப்படுகிறது. டிஜிட் உங்களுக்கென ஒரு ஐடிவி-யைப் பரிந்துரைக்கும் அதே வேளையில், உங்கள் தேவைகளுக்கு ஏற்ப நீங்கள் உங்கள் ஐடிவி-யைத் தனிப்பயனாக்கிக் கொள்ளலாம்.

பல ஆட்-ஆன்களை சேர்த்துக் கொள்ளலாம்

தங்கள் பைக்குகளுக்கு காம்ப்ரிஹென்சிவ் (விரிவான).கவரைத் தேர்வு செய்யும் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் உரிமையாளர்கள், தங்கள் பாலிசியில் தங்களுக்குத் தேவையான ஆட்-ஆன்களை வாங்கிக் கொள்ளலாம். டிஜி-ல் வழங்கப்படும் வெவ்வேறு ஆட்-ஆன்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

  • ரிட்டர்ன் டூ இன்வாய்ஸ் கவர்

  • ஜீரோ டிப்ரிஸியேஷன்‌ கவர்

  • பிரேக்டவுன் அஸ்சிஸ்டன்ஸ் கவர்

  • இன்ஜின் மற்றும் கியர் புரொட்டெக்ஷன் கவர்

  • கன்ஸ்யூமபில் கவர்

நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஆட்-ஆன்களுடன் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350-ன் இன்சூரன்ஸ் விலையை சரிபார்த்து, அவற்றை ஒப்பிட்டுப் பார்ப்பதும் அவசியம்.

எனவே, இது போன்ற எண்ணற்ற நன்மைகளை வழங்குவதால், உங்கள் ராயல் என்ஃபீல்டு கிளாசிக்கிற்கான டூ-வீலர் இன்சூரன்ஸ் பாலிசி வாங்க டிஜிட் ஒரு சிறந்த தேர்வாக அமையும் என்பதில் எந்த சந்தகமும் இல்லை.

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் - வேரியண்ட் & எக்ஸ்-ஷோரூம் விலை

வேரியண்ட்ஸ் எக்ஸ்-ஷோரூம் விலை (நகரத்தைப் பொறுத்து மாறுபடலாம்)
ராயல் என்ஃபீல்டு கிளாசிக்
கிளாசிக் 350 ஏபிஎஸ், 40.8 கி.மீ/லி, 346 சிசி ₹ 153,444
கிளாசிக் 350 ரெட்டிச் ஏபிஎஸ், 40.8 கி.மீ/லி, 346 சிசி ₹ 153,444
கிளாசிக் 350 கன்மெட்டல் கிரே, 40.8 கி.மீ/லி, 346 சிசி ₹ 155,281
கிளாசிக் 350 சிக்னல்ஸ் எடிஷன், 40.8 கி.மீ/லி, 346 சிசி ₹ 163,635
கிளாசிக் 500 ஏபிஎஸ், 32 கி.மீ/லி, 499 சிசி ₹ 201,384
கிளாசிக் 500 ஸ்குவாட்ரன் புளூ, 32 கி.மீ/லி, 499 சிசி ₹ 204,519
கிளாசிக் 500 ஸ்டெல்த் பிளேக் , 32 கி.மீ/லி, 499 சிசி ₹ 204,519
கிளாசிக் 500 டெசர்ட் ஸ்டார்ம், 32 கி.மீ/லி, 499 சிசி ₹ 204,519
கிளாசிக் 500 கிரோம், 32 கி.மீ/லி, 499 சிசி ₹ 211,818
கிளாசிக் 500 பேகசஸ் எடிஷன், 499 சிசி ₹ 216,819

இந்தியாவில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் இன்சூரன்ஸ் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எனது ராயல் என்ஃபீல்டு கிளாசிக் இன்சூரன்ஸ் பாலிசி நீண்ட காலமாக காலாவதியாகியிருந்தால், அதனை என்னால் புதுப்பிக்க முடியுமா?

உங்கள் இன்சூரன்ஸ் பாலிசி நீண்ட காலமாக காலாவதியாகியிருந்தால், அதனை புதுப்பிக்க இயலாது. ஆனால், நீங்கள் புதிய பாலிசி ஒன்றைப் பெறலாம். அதற்கு ஆய்வு மேற்கொள்ளப்படும்.

எனது ராயல் என்ஃபீல்டு கிளாசிக் மோட்டார் பைக் சிறிய விபத்தில் சிக்கியதனால், நான் அதற்கு கிளைம் செய்யவில்லை என்றால் என்ன நடக்கும்?

உங்கள் மோட்டார் பைக்கில் ஏதேனும் சிறிய விபத்து மட்டுமே ஏற்பட்டால், நீங்கள் கிளைம் பதிவு செய்யாமல் இருந்து கொள்ளும் விருப்பத்தை தேர்வு செய்யலாம். என்சிபி நன்மைகளுடன் உங்கள் பாலிசியைப் புதுப்பிக்க இது உங்களை அனுமதிக்கும்.

ஒரு விபத்தில் யார் தேர்டு பார்ட்டியாக கருதப்படுகின்றனர்?

விபத்தால் பாதிக்கப்படும் போது, அந்த வண்டி ஓட்டுனரைத் தவிர வேறு எவரும் தேர்டு பார்ட்டியாகக் கருதப்படுவார்கள். இதில் பைக்கில் பிலியன் இருக்கையில் அமர்ந்திருப்பவரும் அடங்குவர்.