ஒருவர் தங்களுடைய ஹெல்த் இன்சூரன்ஸில் இந்த மகப்பேறு ஆட்-ஆன் கவரின் மூலம், கீழ்க்கண்ட விதிகளுக்கு உட்பட்டிருந்தால் மட்டுமே பலனடைய முடியும்:
மருத்துவ செலவுகள் அதிகரித்து வரும் சூழ்நிலையில், குழந்தைப்பேற்றுக்கு ஆகும் மருத்துவ செலவுகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. குறிப்பாக, சிசேரியன் ஆபரேஷன் அல்லது வேறு ஏதேனும் கர்ப்பகால சிக்கல்கள் போன்றவைகளும் கூட ஏற்படும் பட்சத்தில் இன்சூரன்ஸ் கவர் அவசியமானது.
எனினும், உங்களுடைய தனிப்பட்ட ஹெல்த் இன்சூரன்ஸ் பிளானில் மகப்பேறு பெனிஃபிட்-ஐ தேர்வு செய்யும் போது, அது உங்களுக்கும், உங்கள் துணைவர்/துணைவிக்கும் பொருளாதார சுமையை குறைப்பதன் மூலம் அனைத்தையும் எளிதாக்குகிறது. உங்கள் அழகுக் குழந்தையின் பிறப்பிலிருந்து, முதல் மூன்று மாதங்கள் வரையிலும் அனைத்து செலவுகளும் சீராகவும், நெருக்கடியின்றியும் செல்வதை இது உறுதிப்படுத்துகின்றது.
ஏனெனில், பிறக்கின்ற குழந்தையே உங்கள் ஒட்டுமொத்த மகிழ்ச்சியாக இருக்கும் காரணத்தினால், அந்த தருணத்தினை நீங்கள் பொக்கிஷம் போல் பாதுகாத்து, அதனை முழுமையாக அனுபவித்து வாழ்வதை நாங்கள் விரும்புகிறோம்.
வாசிக்கவும்: கொரோனா வைரஸ் ஹெல்த் இன்சூரன்ஸின் பயன்கள் பற்றி மேலும் தெரிந்து கொள்ளவும்
குழந்தைகள் பிறக்கும் முன்னரே, நாம் அவர்களுக்கு சிறப்பானவற்றை பற்றியே சிந்திப்போம். அதனால் சரியான மகப்பேறு இன்சூரன்ஸை தேர்ந்தெடுப்பது குறித்து குழப்பம் ஏற்படுவது இயல்பு தான். நீங்கள் தற்போதைய உங்களின் தனிப்பட்ட ஹெல்த் இன்சூரன்ஸில் மகப்பேறு பெனிஃபிட்-ஐ தேர்வு செய்ய விரும்பினாலோ அல்லது முதன் முறையாக தனிப்பட்ட ஹெல்த் இன்சூரன்ஸை பெறுவதாக இருந்தாலோ, கீழ்க்கண்ட சில விஷயங்களை கருத்தில் கொள்ள வேண்டும்:
இது வாழ்க்கையின் எந்த கட்டத்தில் நீங்கள் இருக்கிறீர்கள் என்பதை பொறுத்திருக்கிறது. நீங்கள் திருமணமாகாதவராக இருந்து, திருமணம் செய்து கொள்வதற்கு திட்டமிடவில்லையென்றாலோ அல்லது குறைந்தபட்சம் அடுத்த இரண்டு மூன்று ஆண்டுகளில் குழந்தை பெறுவதற்கு திட்டமிடவில்லையென்றாலோ, நீங்கள் தற்போது மகப்பேறு இன்சூரன்ஸ் கவர் எடுக்கத் தேவையில்லை.
எனினும், நீங்கள் திருமணமானவராக இருந்தாலோ அல்லது விரைவில் திருமணம் செய்து கொள்ள இருந்தாலோ, மற்றும் அடுத்த இரண்டு வருடங்களில் நீங்கள் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பினாலோ, இப்போதே இந்த கவரை தேர்வு செய்வது நல்லது. ஏனென்றால், நீங்கள் காத்திருப்பு காலத்தினை பூர்த்தி செய்து, இந்த கவரின் முழுமையான பலனை அடைவதற்கு அது உதவியாக இருக்கும்.
நீங்களோ அல்லது உங்கள் துணைவியோ ஏற்கனவே கருவுற்றிருக்கும் பட்சத்தில், இந்த ஆட்-ஆன்-ஐ(மதிப்புக்கூட்டல்/add-on) நீங்கள் தேர்வு செய்வது, பெரும்பாலான இன்சூரன்ஸ் வழிகாட்டுதல்களின் படி அது அங்கீகரிக்கப்பட மாட்டாது. எனவே, எப்போதுமே முன்கூட்டியே திட்டமிட்டு, உங்கள் தனிப்பட்ட ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியில் முன்னமேயே இந்த கவரை தேர்வு செய்வதற்குப் பரிந்துரை செய்கிறோம்.
ஹெல்த் இன்சூரன்ஸின் பயன்களில் ஒன்று, ஒரு நிதியாண்டில் ரூ.25,000 வரையில் நீங்கள் வரிவிலக்கு பெறலாம். உங்கள் பிளானில் உங்களுடைய வயதான பெற்றோர் சார்ந்திருப்பவர்களாக சேர்க்கப்பட்டிருந்தால், இன்னும் அதிகமான வரிவிலக்கினை பெறலாம். எனினும், வரி கட்டுவதை தவிர்ப்பதற்கு மட்டுமே ஒருவர் இந்த ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை வாங்கக் கூடாது. சிறிய மற்றும் பெரிய மருத்துவ செலவுகளுக்கான இன்சூரன்ஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கிறது என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காகவே வாங்க வேண்டும்.
எனவே, உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் பொருத்தமாகவுள்ள ஒரு ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை நீங்கள் தேர்வு செய்வது முக்கியமாகும். உங்களுக்கும், உங்கள் குடும்ப உறுப்பினரகளுக்குமான சரியான ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை வாங்குவதற்கு முன்னர், அதன் பலன்கள், கூடுதல் ஆட்-ஆன்கள், விலை மற்றும் பிற காரணிகளையும் பார்க்க வேண்டும்.
ஹெல்த் இன்சூரன்ஸ் டேக்ஸ் பெனிஃபிட்களை பற்றி மேலும் தெரிந்து கொள்ளவும்
நீங்கள் ஏற்கனவே கருவுற்றிருந்தாலும் அல்லது விரைவில் குழந்தை பெற்றுக் கொள்ள திட்டமிட்டிருந்தாலும், உங்கள் கர்பக்காலம் ஆரோக்கியமான முறையில் இருப்பதற்கான 5 முக்கியமான டிப்ஸ்கள்.
பொறுப்புத் துறப்பு: தற்போது, டிஜிட்டில், நாங்கள் எங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் உடன் எந்த மெட்டர்னிட்டி இன்சூரன்ஸையும் வழங்கவில்லை