ஹீரோ ஹெச்எஃப்(HF) டீலக்ஸ் பைக் இன்சூரன்ஸ்

டிஜிட் இன்சூரன்ஸிற்கு மாறுங்கள். 3 கோடி இந்தியர்களால் நம்பப்படுகிறது

Third-party premium has changed from 1st June. Renew now

ஹீரோ நிறுவனமானது ஆரம்ப-நிலை வண்டியாக, 100சிசி ஆற்றலுடன் கூடிய, பிஎஸ்6-க்கு இணக்கமான கம்யூட்டர் பைக்காக (தினசரி உபயோகத்திற்கான பைக்) ஹெச்எஃப் டீலக்ஸ் ரேஞ்சினை ஏப்ரல் மாதம் 2020-இல் அறிமுகப்படுத்தியது. பின்னர் இதன் தயாரிப்பாளர் எரிபொருள் சேமிப்பின் பொருட்டு ஐ3எஸ் எனப்படும் பிரத்யேக அம்சத்தை இந்த பைக்கில் அறிமுகப்படுத்தினார். தற்போது 6 வேரியண்ட்கள் (மாற்று வடிவம்) கிடைக்கின்றன, கட்டுப்படியாகும் விலையில் பைக் வாங்குவதற்கு ஹெச்எஃப் டீலக்ஸ் மாடல்கள் தான் ஏற்றவை.

ஏற்கனவே இந்த பைக் வாங்கியவர்கள் அல்லது வாங்க திட்டமிட்டிருப்பவர்கள், தங்களின் பொருளாதார பாதுகாப்பிற்காக ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் பைக் இன்சூரன்ஸ் வாங்குவது மிக முக்கியமாகும்.

இதன் பொருட்டு, நீங்கள் கூடுதல் பெனிஃபிட்களுடன் கூடிய கட்டுப்படியாகும் விலையில் கிடைக்கப்பெறும், சௌகரியமான டூ-வீலர் பாலிசி திட்டங்களுக்கு டிஜிட் இன்சூரன்ஸை பரிசீலிக்கலாம்.

ஹீரோ ஹெச்எஃப்(HF) டீலக்ஸ் இன்சூரன்ஸில் எதற்கெல்லாம் காப்பீடு வழங்கப்பட்டிருக்கிறது

டிஜிட்டின் ஹீரோஸ்ப்ளெண்டர் இன்சூரன்ஸை நீங்கள் ஏன் வாங்க வேண்டும்?

ஹீரோ ஸ்பிளெண்டருக்கான காப்பீட்டுத் திட்டங்களின் வகைகள்

தேர்டு பார்ட்டி காம்ப்ரிஹென்சிவ்

விபத்து காரணமாக சொந்த டூ-வீலருக்கு ஏற்படும் சேதங்கள்/இழப்புகள்

×

ஒருவேளை தீ விபத்து ஏற்பட்டால், அதனால் உங்கள் சொந்த டூ-வீலருக்கு ஏற்படும் சேதங்கள்/இழப்புகள்

×

இயற்கைப் பேரிடரின் போது டூ-வீலருக்கு ஏற்படும் சேதங்கள்/இழப்புகள்

×

தேர்டு பார்ட்டி வாகனத்திற்கு ஏற்படும் சேதம்

×

தேர்டு பார்ட்டி சொத்துக்களுக்கு சேதம்

×

தனிப்பட்ட விபத்து காப்பீடு(பர்சனல் ஆக்சிடென்ட் கவர்)

×

தேர்டு பார்ட்டி நபருக்கு காயங்கள்/இறப்பு

×

உங்கள் ஸ்கூட்டர் அல்லது பைக் திருட்டு போய் விடுதல்

×

உங்கள் ஐடிவி-யைத் தனிப்பயனாக்குங்கள்

×

தனிப்பயனாக்கப்பட்ட ஆட்-ஆன்களுடன் கூடுதல் பாதுகாப்பு

×
Get Quote Get Quote

காம்ப்ரிஹென்சிவ் மற்றும் தேர்ட் பார்ட்டி டூ வீலர் இன்சூரன்ஸைப் பற்றி மேலும் தெரிந்துக்கொள்ளுங்கள்.

 

எவ்வாறு கிளைமை தாக்கல் செய்ய வேண்டும்?

எங்கள் டூ-வீலர் இன்சூரன்ஸ் திட்டத்தை நீங்கள் வாங்கிய பிறகு அல்லது புதுப்பித்த பிறகு, நீங்கள் எந்த வித டென்ஷன் இல்லாமல் வாழலாம். ஏனெனில், இந்த டிஜிட்டல் கிளைம் செயல்முறையை 3 எளிய ஸ்டெப்களில் செய்துவிடலாம் உள்ளது!

ஸ்டெப் 1

1800-258-5956-க்கு அழைக்கவும். எந்த படிவங்களும் நிரப்பப்பட வேண்டியதில்லை.

ஸ்டெப் 2

உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் சுய பரிசோதனைக்கான இணைப்பைப் பெறுங்கள். வழிகாட்டப்பட்ட படிப்படியான செயல்முறை மூலம் உங்கள் ஸ்மார்ட்போனிலிருந்து உங்கள் வாகனத்தின் சேதங்களை பதிவு செய்யவும்.

ஸ்டெப் 3

உங்களுக்கு விருப்பமான பழுதுபார்க்கும் முறையைத் தேர்வுசெய்யவும். அதாவது எங்களின் கேரேஜ் நெட்வொர்க் மூலம் ரீஇம்பர்ஸ்மெண்ட் அல்லது கேஷ்லெஸ் ஆகிய இரண்டில் ஒன்றை தேர்வு செய்யவும்.

டிஜிட் இன்சூரன்ஸ் கிளைம்கள் எவ்வளவு விரைவாக தீர்க்கப்படுகின்றன? உங்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்தை மாற்றும்போது உங்கள் மனதில் எழும் முதல் கேள்வி இது தான். அது சரியானதும் கூட! டிஜிட்டின் கிளைமஸ் ரிப்போர்ட் கார்டை வாசிக்கவும்

ஹீரோ ஹெச்எஃப்(HF) டீலக்ஸ்: சக்திவாய்ந்த பைக்கில் பயணம்

ஹெச்எஃப் டீலக்ஸ் வண்டிக்கு டிஜிட் இன்சூரன்ஸ் எடுப்பது ஏன் சரியானதொரு தேர்வு என்பதற்கான காரணங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

சௌகரியமான விருப்பத் தேர்வுகள் – ஓட்டுநர்களின் பலவிதமான தேவைகளை கவனத்தில் கொண்டு டிஜிட் நிறுவனம் தன்னுடைய பாலிசிக்களை வடிவமைத்திருக்கிறது. தேவையற்ற கடப்பாடுகளை தவிர்ப்பதற்கு ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் உரிமையாளர்கள் கீழ்க்கண்ட திட்டங்களில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம்.

தேர்டு-பார்ட்டி லையபிலிட்டி (பொறுப்பு) ஸ்கீம் – உங்கள் டூ-வீலரின் மூலம் ஏற்பட்ட தேர்டு-பார்ட்டி சேதங்களுக்கு இந்த திட்டம் பாதுகாப்பளிக்கிறது. பாதிக்கப்பட்ட தரப்பு நேரடியாகவே உங்கள் இன்சூரரிடம் தங்களுக்குண்டான சேதங்களுக்கு இழப்பீடு கேட்கலாம்.

ஆயினும், தேர்டு-பார்ட்டி பாலிசி என்பது சொந்த பைக்கிற்கு ஏற்படும் சேதங்களுக்கு காப்புறுதி அளிக்காது.

ஆகவே, பொருளாதார பாதுகாப்பு வேண்டி, தேர்டு-பார்ட்டி பாலிசிதாரர்கள் ஒரு ஸ்டாண்ட்அலோன் ஓன் பைக் டேமேஜ் கவரை வாங்கிக் கொள்ளலாம்.

காம்ப்ரிஹென்சிவ் (முழுமையான) ஸ்கீம் – இது தேர்டு-பார்ட்டி மட்டுமல்லாமல், சொந்த பைக்கிற்கு ஏற்படும் சேதங்களுக்கும் பாதுகாப்பு வழங்குகின்ற ஒரு முழுமையான பாலிசியாகும். அது மட்டுமின்றி, நீங்கள் வெள்ளம், நிலநடுக்கம், தீவிபத்து, திருட்டு மற்றும் பிற ஆபத்துகளின் போதும் காப்புறுதி பாதுகாப்பினை பெறலாம்.

ஆன்லைனிலேயே வாங்குகின்ற, புதுப்பிக்கும் வாய்ப்புகள் – டிஜிட் தங்களுடைய வாடிக்கையாளர்கள் ஆன்லைனிலேயே பாலிசிக்களை வாங்கவும் அல்லது புதுப்பிக்கவும் வசதியாக 100% டிஜிட்டல்மயமான வாய்ப்பினை வழங்கியுள்ளது. ஆன்லைனில் ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் இன்சூரன்ஸை புதுப்பிப்பதற்கு தற்போதைய வாடிக்கையாளர்கள் தங்களுக்குரிய கணக்குகளில் லாக்-இன் செய்ய வேண்டும். மற்றும் புதிய வாடிக்கையாளர்கள் ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் இன்சூரன்ஸை ஆன்லைனில் வாங்குவதற்கு அதிகாரபூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.

உடனடி கிளைம் செட்டில்மெண்ட் – டிஜிட்-இல், உங்களுடைய பெரும்பாலான கிளைம்கள் குறைந்தபட்ச நேரத்திலேயே செட்டில் செய்யப்படும் என்பதை நீங்கள் உறுதியாக நம்பலாம். உடனடி செட்டில்மென்டிற்கு, டிஜிட் ஸ்மார்ட் ஃபோன் மூலமாக செய்யப்படும் சுய-ஆய்வு நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட படங்களை நீங்கள் இந்த வழிமுறையில் சமர்ப்பித்து கிளைம் செய்வதற்கு விண்ணப்பிக்கலாம்.

ஆட்-ஆன் கவர்களுடன் பாலிசி திருத்தங்கள்  – கீழ்க்கண்ட ஆட்-ஆன் கவர்களில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்வதன் மூலம் உங்கள் பாதுகாப்பினை நீங்கள் அதிகரித்துக் கொள்ளலாம். டிஜிட் வழங்குபவை பின்வருமாறு-

o    ஜீரோ டிப்ரிஸியேஷன் கவர்

o    கன்ஸ்யூமபில் கவர்

o    டயர் புரொட்டெக்ஷன்

o    ரிடர்ன் டூ இன்வாய்ஸ் கவர் மற்றும் பல

ஐடிவி-ஐ (IDV) தனிப்பயனாக்கும் வசதி ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸிற்கான  உங்கள் டூ-வீலர் இன்சூரன்ஸை மேலும் வலுவாக்குவதற்கு, உங்கள் இன்சுர்டு டெக்லேர்டு வேல்யூவினை அதிகப்படுத்துவதற்கு அல்லது குறைப்பதற்கான வாய்ப்பினை டிஜிட் வழங்குகிறது. இந்த பெனிஃபிட்-ஐ நீங்கள் பெறுவதற்கு உங்களின் பிரீமியத்தை தக்கவாறு அமைத்துக் கொண்டாலே போதுமானது.

நாடு முழுவதிலும் உள்ள நெட்வொர்க் கேரேஜ்கள்  – இந்தியா முழுவதிலும் 2900-க்கும் மேல் டிஜிட்-இன் நெட்வொர்க் பைக் கேரேஜ்கள் உள்ளன. கேஷ்லெஸ் ரிப்பேர்களை பெறுவதற்கு அருகிலுள்ள ஏதேனும் ஒரு கேரேஜிற்கு செல்லவும்.

24x7 மணி நேர வாடிக்கையாளர் சேவை – இன்சூரன்ஸ் சம்பந்தமான கேள்விகளுக்கு 1800 258 5956 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும். டிஜிட்-இன் வாடிக்கையாளர் சேவை வழங்குநர்கள் உங்களுக்கு உடனடியாக உதவிகளை செய்வதற்கு 24 மணி நேரமும் தயாராக இருக்கிறார்கள்.

மேற்கொண்டு, அநாவசியமான கிளைம்களை தவிர்ப்பதன் மூலமும், அதிகமான டிடக்டபிள்ஸை (கழிப்புத் தொகை) தேர்வு செய்வதன் மூலமும் உங்களின் பிரீமியத்தினை நீங்கள் குறைக்கலாம்.

உங்கள் ஹீரோ ஹெச்எஃப்(HF) டீலக்ஸ் பைக் இன்சூரன்ஸிற்கு ஏன் டிஜிட்-ஐ தேர்வு செய்ய வேண்டும்?

சமீபத்திய புதிய தொழில்நுட்பங்கள் உள்ள போதிலும் கூட, எந்தவொரு டூ-வீலரும் விபத்துகளுக்கும், பிற கெடுவாய்ப்பான சேதங்களுக்கும் ஆளாகக் கூடியது தான். எனவே இதன் பொருட்டு, டூ-வீலர் இன்சூரன்ஸ் எடுப்பது கீழ்க்காணும் தவிர்க்க முடியாத செலவுகளிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு உதவும்-

கடுமையான அபராதம் – உங்கள் ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸை செல்லத்தக்க இன்சூரன்ஸ் ஆவணங்களின்றி இந்தியாவில் ஓட்டுவது சட்ட விரோதமானது. இந்த குற்றத்திற்கு, நீங்கள் ரூ.2000 அபராதத் தொகையாக செலுத்த வேண்டி வரலாம். இதையே மறு முறை செய்யும் போது, ரூ.4000 அபராதமாக செலுத்த வேண்டி வரும்.

தேர்டு-பார்ட்டி கட்டணங்கள் – மோட்டார் வாகனச் சட்டம் 1988-இன் படி, ஒவ்வொரு டூ-வீலரும் இந்தியாவில் சட்டப்படி வண்டி ஓட்டுவதற்கு தேர்டு-பார்ட்டி பாலிசி வைத்திருக்க் வேண்டும். இந்த திட்டத்தின் கீழ், உங்கள் பைக்கினால் வேறொரு வாகனம், நபர் அல்லது சொத்திற்கு ஏற்பட்ட இழப்புகளுக்கு உங்கள் இன்சூரர் இழப்பீடு வழங்குவார்.

சொந்த பைக் சேதமடைவதால் ஏற்படும் செலவுகள் – ஒரு வேளை உங்கள் பைக் திருடு போய் விட்டால், உங்கள் காம்ப்ரிஹென்சிவ் பாலிசியின் மூலம் நீங்கள் இழப்பீடு கேட்கலாம். மேலும், உங்கள் ஹெச்எஃப் டீலக்ஸ் வண்டி இயற்கை பேரழிவுகள், தீவிபத்து மற்றும் பிற ஆபத்துகளின் மூலம் பழுதுநீக்க முடியாத அளவிற்கு சேதமடைந்திருந்தால், நீங்கள் இழப்பீடு கேட்டு கிளைம் செய்யலாம்.

தனிப்பட்ட விபத்தில் ஏற்படும் செலவு – இந்தியாவில் ஒவ்வொரு மோட்டார் சைக்கிள் உரிமையாளருக்கும் இந்தியக் காப்பீடு ஒழுங்காற்று மற்றும் வளர்ச்சி முகமையானது (ஐஆர்டிஏஐ/IRDAI) பர்சனல் ஆக்சிடன்ட் கவரை கட்டாயமாக்கியுள்ளது. பைக் விபத்தில் பாலிசிதாரர் இறந்து விடும் போதோ அல்லது நிரந்தரமான/பகுதியளவான ஊனம் ஏற்படும் பட்சத்திலோ, அவருடைய நாமினிக்கு (நியமிக்கப்பட்டவர்) இந்த கவர் இழப்பீடு வழங்கும்.

இது மட்டுமின்றி, ஒவ்வொரு கிளைம் செய்யாத ஆண்டிலும் உங்கள் பிரீமியத்தில் நீங்கள் நோ கிளைம் போனஸ் தள்ளுபடிகளை பெறலாம்.

டிஜிட் போன்ற முன்னணி இன்சூரன்ஸ் வழங்குநர்கள் கிளைம் செய்யாத ஐந்து ஆண்டுகளுக்கு 50% வரை தள்ளுபடி வழங்குகிறார்கள்.

அதிகப்படியான செலவுகளை தவிர்ப்பதற்கு ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் இன்சூரன்ஸ் வைத்திருப்பது மிக அவசியமாகும்.

ஹெச்எஃப்(HF) டீலக்ஸ் பற்றி மேலும் தெரிந்து கொள்ளவும்

ஹெச்எஃப் டீலக்ஸ் 100சிசி வெர்ஷன் அசத்தலான கிராஃபிக்ஸுடன் கூடிய பழைய வடிவமைப்பினை கொண்டிருந்தாலும், மேம்படுத்தப்பட்ட வெர்ஷன்கள் அதி-நவீன அம்சங்களை கொண்டுள்ளது.

என்ஜின் 4-ஸ்பீடு மானுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்ட இந்த என்ஜின், 7.9 பிஎச்பி பவரையும், 8.05 என்எம் முறுக்கு விசையையும் உருவாக்குகிறது. மேலும், எக்ஸ்சென்ஸ் தொழில்நுட்பத்துடன் இணைந்துள்ள ஃப்யூல்-இன்ஜெக்ஷன் சிஸ்டத்துடன் 100சிசி மாடல்கள் வருகின்றன். இது 10 சென்சார்களின் மூலமாக காற்று-எரிபொருள் கலவையை சரிசெய்வதற்கு உதவுகிறது.

ஐ3எஸ் தொழில்நுட்பம் – இந்த தொழில்நுட்பமானது எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துவதற்கு உதவுகிறது, 65-லிருந்து 70 கிமீ வரை ஒரு லிட்டருக்கு மைலேஜ் கொடுக்கிறது.

இந்த ஐ3எஸ் அமைப்பு மோட்டார் சைக்கிளில் எரிபொருள் சிக்கனமாக பயன்படுவதற்கு உதவுகிறது, எனவே தான் ஹெச்எஃப் டீலக்ஸ் வண்டி எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. புதிய ஹீரோ வண்டி ஏறக்குறைய ஒரு லிட்டருக்கு 65-70 கிமீ மைலேஜ் கொடுக்கிறது. இந்த வகையான மோட்டார் சைக்கிளுக்கு இது மிகவும் சிறப்பான ஒன்று.

பிரேக்குகள் – ‘ஒருங்கிணைந்த பிரேக்கிங் சிஸ்டத்தின்’ மூலம் இரண்டு சக்கரங்களிலும் டிரம் பிரேக்குகள் பிரேக்கிங் பணிகளை செய்கின்றன.

மற்ற விவரக் குறிப்பீடுகள்

முன்பக்கத்தில், ஹீரோவின் 3டி சின்னத்துடன் இணைந்து தெளிவான லென்ஸ் டர்ன் இன்டிகேட்டர்களுடன் கூடிய சாய்வான ஹெட்லேம்ப் முகப்புத் தாங்கி உள்ளது.

புதிய மாடலில் உடற்பகுதிகளில் டிரிபிள்-டோன் கிராஃபிக்ஸ் மற்றும் பெரிய சௌகரியமான இருக்கை போன்ற அம்சங்கள் உள்ளன.

பின்புறத்தில், ஹெச்எஃப் டீலக்ஸில் ஹேலோஜன் டெய்ல் லேம்ப்கள் உள்ளன.

எனவே, தவிர்க்க முடியாத சேதங்களிலிருந்து அதிகபட்ச பொருளாதார பாதுகாப்பினை பெறுவதற்கு ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் பைக் இன்சூரன்ஸ் எடுப்பது மிகவும் அவசியமாகும்.

ஹீரோ ஹெச்எஃப்(HF) டீலக்ஸ் – வேரியண்ட்கள் மற்றும் எக்ஸ்-ஷோரூம் விலை

வேரியண்ட்கள் எக்ஸ்-ஷோரூம் விலை (நகரத்திற்கு தக்கவாறு மாறக் கூடும்)
100 மில்லியன் எடிஷன் ரூ.49,800
கிக் ஸ்டார்ட் டிரம் ஸ்போக் எஃப்ஐ ரூ. 52,700
கிக் ஸ்டார்ட் டிரம் அலாய் எஃப்ஐ ரூ. 53,700
செல்ஃப் டிரம் அலாய் ரூ. 61,900
செல்ஃப் டிரம் அலாய் ஆல் பிளாக் ரூ.62,500
செல்ஃப் டிரம் அலாய் ஐ3எஸ் ரூ. 63,400

இந்தியாவில் ஹீரோ ஹெச்எஃப்(HF) டீலக்ஸ் பைக் இன்சூரன்ஸ் குறித்து அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் இன்சூரன்ஸ் பாலிசியை புதுப்பித்தவுடன் என்னுடைய என்சிபி பெனிஃபிட்களின் நன்மைகள் தொடருமா?

ஆம், உங்கள் ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் பைக் இன்சூரன்ஸை புதுப்பித்தவுடன் என்சிபி-யின் பெனிஃபிட்கள் அப்படியே தான் இருக்கும்.

நான் 3 வருடங்களுக்கு எந்த கிளைமும் செய்யவில்லையென்றால், பிரீமியத்தில் நான் எவ்வளவு தள்ளுபடி பெற முடியும்?

தொடர்ச்சியாக 3 வருடங்கள் கிளைம் செய்யாமலிருக்கும் போது, டிஜிட் நிறுவனம் பிரீமியத்தில் 35% நோ கிளைம் போனஸ் தள்ளுபடியை வழங்குகிறது.