என்ஜின் புரொட்டெக்ஷன் கவர்
6000+ Cashless
Network Garages
Zero Paperwork
Required
24*7 Claims
Support
I agree to the Terms & Conditions
6000+ Cashless
Network Garages
Zero Paperwork
Required
24*7 Claims
Support
I agree to the Terms & Conditions
உங்கள் காரின் என்ஜின் உண்மையில் உங்கள் இதயத்தின் அதே பாத்திரத்தை வகிக்கிறது! இதுவே உங்கள் காருக்கு உயிர் கொடுக்கிறது. இதயம் இல்லாமல் உங்களால் வாழ முடியாது, இல்லையா? என்ஜின் இல்லாமல் உங்கள் காரும் இயங்காது😊!
எனவே, நீங்கள் ஆரோக்கியத்தின் உச்சத்தில் இருப்பதை உறுதிசெய்ய வழக்கமான சோதனைகளை மேற்கொள்வது போல, உங்கள் என்ஜினை தொடர்ந்து சர்வீஸ் செய்து, எப்போதும் நன்றாக லூப்ரிகேட்டாக இருப்பதை உறுதிசெய்து, உங்கள் என்ஜினை ஆரோக்கியமான நிலையில் வைத்திருப்பது மிகவும் முக்கியமானது. உங்கள் காரின் என்ஜின் வழியாகப் பாயும் எண்ணெய் உங்கள் இதயத்தில் ஓடும் இரத்தத்தைப் போன்றது என்பதால் தான் நாங்கள் அதை நன்றாக லூப்ரிகட் செய்திருப்பதை உறுதி செய்யக் கூறினோம்!
உங்கள் காரை நீங்கள் எவ்வளவு நன்றாகப் பராமரித்தாலும், உங்கள் காரின் என்ஜின் வழக்கமான வியர் அண்ட் டியர் அதாவது தேய்மானம் மற்றும் கிழிதல் ஏற்பட வாய்ப்பு உள்ளது, மேலும் சில எதிர்பாராத சூழ்நிலைகளில் முக்கிய என்ஜின் பாகங்களும் செயலிழக்கக்கூடும். அதாவது, ஒரு மாரடைப்பைக் கணிக்க முடியாதது போல!
மேலும் அதிர்ச்சியூட்டும் விஷயம் என்னவென்றால், உங்கள் என்ஜின் உங்கள் காம்ப்ரிஹென்சிவ் கார் இன்சூரன்ஸின் கீழ் கவர் செய்யப்படாது! இது வழக்கமாக விளைவினால் ஏற்படும் சேதத்தின் கீழ் வகைப்படுத்தப்படுகிறது, அல்லது ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவத்தின் விளைவாக நேரடியாக இல்லாத சேதம்.
என்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் இன்சூரன்ஸ் புரொட்டெக்ஷனின் முக்கியத்துவம் இங்குதான் வருகிறது. இந்த ‘ஆட்-ஆன்’ கவர், விபத்து ஏற்பட்டால் உங்கள் கியர்பாக்ஸ் உட்பட உங்கள் என்ஜினின் அனைத்து முக்கிய பாகங்களையும் கவர் செய்கிறது! ஏன் கியர்பாக்ஸ்? சரி, கியர்பாக்ஸ் என்பது இறுதியில் உங்கள் என்ஜினின் சக்தியை உங்கள் காரின் சக்கரங்களுக்கு மாற்றுகிறது, இதன் மூலம் தான் நீங்கள் காரை ஓட்டவே முடிகிறது!
இந்த கூறுகளில் ஏதேனும் ஒன்றைச் சரிசெய்வதற்கு அல்லது மாற்றுவதற்கும் ஆகும் செலவே, உங்களுக்கு மாரடைப்பை கொடுத்து விடும். உண்மையில் இல்லை, ஆனால் நீங்கள் அதன் முக்கியத்துவத்தை உணர்ந்திருப்பீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம்😊! அடிப்படையில் இந்த கார் இன்சூரன்ஸ் ‘ஆட்-ஆன்’ கவர் உங்கள் சேமிப்பைக் குறைக்காமல் இதுபோன்ற சூழ்நிலைகளை சமாளிக்க உதவுகிறது!
மேலும் படிக்க: கார் இன்சூரன்ஸில் ஆட்-ஆன் கவர்
இது அடிப்படையில் அனைத்து கூறுகளின் விலையையும் கவர் செய்கிறது:
அனைத்து என்ஜின் சிறு பாகங்கள் பழுது மற்றும் மாற்றுச் செலவுகள்.
அனைத்து கியர்பாக்ஸ் சிறு பாகங்கள் பழுது மற்றும் மாற்றுச் செலவுகள்.
பழுதுபார்க்கும் போது மசகு எண்ணெய், குளிரூட்டி, நட்ஸ் மற்றும் போல்ட் உள்ளிட்ட கன்ஸ்யூமபில்ஸின் விலை கொடுக்கப்படுகிறது.
என்ஜின் அல்லது கியர்பாக்ஸுக்கு ஏற்படும் வேறு ஏதேனும் சேதங்கள் கவர் செய்யப்படாது.
விபத்து அல்லது பேரிடர் காரணமாக இல்லாமல், வியர் அண்ட் டியர் மற்றும் கியர்பாக்ஸ் ஆகியவற்றால் ஏற்படும் சேதங்கள் கவர் செய்யப்படாது.
உற்பத்தியாளரின் உத்தரவாதத்தின் கீழ் தீர்க்கப்படும் சேதங்கள் பாலிசியின் கீழ் வராது.
நீர் உட்புகுதல் தொடர்பான இழப்பு ஏற்பட்டால், நீர் உட்புகுதல் நிரூபிக்கப்படாத எந்தவொரு கிளைமும் கவர் செய்யப்படாது.