6000+ Cashless
Network Garages
Zero Paperwork
Required
24*7 Claims
Support
I agree to the Terms & Conditions
சப்போர்ட்
closeஎங்கள் வாட்ஸ்அப் எண்ணை அழைப்புகளுக்கு பயன்படுத்த முடியாது. இது வெறும் அரட்டை எண்.
6000+ Cashless
Network Garages
Zero Paperwork
Required
24*7 Claims
Support
I agree to the Terms & Conditions
மாருதி இந்திய ஆட்டோமொபைல் துறையின் பிரபலமான பெயராக கருதப்படுகிறது. பல ஆண்டுகளாக, இது அதன் மலிவு தயாரிப்புகளுடன் லாயல் டார்கெட் ஆடியன்ஸை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது. அந்த வகையில், மாருதி சுசுகி டிசையர் கார் குறைவான பராமரிப்புடன், வசதியான அம்சங்கள் மற்றும் சீரான மைலேஜ் ஆகியவற்றுக்கு பெயர் பெற்றது. பெரியவர்கள் ஐந்து பேர் தாராளமாக அமரக்கூடிய இடவசதி மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த BS6 என்ஜின் கொண்ட மலிவு விலை வாகனத்தைத் தேடும் நடுத்தர குடும்பங்களுக்கு இது மிகவும் நல்லது.
மாருதி சுசுகி டிசையர் மாடல் லிட்டருக்கு 19.05 கிமீ மைலேஜ் தருகிறது. மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் 378 லிட்டர் பூட் ஸ்பேஸ் கொண்ட இந்த கார் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கிறது. மேலும், இந்த மாடலின் 1197 cc பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 88.50 BHP பவரையும், 113 Nm டார்க் திறனையும் வழங்கும். இதுதவிர, ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே இணைப்புடன் கூடிய 7 இன்ச் டச்ஸ்கிரீனுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இந்த மாடலில் உள்ளது.
மாருதி சுசுகி டிசையர் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் மற்ற அம்சங்களில் டூயல் ஃப்ரண்ட் ஏர்பேக்குகள், ரியர் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் ஐசோஃபிக்ஸ் சைல்டு சீட் ஆங்கர்கள் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. மேலும், இந்த மாடலின் AMT வேரியண்ட்கள் எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் மற்றும் ஹில் ஹோல்ட் உதவியுடன் வருகின்றன. ரியர்-வியூ கேமரா மற்றும் ரியர் டிஃபோகர் ஆகியவை உயர் வேரியண்ட்களில் கிடைக்கும் அம்சங்களாகும். இது தவிர, ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் ஆகியவை இந்த மாடலின் பிற கவர்ச்சிகரமான அம்சங்களாக இருக்கலாம்.
மாருதி சுசுகி டிசையர் கார் பல சிறப்பம்சங்கள் மற்றும் பெனிஃபிட்களுடன் வந்தாலும், எதிர்பாராத சாலை விபத்துகளில் ஆபத்தான டேமேஜ்களை எதிர்கொள்வதில் இருந்து தப்ப இயலுவதில்லை. எனவே, மாருதி சுசுகி டிசையர் கார் இன்சூரன்ஸ் மூலம் இந்த காரின் எதிர்காலத்தை பாதுகாப்பது அவசியம். மாருதி சுசுகி டிசையர் உரிமையாளர்கள் அதன் பெனிஃபிட்களை மேலும் பயன்படுத்தி இந்த இன்சூரன்ஸின் மூலம் சட்டத்தை மதிக்கும் குடிமக்களாக மாறலாம்.
நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களை வி.ஐ.பிகள் போல நடத்துகிறோம், எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்...
விபத்து காரணமாக சொந்த வாகனத்திற்கான டேமேஜ்கள்/இழப்புகள் |
×
|
✔
|
தீ விபத்து ஏற்பட்டால் சொந்த காருக்கான டேமேஜ்கள்/இழப்புகள் |
×
|
✔
|
இயற்கை சீற்றம் ஏற்பட்டால் சொந்த காருக்கு ஏற்படும் டேமேஜ்கள்/இழப்புகள் |
×
|
✔
|
தேர்டு பார்ட்டி வாகனத்திற்கு டேமேஜ்கள் |
✔
|
✔
|
தேர்டு பார்ட்டி ப்ராபர்டிகளுக்கு டேமேஜ்கள் |
✔
|
✔
|
பெர்சனல் ஆக்சிடென்ட் கவர் |
✔
|
✔
|
காயங்கள் / தேர்டு பார்ட்டி நபரின் மரணம் |
✔
|
✔
|
உங்கள் கார் திருட்டு |
×
|
✔
|
டோர்ஸ்டேப் பிக்-அப் & டிராப் |
×
|
✔
|
உங்கள் ஐ.டி.வியை கஸ்டமைஸ் செய்யவும் |
×
|
✔
|
கஸ்டமைஸ் செய்யப்பட்ட ஆட்-ஆன்களுடன் கூடுதல் புரொட்டெக்ஷன் |
×
|
✔
|
காம்ப்ரிஹென்சிவ் மற்றும் தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸிற்கு இடையிலான வித்தியாசத்தைப் பற்றி மேலும் அறிந்துகொள்ளுங்கள்
எங்கள் கார் இன்சூரன்ஸ் பிளானை நீங்கள் வாங்கிய பிறகு அல்லது ரினியூவல் செய்த பிறகு, எங்களிடம் வெறும் 3-ஸ்டெப்தான், அதுவும் முற்றிலும் டிஜிட்டல் கிளைம் ப்ராசஸ் மூலம் நீங்கள் பதற்றமின்றி வாழ்க்கையில் முன்னேறலாம்!
1800-258-5956 என்ற எண்ணில் அழைக்கவும். ஃபார்ம்களை பூர்த்தி செய்ய வேண்டியதில்லை
உங்கள் ரெஜிஸ்டர் செய்யப்பட்ட மொபைல் எண்ணில் செல்ஃப்-இன்ஸ்பெக்ஷனுக்கான லிங்க்கைப் பெறுங்கள். உங்கள் ஸ்மார்ட்போனிலிருந்து உங்கள் வாகனத்தின் டேமேஜ்களை ஒரு வழிகாட்டப்பட்ட ஸ்டெப் பை ஸ்டெப் ப்ராசஸ் மூலம் போட்டோ எடுக்கலாம்.
எங்கள் கேரேஜ்களின் நெட்வொர்க் மூலம் நீங்கள் தேர்வு செய்ய விரும்பும் ரிபேர் மோடைத் தேர்வுசெய்யலாம், அதாவது ரீஇம்பர்ஸ்மென்ட் அல்லது கேஷ்லெஸ்.
உங்கள் இன்சூரன்ஸ் கம்பெனியை மாற்றும்போது உங்கள் மனதில் தோன்றும் முதல் கேள்வி இதுதான். நீங்கள் அதைச் செய்வது நல்லது!
டிஜிட்டின் கிளைம் ரிப்போர்ட் கார்டைப் படிக்கவும்
ஒரு காரில் முதலீடு செய்த பிறகு, அதன் உரிமையாளர்கள் அதன் பராமரிப்புக்கு செலவு செய்ய வேண்டும். சாலை விபத்துகள் அதிகரித்து வருவதால் வாகனங்களில் ஏற்படும் விபத்து டேமேஜ்கள் குறித்த கவலை அதிகரித்து வருகிறது. இந்த நிபந்தனையை கருத்தில் கொண்டு, இந்தியாவில் கார் உரிமையாளர்கள் கார் இன்சூரன்ஸ் வாங்குவதை இந்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது.
மோட்டார் வாகனச் சட்டம் 1988-ன் படி, கார் உரிமையாளர் காருக்கு இன்சூரன்ஸ் செய்யத் தவறினால் உடனடியாக அபராதம் விதிக்கப்படும். முதல் முறை ₹ 2,000 மற்றும் மீண்டும் செய்தால் ₹ 4,000 செலுத்த வேண்டும். மேலும், எதிர்காலத்தில் சிறைத்தண்டனை அல்லது ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்வது போன்ற கடுமையான தண்டனைகளை அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
நீங்கள் மாருதி சுசுகி டிசையர் கார் இன்சூரன்ஸை வாங்க திட்டமிட்டால், நீங்கள் பல அம்சங்களை கருத்தில் கொள்ள வேண்டும். மாருதி சுசுகி டிசையர் கார் இன்சூரன்ஸ் செலவு உட்பட பாலிசியின் அனைத்து அம்சங்கள் மற்றும் பெனிஃபிட்கள் இதில் அடங்கும். அதிக பெனிஃபிட்டை அளிக்கும் கார் இன்சூரன்ஸ் பாலிசிகளை வழங்குவதற்கு டிஜிட் ஒரு நம்பகமான பெயராக உள்ளது. டிஜிட்டிலிருந்து ஒரு பாலிசியை வாங்கலாமா வேண்டாமா என்று நீங்கள் யோசிக்கிறீர்கள் என்றால், அதன் கார் இன்சூரன்ஸ் பாலிசிகளின் சில நிலையான அம்சங்களைக் கண்டுபிடிப்போம் வாருங்கள்.
மாருதி சுசுகி டிசையர் கார் இன்சூரன்ஸ் பாலிசியை வாங்கும் போது ஒன்றுக்கு மேற்பட்ட பாலிசி விருப்பங்களில் இருந்து தேர்வு செய்ய டிஜிட் உதவுகிறது. பொருத்தமான பாலிசியைத் தேர்ந்தெடுக்க நீங்கள் அவற்றின் பெனிஃபிட்களைப் புரிந்து கொள்ள வேண்டும்.
மோட்டார் வாகனச் சட்டம் விபத்தில் மூன்றாம் நபர் டேமேஜ்களை ஈடுசெய்ய இன்சூரன்ஸ் பாலிசியை வைத்திருப்பதை கட்டாயமாக்குகிறது. டிஜிட்டின் இந்த பாலிசி, விபத்தில் உங்கள் வாகனத்திலிருந்து சேதத்தை எதிர்கொள்ளும் எந்தவொரு தேர்டு பார்ட்டி கார்களுக்கும் இழப்பீடு அளிக்கிறது. விபத்தில் சேதமடைந்த ரோடு ப்ராபர்டிகளுக்காகவும் இது செயல்படுகிறது. மேலும், உங்கள் கார் மோதிய எந்தவொரு நபரின் சிகிச்சை செலவுகளுக்கும் பாலிசி பணம் செலுத்துகிறது.
இந்த வகை இன்சூரன்ஸ் பாலிசியில் மேலே விவரிக்கப்பட்டுள்ளபடி அடிப்படை பாலிசிக்கு டிஜிட் மேலும் வலு சேர்க்கிறது. தேர்டு பார்ட்டி கவரேஜ் தவிர, விபத்துக்குப் பிறகு உங்கள் தனிப்பட்ட டேமேஜ்களை இந்த பாலிசி ஈடுசெய்கிறது. டிஜிட் நெட்வொர்க் கேரேஜ்களில் உங்கள் மாருதி சுசுகி டிசையர் காரின் கேஷ்லெஸ் ரிப்பேர் உதவியுடன் இந்த அம்சத்தைப் பயன்படுத்தலாம்.
நீங்கள் ஒரு காம்ப்ரிஹென்சிவ் மாருதி சுசுகி டிசையர் கார் இன்சூரன்ஸ் பாலிசியைத் தேர்வுசெய்தால், கூடுதல் கட்டணங்களுக்கு எதிராக சில கூடுதல் பெனிஃபிட்களுடன் திட்டத்தைத் கஸ்டமைஸ் செய்ய டிஜிட் உங்களை அனுமதிக்கிறது. இவை கீழே விவரிக்கப்பட்டுள்ளன.
மாருதி சுசுகி டிசையர் கார் இன்சூரன்ஸின் பாலிசிதாரர்களுக்கு கிளைம் தாக்கல் செயல்முறை நீண்டதாகவும் சிக்கலானதாகவும் தோன்றலாம். டிஜிட் மூன்று எளிய படிகள் மூலம் அதை எளிதாக்க முயற்சித்துள்ளது.
ஸ்டெப் 1: ஃபார்ம்களை பூர்த்தி செய்யவோ அல்லது சமர்ப்பிக்கவோ டிஜிட் உங்களைக் கேட்காது. நீங்கள் டிஜிட்டின் ஹெல்ப்லைனை (1800-258-5956) அழைத்து வழிமுறைகளைப் பின்பற்றலாம்.
ஸ்டெப் 2: அடுத்து, உங்கள் பதிவு செய்யப்பட்ட எண்ணில் நீங்கள் பெற்ற செல்ஃப்-இன்ஸ்பெக்ஷன் லிங்க்கிற்கு செல்லவும். தற்செயலான டேமேஜ்களை நிரூபிக்கும் அனைத்து படங்களையும் சேர்க்கவும்.
ஸ்டெப் 3: இறுதியாக, உங்கள் காருக்கான வசதியான ரிப்பேர் பார்க்கும் முறையைத் தேர்ந்தெடுக்கவும், இது நெட்வொர்க் கேரேஜ்களிலிருந்து ரீஇம்பர்ஸ்மென்ட் அல்லது கேஷ்லெஸ் ரிப்பேர்.
மாருதி சுசுகி டிசையர் கார்களுக்கான இன்சூரன்ஸ் வாங்கும் முறைகளுக்கு தனிநபர்கள் பெரும்பாலும் பயப்படுகிறார்கள். டிஜிட் உண்மையான கவலையைப் புரிந்துகொள்கிறது, எனவே பாலிசி வாங்குவதற்கான முழுமையான ஆன்லைன் மற்றும் யூசர்-ஃப்ரென்ட்லியை உருவாக்கியுள்ளது. நீங்கள் டிஜிட்டின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடலாம் மற்றும் இது தொடர்பான படிப்படியான வழிகாட்டிகளை மேற்கொள்ளலாம். மேலும், இந்த எளிய வழிமுறைகள் மாருதி சுசுகி டிசையர் கார் இன்சூரன்ஸ் ரினியூவல் செய்யம் வேலை செய்யும்.
நீங்கள் மாருதி சுசுகி டிசையர் கார் இன்சூரன்ஸை வாங்கும்போது, நீங்கள் வேறு பல பெனிஃபிட்களைப் பெறுவீர்கள். எடுத்துக்காட்டாக, குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்கு உங்கள் இன்சூரன்ஸை நீங்கள் கிளைம் செய்யவில்லை என்றால், டிஜிட்டில் நோ-கிளைம் போனஸ் சலுகைக்கு நீங்கள் தகுதி பெறுவீர்கள். இதன் மூலம், டிஜிட் உங்கள் பாலிசி பிரீமியத்தில் 20% -50% தள்ளுபடிகளை வழங்கும்.
டிஜிட்டில் இருந்து மாருதி சுசுகி டிசையர் கார் இன்சூரன்ஸை வாங்குவதற்கு ஒரு முக்கிய காரணம் அதன் ஆல்-ரவுண்டர் பெனிஃபிட்கள். ஐ.டி.வி, பெரும்பாலான மக்கள் புரிந்துகொண்டது போல, சந்தையில் உங்கள் வாகனத்தின் தற்போதைய மதிப்பைக் குறிக்கிறது. டிஜிட் உங்கள் பெனிஃபிட்களை அதிகரிக்க உங்கள் ஐ.டி.வியைத் கஸ்டமைஸ் செய்ய உதவுகிறது. திருட்டு அல்லது உங்கள் காருக்கு சரிசெய்ய முடியாத கடுமையான சேதம் ஏற்பட்டால் அதிக மதிப்பை உருவாக்க அதிக ஐ.டி.வியை அமைக்கலாம். மறுபுறம், நீங்கள் அதை குறைந்த பிரீமியத்திற்கு குறைவாக வைத்திருக்கலாம்.
டிஜிட்டில் பல நெட்வொர்க் கேரேஜ்கள் உள்ளன, இது அதைத் தேர்ந்தெடுப்பதற்கான மற்றொரு முக்கிய காரணமாக இருக்கலாம். பாலிசிதாரர்கள் பயணத்தின் போது தங்கள் பாலிசி கவரேஜைப் பயன்படுத்துவது குறித்து பெரும்பாலும் கவலைப்படுகிறார்கள். டிஜிட் மாருதி சுசுகி டிசையர் கார் இன்சூரன்ஸ் பாலிசி மூலம், அதன் நெட்வொர்க் கேரேஜ்களில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி நாடு முழுவதும் கேஷ்லெஸ் ரிபேரை பெற முடியும்.
இறுதியாக, டிஜிட் ஒரு திறமையான கஸ்டமர் சர்வீஸ் டீமை உருவாக்கியுள்ளது. கஸ்டமர் கேர் டிபார்ட்மென்ட்டை சேர்ந்த இந்த அதிகாரிகள் கஸ்டமர் கால்ஸ் மற்றும் மெசேஜ்களைக் கவனித்து புராடக்ட் சம்பந்தமான அவர்களின் பிரச்சனைகளைத் தீர்க்கிறார்கள். அவர்களின் கஸ்டமர் சர்வீஸ் ஹெல்ப்லைனை அழைப்பதன் மூலம் எந்த நேரத்திலும் தேசிய விடுமுறை நாட்களிலும் கூட நீங்கள் அவர்களை அணுகலாம்.
எனவே, இந்த காரை நீங்கள் வைத்திருந்தால் மாருதி சுசுகி டிசையர் கார் இன்சூரன்ஸ் பாலிசி வைத்திருக்க வேண்டும். இது சாலை விபத்தைத் தொடர்ந்து அனைத்து தேர்டு பார்ட்டி மற்றும் பர்சனல் டேமேஜ் எக்ஸ்பென்ஸ்களை நிர்வகிக்க உதவும். மேலும், 1988 ஆம் ஆண்டின் மோட்டார் வாகனச் சட்டத்திற்கு இணங்க, அத்தகைய பாலிசியுயுடன் நீங்கள் இணங்குவீர்கள்.
மக்கள் தொகை, போக்குவரத்து மற்றும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, கார் இன்சூரன்ஸ் வைத்திருப்பது கட்டாயமானது மட்டுமல்ல, நமது காரின் அதிகபட்ச பாதுகாப்பிற்கும் அர்த்தமுள்ளதாக இருக்கிறது.
மாருதி சுசுகி டிசையர் இணையற்ற சிறப்பம்சங்கள் கொண்ட செடான் கார் ஆகும். குடும்பங்களுக்கு மிகவும் ஏற்ற மாருதி சுசுகி டிசையர் மலிவு விலை மற்றும் மன அழுத்தம் இல்லாத டிரைவிங்கிற்க்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மார்க்கெட்டில் சிறப்பாக செயல்பட்டு வரும் மாருதி சுசுகி டிசையர் சமீபத்தில் தனது புராடக்ட்டை அப்டேட் செய்து கொண்டுள்ளது.
2018 ஆம் ஆண்டில், NDTV காரந்த் பைக் விருதுகளில் ஆண்டின் சிறந்த சப்காம்பேக்ட் செடான் விருதை வென்றது. பெயர் குறிப்பிடுவது போல, இது அனைத்து பயணிகளுக்கும் ஸ்விஃப்ட் ரைடை வழங்குகிறது அத்துடன் டிரைவிங் செய்பவருக்கு முழு கம்ஃபர்ட்டை அளிக்கிறது. மாருதி சுசுகி டிசையர் சிறந்த மறுவிற்பனை மதிப்பைக் (ரீசேல் வேல்யூ) கொண்டுள்ளது. லிட்டருக்கு சராசரியாக 28.40 கிமீ மைலேஜ் தரும் இந்த கார் 1248 cc என்ஜின் கொண்டது.\
மாருதி சுசுகி டிசையர் BS 6 தரத்திலான எஞ்சினில் இயங்கும் ஃபேமிலி கார் ஆகும். இது L, V, Z, மற்றும் Z+ ஆகிய நான்கு வேரியண்ட்டுகளில் கிடைக்கும் எரிபொருள் சிக்கன (ஃபியல் எக்கனாமிக் கார்) கார் ஆகும். மாருதி சுசுகி டிசையர் உங்கள் அன்றாட பயணத்திற்கு மிகவும் பொருத்தமானது மட்டுமல்லாமல், அதன் வசதியான சேமிப்பு மற்றும் பெரிய கேபின் இடவசதி காரணமாக நீண்ட பயணங்களின் போது ஆறுதலான தேர்வாக அமைகிறது. இதன் விலை ரூ.5.82 லட்சம் முதல் ரூ.9.57 லட்சம் வரை உள்ளது.
இந்த காரின் புதிய வெர்ஷன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மூலம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. டூயல் ஃப்ரண்ட் ஏர்பேக்குகள், கோ-டிரைவர் சீட் பெல்ட் ரிமைண்டர், ஸ்பீடு அலெர்ட், EBDயுடன் கூடிய ABS பிரேக்கிங் சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் போன்ற மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களும் இதில் இடம்பெற்றுள்ளன. இவை தவிர, இந்த காரில் ஃப்ரண்ட் ஃபாக் லேம்ப்கள், ஆட்டோமேட்டிக் LED ப்ரொஜெக்டர்கள், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா மற்றும் 7 இஞ்ச் டச்ஸ்க்ரீனுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை உள்ளன.
பார்க்க: மாருதி கார் இன்சூரன்ஸ் பற்றி மேலும் அறிந்துகொள்ளுங்கள்
வேரியண்ட்களின் பெயர் |
வேரியண்ட்டுகளின் தோராயமான விலை |
டிசையர் LXI |
₹ 6.51 லட்சம் |
டிசையர் VXI |
₹ 7.44 லட்சம் |
டிசையர் VXI AT |
₹ 7.99 லட்சம் |
டிசையர் ZXI |
₹ 8.12 லட்சம் |
டிசையர் ZXI AT |
₹ 8.67 லட்சம் |
டிசையர் ZXI பிளஸ் |
₹ 8.84 லட்சம் |
டிசையர் ZXI பிளஸ் AT |
₹ 9.39 லட்சம் |