Third-party premium has changed from 1st June. Renew now
ஆன்லைனில் ஹோண்டா ஆக்டிவா இன்சூரன்ஸை வாங்கவும்/புதுப்பிக்கவும்
ஹோண்டா ஆக்டிவா வாங்க விரும்புகிறீர்களா? வெவ்வேறு மாடல் வகைகள், ஹோண்டா ஆக்டிவா இன்சூரன்ஸ் பாலிசியில் உள்ள விஷயங்கள் போன்ற நீங்கள் அறிய விரும்பும் அல்லது நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்துமே இங்கே கொடுக்கப்பட்டுள்ளன!
ஹோண்டா மோட்டார் நிறுவனத்தின் பைக்/ஸ்கூட்டர்களில் அதிகமாக விற்பனையாகும் வாகனம் ஹோண்டா ஆக்டிவா ஆகும், அதாவது இந்தியாவின் டூ-வீலர் விற்பனையில் 14%-க்கும் மேல் ஹோண்டா ஆக்டிவா விற்பனையாகிறது. கட்டுப்படியாகும் விலை, கவர்ச்சிகரமான தோற்றம் மற்றும் தொழில்நுட்ப ரீதியில் அதிசயத்தக்க பயன்பாடு என்று ஒரு சராசரி இந்திய நுகர்வோரை கவர்வதற்கான அனைத்து அம்சங்களையும் ஆக்டிவா தன்னகத்தே கொண்டுள்ளது. (1)
தற்போது ஆக்டிவா மாடலை வாங்குவதென்று நீங்கள் தீர்மானித்து விடுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம், அடுத்து ஆக்டிவா இன்சூரன்ஸ் வாங்குவது தான் சரியான அறிவுப்பூர்வமான முடிவாக இருக்க முடியும். ஆக்டிவாவின் எல்லா மாடல்களுமே பிஎஸ்-VI (BS-VI) அம்சத்திற்கு இணக்கமானதல்ல. எனினும், இந்த தனிக் குறிப்பீட்டினை உள்ளடக்கிய மாடல்களை மேலும் உருவாக்குவதற்கு ஹோண்டா திட்டமிட்டுள்ளது.
இப்போது, சந்தைகளில் முக்கியத்துவம் பெறுகின்ற பற்பல அம்சங்களும் ஹோண்டாவில் நிறைந்திருந்தாலும், எந்தவொரு மற்ற டூ-வீலரையும் போலவே இதுவும் விபத்துகளும், பிற அபாயங்களும் ஏற்படக் கூடிய தன்மையது தான். இப்பேற்பட்ட சூழ்நிலையில் தான் டூ-வீலர் இன்சூரன்ஸ் வாங்குவதென்பது முக்கியத்துவம் பெறுகின்றது.
மேற்கொண்டு, மோட்டார் பொருத்தப்பட்ட எந்தவொரு டூ-வீலர் வாகனமும் இந்திய சாலைகளில் செல்லுவதற்கு தேர்டு பார்ட்டி லையபிலிட்டி (பொறுப்பு) இன்சூரன்ஸ் பாலிசி வைத்திருப்பது சட்டப்படி கட்டாயமாகும். உங்களிடம் இந்த பாலிசி இல்லையென்றால், மோட்டார் வாகன (திருத்த) சட்டம் 2019-இன் படி, உங்களுக்கு ரூ.2000 அபராதம் விதிக்கப்படலாம். இதையே திரும்ப திரும்ப செய்யும் பட்சத்தில், ரூ.4000 அபராதம் விதிக்கப்படவும் வாய்ப்புள்ளது.
டூ-வீலர் இன்சூரன்ஸ் பாலிசிக்களை பற்றி மேற்கொண்டு தெரிந்து கொள்வதற்கு முன்பு, இதோ ஒரு நிமிடம் காத்திருக்கவும்!
ஆக்டிவா டூ-வீலர் இன்சூரன்ஸ் பாலிசியின் நன்மைகளை எவ்வாறு நீங்கள் மிகுதிப்படுத்திக் கொள்ள முடியும் என்பதையும், மற்ற எந்த வேறுபட்ட மாடல்களுக்கு நீங்கள் இந்த பாலிசியை பெற முடியும் போன்ற ஹோண்டா ஆக்டிவா பற்றிய சில சுவாரசியமான தகவல்களைப் பார்க்கலாம்.
ஹோண்டா ஆக்டிவா இன்சூரன்ஸில் எதற்கெல்லாம் காப்புறுதி வழங்கப்படுகின்றது
நீங்கள் ஏன் டிஜிட்-இன் ஹோண்டா ஆக்டிவா இன்சூரன்ஸை வாங்க வேண்டும்?
ஹோண்டா ஆக்டிவாவிற்கு கிடைக்கப்பெறும் இன்சூரன்ஸ் பிளானின் வகைகள்
தேர்டு பார்ட்டி பைக் இன்சூரன்ஸ் என்பது பைக் இன்சூரன்ஸின் மிகவும் பொதுவான வகைகளில் ஒன்றாகும்; இதில் தேர்டு பார்ட்டி நபர், வாகனம் அல்லது சொத்துக்கு ஏற்படும் சேதங்கள் மற்றும் இழப்புகள் மட்டுமே பாதுகாக்கப்படும்.
ஒரு காம்ப்ரிஹென்சிவ் (முழுமையானது) பைக் இன்சூரன்ஸ் என்பது பைக் இன்சூரன்ஸின் மிகவும் மதிப்புமிக்க வகைகளில் ஒன்றாகும். இது தேர்டு பார்ட்டி லையபிலிட்டிகள் மற்றும் உங்கள் சொந்த பைக்கின் சேதம் ஆகிய இரண்டையும் உள்ளடக்கும்.
தேர்டு பார்ட்டி | காம்ப்ரிஹென்சிவ் |
விபத்து காரணமாக சொந்த டூ-வீலருக்கு ஏற்படும் சேதங்கள்/இழப்புகள் |
|
ஒருவேளை தீ விபத்து ஏற்பட்டால், அதனால் உங்கள் சொந்த டூ-வீலருக்கு ஏற்படும் சேதங்கள்/இழப்புகள் |
|
இயற்கைப் பேரிடரின் போது டூ-வீலருக்கு ஏற்படும் சேதங்கள்/இழப்புகள் |
|
தேர்டு பார்ட்டி வாகனத்திற்கு ஏற்படும் சேதம் |
|
தேர்டு பார்ட்டி சொத்துக்களுக்கு சேதம் |
|
தனிப்பட்ட விபத்து காப்பீடு(பர்சனல் ஆக்சிடென்ட் கவர்) |
|
தேர்டு பார்ட்டி நபருக்கு காயங்கள்/இறப்பு |
|
உங்கள் ஸ்கூட்டர் அல்லது பைக் திருட்டு போய் விடுதல் |
|
உங்கள் ஐடிவி-யைத் தனிப்பயனாக்குங்கள் |
|
தனிப்பயனாக்கப்பட்ட ஆட்-ஆன்களுடன் கூடுதல் பாதுகாப்பு |
|
Get Quote | Get Quote |
காம்ப்ரிஹென்சிவ் மற்றும் தேர்ட் பார்ட்டி டூ வீலர் இன்சூரன்ஸைப் பற்றி மேலும் தெரிந்துக்கொள்ளுங்கள்.
ஹோண்டா ஆக்டிவா - வேறுபட்ட மாடல்கள்/வடிவங்கள் மற்றும் எக்ஸ்-ஷோரூம் விலை
வேறுபட்ட வடிவங்கள் |
எக்ஸ்-ஷோரூம் விலை (ஒவ்வொரு நகரத்திலும் வேறுபடக் கூடும்) |
ஆக்டிவா ஐ எஸ்டிடி (i STD), 66 கிமீ/லி, 109.19 சிசி (CC) | ரூ. 51,254 |
ஆக்டிவா 3ஜி எஸ்டிடி (3g STD), 60 கிமீ/லி, 109.19 சிசி (cc), தற்போது நிறுத்தப்பட்டிருக்கிறது | ரூ. 48,503 |
ஆக்டிவா 4ஜி எஸ்டிடி (4g STD), 60 கிமீ/லி, 109.19 சிசி (cc), தற்போது நிறுத்தப்பட்டிருக்கிறது | ரூ. 51,460 |
ஆக்டிவா 5ஜி எஸ்டிடி (5g STD), 60 கிமீ/லி, 109.19 சிசி (cc) | ரூ. 54,911 |
ஆக்டிவா 5ஜி லிமிட்டெட் எடிஷன் எஸ்டிடி (STD), 60 கிமீ/லி, 109.19 சிசி (cc) | ரூ. 55,311 |
ஆக்டிவா 5ஜி டிஎல்எக்ஸ் (5g DLX), 60 கிமீ/லி, 109.19 சிசி (cc) | ரூ. 56,776 |
ஆக்டிவா 5ஜி லிமிட்டெட் எடிஷன் டிஎல்எக்ஸ் (DLX), 60 கிமீ/லி, 109.19 சிசி (cc) | ரூ. 57,176 |
ஆக்டிவா 125 ஸ்டாண்டர்ட், 60 கிமீ/லி, 124.9 சிசி (cc) | ரூ. 60,628 |
ஆக்டிவா 125 ட்ரம் பிரேக் அலாய், 60 கிமீ/லி, 124.9 சிசி (cc) | ரூ. 62,563 |
ஆக்டிவா 125 டீலக்ஸ், 60 கிமீ/லி, 124.9 சிசி (cc) | ரூ. 65,012 |
எவ்வாறு கிளைம் செய்வதற்கு விண்ணப்பிக்க வேண்டும்?
எங்கள் டூ-வீலர் இன்சூரன்ஸ் திட்டத்தை நீங்கள் வாங்கிய பிறகு அல்லது புதுப்பித்த பிறகு, நீங்கள் எந்த வித டென்ஷன் இல்லாமல் வாழலாம். ஏனெனில், இந்த டிஜிட்டல் கிளைம் செயல்முறையை 3 எளிய ஸ்டெப்களில் செய்துவிடலாம் உள்ளது!
ஸ்டெப் 1
1800-258-5956-க்கு அழைக்கவும். எந்த படிவங்களும் நிரப்பப்பட வேண்டியதில்லை.
ஸ்டெப் 2
உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் சுய பரிசோதனைக்கான இணைப்பைப் பெறுங்கள். வழிகாட்டப்பட்ட படிப்படியான செயல்முறை மூலம் உங்கள் ஸ்மார்ட்போனிலிருந்து உங்கள் வாகனத்தின் சேதங்களை பதிவு செய்யவும்.
ஸ்டெப் 3
உங்களுக்கு விருப்பமான பழுதுபார்க்கும் முறையைத் தேர்வுசெய்யவும். அதாவது எங்களின் கேரேஜ் நெட்வொர்க் மூலம் ரீஇம்பர்ஸ்மெண்ட் அல்லது கேஷ்லெஸ் ஆகிய இரண்டில் ஒன்றை தேர்வு செய்யவும்.
ஹோண்டா ஆக்டிவா: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன
ஹோண்டா நிறுவனம் ஆக்டிவா ரேஞ்சினை (Activa range) 2001-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. விரைவிலேயே இந்திய நுகர்வோரிடமிருந்து இதற்கான அங்கீகாரம் கிடைக்கப்பெற்றது. இன்று, சந்தையில் குறிப்பிட்ட நுகர்வோர் தரப்பினருக்கு ஏற்ற, 4 முக்கியமான வேறுபட்ட ஸ்கூட்டர் வடிவங்களை ஹோண்டா தயாரிக்கிறது.
இந்த டூ-வீலர்களை நீங்கள் வாங்க விரும்பினால், ஆக்டிவா பற்றிய கீழ்க்கண்ட சில சுவாரசியமான தகவல்களை நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும் –
2009-ஆம் ஆண்டு, ஹோண்டா நிறுவனம் மேம்படுத்தப்பட்ட 109சிசி (cc) மாடல் வண்டியை தயாரித்தது. விலையை அதிகப்படுத்தாமல் என்ஜின் ஆற்றல் மிகுந்த ஒரு மாடலாக இதனை அறிமுகப்படுத்தியது. இன்னும் சொல்லப் போனால், இந்த புதிய மாடல் ஸ்கூட்டரை உபயோகப்படுத்துவது எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துவதற்கு உதவும் என்று ஹோண்டா தெரிவித்தது.
ஆக்டிவா 125-ஐ (i), 125சிசி (cc) என்ஜின் ஆற்றலுடன் கூடிய ஒரு புதிய அப்கிரேடாக (upgrade) ஹோண்டா அறிமுகப்படுத்தியது.
2019-ஆம் ஆண்டில், ஆக்டிவா 5ஜி-ஐ (5g) இந்திய சந்தைக்கு இந்த நிறுவனம் கொண்டு வந்தது. இந்த வண்டியில், உயர்தர இருக்கை, முழுமையாக கருப்பு நிறமய என்ஜின், கருப்பு சக்கர சட்டகங்கள் (rims) போன்றவை உள்ளிட்ட 10 புதிய அம்சங்கள் இடம் பெற்றிருப்பதாக ஹோண்டா தெரிவித்தது.
ஆக்டிவா ரேஞ்சு வண்டி உங்கள் பட்ஜெட்டிற்கு ஏற்ற ஒரு வண்டியாகும். அது மட்டுமின்றி, மாடல் விலைகளை ஏதும் அதிகப்படியாக உயர்த்தாமலேயே ஹோண்டா நிறுவனம் மாடல்களை தொடர்ந்து அப்கிரேட் செய்து வருகிறது. எனவே, இந்த வண்டிகள் நீண்ட காலத்திற்கு இயங்கும் தன்மையில் தயாரிக்கப்பட்டுள்ளன.
இத்தகைய அம்சங்களின் காரணமாக, இந்திய சந்தையில் கிடைக்கப்பெறும் திறன்மிக்க, நம்பகமான பைக்-களில் ஹோண்டா ஆக்டிவாவும் ஒன்றாக கருதப்படுகின்றது.
உங்கள் ஆக்டிவா வண்டி ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு செல்வதற்கு உபயோகமாகயிருக்கும் வேளையில், ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அது சேதமடைந்தாலோ, அல்லது திருடு போய் விட்டாலோ என்ன ஆகும் என்று யோசித்துப் பார்த்தீர்களா?
இவ்வாறு நடைபெறும் சூழ்நிலையில், நீங்கள் அதனை பழுது நீக்கவோ அல்லது அதன் பாகங்களை மாற்றுவதற்கோ அதிகமாக செலவு செய்ய வேண்டியிருக்கும். இது போன்ற சமயங்களில் நீங்கள் பொருளாதார ரீதியில் பாதுகாப்புடன் இருப்பதற்கு, உங்கள் ஹோண்டா ஆக்டிவாவிற்கு டூ-வீலர் இன்சூரன்ஸ் பாலிசி எடுப்பது முக்கியமாகும்.
இன்சூரன்ஸ் பாலிசியின் மூலம் கிடைக்கப்பெறும் நன்மைகளை கருத்தில் கொண்டு, உங்கள் வண்டிக்கான சிறந்த இன்சூரன்ஸ் பாலிசியை நீங்கள் தேர்வு செய்ய விரும்பினால், டிஜிட் உங்களுக்கான பொருத்தமான விருப்பத்தேர்வுகளில் ஒன்றாகும்.
உங்கள் ஹோண்டா ஆக்டிவாவிற்கு இன்சூரன்ஸ் பாலிசி எடுப்பதற்கு ஏன் டிஜிட்-ஐ தேர்வு செய்ய வேண்டும்?
மார்க்கெட்டில் எண்ணற்ற விருப்பங்கள் இருப்பதால், மற்றவற்றிலிருந்து டிஜிட் இன்சூரன்ஸை வேறுபடுத்துவது எது என்று நீங்கள் ஆச்சரியப்படுவது சகஜமான ஒன்று தான். எங்களிடமிருந்து ஸ்ப்ளெண்டர் பைக் இன்சூரன்ஸ் பாலிசியைப் பெறும்போது நீங்கள் பெறக்கூடிய சில அம்சங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன:
- ஆன்லைன் கிளைம் ப்ராஸஸ்- உங்கள் நேரத்தின் முக்கியத்துவத்தை டிஜிட் புரிந்துகொள்கிறது. எனவே, பாலிசிகளைப் பெறுவதற்கும் கிளைம் செய்வதற்கும் டிஜிட்டில் டிஜிட்டல் செயல்முறை உள்ளது. இன்சூரன்ஸ் பாலிசிகளை பெற நீங்கள் கிளைம்களை எழுப்பும்போது, இன்சூரரிடம் பல டாக்குமெண்டுகளை சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை. மேலும், டிஜிட் ஸ்மார்ட்போன் மூலம் இயக்கப்பட்ட சுயஆய்வு-பரிசோதனை செயல்முறையை வழங்குகிறது. இது கிளைம் செயல்முறையை மேலும் சீராக்குகிறது. மேலும், டிஜிட்டின் உயர் கிளைம் செட்டில்மெண்ட் ரேஷியோ உங்கள் கிளைம் நிராகரிக்கப்படும் வாய்ப்பைக் குறைக்கும் மற்றொரு சிறப்பு அம்சமாகும்.
- அதிக எண்ணிக்கையிலான நெட்வொர்க் கேரேஜ்கள் மூலம் கேஷ்லெஸ் கிளைம்கள் எளிதாக்கப்படுகின்றன- நாடு முழுவதும் உள்ள 1,000க்கும் மேற்பட்ட நெட்வொர்க் கேரேஜ்களில் இருந்து கேஷ்லெஸ் ஆக்சிடெண்டல் ரிப்பேர்ஸ் பெறுவதற்கு டிஜிட் உங்களைத் தகுதிபெறச் செய்கிறது. விபத்து காரணமாக உங்கள் பைக் சேதமடைந்து பழுதுபார்க்க வேண்டியிருந்தால், அருகிலுள்ள நெட்வொர்க் கேரேஜைப் பார்த்து, கேஷ்லெஸ் ரிப்பேர்ஸைப் பெறலாம். இந்தசூழ்நிலைகளில், உங்கள் டிஜிட் பாலிசியை உடனடியாகப் பயன்படுத்தலாம். இதன் மூலம், நீங்கள் உங்கள் சொந்த பணத்தை செலவழிக்க வேண்டிய தேவையை நீக்குகிறது.
- திறமையான 24x7 மணி நேர வாடிக்கையாளர் பராமரிப்பு சேவை- நடுப்பகல், இரவு என்ற வேறுபாடு இன்றி எந்த நேரத்திலும் விபத்துகள் நிகழலாம். எனவே, ஒரு இன்சூரன்ஸ் விற்பனை செய்யும் நிறுவனமானது எல்லா நேரங்களிலும் கிளைம் தாக்கல் மற்றும் பிற சிக்கல்களைத் தீர்க்க தயாராக இருக்க வேண்டும். அதிர்ஷ்டவசமாக, டிஜிட்டின் வாடிக்கையாளர் உதவித் மையமானது தேசிய விடுமுறை நாட்களில் கூட வாடிக்கையாளர்களுக்கு 24 மணிநேரமும் சேவையை வழங்குகிறது. உங்கள் பாலிசி தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தாலும் அல்லது விபத்துகள் குறித்து நிறுவனத்திற்கு தெரிவிக்க விரும்பினாலும், நிறுவனத்தின் பிரதிநிதியை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம்.
- தேர்வு செய்ய பல்வேறு வகையான ஸ்ப்ளெண்டர் இன்சூரன்ஸ் பாலிசிகள்- டிஜிட்டானது நுகர்வோர் தங்களுக்கு எது சிறந்தது என்பதைத் தீர்மானிக்க அனுமதிக்கிறது. இதைக் கருத்தில் கொண்டு, அவர்கள் பின்வரும் வகையான ஹீரோ ஸ்ப்ளெண்டர் பிளஸ் இன்சூரன்ஸ் பாலிசிகளை வழங்குகிறார்கள்:
- அ)தேர்டு பார்ட்டி லையபிலிட்டி டூ-வீலர் இன்சூரன்ஸ் பாலிசி – இந்த இன்சூரன்ஸ் பாலிசியானது உங்கள் டூ-வீலர் வாகனத்தால் ஏதேனும் மூன்றாம் தரப்பு வாகனம், சொத்து அல்லது தனிநபருக்கு ஏற்படும் சேதங்களால் உங்களுக்கு ஏற்படும் நிதி இழப்புகளை ஈடுசெய்கிறது
- ஆ) காம்ப்ரிஹென்சிவ் (விரிவான) டூ-வீலர் இன்சூரன்ஸ் பாலிசி– இது ஒரு முழுமையான பாதுகாப்புத் திட்டமாகும். இது விபத்துக்களால் ஏற்படும் சொந்த சேதம் மற்றும் மூன்றாம் தரப்பு சேதம் ஆகிய இரண்டிற்கும் கவரேஜ் வழங்குகிறது. கூடுதலாக, அத்தகைய யமஹா மோட்டார் இன்சூரன்ஸ் பாலிசி தீ, திருட்டு அல்லது இயற்கை மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட பேரிடர்களால் ஏற்படும் சேதம் ஏற்பட்டால் நிதிப் பலன்களைப் பெற உங்களை அனுமதிக்கிறது.
மேலும், உங்கள் ஸ்ப்ளெண்டர் டூ வீலருக்கான சொந்த சேத பாதுகாப்பையும் நீங்கள் பெறலாம். செப்டம்பர் 2018க்குப் பிறகு உங்கள் ஸ்ப்ளெண்டர் பைக்கை நீங்கள் வாங்கியிருந்தால், இது ஒப்பீட்டளவில் புதிய இன்சூரன்ஸ் பாலிசியாகும். டிஜிட்டின் சொந்த சேத பாதுகாப்பில், அத்தகைய திட்டத்தின் தேர்டு பார்ட்டி லையபிலிட்டி பகுதியைத் தவிர்த்து, காம்ப்ரிஹென்சிவ் (விரிவான) பாலிசிகளில் பொதுவாகக் காணப்படும் விரிவான பாதுகாப்பைப் பெறலாம்.
நீங்கள் தேர்ந்தெடுக்கும் பாலிசி எதுவாக இருந்தாலும், துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் ஏற்படும் பட்சத்தில் அது உங்கள் நிதிப் லையபிலிட்டியைக் கணிசமாகக் குறைக்கிறது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
- கஸ்டமைஸபிள் இன்சுர்டு டெக்லேர்டு வேல்யூ- உங்கள் டூ வீலர் இன்சூரன்ஸ் பாலிசியின் கீழ் வழங்கப்படும் இன்சுர்டு டெக்லேர்டு வேல்யூ அல்லது ஐடிவி என்பது, உங்கள் பைக் திருடப்பட்டாலோ அல்லது பழுதுபார்க்க முடியாத அளவுக்கு சேதமடைந்தாலோ, டிஜிட் உங்களுக்குச் செலுத்தும் முன்னரே தீர்மானிக்கப்பட்ட தொகையை குறிக்கிறது. இன்சுர்டு டெக்லேர்டு வேல்யூ என்பது பைக் மாடலின் உற்பத்தியாளரின் விலை மைனஸ் டிப்ரிஸியேஷன் (தேய்மானம்)க்கு சமமான மதிப்பாக உள்ளது. டிஜிட் உங்களுக்கு அதிக ஐடிவியை வழங்குகிறது. மேலும் உங்கள் ஐடிவியைத் தனிப்பயனாக்க உங்களை அனுமதிக்கிறது, இது உங்கள் டூ வீலர் இன்சூரன்ஸ் பாலிசியிலிருந்து உங்கள் பலன்களை அதிகரிக்க உதவுகிறது.
- நோ கிளைம் போனஸ்- உங்கள் பாலிசியை ஒரு முறை கூட கிளைம் செய்யாமல் முழு இன்சூரன்ஸ் காலத்தையும் நீங்கள் கடந்துவிட்டால், உங்கள் பாலிசி பிரீமியத்தில் என்சிபி (NCB) அல்லது நோ-கிளைம் போனஸ் பலன்களுக்கு நீங்கள் தகுதி பெறுவீர்கள். அடுத்தடுத்த கிளைம்-இல்லாத வருடங்களுக்கு, உங்கள் என்சிபி (NCB)-யானது இணைக்கப்பட்டு (இது மேலும் 50% வரை செல்லலாம்), குறைந்த இன்சூரன்ஸ் பிரீமியங்களில் சிறந்த பாதுகாப்பை உங்களுக்கு தருகிறது. டிஜிட்டின் கவரக்கூடிய இந்த என்சிபி சலுகை, நிறுவனத்தின் பாலிசிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான மற்றொரு காரணமாக அமைகிறது.
உங்கள் இன்சூரன்ஸ் பாலிசியை மாற்றியமைக்க ஆட்-ஆன் கவர்களின் கிடைக்கும் தன்மை- உங்கள் விருப்பப்படி பல்வேறு ஆட்-ஆன்கள் மூலம் பாலிசியை மாற்றுவதற்கு டிஜிட் உங்களை அனுமதிக்கிறது. உங்கள் பைக்கிற்கு ஏதேனும் சேதம் ஏற்பட்டால் இந்த முழுமையான பாதுகாப்பு உங்கள் நிதி பாதுகாப்பை மேம்படுத்துகிறது. டிஜிட்டின் டூ வீலர் இன்சூரன்ஸ் பாலிசியின் கீழ் நீங்கள் பெறக்கூடிய சில ஆட்-ஆன்கள்:
- ஜீரோ டிப்ரிசியேஷன் கவர்
- இன்ஜின் மற்றும் கியர் புரொட்டெக்ஷன் கவர்
- பிரேக்டவுன் அஸ்சிஸ்டன்ஸ் கவர்
- கன்ஸ்யூமபில் கவர்
- ரிட்டர்ன் டூ இன்வாய்ஸ் கவர்
இதுபோன்ற பல வகையான பலன்களுடன், டிஜிட்டின் குறைந்த விலை ஸ்ப்ளெண்டர் டூ வீலர் இன்சூரன்ஸ் பாலிசிகள் டூ வீலர் சம்மந்தமான அனைத்து வகையான நிதிப் பாதுகாப்பையும் வழங்குகின்றன
பிரபல ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர்களுக்கான டூ-வீலர் இன்சூரன்ஸ்
பலதரப்பட்ட ஹோண்டா ஆக்டிவா மாடல்களுக்கு டிஜிட் நிறுவனம் பிரத்யேகமாக இன்சூரன்ஸ் பாலிசிக்களை வடிவமைத்திருக்கிறது. இந்த குறிப்பிட்ட வகை ஸ்கூட்டர்களுக்கான பிளான்களுள் சிலவற்றை பார்க்கவும்:
- ஆக்டிவா 3ஜி - ஆக்டிவா 3ஜி (3g) கவர்ச்சிகரமான உடலமைப்போடு விளங்குகிறது, மேலும் 52 கிமீ/லி மைலேஜ் கொடுக்கிறது. இந்த ஸ்கூட்டரின் மற்ற மாடல்களைப் போலவே, இதுவும் 109 சிசி (cc) என்ஜினை கொண்டிருக்கிறது. இந்த மாடலில் 5.3 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் தொட்டி உள்ளது.
- ஆக்டிவா 4ஜி - ஆக்டிவா 4ஜி (4g) 109 சிசி (cc) என்ஜினுடன் ஏறக்குறைய 60 கிமீ/லி மைலேஜை கொடுக்கிறது. இந்த வகையில் முந்தைய வெர்ஷனை விடவும் 4ஜி (4g) சிறப்பாக உள்ளது. ஆக்டிவா 4ஜி (4g) வாகனம் எட்டு முதன்மையான நிறங்களுடன் நுகர்வோர்களின் பயன்பாட்டிற்கு வந்திருக்கிறது.
- ஆக்டிவா 5ஜி (5g)- ஹோண்டா ஆக்டிவா ரேஞ்சின் புதிய மாடல்களில் ஒன்றான ஹோண்டா ஆக்டிவா 5ஜி (5g), தொழில்நுட்ப ரீதியாக ஒரு தலைசிறந்த படைப்பாகும். இது 109சிசி (cc) சிலிண்டர் உள்ளிட்ட, கட்டிங் எட்ஜ் தொழில்நுட்பத்தில் வருகிறது. மேலும், இந்த மாடல் 60 கிமீ/லி மைலேஜ் கொடுப்பதாக நிறுவனம் தெரிவிக்கிறது. இந்த மாடல் அதிகபட்சமான 83 கிமீ/லி வேகத்தில் செல்லக் கூடியது என்னும் தகவல், அதிக வேகத்தில் செல்வதை விரும்புபவர்களுக்கு ஒரு மகிழ்ச்சிகரமான செய்தியாகும். இவ்வாறு அதிக வேகத்தில் செல்வதினால் விபத்துகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. எனவே, டிஜிட்-லிருந்து ஆக்டிவா இன்சூரன்ஸ் பாலிசியை வாங்குவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
- ஆக்டிவா 125 – ஆக்டிவா 125 வண்டி 124.9 சிசி (cc) – சிங்கிள் சிலிண்டர் என்ஜினை கொண்டிருக்கிறது. மேலும் அலாய் சக்கரங்கள், மொபைல் சார்ஜ் செய்வதற்கான சாக்கெட் மற்றும் எல்ஈடி பைலட் லேம்ப்கள் போன்றவை உள்ளிட்ட பல அம்சங்களை கொண்டுள்ளது. இந்த ஸ்கூட்டரானது, ஒரு சாதாரண ஹோண்டா ஆக்டிவா மாடலை விடவும் சிறிதளவு அதிக ஆற்றலுடன் இயங்கும் டூ-வீலர்களை விரும்பும் நபர்களுக்கு ஒரு சிறந்த விருப்பத்தேர்வாக இருக்கும். ஹோண்டா ஆக்டிவாவின் சமீபத்திய மாடலும் கூட பிஎஸ்-VI ஸ்டாண்டர்டுகளுக்கு இணக்கமாக உள்ளது, இதனால் இந்தியாவின் சுற்றுச்சூழலை பாதுகாக்க உதவுகின்ற ஒரு சிறப்பான ஸ்கூட்டராக இது விளங்குகின்றது.
- ஆக்டிவா ஐ – ஆக்டிவா ஐ (i) 66 கிமீ/லி மைலேஜினை வழங்குவதோடு மட்டுமின்றி, நுகர்வோர்களுக்கு கட்டுப்படியாகும் விலையில் கிடைக்கின்ற மாடல்களில் ஒன்றாகும். இருப்பினும் கூட, இன்சூரன்ஸ் பாலிசி எடுப்பது மிக முக்கியமானது. எல்லா சூழ்நிலைகளுக்கும், சந்தர்ப்பங்களுக்கும் காப்புறுதியளிக்கும் விதமாக, வாகனத்திற்கு ஏற்ற பொருத்தமான பிளான்களை டிஜிட் வழங்குகிறது.
டிஜிட் எல்லா சந்தர்ப்பங்களிலும் பாதுகாப்பளிக்கின்ற ஒரு நம்பகமான இன்சூரன்ஸ் ஆகும். இந்த நிறுவனத்தில் நீங்கள் எடுக்கும் பாலிசி உங்களின் முழுமையான பொருளாதார பாதுகாப்பிற்கு உத்தரவாதமளிக்கிறது, அதாவது விபத்து அல்லது உங்களுக்கு பிரியமான டூ-வீலர் திருடு போகும் தருணங்களில் உங்களுக்கு காப்புறுதி பாதுகாப்பளிக்கின்றது.
இந்தியாவில் ஹோண்டா ஆக்டிவா டூ-வீலர் இன்சூரன்ஸ் குறித்து அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
நான் என்னுடைய பாலிசியை உரிய தேதிக்குள் புதுப்பிக்க தவறினால் என்ன ஆகும்?
பிளான் காலாவதியாவதற்கு முன்பு நீங்கள் அதனை புதுப்பிக்க தவறினால், உங்கள் பாலிசி காப்புறுதி காலாவதியாகி விடும். சேர்த்து வைக்கப்பட்ட எல்லா என்சிபி-க்களும் (NCB), மற்ற பலன்களும் கூட முடிவடைந்து விடும். உங்கள் டூ-வீலருக்கு தொடர்ந்து பாதுகாப்பளிப்பதற்கு நீங்கள் புதிய பாலிசியை வாங்க வேண்டியிருக்கும். மேலும், உங்களிடம் பாலிசி இல்லாத காரணத்தால், டிராஃபிக் விதிமீறல்களுக்காக உங்களுக்கு ரூ.2000 அபராதம் கூட விதிக்கப்படலாம் (தொடர்ந்து இது நடைபெறும் பட்சத்தில் ரூ.4000 விதிக்கப்படும்).
என்னுடைய ஹோண்டா ஆக்டிவாவிற்கான ஐடிவி-ஐ எவ்வாறு கணக்கிடுவது?
இன்சுர்டு டெக்லேர்டு வேல்யூ என்பது, தேய்மானத்திற்கான செலவினைக் கழித்து விட்டு டூ-வீலர் மாடலுக்கு அதன் தயாரிப்பாளர் வழங்குகின்ற விலையை குறிக்கிறது. நீங்களே கணக்கிட்டுப் பார்ப்பது கடினமாக தோன்றினால், ஆன்லைனில் கிடைக்கப்பெறும் ஐடிவி கால்குலேட்டர்களை நீங்கள் பயன்படுத்தலாம்.
என்னுடைய ஆக்டிவா டூ-வீலர் இன்சூரன்ஸிற்கான பிரீமியம் தொகையினை டிடக்டிபிள்ஸ் (Deductibles) உதவியுடன் நான் குறைத்துக் கொள்ள முடியுமா?
ஆம். டூ-வீலர் இன்சூரன்ஸ் பிளானிற்கு செலுத்தக் கூடிய பிரீமியம் தொகையினை குறைப்பதற்கு டிடக்டிபிள்ஸ் உதவுகின்றது. தன்னிச்சையான டிடக்டிபிள்ஸை தேர்வு செய்வதன் மூலமாக, உங்கள் ஆக்டிவா டூ-வீலர் இன்சூரன்ஸ் பாலிசியின் பிரீமியம் தொகையினை நீங்கள் குறைத்துக் கொள்ளலாம்.