இன்டர்நேஷனல் ஸ்டூடண்ட் டிராவல் இன்சூரன்ஸை ஆன்லைனில் வாங்கவும்
$1 மில்லியன் வரை சம் இன்சூர்டு தொகையைப் பெறுங்கள்
Up to $1M
Sum Insured
24/7
Customer Support
Zero
Co-payment
Thank you for sharing your details with us! We will connect with you shortly.
Up to $1M
Sum Insured
24/7
Customer Support
Zero
Co-payment
வெளிநாடுகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்கான டிராவல் இன்சூரன்ஸ்
ஹலோ ஃப்யூச்சர் கேம் சேஞ்சர்! நீங்கள் உலகை எதிர்கொள்ளத் தயாரா?
வெளிநாட்டில் உள்ள புகழ்பெற்ற சர்வதேச பல்கலைக்கழகங்களில் படிக்க வேண்டும் என்பது பல இந்திய மாணவர்களின் கனவாக இருந்து வருகிறது.
வெளிநாடுகளில் பயில்வோருக்கு கிடைக்கும் வாய்ப்புகளின் தரம் மற்றும் எண்ணிக்கையின் காரணமாக பல மாணவர்கள் வெளிநாடுகளில் பயில விரும்புகின்றனர். அத்துடன் அங்கு பயிலும் போது முக்கிய வாழ்க்கைத் திறன்களை வளர்க்கும் திறனைப் பெறக்கூடும் என்பதால் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் சர்வதேச அளவில் கல்வி கற்க பயணம் செய்கிறார்கள். உங்களுக்கும் உங்கள் குறிக்கோளுக்கும் இடையில் தடை ஏதும் வரக்கூடாது என்பதை உறுதிப்படுத்த, உங்கள் கல்வி இலக்குகளுக்குச் சாதகமான ஓவர்சீஸ் ஸ்டூடண்ட் டிராவல் இன்சூரன்ஸ் பிளானை வாங்குவது அவசியம்!
ஸ்டூடண்ட் டிராவல் இன்சூரன்ஸ் என்றால் என்ன?
உயர்கல்விக்காக வெளிநாடு செல்லும்போது வாழ்க்கைச் செலவு, மற்ற செலவுகள், எதிர்பாராத சூழ்நிலைகள் போன்றவை ஏற்படும். ஒரு புதிய சூழலின் உள்ளுணர்ச்சியை கற்றுக்கொள்ளும் அதே வேளையில் உங்கள் கல்வியில் முன்னேறுவது உங்களை சிறப்பாக்கும். எனவே, பாதுகாப்பாக இருக்க, ஸ்டூடண்ட் டிராவல் இன்சூரன்ஸ் பிளானை வைத்திருப்பது உங்களுக்குப் பயனளிக்கும்.
இன்டர்நேஷனல் ஸ்டூடண்ட் டிராவல் இன்சூரன்ஸ் குறிப்பாக ஸ்டூடண்ட்டின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வடிவமைக்கப்பட்டுள்ளது. இது மருத்துவ மற்றும் டிராவல் பாலிசியின் அனைத்து அத்தியாவசிய பெனிஃபிட்களையும் கொண்டுள்ளது, அதாவது மருத்துவமனை செலவுகள், விமானம் மற்றும் லக்கேஜ் தாமதங்கள், கல்விக் குறுக்கீடு போன்றவை வெளிநாட்டில் இன்சூரரைப் பாதுகாக்கின்றன.
ஸ்டூடண்ட் டிராவல் இன்சூரன்ஸ் பாலிசியானது உயர் கல்வியைத் தொடர வெளிநாடுகளுக்குச் செல்லும் தனிநபர்களுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பிரீமியங்கள் மிகக் குறைவான விலையில் கிடைக்கின்றன, இது அதிகபட்ச பெனிஃபிட்யுடன் மலிவாக உள்ளது.
ஸ்டூடண்ட் டிராவல் இன்சூரன்ஸ் மேன்டடோரியா?
நீங்கள் அமெரிக்கா அல்லது எந்தவொரு ஷெங்கன் நாட்டிற்கும் பயணிக்கிறீர்கள் என்றால், ஸ்டூடண்ட் டிராவல் இன்சூரன்ஸை வைத்திருப்பது மேன்டடோரி அதாவது கட்டாயமாகும். இது மட்டுமல்லாமல், பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் அல்லது வெளிநாடுகளில் படிக்கும் மாணவர்கள் ஓவர்சீஸ் டிராவல் இன்சூரன்ஸை வாங்குவதை மேன்டடோரி ஆகியுள்ளன அதாவது கட்டாயமாக்கியுள்ளன.
உங்கள் உடல்நலம், பயணம் மற்றும் படிப்பில் ஏதேனும் இடையூறு அல்லது அசௌகரியம் ஏற்பட்டால் அது உங்களை நிதி ரீதியாக பாதுகாக்கிறது என்பதால் ஒரு ஸ்டூடண்ட் டிராவல் இன்சூரன்ஸை வாங்குவது புத்திசாலித்தனம்! ஒரு காம்பிரஹென்சிவ் ஓவர்சீஸ் ஸ்டூடண்ட் டிராவல் இன்சூரன்ஸ் பிளானை வாங்குவது மலிவு மற்றும் நீண்ட கால பெனிஃபிட்களை உள்ளடக்கியது.
மேலும் படிக்க: இந்தியாவில் இருந்து ஷெங்கன் விசாவுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
மாணவர்களுக்கு ஏன் டிராவல் இன்சூரன்ஸ் தேவை?
நாங்கள் இதற்கென ஆராய்ச்சியைச் செய்துள்ளோம், எனவே எங்கள் கண்டுபிடிப்புகளை வழங்குகிறோம்:
டிஜிட்டின் ஓவர்சீஸ் ஸ்டூடண்ட் டிராவல் இன்சூரன்ஸை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?
டிஜிட்டின் ஓவர்சீஸ் ஸ்டூடண்ட் டிராவல் இன்சூரன்ஸ் பிளானில் என்னென்ன கவர் செய்யப்படுகின்றன?
உங்கள் ஆரோக்கியத்திற்கான ஒரு கவர்
உங்கள் படிப்புக்கான ஒரு இன்சூரன்ஸ் கவர்
உங்கள் பயணத்திற்கான ஒரு இன்சூரன்ஸ் கவர்
என்னென்ன கவர் செய்யப்படவில்லை?
இப்போது உங்களுக்கு என்னென்ன கவர் செய்யப்பட்டுள்ளது என்பது தெரியும், அதை ஒரு படி மேலே கொண்டு சென்று எங்களால் கவர் செய்ய முடியாததை உங்களுக்குச் சொல்வோம். எல்லாவற்றிற்கும் மேலாக வெளிப்படைத்தன்மை முக்கியம்! ஓவர்சீஸ் ஸ்டூடண்ட் டிராவல் இன்சூரன்ஸ் பாலிசியின் கீழ் நாங்கள் கவர் செய்யாத சில பொது விலக்குகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. அவை தரமானவை மற்றும் பாலிசியின் முக்கியமானவை, அவற்றை கவனமாக படிக்க அறிவுறுத்துகிறோம்.
ஸ்டூடண்ட் ஓவர்சீஸ் டிராவல் இன்சூரன்ஸுக்கான கிளைமை நான் எவ்வாறு தாக்கல் செய்வது?
மாணவர்களுக்கான டிராவல் இன்சூரன்ஸை ஆன்லைனில் ஒப்பிடுவது எப்படி?
மாணவர்கள் வெளிநாடு செல்வதற்கு முன் நினைவில் கொள்ள வேண்டியவை
வெளிநாட்டில் படிப்பது ஒரு கனவாகவும், கவுரவமான பல்வேறு பலன்களை தரும் வாய்ப்பாகவும் இருக்கலாம். எல்லா திட்டமிடல் மற்றும் உற்சாகத்திற்கு இடையே நீங்கள் மறக்கக்கூடிய சில விஷயங்கள் உள்ளன. அத்தகைய மன அழுத்த சூழ்நிலையைத் தவிர்க்க, நீங்கள் புறப்படுவதற்கு முன்பு நினைவில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் இங்கே (நீங்கள் ஒரு சரிபார்ப்பு பட்டியலை உருவாக்குவது எப்படி?)
பாஸ்போர்ட் மற்றும் விசா சரிபார்ப்பு!
பாஸ்போர்ட் மற்றும் விசாவுக்கு விண்ணப்பிக்கவும், உங்கள் விமானத்தில் ஏறும்போது அதை எடுத்துச் செல்ல மறக்காதீர்கள். உங்களிடம் ஏற்கனவே ஒன்று இருந்தால், அது காலாவதியாகவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், மேலும் இது உங்கள் பயணத்தின் காலம் முழுதும் நீடிக்கும்.
மேலும் படிக்க: இந்தியர்களுக்கான விசா ஆன் அரைவல் நாடுகள்
மருத்துவ பதிவுகள் மற்றும் ஆவணங்கள் சரிபார்ப்பு!
உங்கள் உடல்நலம் மற்றும் மருத்துவ பதிவுகளின் நகலை எடுத்துச் செல்லுங்கள். நீங்கள் பயணிக்கும் நாட்டில் ஏதேனும் கட்டாய தடுப்பூசிகள் உள்ளதா என்பதையும் நீங்கள் சரிபார்க்க வேண்டும்.
டிராவல் இன்சூரன்ஸ் சரிபார்ப்பு!
உங்கள் டிராவல் இன்சூரன்ஸ், விமான டிக்கெட்டுகளை வாங்கி, கிரெடிட் கார்டுகள், கூடுதல் பணம் மற்றும் உங்கள் வங்கிக் கணக்கைப் பின்தொடர உங்கள் வங்கிக்குச் செல்லுங்கள். நிதி என்று வரும்போது, நீங்கள் ஒரு வரவுசெலவு பிளானை திட்டமிட வேண்டும் மற்றும் உங்கள் வங்கியின் சர்வதேச கட்டணம் மற்றும் உங்கள் சொந்த நாடு அத்துடன் நீங்கள் நகரும் நாட்டின் தற்போதைய பரிமாற்ற விகிதம் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும்.
வட்டாரமொழி சரிபார்ப்பு!
உங்கள் மொழித் திறனை வளர்த்துக் கொள்ளுங்கள். ஒரு புதிய இடத்திற்குச் செல்லும்போது, நீங்கள் முற்றிலும் கைவிடப்பட்டதாக உணர தேவையில்லை மற்றும் மொழி தடையாக இருக்கக்கூடாது. நகரத்தைச் சுற்றி உங்களுக்கு உதவவும், நாட்டின் கலாச்சாரம் மற்றும் பழக்கவழக்கங்களைப் புரிந்துகொள்ளவும் சில அடிப்படை (தினசரி தேவைக்காக பயன்படுத்தும்) சொற்றொடர்களைக் கற்றுக்கொள்ள முயற்சி செய்யலாம்.
ஃபேஷன் சரிபார்ப்பு!
சரியான காலநிலைக்கு ஏற்ற உடைகளைத் தேர்ந்தெடுங்கள். இதனுடன், உங்கள் லக்கேஜ் எடையை சரிபார்த்து, உங்கள் அனைத்து அத்தியாவசிய பொருட்களையும் எடுத்துச் செல்லுங்கள்! உங்கள் காலை துவக்கத்திற்கான பொருட்கள், டூத் பிரஷ், சோப்பு போன்றவை, எலக்ட்ரானிக் சார்ஜர்கள்/அடாப்டர்கள் போன்றவற்றை நீங்கள் வைத்திருக்கவேண்டும்.
கால்கள் மற்றும் கான்டெக்ட்களை சரிபார்க்கவும்!
சர்வதேச அளவிலும் உங்களை உள்ளடக்கும் மலிவு போன் பிளானை வைத்திருங்கள். நீங்கள் வசிக்கும் வெளிநாட்டின் அவசர தொடர்புகளையும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அது மட்டுமல்லாமல், நீங்கள் செல்ல இருக்கும் புதிய பள்ளி / கல்லூரி / பல்கலைக்கழகத்தின் அவசர தொடர்பும் இருக்க வேண்டும், இதனால் நீங்கள் தொலைந்துவிட்டால் அல்லது அவசரநிலையில் நீங்கள் அழைக்கக்கூடிய ஒருவர் இருக்கிறார் என்பதை இது உறுதிப்படுத்தும்.
பதிவு சரிபார்ப்பு!
வந்தவுடன், 24-48 மணி நேரமும் உள்நாட்டு விவகார அமைச்சகத்திலும், உள்ளூர் இந்திய தூதரகத்திலும் பதிவு செய்ய மறக்காதீர்கள்.
தாய்நாட்டைவிட்டு வெளியேறுவது கடினம் என்று எங்களுக்குத் தெரியும், ஆனால் பிரகாசமான எதிர்காலம் உங்களுக்காக காத்திருக்கிறது. நாங்கள் உங்களுக்காக இங்கே இருக்கிறோம் என்பதுதான் அதில் நல்லது. நீங்கள் எங்களை எளிதாக தொடர்பு கொள்ளலாம்:
- +91-7303470000 என்ற எண்ணில் எங்களுக்கு ஒரு மிஸ்டு கால் கொடுங்கள்
- +91-7026061234 என்ற எண்ணில் வாட்ஸ்அப்
- Travelclaims@godigit.com மூலம் எங்களுக்கு எழுதுங்கள் அல்லது
- இதைப்பாருங்கள்: கிளைம்கள்
நீங்கள் இதையும் விரும்பலாம்: இந்தியர்களுக்கு விசா இல்லாத நாடுகள்