இன்றைய வேகமான உலகில், வாழ்க்கை முறை சார்ந்த நோய்கள் அதிகரித்து வருகின்றன என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. ஹெல்த் இன்சூரன்ஸ் என்பது ரெகுலர் செக்-அப்ஸ் (வழக்கமான பரிசோதனைகள்), பிரிவென்டிவ் கேர் மற்றும் நோய்களை முன்கூட்டியே கண்டறிதலுக்கான கவரேஜை வழங்குகிறது. ஹெல்த் இன்சூரன்ஸை வைத்திருப்பதால், தாய்மார்கள் உடல்நலம் சார்ந்த பிரச்சனைகளை உடனடியாகச் சரிசெய்து கொள்ளலாம், இது குணமடைவதற்கான சிறந்த வாய்ப்புகளுக்கும் வழிவகுக்கும்.
இது நமக்கு ஏற்படக்கூடிய உடல்நல அபாயங்களை முன்கூட்டியே கண்டறிந்து சரியான நேரத்தில் சிகிச்சையளிக்க உதவுகிறது, உங்கள் தாயார் ஆரோக்கியமாக இருக்கவும் நிறைவான வாழ்க்கையை வாழவும் உதவுகிறது.
தாய்மை என்பது ஒவ்வொரு பெண்ணும் அவரது வாழ்க்கையின் போற்றக்கூடிய ஒரு அழகான பயணம், இது மகத்தான மகிழ்ச்சியைத் தருவது மட்டுமின்றி கூடுதல் பொறுப்புகளையும் தருகிறது. பிரசவத்திற்கு முன் முதல் பிரசவத்திற்கு பிந்தைய செலவுகள் வரை (ப்ரீ நேட்டல் - போஸ்ட் டெலிவரி), கர்ப்பம், பிரசவம் மற்றும் இந்தக் காலகட்டங்களில் எழக்கூடிய அனைத்து வகையான பிரச்சனைகள் தொடர்புடைய செலவுகளுக்கு ஒரு தாய் நிதி ரீதியாக தயாராக இருப்பதை ஹெல்த் இன்சூரன்ஸ் உறுதி செய்கிறது.
இது மன அமைதியை தருவதுடன் மருத்துவ பில்களினால் ஏற்படும் கூடுதல் மன அழுத்தத்தை தவிர்த்து தாய்மையினால் ஏற்படும் மகிழ்ச்சி உணர்வில் அதிகக் கவனம் செலுத்தவும் அனுமதிக்கிறது.
ஹெல்த் இன்சூரன்ஸ் தாய்மார்களுக்கு ஹெல்த்கேர் வழங்குநர்களின் பெரிய நெட்வொர்க்கிலிருந்து தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தை அளிக்கிறது. அவர்களுக்கு சிறப்பு ஆலோசனை, மருத்துவமனையில் சேர்வதற்கான அனுமதி அல்லது அவசர சிகிச்சை தேவைப்பட்டாலும், ஹெல்த் இன்சூரன்ஸ் வைத்திருப்பது அவர்கள் புகழ்பெற்ற கைதேர்ந்த மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகளிடமிருந்து சிகிச்சைப் பெற உதவுகிறது.
தாய்மார்கள் தனது தேவைகளுக்கு ஏற்ற சிறந்த மருத்துவமனைகளைத் தேர்ந்தெடுத்து தரமான மருத்துவ சேவையைப் பெறலாம். தரமான சுகாதார வழங்குநர்களுக்கான இந்த அணுகல் சரியான நேரத்தில் மற்றும் பொருத்தமான மருத்துவ பராமரிப்பைப் பெறுவதற்கான வாய்ப்புகளையும் அதிகரிக்கிறது.
தாய்மார்கள் பெரும்பாலும் தங்கள் ஆரோக்கியத்தை விட தங்கள் குடும்பங்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கே முன்னுரிமை அளிக்கிறார்கள். ஹெல்த் இன்சூரன்ஸைப் பெறுவது அவர்களால் அவர்களது சொந்த ஆரோக்கியத்திற்கும் முன்னுரிமை அளிக்க உதவுகிறது. இது அவர்கள் தனக்குத்தானே செய்துகொள்ளும் ஒரு சுய பாதுகாப்பான செயலாக விளங்குகிறது. இது ரெகுலர் செக்-அப்ஸ் மற்றும் ப்ரிவென்டிவ் கேர் மூலம் அவர்களது ஆரோக்கியத்தை முன்னெச்சரிக்கையாக நிர்வகிக்க அனுமதிக்கிறது, இது அவர்கள் ஆரோக்கியத்தைச் சிறப்பாக பராமரிக்கவும் உதவுகிறது.
ஹெல்த் இன்சூரன்ஸ் என்பது ஒரு தாய்க்கு பயனளிப்பது மட்டுமல்லாமல், முழு குடும்பத்திற்கும் தீர்வு அளிக்கிறது. உங்கள் தாய் ஹெல்த் இன்சூரன்ஸின் கீழ் இருக்கிறார்கள் என்பதை அறிந்திருப்பதே பாதுகாப்பு உணர்வைத் தருகிறது, எதிர்பாராமல் ஏற்படும் மருத்துவ செலவுகளுக்கான கவலையையும் நீக்குகிறது.
மருத்துவ ரீதியான அவசர காலங்களில் ஏற்படும் நிதி பிரச்சனைகளின் சுமையைச் சுமப்பதை விட, ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான சூழலை வளர்ப்பதில் அவர்களும் குடும்பமும் கவனம் செலுத்தலாம் என்பதையும் இது உறுதி செய்கிறது.
தாய்மார்களுக்கான ஹெல்த் இன்சூரன்ஸுக்கு முன்னுரிமை வழங்கவேண்டியதற்கான மற்றொரு காரணம், அதிகரித்து வரும் ஹெல்த்கேர் செலவுகளுக்காக வழங்கும் புரட்டெக்ஷன். மருத்துவ சிகிச்சைகள் மற்றும் மருத்துவமனை செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன, இதனால் எதிர்பாராத மருத்துவ அவசரநிலைகளை நிர்வகிப்பது என்பது தனிநபர்களுக்கு பெரும் சவாலாக இருந்து வருகிறது.
இத்தகைய சூழ்நிலையில் ஹெல்த் இன்சூரன்ஸ் என்பது ஒரு பாதுகாப்பாக செயல்படுகிறது, இது போன்ற சூழ்நிலைகளில் வரும் நிதி அழுத்தத்திலிருந்து உங்கள் தாய்மார்களையும் குடும்பங்களையும் பத்திரமாகப் பாதுகாக்கிறது.
நிலைகளைக் கவனியுங்கள். ரெகுலர்-செக்அப்ஸ், மருந்துகள், ஹாஸ்பிடலைஷேஷன் மற்றும் சிறப்பு ஆலோசனைகளுக்கான கவரேஜ் தேவைகளை மதிப்பிடுங்கள். இந்த மதிப்பீடு அவரது உடல்நலம் சார்ந்த தேவைகளுக்கு ஏற்ற ஹெல்த் இன்சூரன்ஸ் கவரேஜின் வகையையும் காலத்தையும் தீர்மானிக்க உதவும்.
சந்தையில் கிடைக்கும் ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான்களை நன்கு ஆராய்ந்து ஒப்பிடுங்கள். மெட்டர்னிட்டி பெனிஃபிட்ஸ், பிரசவத்திற்குப் பிந்தைய பராமரிப்பு (போஸ்ட் டெலிவரி கேர்) மற்றும் பிரிவென்டிவ் கேர் உள்ளிட்ட பெண்களின் உடல்நலத் தேவைகளுக்குக் குறிப்பிட்ட பாதுகாப்பு விருப்பங்களைத் தேடுங்கள். உங்கள் தாய்க்கு மிகவும் பொருத்தமான [பிளானைக் கண்டறிய பல்வேறு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் வழங்கும் ஹெல்த்கேர் வழங்குநர்களின் நெட்வொர்க், பிரீமியம் தொகை மற்றும் பெனிஃபிட்களை ஒப்பிடுங்கள்.
காத்திருப்பு காலங்கள் (வெயிட்டிங் பீரியட்ஸ்), ப்ரீ எக்சிஸ்டிங் நிலைகளுக்கான கவரேஜ் மற்றும் கிளைம் செயல்முறைகள் உள்ளிட்ட பாலிசி விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைக் கவனமாக மதிப்பாய்வு செய்யுங்கள். பாலிசி காம்ப்ரிஹென்சிவ் கவரேஜை வழங்குவதுடன் தாயின் குறிப்பிட்ட ஹெல்த்கேர் தேவைகளுக்கும் ஒத்துப்போகிறது என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.
ஹெல்த் இன்சூரன்ஸ் பிளானின் கவரேஜை மேம்படுத்தக்கூடிய ஆட்-ஆன்கள் மற்றும் ரைடர்களை அலசி ஆராய்ந்திடுங்கள். எடுத்துக்காட்டாக, மெட்டர்னிட்டி ரைடர்களால் மெட்டர்னிட்டிக்கான கூடுதல் கவரேஜை வழங்க முடியும். ஹெல்த்கேர் தேவைகளுக்கான மதிப்பைத் தீர்மானிக்க இந்த ஆட்ஆன்களுடன் தொடர்புடைய கூடுதல் பெனிஃபிட்கள் மற்றும் செலவுகளை மதிப்பிடுங்கள்.
தாய்மார்களுக்கு ஹெல்த் இன்சூரன்ஸ் பெறுவது என்பது அவர்களின் நல்வாழ்வு, நிதி தயார்நிலை மற்றும் தரமான உடல்நிலைக்கான அணுகல் பெறுவதை உறுதி செய்யும் ஒரு சாமர்த்தியமான முடிவாகும். மேலே குறிப்பிட்டுள்ள உதவிக்குறிப்புகளைக் கருத்தில் கொண்டு, கிடைக்கக்கூடிய விருப்பங்களை மதிப்பீடு செய்வதன் மூலம், தாயின் குறிப்பிட்ட தேவைகளுக்கு மிகவும் பொருத்தமான ஹெல்த் இன்சூரன்ஸ் பிளானை நீங்கள் தேர்வு செய்யலாம். ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான எதிர்காலத்திற்காக இன்றே அவரது ஆரோக்கியத்திற்கான முன்னுரிமையைக் கொடுங்கள்.
ஐ.டி ஆக்ட்படி, அரசு அல்லது தனியார் யாராக இருப்பினும் முன்னாள் எம்ப்ளாயரிடமிருந்து ஓய்வூதியம் மூலம் கிடைக்கும் வருமானம் "சம்பளத்திலிருந்து வருமானம்" என்ற தலைப்பின் கீழ் வருகிறது, அதே நேரத்தில் குடும்பத்திற்கான ஓய்வூதியம் "பிற ஆதாரங்களில் இருந்து வருமானம்" என்ற தலைப்பின் கீழ் வருகிறது. வரிசெலுத்துவோர்கள் தகுதிபெறும் சீனியர் சிட்டிசன்களுக்கான இன்கம் டேக்ஸ் ஸ்லாப்களின்படி இருவருக்குமே வரி விதிக்கப்படுகிறது.
உங்கள் வருமானம் அடிப்படை விலக்கு வரம்பை விட குறைவாக இருந்தால், நீங்கள் எந்த வரியும் செலுத்த வேண்டியதில்லை. மேலும் விவரங்களுக்கு நிதியாண்டு 2022-23 மற்றும் நிதியாண்டு 2023-24 க்கான அடிப்படை விலக்கு வரம்புகளைப் பார்க்கவும்.
டேக்ஸ் பேயருக்கான வயது | வருமானம் (பழைய வரி விதிப்பு முறை – நிதியாண்டு 2022-23 மற்றும் நிதியாண்டு 2023-24) |
வருமானம் (புதிய வரி விதிப்பு முறை – நிதியாண்டு 2022-23) |
வருமானம் (புதிய வரி விதிப்பு முறை – நிதியாண்டு 2023-24) |
60 லிருந்து 80 வருடங்களுக்கு இடையில் | ₹3,00,000 | ₹2,50,000 | ₹3,00,000 |
80 வயதுக்கு மேல் | ₹5,00,000 | ₹2,50,000 | ₹3,00,000 |
[ஆதாரம்]