பெர்சனல் ஆக்சிடன்ட் இன்சூரன்ஸ் பாலிசி

Digit

No Capping

on Room Rent

24/7

Customer Support

Zero

Co-payment

Zero Paperwork. Quick Process.
Your Name
Mobile Number

No Capping

on Room Rent

24/7

Customer Support

Zero

Co-payment

பெர்சனல் ஆக்சிடன்ட் இன்சூரன்ஸ் பாலிசி என்றால் என்ன?

உங்களுக்கு ஏன் பெர்சனல் ஆக்சிடன்ட் இன்சூரன்ஸ் தேவை?

ஏதேனும் எதிர்பாராத விபத்துகள் ஏற்பட்டால், பெர்சனல் ஆக்சிடன்ட் இன்சூரன்ஸ் உங்களையும் உங்கள் அன்புக்குரியவர்களையும் பாதுகாப்பாக வைத்திருக்கும். சரி, உண்மையிலேயே ஏன் இது உங்களுக்கு தேவை?

Financial safety
இது உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் கூடுதல் நிதி பாதுகாப்பு வலையாகும்.
Fixed Benefits
ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் நிலையான பலன் கிடைக்கும்.
Financial help
உங்களால் வேலை செய்ய முடியாத அளவிற்கு சில உடற்குறைபாடுகள் ஏற்பட்டால், உங்களுக்கு நிதி உதவி கிடைக்கும்.

டிஜிட்டின் பெர்சனல் ஆக்சிடன்ட் இன்சூரன்ஸின் சிறப்பு என்ன?

  • நிலையான பலன்கள் - விபத்துகள் எந்த எச்சரிக்கையும் இல்லாமல், எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் நடக்கும், மேலும் பெர்சனல் ஆக்சிடன்ட் திட்டத்துடன், அத்தகைய நிகழ்வின் போது நீங்கள் நிலையான பலனைப் பெறலாம்.
  • மருத்துவப் பரிசோதனைகள் தேவையில்லை - எங்களின் பெர்சனல் ஆக்சிடன்ட் இன்சூரன்ஸின் மூலம், நீங்கள் எந்த மருத்துவப் பரிசோதனையும் செய்யத் தேவையில்லை, ஆன்லைனில் சென்று சில எளிய வழிமுறைகளில் பாதுகாப்பைப் பெறுங்கள்.
  • பரந்த அளவிலான கவரேஜைப் பெறுங்கள் - இந்த திட்டம் அனைத்து வகையான துரதிர்ஷ்டவசமான நிகழ்வுகளால் ஏற்பட்ட வருமான இழப்பு மற்றும் சிறிய மற்றும் பெரிய காயங்களுக்கு உங்களைப் பாதுகாக்கும்!
  • ஹோம் ஹாஸ்பிடலைஷேஷனை நாங்கள் கவர் செய்கிறோம் - நீங்கள் மருத்துவமனைக்குச் சென்று உங்கள் மருத்துவ சிகிச்சையை பெற முடியாவிட்டால், வீட்டிலேயே சிகிச்சை பெறுங்கள், அதையும் நாங்கள் கவர் செய்கிறோம்.
  • சிறந்த மதிப்பு - டிஜிட்டின் பெர்சனல் ஆக்சிடன்ட் கவர் குறைந்த-விலை பிரீமியங்களுடன் வருகிறது, இது உங்கள் பட்ஜெட்டில் சிரமத்தை ஏற்படுத்தாது.
  • குமுலேட்டிவ் போனஸ் - பாலிசி ஆண்டில் நீங்கள் கிளைம் ஏதும் செய்யவில்லை என்றால், நாங்கள் உங்களுக்கு வெகுமதியை வழங்குவோம் - உங்கள் இன்சூரன்ஸ் தொகையை, ஒவ்வொரு கிளைம் இல்லாத ஆண்டிற்கும் 10% அதிகரிப்போம்.
  • டிஜிட்டல் ஃபிரண்ட்லி செயல்முறை - உங்கள் இன்சூரன்ஸ் பாலிசியை வாங்குவது முதல் கிளைம்கள் செய்வது வரை, எந்த ஆவணங்களும் தேவையில்லை, எல்லாவற்றையும் ஆன்லைனில் செய்யலாம்!

டிஜிட்டின் பெர்சனல் ஆக்சிடன்ட் இன்சூரன்ஸில் என்ன கவர் செய்யப்பட்டுள்ளது?

நீங்கள் ஒரு பெர்சனல் ஆக்சிடன்ட் கவரைப் பெறும்போது, நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் பின்வருவரற்றில் இருந்து பாதுகாக்கப்படுவீர்கள்... (*நீங்கள் தேர்ந்தெடுத்த விருப்பத்தின் அடிப்படையில் ஆனது)

Disablement

இயலாமை

ஒரு விபத்து மொத்த அல்லது பகுதியளவு ஊனத்தை ஏற்படுத்தினால் (பார்வை அல்லது கைகால் இழப்பு போன்றவை) இந்த இன்சூரன்ஸ் உங்களுக்கு நிதி ரீதியாக உதவும்.

Accidental Death

விபத்து மரணம்

துரதிர்ஷ்டவசமான ஒரு விபத்தினால் மரணம் விளைந்தால் (எப்போதும் நடக்காது என்று நாங்கள் நம்புகிறோம்), உங்களைச் சார்ந்தவர்களுக்கு நிதிப் பாதுகாப்பும், இறுதிச் சடங்கு மற்றும் போக்குவரத்துச் செலவுகளுக்கும் உதவி கிடைக்கும்.

Hospitalization expenses

ஹாஸ்பிடலைஷேஷன் செலவுகள்*

நீங்கள் விபத்துக்குள்ளானால், அறை வாடகை, நோயறிதல் மற்றும் தினப்பராமரிப்பு நடைமுறைகள் மற்றும் சாலை ஆம்புலன்ஸ் கட்டணம் போன்ற ஹாஸ்பிடலைஷேஷன் முன் மற்றும் பிந்தைய செலவுகள் போன்றவற்றிற்கும் நீங்கள் கவர் செய்யப்படுவீர்கள்.

Loss of Income

வருமான இழப்பு*

நீங்கள் ஒரு தற்காலிக மொத்த ஊனத்தால் பாதிக்கப்பட்டு, சிறிது நேரம் உங்களால் உங்கள் வேலையைச் செய்ய முடியாவிட்டால், நாங்கள் வாராந்திர நன்மைத் தொகையைச் செலுத்துவோம்.

Benefits for Children

குழந்தைகளுக்கான நன்மைகள்*

இந்த பாலிசி உங்களுக்கு உதவுவதைத் தாண்டி, உங்களைச் சார்ந்திருக்கும் குழந்தைகளுக்கான கல்விச் செலவுகள் அல்லது திருமணச் செலவுகள் போன்ற சில நன்மைகளையும் உள்ளடக்கும்.

Adventure Sports

சாகச விளையாட்டுகள்*

ஸ்கூபா டைவிங், பங்கி ஜம்பிங் அல்லது ஸ்கை டைவிங் (தொழில்முறை மேற்பார்வையின் கீழ்) போன்ற சாகசச் செயல்களைச் செய்யும்போது நீங்கள் தற்செயலாக காயம் அடைந்தால், நீங்கள் கவர் செய்யப்படுவீர்கள்.

எவையெவை கவர் செய்யப்படாது?

பெர்சனல் ஆக்சிடன்ட் இன்சூரன்ஸ் உங்களைப் பாதுகாக்காத சில சூழ்நிலைகள் உள்ளன

உங்கள் தற்செயலான காயம், போர் அல்லது பயங்கரவாதத்தால் ஏற்பட்டிருந்தால், துரதிருஷ்டவசமாக அது கவர் செய்யப்படாது.

நீங்கள் போதைப்பொருள் அல்லது ஆல்கஹால் போதையில் இருந்தபோது காயங்கள் ஏற்பட்டால் கவர் செய்யப்படாது.

நீங்கள் சில குற்றச் செயலைச் செய்யும் போது விபத்து காயம் ஏற்பட்ட போதும் கவர் செய்யப்படாது.

பெர்சனல் ஆக்சிடன்ட் இன்சூரன்ஸிற்கு எவ்வளவு செலவாகும்?

பெர்சனல் ஆக்சிடன்ட் இன்சூரன்ஸ் திட்டங்களின் வகைகள்

கவரேஜ்கள்

அடிப்படை விருப்பம்

ஆதரவு விருப்பம்

ஆல்-ரவுண்டர் விருப்பம்

முக்கியமான அம்சங்கள்

விபத்தினால் மரணம்

நிரந்தர மொத்த இயலாமை

நிரந்தர பகுதி இயலாமை

×
அனைத்து ஹாஸ்பிடலைஷேஷன்

×
டே-கேர் நடைமுறைகள்

×
குமுலேட்டிவ் போனஸ்

×

நிலையான பாலிசி அம்சங்கள்

சாலை ஆம்புலன்ஸ் கட்டணம்

×
ஹாஸ்பிடல் கேஷ்

×
குழந்தை கல்வி பலன்

×
ஹோம் ஹாஸ்பிடலைஷேஷன்

×
ஹாஸ்பிடலைஷேஷன் முன்/பின்

×
இறுதிச் சடங்கு மற்றும் போக்குவரத்து செலவுகள்

×
இறக்குமதி செய்யப்பட்ட மருந்துகளின் போக்குவரத்து

×

பெர்சனல் ஆக்சிடன்ட் இன்சூரன்ஸை யார் பெற வேண்டும்?

சரியான பாலிசியை எவ்வாறு தேர்வு செய்வது?

  • பல்வேறு பாலிசிகளைப் பாருங்கள் - பணத்தைச் சேமிப்பது சிறந்தது, ஆனால் சில சமயங்களில் மிகக் குறைந்த பிரீமியம் கொண்ட பெர்சனல் ஆக்சிடன்ட் பாலிசியில் சிறந்த திட்டங்கள் இருக்காது; எனவே, வெவ்வேறு பாலிசிகளின் அம்சங்களையும் பிரீமியத்தையும் ஒப்பிட்டுப் பார்த்து, உங்களுக்காகப் பொருந்தக்கூடிய விலையில் ஒன்றைக் கண்டறியவும்.

  • சரியான கவரேஜைப் பெறுங்கள் - இன்சூரன்ஸ் பாலிசி உங்களுக்கு சிறந்த கவரேஜை அளிக்க வேண்டும்.
  • சரியான இன்சூரன்ஸ் தொகையைத் தேர்ந்தெடுங்கள் - உங்கள் பணியின் தன்மை மற்றும் நீங்கள் எதிர்கொள்ளும் ஆபத்து ஆகியவற்றின் அடிப்படையில் உங்கள் இன்சூரன்ஸ் தொகையைத் தனிப்பயனாக்க அனுமதிக்கும் பாலிசியை நீங்கள் தேடலாம்.

  • கிளைம்களின் செயல்முறை - எந்தவொரு இன்சூரன்ஸ் பாலிசியின் மிக முக்கியமான பகுதிகளில் இதுவும் ஒன்றாகும், நீங்கள் தேர்வு செய்யும் இன்சூரன்ஸ் நிறுவனம், கிளைம் செய்வதற்கும், தீர்வு காண்பதும் எளிதாக இருக்க வேண்டும், ஏனெனில் இது உங்களை நிறைய தொந்தரவுகளில் இருந்து பாதுகாக்கும்.
  • சேவை பலன்கள் - 24X7 மணி நேர வாடிக்கையாளர் உதவி அல்லது பயன்படுத்த எளிதான மொபைல் செயலி போன்ற பல கூடுதல் பலன்களை உங்களுக்கு வழங்கக்கூடிய இன்சூரரைத் தேர்வு செய்யவும்.

பொதுவான பெர்சனல் ஆக்சிடன்ட் விதிமுறைகள் உங்களுக்காக எளிமைப்படுத்தப்பட்டுள்ளன

விபத்து

சம்பந்தப்பட்ட நபர் அல்லது நபர்களுக்கு காயங்களை ஏற்படுத்தலாம் அல்லது ஏற்படுத்தாமல் இருக்கும், எந்தவொரு திடீர், எதிர்பாராத சூழ்நிலை.

உடனடி குடும்பம்

உங்கள் உடனடி குடும்பம் என்பது உங்கள் மனைவி, குழந்தை, பெற்றோர் அல்லது உடன்பிறந்தவர்களைக் குறிக்கிறது.

பயனாளிகள்

உங்கள் இறப்புக்குப் பிறகு உங்கள் இன்சூரன்ஸ் பலனைப் பெறுபவர்களாக, பாலிசியில் நீங்கள் பெயரிட்டுள்ள நபர்(கள்)

நிரந்தர முழு இயலாமை

நிரந்தரமான மற்றும் உங்களை வேலை செய்ய முடியாமல் தடுக்கும் எந்தவொரு காயம். குருட்டுத்தன்மை, பக்கவாதம் அல்லது இரு கால்களின் இழப்பு ஆகியவை இதில் அடங்கும்.

நிரந்தர பகுதி இயலாமை

காலப்போக்கில் மேம்படாமல் உங்களை ஓரளவு முடக்கும் ஒரு காயம். உதாரணமாக, ஒரு கால் இழப்பு, ஒரு கண்ணில் குருட்டுத்தன்மை அல்லது ஒரு காதில் கேட்கும் திறன் இழப்பு.

தற்காலிக மொத்த இயலாமை

நீங்கள் குணமடையும் போது ஒரு தற்காலிக நேரம் வேலை செய்வதைத் தடுக்கும் இயலாமையை உருவாக்கும் ஒரு காயம். உடைந்த கை அல்லது கால் போல.

குமுலேட்டிவ் போனஸ்

கிளைம் இலவச ஆண்டிற்கு நீங்கள் பெறும் ஒரு வகையான வெகுமதி, அதே பிரீமியத்தை நீங்கள் செலுத்தும் போது, உங்கள் கவரேஜின் இன்சூரன்ஸ் தொகையில் கூடுதல் சதவீதத்தைப் பெறுவீர்கள்.

இன்சூரன்ஸ் தொகை

நீங்கள் கிளைமை கோரும்போது உங்கள் இன்சூரர் செலுத்தும் அதிகபட்ச தொகை இதுவாகும்.

டிடக்டிபிள் (கழிப்புகள்)

இன்சூரர் உங்கள் கிளைமை ஈடுசெய்யும் முன், உங்கள் பாக்கெட்டிலிருந்து நீங்கள் செலுத்த வேண்டிய சிறிய தொகை இதுவாகும்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்