ஆன்லைனில் ஹெல்த் இன்சூரன்ஸ் வாங்குங்கள்

டிஜிட் ஹெல்த் இன்சூரன்ஸூக்கு மாறுங்கள்.

மகப்பேறு (மெட்டர்னிட்டி) இன்சூரன்ஸ் என்பது தனிப்பட்ட அல்லது குடும்ப ஹெல்த் இன்சூரன்ஸில் ஒருவர் தேர்ந்தெடுக்கக் கூடிய‌ ஒரு ஆட்-ஆன் (மதிப்புக்கூட்டல்) கவராகும் (காப்பீடாகும்).‌ இதன் மூலம் மகப்பேறுக்கு ஏற்படும் அனைத்து செலவுகளையும் இன்சூரன்ஸ் கம்பெனி ஏற்றுக்கொள்கிறது.

தற்போது ஹெல்த் இன்சூரன்ஸை வைத்துள்ள அல்லது புதிய ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான்-ஐ வைத்துள்ள எவரும், இந்த இன்சூரன்ஸை தங்களுக்கோ அல்லது தங்கள் துணைவிக்கோ தங்கள் பிளானோடு சேர்த்து எடுத்துக்கொள்ளலாம். எனவே உரிய சமயத்தில், குழந்தைப் பிறப்பின் போது ஏற்படும் அனைத்து மகப்பேறு செலவுகள் மற்றும்/அல்லது கர்ப்பகாலத்தின் போது ஏற்படும் எந்தவொரு சிக்கல்களுக்குமான சிகிச்சை சம்பந்தப்பட்ட செலவுகள் அல்லது மருத்துவ ரீதியாக கருக்கலைப்பு செய்யும் அவசியம் ஏற்படும் போது ஆகும் செலவுகளுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுப் பாதுகாப்பளிக்கப்படும். மகப்பேறு சம்பந்தமாக ஏற்படும் அனைத்து செலவுகளையும் நாங்களே ஏற்றுக் கொள்கிறோம்.

கூடுதலாக, கருவுறுதிறன் பிரச்சினைகள் போன்றவற்றினால் ஏற்படும் செலவுகளுக்கும் இந்த கவர் காப்பீடு வழங்குகிறது. மேலும், பிறந்த குழந்தைக்கு ஏதேனும் கோளாறுகள் ஏற்பட்டால், அக்குழந்தை மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவதற்கு ஆகும் செலவுகள், மற்றும் தடுப்பூசி கட்டணங்கள், போன்றவை பிரசவம் முடிந்து 90 நாட்கள் வரைக்கும் ஏற்றுக் கொள்ளப்பட்டு காப்பீடு வழங்கப்படுகிறது.

பொறுப்புத் துறப்பு: தற்போது, ​​டிஜிட்டில், நாங்கள் எங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் உடன் எந்த மெட்டர்னிட்டி இன்சூரன்ஸையும் வழங்கவில்லை

ஏனென்றால் இது போன்ற மகிழ்ச்சியான திருப்புமுனைகள் வாழ்க்கையில் அடிக்கடி நிகழ்வதில்லை.

இது உங்களுடைய முதல் அல்லது இரண்டாம் குழந்தை என எதுவாயினும், நீங்கள் உங்கள் வாழ்வில் அடுத்ததாக ஒரு பெரிய நிகழ்வுக்கு திட்டமிடுகிறீர்கள்; பெற்றோர் ஆகும் தருணம் துவங்குவது மற்றும் குழந்தையின் வருகை போன்றவை பெரும்பாலும் நம் வாழ்வின் மிக அழகான கட்டமாகவும், அதேசமயம் சவாலான கட்டமாகவும்  அமைந்து விடுகிறது. புதிதாக பெற்றோர் ஆகப்போகும் தம்பதியினர் பரபரப்பு மற்றும் நடுக்கம், உறுதியின்மை மற்றும் அமைதியின்மை, பதற்றம் மற்றும் திருப்தி போன்ற பல உணர்ச்சிகளை ஒரே நேரத்தில் எதிர்கொள்கிறார்கள்.

நீங்கள் கூடிய விரைவில் குழந்தை பெற்றுக் கொள்ள திட்டமிட்டிருந்தாலும், அல்லது ஏற்கனவே ஒரு குழந்தை இருந்து, இன்னொரு குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பினாலும், மகப்பேறு காலகட்டம், குழந்தைப் பிறப்பு மற்றும் இதனோடு தொடர்புடைய எல்லாமே சிறிது மன அழுத்தத்தைத் தரக் கூடியதாகவே பெரும்பாலும் அமைந்து விடுகிறது. உங்கள் மகப்பேறு பயணத்தில் உங்களுக்கு உதவவே நாங்கள் இருக்கிறோம். அதற்கான தருணம் வருவதற்கு முன்னரே நாங்கள் உங்களுடன் உள்ளோம். ஏனெனில், திட்டமிடப்படாதவைக்கு மட்டுமின்றி, திட்டமிடப்பட்டவைக்கும் முன்கூட்டியே திட்டமிடுவது எப்போதும் நல்லது.

இந்தியாவில் மகப்பேறு செலவுகளின் அதிகரிப்பு

பெரும்பாலான நகரங்களில் குழந்தையை பெற்றேடுப்பதற்கு சராசரியாக குறைந்தபட்சம் ரூ.50,000 முதல் ரூ.70,000 வரை செலவாகிறது.

இந்தியாவில், சிசேரியன் பிரசவங்களுக்கு ஆகும் செலவுகள் அதிகரித்து வருகின்றன, ரூ. 2 லட்சம் வரைக்கும் பல நகரங்களில் செலவாகிறது!

இந்தியாவில் பெரும்பாலான தம்பதியர் குழந்தைப்பேற்றினால் ஏற்படும் நிதிச்சுமைகளை எண்ணி அச்சங்கொள்கின்றனர்.

மகப்பேறு கவரின் மூலம் யாரெல்லாம் பயனடையலாம்?

ஒருவர் தங்களுடைய ஹெல்த் இன்சூரன்ஸில் இந்த மகப்பேறு ஆட்-ஆன் கவரின் மூலம், கீழ்க்கண்ட விதிகளுக்கு உட்பட்டிருந்தால் மட்டுமே பலனடைய முடியும்:

நீங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி வாங்கும் போது இந்த கவரை தேர்வு செய்திருந்தாலோ அல்லது பின்னாளில் இந்த கவரை சேர்த்திருந்தாலும் பலனடையலாம்.

பரிந்துரைக்கப்பட்ட காத்திருப்பு காலத்தை நீங்கள் முடித்திருந்தால், இந்த மெட்டர்னிட்டி இன்சூரன்ஸை நீங்கள் கிளைம் செய்து பயனடையலாம். 

நீங்கள் திருமணமானவராக இருந்து, 40 வயதிற்கு குறைவானவராக இருக்கும் பட்சத்தில் பலனடையலாம்.

நீங்கள் ஏற்கனவே 2 குழந்தைக பிரசவத்திற்கு இந்த கவரை உபயோகப்படுத்தியிருக்காத பட்சத்தில்.

மகப்பேறு இன்சூரன்ஸ் என்பது மக்களுக்கு சிறந்தது

1

புதுமணத் தம்பதிகள், குறைந்தபட்சம் அடுத்த இரண்டு மூன்று ஆண்டுகளில் குழந்தை பெற்றுக் கொள்ள திட்டமிடுபவர்கள்

2

விரைவில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருப்பவர்கள், மற்றும் அடுத்த இரண்டு மூன்று ஆண்டுகளில் குழந்தை பெற்றுக் கொள்ள திட்டமிடுபவர்கள்

3

ஏற்கனவே ஒரு குழந்தை உள்ளவர்கள், குறைந்தபட்சம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் அடுத்த குழந்தைக்கு திட்டமிடுபவர்கள்

4

உடனடியாக குழந்தை பெற்றுக் கொள்வதற்கு திட்டமிட்டிருக்காதவர்கள், எனினும் பாதுகாப்பாக இருக்க விரும்புபவர்கள்

இளம் தம்பதியருக்கு மகப்பேறு பெனிஃபிட் ஏன் முக்கியமாக கருதப்படுகின்றது?

மகப்பேறு கவருடன் கூடிய ஹெல்த் இன்சூரன்ஸை பற்றி மேலும் தெரிந்து கொள்ளவும்

மகப்பேறு கவருடன் கூடிய ஹெல்த் இன்சூரன்ஸை பற்றி மேலும் தெரிந்து கொள்ளவும்

மருத்துவ செலவுகள் அதிகரித்து வரும் சூழ்நிலையில், குழந்தைப்பேற்றுக்கு ஆகும் மருத்துவ செலவுகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. குறிப்பாக, சிசேரியன் ஆபரேஷன் அல்லது வேறு ஏதேனும் கர்ப்பகால சிக்கல்கள் போன்றவைகளும் கூட ஏற்படும் பட்சத்தில் இன்சூரன்ஸ் கவர் அவசியமானது. எனினும், உங்களுடைய தனிப்பட்ட ஹெல்த் இன்சூரன்ஸ் பிளானில் மகப்பேறு பெனிஃபிட்-ஐ தேர்வு செய்யும் போது, அது உங்களுக்கும், உங்கள் துணைவர்/துணைவிக்கும் பொருளாதார சுமையை குறைப்பதன் மூலம் அனைத்தையும் எளிதாக்குகிறது. உங்கள் அழகுக் குழந்தையின் பிறப்பிலிருந்து, முதல் மூன்று மாதங்கள் வரையிலும் அனைத்து செலவுகளும் சீராகவும், நெருக்கடியின்றியும் செல்வதை இது உறுதிப்படுத்துகின்றது. ஏனெனில், பிறக்கின்ற குழந்தையே உங்கள் ஒட்டுமொத்த மகிழ்ச்சியாக இருக்கும் காரணத்தினால், அந்த தருணத்தினை நீங்கள் பொக்கிஷம் போல் பாதுகாத்து, அதனை முழுமையாக அனுபவித்து வாழ்வதை நாங்கள் விரும்புகிறோம். வாசிக்கவும்: கொரோனா வைரஸ் ஹெல்த் இன்சூரன்ஸின் பயன்கள் பற்றி மேலும் தெரிந்து கொள்ளவும்

மருத்துவ செலவுகள் அதிகரித்து வரும் சூழ்நிலையில், குழந்தைப்பேற்றுக்கு ஆகும் மருத்துவ செலவுகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. குறிப்பாக, சிசேரியன் ஆபரேஷன் அல்லது வேறு ஏதேனும் கர்ப்பகால சிக்கல்கள் போன்றவைகளும் கூட ஏற்படும் பட்சத்தில் இன்சூரன்ஸ் கவர் அவசியமானது.

எனினும், உங்களுடைய தனிப்பட்ட ஹெல்த் இன்சூரன்ஸ் பிளானில் மகப்பேறு பெனிஃபிட்-ஐ தேர்வு செய்யும் போது, அது உங்களுக்கும், உங்கள் துணைவர்/துணைவிக்கும் பொருளாதார சுமையை குறைப்பதன் மூலம் அனைத்தையும் எளிதாக்குகிறது. உங்கள் அழகுக் குழந்தையின் பிறப்பிலிருந்து, முதல் மூன்று மாதங்கள் வரையிலும் அனைத்து செலவுகளும் சீராகவும், நெருக்கடியின்றியும் செல்வதை இது உறுதிப்படுத்துகின்றது.

ஏனெனில், பிறக்கின்ற குழந்தையே உங்கள் ஒட்டுமொத்த மகிழ்ச்சியாக இருக்கும் காரணத்தினால், அந்த தருணத்தினை நீங்கள் பொக்கிஷம் போல் பாதுகாத்து, அதனை முழுமையாக அனுபவித்து வாழ்வதை நாங்கள் விரும்புகிறோம்.

வாசிக்கவும்: கொரோனா வைரஸ் ஹெல்த் இன்சூரன்ஸின் பயன்கள் பற்றி மேலும் தெரிந்து கொள்ளவும்

சிறந்த மகப்பேறு ஹெல்த் இன்சூரன்ஸ் கவரை எப்படி தேர்ந்தெடுப்பது?

குழந்தைகள் பிறக்கும் முன்னரே, நாம் அவர்களுக்கு சிறப்பானவற்றை பற்றியே சிந்திப்போம். அதனால் சரியான மகப்பேறு இன்சூரன்ஸை தேர்ந்தெடுப்பது குறித்து குழப்பம் ஏற்படுவது இயல்பு தான். நீங்கள் தற்போதைய உங்களின் தனிப்பட்ட ஹெல்த் இன்சூரன்ஸில் மகப்பேறு பெனிஃபிட்-ஐ தேர்வு செய்ய விரும்பினாலோ அல்லது முதன் முறையாக தனிப்பட்ட ஹெல்த் இன்சூரன்ஸை பெறுவதாக இருந்தாலோ, கீழ்க்கண்ட சில விஷயங்களை கருத்தில் கொள்ள வேண்டும்:   முன்கூட்டியே தேர்வு செய்து விடவும்: எப்போதுமே முன்கூட்டியே மகப்பேறு பெனிஃபிட்-ஐ தேர்வு செய்யவும். மகப்பேறு மற்றும் தீவிரமான நோய்கள் போன்றவற்றிற்கு வழங்கப்படும் பெனிஃபிட்களை, நீங்கள் உபயோகப்படுத்துவதற்கு முன்னர் காத்திருக்க வேண்டிய காலஅவகாசம் இருக்கும்.எனவே, நீங்கள் விரைவில் திருமணம் செய்யவிருந்தாலோ அல்லது, அடுத்த ஒன்றிரண்டு வருடத்தில் குழந்தை பெற்றுக் கொள்ள திட்டமிட்டிருந்தாலோ, உங்கள் தற்போதைய ஹெல்த் இன்சூரன்ஸ் அல்லது புதிய ஹெல்த் இன்சூரன்ஸ் பிளானில் மகப்பேறு பெனிஃபிட்-ஐ தேர்வு செய்வதற்கான சரியான நேரம் இது தான். இன்சூர் செய்யப்பட்ட தொகையை சரிபார்க்கவும்: பிரசவம் மற்றும் அப்போது மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும் நேரத்தில் ஆகும் செலவுகளுக்கு நீங்கள் பெறும் காப்பீட்டுத் தொகையே இன்சூர் செய்யப்பட்ட தொகையாகும். இன்றைய தேதியில் இந்தியாவின் நகர்ப்புறத்தில் பிரசவ செலவிற்கு சராசரியாக ரூ.45,000-லிருந்து ரூ.75,000 வரைக்கும் ஆகிறது. சிசேரியனாக இருந்தால் ரூ.80,000-லிருந்து ரூ.1 லட்சம் வரை ஆகிறது.எனவே, உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸில் உள்ள மகப்பேறு பெனிஃபிட் எவ்வளவு தொகைக்கு காப்பீடு வழங்கி பாதுகாப்பளிக்கும் என்பதை தெரிந்து கொள்வது முக்கியமாகும். மேலும், உங்கள் பொருளாதார வசதியை பொறுத்து நீங்கள் உங்கள் பிளானை தேர்வு செய்து கொள்ளலாம். பயன்கள்: ஒரு காரணம் கருதியே இது மகப்பேறு பெனிஃபிட் என அழைக்கப்படுகிறது! ஒவ்வொரு ஹெல்த் இன்சூரன்ஸும் தங்களின் பாலிசிதாரர்களுக்கு வெவ்வேறு மகப்பேறு பெனிஃபிட்-ஐ வழங்குகின்றது. எனவே, வெவ்வேறு ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான்களிலுள்ள மகப்பேறு பெனிஃபிட்களை ஒப்பிட்டுப் பார்க்கவும். பின்னர், உங்கள் தேவைகளுக்குப் பொருதக்கூடியச் சிறந்த பிளானை தேர்வு செய்யவும்.அவை சிசேரியனுக்கு ஆகும் செலவுகளை ஏற்றுக் கொள்ளுமா? கருவுறுதிறன் தொடர்பான சிகிச்சைகளுக்கு ஆகும் செலவுகளை ஏற்றுக் கொண்டு பாதுகாப்பளிக்கின்றனவா? பிரசவத்திற்கு பின் எவ்வளவு நாட்களுக்கு குழந்தைக்கு ஆகும் செலவுகள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன? மருத்துவமனை அறையின் வாடகை செலவு ஏற்றுக் கொள்ளப்படுகிறதா? அவை கேஷ்லெஸ் செட்டில்மெண்டினை வழங்குகின்றனவா? போன்ற சில கேள்விகளை நீங்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். கேஷ்லெஸ் செட்டில்மெண்ட்:  கேஷ்லெஸ் செட்டில்மெண்ட் என்பது, சில ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தங்களுடைய பாலிசிதாரர்களுக்கு வழங்குகின்ற ஒரு பயனாகும். இதன் பொருள் கிளைமின் போது, அதாவது பிரசவ சமயத்தில், நீங்கள் பணம் செலுத்தவோ அல்லது பணம் செலுத்தி விட்டு திரும்ப பெறவோ வேண்டியதில்லை. ஆனால், அதற்கு மாறாக, நீங்கள் சிகிச்சை எடுத்துக்கொண்ட மருத்துவமனை இன்சூரரின் நெட்வொர்க் மருத்துவமனைகளில் ஒன்றாக இருந்தால், நீங்கள் கேஷ்லெஸ் கிளைமை மேற்கொள்ளலாம்.பிரசவம் போன்ற குழப்பமானதும், அழுத்தம் நிறைந்த கணிக்க முடியாத சூழலில், இப்பேற்பட்ட பயன்கள் உங்களுக்கு மிகுந்த நன்மையைத் தரும். எனவே, சிறந்த மகப்பேறு இன்சூரன்ஸை தேர்வு செய்யும் போது, கேஷ்லெஸ் செட்டில்மெண்ட்-ஐ மகப்பேறு இன்சூரன்ஸ்  வழங்குகின்றதா என்பதை பார்ப்பதும் மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.

குழந்தைகள் பிறக்கும் முன்னரே, நாம் அவர்களுக்கு சிறப்பானவற்றை பற்றியே சிந்திப்போம். அதனால் சரியான மகப்பேறு இன்சூரன்ஸை தேர்ந்தெடுப்பது குறித்து குழப்பம் ஏற்படுவது இயல்பு தான். நீங்கள் தற்போதைய உங்களின் தனிப்பட்ட ஹெல்த் இன்சூரன்ஸில் மகப்பேறு பெனிஃபிட்-ஐ தேர்வு செய்ய விரும்பினாலோ அல்லது முதன் முறையாக தனிப்பட்ட ஹெல்த் இன்சூரன்ஸை பெறுவதாக இருந்தாலோ, கீழ்க்கண்ட சில விஷயங்களை கருத்தில் கொள்ள வேண்டும்:  

  • முன்கூட்டியே தேர்வு செய்து விடவும்: எப்போதுமே முன்கூட்டியே மகப்பேறு பெனிஃபிட்-ஐ தேர்வு செய்யவும். மகப்பேறு மற்றும் தீவிரமான நோய்கள் போன்றவற்றிற்கு வழங்கப்படும் பெனிஃபிட்களை, நீங்கள் உபயோகப்படுத்துவதற்கு முன்னர் காத்திருக்க வேண்டிய காலஅவகாசம் இருக்கும்.எனவே, நீங்கள் விரைவில் திருமணம் செய்யவிருந்தாலோ அல்லது, அடுத்த ஒன்றிரண்டு வருடத்தில் குழந்தை பெற்றுக் கொள்ள திட்டமிட்டிருந்தாலோ, உங்கள் தற்போதைய ஹெல்த் இன்சூரன்ஸ் அல்லது புதிய ஹெல்த் இன்சூரன்ஸ் பிளானில் மகப்பேறு பெனிஃபிட்-ஐ தேர்வு செய்வதற்கான சரியான நேரம் இது தான்.
  • இன்சூர் செய்யப்பட்ட தொகையை சரிபார்க்கவும்: பிரசவம் மற்றும் அப்போது மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும் நேரத்தில் ஆகும் செலவுகளுக்கு நீங்கள் பெறும் காப்பீட்டுத் தொகையே இன்சூர் செய்யப்பட்ட தொகையாகும். இன்றைய தேதியில் இந்தியாவின் நகர்ப்புறத்தில் பிரசவ செலவிற்கு சராசரியாக ரூ.45,000-லிருந்து ரூ.75,000 வரைக்கும் ஆகிறது. சிசேரியனாக இருந்தால் ரூ.80,000-லிருந்து ரூ.1 லட்சம் வரை ஆகிறது.எனவே, உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸில் உள்ள மகப்பேறு பெனிஃபிட் எவ்வளவு தொகைக்கு காப்பீடு வழங்கி பாதுகாப்பளிக்கும் என்பதை தெரிந்து கொள்வது முக்கியமாகும். மேலும், உங்கள் பொருளாதார வசதியை பொறுத்து நீங்கள் உங்கள் பிளானை தேர்வு செய்து கொள்ளலாம்.
  • பயன்கள்: ஒரு காரணம் கருதியே இது மகப்பேறு பெனிஃபிட் என அழைக்கப்படுகிறது! ஒவ்வொரு ஹெல்த் இன்சூரன்ஸும் தங்களின் பாலிசிதாரர்களுக்கு வெவ்வேறு மகப்பேறு பெனிஃபிட்-ஐ வழங்குகின்றது. எனவே, வெவ்வேறு ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான்களிலுள்ள மகப்பேறு பெனிஃபிட்களை ஒப்பிட்டுப் பார்க்கவும். பின்னர், உங்கள் தேவைகளுக்குப் பொருதக்கூடியச் சிறந்த பிளானை தேர்வு செய்யவும்.அவை சிசேரியனுக்கு ஆகும் செலவுகளை ஏற்றுக் கொள்ளுமா? கருவுறுதிறன் தொடர்பான சிகிச்சைகளுக்கு ஆகும் செலவுகளை ஏற்றுக் கொண்டு பாதுகாப்பளிக்கின்றனவா? பிரசவத்திற்கு பின் எவ்வளவு நாட்களுக்கு குழந்தைக்கு ஆகும் செலவுகள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன? மருத்துவமனை அறையின் வாடகை செலவு ஏற்றுக் கொள்ளப்படுகிறதா? அவை கேஷ்லெஸ் செட்டில்மெண்டினை வழங்குகின்றனவா? போன்ற சில கேள்விகளை நீங்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.
  • கேஷ்லெஸ் செட்டில்மெண்ட்:  கேஷ்லெஸ் செட்டில்மெண்ட் என்பது, சில ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தங்களுடைய பாலிசிதாரர்களுக்கு வழங்குகின்ற ஒரு பயனாகும். இதன் பொருள் கிளைமின் போது, அதாவது பிரசவ சமயத்தில், நீங்கள் பணம் செலுத்தவோ அல்லது பணம் செலுத்தி விட்டு திரும்ப பெறவோ வேண்டியதில்லை. ஆனால், அதற்கு மாறாக, நீங்கள் சிகிச்சை எடுத்துக்கொண்ட மருத்துவமனை இன்சூரரின் நெட்வொர்க் மருத்துவமனைகளில் ஒன்றாக இருந்தால், நீங்கள் கேஷ்லெஸ் கிளைமை மேற்கொள்ளலாம்.பிரசவம் போன்ற குழப்பமானதும், அழுத்தம் நிறைந்த கணிக்க முடியாத சூழலில், இப்பேற்பட்ட பயன்கள் உங்களுக்கு மிகுந்த நன்மையைத் தரும். எனவே, சிறந்த மகப்பேறு இன்சூரன்ஸை தேர்வு செய்யும் போது, கேஷ்லெஸ் செட்டில்மெண்ட்-ஐ மகப்பேறு இன்சூரன்ஸ்  வழங்குகின்றதா என்பதை பார்ப்பதும் மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.

என்னுடைய ஹெல்த் இன்சூரன்ஸ் பிளானில் எப்போது நான் மகப்பேறு இன்சூரன்ஸ் கவரை தேர்வு செய்ய வேண்டும்?

இது வாழ்க்கையின் எந்த கட்டத்தில் நீங்கள் இருக்கிறீர்கள் என்பதை பொறுத்திருக்கிறது. நீங்கள் திருமணமாகாதவராக இருந்து, திருமணம் செய்து கொள்வதற்கு திட்டமிடவில்லையென்றாலோ அல்லது குறைந்தபட்சம் அடுத்த இரண்டு மூன்று ஆண்டுகளில் குழந்தை பெறுவதற்கு திட்டமிடவில்லையென்றாலோ, நீங்கள் தற்போது மகப்பேறு இன்சூரன்ஸ் கவர் எடுக்கத் தேவையில்லை. எனினும், நீங்கள் திருமணமானவராக இருந்தாலோ அல்லது விரைவில் திருமணம் செய்து கொள்ள இருந்தாலோ, மற்றும் அடுத்த இரண்டு வருடங்களில் நீங்கள் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பினாலோ, இப்போதே இந்த கவரை தேர்வு செய்வது நல்லது. ஏனென்றால், நீங்கள் காத்திருப்பு காலத்தினை பூர்த்தி செய்து, இந்த கவரின் முழுமையான பலனை அடைவதற்கு அது உதவியாக இருக்கும். நீங்களோ அல்லது உங்கள் துணைவியோ ஏற்கனவே கருவுற்றிருக்கும் பட்சத்தில், இந்த ஆட்-ஆன்-ஐ(மதிப்புக்கூட்டல்/add-on) நீங்கள் தேர்வு செய்வது, பெரும்பாலான இன்சூரன்ஸ் வழிகாட்டுதல்களின் படி அது அங்கீகரிக்கப்பட மாட்டாது. எனவே, எப்போதுமே முன்கூட்டியே திட்டமிட்டு, உங்கள் தனிப்பட்ட ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியில் முன்னமேயே இந்த கவரை தேர்வு செய்வதற்குப் பரிந்துரை செய்கிறோம். 

இது வாழ்க்கையின் எந்த கட்டத்தில் நீங்கள் இருக்கிறீர்கள் என்பதை பொறுத்திருக்கிறது. நீங்கள் திருமணமாகாதவராக இருந்து, திருமணம் செய்து கொள்வதற்கு திட்டமிடவில்லையென்றாலோ அல்லது குறைந்தபட்சம் அடுத்த இரண்டு மூன்று ஆண்டுகளில் குழந்தை பெறுவதற்கு திட்டமிடவில்லையென்றாலோ, நீங்கள் தற்போது மகப்பேறு இன்சூரன்ஸ் கவர் எடுக்கத் தேவையில்லை.

எனினும், நீங்கள் திருமணமானவராக இருந்தாலோ அல்லது விரைவில் திருமணம் செய்து கொள்ள இருந்தாலோ, மற்றும் அடுத்த இரண்டு வருடங்களில் நீங்கள் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பினாலோ, இப்போதே இந்த கவரை தேர்வு செய்வது நல்லது. ஏனென்றால், நீங்கள் காத்திருப்பு காலத்தினை பூர்த்தி செய்து, இந்த கவரின் முழுமையான பலனை அடைவதற்கு அது உதவியாக இருக்கும்.

நீங்களோ அல்லது உங்கள் துணைவியோ ஏற்கனவே கருவுற்றிருக்கும் பட்சத்தில், இந்த ஆட்-ஆன்-ஐ(மதிப்புக்கூட்டல்/add-on) நீங்கள் தேர்வு செய்வது, பெரும்பாலான இன்சூரன்ஸ் வழிகாட்டுதல்களின் படி அது அங்கீகரிக்கப்பட மாட்டாது. எனவே, எப்போதுமே முன்கூட்டியே திட்டமிட்டு, உங்கள் தனிப்பட்ட ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியில் முன்னமேயே இந்த கவரை தேர்வு செய்வதற்குப் பரிந்துரை செய்கிறோம். 

மகப்பேறு ஹெல்த் இன்சூரன்ஸ் பற்றி நீங்கள் அறிய வேண்டிய விஷயங்கள்

காத்திருக்கும் காலம்: கிரிட்டிக்கல் இல்னஸ் கவர்(Critical Illness Cover) போன்ற மற்ற முக்கியமான கவர்களை போலவே, மகப்பேறு கவரும் காத்திருக்கும் காலஅவகாசத்துடனேயே வருகின்றது. காத்திருப்பு காலம் என்பது நீங்கள் கிளைம் செய்து அதன் பலனை பெறுவதற்கு முன்னர் நீங்கள் காத்திருக்க வேண்டிய காலமாகும். எனவே தான், நாங்கள் எப்போதுமே முன்கூட்டியே திட்டமிட்டு, மகப்பேறு கவரினை சரியான நேரத்தில் தேர்வு செய்வதற்கு பரிந்துரைக்கிறோம். பொதுவாக, மகப்பேறு கவருக்கான காத்திருக்கும் காலமானது இரண்டு வருடங்கள் வரை நீடிக்கிறது. குழந்தைகளின் எண்ணிக்கை: பொதுவாக மெட்டர்னிட்டி பெனிஃபிட் இன்சூரன்ஸின் கீழ், இரண்டு குழந்தைகள் வரை காப்பீடு செய்யப்படும். மெட்டர்னிட்டி இன்சூரன்ஸ் கவர் பெறுவதற்கான தகுதி: மெட்டர்னிட்டி பெனிஃபிட் இன்சூரன்ஸைத் தேர்வுசெய்த திருமணமான அல்லது சிங்கள் பெண், மகப்பேறு நன்மைக்கு தகுதியுடையவர். ஒருவர் தங்கள் பாலிசி காலத்தில் இந்த ஆட்-ஆனைத் தேர்வு செய்யலாம். இருப்பினும், அவர்கள் ஏற்கனவே கர்ப்பமாக இருந்தால், அவர்கள் மகப்பேறு நன்மை பெற தகுதி பெற மாட்டார்கள் என்பதை ஒருவர் நினைவில்கொள்ள வேண்டும். நியூ பார்ன் பெனிஃபிட்: மெட்டர்னிட்டி இன்சூரன்ஸ் பாலிசியின் கீழ், புதிதாகப் பிறந்த குழந்தை முதல் மூன்று மாதங்களுக்கு, அதாவது, அவர்களின் வாழ்க்கையின் 90 நாட்களுக்கு அவர்களுக்கு ஏற்படும் செலவுகளும் காப்பீடு செய்யப்படுகிறது. இந்திய அரசாங்கத்தால் வரையறுக்கப்பட்ட தேசிய நோய்த்தடுப்பு அட்டவணையின்படி ஏதேனும் உடல்நல கோளாறுகள் மற்றும் கட்டாய  தடுப்பூசிகள் இதில் அடங்கும்.  பிறந்த குழந்தைக்கு கிடைக்கும் பெனிஃபிட்: மகப்பேறு இன்சூரன்ஸ் கவரின் கீழ், பிறந்த குழந்தைக்கு முதல் மூன்று மாதங்களுக்கு இன்சூரன்ஸ் பாதுகாப்பளிக்கப்படுகிறது, அதாவது முதல் 90 நாட்களுக்கு. இது எந்தவொரு உடல்நலக் கோளாறுகளால் ஏற்படும் செலவுகள் மற்றும் இந்திய அரசாங்கத்தால் வரையறை செய்யப்பட்ட தேசிய நோய்த்தடுப்பு அட்டவணையின் படி தேவைப்படும் தடுப்பூசிகளுக்கு ஆகும் செலவுகளையும் உள்ளடக்கும். கூடுதல் பயன்கள்: கர்ப்ப காலத்தில் ஏற்படும் சிக்கல்களினால் ஏற்படும் செலவுகளுக்கான காப்பீடு மற்றும், ஒரு வேளை நீங்கள் டிஜிட்-இன் பாலிசிதாரராக இருந்து, ஏற்கனவே உங்கள் முதல் குழந்தைக்கு எங்களுடைய மகப்பேறு பெனிஃபிட் கவரின் மூலம் கிளைம் செய்திருக்கும் பட்சத்தில், உங்கள் இரண்டாவது குழந்தைக்கு இன்சூர் செய்யப்பட்ட தொகையில் 200% போனஸ் போன்ற இந்த கவரின் கூடுதல் பயன்களும் உங்களுக்குக் கிடைக்கின்றன.

  • காத்திருக்கும் காலம்: கிரிட்டிக்கல் இல்னஸ் கவர்(Critical Illness Cover) போன்ற மற்ற முக்கியமான கவர்களை போலவே, மகப்பேறு கவரும் காத்திருக்கும் காலஅவகாசத்துடனேயே வருகின்றது. காத்திருப்பு காலம் என்பது நீங்கள் கிளைம் செய்து அதன் பலனை பெறுவதற்கு முன்னர் நீங்கள் காத்திருக்க வேண்டிய காலமாகும். எனவே தான், நாங்கள் எப்போதுமே முன்கூட்டியே திட்டமிட்டு, மகப்பேறு கவரினை சரியான நேரத்தில் தேர்வு செய்வதற்கு பரிந்துரைக்கிறோம். பொதுவாக, மகப்பேறு கவருக்கான காத்திருக்கும் காலமானது இரண்டு வருடங்கள் வரை நீடிக்கிறது.
  • குழந்தைகளின் எண்ணிக்கை: பொதுவாக மெட்டர்னிட்டி பெனிஃபிட் இன்சூரன்ஸின் கீழ், இரண்டு குழந்தைகள் வரை காப்பீடு செய்யப்படும்.
  • மெட்டர்னிட்டி இன்சூரன்ஸ் கவர் பெறுவதற்கான தகுதி: மெட்டர்னிட்டி பெனிஃபிட் இன்சூரன்ஸைத் தேர்வுசெய்த திருமணமான அல்லது சிங்கள் பெண், மகப்பேறு நன்மைக்கு தகுதியுடையவர். ஒருவர் தங்கள் பாலிசி காலத்தில் இந்த ஆட்-ஆனைத் தேர்வு செய்யலாம். இருப்பினும், அவர்கள் ஏற்கனவே கர்ப்பமாக இருந்தால், அவர்கள் மகப்பேறு நன்மை பெற தகுதி பெற மாட்டார்கள் என்பதை ஒருவர் நினைவில்கொள்ள வேண்டும்.
  • நியூ பார்ன் பெனிஃபிட்: மெட்டர்னிட்டி இன்சூரன்ஸ் பாலிசியின் கீழ், புதிதாகப் பிறந்த குழந்தை முதல் மூன்று மாதங்களுக்கு, அதாவது, அவர்களின் வாழ்க்கையின் 90 நாட்களுக்கு அவர்களுக்கு ஏற்படும் செலவுகளும் காப்பீடு செய்யப்படுகிறது. இந்திய அரசாங்கத்தால் வரையறுக்கப்பட்ட தேசிய நோய்த்தடுப்பு அட்டவணையின்படி ஏதேனும் உடல்நல கோளாறுகள் மற்றும் கட்டாய  தடுப்பூசிகள் இதில் அடங்கும்.
  •  பிறந்த குழந்தைக்கு கிடைக்கும் பெனிஃபிட்: மகப்பேறு இன்சூரன்ஸ் கவரின் கீழ், பிறந்த குழந்தைக்கு முதல் மூன்று மாதங்களுக்கு இன்சூரன்ஸ் பாதுகாப்பளிக்கப்படுகிறது, அதாவது முதல் 90 நாட்களுக்கு. இது எந்தவொரு உடல்நலக் கோளாறுகளால் ஏற்படும் செலவுகள் மற்றும் இந்திய அரசாங்கத்தால் வரையறை செய்யப்பட்ட தேசிய நோய்த்தடுப்பு அட்டவணையின் படி தேவைப்படும் தடுப்பூசிகளுக்கு ஆகும் செலவுகளையும் உள்ளடக்கும்.
  • கூடுதல் பயன்கள்: கர்ப்ப காலத்தில் ஏற்படும் சிக்கல்களினால் ஏற்படும் செலவுகளுக்கான காப்பீடு மற்றும், ஒரு வேளை நீங்கள் டிஜிட்-இன் பாலிசிதாரராக இருந்து, ஏற்கனவே உங்கள் முதல் குழந்தைக்கு எங்களுடைய மகப்பேறு பெனிஃபிட் கவரின் மூலம் கிளைம் செய்திருக்கும் பட்சத்தில், உங்கள் இரண்டாவது குழந்தைக்கு இன்சூர் செய்யப்பட்ட தொகையில் 200% போனஸ் போன்ற இந்த கவரின் கூடுதல் பயன்களும் உங்களுக்குக் கிடைக்கின்றன.

மகப்பேறு இன்சூரன்ஸ் கவரை தேர்வு செய்யும் போது தவிர்க்க வேண்டிய தவறுகள்

கவரை மிக தாமதமாக எடுத்துக்கொள்வது, அதாவது கருவுறுவதற்கு இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்னர் அல்லது பிரசவ சமயத்தில் எடுத்துக்கொள்வது. இந்த சூழ்நிலைகளில், நீங்கள் இந்த பெனிஃபிட்-இன் கீழ் கிளைம் செய்வதற்கு தகுதி பெறமாட்டீர்கள். இன்சூர் செய்யப்பட்ட தொகையை சரிபார்க்காமலிருப்பது. இந்த கவரின் முதன்மையான பயன்பாடே, உங்கள் பிரசவத்தின் போது ஏற்படும் செலவுகளுக்கு உங்களுக்கு காப்பீடு வழங்கப்படுவது தான். எனவே, எவ்வளவு தொகை இன்சூர் செய்யப்பட்டிருக்கிறது என்பதையும், அது போதுமானதாக இருக்கிறதா என்பதையும் சரிபார்த்துக் கொள்வது முக்கியமானதாகும். காத்திருக்கும் காலம் முடிவடையும் முன்னமேயே கிளைம் செய்வது. உங்களுடைய உரிய கவர்களுக்கான கிளைம்களை மேற்கொள்ளும் முன்னர், காத்திருப்பு கால அவகாசத்தை சரிபார்த்துக் கொள்வது முக்கியமாகும். மகப்பேறு கவருக்கு தேவையான காத்திருப்புக் காலத்தை நிறைவு செய்த பின்னரே, நீங்கள் மகப்பேறு தொடர்பான செலவுகளுக்குக் கிளைம் செய்யலாம்.

  • கவரை மிக தாமதமாக எடுத்துக்கொள்வது, அதாவது கருவுறுவதற்கு இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்னர் அல்லது பிரசவ சமயத்தில் எடுத்துக்கொள்வது. இந்த சூழ்நிலைகளில், நீங்கள் இந்த பெனிஃபிட்-இன் கீழ் கிளைம் செய்வதற்கு தகுதி பெறமாட்டீர்கள்.
  • இன்சூர் செய்யப்பட்ட தொகையை சரிபார்க்காமலிருப்பது. இந்த கவரின் முதன்மையான பயன்பாடே, உங்கள் பிரசவத்தின் போது ஏற்படும் செலவுகளுக்கு உங்களுக்கு காப்பீடு வழங்கப்படுவது தான். எனவே, எவ்வளவு தொகை இன்சூர் செய்யப்பட்டிருக்கிறது என்பதையும், அது போதுமானதாக இருக்கிறதா என்பதையும் சரிபார்த்துக் கொள்வது முக்கியமானதாகும்.
  • காத்திருக்கும் காலம் முடிவடையும் முன்னமேயே கிளைம் செய்வது. உங்களுடைய உரிய கவர்களுக்கான கிளைம்களை மேற்கொள்ளும் முன்னர், காத்திருப்பு கால அவகாசத்தை சரிபார்த்துக் கொள்வது முக்கியமாகும். மகப்பேறு கவருக்கு தேவையான காத்திருப்புக் காலத்தை நிறைவு செய்த பின்னரே, நீங்கள் மகப்பேறு தொடர்பான செலவுகளுக்குக் கிளைம் செய்யலாம்.

மகப்பேறு இன்சூரன்ஸ் மூலம் வரியை சேமிக்கலாம்

ஹெல்த் இன்சூரன்ஸின் பயன்களில் ஒன்று, ஒரு நிதியாண்டில் ரூ.25,000 வரையில் நீங்கள் வரிவிலக்கு பெறலாம். உங்கள் பிளானில் உங்களுடைய வயதான பெற்றோர் சார்ந்திருப்பவர்களாக சேர்க்கப்பட்டிருந்தால், இன்னும் அதிகமான வரிவிலக்கினை பெறலாம். எனினும், வரி கட்டுவதை தவிர்ப்பதற்கு மட்டுமே ஒருவர் இந்த ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை வாங்கக் கூடாது. சிறிய மற்றும் பெரிய மருத்துவ செலவுகளுக்கான இன்சூரன்ஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கிறது என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காகவே வாங்க வேண்டும். எனவே, உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் பொருத்தமாகவுள்ள ஒரு ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை நீங்கள் தேர்வு செய்வது முக்கியமாகும். உங்களுக்கும், உங்கள் குடும்ப உறுப்பினரகளுக்குமான சரியான ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை வாங்குவதற்கு முன்னர், அதன் பலன்கள், கூடுதல் ஆட்-ஆன்கள், விலை மற்றும் பிற காரணிகளையும் பார்க்க வேண்டும். ஹெல்த் இன்சூரன்ஸ் டேக்ஸ் பெனிஃபிட்களை பற்றி மேலும் தெரிந்து கொள்ளவும்

ஹெல்த் இன்சூரன்ஸின் பயன்களில் ஒன்று, ஒரு நிதியாண்டில் ரூ.25,000 வரையில் நீங்கள் வரிவிலக்கு பெறலாம். உங்கள் பிளானில் உங்களுடைய வயதான பெற்றோர் சார்ந்திருப்பவர்களாக சேர்க்கப்பட்டிருந்தால், இன்னும் அதிகமான வரிவிலக்கினை பெறலாம். எனினும், வரி கட்டுவதை தவிர்ப்பதற்கு மட்டுமே ஒருவர் இந்த ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை வாங்கக் கூடாது. சிறிய மற்றும் பெரிய மருத்துவ செலவுகளுக்கான இன்சூரன்ஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கிறது என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காகவே வாங்க வேண்டும்.

எனவே, உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் பொருத்தமாகவுள்ள ஒரு ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை நீங்கள் தேர்வு செய்வது முக்கியமாகும். உங்களுக்கும், உங்கள் குடும்ப உறுப்பினரகளுக்குமான சரியான ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை வாங்குவதற்கு முன்னர், அதன் பலன்கள், கூடுதல் ஆட்-ஆன்கள், விலை மற்றும் பிற காரணிகளையும் பார்க்க வேண்டும்.

ஹெல்த் இன்சூரன்ஸ் டேக்ஸ் பெனிஃபிட்களை பற்றி மேலும் தெரிந்து கொள்ளவும்

ஆரோக்கியமான கர்பக்காலத்திற்கான டிப்ஸ்கள்

நீங்கள் ஏற்கனவே கருவுற்றிருந்தாலும் அல்லது விரைவில் குழந்தை பெற்றுக் கொள்ள திட்டமிட்டிருந்தாலும், உங்கள் கர்பக்காலம் ஆரோக்கியமான முறையில் இருப்பதற்கான 5 முக்கியமான டிப்ஸ்கள். நீங்கள் இது வரை செய்யவில்லையென்றால், இப்போதே உடற்பயிற்சி செய்யத் தொடங்குங்கள். சுறுசுறுப்பாக இருப்பது உங்கள் பொதுவான உடல்நலத்திற்கு முக்கியமாகும். மேலும், இது மனஅழுத்தத்தை குறைக்கவும், உங்கள் உடல்எடையை கட்டுப்படுத்தவும், இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், உங்கள் மனோநிலையினை ஊக்கப்படுத்துவதற்கும், நன்கு தூங்குவதற்கும் மற்றும் ஒட்டுமொத்தமாக, உங்கள் ஹார்மோன்களில் நேர்மறையாக பாதிப்பை ஏற்படுத்துவதற்கும் உதவுகின்றது. நீங்கள் ஏற்கனவே கருவுற்றிருந்தால் பைலேட்ஸ், யோகா, பெல்விக் ஃப்ளோர் பயிற்சிகள்(pelvic floor exercises), நீச்சல் மற்றும் நடைபயிற்சி போன்ற உடற்பயிற்சிகள்  உங்களுக்குப் பரிந்துரைக்கப்படுகிறது. நீங்கள் தற்போது கர்ப்பமாக இல்லையென்றாலும், கர்ப்பமடைய முயற்சி செய்யும் பட்சத்தில், பேறு காலத்திற்கு முன்பு எடுத்துக் கொள்ளப்படும் விட்டமின்களை எடுத்துக் கொள்வது அவசியமாகும். உங்கள் குழந்தையின் மூளை மற்றும் தண்டுவடத்தின் உருவாக்கத்திற்கு உதவும் நியூரல் கார்ட்-ஆனது(நரம்பு வடம்), கர்ப்பமடைந்த முதல் மாதத்திலிருந்தே வளரத் தொடங்குகிறது. எனவே, ஆரம்பத்திலிருந்தே ஃபோலிக் ஆசிட், கால்சியம் மற்றும் இரும்பு போன்ற ஊட்டச்சத்துக்களை எடுத்துக் கொள்வது முக்கியமானது. அதிகமாக கேஃபின் பானங்கள் எடுத்துக் கொள்வதையும், மது மற்றும் புகை பிடிப்பதையும் கட்டுப்படுத்தவும். உணவு பழக்க வழக்கங்களை மேம்படுத்தவும். காலை உணவை தவிர்க்காதீர்கள், சமச்சீர் உணவினை எடுத்துக் கொள்ளவும். குறிப்பாக, இரும்பு, கால்சியம் மற்றும் ஃபோலேட் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ள உணவினை சேர்த்துக் கொள்ளவும். கூடுதலாக, மீனை (மெர்க்குரி மிகுந்துள்ளவற்றை மட்டும் தவிர்த்து) அதிகமாக எடுத்துக் கொள்ளவும். கர்ப்பகாலத்தின் முதல் மூன்று மாத காலத்தில் இருப்பவர்கள், 300 கேலரிகள் அதிகமாக உணவில் எடுத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் விரைவில் கர்ப்பமாக திட்டமிட்டிருந்தால், முன்னதாகவே ஒட்டுமொத்த ஹெல்த் செக்-அப் செய்துகொள்வதை உறுதிப்படுத்திக் கொள்ளவும். குறைந்தபட்சமாக ஒருமுறையாவது மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறவும்.

நீங்கள் ஏற்கனவே கருவுற்றிருந்தாலும் அல்லது விரைவில் குழந்தை பெற்றுக் கொள்ள திட்டமிட்டிருந்தாலும், உங்கள் கர்பக்காலம் ஆரோக்கியமான முறையில் இருப்பதற்கான 5 முக்கியமான டிப்ஸ்கள்.

  • நீங்கள் இது வரை செய்யவில்லையென்றால், இப்போதே உடற்பயிற்சி செய்யத் தொடங்குங்கள். சுறுசுறுப்பாக இருப்பது உங்கள் பொதுவான உடல்நலத்திற்கு முக்கியமாகும். மேலும், இது மனஅழுத்தத்தை குறைக்கவும், உங்கள் உடல்எடையை கட்டுப்படுத்தவும், இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், உங்கள் மனோநிலையினை ஊக்கப்படுத்துவதற்கும், நன்கு தூங்குவதற்கும் மற்றும் ஒட்டுமொத்தமாக, உங்கள் ஹார்மோன்களில் நேர்மறையாக பாதிப்பை ஏற்படுத்துவதற்கும் உதவுகின்றது. நீங்கள் ஏற்கனவே கருவுற்றிருந்தால் பைலேட்ஸ், யோகா, பெல்விக் ஃப்ளோர் பயிற்சிகள்(pelvic floor exercises), நீச்சல் மற்றும் நடைபயிற்சி போன்ற உடற்பயிற்சிகள்  உங்களுக்குப் பரிந்துரைக்கப்படுகிறது.
  • நீங்கள் தற்போது கர்ப்பமாக இல்லையென்றாலும், கர்ப்பமடைய முயற்சி செய்யும் பட்சத்தில், பேறு காலத்திற்கு முன்பு எடுத்துக் கொள்ளப்படும் விட்டமின்களை எடுத்துக் கொள்வது அவசியமாகும். உங்கள் குழந்தையின் மூளை மற்றும் தண்டுவடத்தின் உருவாக்கத்திற்கு உதவும் நியூரல் கார்ட்-ஆனது(நரம்பு வடம்), கர்ப்பமடைந்த முதல் மாதத்திலிருந்தே வளரத் தொடங்குகிறது. எனவே, ஆரம்பத்திலிருந்தே ஃபோலிக் ஆசிட், கால்சியம் மற்றும் இரும்பு போன்ற ஊட்டச்சத்துக்களை எடுத்துக் கொள்வது முக்கியமானது.
  • அதிகமாக கேஃபின் பானங்கள் எடுத்துக் கொள்வதையும், மது மற்றும் புகை பிடிப்பதையும் கட்டுப்படுத்தவும்.
  • உணவு பழக்க வழக்கங்களை மேம்படுத்தவும். காலை உணவை தவிர்க்காதீர்கள், சமச்சீர் உணவினை எடுத்துக் கொள்ளவும். குறிப்பாக, இரும்பு, கால்சியம் மற்றும் ஃபோலேட் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ள உணவினை சேர்த்துக் கொள்ளவும். கூடுதலாக, மீனை (மெர்க்குரி மிகுந்துள்ளவற்றை மட்டும் தவிர்த்து) அதிகமாக எடுத்துக் கொள்ளவும். கர்ப்பகாலத்தின் முதல் மூன்று மாத காலத்தில் இருப்பவர்கள், 300 கேலரிகள் அதிகமாக உணவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • நீங்கள் விரைவில் கர்ப்பமாக திட்டமிட்டிருந்தால், முன்னதாகவே ஒட்டுமொத்த ஹெல்த் செக்-அப் செய்துகொள்வதை உறுதிப்படுத்திக் கொள்ளவும். குறைந்தபட்சமாக ஒருமுறையாவது மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறவும்.

மகப்பேறு இன்சூரன்ஸ் குறித்து அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

நான் கருவுற்றிருக்கும் போது மகப்பேறு இன்சூரன்ஸை வாங்கலாமா?

கெடுவாய்ப்பாக, மகப்பேறு இன்சூரன்ஸ் என்பது முன்கூட்டியே இருக்கும் நிலையாக (Pre-existing condition) ஹெல்த் இன்சூரர்களால் கருதப்படுகிறது, எனவே இதற்கு காத்திருக்கும் காலம் உண்டு. அதனால், கருவுற்றிருக்கும் காலத்தில் நீங்கள் மகப்பேறு இன்சூரன்ஸ் எடுத்திருந்தால், அது உடனடியாக செயற்பாட்டுக்கு வராது. எனவே தான், முன்கூட்டியே நீங்கள் தேர்வு செய்து கொள்வது தான் சரியானதாகும்.

ஹெல்த் இன்சூரன்ஸில் உள்ள மகப்பேறு பெனிஃபிட் கவரில் என்னவெல்லாம் உள்ளடக்கப்பட்டிருக்கிறது?

குழந்தைப்பிறப்பு, மருத்துவமனையில் சேர்ப்பதற்கு முன்பு மற்றும் மருத்துவமனையில் சேர்த்ததற்கு பின்பு ஏற்படும் செலவுகள், பிரசவக் கட்டணங்கள், பிறந்த குழந்தைக்கு போடப்படும் தடுப்பூசிக் கட்டணங்கள், குழந்தைப் பிறப்பின் போது ஏற்படக் கூடிய சிக்கல்களினால் உண்டாகும் அவசரநிலைகள் போன்றவை தொடர்பான அனைத்து செலவுகளையும் மகப்பேறு இன்சூரன்ஸ் ஏற்றுக் கொண்டு பாதுகாப்பளிக்கிறது.

மகப்பேறு இன்சூரன்ஸிற்கான காத்திருப்பு காலம் எவ்வளவு?

பொதுவாக, காத்திருக்கும் காலம் என்பது ஒவ்வொரு இன்சூரருக்கும் இடையே வேறுபடுகிறது. 2 வருடங்களிலிருந்து 4 வருடங்கள் வரை இருக்கும். டிஜிட்-இல் காத்திருக்கும் காலம், 2 வருடங்கள் தான். அதனால், மகப்பேறு இன்சூரன்ஸிற்கு உங்கள் காத்திருக்கும் காலம் 2 வருடமென்றால், அதன் பொருள், மகப்பேறு இன்சூரன்ஸின் பயன்களை அடைவதற்கு நீங்கள் உங்கள் பாலிசி தொடங்கி 2 வருடங்கள் வரைக்கும் காத்திருக்க வேண்டும் என்பதாகும்.

மெட்டர்னிட்டி ஹெல்த் இன்சூரன்ஸூக்கான காத்திருப்பு காலம் என்ன?

பொதுவாக, காத்திருப்பு காலம் ஒரு காப்பீட்டாளரிடமிருந்து மற்றொருவருக்கு மாறுபடும். இது 2 ஆண்டுகள் முதல் 4 ஆண்டுகள் வரை இருக்கும்.

மகப்பேறு இன்சூரன்ஸில் கருக்கலைப்பிற்கு இன்சூரன்ஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கிறதா?

ஆம், வழங்கப்பட்டிருக்கிறது. பெரும்பாலும் கெடுவாய்ப்பான தருணங்களில், கருக்கலைப்பு செய்ய வேண்டியிருக்கும், மேலும் அதற்கு மிகவும் அதிகமாக செலவாகிறது. உங்கள் மகப்பேறு இன்சூரன்ஸ் மருத்துவ ரீதியாக அவசியமென கருதப்படும் கருக்கலைப்பு நடவடிக்கைகளுக்கு ஏற்படும் செலவுகளையும் ஏற்றுக் கொள்கிறது. மேலும், கர்ப்பகாலத்தில் அல்லது குழந்தைப் பிறப்பின் போது ஏற்படும் எந்தவொரு சிக்கல்கள் தொடர்பான சிகிச்சைகளுக்கு ஆகும் செலவுகளையும் ஏற்றுக் கொண்டு பாதுகாப்பளிக்கிறது.

2வது பிரசவமும் மெட்டர்னிட்டி இன்சூரன்ஸில் கவர் செய்யப்படுகிறதா?

ஆம், உங்கள் மெட்டர்னிட்டி இன்சூரன்ஸில் இரண்டு பிரசவங்கள் வரை காப்பீடு செய்யப்படும். சில காப்பீட்டு வழங்குநர்கள் இரண்டாவது குழந்தைக்கு காப்பீடு தொகையை அதிகரிக்கிறார்கள்.

புதிதாகப் பிறந்த குழந்தைக்கு மெட்டர்னிட்டி இன்சூரன்ஸில் காப்பீடு அளிக்கபப்டுகிறதா?

ஆம், பொதுவாக காப்பீடு வழங்குநர்கள் அனைவரும், உங்கள் பிறந்த குழந்தை பிறந்ததிலிருந்து 90 நாட்கள் வரை  மெட்டர்னிட்டி இன்சூரன்ஸில்  காப்பீடு வழங்குகிறார்கள், அதில் புதிதாகப் பிறந்த குழந்தைக்கு ஏதேனும் நோய் அல்லது அவசரநிலைக்கான சிகிச்சையும், தடுப்பூசிகளும் வழங்குவதற்காக காப்பீடு அளிக்கப்படுகிறது.

பொறுப்புத் துறப்பு: தற்போது, ​​டிஜிட்டில், நாங்கள் எங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் உடன் எந்த மெட்டர்னிட்டி இன்சூரன்ஸையும் வழங்கவில்லை