குறிப்பாக, இது நீங்கள் விமானத்தில் செல்லும்போது உங்கள் செக்டு-இன் பேக்கேஜின் ஸ்டேட்டஸுடன் தொடர்புடையது. நீங்கள் வந்தவுடன், உங்கள் பேக்குகள் கரோலில் வரவில்லை என்றால், அது தாமதமாகலாம் (பின்னர் வரலாம்) அல்லது நிரந்தரமாக தொலைந்து போகலாம் (வராமலும் போகலாம்!)
உங்கள் செக்டு-இன் லக்கேஜ் சரியான நேரத்தில் வராததற்கு சில காரணங்கள் உள்ளன:
அது நடப்பதற்கான சில காரணங்கள்:
மனித பிழை: உங்கள் பேக்கேஜ்கள் தவறான லக்கேஜ் வண்டியில் ஏற்றப்பட்டிருக்கலாம் அல்லது செக்டு-இன் செய்யும்போது, உதவியாளர் தவறான டெஸ்டினேஷன் ஏர்போர்ட் கோடில் டைப் செய்திருக்கலாம். எப்படியிருந்தாலும், உங்கள் சூட்கேஸ் தவறான விமானத்தில் ஏறி முற்றிலும் வேறு இடத்திற்கு ஒரு பயணத்தை மேற்கொண்டிருக்கும்!
ரூட்டிங் லேபிள் சேதம்: குறிப்பாக இணைக்கும் விமானங்களில், உங்கள் சூட்கேஸில் உள்ள குறிச்சொல் தவறாக அச்சிடப்பட்டால் அல்லது கிழிந்தால், உங்கள் சூட்கேஸ் ஒருபோதும் நீங்கள் இருக்கும் விமானத்தில் நுழைய முடியாது.
லக்கேஜ் கேரோசெல்லில் காத்திருக்கும் போது நீண்ட நேரமாகும் உணர்வு உங்களுக்குத் தெரியும், அது இறுதியில் நின்றுவிடும்... ஆனாலும், உங்கள் பேக் கிடைக்காமல் போகும். பேக்கில் உங்கள் உடைகள், சன்ஸ்கிரீன், மிக முக்கியமாக, அந்த பயணத்திற்கான பணம் அனைத்தும் - ஒரு சுவடு கூட இல்லாமல் எங்கோ காணாமல் சென்றிருக்கும். ஆனால் அனைத்தையும் இழக்க வேண்டியதில்லை...
அதிர்ஷ்டவசமாக, இந்த குறிப்பிட்ட நிகழ்வுகளுக்கு உங்கள் செக்டு-இன் பேக்கேஜை உள்ளடக்கிய கவர் (டிஜிட்டின் டிராவல் இன்சூரன்ஸ்) உள்ளது:
மோசமான டிரிப் 1: "என் பேக்கேஜ் தாமதமாகிறது என்று விமான நிறுவனத்தால் எனக்கு இப்போதுதான் சொல்லப்பட்டது! எனக்கு எத்தகைய இன்சூரன்ஸ் பலன் கிடைக்கும்?"
உங்கள் செக்டு-இன் பேக்கேஜ் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் தாமதமானால், உங்கள் பிளானில் குறிப்பிட்டுள்ளபடி ஒரு நன்மைத் தொகையைப் பெறுவீர்கள். தாமதத்தை சமாளிக்க உதவும் அத்தியாவசிய பொருட்கள் / ஆடைகளை வாங்க பணத்தைப் பயன்படுத்துங்கள்.
டிஜிட்டின் இன்டர்நேஷனல் டிராவல் இன்சூரன்ஸ் பாலிசியின் ஒரு பகுதியாக பேக்கேஜ் தாமதத்திற்கு எதிரான பாதுகாப்பைக் கொண்டுள்ளது, அதாவது லக்கேஜ் தாமதம் ஏற்பட்டால் நீங்கள் $100 வரை பெறுவீர்கள்!
மோசமான டிரிப் 2: "ஏர்லைன்ஸ் எனது பேக்கேஜ்களை தொலைத்துவிட்டன ...கிர்ர்ர்ர்! எனக்கு என்ன இன்சூரன்ஸ் பலன் கிடைக்கும்?"
உங்கள் பேக்கேஜ்கள் உண்மையில் தொலைந்துவிட்டதாக விமான நிறுவனம் இறுதியில் உங்களுக்குத் தெரிவித்தால், உங்கள் பிளானில் குறிப்பிட்டுள்ளபடி நன்மைத் தொகையைப் பெறுவீர்கள். பேக்கேஜ்களில் ஒரு பகுதி மட்டுமே தொலைந்தால், நீங்கள் விகிதாச்சார தொகையைப் பெறுவீர்கள்.
எடுத்துக்காட்டாக, உங்கள் 3 செக்டு-இன் பேக்குகளில் 2 தொலைந்துவிட்டால், உங்கள் இன்சூரன்ஸ் தொகையில் 2/3 பங்கைப் பெறுவீர்கள். டிஜிட்டின் இன்டர்நேஷனல் டிராவல் இன்சூரன்ஸ் பாலிசியின் ஒரு பகுதியாக பேக்கேஜ் இழப்புக்கு எதிரான பாதுகாப்பைக் கொண்டுள்ளது - எடுத்துக்காட்டாக, மேற்சொன்னதுபோல் நடந்தால் நாங்கள் $500 வரை செலுத்துகிறோம்.
மோசமான டிரிப் 3: "எனது பேகிலிருந்து ஒரு பொருள் காணாமல் போயிருப்பதை நான் கவனித்தேன். அதற்கு இன்சூரன்ஸ் பெனிஃபிட் கிடைக்குமா?"
துரதிர்ஷ்டவசமாக, அது பகுதி இழப்பு என்று வகைப்படுத்தப்படுவதால் அதற்கு எந்த இழப்பீடும் இல்லை. நன்மைத் தொகைக்கு, ஒருவரின் மொத்த பேக்கேஜும் தொலைந்திருக்கவேண்டும்.
உங்கள் பேக்கேஜ்கள் தாமதமானால் அல்லது தொலைந்தால், நீங்கள் செய்ய வேண்டியது:
முடிவில், இழப்பு அல்லது தாமதமான பேக்கேஜ்கள் ஒரு பயணத்தின் மோசமான தொடக்கமாக இருக்கும்போது, வலியைக் குறைக்க எப்போதும் ஒரு வழி உள்ளது. டிஜிட்ஸ் இன்டர்நேஷனல் டிராவல் இன்சூரன்ஸ் போன்ற ஒரு டிராவல் இன்சூரன்ஸ் பாலிசியை நீங்கள் பெறலாம்.
டிஜிட்டின் இன்சூரன்ஸ் பேக்கேஜ் இழப்பு/தாமதம் மட்டுமல்லாமல், தற்செயலாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுதல், விமான தாமதம், பாஸ்போர்ட் இழப்பு போன்ற பல ஆபத்துகளையும் உள்ளடக்கியது!
மகிழ்ச்சியான பயணம்!
உங்கள் செக்டு-இன் பேக்கேஜ்களை தாமதம் அல்லது இழப்பிலிருந்து பாதுகாக்க நினைக்கிறீர்களா? டிஜிட்டின் இன்டர்நேஷனல் டிராவல் இன்சூரன்ஸை வாங்கவும்.