போர்ட் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி ஆன்லைன்

Zero Paperwork. Quick Process.

இந்தியாவில் ஹெல்த் இன்சூரன்ஸை போர்ட் செய்வது: அட்வான்டேஜ்கள் & எப்படி டிரான்ஸ்பர் செய்வது?

ஹெல்த் இன்சூரன்ஸ் போர்டபிலிட்டி என்றால் என்ன?

ஹெல்த் இன்சூரன்ஸ் போர்டபிலிட்டி என்பது தற்போது நீங்கள் செலுத்தி கொண்டிருக்கும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியை நீங்கள் விரும்பும் வேறொரு இன்சூரன்ஸ் வழங்குநருக்கு மாற்றும் செயல்முறையே ஆகும். இது அப்படியே நீங்கள் ஒரு தொலைத்தொடர்பு சேவை வழங்குநரிடமிருந்து மற்றொருவருக்கு மாறுவதை போன்று எளிமையானது!

இருப்பினும், இதை வெறும் இன்சூரர் மாற்றமாக மட்டும் எண்ண வேண்டாம். ஹெல்த் இன்சூரன்ஸ் போர்ட்டபிலிட்டியின் சிறப்புத் தன்மை என்னவென்றால், நீங்கள் சிறந்த திட்டத்திற்கு மாற்றப்படுவது மட்டுமல்லாமல், உங்கள் வெயிட்டிங் பீரியட்ஸ் (காத்திருப்பு காலங்கள்) மற்றும் நோ கிளைம் போனஸும்  மாற்றப்படும். எனவே, உங்கள் வெயிட்டிங் பீரியட்ஸ் (காத்திருப்பு காலங்களை)  தொடக்கத்திலிருந்து மீண்டும் துவங்குதல் அல்லது இதுவரை சேர்ந்திருக்கும் உங்கள் குமுலேட்டிவ் போனஸை இழத்தல் போன்றவை நடைபெறாது.

டிஜிட் வழங்கும் ஹெல்த் இன்சூரன்ஸின் சிறப்பு என்ன?

எளிமையான ஆன்லைன் செயல்முறைகள் - ஹெல்த் இன்சூரன்ஸினை வாங்குவதில் இருந்து கிளைம் செய்வது வரை எந்தவொரு விஷயத்திற்கும் ஆவணங்கள் தேவையில்லை. இந்த செயல்முறைகள் அனைத்தும் எளிமையானது மற்றும் எந்த தொந்தரவும் இல்லாதது. கிளைம் செய்வதற்கு கூட நீங்கள் எந்தவொரு ஆவணங்களையும் சமர்ப்பிக்க தேவையில்லை! 

எளிமையான ஆன்லைன் செயல்முறைகள் - ஹெல்த் இன்சூரன்ஸினை வாங்குவதில் இருந்து கிளைம் செய்வது வரை எந்தவொரு விஷயத்திற்கும் ஆவணங்கள் தேவையில்லை. இந்த செயல்முறைகள் அனைத்தும் எளிமையானது மற்றும் எந்த தொந்தரவும் இல்லாதது. கிளைம் செய்வதற்கு கூட நீங்கள் எந்தவொரு ஆவணங்களையும் சமர்ப்பிக்க தேவையில்லை! 

அறை வாடகைக்கு கட்டுப்பாடு இல்லை - ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமான விருப்பங்கள் இருக்கும் என்பதை நாங்கள் புரிந்து கொள்கிறோம். அதனால் தான் எங்களிடம் அறை வாடகைக்கு எந்தவொரு கட்டுப்பாடும் இல்லை. உங்களுக்கு விருப்பமான மருத்துவமனை அறையை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.

எஸ்ஐ வாலட் பயன்- உங்கள் பாலிசி காலத்தின்போது இன்சூர் செய்யப்பட்ட தொகை காலியாகிவிட்டால், அதை நாங்கள் உங்களுக்காக மீண்டும் வழங்குவோம்.

எந்த மருத்துவமனையில் வேண்டுமானாலும் சிகிச்சை பெறுங்கள்  - பணமில்லா சிகிச்சை அல்லது ரீஇம்பர்ஸ்மென்டை தேர்வு செய்ய நீங்கள் இந்தியாவில் உள்ள எங்களது 10500+ நெட்வொர்க் ஹாஸ்பிட்டல்களில் இருந்து தேர்வு செய்யலாம்.

 உடல்நல பலன்கள்  - சிறந்த ஆரோக்கியம் மற்றும் உடல்நல பார்ட்னர்களுடன் இணைந்து டிஜிட் ஆப்-ல் பிரத்யேகமான உடல்நல பலன்களைப் பெறுங்கள்.

எனது ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை டிஜிட்டிற்கு மாற்றுவதற்கான செயல்முறை என்ன?

  • படி 1: மேலே கொடுக்கப்பட்டுள்ள போர்ட் டு டிஜிட் ஹெல்த் என்பதைக் கிளிக் செய்யவும்
  • படி 2: உங்கள் பெயர் மற்றும் மொபைல் எண்ணை ஆன்லைனில் உள்ளிடவும்.
  • படி 3: அவ்வளவுதான், இதுபோதும். மீதியை எங்களிடம்  விடுங்கள்! உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸை வெற்றிகரமாக மாற்ற உதவும் எங்கள் ஹெல்த் நிபுணர்களில் ஒருவரிடமிருந்து 48 மணி நேரத்திற்குள் உங்களுக்கு அழைப்பு வரும்

டிஜிட் உடனான ஹெல்த் இன்சூரன்ஸ் போர்ட்பிலிட்டிக்கு தேவையான ஆவணங்கள் யாவை?

  • நீங்கள் போர்ட் செய்ய விரும்பும் தற்போதைய ஹெல்த் இன்சூரன்ஸ் வழங்குநரிடமிருந்து உங்கள் தற்போதைய ஹெல்த் இன்சூரன்ஸின் பாலிசிக்கான அட்டவணையை சேகரிக்கவும்.
  • உங்கள் அடையாளச் சான்று
  • உங்கள் மருத்துவ விவரங்கள் மற்றும் கிளைம் ஹிஸ்டரி போன்ற பிற  விவரங்கள் அழைப்பின் மூலம் உங்களிடமிருந்து கேட்டுக்கொள்ளப்படும்.

உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியில் நீங்கள் எதையெல்லாம் போர்ட் செய்யலாம்?

அனைத்து தற்போதைய இன்சூர்ட் உறுப்பினர்கள்

தற்போதைய இன்சூர் செய்யப்பட்ட தொகை

நீங்கள் இதுவரை பெற்றிருந்த அக்குமுலேட்டட் குமுலேட்டிவ் போனஸ்

உங்கள் ப்ரீ-எக்சிஸ்டிங் நோய் வெயிட்டிங் பீரியட் (காத்திருப்பு காலம்)

உங்கள் குறிப்பிட்ட நோய்க்கான வெயிட்டிங் பீரியட் (காத்திருப்பு காலம்)

ஒரு ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை போர்ட் செய்வதற்கான ஒரு பாலிசிதாரரின் (அதாவது நீங்கள்!) உரிமைகள்

ஐஆர்டிஏஐ (IRDAI) இன் படி, ஒவ்வொரு பாலிசிதாரருக்கும் அவரவர் பாலிசியை (தனிநபர் மற்றும் குடும்ப சுகாதார காப்பீட்டுக் கொள்கைகளுக்குப் பொருந்தும்) ஒரு பொது அல்லது சிறப்பு மருத்துவ இன்சூரன்ஸ் வழங்குநரிடமிருந்து வேறொன்றிற்கு மாற்றுவதற்கான  உரிமை உண்டு.

ஐஆர்டிஏஐ (IRDAI) வழிகாட்டுதல்களின்படி, புதிய ஹெல்த் இன்சூரன்ஸ் வழங்குநர் குறைந்தபட்சம் அதே சம் இன்சூர்ட் தொகைக்குரியவற்றை பாலிசிதாரருக்கு வழங்க வேண்டும்.

குறிப்பாக, புதிய ஹெல்த் இன்சூரன்ஸ் வழங்குநர், காத்திருப்பு காலம்/வெயிட்டிங் பீரியட் ஏற்கனவே முடிந்துவிட்ட பாலிசிதாரருக்கு அதற்குரிய பலன்களை வழங்குவதற்குப் பொறுப்பாவார், அதாவது ஹெல்த் இன்சூரன்ஸ் போர்டபிலிடியில்- ஒருவர் தங்களின் அக்குமுலேட்டட் நோ கிளைம் போனஸ் மற்றும் காத்திருப்பு காலங்களையும்/வெயிட்டிங் பீரியட்களையும் மாற்ற வேண்டும்.

ஐஆர்டிஏஐ (IRDAI) வழிகாட்டுதல்களின்படி, அந்தந்த ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி வெற்றிகரமாக மாற்றப்பட்டதை உறுதிசெய்வது புதிய மற்றும் பழைய இன்சூரர்களின் பொறுப்பாகும்.

ஐ.ஆர்.டி.ஏ.ஐ(IRDAI)-ஆல் அமைக்கப்பட்டுள்ள ஹெல்த் இன்சூரன்ஸ் போர்ட்டபிளிட்டி விதிகள் - உங்களுக்காக எளிமைப்படுத்தப்பட்டுள்ளன

பாலிசி வகை பற்றி

உங்கள் இன்சூரன்ஸ் பாலிசியை ஒரே மாதிரியான பாலிசிக்கு மட்டுமே நீங்கள் போர்ட் செய்ய முடியும். அதாவது, நீங்கள் மாறும்போது கவரேஜ், திட்டம் அல்லது பாலிசி வகையை முழுமையாக மாற்ற முடியாது.

இன்சூரன்ஸ் கம்பெனி பற்றி

பொதுவாக இன்சூரன்ஸ் நிறுவனங்கள் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் அல்லது ஜெனரல்  இன்சூரன்ஸ் நிறுவனங்கள் என வகைப்படுத்தப்படுகின்றன. நீங்கள் போர்ட் செய்யும் போது, ​​நீங்கள் அதே வகையான நிறுவனத்திற்கு போர்ட் செய்யப்படுகிறீர்களா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். அத்துடன், டிஜிட் என்பது ஜெனரல்  இன்சூரன்ஸ் நிறுவனம்.

இடைவெளிகள் பற்றி

உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸை நீங்கள் போர்ட் செய்ய விரும்பினால், புதிப்பிப்பின் போதே நீங்கள் போர்ட் செய்ய வேண்டும், இவற்றுடன் நீங்கள் காலாவதியான பாலிசி காலங்களை வைத்திருக்க முடியாது.

உங்கள் இன்சூரன்ஸ் கம்பெனியிடம் தெரிவிப்பது பற்றி

விடைபெறுவது முக்கியம். அதனால், உங்கள் பாலிசியை போர்ட் செய்ய நீங்கள் திட்டமிட்டுள்ளீர்கள் என்பதை உங்கள் தற்போதைய இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு அறிவிப்பது முக்கியமாகிறது. இது உங்கள் பாலிசி புதுப்பிப்பு செய்யப்படுவற்கு குறைந்தபட்சம் 45 நாட்களுக்கு முன்பே எழுத்துப்பூர்வமாக செய்யப்பட்டிருக்க வேண்டும்.

உங்கள் தற்போதைய இன்சூரன்ஸ் கம்பெனியின் பதில் பற்றி

நீங்கள் உங்கள் வேலையைச் செய்து முடித்தப்பிறகு, உங்கள் தற்போதைய இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு தெரிவித்தவுடன், உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸை போர்ட் செய்வதற்கான உங்கள் கோரிக்கையை அவர்கள் ஏற்றுக்கொள்வதற்கு மூன்று நாட்கள் அவகாசம் உள்ளது.

போர்டிங் கட்டணம் வசூலிப்பது பற்றி

ஐஆர்டிஏஐ (IRDAI) விதிமுறைகளின்படி, எந்தவொரு இன்சூரன்ஸ் நிறுவனமும் (உங்கள் தற்போதைய அல்லது நீங்கள் போர்ட் செய்ய விரும்பும் புதிய நிறுவனம்) உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ்  பாலிசியை போர்ட் செய்யும் செயல்முறைக்கு எந்தக் கட்டணத்தையும் வசூலிக்க முடியாது.

பிரீமியத்தில் ஏற்படும் மாற்றங்கள் பற்றி

ஒவ்வொரு இன்சூரரும் அவரவருடைய சொந்த சேவைப் பலன்களுடன் வருவதால், அனைத்து ஹெல்த் இன்சூரன்சின் பிரீமியமும் வெவ்வேறு காரணிகளின் அடிப்படையில் இன்சூரன்ஸ் நிறுவனத்தால் தீர்மானிக்கப்படுகிறது. எனவே, உங்கள் தற்போதைய இன்சூரரிடமிருந்து புதிய இன்சூரரருக்கு பிரீமியத்தில் மாற்றம் ஏற்படலாம் - அது இதே போன்ற பாலிசியாக இருந்தாலும் கூட.

கிரேஸ் பீரியட் பற்றி

உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் போர்டபிலிட்டி செயல்பாட்டின் கீழ் இருக்கும் போது, ​​கூடுதல் கிரேஸ் பீரியட்களை பெறுவதற்கான அனுமதி உங்களுக்கு வழங்கப்படுகிறது, அதாவது உங்கள் பழைய பாலிசி செயல்பாட்டில் இருந்த நாட்களின் அடிப்படையில் உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் வசூலிக்கப்படும்.

உங்கள் சம் இன்சூர்டு மற்றும் கவரேஜ் அளவு பற்றி

நீங்கள் உங்கள் பாலிசியை போர்ட் செய்யும் போது உங்கள் இன்சூரன்ஸ்த் தொகையை அதிகரிக்கவும் நீங்கள் தேர்வு செய்யலாம். இருப்பினும், இது உங்கள் புதிய ஹெல்த் இன்சூரன்ஸ் வழங்குநரால் அங்கீகரிக்கப்பட வேண்டும்.

காத்திருப்பு காலம் பற்றி

பொதுவாக, உங்களின் முந்தைய இன்சூரரைக் காட்டிலும் வேறுபட்ட வெயிட்டிங் பீரியடுடன் (காத்திருப்பு காலத்துடன்) வரும் புதிய கவரேஜை நீங்கள் தேர்வுசெய்தல் தவிர, உங்கள் பாலிசியை போர்ட் செய்யும் போது வெயிட்டிங் பீரியட் பாதிக்கப்படாது. எடுத்துக்காட்டாக- பெரும்பாலான ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டங்களிள் குறிப்பிட்ட நோய்கள் அல்லது ஏற்கனவே இருக்கும் (ப்ரீ-எக்சிஸ்டிங்) நோய்களுக்கான உங்கள் வெயிட்டிங் பீரியட் ஒரு பகுதியாக இருப்பதால் அது பாதிக்கப்படாமல் இருக்கலாம். இருப்பினும், போர்டிங்கின் போது நீங்கள் மெட்டர்னிட்டி கவரைத் தேர்வுசெய்திருந்தால், அதற்கான வெயிட்டிங் பீரியடை நீங்கள் உங்கள் புதிய இன்சூரரிடம் முடிக்க வேண்டும்.

உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை எப்போது போர்ட் செய்ய வேண்டும்?

உங்கள் தற்போதைய ஹெல்த் இன்சூரன்ஸ் வழங்குனரின் சேவைகளில் நீங்கள் மகிழ்ச்சியாக இல்லாதபோது

அதன் சேவை, மோசமான அனுபவம், வருடாந்திர பிரீமியம் விலை அல்லது இந்தத் திட்டம் உங்களுக்கும் உங்கள் ஹெல்த்கேர் தேவைகளுக்கும் சரியாகப் பொருந்தாதது போன்ற காரணங்களால் உங்களின் தற்போதைய ஹெல்த் இன்சூரன்ஸில் நீங்கள் மிகவும் திருப்தியடையாமல் இருக்கலாம். 

இந்த நிலையில், ரினீவல் செய்வதற்கான நேரம் வரும்போது (உங்கள் தற்போதைய ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியின் காலாவதி தேதிக்கு குறைந்தது 45 நாட்களுக்கு முன்னதாக) நீங்கள் உங்கள் விருப்பங்களை மதிப்பீடு செய்து, உங்களுக்கும் உங்கள் எதிர்பார்ப்புகளுக்கும் ஏற்றதாகத் தோன்றும் திட்டத்திற்கும் இன்சூரருக்கும் உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை போர்ட் செய்யலாம்.

உங்களுக்கு மாற்று சிறந்த பிளான்கள் இருக்கும்போது!

உங்களின் தற்போதைய ஹெல்த் இன்சூரன்ஸ் வழங்குநர் சிறந்தவராக இருந்தாலும், உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் தேவையான மதிப்புகள் நிறைந்த பலன்களை உங்களுக்கு வழங்காமல் இருக்கும் சூழ்நிலையும் ஏற்படலாம்.

எடுத்துக்காட்டுக்கு: ஒருவேளை நீங்கள் உங்கள் பெற்றோருக்கான ஆயுஷ் பெனிஃபிட் அல்லது உங்களுக்காக மெட்டர்னிட்டி கவரை எதிர்பார்க்கிறீர்கள், ஆனால் உங்கள் தற்போதைய ஹெல்த் இன்சூரன்ஸ் நீங்கள் விரும்பியவற்றை கவர் செய்வதில்லை.

இம்மாதிரி சூழ்நிலைகளில், குறைந்தபட்சம் மூன்று இன்சூரர்களிடமிருந்து நீங்கள் எதிர்பார்க்கும் பலன்களை மதிப்பீடு செய்து, உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை நீங்கள் நம்பிக்கைக்கு பாத்திரமான வழங்குநர் மூலம் போர்ட் செய்யவும்.

உங்கள் தற்போதைய பாலிசியின் காலாவதித் தேதிக்கு 45-நாட்களுக்கு முன்னதாக இந்தச் செயல்முறையைத் தொடங்குதலை  உறுதிசெய்து கொள்ளுங்கள், எனவே உங்கள் போர்டபிலிட்டி செயல்முறை சரியான நேரத்தில் முடிக்கப்படும்.

நீங்கள் டிஜிட்டல் ஃபிரண்ட்லியான ஒரு ஹெல்த் இன்சூரன்ஸுக்கு மாற விரும்பினால்

ஒருவேளை நீங்கள் நீண்ட காலமாக ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை வைத்திருந்தால், உங்கள் தற்போதைய ஹெல்த் இன்சூரன்ஸ் வழங்குநர் டிஜிட்டல் ஃபிரண்ட்லி அல்லது கான்டாக்ட்லெஸ்ஸாக இருப்பதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றது, மேலும் நீண்ட, பிரச்சனை தரும்  செயல்முறைகள் உங்கள் நேரத்தை அதிகம் எடுத்துக்கொள்பவையாக இருக்கும்.

இம்மாதிரியான சூழ்நிலையில், உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸை டிஜிட்டல் ஹெல்த் இன்சூரன்ஸ் ஆப்ஷனுக்கு போர்ட் செய்யுங்கள், அதனால் நீங்கள் மீண்டும் அதே பிரச்சனைகளை எதிர்கொள்ளும் சூழ்நிலை ஏற்படாது.

உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸை போர்ட் செய்வதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டிய 3 விஷயங்கள்

1. உங்கள் தற்போதைய பாலிசியின் காலாவதி தேதி குறித்து எச்சரிக்கையாக இருங்கள்!

நேரமே எல்லாவற்றிற்கும் முக்கியமானது, ஆனால் இது குறிப்பாக, ஹெல்த் இன்சூரன்ஸ் போர்டிங் என்று வரும்போது உண்மையாக இருக்கிறது. நினைவில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்களில் ஒன்று, உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸை ரினீவ் செய்யும் போது மட்டுமே உங்கள்ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை நீங்கள் போர்ட் செய்ய முடியும்.

மிக முக்கியமாக, நீங்கள் இதற்கான செயல்முறையை விரைவாகவும் சரியான நேரத்திலும் முடிக்க விரும்பினால், உங்கள் தற்போதைய இன்சூரருக்கு  குறைந்தபட்சம் 45 நாட்களுக்கு முன்பே தெரியப்படுத்த வேண்டும். உங்கள் பாலிசி காலாவதியானதும், வேறு வழங்குநருக்கு உங்களால் போர்ட் செய்ய முடியாது.

2. நிராகரிப்புகளைத் தவிர்க்க உங்கள் புதிய ஹெல்த் இன்சூரன்ஸ் வழங்குநரிடம் நேர்மையாக இருங்கள்

எத்தகைய உறவிலும் வெளிப்படைத்தன்மை என்பது மிக முக்கியமானது. அதேபோல், உங்கள் புதிய ஹெல்த் இன்சூரன்ஸ் வழங்குநருடன் உங்கள் உறவைத் தொடங்கும்போது, ​​எதிர்காலத்தில் நிராகரிப்புகள் அல்லது பிரச்சனைகளைத் தவிர்க்க உங்கள் கிளைம் வரலாறு மற்றும் மருத்துவ வரலாறு என அனைத்தும் அவர்களிடம் விரிவாக கூறி நீங்கள் நேர்மையாக இருப்பதை உறுதி செய்துக்கொள்ளுங்கள்.

3. ஒரே மாதிரியான பிளான்கள் கூட பல்வேறு பெனிஃபிட்களுடன் வரலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்

நீங்கள் அதே மாதிரியான ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டத்திற்குச் செல்வதற்கான வாய்ப்புகள் இருந்தாலும், இதே மாதிரியான திட்டங்களுக்கு கூட - ஒவ்வொரு இன்சூரரும் பல்வேறு பயன்களுடன் வருவார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

எடுத்துக்காட்டாக, வெவ்வேறு இன்சூரர்களுக்கு வெவ்வேறு அறை வாடகை எவ்வளவு தொகை செலவு செய்யப்பட வேண்டும் என்பதற்கு வரம்புகள் இருக்கும் (அல்லது அறை வாடகை செலவிற்கு எந்த வரம்பும் இல்லை!). எனவே, அனைத்தும் ஒரே மாதிரியாக இருக்கும் என்று நீங்களே யூகித்து கொள்வதற்கு பதிலாக, ஒவ்வொரு பயன்களையும் கவனமாகப் படிப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்!

உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸின் நன்மைகள் மற்றும் தீமைகள் என்ன?

நன்மைகள் தீமைகள்
பயன்களை தொடர்ந்து பெற்று மகிழுங்கள் - உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை போர்ட் செய்வதன் மிகப்பெரிய நன்மைகளில் ஒன்று, நீங்கள் எந்தப் பலன்களையும் இழக்க வேண்டிய அவசியமில்லை. எடுத்துக்காட்டாக: உங்கள் புதிய ஹெல்த் இன்சூரர் குறிப்பிட்ட நோய்களுக்கு 3 ஆண்டுகள் காத்திருப்பு காலத்தை/வெயிட்டிங் பீரியடை கொண்டிருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம், நீங்கள் ஏற்கனவே உங்களின் முந்தைய பிளானில் 2 வருடங்கள் வைத்திருக்கிறீர்கள் - அப்படியெனில் போர்ட் செய்யும் போது அந்த குறிப்பிட்ட நோய்களுக்கு நீங்கள் ஒரு வருடம் மட்டுமே காத்திருந்தால் போதும், இதுவே நீங்கள் ஒரு புதிய திட்டத்தை வாங்கினால் காத்திருப்பு காலங்களை/வெயிட்டிங் பீரியடை மீண்டும் முதலிருந்து தொடங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்! புதுப்பிப்பு செய்யும் போது மட்டுமே நீங்கள் போர்ட் செய்ய முடியும் - எனவே, போர்டிங் அபாரமானது என்று நினைக்கும் போது - அதன் தீமைகளில் ஒன்று, உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸை புதுப்பிப்பு செய்யும் நேரம் வரும்போது மட்டுமே உங்களால் உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸை போர்ட் செய்ய முடியும். இருப்பினும், இதோ உங்களுக்கான டிப்ஸ் - நீங்கள் உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸை போர்ட் செய்ய விரும்பினால், உங்கள் ரினீவலுக்கு 2 மாதங்களுக்கு முன்பே உங்கள் விருப்பங்களை ஆராய்ந்து மதிப்பீடு செய்தப்பிறகு உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிக்கு போர்ட் செய்யுங்கள்.
நோ கிளைம் போனஸை வைத்திருக்கும் - ஒருவரும் அவரது நோ கிளைம் போனஸை விட விரும்ப மாட்டர்கள், இன்சூரன்ஸ் வழங்குநர்களுக்கும் அது தெரியும் என்று நான் நினைக்கிறேன்! அதனால்தான், உங்கள் ஹெல்த் போனஸை போர்ட் செய்வதன் நன்மைகளில் ஒன்றாக, உங்கள் நோ கிளைம் போனஸை நீங்கள் இழக்கும் சூழ்நிலை ஏற்படாது, அது உங்கள் புதிய ஹெல்த் போனஸ் பாலிசியில் அப்படியே சேர்க்கப்படும். உங்கள் பிளானில் ஏற்படும் வரம்புக்குட்பட்ட மாற்றங்கள் - உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் பிளானை ஒரு சிறந்த ஹெல்த் இன்சூரர் மற்றும் பிளானுக்கு உங்களால் போர்ட் செய்ய முடியும் போது- உங்களால் பல மாற்றங்களைச் செய்ய முடியாது மேலும் இதேபோன்ற பிளானிற்கு செல்ல வேண்டியிருக்கும். பிளான் மற்றும் கவரேஜில் ஏற்படும் அதிக மாற்றங்கள் அல்லது கஸ்டமைசேஷன்களுக்கு - உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளும் அதற்கேற்ப மாற்றப்படும்.
இன்சூரரில் மாற்றம் இருந்தாலும் உங்கள் வெயிட்ங் காலம் காத்திருப்பு காலம்) பாதிக்கப்படாது - மேலே குறிப்பிட்டுள்ளபடி, போர்ட்டிங் செய்யும் போது தொடர்ச்சியான பலன்களை நீங்கள் அனுபவிப்பதால், உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸை போர்ட் செய்யும் போது உங்கள் காத்திருப்பு காலம்/வெயிட்ங் காலம் பாதிக்கப்படாது. உங்கள் முந்தைய ஹெல்த் இன்சூரன்ஸ் வழங்குனருடன் நீங்கள் எவ்வளவு நேரம் முடித்துள்ளீர்கள் என்பதன் அடிப்படையில் அவை சேர்க்கப்படுகின்றன. ஒருவேளை உங்களின் முந்தைய பிளானுடன் ஒப்பிடுகையில் விரிவான கவரேஜ் தேவைப்பட்டால் அதிக பிரீமியம் ஆகும் - ஒருவேளை உங்கள் முந்தைய இன்சூரரிடம் இருந்ததை விட மிகவும் வித்தியாசமான பிளானிற்கும் அதிக கவரேஜுக்கும் செல்ல வேண்டும் என நீங்கள் முடிவு செய்திருந்தால், உங்கள் பிரீமியமும் அதற்கேற்ப மாறுபடலாம்.

இந்தியாவில் ஹெல்த் இன்சூரன்ஸ் போர்ட்டபிளிட்டி பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

பாலிசிதாரர் எப்போது போர்ட்டபிளிட்டிக்கு விண்ணப்பிக்கலாம்?

ஹெல்த் இன்சூரன்ஸ் புதுப்பித்தல் தேதிக்கு 60 நாட்களுக்கு முன்பாக நீங்கள் போர்ட்டபிளிட்டிக்காக விண்ணப்பிக்கலாம்.

நான் போர்ட் செய்யும் போது எனது காத்திருப்பு காலம் பாதிக்கப்படுமா?

இல்லை, போர்டிங்கின் பெனிஃபிட் என்னவென்றால், நீங்கள் ஒரு புதிய ஹெல்த் இன்சூரன்ஸிற்கு மாறினாலும், உங்கள் காத்திருப்பு காலம் ரத்து செய்யப்படுவதில்லை, அதாவது உங்கள் காத்திருப்பு காலத்தை தொடக்கத்திலிருந்தே தொடங்க வேண்டியதில்லை.

உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை போர்ட் செய்யும் போது நீங்கள் எதையாவது இழக்கிறீர்களா?

இல்லை, போர்ட்டபிளிட்டியின் முழு நோக்கமும், உங்கள் திரட்டப்பட்ட ஒட்டுமொத்த போனஸ் மற்றும் நீங்கள் கடந்த காத்திருப்பு காலம் போன்ற விஷயங்களை இழக்காமல் இருப்பதே ஆகும். 

உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை போர்ட்டிங் செய்வதை எப்போது கருத்தில் கொள்ள வேண்டும்?

சிறந்த ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி இருப்பதாக நீங்கள் நினைத்தால், சிறந்த பெனிஃபிட்கள் கிடைக்கின்றன எனில், உங்கள் அடுத்த ரீனியூவல் காலத்தில் உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை போர்ட் செய்வதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.  

ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை போர்ட் செய்யும் போது எதிர்கொள்ளும் சில பிரச்சனைகள் என்ன?

மக்கள் தங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை போர்ட் செய்யும் போது எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்று நிராகரிக்கப்படுவதற்கான வாய்ப்பு. ஏனென்றால், ஒவ்வொரு ஹெல்த் இன்சூரன்ஸ் வழங்குநருக்கும் போர்ட்டபிளிட்டி கோரிக்கையை நிராகரிக்க அல்லது ஏற்க உரிமை உள்ளது. அவர்கள் இந்த முடிவுகளை, முதன்மையாக, உங்கள் கிளைம் வரலாறு, வழங்கப்பட்ட மருத்துவ விவரங்கள், இன்சுர் செய்யப்பட்ட உறுப்பினர்களின் வயது போன்ற பல அளவுருக்களை சார்ந்து எடுக்கிறார்கள்.

விருப்பமான ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தால் உங்கள் போர்ட்டபிளிட்டி கோரிக்கை நிராகரிக்கப்படுமா?

ஆம், ஒவ்வொரு ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கும் போர்ட்டபிளிட்டி கோரிக்கையை நிராகரிக்க உரிமை உண்டு. இருப்பினும், பெரும்பாலான உண்மையான சந்தர்ப்பங்களில் மற்றும் குறிப்பாக கிளைம் வரலாறு இல்லாத வாடிக்கையாளர்களைப் பொறுத்தவரை, போர்ட்டபிளிட்டி கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன 😊 

நான் எனது ஹெல்த் இன்சூரன்ஸை ஆண்டின் நடுப்பகுதியில் போர்ட் செய்யலாமா?

இல்லை, உங்களின் தற்போதைய ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி ரீனியூவலின் போது மட்டுமே உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸை போர்ட் செய்ய முடியும். நீங்கள் சரியான நேரத்தில் போர்ட் செய்வதை உறுதிசெய்ய, உங்கள் தற்போதைய பாலிசியின் காலாவதி தேதிக்கு குறைந்தது 45 நாட்களுக்கு முன்னர் போர்ட்டபிளிட்டிக்கு விண்ணப்பிக்கவும்.

வருடத்தின் இடையே எனது ஹெல்த் இன்சூரன்ஸை நான் போர்ட் செய்யலாமா?

இல்லை, உங்கள் தற்போதைய ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை ரினீவல் செய்ய வேண்டியிருக்கும் போது மட்டுமே உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸை போர்ட் செய்ய முடியும். நீங்கள் சரியான நேரத்தில் போர்ட் செய்வதை உறுதிசெய்ய, உங்கள் தற்போதைய பாலிசியின் காலாவதி தேதிக்கு குறைந்தது 45 நாட்களுக்கு முன்னர் போர்டபிலிட்டிக்கு விண்ணப்பிக்கவும்.

 

எனது ஹெல்த் இன்சூரன்ஸ் போர்ட்டபிளிட்டி கோரிக்கை நிராகரிக்கப்பட்டால் என்ன நடக்கும், ஏன்?

உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் போர்ட்டபிளிட்டி கோரிக்கை நிராகரிக்கப்பட்டால், அதற்கான காரணங்களை இன்சூரரிடம் கேட்டு, அதை சரிசெய்ய முடியுமா என்று பார்க்கலாம். ஹெல்த் இன்சூரன்ஸ் போர்ட்டபிளிட்டி நிராகரிப்புக்கான சில பொதுவான காரணங்களில் மருத்துவ வரலாறு அல்லது கிளைம் வரலாறு, போர்ட்டபிளிட்டி கோரிக்கை சரியான நேரத்தில் முடிக்கப்படாதது அல்லது உங்கள் முந்தைய ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி ஏற்கனவே காலாவதியாகிவிட்டது போன்ற முழுமையற்ற அல்லது தவறான விவரங்கள் ஆகியவை அடங்கும்.

ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை போர்ட் செய்யும் போது பாலிசிதாரரின் வயது முக்கியமா?

ஆம், மற்ற ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிகளைப் போலவே - உங்கள் வயதும் முக்கியமானது. உங்கள் வயது அதிகம் ஆகும்போது, உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் அதிகமாக இருக்கலாம்.

எனது பிளானை போர்ட் செய்வதற்குப் பதிலாக, இரண்டு வெவ்வேறு ஹெல்த் இன்சூரன்ஸ் வழங்குநர்களிடமிருந்து நான் ஹெல்த் இன்சூரன்ஸை வாங்கலாமா?

ஆம், முடியும். எவ்வாறாயினும், ஏற்கனவே உள்ள உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிக்கு மேல் சிறந்த கவரேஜுக்கான கூடுதல் திட்டமாக சூப்பர் டாப்-அப்க்கு செய்யுமாறு பரிந்துரைக்கிறோம்.

மக்கள் ஏன் தங்கள் ஹெல்த் இன்சூரன்ஸை போர்ட் செய்கிறார்கள்?

பெரும்பாலான மக்கள் தங்கள் தற்போதைய இன்சூரரிடம் சேவை அல்லது ரீனியூவசின் போது பிரீமியம் அதிகரிப்பு அல்லது குறைந்த பிரீமியம் மற்றும் சிறந்த பெனிஃபிட்களுடன் சிறந்த தயாரிப்பைத் தேடும் போது மோசமான அனுபவத்தைப் பெற்றிருந்தால், அவர்களின் ஹெல்த் இன்சூரன்ஸை போர்ட் செய்கிறார்கள்.

போர்டிங்கிற்கு பதிலாக, எனது தற்போதைய ஹெல்த் இன்சூரன்ஸ் வழங்குனருடன் எனது பிளானை மாற்ற முடியுமா?

ஆம்,😊நீங்கள் பொதுவாக, உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் ரீனியூவலின் போது, உங்கள் தற்போதைய ஹெல்த் இன்சூரன்ஸ் வழங்குனருடன் திட்டமிடலாம் மற்றும் கவரேஜ் மாற்றங்களைச் செய்யலாம். இருப்பினும், விதிகள் இன்சூரர்கள் முழுவதும் வேறுபடலாம், எனவே உங்கள் இன்சூரன்ஸ் வழங்குநரைத் தொடர்புகொள்ளவும்.