சப்போர்ட்
closeஎங்கள் வாட்ஸ்அப் எண்ணை அழைப்புகளுக்கு பயன்படுத்த முடியாது. இது வெறும் அரட்டை எண்.
இன்டர்நேஷனல் டெஸ்டினேஷனுக்கு விடுமுறை செல்வது பலருக்கும் கனவாக இருந்தாலும், சம்பந்தப்பட்ட செலவுகள் பெரும்பாலும் சவாலானதாக இருக்கும். அச்சம் வேண்டாம், இந்தியாவிலிருந்து சில சிக்கனமான வெளிநாட்டு பயணங்கள் உள்ளன, அவற்றை நீங்கள் எளிதாக தேர்வு செய்யலாம்!
நீங்கள் முழு பயணத்தையும் கவனமாக திட்டமிட்டால், உங்கள் பாக்கெட் காலியாகாமல் எளிதாக வெளிநாடுகளுக்கு ஒரு இன்டெர்நேஷனல் பயணத்தை மேற்கொள்ளலாம். இந்தியாவிலிருந்து சுற்றுலா செல்ல சிக்கனமான இடங்களின் பட்டியலை இங்கே உங்களுக்காக தொகுத்துள்ளோம். இந்தியாவிலிருந்து செல்ல சிக்கனமான நாடுகளின் பட்டியலுடன், நீங்கள் எவ்வளவு செலவை எதிர்பார்க்கலாம் என்பதற்கான விரிவான பட்டியலையும் நாங்கள் உங்களுக்காகவே வழங்கியுள்ளோம்.
ஓவர்ஆல் காஸ்ட் எஸ்டிமெட் – 7 நாள் பயணத்திற்கு ஒரு நபருக்கு ரூ.38,000 முதல் ரூ.45,000 வரை செலவாகிறது.
நாட்டைப் பற்றி: இமயமலையின் மையத்தில் அமைந்துள்ள நேபாளம், கோயில்கள், மடாலயங்கள், பரபரப்பான சந்தைகள் மற்றும் இயற்கை அழகு நிறைந்த ஒரு அழகிய நாடு. இந்தியாவிலிருந்து சில சிக்கனமான இன்டெர்நேஷனல் இடங்கள் இருந்தாலும், சாகச விளையாட்டுகளையும் வழங்கும் ஒரு சிலவற்றில் நேபாளமும் ஒன்றாகும்.
உணவு மற்றும் தங்குமிடம்: பொதுவாக, நேபாளத்திற்கு வரும் பயணிகளுக்கான உணவு மற்றும் தங்குமிட செலவு ஒரு நாளைக்கு ரூ.3,000 ஆகும். இது நேபாளத்திற்கு செல்வதை மிகவும் சிக்கனமாக்குகிறது.
விசா மற்றும் விசா ஃபீ: செல்லுபடியாகும் பாஸ்போர்ட் வைத்திருக்கும் இந்திய குடிமக்கள் நேபாளத்திற்கு செல்ல எந்த விசாவையும் பெற வேண்டியதில்லை.
ஃப்ளைட் காஸ்ட்: புதுடெல்லியில் இருந்து நேபாளத்தின் காத்மாண்டுவுக்கு ஒரு நபருக்கு சராசரியாக ரூ.12,800 வரை ரவுண்ட் ட்ரிப் விமான கட்டணம் செலவாகிறது.
பார்க்க வேண்டிய முக்கிய இடங்கள்: இந்த இடம் அனைத்து வகையான பயணிகளுக்கும் சேவை செய்யும் அதே வேளையில், இது அட்வென்ச்சரர்கள் மற்றும் பேக்பேக்கர்களை அதிகம் ஈர்க்கும் இடமாகும். முக்கியமான அட்ராக்ஷன்களில் –
டிராவல் இன்சூரன்ஸ்: இந்தியாவில் இருந்து நேபாளம் செல்லும் பயணிகள் தங்கள் இன்டெர்நேஷனல் டிராவல் இன்சூரன்ஸ் பாலிசியின் கீழ் ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு ரூ.175 (18% ஜி.எஸ்.டி நீங்கலாக) செலுத்தி 50,000 டாலர் சம் இன்சூர்டை பெறலாம்.
ஓவர்ஆல் காஸ்ட் எஸ்டிமெட் – 7 நாள் பயணத்திற்கு ஒருவருக்கு ரூ.45,000 முதல் ரூ.50,000 வரை செலவாகிறது.
நாட்டைப் பற்றி: ஆழந்த பண்பாடு மற்றும் புகழ்பெற்ற வரலாற்றைக் கொண்ட ஒரு நாடான வியட்நாம் வெப்பமண்டல காலநிலையைக் கொண்டுள்ளது. இது பிரெஞ்சு கலாச்சாரத்தால் பெரிதும் கவரப்படுகிறது, குறிப்பாக நாட்டின் வடக்கில் தலைநகரான ஹனோய் அட்டகாசமான ஈர்ப்பை அளிக்கிறது. இதற்கு நேர்மாறாக, இந்த நாட்டின் தெற்குப் பகுதி அமெரிக்க செல்வாக்கைக் கொண்டுள்ளது.
உணவு மற்றும் தங்குமிடம்: இந்தியாவிலிருந்து பயணம் செய்ய சிக்கனமான நாடுகளில் ஒன்றான இங்கு எந்தப் பயணியும் ஒரு நாளைக்கு ரூ.3,200-க்கும் குறைவான செலவில் ஆடம்பரமான உணவை உண்ணலாம். கூடுதலாக, தங்குமிட செலவு ரூ.1,894 முதல் தொடங்குகிறது.
விசா வகை மற்றும் ஃபீ -
ஃப்ளைட் காஸ்ட்: புதுடெல்லியில் இருந்து வியட்நாமின் ஹனோய் நகருக்கு ஒரு சுற்றுப் பயணத்திற்கான விமானக் கட்டணம் ரூ.9,240 முதல் ரூ.15,026 வரை இருக்கும்.
பார்க்க வேண்டிய முக்கிய இடங்கள்: சந்தை இடத்தைப் பார்வையிடுவது வெளிப்படையான ஈர்ப்பாக இருந்தாலும், சில தனித்துவமான அனுபவங்களுக்கான விருப்பமும் உங்களுக்கு உள்ளது. வியட்நாம் பின்வருவனவற்றை டூரிஸ்ட் அட்ராக்ஷன்கள் மூலம் வழங்குகிறது -
டிராவல் இன்சூரன்ஸ்: ஒரு நாள் பயணத்திற்கு ஒரு நபருக்கு $ 50,000 சம் இன்சூர்டை வழங்கும் டிஜிட்டின் வியட்நாம் டிராவல் இன்சூரன்ஸ் பாலிசி ரூ.175 (18% ஜி.எஸ்.டி விலக்குடன்) என்ற குறைவான பிரீமியத்தில் கிடைக்கிறது.
ஓவர்ஆல் காஸ்ட் எஸ்டிமெட் – ஒரு நபருக்கு பூட்டான் செல்ல 7 நாள் பயணத்திற்கு ரூ.14,000 முதல் ரூ.25,000 வரை செலவாகும்.
நாட்டைப் பற்றி: இந்தியாவிலிருந்து சிக்கனமான வெளிநாட்டு இடங்களுக்கு செல்வதென்றால், பூட்டான் ஒரு சிறந்த தேர்வாக இருக்கலாம், குறிப்பாக சாகசக்காரர்களுக்கு. இயற்கை வளங்கள் மற்றும் அமைதியின் மறுஉருவமாக மாசற்ற அழகைக் கொண்ட இந்த நாடு, ஆராயப்படாத இயற்கை நிலப்பரப்பையும் கொண்டுள்ளது.
உணவு மற்றும் தங்குமிடம்: இமயமலையில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஹோம்ஸ்டேக்களின் விலை சுமார் ரூ.2,200 ஆகும். ஒவ்வொரு உணவிற்கும் ரூ.100 முதல் ரூ.400 வரை செலவாகிறது.
விசா மற்றும் விசா ஃபீ: விசா தேவையில்லை.
ஃப்ளைட் காஸ்ட்: புதுடெல்லியில் இருந்து பூட்டானின் பாரோ சுற்றுப் பயணம் ஒன்றுக்கு சுமார் ரூ. 11,700 செலவாகும்.
பார்க்க வேண்டிய முக்கிய இடங்கள்: பூட்டானை அடைந்ததும், பின்வரும் இடங்களைப் பார்வையிட உங்களுக்கு விருப்பம் உள்ளது -
டிராவல் இன்சூரன்ஸ்: பூட்டானுக்கு ஒரு நாள் பயணத்திற்கு நபர் ஒருவர் 50,000 டாலர் வரை சம் இன்சூர்டு பெற ரூ.174 (18% ஜி.எஸ்.டி விலக்குடன்) பிரீமியமாக செலுத்தி ஒரு இன்டெர்நேஷனல் டிராவல் இன்சூரன்ஸ் பாலிசியைப் பெறலாம்.\
ஓவர்ஆல் காஸ்ட் எஸ்டிமெட் – பூட்டானுக்கு 7 நாள் பயணத்திற்கு ஒரு நபருக்கு ரூ.27,000 முதல் ரூ.29,000 வரை செலவாகும்.
நாட்டைப் பற்றி: இந்தியாவின் நெருங்கிய அண்டை நாடான இலங்கை, தனது பார்வையாளர்களுக்கு சூரிய ஒளி நிறைந்த கடற்கரைகளையும் சமையல்சார் இன்பத்தையும் வழங்குகிறது. பெரும்பாலும் கவனிக்கப்படாத இந்த வெப்பமண்டல நாடு இயற்கை அழகை மட்டுமல்ல, ஏராளமான பாரம்பரிய காட்சிகளையும் வழங்குகிறது. இலங்கையில் தங்குமிடம் மற்றும் உணவு செலவுகள் இந்தியாவிலிருந்து பிரைம் பட்ஜெட் இன்டர்நேஷனல் ட்ரிப்களுக்கு சிறந்த இடங்களில் ஒன்றாக அமைகிறது.
உணவு மற்றும் தங்குமிடம்: உணவிற்கான செலவு ரூ.400 வரை இருக்கும் நிலையில், தங்குமிடச் செலவு ரூ.1,000-க்குள் இருக்கும்.
விசா மற்றும் விசா ஃபீ:
ஃப்ளைட் காஸ்ட்: புதுடெல்லியில் இருந்து இலங்கையின் கொழும்புக்கு சுற்றுப் பயணக் கட்டணம் சுமார் ரூ.14,000 முதல் ரூ.15,000 வரை ஆகும்.
பார்க்க வேண்டிய முக்கிய இடங்கள்: நாடு அதன் சுற்றுலாப் பயணிகளுக்கு கண்ணுக்கு குளிர்ச்சியான இடங்களை வழங்குகிறது, அவற்றுள் -
டிராவல் இன்சூரன்ஸ்: இந்தியாவில் இருந்து சிக்கனமான இன்டெர்நேஷனல் பயணங்களில் ஒன்றாக இருப்பதால், டிராவல் இன்சூரன்ஸை பெறுவது ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு ரூ.175 (18% ஜி.எஸ்.டி நீங்கலாக) வருகிறது குறைந்த பிரீமியத்துடன் வருகிறது.
ஓவர்ஆல் காஸ்ட் எஸ்டிமெட் – தாய்லாந்துக்கு 7 நாட்கள் பயணம் செய்ய ரூ.45,000 முதல் ரூ.49,000 வரை செலவாகும்.
நாட்டைப் பற்றி: அரச பாரம்பரியம் முதல் நவீன நகரங்கள் வரை, தாய்லாந்து அதன் பார்வையாளர்களுக்கு அனைத்து வகையான அனுபவங்களையும் வழங்குவதை உறுதியளிக்கிறது. ஆழ்ந்த வேரூன்றிய கலாச்சார பாரம்பரியத்துடன் கூடிய அரச அரண்மனைகள் மற்றும் பழமையான இடிபாடுகள் தாய்லாந்தை இந்தியாவிலிருந்து பார்வையிடக்கூடிய முதன்மையான இடங்களில் ஒன்றாக ஆக்குகின்றன. கூடுதலாக, இதில் உள்ள செலவுகள் இந்தியாவிலிருந்து பயணம் செய்ய உலகின் சிக்கனமான நாடுகளில் ஒன்றாக அமைகிறது.
உணவு மற்றும் தங்குமிடம்: தங்குமிடச் செலவுகள் பொதுவாக ரூ.1,600-ல் தொடங்கி தேவைக்கேற்ப அதிகரிக்கலாம். ஒரு நாள் முழுவதும் சாப்பாடு ரூ.1,000 வரை மட்டுமே, இருப்பினும் நீங்கள் ஆடம்பரமான உணவை தேர்வு செய்யலாம்.
விசா மற்றும் விசா ஃபீ:
ஃப்ளைட் காஸ்ட்: புதுடெல்லியில் இருந்து தாய்லாந்தின் பாங்காக்கிற்கு சராசரியாக ரூ.11,000 முதல் ரூ.13,000 வரை Flight Cost ஃப்ளைட் காஸ்ட் ஆகிறது.
பார்க்க வேண்டிய முக்கிய இடங்கள்: இந்தியாவிலிருந்து பார்வையிட சிக்கனமான நாடுகளில் ஒன்றான தாய்லாந்தில் வளர்ந்து வரும் சுற்றுலாத் துறை, அதன் வருவாயை நாடு வழங்கும் முக்கிய சுற்றுலா ஈர்ப்புகளுக்கு மேலும் வழங்கி மேம்படுத்தி வருகிறது. அதில் அடங்குபவை -
டிராவல் இன்சூரன்ஸ்: தாய்லாந்து செல்லும் போது டிராவல் இன்சூரன்ஸை பெறுவது மிகவும் சிக்கனமானது, ஏனெனில் ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு பிரீமியம் ரூ.175 முதல் தொடங்குகிறது, 18% ஜி.எஸ்.டி நீங்கலாக.
ஓவர்ஆல் காஸ்ட் எஸ்டிமெட் – பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு 7 நாட்கள் பயணம் செய்தால், நீங்கள் தனியாக பயணம் செய்தால் சுமார் ரூ.90,000 வரை செலவாகும்.
நாட்டைப் பற்றி: பிலிப்பைன்ஸ் இந்தியாவிற்கு அருகிலுள்ள இடங்களில் ஒன்றாகும், இது அதன் ஆராயப்படாத அழகு மற்றும் வசீகரமான கடற்கரைகளுக்கு பெயர் பெற்றது. அதன் மகத்தான பல்லுயிர்த்தன்மையுடன், இது இந்தியாவிலிருந்து சிக்கனமான வெளிநாட்டு பயணங்களில் ஒன்றாக உள்ளது, இதனால் பயணிகள் நாட்டிற்குச்செல்வது மிகவும் எளிதானது.
உணவு மற்றும் தங்குமிடம்: உணவு மற்றும் தங்குமிடத்தைப் பொறுத்தவரை, பிலிப்பைன்ஸுக்கு கிட்டத்தட்ட எந்த இணையும் இல்லை என்றே சொல்லலாம். நாட்டில் ஹோம்ஸ்டேக்கள் ரூ.700 வரை மலிவாக கிடைக்கும், அதே நேரத்தில் பட்ஜெட்டை ரூ.1,000 ஆக உயர்த்துவது மிகவும் ஆடம்பரமான/சொகுசு இடங்களில் தங்க வாய்ப்பளிக்கும். உணவு தொடர்பான செலவுகளைப் பொறுத்தவரை, நீங்கள் ஒரு உணவுக்கு சுமார் ரூ.150-க்கும், உணவகத்தில் ஒரு வேளை உணவிற்கு சுமார் ரூ.500-க்கும் செலவு செய்யலாம்.
விசா மற்றும் விசா ஃபீ:
ஃப்ளைட் காஸ்ட்: புதுடெல்லியில் இருந்து பிலிப்பைன்ஸின் மணிலாவுக்கு ஒரு சுற்றுப் பயணத்திற்கான விமானக் கட்டணம் சுமார் ரூ.21,000 முதல் ரூ.23,000 வரை செலவாகும்.
பார்க்க வேண்டிய முக்கிய இடங்கள்: இந்தியாவில் இருந்து சிக்கனமான இன்டெர்நேஷனல் பயணங்களில் ஒன்றான பிலிப்பைன்ஸ் அதன் சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்க நிறைய உள்ளது. அதில் அடங்குபவை -
டிராவல் இன்சூரன்ஸ்: பொதுவாக, பிலிப்பைன்ஸ் பயணத்தை உள்ளடக்கிய எந்தவொரு பாலிசிக்கும் ஒரு நாளைக்கு இன்சூரன்ஸ் பிரீமியம் ஒரு தனிநபருக்கு ரூ.175 முதல் தொடங்குகிறது, 18% ஜி.எஸ்.டி நீங்கலாக.
ஓவர்ஆல் காஸ்ட் எஸ்டிமெட் –துருக்கியில் 7 நாள் பயணத்திற்கு ரூ.70,000 முதல் ரூ.75,000 வரை செலவாகும்.
நாட்டைப் பற்றி: இஸ்தான்புல்லை தலைநகராகக் கொண்ட துருக்கி, பெரும்பாலானவற்றைப் போலல்லாமல் ஒரு வரலாறு நிறைந்த இடமாகும். இஸ்தான்புல் நகரம் பைசாந்தியப் பேரரசின் இதயமாக இருந்தது, இது பின்னர் ஒட்டோமான் அதிகாரத்தின் தலைமையிடமாக மாறியது. அதன் இணையற்ற கடந்த காலத்துடன், இந்தியாவிலிருந்து சிக்கனமான வெளிநாட்டு இடங்களில் ஒன்றாக இந்நாடு உள்ளது.
உணவு மற்றும் தங்குமிடம்: துருக்கியில் தங்குவதற்கான சராசரி செலவு ஒரு இரவுக்கு சுமார் ரூ.1,900 ஆகும். துருக்கியில் உணவு மிகவும் சிக்கனமானது. சுற்றுலாப் பயணிகள் ஆடம்பரமாக விருந்துண்டு, ரூ.500 செலவில் அனைத்து உணவுகளையும் முடித்துக் கொள்ளலாம்.
விசா மற்றும் விசா ஃபீ:
ஃப்ளைட் காஸ்ட்: புதுடெல்லியில் இருந்து துருக்கியின் இஸ்தான்புல்லுக்கு ரவுண்ட் ட்ரிப் விமானக் கட்டணம் ரூ.23,000 முதல் ரூ.24,000 வரை உள்ளது.
பார்க்க வேண்டிய முக்கிய இடங்கள்: இந்தியாவிலிருந்து இந்த சிக்கனமான விடுமுறை இடம் ஒரு அற்புதமான குடும்ப விடுமுறையை வழங்க முடியும், இதுபின்வரும் தளங்களை வழங்குகிறது -
டிராவல் இன்சூரன்ஸ்: ஒரு தனிநபருக்கு, ஒரு நாளுக்கு, துருக்கிக்கான டிராவல் இன்சூரன்ஸ் பிரீமியம் ரூ.177 வரை குறைந்த விலையில் 18% ஜிஎஸ்டி நீங்கலாக இருக்கும்
ஓவர்ஆல் காஸ்ட் எஸ்டிமெட் – இந்தோனேசியாவின் பாலிக்கு 7 நாள் பயணத்திற்கு ரூ.40,000 முதல் ரூ.44,000 வரை செலவழிக்க வேண்டும்.
நாட்டைப் பற்றி: இந்தோனேசிய தீவுக்கூட்டத்தில் அமைந்துள்ள பாலி, இந்தியாவில் இருந்து செல்வதற்கான சிக்கனமான நாடுகளில் ஒன்றாக மட்டுமல்லாமல், கடற்கரைகள் மற்றும் தெளிவான கடல் மற்றும் வெப்பமண்டல காடுகளால் நிறைந்த ஒரு இடமாகும். அதன் வளமான கலாச்சார மற்றும் ஆன்மீக பாரம்பரியத்திற்காக அறியப்பட்ட பாலி, பெரும்பாலும் 'கடவுளின் தீவு' என்று அழைக்கப்படுகிறது. இந்த நகரம் பார்ப்பதற்கு அழகான கோயில்களை மட்டுமல்ல, சுற்றுலாப் பயணிகள் மகிழ்வதற்காக பல்வேறு திருவிழாக்களையும் வழங்குகிறது.
உணவு மற்றும் தங்குமிடம்: பொதுவாக, பாலியில் ஒரு நாள் முழுவதும் உணவுக்கான செலவு ஒரு நாளைக்கு ரூ.1,500க்கும் குறைவாகவே செலவாகும். தங்குமிடச் செலவு ஒரு இரவுக்கு ரூ.1400 ஆகலாம்.
விசா மற்றும் விசா ஃபீ: இந்தியாவிலிருந்து பட்ஜெட் இன்டர்நேஷனல் ட்ரிப் பாலிக்கு வரும் இந்திய சுற்றுலாப் பயணிகள் -
ஃப்ளைட் காஸ்ட்: புதுடெல்லியில் இருந்து இந்தோனேசியாவின் பாலிக்கு ரவுண்ட் ட்ரிப் விமானக் கட்டணம் ரூ.24,000 முதல் ரூ.28,000 வரை செலவாகும்.
பார்க்க வேண்டிய முக்கிய இடங்கள்: கோயில் சுற்றுலாக்கள் இன்றியமையாதவை என்பதால், பாலியில் குடும்ப விடுமுறைக்கு ஏற்ற பல அட்ராக்டிவ் இடங்களும் உள்ளன. இதில் உள்ள விருப்பங்கள் -
டிராவல் இன்சூரன்ஸ்: இந்தோனேசியாவிற்குள் நுழைய டிராவல் இன்சூரன்ஸ் கட்டாயமில்லை என்றாலும், ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு ரூ.175 (18% ஜி.எஸ்.டி நீங்கலாக) முதல் தொடங்கும் பாக்கெட் ஃப்ரென்ட்லி பிரீமியத்துடன் வரும் டிராவல் இன்சூரன்ஸ் ஒன்றை நீங்கள் பெறலாம்.
ஓவர்ஆல் காஸ்ட் எஸ்டிமெட் – ரூ.38,000 கட்டணத்தில் மலேசியாவுக்கு 7 நாள் பயணத்தை நிறைவு செய்யலாம்.
நாட்டைப் பற்றி: இந்தியாவில் இருந்து சிக்கனமான இன்டெர்நேஷனல் இடங்களில் ஒன்றான மலாயாசியா, ஏராளமான கடற்கரையுடன் இனிமையான காலநிலையை வழங்குகிறது. கடல் மட்டுமல்ல வனவிலங்குகள் மற்றும் பசுமை உள்ளிட்ட பல அழகிய இடங்களை இந்த நாடு வழங்கினாலும், இந்த நாடு தென்கிழக்கு ஆசியாவில் மிகவும் தொழில்நுட்ப ரீதியாக உந்தப்பட்ட நாடுகளில் ஒன்றாகும். மேலும், இது ஒரு வளமான கலாச்சார மற்றும் மத பாரம்பரியத்தையும் கொண்டுள்ளது, இது அதன் கோயில்கள் மற்றும் கட்டிடக்கலையில் பிரதிபலிக்கிறது.
உணவு மற்றும் தங்குமிடம்: நீங்கள் முயற்சிக்க விரும்பும் உணவின் வகையைப் பொறுத்து, ஒரு நாள் முழுவதும் உணவுக்கு ரூ.850 முதல் ரூ.1,200 வரை செலவாகும். தங்குமிடம் கட்டணம் ஒரு இரவுக்கு ரூ.800 முதல் ரூ.1000 வரை இருக்கலாம்.
விசா மற்றும் விசா ஃபீ:
· விசா வகை – விசா தேவையில்லை. எலக்ட்ரானிக் டிராவல் இன்ஃபர்மேஷன் & ரெஜிஸ்ட்ரேஷன் (இ.என்.டி.ஆர்.ஐ) மூலம் மட்டுமே ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்.
· விசா ஃபீ – இலவசம்.
ஃப்ளைட் காஸ்ட்: புதுடெல்லியில் இருந்து மலேசியாவின் கோலாலம்பூருக்கு ஒரு சுற்றுப் பயணத்திற்கு சுமார் ரூ.15,000 முதல் ரூ.19,000 வரை செலவாகும்.
பார்க்க வேண்டிய முக்கிய இடங்கள்: இந்தியாவிலிருந்து இந்த சிக்கனமான விடுமுறை இடத்திற்கு வருபவர்கள் அவசியம் பார்க்க வேண்டிய இடங்கள் பின்வருமாறு
டிராவல் இன்சூரன்ஸ்: ஒரு நபருக்கு டிராவல் இன்சூரன்ஸ் பாலிசியை வாங்குவதற்கான ஒரு நாள் பிரீமியம் ரூ.175 (18% ஜி.எஸ்.டி நீங்கலாக) முதல் தொடங்குகிறது, மேலும் டிராவல் இன்சூரன்ஸ் சட்டத்தால் தேவையில்லை என்றாலும், ஒன்றைப் பெறுவது நல்லது.
ஓவர்ஆல் காஸ்ட் எஸ்டிமெட் - துபாய்க்கு ஏழு நாட்கள் தனியாக பயணம் செய்ய குறைந்தபட்சம் ரூ.30,000 செலவாகும், இந்த விலை ரூ.90,000 வரை இருக்கலாம்.
நாட்டைப் பற்றி: பாலைவன நாடான ஐக்கிய அரபு அமீரகத்தின் மகுட ஆபரணமான துபாய், சுற்றுலாப் பயணிகளுக்கு பிரமாண்டமான விருந்துகள், ஆடம்பரமான வாழ்க்கை முறை, பாலைவன சஃபாரிகள் மற்றும் முடிவற்ற ஷாப்பிங் ஆகியவற்றை வழங்கும் ஒரு நகரமாகும். பொதுவாக வெப்பமான நகரமான இது, அதிக வெப்பமாகவும் வறண்டதாகவும் இருப்பதால் செயற்கை மழைக்கான தொழில்நுட்பத்தையும் கொண்டுள்ளது. இந்தியாவிலிருந்து சிக்கனமான பயண இடமாக துபாய் ஒவ்வொரு வாய்ப்பையும் வழங்கினாலும், நாட்டின் சட்டங்களை மிகவும் கடுமையாக கடைப்பிடிப்பது முக்கியம்.
உணவு மற்றும் தங்குமிடம்: துபாயில் ஒரு நாள் உணவு செலவு சுமார் ரூ.1000. வசதியான தங்குமிடம் ஒரு நாளைக்கு சுமார் ரூ.7,000 இல் தொடங்குகிறது என்றாலும், தங்குமிடக் கட்டணங்கள் விருப்பங்களுக்கு ஏற்ப மாறுபடும்.
விசா மற்றும் விசா ஃபீ:
ஃப்ளைட் காஸ்ட்: புதுடெல்லியில் இருந்து துபாய் செல்ல ரவுண்ட் ட்ரிப் விமான கட்டணம் சுமார் ரூ.18,500 ஆகும்.
பார்க்க வேண்டிய முக்கிய இடங்கள்: துபாய் அதன் சலுகைகளைக் கருத்தில் கொண்டு விடுமுறைகளுக்கு ஒரு சிறந்த தேர்வாக இருக்கலாம் -
டிராவல் இன்சூரன்ஸ்: துபாய் செல்வதற்கு டிராவல் இன்சூரன்ஸ் வழங்குநர்கள் வழங்கும் பாலிசிகள் பொதுவாக ரூ.175 முதல் (18% ஜி.எஸ்.டி நீங்கலாக) தொடங்கும் பிரீமியத்தைக் கொண்டுள்ளன, மேலும் டிராவல் இன்சூரன்ஸ் வைத்திருப்பது கட்டாயமாகும். இந்த பிரீமியம் தொகை ஒரு தனிநபருக்கும், ஒரு நாளுக்கும் செல்லுபடியாகும்.
ஓவர்ஆல் காஸ்ட் எஸ்டிமெட் – ஆஸ்திரேலியாவுக்கு 7 நாட்கள் தனியாக பயணம் செய்ய ரூ.85,000 முதல் ரூ.90,000 வரை செலவாகும்.
நாட்டைப் பற்றி: ஒரு நாடு மற்றும் ஒரு கண்டமாக, ஆஸ்திரேலியா மகத்தான இயற்கை பன்முகத்தன்மையை வழங்குகிறது. வனாந்தரத்தின் திறந்த வயல்கள் முதல் கடலின் நீல ஆழங்கள் மற்றும் பவளப்பாறைகளின் அதிசயம் வரை, இந்தியாவிலிருந்து இந்த சிக்கனமான வெளிநாட்டு இடம் ஏராளமான அனுபவத்தை வழங்குகிறது. காஸ்மோபாலிட்டன் நகரங்கள் நகர்ப்புற ஆடம்பரங்களையும் வழங்குகின்றன, அதே நேரத்தில் நீண்ட கடற்கரைகள் ஆய்வுக்கு ஏராளமாக உள்ளன.
உணவு மற்றும் தங்குமிடம்: ஆஸ்திரேலியாவில் உணவுச் செலவு நாளொன்றுக்கு ரூ.2,000-யிக்குள் ஈடுசெய்யப்படலாம், தங்குமிடச் செலவுகள் பொதுவாக ஒரு நாளைக்கு சுமார் ரூ.5,000-யிலிருந்து தொடங்குகின்றன.
விசா மற்றும் விசா ஃபீ:
ஃப்ளைட் காஸ்ட்: புதுடெல்லியில் இருந்து ஆஸ்திரேலியாவின் பெர்த் நகருக்கு ஒரு சுற்றுப் பயணத்திற்கு நீங்கள் சுமார் ரூ.70,000 செலுத்த வேண்டியிருக்கும்.
பார்க்க வேண்டிய முக்கிய இடங்கள்: அட்வென்ச்சர் மற்றும் அமைதியோ அமைதியை விரும்பும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஆஸ்திரேலியா மிகவும் விருப்பமான இடங்களில் ஒன்றாகும். சுற்றுலாத் தலங்களில் உள்ள பன்முகத்தன்மையே இதற்குக் காரணம் -
டிராவல் இன்சூரன்ஸ்: இந்தியாவில் இருந்து இந்த சிக்கனமான இடத்திற்கு செல்ல பயண விசா கட்டாயமில்லை என்றாலும், பயணம் செய்வதற்கு முன்பு இன்சூரன்ஸ் ஒன்றை வாங்குவது நல்லது. வழக்கமாக, பிரீமியம் ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு ரூ.177 (18% ஜி.எஸ்.டி நீங்கலாக) முதல் தொடங்குகிறது.
ஓவர்ஆல் காஸ்ட் எஸ்டிமெட் – கம்போடியாவுக்கு 7 நாள் தனிப்பயணத்தை ரூ.32,000 முதல் ரூ.35,000 வரை செலவழித்து முடிக்கலாம்.
நாட்டைப் பற்றி: அங்கோர் வாட்டின் புகழ்பெற்ற கோயிலைக் கொண்ட கம்போடியா, இந்தியாவில் இருந்து பயணிக்க உலகின் சிக்கனமான நாடுகளில் ஒன்றாக மட்டுமல்லாமல், கலாச்சார புகலிடமாகவும் திகழ்கிறது. இந்த நாடு ஒரு புறம் தொந்தரவு இல்லாத இயற்கை இடங்களை வழங்குகிறது, அதே நேரத்தில் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட ஏராளமான கோயில்கள் மற்றும் பழங்கால இடிபாடுகளையும் கொண்டுள்ளது.
உணவு மற்றும் தங்குமிடம்: இந்தியப் பயணிகளுக்கு மிகவும் சிக்கனமான நாடு என்ற வகையில், உணவுச் செலவுகள் ஒரு நாளைக்கு ரூ.1,000க்கும் குறைவாகவே வருகின்றன. தங்குமிடச் செலவும் ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு ரூ.900 முதல் சிக்கனமான விலையில் வருகிறது.
விசா மற்றும் விசா ஃபீ:
ஃப்ளைட் காஸ்ட்: புதுடெல்லியில் இருந்து கம்போடியாவின் புனோம் பென் நகருக்கு ஒரு சுற்றுப் பயணத்திற்கு ரூ.9,000 முதல் ரூ.26,000 வரை செலவாகும்.
பார்க்க வேண்டிய முக்கிய இடங்கள்: இயற்கை மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட ஈர்ப்புகளின் சரியான கலவையாக இருக்கும் சுற்றுலா வழங்கல்களின் மிகுதியைக் கருத்தில் கொண்டு கம்போடியா ஒரு நாடாக அதன் சுற்றுலாப் பயணிகளின் இதயத்தை கொள்ளை கொள்கிறது. அத்தகைய சில ஈர்ப்புமிக்க இடங்கள் பின்வருமாறு -
டிராவல் இன்சூரன்ஸ்: சட்டத்தால் தேவையில்லை என்றாலும், கம்போடியா செல்வதற்கு முன்பு ஒரு இன்சூரன்ஸ் பாலிசி வைத்திருப்பது நல்லது. பொதுவாக, கம்போடியாவிற்கான பாலிசிகளுக்கான பிரீமியம் ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு சுமார் ரூ.177 (18% ஜி.எஸ்.டி நீங்கலாக) முதல் தொடங்குகிறது.
ஓவர்ஆல் காஸ்ட் எஸ்டிமெட் – ஓமனுக்கு ஏழு நாட்கள் தனியாக பயணம் செய்ய ரூ.48,000 முதல் ரூ.50,000 வரை செலவாகும்.
நாட்டைப் பற்றி: இந்தியாவில் இருந்து பயணம் செய்ய சிக்கனமான நாடுகளில் ஒன்றான ஓமன் சுல்தானகம் கலாச்சார மற்றும் வரலாற்றுச் சுற்றுலா வாய்ப்புகளையும், பல்வேறு வகையான கடல்சார் சுற்றுலாக்களையும் வழங்குகிறது. மஸ்கட்டின் தலைநகரம் அதன் அழகு மற்றும் கலாச்சார உணர்வுகளுக்காக மிகவும் பிரபலமானது.
உணவு மற்றும் தங்குமிடம்: உணவுக்கான செலவு ரூ.2,000-க்கும் குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், ஹோட்டலில் தங்கும் செலவு ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு ரூ.2,500 வரை இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
விசா மற்றும் விசா ஃபீ:
ஃப்ளைட் காஸ்ட்: புதுடெல்லியில் இருந்து ஓமன் செல்ல ரூ.18,000 முதல் ரூ.23,000 வரை செலவாகும்.
பார்க்க வேண்டிய முக்கிய இடங்கள்: இந்தியாவில் இருந்து இந்த சிக்கனமான இடம் சுற்றுலாப் பயணிகளுக்கு பின்வரும் இடங்களைப் பார்வையிடுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது
டிராவல் இன்சூரன்ஸ்: ஓமன் தனது அனைத்து பார்வையாளர்களுக்கும் டிராவல் இன்சூரன்ஸை இன்னும் கட்டாயமாக்கவில்லை. இருப்பினும், ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு ரூ.175 (18% ஜி.எஸ்.டி நீங்கலாக) வரை பிரீமியம் இருப்பதால், இன்சூரன்ஸ் கவரை பெறுவது சிறந்தது.
ஓவர்ஆல் காஸ்ட் எஸ்டிமெட் – மியான்மருக்கு 7 நாள் தனிப்பயணத்திற்கு ரூ.43,000 முதல் ரூ.45,000 வரை செலவழிக்க வேண்டியிருக்கும்.
நாட்டைப் பற்றி: பெரும்பாலான தெற்காசிய நாடுகளைப் போலவே, மியான்மரும் வளமான கலாச்சார பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. இதில் கோயில்கள், அரண்மனைகள் போன்றவை அடங்கும். அவை நாடு முழுவதும் ஏராளமான பசுமையுடன் காணக் கிடைக்கின்றன. இந்த நாடு அதன் பார்வையாளர்களுக்கு கண்கவர் இயற்கை அழகையும் வழங்குகிறது.
உணவு மற்றும் தங்குமிடம்: இந்தியாவிலிருந்து பயணம் செய்ய சிக்கனமான நாடுகளில் ஒன்றாக இருப்பதால், நாள் முழுவதும் உணவுக்கான செலவு அதிகபட்சம் ரூ.800 வரை இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். ஓட்டலில் தங்குவதற்கு, ரூ.2,500 முதல், ரூ.3,000 வரை செலவாகும்.
விசா மற்றும் விசா ஃபீ:
ஃப்ளைட் காஸ்ட்: புதுடெல்லியில் இருந்து மியான்மரின் யாங்கூனுக்கு ஒரு சுற்றுப் பயணத்திற்கான விமான டிக்கெட் உங்களுக்கு ரூ.14,000 முதல் ரூ.20,000 வரை செலவாகும்.
பார்க்க வேண்டிய முக்கிய இடங்கள்: இந்தியாவிலிருந்து சிக்கனமான வெளிநாட்டு இடமாக, மியான்மர் பார்வையாளர்களுக்கு பல்வேறு தளங்களை வழங்குகிறது. இங்கு சில இடங்கள் கலாச்சாரத்தில் ஆழமாக வேரூன்றியதற்கான தடயங்களைக் கொண்டிருப்பதால், கடந்த சில ஆண்டுகளில் மியான்மரின் வளர்ச்சிக்கு இவை சான்றாக உள்ளன -
டிராவல் இன்சூரன்ஸ்: மியான்மருக்கு செல்லும் போது டிராவல் இன்சூரன்ஸ் வைத்திருப்பது கட்டாயமில்லை. எவ்வாறாயினும், எந்தவொரு பயணமும் எதிர்பாராத நிகழ்வுகளின் அபாயங்களிலிருந்து விடுபடாது என்பதைக் கருத்தில் கொண்டு, ஒரு நிதி பாதுகாப்பை வைத்திருப்பது சிறந்தது. ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு ரூ.175 (18% ஜி.எஸ்.டி நீங்கலாக) முதல் பிரீமியம் செலுத்தி, இன்சூரன்ஸ் கவரை பெறுவது சிறந்தது.
ஓவர்ஆல் காஸ்ட் எஸ்டிமெட் – சுமார் ரூ.58,000 முதல் ரூ.60,000 வரை செலவழித்து கென்யாவுக்கு உங்கள் 7 நாள் பயணத்தை முடிக்கலாம்.
நாட்டைப் பற்றி: இந்தியாவிலிருந்து பல்வேறு சிக்கனமான இன்டெர்நேஷனல் பயணங்களில், வனவிலங்குகள் மற்றும் வனப்பகுதியை நேசிப்பவர்களுக்கு கென்யா சிறந்த தேர்வாகும். ஆப்பிரிக்காவின் மையப்பகுதியில் அமைந்துள்ள கென்யா, ஜீப்ரா போன்ற அரிய வனவிலங்குகளுடன் மிகவும் அழகான அமைப்புகளை வழங்குகிறது. ஆப்பிரிக்காவின் பூர்வீக பழங்குடிகள் சிலரின் தாயகமான கென்யாவும் ஆப்பிரிக்காவின் நாடித்துடிப்பை உணர ஒரு சிறந்த இடமாகும்.
உணவு மற்றும் தங்குமிடம்: கென்யாவில் உணவின் விலை அதிகம் இல்லை. ஒரு நாள் முழுவதும் உணவுக்கான மொத்த செலவு ஒரு நபருக்கு ரூ.2,000க்குள் இருக்கும். தங்குமிடச் செலவும் நாளொன்றுக்கு ரூ.2,000 வரை இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
விசா மற்றும் விசா ஃபீ:
ஃப்ளைட் காஸ்ட்: புதுடெல்லியில் இருந்து கென்யாவின் தலைநகரான நைரோபிக்கு ஒரு சுற்றுப் பயணம் ரூ.30,000க்கு மேல் தொடங்குகிறது.
பார்க்க வேண்டிய முக்கிய இடங்கள்: சஃபாரிக்கு இணையான நாடான கென்யாவில் இன்னும் நிறைய சலுகைகள் உள்ளன. இந்த இடம் காதல் மற்றும் சாகச உணர்வை பின்வருவனவற்றுடன் வழங்குகிறது -
டிராவல் இன்சூரன்ஸ்: இந்தியாவில் இருந்து பயணம் செய்ய உலகின் சிக்கனமான நாடுகளில் ஒன்றான கென்யாவிற்கு டிராவல் இன்சூரன்ஸ் வைத்திருப்பது கட்டாயமில்லை. இருப்பினும், இந்த நாட்டிற்கு செல்லும் போது போது சிறந்த பாதுகாப்பைக் கொண்டிருப்பது சிறந்தது, மேலும் டிராவல் இன்சூரன்ஸை ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு வெறும் ரூ.177 (18% ஜி.எஸ்.டி நீங்கலாக) என்ற பிரீமியம் முதல் பெறலாம்.
குறிப்பு– விசா மற்றும் டிராவல் இன்சூரன்ஸ் காஸ்ட்டை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் ஓவர்ஆல் காஸ்ட் எஸ்டிமெட் கணக்கிடப்பட்டுள்ளது.
நீங்கள் வெளிநாடு செல்ல நினைத்தால், விடுமுறையை முன்கூட்டியே திட்டமிடத் தொடங்குவது நல்லது. இது செலவுகளைக் குறைப்பது மட்டுமல்லாமல், ஆராய்ச்சி செய்யவும், ஒரு இடத்தைப் பார்வையிட சிறந்த நேரத்தைக் கண்டறியவும் உங்களை அனுமதிக்கும்.
பயணத்தின் போது கண்டிப்பாக டிராவல் இன்சூரன்ஸ் பாலிசியை பெறுவது குறித்து பரிசீலிக்க வேண்டும். இந்தியாவிலிருந்து விலையுயர்ந்த இடமாக இருந்தாலும் சரி, சிக்கனமான இடமாக இருந்தாலும் சரி, ஒரு இன்சூரன்ஸ் பாலிசி வைத்திருப்பது குறிப்பாக ஏதேனும் திடீர் அவசரநிலை ஏற்பட்டால் உதவுகிறது.
வெளிநாட்டில் உங்கள் விடுமுறைக்காக எந்தவொரு டிராவல் இன்சூரன்ஸ் பாலிசியையும் வாங்குவதற்கு முன், அத்தகைய திட்டங்களால் வழங்கப்படும் பல்வேறு நன்மைகளை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். எண்ணற்ற பெனிஃபிட்கள் கீழே விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளன, அத்தகைய பாலிசிகளின் அவசியத்தை வலியுறுத்துகின்றன.
மெடிக்கல் செக்கியூரிட்டி: திடீர் மருத்துவ அவசரநிலைகள் எந்த நேரத்திலும் வரலாம் என்றாலும், விடுமுறையில் இருக்கும்போது இது குறிப்பாக தொந்தரவாக இருக்கும். சுற்றுலாப் பயணிகளோ, மருத்துவ அவசரத் தேவைகளுக்காக மன உளைச்சலில் இருப்பதில்லை அல்லது புதிய இடத்தில் மருத்துவ வசதிகளைப் பற்றி ஒரு பயணிக்கும் தெரியாது. டிஜிட் வழங்கும் இன்சூரன்ஸ் பாலிசிகள் ஆக்சிடென்டல் மெடிக்கல் ட்ரீட்மென்ட்களை மட்டும் வழங்குவதில்லை; அவை அவசர காலங்களில் வெளியேற்றத்தையும் வழங்குகின்றன.
லக்கேஜ் பாதுகாப்பு: போக்குவரத்தில் ஏதேனும் தாமதம் அல்லது லக்கேஜ் இழப்பு ஏற்பட்டால், பயணங்களை உள்ளடக்கிய இன்சூரன்ஸ் பாலிசிகள் உடமைகளின் விலையையும் கவர் செய்கின்றன.
சிக்கனமான பிரீமியம்: டிஜிட் பாலிசிகளுக்கான பிரீமியம் மிகவும் சிக்கனமானது, இது மிகவும் வசதியான பாதுகாப்பு பிளான்களில் ஒன்றாகும்.
வசதியான கிளைம்: இன்சூரன்ஸ் கிளைம்களுடன் மீண்டும் மீண்டும் சிக்கல் என்னவென்றால், இது ஒரு நீண்ட கால செயல்முறையாகும். இருப்பினும், டிஜிட்டை பொறுத்தவரை, உங்கள் ஸ்மார்ட்போனின் உதவியுடன் கிளைமை தாக்கல் செய்வதற்கான எளிதான செயல்முறையை நாங்கள் வழங்குகிறோம். இது முழு செயல்முறையையும் விரைவாகவும் வசதியாகவும் ஆக்குகிறது. எங்கள் கட்டணமில்லா கிளைம் எண்ணுக்கு (+917303470000) நீங்கள் ஒரு மிஸ்டு கால் கொடுக்கலாம், மேலும் டிஜிட் பிரதிநிதிகள் 10 நிமிடங்களுக்குள் உங்களை மீண்டும் அழைப்பார்கள்.
மற்றொரு வசதி என்னவென்றால், நாங்கள் 24 மணி நேரமும் ஆக்டிவாக இருப்பதால் எந்த நேரத்திலும் கிளைம்களை முன்வைக்கலாம், ஆனால் தேசிய விடுமுறை நாட்களிலும் கிளைம் செய்யலாம். உலகெங்கிலும் உள்ள 179 நாடுகளில் பரவியுள்ள நெட்வொர்க்கைக் கொண்டிருப்பதில் நாங்கள் பெருமையடைகிறோம்.
ஃப்ளைட் டிலே கவர்: விமானம் தாமதத்திற்கு டிஜிட் பிளாட் இழப்பீட்டை வழங்குகிறது. 4 மணி நேர விமான தாமதத்திற்கு ரூ.500 கட்டணமும், நீண்ட நேர தாமதத்திற்கு ரூ.1,000 வரை கட்டணமும் வழங்கப்படுகிறது.
கூடுதல் டிடெக்டிபள் இல்லை: உங்கள் பயணத்திற்கு டிஜிட்டிலிருந்து இன்சூரன்ஸ் பாலிசி வைத்திருப்பதன் ஒரு முக்கிய நன்மை என்னவென்றால், இது அதன் வாடிக்கையாளர்களுக்கு ஜீரோ டிடெக்டிபள் பாலிசியை வழங்குகிறது. திறம்பட, கிளைம் செய்யும்போது நீங்கள் எந்த பணத்தையும் செலவழிக்க வேண்டியதில்லை என்பதை இது உறுதி செய்கிறது.
மேலும், 94.7% கிளைம்களை 15 நாட்களுக்குள் தீர்த்து வைத்த சாதனையை டிஜிட் கொண்டுள்ளது.
கூடுதல் பாதுகாப்பு: டிராவல் இன்சூரன்ஸ் பாலிசியில் வழங்கப்படும் கூடுதல் பாதுகாப்புகளில் பயண ரத்து, சாகச விளையாட்டுகளால் ஏற்படும் காயம் போன்றவற்றால் ஏற்படும் செலவுகளை ஈடுகட்டுவது அடங்கும். பாஸ்போர்ட் இழப்பு அல்லது தினசரி அவசர பணம் போன்ற பிரச்சனைகள் கூட டிஜிட்டால் வழங்கப்படுகின்றன.
ஒரு டிராவல் இன்சூரன்ஸ் பாலிசியை வைத்திருப்பது எந்தவொரு அவசரநிலையின் மன அழுத்தத்தையும் கவலையையும் அகற்றுவதால் விடுமுறையை மிகவும் சுவாரஸ்யமாக மாற்றும். இந்தியாவிலிருந்து விலையுயர்ந்த அல்லது சிக்கனமான வெளிநாட்டு பயணமாக இருந்தாலும், அத்தகைய பாலிசிகளை வாங்குவது பயணத்தை திறம்பட பாதுகாப்பானதாக ஆக்குகிறது.