இந்தியாவில் பயன்படுத்திய கார்களை வாங்குவதற்கான டிப்ஸ்

Get Instant Policy in Minutes*

Third-party premium has changed from 1st June. Renew now

பயன்படுத்திய காரை வாங்குவதற்கான டிப்ஸ்

உங்கள் பெற்றோர் உங்களுக்கு முதல் சைக்கிளை வாங்கிய நேரம் நினைவிருக்கிறதா? அது நீண்ட காலத்திற்கு முன்பு என்று நான் நம்புகிறேன், ஆனால் அந்த மகிழ்ச்சியை இன்றும் உணர முடியும்.

அந்த வயதில் நாம் இளமையாகவும் நம் பெற்றோர்களை சார்ந்தும் இருந்தோம். இப்போது இதைப் பற்றி பேசுகையில், வசதியான காரை வாங்க முடிவு செய்யக்கூடிய சுதந்திரமான நபர்களாக நாம் வளர்ந்துள்ளோம்.

ஆனால் ஒவ்வொரு முறையும் நாம் ஒரு புதிய காரை வாங்க முடியாது, எனவே நாம் பயன்படுத்திய கார்களை வாங்க முயற்சிப்போம். பயன்படுத்திய காரை வாங்குவதை உண்மையில் பாதிக்கும் சில காரணிகளாக அதன் மதிப்பு, அம்சங்கள், வயது, கிளைம்கள் அல்லது பழுதுபார்ப்பு மற்றும் நோக்கம் ஆகியவை அடங்கும்.

இந்தியாவில் பயன்படுத்திய காரை வாங்குவதற்கு முன் சரிபார்க்க வேண்டிய 10 விஷயங்கள்

  • பயன்படுத்திய காரின் வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்: பயன்படுத்திய காரின் வரலாறு, அதன் வயது, விற்பனைக்கான காரணம் மற்றும் விபத்துக்கள் போன்றவற்றைக் கண்டறிய முயற்சிக்கவும். கிளைம்கள் ஏதேனும் இருந்தால், அவற்றின் விவரங்களை வழங்க விற்பனையாளர் அல்லது நிறுவனத்திடம் கேளுங்கள். கடந்த காலத்தில் கார் சேதமடைந்துள்ளதா என்பதைக் கண்டறிய ஆராய்ச்சி செய்யுங்கள்.
  • பேஸ்மேக்கரைச் சரிபார்க்கவும்- காரின் என்ஜின்: என்ஜின் அனைத்து காருக்கும் மிக முக்கியமான பகுதியாகும். என்ஜினில் ஏதேனும் கசிவுகள், விரிசல் ஏற்பட்டுள்ள குழாய்கள், அரிப்பு மற்றும் பெல்ட் உள்ளதா என்பதை கண்கூடாக பார்த்து சரிபார்க்கவும். மேலும், எண்ணெய் மற்றும் பரிமாற்ற திரவம் நிறமாறியுள்ளதா என்பதை பரிசோதிக்கவும். ஆரோக்கியமான என்ஜினில், எண்ணெய் வெளிர் பழுப்பு நிறமாகவும், பரிமாற்ற திரவம் இளஞ்சிவப்பு அல்லது சிவப்பு நிறமாகவும் இருக்க வேண்டும்.
  • ஏதேனும் துரு அல்லது பெயிண்ட் சேதங்கள்: காரில் பெரிய துருப்பிடித்த திட்டுகள் இருந்தால் வாங்குவதை யோசியுங்கள். நீங்கள் ஒரு நல்ல ஒப்பந்தத்தைப் பெறுகிறீர்கள் என்றால் சிறிய குறைபாடுகளை புறக்கணிக்கலாம்.
  • ஓடிய தூரம்: பயன்படுத்திய காரின் வயதுடன் ஒப்பிடுகையில், அது ஓடிய மைல்களை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். கார் பாகங்களின் வேர் அண்ட் டேர்-ஐ அடையாளம் காண அல்லது மதிப்பீடு செய்ய இது உதவும்.
  • டயர்களின் நிலை: சீரற்ற டயர்கள் காரின் சீரமைப்பை பாதிக்கலாம். நான்கு சக்கரங்களும் சமமாக பொருந்துகிறதா என்பதை நீங்கள் சரிபார்க்க வேண்டும். மோசமாக சீரமைக்கப்பட்ட கார் வலது அல்லது இடது பக்கம் இழுக்கும். எனவே நீங்கள் டயர்களை சரிபார்க்க விரும்பும் போது டெஸ்ட் டிரைவ் செய்யுங்கள்.
  • மின்னணு பொருட்களை மதிப்பாய்வு செய்யவும்: மியூசிக் சிஸ்டம், ஏர் கண்டிஷனர் மற்றும் எலக்ட்ரானிக் டிஸ்ப்ளே சரியாக வேலை செய்ய வேண்டும். அவை வேலை செய்யும் நிலையில் உள்ளதா இல்லையா என்பதைச் சரிபார்க்க அவற்றை இயக்கவும்.
  • குஷன் மற்றும் கவர்களை சரிபார்க்கவும்: கார் இருக்கை கவர்களை பழுதுபார்ப்பதற்கு அதிக செலவு ஆகும். லெதர் கவரில் விரிசல்கள், கறைகள் மற்றும் வெட்டுக்கள் இருக்கக்கூடாது.
  • டெஸ்ட் டிரைவிற்குச் செல்லுங்கள்: நீங்கள் காரை டெஸ்ட் டிரைவிற்கு எடுத்துச் செல்வது அவசியம் சீரான சாலை இல்லாத வழியைத் தேர்வு செய்யவும். இது பிரேக்குகள், சஸ்பென்ஷன் மற்றும் ஆக்சிலரேசன் ஆகியவற்றைச் சரிபார்க்க உதவும்.
  • ஒரு மெக்கானிக் கொண்டு பரிசோதிக்கவும்: நீங்கள் வாங்கும் காரில் உள்ள மற்ற விஷயங்களில் நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தால், கடைசியாக செய்ய வேண்டிய முக்கியமான ஒன்று மெக்கானிக் கொண்ட பரிசோதனை. செகண்ட் ஹேண்ட் கார் மற்றும் அதன் முக்கியமான பாகங்களான பெல்ட், என்ஜின் , பேட்டரி போன்றவற்றை ஆழமாக ஆராய உங்கள் நம்பகமான மெக்கானிக்-இடம் கேளுங்கள். இறுதியாக வாங்குவதற்கு முன் நீங்கள் செய்யக்கூடிய மற்றொரு புத்திசாலித்தனமான விஷயம் இது.
  • காரின் ஆவணங்களைச் சரிபார்க்கத் தவறாதீர்கள்: நீங்கள் சரிபார்க்க வேண்டிய மிக முக்கியமான ஆவணங்களில் சில:
    • காரின் பதிவு நகலைச் சரிபார்த்து, அதில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள் காருடன் ஒத்திசைவில் உள்ளதா என்பதைச் சரிபார்க்கவும். என்ஜின் எண் மற்றும் சேஸ் எண் சரியாக இருக்க வேண்டும் அல்லது கிளைம் செய்யும் நேரத்தில் அது உங்களுக்குக் குழப்பத்தை ஏற்படுத்தும்.
    • ஆர்டிஓவில் உள்ள படிவம் 32 மற்றும் 35ஐப் பார்க்கவும், நீங்கள் வாங்கும் செகண்ட் ஹேண்ட் காரில் கடன்கள் எதுவும் நிலுவையில் இருக்கக்கூடாது என்பதை அறியவும்.
    • முந்தைய உரிமையாளரால் ஃபைனான்ஸ் மூலம் கார் வாங்கப்பட்டிருந்தால், நோ-அப்ஜக்சன் சான்றிதழைக் கேட்கவும்.
    • காரில் எல்பிஜி/சிஎன்ஜி பொருத்துதல்கள் இருந்தால் இரு எரிபொருள் சான்றிதழ்.
    • செல்லுபடியாகும் மாசு கட்டுப்பாட்டின் கீழ் (PUC) சான்றிதழ்.
    • அனைத்து சாலை வரிகளும் செலுத்தப்பட்டதா இல்லையா என்பதை சரிபார்க்க சேவை புத்தகம்.

உங்கள் கனவுகளின் காரைப் பரிசோதித்த பிறகு, சரிபார்க்க வேண்டிய அடுத்த முக்கியமான விஷயம் இன்சூரன்ஸ் பாலிசி. காரின் உரிமையாளரிடம் இன்சூரன்ஸ் பாலிசி இருக்கிறதா இல்லையா என்று கேட்க வேண்டும். இது போன்ற சில முக்கியமான அம்சங்களை இது உங்களுக்குக் குறிக்கும்:

  • அந்த காரை உரிமையாளர் போதுமான அளவு கவனித்திருக்க வேண்டும். ஒரு பொறுப்புள்ள குடிமகன் கண்டிப்பாக கார் இன்சூரன்ஸ் பாலிசியை வாங்குவார்.

  • கடந்த கால கிளைம்கள். இந்தியாவில் அதைக் கண்டுபிடிக்க எந்த ஒரு வழியுமில்லை.

  • செகண்ட் ஹேண்ட் காரின் பாலிசி இன்னும் இருந்தால், இன்சூரன்ஸ் பாலிசியை உங்கள் பெயரில் மாற்ற வேண்டியது அவசியம்.

கார் இன்சூரன்ஸ் என்பது உங்கள் கார் விபத்துக்குள்ளாக நேரினால் சட்டச் சிக்கல்களைத் தவிர்க்க, நீங்கள் வாங்க வேண்டிய ஆவணமாகும். விபத்துக்குப் பிறகு ஏற்படும் நிதிப் லையபிலிட்டிகளில் இருந்து இன்சூரன்ஸ் பாலிசி உங்களைப் பாதுகாக்கிறது. கார் மற்றும் காயமடைந்த தேர்டு பார்ட்டி ஆகிய இரண்டையும் கவர் செய்யும் அதிகபட்ச பாதுகாப்பு இதுவாகும்.

இந்தியாவில், உரிமையாளர்-ஓட்டுநர் பர்சனல் ஆக்சிடன்ட் கவருடன் தேர்டு பார்ட்டி லையபிலிடி பாலிசியை வைத்திருப்பது கட்டாயமாகும். நீங்கள் வாங்கும் பயன்படுத்திய காரில் ஏற்கனவே இன்சூரன்ஸ் பாலிசி உள்ளது என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அத்தகைய சூழ்நிலையில், காரின் ஆர்சி பரிமாற்றத்துடன் இன்சூரன்ஸின் பரிமாற்றத்தையும் நீங்கள் துரிதப்படுத்த வேண்டும்.

இன்சூரன்ஸை எப்படி மாற்றுவது என்று தெரியவில்லையா? பொறுங்கள், அதற்கு முன்னதாக நாம் முதலில், உங்கள் பெயரில் உள்ள செகண்ட் ஹேண்ட் காரின் ஆர்சி-ஐப் பெற வேண்டும்.

பதிவுச் சான்றிதழை உங்கள் பெயருக்கு மாற்றுவது எப்படி?

ஆர்சி-ஐ உங்கள் பெயருக்கு மாற்ற, அருகிலுள்ள ஆர்டிஓ-வைச் சென்று இந்தப் படிகளைப் பின்பற்றவும்.

  • படிவம் 29 மற்றும் படிவம் 30ஐக் கேளுங்கள். இந்தப் படிவங்கள் பூர்த்தி செய்யப்பட்டு நீங்களும் முந்தைய உரிமையாளரும் முறையாக கையொப்பமிட வேண்டும். 

  • நீங்கள் வாங்கும் செகண்ட் ஹேண்ட் கார் உங்களுடையதல்லாத தனி அதிகார வரம்பில் இருந்தால் ஆர்டிஓ-விடமிருந்து என்ஓசி-க்கு ஏற்பாடு செய்யுங்கள்.

  • இடமாற்றத்தைத் தொடங்க உள்ளூர் ஆர்டிஓ-விற்கு உதவும் படிவங்களைச் சமர்ப்பிக்கவும்.

செயல்முறை முடிந்ததும், ஆர்டிஓ உங்களுக்கு 15 முதல் 18 நாட்களுக்குள் ரசீது தருவார். மாற்றப்பட்ட ஆர்சி-இன் இறுதி நகலை 40-45 நாட்களில் பெறுவீர்கள்.

இன்சூரன்ஸிற்கு மீண்டும் வருவோம், இன்சூரன்ஸை உங்கள் பெயரில் மாற்றுவதற்கான வழிகளை தெரியப்படுத்துகிறோம். உங்கள் பெயரில் ஆர்சி பெற்றிருந்தாலும், இன்சூரன்ஸ் முந்தைய உரிமையாளரின் பெயரில் இருந்தால், அது உங்களுக்கு எந்தப் பலனையும் அளிக்காது. நேரத்தை மிச்சப்படுத்துவதற்கும், சாலையில் உங்களின் செகண்ட் ஹேண்ட் காரில் செல்வதற்கும், நீங்கள் இன்சூரன்ஸ் பரிமாற்ற செயல்முறையை உடனடியாக செய்வது புத்திசாலித்தனமாக இருக்கும். ஆனால் அதை எப்படி செய்வது, யோசனை ஏதும் உள்ளதா?

பயன்படுத்திய காரின் இன்சூரன்ஸை எவ்வாறு மாற்றுவது?

செகண்ட் ஹேண்ட் காருக்கு இன்சூரன்ஸ் பாலிசி தொடர்ந்து இருக்கும் போது நீங்கள் செய்யக்கூடிய ஒரே விஷயம், பெயர் மாற்றத்தைக் கோருவதுதான். விவரங்களின் இந்த மாற்றம் இன்சூரன்ஸ் ஆவணத்தில் செய்யப்பட வேண்டும். இன்சூரரின் ரசீதுகளுடன் படிவம் 29 மற்றும் படிவம் 30-ஐ சமர்ப்பிக்கவும்.

நீங்கள் இன்சூரரின் அலுவலகத்திற்கு செல்லலாம் அல்லது ஏதேனும் இன்சூரன்ஸ் முகவர் அல்லது தரகரைத் தொடர்பு கொள்ளலாம். இந்த செயல்முறை சில நாட்களில் முடிந்து விடும்!! அவ்வாறாக உங்களின் செகண்ட் ஹேண்ட் கார் இன்சூரன்ஸ் செய்யப்பட்டுவிட்டது.

கிளைம் இல்லாத ஆண்டிற்கு, நீங்கள் நோ கிளைம் போனஸைப் பெறுவீர்கள் என்பதை அறிந்திருங்கள். இப்போது பயன்படுத்திய காரின் ஆர்சியை மாற்றலாம், ஆனால் என்சிபி-ஐ மாற்ற முடியாது. எனவே, பாலிசியின் மீதமுள்ள காலத்திற்கு, செகண்ட் ஹேண்ட் காரை வாங்குபவர் தேவையான வித்தியாசத் தொகையை செலுத்த வேண்டும்.

பயன்படுத்திய காருக்கு இன்சூரன்ஸ் பாலிசி இல்லை என்றால் என்ன செய்வது?

நீங்கள் வாங்கத் திட்டமிடும் பயன்படுத்திய காருக்கு இன்சூரன்ஸ் கவர் இல்லாத நிலை இருக்கலாம். அப்படியானால என்ன செய்வது? கார் இன்சூரன்ஸ் பாலிசியை நீங்களே வாங்குங்கள்!

எந்த இன்சூரன்ஸ் கவர் சிறந்தது - காம்ப்ரிஹென்சிவ்-ஆ அல்லது தேர்டு பார்ட்டியா?

உங்கள் காருக்கான இன்சூரன்ஸ்த் திட்டத்தைத் தேர்ந்தெடுப்பது, அது தனிப்பட்டதாக இருந்தாலும் அல்லது கமர்ஷியலாக இருந்தாலும், அது முழுவதுமாக உரிமையாளரைப் பொறுத்தது. மோட்டார் வாகனச் சட்டம், 1988 இன் படி தேர்டு பார்ட்டி லையபிலிட்டி கவர் கட்டாயம், ஆனால் சொந்த சேதம் விருப்பத் தேர்வு மட்டுமே. ஆனால் விரிவான கவரேஜை வழங்குவதால், காம்ப்ரிஹென்சிவ் கவரைத் தேர்ந்தெடுப்பது நல்லது.

 

பின்வரும் சூழ்நிலைகளில், நீங்கள் காரின் தேர்டு பார்ட்டி லையபிலிட்டி கவரை மட்டுமே தேர்வு செய்ய முடியும்:

  • பயன்படுத்திய காரின் வயது 10 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் இருப்பது.

  • காரின் பயன்பாடு குறைவு, அதனால் வேர் அண்ட் டேர் குறைவாக இருப்பது. நீங்கள் இந்தியாவிற்கு வெளியே வசிப்பதால், மாதந்திரம் நீங்கள் வருகை தரும் போது மட்டும் காரைப் பயன்படுத்துவது.

  • காருக்கு ஏற்படும் சேதத்திற்கு எந்த விதமான செலவையும் தாங்கிக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை கொள்வது.

 

அனைத்தும் முடிந்து, இன்சூரன்ஸ் பாலிசியுடன் கார் உங்கள் பெயருக்கு மாற்றப்படும் போது, நீங்கள் மிகுந்த உற்சாகத்துடனும் நம்பிக்கையுடனும் இருப்பீர்கள். இப்போது நீங்கள் ஒரு காரை வைத்திருப்பதால், அதை பாதுகாப்பாக ஓட்டி உலகை ஆளுங்கள்.