டூ வீலர் இன்சூரன்ஸ்
டிஜிட் இன்சூரன்ஸிற்கு மாறுங்கள். 3 கோடி இந்தியர்களால் நம்பப்படுகிறது

Third-party premium has changed from 1st June. Renew now

இந்தியாவில் ஆன்லைனில் பைக்/டூ வீலர் இன்சூரன்ஸை வாங்கவும்/புதுப்பிக்கவும்

டூ வீலர் இன்சூரன்ஸ் என்றால் என்ன?

டூ வீலர் இன்சூரன்ஸ், அல்லது பைக் இன்சூரன்ஸ் என்பது விபத்துகள், திருட்டுக்கள், தீவிபத்துகள், அல்லது இயற்கை பேரிடர்கள் போன்ற நிகழ்வுகளின் போது உங்களுக்கும், உங்கள் டூ-வீலருக்கும் ஏற்படக் கூடிய சேதங்களிலிருந்து உங்களை பாதுகாத்து காப்புறுதி வழங்க உதவும் ஒரு இன்சூரன்ஸ் பாலிசியாகும். ஏதேனும் தேர்டு- பார்ட்டி வாகனம், சொத்து அல்லது நபருக்கு ஏற்படக் கூடிய சேதங்களுக்கும் கூட உங்களுக்குக் காப்புறுதி வழங்கப்பெறும். டூ-வீலர் இன்சூரன்ஸ் என்பது மோட்டார் சைக்கிள்கள், மொபெட்கள், ஸ்கூட்டர்கள் மற்றும் பல வகையான டூ-வீலர்களுக்கும் காப்புறுதி வழங்குகின்றது.

டூ வீலர் இன்சூரன்ஸ் எதற்காக உங்களுக்குத் தேவைப்படும்?

இந்தியாவில் டூ-வீலர் விற்பனை இது வரையிலேயே அதிகபட்சமாக 2019-ஆம் ஆண்டு உச்சத்தை தொட்டிருக்கிறது, இந்த வருடத்தில் மட்டும் இந்தியாவில் ஆட்டோமொபைல் துறையானது 21 மில்லியன் யூனிட்களை விற்பனை செய்திருக்கிறது. இந்த எண்ணிக்கை 2011-ஆம் ஆண்டின் விற்பனையை விட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகமாகும், அதாவது இந்தியாவில் 2011-இல் 11.77 மில்லியன் யூனிட்கள் மட்டுமே விற்பனையானது. இந்தியாவில் உள்ள டூ-வீலர்களின் எண்ணிக்கையை பற்றி எடுத்துரைக்க இந்த தரவுகள் போதுமானது! (1) நகரங்களில் இத்தனை டூ-வீலர்கள் ஓடுவதால், நெருக்கடியின் காரணமாக விபத்துகள் ஏற்படும் வாய்ப்பிருக்கிறது. ஆகவே தான் குறைந்தபட்சம் தேர்டு-பார்ட்டி பைக் இன்சூரன்ஸ் வைத்திருப்பது சட்டப்படி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, நீங்கள் தேர்டு-பார்ட்டி வாகனத்தின் மீது மோதினாலோ அல்லது வேறு யாரேனும் உங்களை இடித்து விட்டாலோ, அதனால் ஏற்படும் சேதங்கள் மற்றும் இழப்புகளிலிருந்து உங்களை பாதுகாக்கும் விதமாக காப்புறுதி வழங்கப்படுகிறது. டிஜிட் நிறுவனம் 3 வகையான பைக் இன்சூரன்ஸ் பாலிசிக்களை டூ-வீலர்களுக்கு வழங்குகின்றது. அவை காம்ப்ரிஹென்சிவ்(முழுமையான) கவர், ஸ்டான்ட்அலோன்(தனித்த) தேர்டு-பார்ட்டி கவர் மற்றும் ஓன் டேமேஜ் பைக் இன்சூரன்ஸ் ஆகியவை ஆகும். 

இதன் சிறப்பு என்ன?காம்ப்ரிஹென்சிவ்(முழுமையான) பைக் பாலிசிக்களை, ஆட்-ஆன்களை(மதிப்புக் கூட்டல்கள்/add-ons) தேர்ந்தெடுப்பதன் மூலம் தனிப்பயனாக்கிக் கொள்ளலாம், அதாவது உங்கள் பைக்கை எல்லா சூழ்நிலைகளிலும் பாதுகாத்துக் கொள்வதற்கு இந்த ஆட்-ஆன்கள் உதவும். சில நிமிடங்களில் ஆன்லைனிலேயே நீங்கள் இதனை செய்து விடலாம், மிச்சத்தை நாங்கள் பார்த்துக் கொள்வோம்!

டிஜிட்-இன் டூ வீலர் இன்சூரன்ஸில் எதற்கெல்லாம் காப்புறுதி வழங்கப்படுகிறது?

டிஜிட் டூ வீலர் இன்சூரன்ஸுடன் கிடைக்கும் ஆட்-ஆன்(add-on) கவர்கள்

உங்கள் டூ வீலர் இன்சூரன்ஸ் பாலிசியுடன் நீங்கள் வாங்கக் கூடிய டூ வீலர் இன்சூரன்ஸ் ஆட்-ஆன்கள்

ஜீரோ டிப்ரிஸியேஷன்(தேய்மானம்) கவர்

ஜீரோ டிப்ரிஸியேஷன்(தேய்மானம்) கவர் என்பது  

உங்கள் பைக் மற்றும் அதன் பாகங்கள் பழையதானவுடன் உபயோகப்படக் கூடிய ஒரு கவராகும். பொதுவாகவே, நாம் வண்டிக்கான கிளைம் செய்யும் போது அதன் டிப்ரிஸியேஷன் தொகை எப்போதும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். ஆனால், ஜீரோ டிப்ரிஸியேஷன்(தேய்மானம்) கவரை வாங்கும் போது, டிப்ரிஸியேஷன் தொகை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. அதாவது கிளைம் செய்யும் போது ரிப்பேர் செலவு/பாகங்களை மாற்றுவதற்கான செலவுகளுக்கு முழுமையான இழப்பீட்டுத் தொகை வழங்கப்பெறும்.

ரிட்டர்ன் டூ இன்வாய்ஸ் கவர்

உங்கள் பைக் திருட்டு போய் விட்டாலோ அல்லது ரிப்பேர் செய்ய முடியாத அளவிற்கு சேதமடைந்து விட்டாலோ, இந்த ஆட்-ஆன் கவர் உங்களுக்குத் துணை நிற்கும். இந்த ஆட்-ஆன் வாங்கியிருந்தால், இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஏற்படும் செலவுகளை நாங்கள் ஏற்றுக் கொள்வோம் அல்லது சாலை வரி மற்றும் ரெஜிஸ்ட்ரேஷன் கட்டணங்களோடு சேர்த்து அதே போன்ற ஒரு பைக்கை வாங்கவதற்கான இழப்பீட்டுத் தொகையை நாங்கள் வழங்குவோம்.

என்ஜின் & கியர்-பாக்ஸ் புரொட்டெக்ஷன் கவர்

உங்கள் என்ஜினை மாற்றுவதற்கு ஏறத்தாழ அதன் விலையின் 40% அளவிற்கு செலவாகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? ஒரு ஸ்டாண்டர்ட் டூ-வீலர் இன்சூரன்ஸ் பாலிசியில், விபத்தின் போது ஏற்படும் சேதங்களுக்கு மட்டுமே காப்புறுதி வழங்கப்படுகிறது. ஆனால், விபத்திற்கு பின் ஏற்படும் பின்விளைவினால் ஏற்படக் கூடிய சேதங்களிலிருந்து உங்கள் வாகனத்தை (என்ஜின் மற்றும் கியர்பாக்ஸ்!) பாதுகாத்துக் கொள்வதற்கு இந்த ஆட்-ஆனை நீங்கள் பயன்படுத்தலாம். இது போன்ற பாதிப்புகள் நீர் என்ஜினுக்குள் செல்வது, ஆயில் கசிவு மற்றும் வண்டியின் அடிக்கட்டில் ஏற்படும் சேதங்கள் போன்ற காரணங்களினால் ஏற்படலாம்.

கன்ஸ்யூமபில் கவர்

உங்கள் டூ-வீலருக்கான கூடுதல் பாதுகாப்புக் கவசமாக இந்த கவர் விளங்குகிறது. விபத்து ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் என்ஜின் ஆயில், ஸ்குருக்கள், நட், போல்ட், கிரீஸ் போன்ற உங்கள் பைக்கின் பாகங்களை மாற்றுவதற்கு ஆகும் செலவுகளை இந்த கவர் வழங்குகிறது.

பிரேக்டவுன் அசிஸ்டன்ஸ்

பிரேக்டவுன் ஏற்படும் சமயங்களில் உங்கள் டூ-வீலருக்கும், உங்களுக்கும் சேர்த்து பாதுகாப்பு அளிப்பதை உறுதிப்படுத்துவதற்கு இந்த ரோடுசைடு அசிஸ்டன்ஸ் ஆட்-ஆன் கவர் உதவுகிறது. இதன் சிறப்பு என்ன? எங்களிடம் நீங்கள் உதவி பெறும் போது அது கிளைமாகக் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது .

டயர் புரொட்டெக்ட்

இந்த ஆட்-ஆன் கவர் ரன் பிளாட் தொழில்நுட்பத்தை கொண்ட வாகனங்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.  அதன் ஒரு பகுதியாக, சேதமடைந்த டயர்களுக்கு சமமான அல்லது நிகரான டயர்களை கொண்டு சேதமடைந்த டயர்களை வாகனத்தில் மாற்றுவதற்கான செலவு, தொழிலாளர் மற்றும் வீல் பேலன்சிங் கட்டணங்கள் திரும்பித் தரப்படும்.  இருப்பினும், ஆட்-ஆன் கவரின் கீழ் செய்யப்படும் கிளைம்களானது, வாகன காப்பீட்டுக் கொள்கையின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்டது.

டெய்லி கன்வேயன்ஸ் பெனிஃபிட்

இந்த ஆட்-ஆன் கவரில், இரு சக்கர வாகனம் பழுதுபார்க்கப்படும் போது, பழுது பார்க்க ஆகும் கூடுதல் காலத்துக்கு உட்பட்டு உங்களின் போக்குவரத்துச் செலவு ஈடுசெய்யப்படும்.  இருப்பினும், இன்சூரன்ஸ் பாலிசியின் 'சொந்த சேதம்' பிரிவின் கீழ் விபத்து சேதத்திற்கான கிளைம் கோரப்பட்டிருந்தால் மட்டுமே இது பொருந்தும்.  பாலிசிதாரருக்கு ஏற்படும் போக்குவரத்து செலவுக்கு சமமான தொகைக்கு ஃபிக்ஸ்டு அலவன்ஸ் அல்லது டாக்ஸி ஆபரேட்டர்களிடமிருந்து கூப்பன்கள் வழங்கப்படுவது போன்ற முறைகளில் ஈடுசெய்யப்படலாம்.

எதற்கெல்லாம் காப்புறுதி வழங்கப்படவில்லை?

உங்களுடைய டூ-வீலர் இன்சூரன்ஸ் பாலிசியில் எதற்கெல்லாம் காப்புறுதி வழங்கப்படவில்லை என்று தெரிந்து கொள்வதும் அவசியம் ஆகும், அப்போது தான் கிளைம் செய்யும் வேளையில் உங்களுக்கு ஏதும் சங்கடங்கள் நேராது. அவ்வாறான சில சூழ்நிலைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:

தேர்டு-பார்ட்டி பாலிசிதாரருக்கான தனிப்பட்ட சேதங்கள்

தேர்டு-பார்ட்டி அல்லது லையபிலிட்டி(பொறுப்பு) ஒன்லி பைக் பாலிசியில், நம் சொந்த வாகனத்திற்கு ஏற்படும் சேதங்களுக்கு காப்புறுதி வழங்கப்படாது.

மது அருந்தி விட்டு வண்டி ஓட்டுவது அல்லது லைசென்ஸ் இன்றி வண்டி ஓட்டுவது

நீங்கள் மது அருந்தி விட்டு வண்டி ஓட்டினாலோ அல்லது செல்லத்தக்க டூ-வீலர் லைசென்ஸ் இன்றி வண்டி ஓட்டினாலோ, அதனால் ஏற்படும் பாதிப்புகளுக்கு உங்கள் பைக் இன்சூரன்ஸ் காப்புறுதி வழங்காது.

செல்லத்தக்க டிரைவிங் லைசென்ஸ்தாரரின்றி வண்டி ஓட்டுவது

நீங்கள் பழகுநர் லைசென்ஸ் வைத்திருந்து, உங்கள் டூ-வீலரின் பின்புற இருக்கையில் செல்லத்தக்க லைசென்ஸ்தாரரின்றி நீங்கள் வண்டி ஓட்டியிருக்கும் பட்சத்தில், ஏதேனும் சேதங்கள் ஏற்பட்டால் உங்களுக்குக் காப்புறுதி வழங்கப்படாது.

பின்விளைவினால் ஏற்படும் சேதங்கள்

விபத்தின் காரணமாக நேரடியாக ஏற்படாத எந்தவொரு சேதங்களுக்கும் காப்புறுதி வழங்கப்படாது (உதாரணத்திற்கு, விபத்திற்கு பிறகு, சேதமடைந்த டூ-வீலரை முறையாக பயன்படுத்தாத காரணத்தால், என்ஜின் சேதமடைந்திருக்கும் பட்சத்தில், இது பின்விளைவினால் ஏற்படும் சேதமாக கருதப்படும், இதற்கு காப்புறுதி வழங்கப்பட மாட்டாது).

அலட்சியத்தினால் ஏற்படும் சேதங்கள்

அலட்சியத்தினால் ஏற்படும் சேதங்கள் எதுவாயினும் (உதாரணத்திற்கு, மழை வெள்ளத்தில் டூ-வீலரை ஒட்டிச் செல்வதால் ஏற்படும் சேதங்கள், தயாரிப்பாளரின் ஓட்டுநர் கையேட்டில் இது பரிந்துரைக்கப்படாததால், இதற்கு காப்புறுதி வழங்கப்படாது).

ஆட்-ஆன்களை வாங்கியிருக்காத பட்சத்தில்

சில சூழ்நிலைகளில் ஆட்-ஆன்களினால் காப்புறுதி வழங்கப்படுகிறது. நீங்கள் அந்த ஆட்-ஆன்களை வாங்கவில்லையென்றால், சம்பந்தப்பட்ட சூழ்நிலைகளுக்கு காப்புறுதி வழங்கப்படாது.

டிஜிட்-இன் டூ வீலர் இன்சூரன்ஸை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?

பிராந்தியத்தின் அடிப்படையில், 2014 முதல் 2024 வரையிலான மதிப்பின் அடிப்படையில் டூ வீலர் இன்சூரன்ஸ் மார்க்கெட் அளவு

2014-2024 முதல் இந்தியாவில் டூ வீலர் இன்சூரன்ஸ் மார்க்கெட்டின் வளர்ச்சி மற்றும் போக்குகள் பற்றிய தகவல்களைப் பெறுங்கள். மார்க்கெட், வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கு விநியோக பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

டிஜிட் வழங்கும் டூ வீலர் இன்சூரன்ஸின் முக்கிய அம்சங்கள்

முக்கிய அம்சங்கள் டிஜிட்-இன் பெனிஃபிட்
பிரீமியம் ரூ.714-இல் தொடங்குகிறது
நோ கிளைம் போனஸ் 50% வரை தள்ளுபடி
தனிப்பயனாக்கக்கூடிய ஆட்-ஆன்கள் 7 ஆட்-ஆன்கள் கிடைக்கப்பெறும்
கேஷ்லெஸ் ரிப்பேர்கள் 4400+ கேரேஜ்களில் கிடைக்கப்பெறும்
கிளைம் ப்ராஸஸ் ஸ்மார்ட் ஃபோன் மூலமாக செய்யப்படும் கிளைம் ப்ராஸஸ். ஆன்லைனில் 7 நிமிடங்களில் செய்து விடலாம்!
ஓன் டேமேஜ் கவர் கிடைக்கப்பெறும்
தேர்டு-பார்ட்டியினரின் சேதங்கள் தனிப்பட்ட சேதங்களுக்கு அன்லிமிட்டெட் லையபிலிட்டி(பொறுப்பு), சொத்து/வாகன சேதங்களுக்கு 7.5 இலட்சம் வரை

உங்கள் தேவைகளுக்கு ஏற்ற டூ வீலர் இன்சூரன்ஸ் பிளான்கள்

தேர்டு பார்ட்டி காம்ப்ரிஹென்சிவ்(விரிவானது)

விபத்தின் காரணமாக சொந்த டூ-வீலருக்கு ஏற்படும் சேதங்கள்/இழப்புகள்

விபத்து அல்லது மோதுதல் போன்றவற்றினால் உங்கள் சொந்த டூ-வீலருக்கு ஏற்படும் சேதங்களுக்கு காப்புறுதி அளிக்கிறது.

×

தீ விபத்து ஏற்படும் பட்சத்தில் சொந்த டூ-வீலருக்கு ஏற்படும் சேதங்கள்/இழப்புகள்

தீ விபத்தின் காரணமாக உங்கள் சொந்த டூ-வீலருக்கு ஏற்படும் சேதங்கள் மற்றும் இழப்புகளுக்கு காப்புறுதி அளிக்கிறது.

×

இயற்கை பேரிடர் ஏற்படும் பட்சத்தில் சொந்த டூ-வீலருக்கு ஏற்படும் சேதங்கள்/இழப்புகள்

வெள்ளம், நிலநடுக்கம், புயல் போன்ற இயற்கை பேரிடரின் காரணமாக உங்கள் சொந்த டூ-வீலருக்கு ஏற்படும் சேதங்கள் மற்றும் இழப்புகளுக்கு காப்புறுதி அளிக்கிறது.

×

தேர்டு-பார்ட்டி வாகனத்திற்கு ஏற்படும் சேதங்கள்

உங்கள் டூ-வீலரால் ஏதேனும் தேர்டு-பார்ட்டி வாகனத்திற்கு ஏற்படும் சேதங்களுக்கு, ரூ.7.5 லட்சம் வரைக்கும், காப்புறுதி பாதுகாப்பளிக்கிறது.

×

தேர்டு-பார்ட்டி சொத்திற்கு ஏற்படும் சேதங்கள்

உங்கள் டூ-வீலரால் ஏதேனும் தேர்டு-பார்ட்டி சொத்திற்கு ஏற்படும் சேதங்களுக்கும், இழப்புகளுக்கும், ரூ.7.5 லட்சம் வரைக்கும் காப்புறுதி அளிக்கிறது.

×

பர்சனல் ஆக்சிடன்ட் கவர்

வண்டியின் உரிமையாளர்-ஓட்டுநரின் உடல் காயங்கள் அல்லது மரணத்திற்கு காப்புறுதி அளிக்கிறது. (இது சட்டப்படி கட்டாயமாகும், ஏற்கனவே உங்களிடம் இல்லையென்றால் நீங்கள் இதனை எடுத்துக் கொள்ளலாம்)

×

தேர்டு-பார்ட்டி நபரின் காயங்கள்/மரணம்

உங்கள் டூ-வீலரால் ஏதேனும் தேர்டு-பார்ட்டி நபருக்கு நேரும் உடற்காயங்கள் அல்லது மரணத்திற்கு, வரையறுக்கப்பட்ட வரம்பின்றி, காப்புறுதி பாதுகாப்பளிக்கிறது.

×

உங்கள் ஸ்கூட்டர் அல்லது பைக் திருடு போவது

கெடுவாய்ப்பாக உங்கள் டூ-வீலர் திருடு போய் விட்டால், உங்கள் இழப்பிற்கு காப்புறுதி அளிக்கிறது.

×

உங்கள் ஐடிவி-ஐ (IDV) தனிப்பயனாக்கவும்

உங்கள் விருப்பப்படியே உங்கள் டூ-வீலரின் ஐடிவி-ஐ தனிப்பயனாக்கவும், பிறகு அதற்கேற்றவாறு உங்கள் டூ-வீலர் இன்சூரன்ஸ் பிரீமியத்தை ஒழுங்குபடுத்தவும்.

×

தனிப்பயனாக்கப்பட்ட ஆட்-ஆன்களுடன் (add-ons) கூடிய கூடுதல் பாதுகாப்பு

டயர் புரொட்டெக்ட் கவர், கன்ஸ்யூமபில் கவர், ஜீரோ டிப்ரிஸியேஷன் போன்ற தனிப்பயனாக்கப்பட்ட ஆட்-ஆன்களின் உதவியோடு உங்கள் டூ-வீலருக்கு கூடுதல் பாதுகாப்பினை வழங்கவும்.

×
Get Quote Get Quote

காம்ப்ரிஹென்சிவ் மற்றும் தேர்டு பார்ட்டி டூ வீலர் இன்சூரன்ஸ் ஆகியவற்றின் வேறுபாடுகளை பற்றி மேலும் தெரிந்து கொள்ளவும்

டூ வீலர் இன்சூரன்ஸ் கிளைமிற்கு எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும்?

எங்களுடைய டூ வீலர் இன்சூரன்ஸ் பிளானை வாங்கியவுடன் அல்லது புதுப்பித்தவுடன், நீங்கள் டென்ஷன் இல்லாமல் இருக்கலாம், ஏனெனில் எங்கள் 3-ஸ்டெப் கிளைம் ப்ராஸஸ் முழுமையாக டிஜிட்டல்மயமானது!

ஸ்டெப் 1

1800-258-5956 என்ற எண்ணில் அழைக்கவும். எந்த படிவங்களையும் பூர்த்தி செய்ய வேண்டாம்.

ஸ்டெப் 2

உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் சுய-ஆய்விற்கான லிங்க் கிடைக்கப்பெறும். உங்கள் ஸ்மார்ட் ஃபோனிலிருந்தே படிப்படியான வழிகாட்டுதல்களின் படி உங்கள் வாகனத்தின் சேதங்களை படம் பிடிக்கவும்.

ஸ்டெப் 3

நீங்கள் விரும்பும் ரிப்பேர் வழிமுறையை தேர்வு செய்யவும், அதாவது எங்களுடைய கேரேஜ் நெட்வொர்க்-களின் மூலம் ரீஇம்பர்ஸ்மென்ட்(பணம் செலுத்தி விட்டு பின்னர் பெற்றுக் கொள்ளுதல்) அல்லது கேஷ்லெஸ் வசதியை பெறவும்.

டிஜிட்-இல் டூ வீலர் இன்சூரன்ஸ் கிளைம்கள் எளிதாக்கப்பட்டுள்ளன

நாங்கள் கிளைம் ப்ராஸஸை எளிமையாக்குகிறோம் என்று கூறும் போது, உண்மையாகவே அந்த கருத்தை வலியுறுத்தித் தான் கூறுகிறோம்!

  • மக்கள் காத்திருப்பதற்கு விரும்புவதில்லை. அது உண்மை தான். அதனால் தான், விபத்தின் போது ஏற்படும் சேதங்களை ஆய்வு செய்வதற்காக சர்வேயர்கள் வருவதற்கு நீங்கள் காத்திருக்க வேண்டிய சந்தர்ப்பத்தை தவிர்ப்பதற்காகவே, எங்கள் ஸ்மார்ட் ஃபோனில் இயங்கும் ஆப் மூலமாக உங்கள் பைக்கிற்கு நேரும் சேதங்களை நீங்களே சுயமாக ஆய்வு செய்வதற்கு நாங்கள் வசதி செய்துள்ளோம்.
  • டூ வீலர் இன்சூரன்ஸ் கிளைம்களில் எங்களின் கிளைம் செட்டில்மென்ட் விகிதம் 97%-ஆக இருக்கிறது. நாங்கள் கிளைம்களை விரும்புகிறோம் என்பதை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம், அதனால் உங்கள் கிளைம்களை செட்டில் செய்வதற்கு உங்களை இழுத்தடிக்க மாட்டோம்!
  • டிஜிட்டல் பொருளாதாரத்தில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம். அதனால் தான், கிளைம்கள் என்று வரும் போது கூட - அச்சு நகல்கள் தேவையில்லை! நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், கிளைம் செய்யும் போது தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்வது மட்டும் தான், உங்கள் பிரச்சினை தீர்க்கப்பட்டு விடும்.

டிஜிட்-இன் கேஷ்லெஸ் கேரேஜ்கள்

4400+ நெட்வொர்க் கேரேஜ்களின் பட்டியல் >
டிஜிட் இன்சூரன்ஸில் கிளைம்கள் எவ்வளவு விரைவாக செட்டில் செய்யப்படுகின்றன? உங்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்தை மாற்றும் போது உங்கள் மனதில் எழ வேண்டிய முதல் கேள்வி இது தான். நீங்கள் இவ்வாறு யோசிப்பது சரியே! டிஜிட்-இன் கிளைம் ரிப்போர்ட் கார்டினை வாசிக்கவும்

எங்கள் வாடிக்கையாளர்கள் எங்களைப் பற்றி என்ன சொல்கிறார்கள்?

இராஜகுமார்
★★★★★

அருமையான சேவை. எல்லாமே டிஜிட்டல்மயமாக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் தான் ஆர்சி-ஐ மாற்றிய பிறகு முந்தைய இன்சூரன்ஸிலிருந்து நான் என்னுடைய இன்சூரன்ஸை மாற்ற வேண்டியிருந்தது. இந்த மொத்த நடைமுறையுமே நேரடியாக அவர்களின் அலுவலகத்திற்கு நான் செல்ல வேண்டிய அவசியமின்றி ஆன்லைனிலேயே நடைபெற்றது. டூ-வீலர் இன்சூரன்ஸ் வாங்க விரும்பும் நபர்களுக்கு நான் கோ-டிஜிட் இன்சூரன்ஸை பரிந்துரை செய்கிறேன்.

கௌரவ் யாதவ்
★★★★★

டிஜிட்-டிலிருந்து டூ வீலர் இன்சூரன்ஸ் பாலிசி வாங்கியது ஒரு நல்ல அனுபவமாகும். பூனம் தேவி என்பவர் மிகவும் பணிவான முறையிலே பேசி, விரைவானதொரு சேவையை வழங்கினார். பாலிசியை கூடுமான வரையில் விரைவாக பெறுவதில் அவர் அதிக கவனம் எடுத்துக் கொண்டார்.

சந்தீப் சௌத்ரி
★★★★★

டிஜிட் இன்சூரன்ஸில் அருமையானதொரு அனுபவம் கிடைத்தது. அவசியமான படங்கள் மற்றும் ஆவணங்களை பதிவேற்றம் செய்த 5 நிமிடத்திற்குள், செட்டில்மென்ட் ஏஜெண்டிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது. ஃபோன் காலிலேயே கிளைம் செட்டில் செய்யப்பட்டது. அடுத்த பணி  நாளிலேயே இறுதியான இன்வாய்ஸை வழங்கியவுடன் கிளைம் தொகை கிடைக்கப்பெற்றது.

Show all Reviews

டூ வீலர் இன்சூரன்ஸ் பாலிசி வாங்குவதின் நன்மைகள்

அநாவசிய செலவுகளிலிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ளவும்

உங்களுடைய பைக்கை டூ-வீலர் இன்சூரன்ஸ் பாலிசியின் மூலம் இன்சூர் செய்வதென்பது, விபத்து, இயற்கை பேரிடர், தீவிபத்து அல்லது திருட்டு போன்ற கெடுவாய்ப்பான சூழ்நிலைகளில் உங்கள் பைக்கிற்கு ஏற்படும் சேதங்கள் மற்றும் இழப்புகளின் பொருட்டு, நீங்கள் அநாவசியமாக செலவு செய்வதை தவிர்ப்பதற்கு உதவுகிறது.

சட்டப்பூர்வமாக காப்புறுதி பெறவும்!

மோட்டார் வாகனச் சட்டப்படி, குறைந்தபட்சம் தேர்டு-பார்ட்டி பைக் இன்சூரன்ஸ் வைத்திருப்பது கட்டாயமாகும். இது இல்லாமல், நீங்கள் இந்திய சாலைகளில் வண்டி ஓட்ட முடியாது! எனவே, சட்டப்பூர்வமாக காப்புறுதி செய்யப்பட்டிருப்பது, பைக் இன்சூரன்ஸ் பாலிசி வாங்குவதின் நன்மைகளுள் ஒன்றாகும்.

அபராதம் கட்ட நேருவதிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்

குறைந்தபட்சம் அடிப்படையான, தேர்டு-பார்ட்டி பைக் இன்சூரன்ஸ் இன்றி இந்தியாவில் வண்டி ஓட்டுவது சட்ட விரோதமாகும்; தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸ் இல்லாத பட்சத்தில் அபராதம் விதிக்கப்படும். பைக் இன்சூரன்ஸ் இன்றி வண்டி ஓட்டி ஒரு முறை மாட்டி அபராதம் செலுத்தும் தொகையை விடவும், உங்கள் பைக்கிற்கு இன்சூரன்ஸ் வாங்கும் தொகையில் நீங்கள் அதிகம் சேமிக்கலாம்!

ஆட்-ஆன்களுடன் கூடிய பரவலான காப்புறுதிப் பாதுகாப்பினை பெறவும்

நீங்கள் காம்ப்ரிஹென்சிவ் பைக் இன்சூரன்ஸ் பாலிசியை தேர்வு செய்யும் போது, ரிட்டர்ன் டூ இன்வாய்ஸ் கவர், ஜீரோ டிப்ரிஸியேஷன் கவர், பிரேக்டவுன் அசிஸ்டன்ஸ், கன்ஸ்யூமபில் கவர் மற்றும் டயர் புரொட்டெக்ஷன் போன்ற பயனுள்ள ஆட்-ஆன்களின் மூலம் உங்கள் பாலிசியை தனிப்பயனாக்கிக் கொள்ளலாம். இது உங்கள் பைக்கிற்கு முழுமையான பாதுகாப்பினை பெறுவதற்கு உதவும்.

தேர்டு-பார்ட்டி பிரச்சினைகளை தவிர்க்கவும்

ஏதேனும் விபத்து சம்பவம் நிகழும் போது, மக்கள் சந்திக்கக் கூடிய பிரதான பிரச்சினைகளுள் ஒன்று, தேர்டு-பார்ட்டியினருக்கு நேரும் சேதங்கள் அல்லது இழப்புகளின் காரணமாக அவர்களுடன் ஏற்படும் தகராறு தான். பைக் இன்சூரன்ஸ் பாலிசி கையில் இருக்கும் பட்சத்தில், பாதிக்கப்படும் நபரும் காப்புறுதி செய்யப்பட்டிருப்பார், எனவே அதிகம் பிரச்சினைகளை சந்திக்க நேரிடாது!

டூ-வீலர் இன்சூரன்ஸ் பிரீமியத்தை பாதிக்கும் காரணிகள்

ஒரே நிறுவன டூ வீலர் வைத்திருக்கும் நீங்களும் உங்கள் நண்பரும் வெவ்வேறு இன்சூரன்ஸ் பிரீமியங்களை செலுத்தலாம், அதற்கான காரணம் என்ன? உங்கள் பைக் இன்சூரன்ஸ் பிரீமியம் கால்குலேஷனை வித்தியாசமாக பாதிக்கும் பல காரணிகள் இங்கே உள்ளன.

  • இன்சூரன்ஸ் பிளானின் வகை: உங்கள் டூ வீலர் இன்சூரன்ஸ் பிரீமியம், முதன்மையாக நீங்கள் வாங்கும் கவரேஜ் அல்லது இன்சூரன்ஸ் பாலிசியின் வகையை அடிப்படையாகக் கொண்டது. காம்ப்ரிஹென்சிவ் இன்சூரன்ஸ் பாலிசியின் பிரீமியம், தேர்டு பார்ட்டி பாலிசியை விட சற்றே அதிகம், ஏனெனில் முந்தையது தேர்டு பார்ட்டி லையபிளிட்டிகள் மற்றும் ஓன் டேமேஜ்களுக்கு கவரேஜ் வழங்குகிறது.
  • டூ வீலர் தயாரிப்பு/மாடல்: இந்த காரணி டூ வீலர் இன்சூரன்ஸ் பிரீமியத்தை கணிசமாக பாதிக்கிறது. குறைந்த விலை டூ வீலர் அல்லது ரெகுலர் ஸ்கூட்டரை நீங்கள் இன்சூர் செய்தால், அதிக விலையுள்ள வாகனம் அல்லது சொகுசு பைக்கை விட பிரீமியம் குறைவாக இருக்கும். ஏனென்றால், வெவ்வேறு மாடல்களின் பாகங்கள் கிளைமின் போது வெவ்வேறு ரீப்லேஸ்மெண்ட் காஸ்ட்களைக் கொண்டுள்ளன. எனவே, இன்சூர்டு வாகனத்தின் மதிப்பு உயர்ந்தால், இன்சுரருக்கு அதிக ஆபத்து உள்ளது.
  • வாகனத்தின் வயது: உங்கள் டூ வீலரின் மார்க்கெட் மதிப்பு வாகனத்தின் வயதைப் பொறுத்தது, இது உங்கள் இன்சூரன்ஸ் அடிப்படை பிரீமியத்தை பாதிக்கிறது (NCB, தள்ளுபடிகள்/லோடிங் போன்றவை தவிர) பழைய வாகனம் டிப்ரிஸியேஷன்‌ காரணமாக குறைந்த மார்க்கெட் மதிப்பைக் கொண்டிருக்கும், சம் இன்சூர்டு குறைவாக இருக்கும், மேலும் நீங்கள் குறைவான அடிப்படை பிரீமியத்தை செலுத்த வேண்டும். மறுபுறம், அதிக மார்க்கெட் மதிப்புள்ள புத்தம் புதிய வாகனம் அதிக அடிப்படை பிரீமியத்தைப் பெறும்.  
  • இன்சுர்டு டெக்லேர்டு வேல்யூ (ஐ.டி.வி-IDV): ஐ.டி.வி என்பது உங்கள் வாகனத்தின் டிப்ரிஸியேஷன்‌ மதிப்பைக் கணக்கிட்ட பிறகு அதன் தோராயமான தற்போதைய மார்க்கெட் மதிப்பைக் குறிக்கிறது. எந்தவொரு இன்சூரன்ஸ் பாலிசியிலும் இது ஒரு முக்கிய அங்கமாகும் மற்றும் பிரீமியத்திற்கு நேரடியான விகிதாசாரமாகும்.
  • நோ கிளைம் போனஸ் (என்.சி.பி-NCB): பாலிசி ஆண்டில் எந்தவொரு கிளைமையும் கோராமல் இருந்தால், இது தள்ளுபடி வடிவில் கிடைக்கும் வெகுமதியாகும். எனவே, பாலிசி ரீனியூவலின் போது, உங்கள் இன்சுரரால் தீர்மானிக்கப்படும் மதிப்பின் சதவீதம், அடுத்த ஆண்டுக்கான உங்கள் இன்சூரன்ஸ் பிரீமியத்தை கணிசமாகக் குறைக்கலாம்.
  • ஆட்-ஆன் கவர்கள்: சாத்தியமான எல்லா சூழ்நிலைகளிலும் உங்கள் டூ வீலரை பாதுகாக்க விரும்பினால், ஜீரோ டிப்ரிஸியேஷன்‌ கவர், டையர் புரட்டெக்ட் கவர், ஆர்டிஐ மற்றும் இது போன்ற பல ஆட்-ஆன் கவர்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் உங்கள் விரிவான டூ வீலர் பாலிசிகளைத் தனிப்பயனாக்கலாம். இது உங்களின் கவரேஜ் வரம்பை அதிகரிக்கும், எனவே உங்கள் பிரீமியம் தொகை அதிகரிக்க வழிவகுக்கும்.  
  • என்ஜின் கியூபிக் திறன்: உங்கள் வாகனத்தின் என்ஜினின் கியூபிக் அளவு (சிசி) 75 சிசி அல்லது அதற்கும் குறைவாக இருந்தால், உங்கள் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைவாக இருக்கும். உங்கள் டூ வீலர் 350 சிசி என்றால், கவரேஜுக்கு அதிக பிரீமியம் செலுத்த வேண்டும்.
  • ஆர்.டி.ஓ(RTO) இடம்: வாகனத்தின் புவியியல் இருப்பிடம் உங்கள் இன்சூரன்ஸ் பிரீமியம் மதிப்பையும் தீர்மானிக்கிறது. அதிக விபத்துகள் உள்ள நகரத்தில் நீங்கள் அடிக்கடி சவாரி செய்தால், பிரீமியமும் அதிகமாக இருக்கும். 

தேர்டு பார்ட்டி பைக் இன்சூரன்ஸ் பிரீமியம் விலைகள்

தேர்டு பார்ட்டி பைக் இன்சூரன்ஸ் பிரீமியம் பைக்கின் என்ஜின் திறனை அடிப்படையாகக் கொண்டு வசூலிக்கப்படுகிறது. 2019-20 மற்றும் 2022 ஆம் ஆண்டிற்கான விலைகளைப் பார்ப்போம்

என்ஜின் திறன் ரூபாயில் 2019-20க்கான பிரீமியம் புதிய 2W TP விகிதம் (ஜூன் 1, 2022 முதல் அமலுக்கு வரும்)
75 சிசிக்கு மிகாமல் ₹482 ₹538
75 சிசிக்கு மேல் ஆனால் 150 சிசிக்கு மிகாமல் ₹752 ₹714
150 சிசிக்கு மேல் ஆனால் 350சிசிக்கு மிகாமல் ₹1193 ₹1366
350 சிசிக்கு மேல் ₹2323 ₹2804

புதிய டூ வீலர்களுக்கான தேர்டு பார்ட்டி பிரீமியம் (5 வருட ஒற்றை பிரீமியம் பாலிசி)

என்ஜின் திறன் INRஇல் 2019-20க்கான பிரீமியம் புதிய 2W TP விகிதம் (ஜூன் 1, 2022 முதல் அமலுக்கு வரும்)
75 சிசிக்கு மிகாமல் ₹1,045 ₹2,901
75 சிசிக்கு மேல் ஆனால் 150 சிசிக்கு மிகாமல் ₹3,285 ₹3,851
150சிசிக்கு மேல் ஆனால் 350சிசிக்கு மிகாமல் ₹5,453 ₹7,365
350 சிசிக்கு மேல் ₹13,034 ₹15,117

புதிய எலக்ட்ரிக் வாகன (EV) டூ வீலருக்கான பிரீமியங்கள் (1-வருட ஒற்றை பிரீமியம் பாலிசி)

வாகன கிலோவாட் திறன் (KW) INRஇல் 2019-20க்கான பிரீமியம் புதிய 2W TP விகிதம் (ஜூன் 1, 2022 முதல் அமலுக்கு வரும்)
3KW க்கு மிகாமல் ₹410 ₹457
3KW க்கு மேல் ஆனால் 7KW க்கு மிகாமல் ₹639 ₹609
7KW க்கு மேல் ஆனால் 16KW க்கு மிகாமல் ₹1,014 ₹1,161
16KWக்கு மேல் ₹1,975 ₹2,383

புதிய எலக்ட்ரிக் வாகன (EV) டூ வீலருக்கான பிரீமியங்கள் (5-வருட ஒற்றை பிரீமியம் பாலிசி)

வாகன கிலோவாட் திறன் (KW) INRஇல் 2019-20க்கான பிரீமியம் புதிய 2W TP விகிதம் (ஜூன் 1, 2022 முதல் அமலுக்கு வரும்)
3KW க்கு மிகாமல் ₹888 ₹2,466
3KW க்கு மேல் ஆனால் 7KW க்கு மிகாமல் ₹2,792 ₹3,273
7KW க்கு மேல் ஆனால் 16KW க்கு மிகாமல் ₹4,653 ₹6,260
16KWக்கு மேல் ₹11,079 ₹12,849

எந்த டூ வீலர் இன்சூரன்ஸ் பாலிசி உங்களுக்கு சிறந்தது?

கேஸ் 1: நீங்கள் ஒரு புதிய சொகுசு பைக்கை வாங்கியிருந்தால்

ஒரு சொகுசு பைக்கின் உரிமையாளராக இருப்பது உங்களை பெருமையாக உணர வைக்கலாம், ஆனால் நிறைய ரெஸ்பான்சிபிளிட்டிகளும் வருகிறது. முதலாவதாக, ஒரு காம்ப்ரிஹென்சிவ் டூ வீலர் இன்சூரன்ஸை பெறுவதன் மூலம் அனைத்து வகையான டேமேஜ்கள் மற்றும் விபத்துக்களிலிருந்தும் அதைப் பாதுகாக்க வேண்டும். இது தேர்டு பார்ட்டி லையபிளிட்டி மற்றும் ஓன் டேமேஜ் ஆகிய இரண்டையும் உள்ளடக்கியது. உங்கள் விலையுயர்ந்த வாகனத்தின் மேம்பட்ட பாதுகாப்பிற்கு, நீங்கள் பொருத்தமான ஆட்-ஆன்களை வாங்க வேண்டும்.

ஜீரோ டிப்ரிஸியேஷன்‌ கவரானது அதன் விலையுயர்ந்த பாகங்களின் டிப்ரிஸியேஷனைக் கருத்தில் கொள்ளாமல் அதிகபட்ச கிளைம் தொகையைப் பெற்றுத்தரும். திருட்டு அல்லது மொத்த நஷ்டம் ஏற்பட்டால், ரிட்டர்ன் டூ இன்வாய்ஸ் கவர் மூலம் உங்கள் டாப்-எண்ட் பைக்கைப் பாதுகாக்கலாம்.

என்ஜின் புரட்டெக்ஷன் கவரைப் பெறுவதன் மூலம் உங்கள் பைக்கின் விலையுயர்ந்த என்ஜினை ரிப்பேர் பார்க்கும்போது ஏற்படும் பெரும் செலவைத் தவிர்க்கலாம். மேலும், சொகுசு பைக்கின் லூப்ரிகண்டுகள், எண்ணெய்கள், நட்டுகள், போல்ட்கள், திருகுகள், வாஷர்கள், கிரீஸ் போன்றவற்றின் ரீப்லேஸ்மெண்ட் காஸ்ட்டை ஈடுகட்ட கன்ஸ்யூமபில் ஆட்-ஆனைப் பெறுவது நல்லது.

கேஸ் 2: 8 ஆண்டு கால பைக்கை நீங்கள் தினமும் ஓட்டினால்

பல மோட்டார் சைக்கிள் உரிமையாளர்கள் 8 வருட பைக்கிற்கான டூ வீலர் இன்சூரன்ஸின் முக்கியத்துவத்தை கவனத்தில் கொள்வதில்லை, ஆனால் அதற்கு சட்டப்பூர்வமாக குறைந்தபட்சம் தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸ் இருக்க வேண்டும். உங்கள் பைக்கின் வயதைக் கருத்தில் கொண்டு, விபத்துக்கள், திருட்டு, தீ, இயற்கை பேரழிவுகள் மற்றும் பலவற்றின் போது ரிப்பேர் பார்க்கவும் அல்லது ரீப்லேஸ்மெண்ட் பாதுகாப்பை வழங்கும் ஓன் டேமேஜ் கவரேஜ் வைத்திருப்பது நல்லது.

மாற்றாக, நீங்கள் தினமும் உங்கள் பைக்கை ஓட்டுவதால் ஒரு காம்ப்ரிஹென்சிவ் பைக் இன்சூரன்ஸைப் பெறுவது நல்லது, ஏனெனில் இது உங்கள் பைக்கை பல காரணிகளிலிருந்து பாதுகாக்கும்.

கேஸ் 3: பயன்படுத்தாத பல ஆண்டு கால ஸ்கூட்டரை வைத்திருந்தால்

தலைமுறை தலைமுறையாக உங்கள் குடும்பத்தில் இருக்கும் ஸ்கூட்டர் போன்ற சில உடைமைகள் உணர்வுப்பூர்வமான மதிப்பைக் கொண்டுள்ளன. இது அரிதாகவே பயன்படுத்தப்பட்டாலும், சட்டத் தேவைகளுக்கு இணங்க குறைந்தபட்சம் தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸாவது வைத்திருப்பது அவசியம். நீங்கள் ஸ்கூட்டரை பயன்படுத்தாததால், காம்ப்ரிஹென்சிவ் இன்சூரன்ஸ் மற்றும் ஆட்-ஆன்களைத் தவிர்க்கலாம்.

சரியான டூ வீலர் இன்சூரன்ஸை எவ்வாறு தேர்வு செய்வது?

உங்கள் ஐடிவி(IDV)-ஐ தனிப்பயனாக்கவும்

ஐடிவி என்பது உங்கள் பைக்கின் டிப்ரிஸியேஷன் (தேய்மானத் தொகை) உள்ளிட்ட அதன் சந்தை மதிப்பினை குறிக்கிறது. இந்த மதிப்பானது உங்கள் பைக் இன்சூரன்ஸ் பிரீமியம் தொகையினை பாதிக்கிறது. மேலும், கிளைம் செய்யும் சமயங்களில் நீங்கள் பெறும் இழப்பீட்டுத் தொகையினையும் இது பாதிக்கிறது. எனவே, உங்கள் ஐடிவி சரியாக கணிக்கப்பட்டிருக்கிறதா என்பதை நீங்கள் சரிபார்ப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும். டிஜிட்-இல், நாங்கள் வெளிப்படைத்தன்மையை விரும்புகிறோம், எனவே உங்கள் ஐடிவி-ஐ தனிப்பயனாக்குவதற்கு உங்களுக்கு வாய்ப்பளிக்கிறோம்.

பைக் இன்சூரன்ஸின் தோராய மதிப்பீட்டினை(quote) ஒப்பிடவும்

ஆன்லைனில் பைக் இன்சூரன்ஸ் வாங்குவதின் ஒரு வசதி என்னவென்றால், நீங்கள் வெவ்வேறு பைக் இன்சூரன்ஸின் தோராய மதிப்பீடுகளை ஒப்பிட்டுப் பார்க்கலாம். நீங்கள் இதனை ஆன்லைன் இன்சூரன்ஸ் அக்கிரிகேட்டர்களை பயன்படுத்தி செய்யலாம் அல்லது வெவ்வேறு இன்சூரன்ஸ் வழங்குநர் வலைதளங்களில் சென்று செய்யலாம். உங்கள் ஐடிவி, கிடைக்கப்பெறும் ஆட்-ஆன்கள், சர்வீஸ் பெனிஃபிட்கள், நம்பகத்தன்மை போன்ற முக்கிய அம்சங்களோடு, கிளைம் செட்டில்மென்ட் விகிதங்கள் மற்றும் நடைமுறைகளையும் ஒப்பிட்டுப் பார்ப்பதையும் நீங்கள் உறுதி செய்து கொள்ளவும்.

சர்வீஸ் பெனிஃபிட்கள்

நல்ல பைக் இன்சூரன்ஸ் என்பது காப்புறுதிப் பாதுகாப்பினையும், கிளைம்களையும் பற்றியது மட்டுமேயல்ல (ஆயினும், இவை தான் நமக்கு மிக அவசியம் என்பதும் உண்மை தான்!). உங்கள் சர்வீஸ் வழங்குநரிடமிருந்து நீங்கள் பெறக் கூடிய சர்வீஸ் பெனிஃபிட்களையும் கூட நீங்கள் பார்க்க வேண்டும். உதாரணத்திற்கு, டிஜிட்-இல் நாங்கள் ரோடுசைடு அசிஸ்டன்ஸ் (இது கிளைம் கணக்கில் வராது) போன்ற சர்வீஸ்களையும் உங்களுக்கு வழங்குகிறோம். இதன் மூலமாக உங்களுக்கு வேண்டிய போதெல்லாம் நாங்கள் உங்கள் கூடவே இருக்கிறோம் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம்.

உங்கள் காப்புறுதிப் பாதுகாப்பினை தெரிந்து கொள்ளவும்

நல்ல பைக் இன்சூரன்ஸ் என்பது நீங்கள் விரும்பும் பல்வேறு விஷயங்களுக்கும் உங்களுக்குக் காப்புறுதி வழங்க வேண்டும். அதற்காக தான் பிரீமியம் தொகையே உள்ளது! எனவே, சரியான பைக் இன்சூரன்ஸை தேர்வு செய்யும் போது, நீங்கள் பெறப் போகும் காப்புறுதிப் பாதுகாப்பினை பற்றி நீங்கள் தெரிந்து கொள்வதை உறுதிப்படுத்திக் கொள்ளவும். அதன் பிறகு, நீங்கள் செலுத்தும் தொகை அந்த பெனிஃபிட்களை பெறுவதற்கு சரியானது தானா என்பதை முடிவு செய்யவும்.

நீங்கள் அறிய வேண்டிய டூ வீலர் இன்சூரன்ஸ் சொற்கள்

டூ வீலர் இன்சூரன்ஸில் இன்சுர்டு டெக்லேர்டு வேல்யூ (ஐடிவி/IDV) என்றால் என்ன?

ஐடிவி என்பது, உங்கள் பைக் திருடப்பட்டாலோ அல்லது முழுமையாக சேதப்படுத்தப்பட்டாலோ, உங்கள் இன்சூரன்ஸ் வழங்குநர் உங்களுக்கு வழங்கக் கூடிய அதிகபட்ச தொகையை குறிக்கிறது.

2 வீலர் இன்சுர்டு டெக்லேர்டு வேல்யூவும், உங்கள் டூ வீலர் இன்சூரன்ஸ் பிரீமியமும் ஒன்றோடொன்று தொடர்புடையது. இதன் பொருள் என்னவென்றால், உங்கள் ஐடிவி அதிகமாக இருக்கும் போது, உங்கள் பைக் இன்சூரன்ஸுக்கான பிரீமியம் தொகையும் அதிகமாக இருக்கும் - மற்றும் உங்கள் வாகனம் பழையதாகி அதன் ஐடிவி மதிப்பு குறையும் போது, உங்கள் பிரீமியம் தொகையும் குறைகிறது.

மேலும், உங்கள் பைக்கை நீங்கள் விற்பதற்கு முடிவு செய்யும் போது, ஐடிவி அதிகமாக இருக்கும் பட்சத்தில், உங்கள் பைக்கிற்கு அதிக விலை கிடைக்கும். பைக்கின் பயன்பாடு, முந்தைய பைக் இன்சூரன்ஸ் கிளைம் அனுபவம் போன்ற பிற காரணிகளால் கூட அதன் விலை பாதிக்கக் கூடும்.

எனவே, உங்கள் பைக்கிற்கு சரியான டூ வீலர் இன்சூரன்ஸ் பாலிசியை நீங்கள் தேர்வு செய்யும் போது, பிரீமியம் தொகை மட்டுமின்றி, உங்கள் பைக்கிற்கு வழங்கப்படும் ஐடிவி-யையும் கவனிப்பதற்கு தவறாதீர்கள்.

ஒரு இன்சூரன்ஸ் நிறுவனம் உங்களுக்கு வழங்குகின்ற பிரீமியம் தொகை குறைவாக இருக்கிறதென்றால், அந்நிறுவனம் வழங்கும் ஐடிவி தொகை குறைவானதாக இருப்பது காரணமாக இருக்கலாம். ஒரு வேளை உங்கள் பைக் முழுமையாக சேதமடையும் பட்சத்தில், அதிக ஐடிவி இருப்பது உங்களுக்கு அதிக இழப்பீட்டினை பெற்றுத் தரும்.

பைக்கை விற்பதற்கு எண்ணும் போது, உங்கள் ஐடிவி தான் உங்கள் பைக்கின் சந்தை மதிப்பை குறிப்பதாக அமைகிறது. எனினும், உங்கள் பைக்கை நல்ல முறையில் பராமரித்திருக்கும் பட்சத்தில், அது புதியது போலவே பளிச்சென்று இருந்தால், உங்கள் ஐடிவி மதிப்பினை விடவும் உங்கள் பைக்கிற்கு அதிக விலையினை நீங்கள் தீர்மானிக்கலாம்.

முடிவில், உங்கள் பைக்கை நீங்கள் எந்த அளவிற்கு நேசித்திருக்கிறீர்கள் என்பதை இவையெல்லாம் காட்டும்.

டூ வீலர் இன்சூரன்ஸில் நோ கிளைம் போனஸ் (என்சிபி/NCB) என்றால் என்ன?

என்சிபி-யின் (நோ கிளைம் போனஸ்) பொருள் வரையறை: என்சிபி என்பது பாலிசிதாரருக்கு கிளைம் பெறாத பாலிசி காலத்தின் போது பிரீமியத்தின் மீது வழங்கப்படும் தள்ளுபடியை குறிக்கிறது.

நோ கிளைம் போனஸ் என்பது 20-50% வரை தள்ளுபடி வழங்குகிறது. இது உங்கள் பைக் இன்சூரன்ஸ் பாலிசியை பயன்படுத்தி நீங்கள் பைக் விபத்திற்கான எந்தவொரு கிளைம்களையும் செய்திருக்காத பட்சத்தில், உங்கள் பாலிசி காலத்தின் இறுதியில் உங்களுக்குக் கிடைக்கப்பெறும்.

இதன் பொருள், உங்களுடைய முதல் காம்ப்ரிஹென்சிவ் பைக் இன்சூரன்ஸ் பாலிசியை நீங்கள் வாங்கும் போது உங்களுக்கு நோ கிளைம் போனஸ் கிடைக்காது - உங்கள் பாலிசியை புதுப்பிக்கும் போது தான் இது உங்களுக்குக் கிடைக்கப்பெறும்.

இன்ன பைக் என்றில்லாமல், நோ கிளைம் போனஸ் என்பது பைக் இன்சூரன்ஸ் பாலிசிதாரரையே சேருகிறது. அதாவது, நீங்கள் உங்கள் பைக்கிற்கு பதிலாக வேறு பைக்கை மாற்றி விட்டாலும் கூட, உங்கள் என்சிபி உங்களுடனே இருக்கும்.

நீங்கள் புது பைக் வாங்க முற்படும் போது, உங்களுக்கு புது பைக் இன்சூரன்ஸ் பாலிசி வழங்கப்படும். ஆனாலும் கூட, உங்கள் பழைய பைக் அல்லது பாலிசியில் நீங்கள் சேர்த்து வைத்துள்ள என்சிபி-யின் நன்மைகளை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்.

ஜீரோ டிப்ரிஸியேஷன் டூ வீலர் இன்சூரன்ஸ் என்றால் என்ன?

எல்லா பொருள்களையும் போலவே, காலப்போக்கில் உங்கள் பைக்கின் பம்பர் அல்லது வேறு ஏதேனும் மெட்டல் அல்லது ஃபைபர் கிளாஸ் பாகங்கள் உள்ளிட்ட சில பாகங்களின் மதிப்பு குறையும்.

எனவே, உங்கள் வண்டி சேதமடையும் போது, அதன் பாகத்தை மாற்றுவதற்கான மொத்த தொகையும் உங்களுக்கு வழங்கப்படாது. ஏனெனில், கிளைம் தொகையிலிருந்து டிப்ரிஸியேஷன்(தேய்மானம்) தொகை கழிக்கப்படும்.

ஆனால் இந்த ஆட்-ஆனை பயன்படுத்தும் போது டிப்ரிஸியேஷன் தொகை கணக்கிடப்படுவதில்லை. நீங்கள் டிஜிட்-இன் அங்கீகரிக்கப்பட்ட ஒர்க் ஷாப்பில் உங்கள் வண்டியை ரிப்பேர் செய்யும் பட்சத்தில், இந்த ஆட்-ஆன் மூலமாக ரிப்பேர் செலவின் முழு தொகையையுமோ / அதன் பாகங்களை மாற்றுவதற்கான முழு தொகையையுமோ நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்.

ஜீரோ டிப்ரிஸியேஷன் டூ வீலர் இன்சூரன்ஸ் பற்றி மேலும் தெரிந்து கொள்ளவும்.

டூ வீலர் இன்சூரன்ஸில் கேஷ்லெஸ் கிளைம்கள் என்றால் என்ன?

நீங்கள் டிஜிட்-இன் அங்கீகரிக்கப்பட்ட ரிப்பேர் சென்டரில் உங்கள் பைக்கை ரிப்பேர் செய்ய தேர்வு செய்தால், உங்கள் பைக்கினை ரிப்பேர் செய்வதற்கு அனுமதிக்கப்பட்ட கிளைம் தொகையை நாங்கள் நேரடியாக ரிப்பேர் சென்டரிலேயே செலுத்தி விடுவோம். இது தான் கேஷ்லெஸ் கிளைம்.

கம்பல்சரி எக்ஸெஸ்/டிடக்டபிள் போன்ற டிடக்டபிள்ஸ் (கழிப்புத்தொகை) ஏதேனும் இருப்பின், அல்லது உங்கள் இன்சூரன்ஸால் பாதுகாப்பளிக்கப்படாத ரிப்பேர் செலவுகள் அல்லது டிப்ரிஸியேஷன் கட்டணங்கள் போன்றவை இருப்பினும், இவற்றையெல்லாம் இன்சூர் செய்யப்பட்ட நபரின் சொந்த செலவில் தான் செய்ய வேண்டும் என்பதை தயவு செய்து கவனத்தில் கொள்ளவும்.

கேஷ்லெஸ் பைக் இன்சூரன்ஸை பற்றி மேலும் தெரிந்து கொள்ளவும்.

சரியான டூ வீலர் இன்சூரன்ஸ் பாலிசியை எவ்வாறு தேர்வு செய்வது?

பைக் இன்சூரன்ஸ் கால்குலேட்டர் என்னும் ஆன்லைன் டூல் உங்கள் பைக்கிற்கு சரியான பைக் இன்சூரன்ஸ் தோராய மதிப்பீட்டினை (quote) கணக்கிடுவதற்கு உதவுகிறது.

உங்கள் பைக்கின் மேக் மற்றும் மாடல், ரெஜிஸ்ட்ரேஷன் தேதி, பிளான் வகை போன்ற உங்கள் பைக்கின் அடிப்படையான தகவல்களை உள்ளிடுவதின் மூலம் நீங்கள் இதனை கணக்கிடலாம்.

பைக் இன்சூரன்ஸ் பிரீமியத்தினை கணக்கிடவும்

  • ஸ்டெப் 1 : உங்கள் பைக்கின் மேக், மாடல், வேரியன்ட்(மாற்றுரு), ரெஜிஸ்ட்ரேஷன் தேதி, மற்றும் உங்கள் பைக்கை நீங்கள் ஓட்டுகின்ற ஊர் ஆகியவற்றை உள்ளிடவும்

  • ஸ்டெப் 2 : தோராய மதிப்பீட்டினை பெறவும் என்பதை அழுத்தியவுடன், தேர்டு-பார்ட்டி பைக் இன்சூரன்ஸ் மற்றும் காம்ப்ரிஹென்சி பைக் இன்சூரன்ஸ் ஆகிய இரண்டில் ஒன்றை தேர்வு செய்யவும்.
  • ஸ்டெப் 3 : உங்கள் என்சிபி/கிளைம் வரலாறு, காலாவதியாகும் காலம் போன்ற உங்கள் முந்தைய பைக் இன்சூரன்ஸ் பாலிசியின் (ஏதேனும் இருந்தால்) தகவல்களை பற்றி எங்களுக்கு மேலும் தெரிவிக்கவும்.

டூ வீலர் இன்சூரன்ஸ் பிரீமியம் கால்குலேட்டர் பற்றி மேலும் தெரிந்து கொள்ளவும்.

பைக் இன்சூரன்ஸ் பிரீமியத் தொகையை நிர்ணயிக்கும் காரணிகள்

ஓன் டேமேஜஸ் கவர் - ஸ்டாண்டர்ட்/காம்ப்ரிஹென்சிவ் மற்றும் ஸ்டாண்ட்அலோன் (தனித்த) ஓன் டேமேஜ் பாலிசியிலும் இதன் நன்மைகள் அடங்கியுள்ளன, பைக் இன்சூரன்ஸின் இந்த அம்சத்தின் மூலமாக உங்கள் சொந்த பைக்கிற்கு நேரும் இழப்புகள் மற்றும் சேதங்களுக்கு காப்புறுதி அளிக்கப்படும்.

  • பைக்கின் ஐடிவி(IDV) - உங்கள் பைக்கின் ஐடிவி அல்லது உங்கள் பைக்கின் தற்போதைய சந்தை மதிப்பானது, நேரடியாக உங்கள் பைக்கின் பிரீமியம் தொகையை தீர்மானிக்கிறது.
  • ஆட்-ஆன்கள் - நீங்கள் தேர்வு செய்திருக்கும் ஆட்-ஆன்களின் வகையையும், எண்ணிக்கையையும் பொறுத்தே உங்கள் பைக் இன்சூரன்ஸின் பிரீமியம் தொகை அமைகிறது.
  • தேர்டு-பார்ட்டி லையபிலிட்டிஸ்(பொறுப்புகள்) - பைக் இன்சூரன்ஸில் குறைந்தபட்சம் தேர்டு-பார்ட்டி லையபிலிட்டி-க்கு(பொறுப்புகளுக்கு) காப்புறுதி வழங்குவது சட்டப்படி கட்டாயமாகும். இதனை சார்ந்திருக்கும் பிரீமியம் தொகையானது, இந்தியக் காப்பீடு ஒழுங்காற்று மற்றும் வளர்ச்சி முகமையின் (ஐஆர்டிஏஐ/IRDAI) வழிகாட்டுதல்களின் படியே பொதுவாக தீர்மானிக்கப்படுகிறது. ஆகவே, உங்கள் பைக் இன்சூரன்ஸின் இந்த உள்உறுப்பானது எப்போதும் ஒரே மாதிரியாக தான் இருக்கும்.

  • பைக்கின் மேக் & மாடல் - உங்கள் பைக்கின் ஐடிவி, சிசி மற்றும் பைக்கோடு தொடர்புடைய அபாயங்களை, உங்கள் பைக்கின் மேக் மற்றும் மாடல் நேரடியாகவே பாதிக்கிறது. எனவே, நீங்கள் தேர்வு செய்யும் எந்தவொரு பிளானுக்கான பைக் இன்சூரன்ஸ் பிரீமியத்திலும் இதன் தாக்கம் அதிகமாகவே இருக்கும்.
  • பிஏ (PA) கவர் - உங்களிடம் ஏற்கனவே ஒன்று இல்லாமலிருந்து, உங்கள் பைக் இன்சூரன்ஸ் பிளானிலேயே நீங்கள் இதனை தேர்வு செய்திருந்தால், உங்கள் பைக் இன்சூரன்ஸ் பிரீமியம் சிறிதளவு அதிகரிக்கும்.
  • பைக் பயன்படுத்தப்பட்ட ஆண்டுகள் - உங்கள் பைக் பழையதாக இருக்கும் பட்சத்தில், அதன் பிரீமியம் குறைவாக இருக்கும். அது போலவே, புதிதாக இருந்தால் பிரீமியம் அதிகமாக இருக்கும்!

உங்கள் டூ வீலர் இன்சூரன்ஸ் பிரீமியத்தை எவ்வாறு குறைப்பது?

  • நீங்கள் 4-5 வருடங்களுக்கும் மேல் எந்த கிளைமும் செய்யவில்லையென்றால், உங்கள் வாலன்டரி டிடக்டபிள்-ஐ (தன்னிச்சையான கழிப்புத்தொகை) அதிகப்படுத்துவதன் மூலம், உங்கள் பைக் இன்சூரன்ஸ் பிரீமியத்தினை நீங்கள் குறைக்கலாம்.
  • இது வெளிப்படையானது, ஆயினும் முக்கியமானது. சாலைகளில் பாதுகாப்பாகவும், ஸ்பீட்-லிமிட்களில் ஜாக்கிரதையாகவும் வண்டி ஓட்டுவதன் மூலம் நீங்கள் விபத்துகளை தவிர்க்கலாம். இதன் மூலம் ஒவ்வொரு வருடமும் உங்கள் பைக் இன்சூரன்ஸை புதுப்பிக்கும் போது உங்களுக்கு நோ கிளைம் போனஸ் கிடைக்கும்.
  • உங்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் பேசவும். உங்களுக்கு மலிவாக பைக் இன்சூரன்ஸின் தோராய மதிப்பீடு (quote) கிடைக்கவில்லையென்று நீங்கள் நினைத்தால், இறுதி முடிவு எடுப்பதற்கு முன்னால் நீங்கள் இன்சூரன்ஸ் எடுக்க விரும்பும் நிறுவனத்தினை ஒரு முறை அழைத்து பேசவும்.

டூ-வீலர் இன்சூரன்ஸின் தோராய மதிப்பீடுகளை (quotes) ஒப்பிடவும்

உங்கள் பைக் இன்சூரன்ஸை மற்ற நிறுவனங்களோடு எப்படி ஒப்பிட வேண்டும்?

  • உங்கள் ஐடிவி-ஐ(IDV) சரிபார்க்கவும் - மலிவான டூ-வீலர் இன்சூரன்ஸ் தோராய மதிப்பீடுகளை கொண்டிருப்பவையின் ஐடிவி (இன்சுர்டு டெக்லேர்டு வேல்யூ), அதாவது உங்கள் டூ வீலரின் சந்தை மதிப்பு குறைவாக இருக்கும். இது குறைவாக இருக்கும் பட்சத்தில், கிளைம் செய்யும் சமயத்தில், குறிப்பாக உங்கள் பைக் திருடு போகும் சமயத்தில் மற்றும் முழுதாக சேதமடைந்திருக்கும் சமயத்திலும், நீங்கள் அதிர்ச்சி அடைவீர்கள்! எனவே இதன் சரியான மதிப்பை தீர்மானிப்பது மிக முக்கியம். ஆன்லைனில் உங்கள் டூ வீலர் இன்சூரன்ஸ் பாலிசியை வாங்கும் போது இதனை நீங்களே தீர்மானித்துக் கொள்ளும் வாய்ப்பினை டிஜிட் வழங்குகிறது.
  • சர்வீஸ் பெனிஃபிட்களை சரிபார்க்கவும் - விற்பனைக்கு பின்னர் வழங்கும் சேவைகளை நல்லபடியாக வழங்கும் நிறுவனத்தினை தேர்வு செய்யவும். டிஜிட் வழங்கும் சேவைகளுள் சில - 24*7 மணி நேர வாடிக்கையாளர் சேவை, 4400+ கேரேஜ்களில் கேஷ்லெஸ், மற்றும் பல.
  • அவை வழங்கும் ஆட்-ஆன்களை சரிபார்க்கவும் - மலிவான விலையில் உங்களுக்கு உபயோகமான ஆட்-ஆன்களை தேர்வு செய்யும் வாய்ப்பினை உங்களுக்கு வழங்கும் நிறுவனத்தினை தேர்ந்தெடுக்கவும்.

டிஜிட்-இல் டூ வீலர் இன்சூரன்ஸை எவ்வாறு வாங்குவது/புதுப்பிப்பது?

  • ஸ்டெப் 1 : உங்கள் டூ-வீலரின் மேக், மாடல், வேரியன்ட்(மாற்றுரு), ரெஜிஸ்ட்ரேஷன் தேதி, மற்றும் உங்கள் பைக்கை நீங்கள் ஓட்டுகின்ற ஊர் ஆகியவற்றை உள்ளிடவும். ‘தோராய மதிப்பீட்டினை பெறவும்’ என்பதை அழுத்தியவுடன், நீங்கள் விரும்பும் டூ வீலர் இன்சூரன்ஸ் பிளானை தேர்வு செய்யவும்.
  • ஸ்டெப் 2 : தேர்டு-பார்ட்டி லையபிலிட்டி ஒன்லி டூ-வீலர் இன்சூரன்ஸ் அல்லது ஸ்டாண்டர்ட் பேக்கேஜ்/காம்ப்ரிஹென்சிவ் டூ-வீலர் இன்சூரன்ஸை தேர்வு செய்யவும்.
  • ஸ்டெப் 3 : உங்கள் முந்தைய இன்சூரன்ஸ் பாலிசியை பற்றிய விவரங்களை எங்களுக்குத் தெரிவிக்கவும்- காலாவதியாகும் தேதி, கடந்த வருடத்தில் செய்த கிளைம்கள், பெற்ற நோ கிளைம் போனஸ் ஆகியவை.
  • ஸ்டெப் 4 : உங்கள் பிரீமியத்திற்கான தோராய மதிப்பீடு (quote) உங்களுக்குக் கிடைக்கும். நீங்கள் ஸ்டாண்டர்ட் பிளானை தேர்வு செய்திருந்தால், ஜீரோ டிப்ரிஸியேஷன் கவர், டயர் புரொட்டெக்ட் கவர் மற்றும் பிரேக்டவுன் அசிஸ்டன்ஸ் போன்ற ஆட்-ஆன்களை தேர்ந்தெடுப்பதன் மூலம் அதனை மேலும் நீங்கள் தனிப்பயனாக்கிக் கொள்ளலாம். 
  • ஸ்டெப் 5 : நீங்கள் பணத்தை செலுத்திய உடனேயே, உங்கள் பாலிசி உங்களுக்கு இ-மெயிலில் வந்து விடும்! :) எளிதானது, சரியா?

3 வருடத்திற்கான லாங் டெர்ம் டூ வீலர் இன்சூரன்ஸை பற்றி மேலும் தெரிந்து கொள்ளவும்.

டூ வீலர் இன்சூரன்ஸ் பற்றி நீங்கள் அறிய வேண்டிய முக்கிய விஷயங்கள்

இந்தியாவில் டூ வீலர் இன்சூரன்ஸ் எடுப்பது ஏன் கட்டாயமாக்கப்பட்டுள்ளது?

  • இந்தியாவில் நடக்கும் சாலை விபத்துகளில் 34% டூ-வீலர்களால் நடக்கிறது : சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் கருத்துப் படி, இந்தியாவில் சாலை விபத்துகள் ஏற்படுவதற்கு பங்களிக்கும் காரணிகளில், டூ-வீலர்கள் ஒரு மிகப் பெரும் பங்காற்றும் காரணிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. மோட்டார் வாகனச் சட்டப்படி குறைந்தபட்சம் தேர்டு-பார்ட்டி பைக் இன்சூரன்ஸ் எடுப்பதை கட்டாயமாக்கியிருப்பதற்கு இதுவே காரணமாகும். இதன் மூலம், மக்கள் பொறுப்புடன் வண்டி ஓட்டுவது மட்டுமின்றி, விபத்து அல்லது மோதல் ஏற்படும் சூழ்நிலையில், சேதங்களுக்கும், இழப்புகளுக்கும் காப்புறுதி வழங்கப்படுகிறது.
  • தேர்டு-பார்ட்டியினரை பாதுகாக்கிறது : விபத்துகள் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது, ஆனால் பாதிக்கப்பட்ட நபருக்கு என்ன ஆகும்? தேர்டு-பார்ட்டி பைக் இன்சூரன்ஸ் எடுப்பதை கட்டாயமாக்கப்பட்டிருக்கும் காரணங்களில் ஒன்று, கெடுவாய்ப்பான சூழ்நிலைகளில், பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு அனைத்து சேதங்கள் மற்றும் இழப்புகளுக்கு காப்புறுதி வழங்குவதன் மூலமாக அவரை பாதுகாக்கலாம்.
  • சட்ட ரீதியான சிக்கல்களை சமாளிக்க உதவுகிறது : ஒருவர் விபத்தில் சிக்கினால், ஏற்படும் சேதங்கள் மட்டுமே வருந்துவதற்கான காரணமல்ல. சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்கு நாம் செலவழிக்கும் நேரமும், ஆற்றலும் கூட நம்மை அலைக்கழிக்கிறது. ஆயினும், சரியான பைக் இன்சூரன்ஸை வைத்திருப்பது, சட்ட ரீதியான நடவடிக்கைகளை கூட திறம்பட மேற்கொள்வதற்கு உதவுகிறது.

இந்தியாவில் பைக் இன்சூரன்ஸ் எடுப்பது ஏன் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்பதை குறித்து விவரமாக மேலும் தெரிந்து கொள்ளவும்.

டூ வீலர் இன்சூரன்ஸை ஆன்லைனில் வாங்குவது ஏன் அர்த்தமுள்ளதாக இருக்கிறது

ஆன்லைன் ஷாப்பிங் உலகத்தில், விரைவான யூபிஐ பேமெண்ட்கள் மற்றும் ஆன்லைனில் பைக் இன்சூரன்ஸை வாங்குவதென்பது வளர்ந்து வரும் டிஜிட்டல் பொருளாதாரத்தின் ஒரு அங்கமாகும். இது உங்களுக்கு எளிதானதும், சௌகரியமானதும் மட்டுமின்றி, உங்கள் பைக் இன்சூரன்ஸ் பிரீமியத்தின் விலையை குறைக்கவும் உதவும்!

ஆன்லைனில் பைக் இன்சூரன்ஸை வாங்குவதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், உங்கள் டூ-வீலரின் அடிப்படையான விவரங்களை தயாராக வைத்திருக்க வேண்டும், மேலும் உங்கள் டெபிட்/கிரெடிட் கார்டு அல்லது யூபிஐ ஐடி-ஐ தயாராக வைத்திருந்தால் போதுமானது. உங்கள் பைக் இன்சூரன்ஸ் உங்களுக்கு உடனேயே இ-மெயில் செய்யப்படும்.

  • நேரத்தை மிச்சப்படுத்துகிறது : ஆன்லைனில் பைக் இன்சூரன்ஸை வாங்குவதின் பெரிய சாதகங்களுள் ஒன்று என்னவென்றால், அது உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தும்! நேரடியாக சென்று ஏஜெண்டையோ அல்லது இன்சூரன்ஸ் நிறுவனத்தையோ சந்திக்க வேண்டியதில்லை. உங்களுக்கு வேண்டியதெல்லாம் ஒரு நல்ல இன்டர்நெட் கனெக்‌ஷனோடு கூடிய ஒரு லேப்டாப் அல்லது ஸ்மார்ட் ஃபோன் மட்டும் தான். 
  • தனிப்பயனாக்கம் கிடைக்கப்பெறும் : ஆன்லைனில் பைக் இன்சூரன்ஸ் வாங்குவதின் இன்னொரு சௌகரியம் என்னவென்றால், ஆன்லைனில் கிடைக்கப்பெறும் தனிப்பயனாக்க வசதி தான். உங்கள் ஐடிவி-ஐ தனிப்பயனாக்குவது முதல், ஜீரோ டிப்ரிஸியேஷன் கவர், டயர் புரொட்டெக்ட் கவர் போன்ற பல்வேறு ஆட்-ஆன்களை தேர்வு செய்வது வரை, ஆன்லைனில் கிடைக்கப்பெறும் அனைத்து தனிப்பயனாக்க வசதிகளும் நிச்சயமாக ஆஃப்லைனில் கிடைக்காது.
  • ஆவணங்களற்ற நடைமுறை : ஆவணங்கள் கொண்ட நடைமுறையை யாரும் விரும்புவதில்லை, அதனை நாங்கள் புரிந்து கொண்டுள்ளோம்! அதனால் தான், நீங்கள் டிஜிட்-இல் ஆன்லைனில் பைக் இன்சூரன்ஸை வாங்கும் போது, ஆவணங்கள் ஏதும் கொண்ட நடைமுறை இல்லை. எல்லாமே ஆன்லைனில் மட்டுமே!

செகண்ட்-ஹேண்ட் பைக் இன்சூரன்ஸை ஆன்லைனில் வாங்கவும்/புதுப்பிக்கவும்

புத்தம் புதிய பைக்காக இருந்தாலும் அல்லது செகண்ட்-ஹேண்ட் பைக்காக இருந்தாலும், நீங்கள் பைக் இன்சூரன்ஸ் பாலிசியை வாங்கலாம் அல்லது புதுப்பித்துக் கொள்ளலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? 

எனினும், நீங்கள் செகண்ட்-ஹேண்ட் பைக் வாங்கும் போது, அதன் உரிமையாளர் ஏற்கனவே டூ-வீலர் இன்சூரன்ஸ் வைத்திருக்கிறாரா இல்லையா என்பதை சரிபார்க்கவும், மேலும் அதனை பைக் வாங்கிய 14 நாட்களுக்குள் உங்கள் பெயரில் மாற்றிக் கொள்ளவும். கூடுதலாக, கீழ்க்கண்டவற்றையும் உறுதி செய்து கொள்ளவும்:

  • பைக்கும் அதன் இன்சூரன்ஸும் உங்கள் பெயருக்கு மாற்றப்பட்டிருக்க வேண்டும். வண்டி வாங்கிய 14 நாட்களுக்குள் நீங்கள் இதனை செய்ய வேண்டும்.
  • பைக்கின் கிளைம் வரலாறினை கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும். உங்கள் பைக்கின் தற்போதைய இன்சூரன்ஸ் வழங்குநரிடம் சம்பந்தப்பட்ட பாலிசி எண்ணை அளிப்பதன் மூலம் நீங்கள் இதனை தெரிந்து கொள்ளலாம்.
  • நீங்கள் ஏற்கனவே பைக் இன்சூரன்ஸ் வைத்திருந்தால் (வேறொரு பைக்கிற்கு), உங்கள் புதிய கார் இன்சூரன்ஸ் பாலிசிக்கு உங்கள் நோ கிளைம் போனஸை நீங்கள் மாற்றிக் கொள்ளலாம்.
  • உங்கள் பைக் உரிமையாளரிடம் செல்லத்தக்க பைக் இன்சூரன்ஸ் இல்லையென்றால், நீங்கள் உடனடியாக எங்களுடைய வலைதளத்தில் உங்கள் டூ-வீலரை இன்சூர் செய்து கொள்ளலாம்.
  • உங்கள் செகண்ட்-ஹேண்ட் பைக் இன்சூரன்ஸை நீங்கள் ஏற்கனவே உங்கள் பெயருக்கு மாற்றியிருந்தால், அதன் காலாவதியாகும் தேதியை சரிபார்க்கவும். அதன் காலாவதி தேதியன்று அல்லது அதற்கு முன்னரே இன்சூரன்ஸை புதுப்பிப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

மேலும் தெரிந்து கொள்ளவும்

இந்தியாவில் பழைய பைக்கிற்கான இன்சூரன்ஸை வாங்கவும்/புதுப்பிக்கவும்

உங்கள் பைக்கிற்கு நீங்கள் இது வரை பைக் இன்சூரன்ஸ் எடுக்கவில்லையென்றால், இப்போது கூட ஒன்றும் தாமதமாகி விடவில்லை. எனினும், உங்கள் பழைய பைக்கிற்கு பைக் இன்சூரன்ஸ் வாங்கும் முன்பு நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய மூன்று முக்கியமான விஷயங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

1. பைக் பயன்பாடு மற்றும் பைக் இன்சூரன்ஸின் வகை : உங்கள் பழைய பைக்கை சட்டப்படி வெளியே எடுத்துச் செல்வதற்காக பைக் இன்சூரன்ஸ் வாங்குகிறீர்களா, அல்லது அதனை சேதங்கள் மற்றும் இழப்புகளிலிருந்து பாதுகாப்பதற்கு இன்சூரன்ஸ் வாங்குகிறீர்களா? உங்கள் பைக்கின் பயன்பாடு மற்றும் வகையினை பொறுத்து, தேர்டு-பார்ட்டி மற்றும் காம்ப்ரிஹென்சிவ் பைக் இன்சூரன்ஸ் ஆகிய இரண்டில் எது உங்களுக்குத் தேவைப்படும் என்பதை நீங்கள் முடிவு செய்து கொள்ள வேண்டும்.

2. உங்கள் பைக்கின் ஐடிவி(IDV) : ஐடிவி என்பது உங்கள் பைக்கின் சந்தை மதிப்பாகும். இதனை பொறுத்து தான், உங்கள் பைக் இன்சூரன்ஸ் பிரீமியம் மற்றும் கிளைம் செய்யும் சமயங்களில் உங்கள் கிளைம் தொகையும் அமையும். உங்கள் பைக் பழையதாக இருப்பதால், அதன் சந்தை மதிப்பிற்கு தக்கவாறு அதன் ஐடிவி-ஐ அமைத்துக் கொள்ளவும், காலம் செல்லச் செல்ல ஆகும் டிப்ரிஸியேஷன் தொகையையும் கணக்கில் எடுத்துக் கொள்ளவும்!

3.கூடுதல் கவர்கள் : நீங்கள் காம்ப்ரிஹென்சிவ் டூ-வீலர் இன்சூரன்ஸை தேர்வு செய்யும் போது, உங்கள் பைக்கிற்கு பரவலான காப்புறுதிப் பாதுகாப்பினை வழங்கும் பொருட்டு, உங்கள் பாலிசியில் கூடுதல் கவர்களை சேர்த்து வாங்கிக் கொள்வதற்கான வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்கும். உங்கள் பைக்கின் பயன்பாடு மற்றும் அதன் வயதை பொறுத்து, அனைத்து சாத்தியமான சூழ்நிலைகளிலும் உங்கள் பைக்கிற்கு காப்புறுதி அளிக்கக் கூடிய ஆட்-ஆன்களை நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

எனினும், உங்கள் பழைய டூ-வீலருக்கு பைக் இன்சூரன்ஸ் வாங்க நீங்கள் திட்டமிட்டிருந்தால், எந்தெந்த ஆட்-ஆன்கள் உங்களுக்குக் கிடைக்கும் என்பதை பார்க்கவும். உதாரணத்திற்கு, உங்கள் பைக் 5 வருடங்களுக்கும் மேற்பட்டதாக இருக்கும் பட்சத்தில், ரிட்டர்ன் டூ இன்வாய்ஸ் கவர் உங்களுக்குக் கிடைக்காது. 

பழைய பைக்கிற்கான இன்சூரன்ஸ் பற்றி மேலும் தெரிந்து கொள்ளவும்.

காலாவதியான டூ-வீலர் இன்சூரன்ஸ் பாலிசியை வாங்கவும்/புதுப்பிக்கவும்

உங்கள் காலாவதியான பைக் இன்சூரன்ஸ் பாலிசியை சரியான நேரத்தில் புதுப்பிப்பது ஏன் முக்கியமாக கருதப்படுகிறது?

  • உங்கள் என்சிபி-ஐ (NCB) நீங்கள் இழந்து விடுவீர்கள் - என்சிபி என்பது நீங்கள் வருடக்கணக்கில் பைக் இன்சூரன்ஸ் கிளைமே செய்யாத பட்சத்தில், சேர்த்து வைத்திருக்கும் நோ கிளைம் போனஸை குறிக்கிறது. நீங்கள் அடுத்த முறை பைக் இன்சூரன்ஸை புதுப்பிக்கும் போது, நீங்கள் சேர்த்து வைத்திருக்கும் போனஸானது உங்களுக்குத் தள்ளுபடியை பெற்றுத் தருவதற்கு உதவும். எனினும், உங்கள் பைக் இன்சூரன்ஸின் காலாவதி தேதிக்கு முன்னர் இதனை செய்யவில்லையென்றால், உங்கள் என்சிபி-ஐ முழுமையாக இழந்து விட நேரிடலாம்!

  • அபராதம் செலுத்த நேரிடும் வாய்ப்பிருக்கிறது - திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டத்தின் படி, செல்லத்தக்க பைக் இன்சூரன்ஸ் இன்றி பிடிபட்ட எவரும் முதல் முறையாக பிடிபடும் போது, ரூ.1000-லிருந்து ரூ.2000 வரை அபராதமாக செலுத்த வேண்டி வரும், இரண்டாவது முறை பிடிபட்டால் ரூ.4000 வரை செலுத்த வேண்டியது வரலாம். உங்களுடைய பைக் இன்சூரன்ஸை சரியான சமயத்தில் புதுப்பித்துக் கொள்ளும் போது, இது போன்ற சந்தர்ப்பங்கள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம்.

  • பொருளாதார சுமையை தாங்க வேண்டி வரும் - பைக் இன்சூரன்ஸ் வைத்திருப்பதன் நோக்கமே, சிறிய, பெரிய விபத்துகள் அல்லது இயற்கை பேரிடர்கள் போன்ற சூழ்நிலைகளில் ஏற்படும் எதிர்பாராத செலவுகளிலிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்வது தான். சரியான சமயத்தில் உங்கள் பைக் இன்சூரன்ஸை புதுப்பிக்கவில்லையென்றால், கெடுவாய்ப்பான சந்தர்ப்பங்களில் ஏற்படும் பொருளாதார ரீதியான இழப்புகளை நீங்கள் சந்திக்க நேரிடலாம்.

காலாவதியான பைக் இன்சூரன்ஸ் பாலிசியை புதுப்பிப்பது எப்படி என்பது குறித்து மேலும் தெரிந்து கொள்ளவும்.

டூ வீலர் இன்சூரன்ஸ் வாங்குவது தொடர்பாக அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

தேர்டு பார்ட்டி லையபிலிட்டி(பொறுப்பு) கவர் என்றால் என்ன?

தேர்டு பார்ட்டி லையபிலிட்டி கவர் என்பது ஒரு வேளை நீங்கள் அடுத்தவரின் பைக்-ஐ இடித்து, அவரின் உயிருக்கும், சொத்திற்கும் சேதமேற்படுத்தி விடும் பட்சத்தில், அத்தகைய இழப்பிலிருந்து உங்களை பாதுகாக்கின்ற ஒரு இன்சூரன்ஸ் கவராகும். உங்கள் சார்பில் உங்கள் இன்சூரன்ஸ் நிறுவனமானது சேதங்களுக்கு இழப்பீடு செலுத்தி விடும்.

என் பாலிசி உடன் எனக்கு ஆட்-ஆன்கள் கிடைக்குமா?

ஆம், உங்களுக்குக் கிடைக்கும்! நாங்கள் 24*7 பிரேக்டவுன் அசிஸ்டன்ஸ், என்ஜின் & கியர்பாக்ஸ் புரொட்டெக்ஷன் கவர், டயர் புரொட்டெக்ஷன் மற்றும் இது போன்ற பல ஆட்-ஆன்களை வழங்குகிறோம்.

ஆன்லைனில் டூ-வீலர் இன்சூரன்ஸிற்கு கிளைம் செய்வதற்கு என்னென்ன ஆவணங்கள் தேவைப்படும்?

ஒன்றுமே தேவையில்லை! டிஜிட்-ல், எங்களின் எல்லா கிளைம்களும் ஆன்லைனிலேயே எங்கள் ஸ்மார்ட் ஃபோன் மூலமாக செய்யப்படும் நடைமுறையில் செய்யப்படுகிறது. கிளைம் செய்யும் போது, நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் எங்களை இந்த 1800-258-5956 எண்ணில் தொடர்பு கொள்வது மட்டும் தான். நாங்கள் உங்களுடைய சேதங்களை ஆய்வு செய்வதற்கான சுய-ஆய்வு லிங்க்-ஐ உங்களுக்கு அனுப்புவோம், பிறகு உங்கள் பைக்கை எங்களுடைய கேரேஜ்களில் ஒன்றில் ரிப்பேர் செய்வதற்கான வாய்ப்பினை உங்களுக்கு வழங்குவோம் அல்லது நீங்கள் முதலில் பணம் செலுத்தி ரிப்பேர் செய்து கொண்டு பின்னர் பணத்தை பெற்றுக் கொள்ளலாம் (ரீஇம்பர்ஸ்மென்ட்), அது உங்கள் விருப்பம்!

ஒரு வேளை சிறிய அளவில் சேதம் ஏற்பட்டிருந்தால் நான் கிளைம் செய்யாமல் இருக்கலாமா? அதனால் எனக்கு என்ன நன்மை ஏற்படும்?

ஆம், கண்டிப்பாக இருக்கலாம்! அவ்வாறு செய்வதனால், உங்களுக்கு நோ கிளைம் போனஸ் கிடைக்கப்பெறும். இதன் பொருள், ஆன்லைனில் அடுத்த முறை நீங்கள் பைக் இன்சூரன்ஸை புதுப்பிக்கும் போது, ஒரு பாலிசி காலம் முழுவதும் கிளைம் செய்யாமல் இருந்தமைக்காக உங்களுக்கு பிரீமியத்தில் தள்ளுபடி கிடைக்கும்.

கட்டாயமாக டூ-வீலர் இன்சூரன்ஸ் எடுக்க வேண்டுமா?

ஆம். மோட்டார் வாகனச் சட்டம் 1988-ன் படி, குறைந்தபட்சம் தேர்டு-பார்ட்டி லையபிலிட்டிஸ் (பொறுப்புகள்) மற்றும் இழப்புகளுக்கு டூ-வீலர் இன்சூரன்ஸ் எடுப்பது கட்டாயமாகும். இது இல்லாமல், இந்தியாவின் எந்த இடத்திலும் நீங்கள் பைக் ஓட்டுவது சட்ட விரோதமானது.

ஆயினும், தேர்டு-பார்ட்டி இழப்புகளுக்கு மட்டுமின்றி, உங்கள் சொந்த டூ-வீலருக்கு ஏற்படும் சேதங்கள் மற்றும் இழப்புகளுக்கும் காப்புறுதி பாதுகாப்பளிக்கும் காம்ப்ரிஹென்சிவ் (முழுமையான) அல்லது ஸ்டாண்டர்ட் டூ-வீலர் இன்சூரன்ஸ் எடுப்பதற்கு பரிந்துரைக்கப்படுகிறது.

இந்தியாவில் புதிய டிராஃபிக் ஃபைன்களை பற்றி மேலும் தெரிந்து கொள்ளவும்.

என்னுடைய தற்போதைய இன்சூரன்ஸ் பாலிசியில் நான் என்னுடைய புதிய வாகனத்தை இணைத்துக் கொள்ள முடியுமா?

முடியாது, உங்கள் டூ-வீலர் இன்சூரன்ஸ் பாலிசியானது உங்கள் டூ-வீலரின் ரெஜிஸ்டிரேஷன் எண்ணோடு இணைக்கப்பட்டுள்ளது. அதனால் உங்களின் தற்போதைய இன்சூரன்ஸ் பாலிசியை உங்களின் புதிய வாகனத்திற்கு உபயோகப்படுத்த முடியாது. புதிய வாகனத்திற்கு நீங்கள் புதிய டூ-வீலர் இன்சூரன்ஸ் பாலிசியை வாங்க வேண்டும். ஒரு வேளை நீங்கள் உங்களுடைய பழைய வாகனத்தை விற்பதாக இருந்தால், உங்கள் தற்போதைய இன்சூரன்ஸ் பாலிசியை புதிய உரிமையாளருக்கு கைமாற்றி விடலாம்.

எந்தெந்த சூழ்நிலைகளில், வண்டியை ஆய்வு செய்வது கட்டாயமாக கருதப்படுகிறது?

எங்களிடம் முதல் முறையாக நீங்கள் காம்ப்ரிஹென்சிவ் அல்லது ஸ்டாண்டர்ட் டூ-வீலர் இன்சூரன்ஸ் பாலிசியை ஆன்லைனில் வாங்கும் போதும் அல்லது உங்களுடைய முந்தைய பாலிசி காலாவதியானதற்கு பின்னர் எங்களிடம் நீங்கள் உங்களுடைய பாலிசியை புதுப்பிக்க வந்திருந்தாலும் உங்களுடைய வண்டியை ஆய்வு செய்வது அவசியமாகிறது. எங்களுடைய ஸ்மார்ட் ஃபோன் ஆப்-ன் மூலமாகவும் ஆன்லைனில் இதனை செய்யலாம். எங்கள் குழுவினரால் ஆய்வு நடவடிக்கை அங்கீகரிக்கப்பட்டவுடன், சொந்த சேதங்களுக்கான உங்கள் காப்புறுதி தானாகவே செயற்படுத்தப்படும்.

எந்த ஆன்லைன் டூ-வீலர் இன்சூரன்ஸ் பைக்கிற்கு சிறந்தது?

இது உங்களின் தனிப்பட்ட தேவைகளை பொறுத்தது. டிஜிட்-ல், நாங்கள் ஆன்லைன் கிளைம்கள் மற்றும் விரைவான, வெளிப்படையான நடைமுறைகளில் ஆன்லைனில் வாங்குவது, கிளைம்கள் உடனடியாக செட்டில் செய்யப்படுகின்றனவா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு ஸ்மார்ட் ஃபோன் மூலமாக செய்யப்படும் ஆய்வு முறை, உங்கள் பைக்கை நீங்கள் பணம் செலுத்தாமலேயே ரிப்பேர் செய்து கொள்ளக் கூடிய வகையில் ஆயிரக்கணக்கான கேஷ்லெஸ் கேரேஜ்கள், மற்றும் உங்கள் பைக்கிற்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கக் கூடிய ஆட்-ஆன்கள் போன்ற பிரத்யேக பெனிஃபிட்களை வழங்குகிறோம்.

என்னுடைய பைக் இன்சூர் செய்யப்பட்டிருக்கிறதா என்பதை நான் எப்படி சரிபார்ப்பது?

பைக் உரிமையாளர் என்ற முறையில், எப்போதுமே தங்களின் பைக் இன்சூர் செய்யப்பட்டிருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது ஒருவரின் தனிப்பட்ட கடமையாகும். எனினும், பாலிசியை புதுப்பிக்க மறந்து போவது அல்லது அடுத்து பாலிசியை புதுப்பிக்கும் நடைமுறை குறித்து அறியாமல் இருப்பது இயற்கையே ஆகும். குறிப்பாக, தங்களின் இன்சூரன்ஸ் பாலிசிக்களை தானாகவே-புதுப்பிப்பவர்களுக்கு இது இயல்பாகும். எனவே, உங்கள் பைக் இன்சூர் செய்யப்பட்டிருக்கிறதா என்பது உங்களுக்கு நிச்சயமாக தெரியவில்லையெனில் அல்லது அடுத்து புதுப்பிப்பதற்கான தேதி தெரியவில்லையெனில், நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் உங்கள் மாநில ஆர்டிஓ வலைதளத்திற்கு சென்று, உங்கள் டூ-வீலரின் ரெஜிஸ்டிரேஷன் எண்ணை உள்ளிட வேண்டும். அதற்குப் பின்னர், பைக் இன்சூரன்ஸ் விவரங்கள் (பாலிசி எண், காலாவதி தேதி போன்றவை) உள்ளிட்ட உங்கள் பைக்கின் அனைத்து விவரங்களையும் நீங்கள் காணலாம்.

டூ-வீலர் இன்சூரன்ஸில் பிஏ (PA) கவர் என்றால் என்ன? அது கட்டாயமானதா?

பிஏ கவர் என்பது விபத்து நேரும் போது உங்களுக்கு காயங்கள் ஏற்படும் பட்சத்தில், உங்களுக்கு காப்புறுதி பாதுகாப்பளிக்கக் கூடிய பர்சனல் ஆக்சிடன்ட் கவராகும். இது சட்டப்படி கட்டாயமாகும். இதனை உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸுடன் கூடவே வாங்கலாம் அல்லது, உங்கள் தேர்டு-பார்ட்டி டூ-வீலர் இன்சூரன்ஸ் வாங்கும் போது பெயரளவிலான கட்டணத்திற்கு வாங்கிக் கொள்ளலாம்.

ஜீரோ டிப்ரிஸியேஷன் டூ-வீலர் இன்சூரன்ஸ் என்பதன் பொருள் என்ன?

ஜீரோ-டிப்ரிஸியேஷன் அல்லது பம்பர்-டூ-பம்பர் கவர் என்பது ஸ்டாண்டர்ட் அல்லது காம்ப்ரிஹென்சிவ் டூ-வீலர் இன்சூரன்ஸுடன் கிடைக்கக் கூடிய ஒரு ஆட்-ஆன் ஆகும். உங்கள் டூ-வீலர் இன்சூரன்ஸ் பாலிசியில் இந்த ஆட்-ஆனை நீங்கள் தேர்வு செய்திருந்தால், உங்கள் பைக்கிற்கு நாங்கள் டிப்ரிஸியேஷனை (தேய்மானம்) கணக்கிட மாட்டோம். எனவே, முழுமையான ஐடிவி அல்லது தேவையான இழப்பீட்டுத் தொகையை, வழக்கமாக டிப்ரிஸியேஷன் கணக்கில் குறைக்கப்படும் தொகையை குறைக்காமல், முழுமையாக வழங்கி விடுவோம். காம்ப்ரிஹென்சிவ் மற்றும் ஜீரோ டிப்ரிஸியேஷன் பைக் இன்சூரன்ஸ் ஆகிய இரண்டிற்குமான வேறுபாட்டினை பற்றி மேலும் தெரிந்து கொள்ளவும்.

பின்னிருக்கையில் அமர்பவர் தேர்டு பார்ட்டியா?

ஆம், பின்னிருக்கையில் அமர்பவர், அல்லது எளிமையாக சொல்ல வேண்டுமென்றால்-பின்புற இருக்கையில் அமரும் பயணி தேர்டு-பார்ட்டியாக கருதப்படுகிறார். எனவே, விபத்து நேரும் பட்சத்தில் அவருக்கு காப்புறுதி வழங்கப்படும்.

தேர்டு-பார்ட்டி இன்சூரன்ஸ் மிக விலையுயர்ந்ததா?

இல்லை, தேர்டு-பார்ட்டி டூ-வீலர் இன்சூரன்ஸ் அதிக விலையுயர்ந்தது இல்லை. சட்டப்படி, குறைந்தபட்சம் தேர்டு-பார்ட்டி இன்சூரன்ஸ் வைத்திருப்பது அனைத்து வண்டி ஓட்டுநர்களுக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனினும், காம்ப்ரிஹென்சிவ் அல்லது ஸ்டாண்டர்ட் பைக் இன்சூரன்ஸ் வாங்குவது- சிறிது விலையுயர்ந்தது தான் என்றாலும், தேர்டு-பார்ட்டி சேதங்களுக்கும், உங்கள் சொந்த சேதங்களுக்கும் ஒரே பாலிசியில் காப்புறுதி வழங்குவதால் இது தான் பணத்தை மிச்சப்படுத்துவதற்கு சிறந்த ஒன்றாகும்.

தேர்டு பார்ட்டி பைக் இன்சூரன்ஸ் விலையினை பற்றி மேலும் தெரிந்து கொள்ளவும்.

விபத்து நிகழும் போது தேர்டு-பார்ட்டி என்பவர் யார்?

தேர்டு-பார்ட்டி என்பது தேர்டு-பார்ட்டி நபர், வாகனம் அல்லது சொத்தினை குறிக்கிறது, உங்களையோ அல்லது உங்கள் வண்டியையோ குறிக்கவில்லை. கூடுதலாக, உங்கள் பின்னிருக்கையில் உள்ள பயணியும் கூட தேர்டு-பார்ட்டியாக கருதப்படுவார். உதாரணத்திற்கு, உங்கள் வண்டியை பார்க் செய்யும் போது தவறுதலாக இன்னொருவரின் வண்டியின் கதவினை நீங்கள் சேதப்படுத்தி விட்டால், கதவிற்குண்டான சேதங்கள் தேர்டு-பார்ட்டி சேதங்களாக கருதப்படும்.

தேர்டு-பார்ட்டி மற்றும் காம்ப்ரிஹென்சிவ் டூ-வீலர் இன்சூரன்ஸ் ஆகிய இரண்டிற்குமான வேறுபாடு என்ன?

தேர்டு-பார்ட்டி டூ-வீலர் இன்சூரன்ஸ் என்பது தேர்டு-பார்ட்டி சேதங்களுக்கு மட்டுமே காப்புறுதி அளிக்கும், காம்ப்ரிஹென்சிவ் டூ-வீலர் இன்சூரன்ஸ் என்பது தேர்டு-பார்ட்டி சேதங்கள், உங்கள் சொந்த சேதங்கள் ஆகிய இரண்டிற்குமே காப்புறுதி அளிக்கிறது. காம்ப்ரிஹென்சிவ் மற்றும் தேர்டு-பார்ட்டி பைக் இன்சூரன்ஸ் ஆகிய இரண்டிற்குமான வேறுபாட்டினை பற்றி மேலும் தெரிந்து கொள்ளவும்.

வேறு யாரேனும் என்னுடைய பைக்கினை கடன் வாங்கி சென்றிருந்தால், என்னுடைய மோட்டார் சைக்கிள் இன்சூரன்ஸ் எப்படி செயல்படும்?

பைக் இன்சூரன்ஸ் பாலிசி என்பது இன்சூரன்ஸ் செய்யப்பட்ட பைக் மற்றும் அதன் உரிமையாளருடன் இணைக்கப்பட்டுள்ளது. எனினும், யாரேனும் உங்கள் பைக்கை கடன் வாங்கிச் சென்று, பைக்கிற்கோ அல்லது தேர்டு-பார்ட்டிக்கோ சேதமேற்படுத்தி விட்டால், அப்போதும் உங்கள் பைக் இன்சூரன்ஸ் இழப்புகளுக்கும், சேதங்களுக்கும் (உரிய பாலிசியின் நிபந்தனைகளின் படி) காப்புறுதி அளிக்கும். நீங்கள் கிளைம் செய்யும் போது இதனை தெரிவித்து விட வேண்டும், மற்றும் பைக் தொடர்பான பேப்பர்களும், பாலிசி ஆவணங்களும் உங்கள் பெயரிலேயே இருக்க வேண்டும்.

அடுத்தவரின் பைக்கை ஓட்டுவதற்கு எனக்கு மோட்டார் சைக்கிள் இன்சூரன்ஸ் தேவைப்படுமா?

நீங்கள் இன்னொருவரின் பைக்கை ஓட்ட போகிறீர்கள் என்றால், உங்களுக்கு தனிப்பட்ட இன்சூரன்ஸ் பாலிசி தேவையில்லை. ஆனால், நீங்கள் பைக்கை கடனாக பெறும் நபரிடம் குறைந்தபட்சம் செல்லத்தக்க தேர்டு-பார்ட்டி பைக் இன்சூரன்ஸ் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும். ஏனென்றால், நீங்கள் வண்டி ஓட்டும் போது ஏதேனும் காரணமாக போலீஸ் உங்களிடம் அதனை சரிபார்க்க கேட்கும் போதோ, அல்லது நீங்கள் ஏதேனும் பிரச்சனையில் சிக்கும் போதோ அது கண்டிப்பாக தேவைப்படும்.

டிஜிட் இன்சூரன்ஸில், நான் என்னுடைய தற்போதைய டூ-வீலர் இன்சூரன்ஸை ஆன்லைனில் எப்படி புதுப்பிப்பது?

டிஜிட் இன்சூரன்ஸில் ஆன்லைனில் டூ-வீலர் இன்சூரன்ஸை புதுப்பிக்கும் நடைமுறை மிக எளிமையானது! நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், டூ வீலர் இன்சூரன்ஸ் பக்கத்திற்கு சென்று, உங்கள் பைக் பிராண்டு, வேரியன்ட்(மாறுபட்ட வடிவம்) மற்றும் ரெஜிஸ்ட்ரேஷன் தேதி ஆகியவற்றை உள்ளிட வேண்டும். அதற்கு பிறகு, உங்கள் தற்போதைய பாலிசியின் காலாவதி தேதி மற்றும் சேவை வழங்குநரை உள்ளிட வேண்டும். இந்த அவசியமான தகவல்களை பூர்த்தி செய்தவுடன், உங்களுக்கு தேவையான பிளான் மற்றும் கவரையும் தேர்வு செய்ததும், உங்கள் தற்போதைய பாலிசி காலாவதியானவுடன் தானாகவே உங்கள் புதிய பைக் இன்சூரன்ஸ் பாலிசி புதுப்பிக்கப்பட்டுவிடும்.

எனது ஆன்லைன் டூ வீலர் இன்சூரன்ஸ் பாலிசிக்கான பிரீமியத்தை எவ்வாறு கால்குலேட் செய்வது?

பிரீமியத்தைக் கால்குலேட் செய்ய உங்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பைக் இன்சூரன்ஸ் கால்குலேட்டரைப் பயன்படுத்தலாம். இந்த கால்குலேட்டர்கள் இன்சூரன்ஸ் பிரீமியத்தைக் கால்குலேட் செய்ய வாகனத்தின் தயாரிப்பு மற்றும் மாடல், அதன் வயது, என்ஜினின் கன அளவு மற்றும் நீங்கள் தேர்ந்தெடுத்த கவரேஜ் ஆகியவற்றை பகுப்பாய்வு செய்ய வடிவமைக்கப்பட்டுள்ளன.

எனது பைக் இன்சூரன்ஸ் பாலிசி எண்ணை நான் எங்கே காணலாம்?

உங்கள் பைக் இன்சூரன்ஸ் பாலிசி எண்ணை உங்கள் இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்கிய இன்சூரன்ஸ் சான்றிதழிலும், உங்கள் இன்சுரர் அனுப்பிய இமெயில்கள் அல்லது பிற தகவல்தொடர்புகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளதை நீங்கள் காணலாம்.

மாநிலப் போக்குவரத்துத் துறையின் வெப்சைட் அல்லது .www.parivahan.gov.in. என்ற வெப்சைட்டைப் பார்வையிடுவதன் மூலமும் உங்கள் இன்சூரன்ஸ் விவரங்களை ஆன்லைனில் சரிபார்க்கலாம்.

ஆன்லைனில் வாங்கும் போது எனது டூ வீலர் இன்சூரன்ஸைத் தனிப்பயனாக்க முடியுமா?

ஆம், ஜீரோ டிப்ரிஸியேஷன்‌ கவர், ரோடுசைடு அசிஸ்டன்ஸ், பர்சனல் ஆக்சிடன்ட் கவர் போன்ற உங்கள் பாலிசியின் கவரேஜை மேம்படுத்த கூடுதல் ஆட்-ஆன் கவர்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் ஆன்லைனில் வாங்கும் போது உங்கள் டூ வீலர் இன்சூரன்ஸைத் தனிப்பயனாக்கலாம்.