சப்போர்ட்
closeஎங்கள் வாட்ஸ்அப் எண்ணை அழைப்புகளுக்கு பயன்படுத்த முடியாது. இது வெறும் அரட்டை எண்.
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 26.8 மில்லியனுக்கும் அதிகமான மாற்றுத் திறனாளிகள் (பி.டபிள்யூ.டிகள்) உள்ளனர் - இது மக்கள்தொகையில் சுமார் 2.2% ஆகும், இருப்பினும் பிற ஆதாரங்கள் அதிக மதிப்பீடுகளைக் கொண்டுள்ளன. உங்களுக்கு உடல் அல்லது மனநல குறைபாடு இருக்கும்போது, அன்றாட வாழ்க்கையே கடினமாக இருக்கும், அதிக மருத்துவ செலவுகளின் நிதி அழுத்தத்தைக் குறிப்பிட வேண்டாம்.
மருத்துவச் செலவுகளிலிருந்து நிதிப் பாதுகாப்பைப் பெறுவதற்கான சிறந்த வழிகளில் ஹெல்த் இன்சூரன்ஸ் ஒன்றாக இருப்பதால், "இந்தியாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏதேனும் ஹெல்த் இன்சூரன்ஸ் இருக்கிறதா?" என்று நீங்கள் ஆச்சரியப்படலாம். இருக்கிறது, என்று உங்களுக்கு நாங்கள் உறுதியளிக்கிறோம்.
மாற்றுத் திறனாளிகளுக்காக பல்வேறு அரசுத் திட்டங்கள் உள்ளன, ஆனால் இவை வரையறுக்கப்பட்ட கவரேஜை கொண்டுள்ளன. சில தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களும் ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான்களை வழங்குகின்றன, இருப்பினும் இவை பெரும்பாலும் விலை உயர்ந்தவை. மாற்றுத் திறனாளிகளுக்கு கிடைக்கும் இன்சூரன்ஸ் நன்மைகளைப் பார்ப்போம்:
இந்தியாவில், மாற்றுத்திறனாளி (சம வாய்ப்புகள், உரிமைகள் பாதுகாப்பு மற்றும் முழு பங்கேற்பு) சட்டம், 1955 இன் கீழ், குறைந்தது 40% குறைபாடு உள்ள ஒருவர் மாற்றுத்திறனாளியாக கருதப்படுகிறார். அவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட வகையான குறைபாடு/இயலாமை அல்லது 80%க்கும் மேற்பட்ட குறைபாடுகளைக் கொண்டிருந்தால், அவர்கள் கடுமையான குறைபாடுகளை உடைய மாற்றுத்திறனாளிகளாகக் கருதப்படுகிறார்கள்.
இந்தியாவில் வகைப்படுத்தப்பட்டுள்ள மூன்று முக்கிய வகையான குறைபாடுகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது:
மாற்றுத்திறனாளி நபர்களுக்கான ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை வாங்குவதற்கு முன்பு, நீங்கள் அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் ஹெல்த் இன்சூரன்ஸ் பிளானை வாங்குகிறீர்கள் அல்லது ஒரு தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் செல்ல திட்டமிட்டுள்ளீர்கள் என்றால், நீங்கள் மனதில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் உள்ளன:
மாற்றுத்திறனாளிகளுக்கான ஹெல்த் இன்சூரன்ஸிற்கான முன்மொழிவை நிரப்பும்போது, அவர்களின் குறைபாடுகள் மற்றும் ஏற்கனவே இருக்கும் வேறு எந்த நிலைமைகளையும் நீங்கள் சரியாக அறிவிக்க வேண்டும். அவ்வாறு செய்யவில்லையென்றல் கிளைமின் போது அவை உங்களை பாதிக்கும்.
நீங்கள் சில ஆவணங்கள் அல்லது மருத்துவ அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டியிருக்கலாம். இது பொதுவாக இயலாமையின் குறைபாட்டின் அளவைப் புரிந்துகொள்ள ஒரு மருத்துவரின் அறிக்கையை உள்ளடக்கியது (அதாவது அன்றாட பணிகளைச் செய்வதற்கான ஒரு நபரின் திறனை இது எவ்வளவு பாதிக்கிறது).
பதிவுசெய்யப்பட்ட மருத்துவரிடம் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனையில் கூடுதல் மருத்துவ பரிசோதனைகளுக்குச் செல்லுமாறு நீங்கள் கேட்கப்படலாம், மேலும் இந்த சோதனைகள் மற்றும் அறிக்கைகளின் அடிப்படையில் உங்கள் இன்சூரன்ஸ் விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்வதா இல்லையா என்பதை இன்சூரன்ஸ் நிறுவனம் முடிவு செய்யும்.
உங்கள் இன்சூரன்ஸ் விண்ணப்பம் ஒரு தனியார் காப்பீட்டாளரால் ஏற்றுக்கொள்ளப்பட்டவுடன், உங்கள் பாலிசிக்கான பிரீமியத்தை இன்சூரன்ஸ் நிறுவனம் தான் தீர்மானிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இது உங்கள் குறைபாடு, வயது, குடும்ப மருத்துவ வரலாறு, ஏற்கனவே இருக்கும் பிற நிலைமைகள் மற்றும் பலவற்றின் அடிப்படையில் மாறுபடும். கூடுதலாக, உங்கள் பிரீமியத்திற்கு 18% ஜி.எஸ்.டி விதிக்கப்படும்.
அதிக பிரீமியம் குறித்து நீங்கள் கவலைகொள்கிறீர்கள் என்றாலும், மாற்றுத்திறனாளி நபர்கள் தங்கள் ஹெல்த் இன்சூரன்ஸில் வரி விலக்கு நன்மைகளைப் பெறலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
வருமான வரிச் சட்ட பிரிவு 80யு ஓரளவு மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.50,000 வரை வரி விலக்கு பெற அனுமதிக்கிறது, அதே நேரத்தில் கடுமையான குறைபாடுகளை கொண்டுள்ள மாற்றுத்திறனாளி நபர்கள் ரூ.1 லட்சம் வரை வரி விலக்குகளைப் பெறலாம்.
பிரிவு 80டிடி இன் படி, குடும்ப உறுப்பினர்கள் சார்ந்த மாற்றுத்திறனாளி நபர்களுக்கான இன்சூரன்ஸ் பிரீமியங்களில் விலக்கு பெறலாம்.
நாம் மேலே குறிப்பிட்டுள்ளபடி, மாற்றுத்திறனாளிகளுக்கு உண்மையில் சில ஹெல்த் இன்சூரன்ஸ் விருப்பங்கள் உள்ளன.
தற்செயலான குறைபாடுகள் உள்ள நபர்கள் பெரும்பாலான வழக்கமான ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான்களால் உள்ளடக்கப்படுவார்கள், கூடுதல் பிரிவுகள் எதுவும் சேர்க்கப்படவில்லை. உண்மையில், விபத்துக்கு முன்பு அவர்கள் ஒரு பெர்சனல் ஆக்சிடென்ட் கவர் வைத்திருந்தால், உங்களுக்கு கூடுதல் நிதி பாதுகாப்பு மற்றும் சில குறைபாடுகள் ஏற்பட்டால் நிலையான நன்மை கிடைக்கும்.
இருப்பினும், பிறவி மற்றும் மனநல குறைபாடுகள் உள்ளவர்கள் அதிக ஆபத்துள்ள பிரிவின் கீழ் வருவார்கள் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும், இதனால் வழக்கமான ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான்களின் கீழ் வராமல் போகலாம் அல்லது பகுதியளவு கவரேஜ் மட்டுமே பெறலாம். எனவே, அவர்கள் சிறந்த மருத்துவ பாதுகாப்புக்கான அரசாங்க திட்டங்களை எதிர்பார்க்கலாம்.
மாற்றுத் திறனாளிகளுக்காக இந்திய அரசு இரண்டு சிறப்பு ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான்களை வழங்குகிறது:
அளவுருக்கள் |
நிர்மால்யா ஹெல்த் இன்சூரன்ஸ் |
ஸ்வாவலம்பன் ஹெல்த் இன்சூரன்ஸ் |
வயது வரம்பு |
வயது வரம்பு இல்லை |
18-65 வயது வரை |
தகுதிகள் |
தேசிய அறக்கட்டளையில் பதிவு செய்திருக்க வேண்டும் |
குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கும் குறைவாக இருக்கவேண்டும் |
இன்சூரன்ஸ் தொகை |
₹1 லட்சம் இன்சூரன்ஸ் |
₹2 லட்சம் இன்சூரன்ஸ் |
கவரேஜ் லிமிட்கள் |
இதற்கான லிமிட்கள்: வெளிநோயாளிகளுக்கான (ஓ.பி.டி) செலவுகள்: ரூ .14,500, தொடர்ச்சியான சிகிச்சை: ரூ .10,000, மாற்று மருந்துகள்: ரூ .4,500, போக்குவரத்து செலவுகள்: ரூ .1,000 |
மாற்றுத்திறனாளி நபர், வாழ்க்கைத் துணை மற்றும் இரண்டு குழந்தைகளை உள்ளடக்கியது |
பிரீமியம் |
₹ 250 (குடும்ப வருமானம் ₹ 15,000 க்கும் குறைவாக இருந்தால்), ₹ 500 (குடும்ப வருமானம் ₹ 15,000 க்கு மேல் இருந்தால்) |
₹ 3,100 (இன்சூரரிடமிருந்து 10% மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும்) |
தேவையான ஆவணங்கள் |
செல்லுபடியாகும் மாற்றுத்திறனாளி சான்றிதழ் |
மாற்றுத்திறனாளி சான்றிதழ், முன்மொழிவு படிவம், பிரீமியம் செலுத்தியதற்கான ரசீது, வருமானச் சான்றிதழ், அடையாள சான்று |
ஹெல்த் இன்சூரன்ஸிற்கான உங்கள் தகுதி அளவுகோல்களை தீர்மானிக்கும் சில காரணிகளும் உள்ளன. அவை பின்வருமாறு:
தற்போதைய ஆரோக்கிய நிலை: மாற்றுத்திறனாளி ஒரு நபருக்கு இன்சூரன்ஸ் செய்யும்போது இன்சூரன்ஸ் நிறுவனம் சரிபார்க்கும் முதல் விஷயம் கடந்த சில மாதங்களில் அவர்களின் உடல்நிலையின் நிலை. இது அவர்களுக்கான ஆபத்தை நிறுவுவதாகும். ஹெல்த் ரிப்போர்ட்கள் மற்றும் நாள்பட்ட நோய்கள் மற்றும் ஏற்கனவே இருக்கும் சிக்கல்களைச் சரிபார்க்க மேலும் ஏதேனும் சோதனைகளின் அடிப்படையில், அவர்கள் இன்சூரன்ஸ் பிளானை அங்கீகரிக்கலாம் அல்லது நிராகரிக்கலாம்.
வருமானம்: மாற்றுத்திறனாளியின் தகுதியை நிர்ணயிக்கும் மற்றொரு முக்கியமான காரணி அவர்களின் பிரீமியம் செலுத்தும் திறன் ஆகும். எனவே, இன்சூரன்ஸ் நிறுவனம் உங்கள் சம்பாதிக்கும் திறன், வங்கிக் கணக்குகள் மற்றும் அறிக்கைகளை சரிபார்ப்பார்கள். இருப்பினும், பல மாற்றுத்திறனாளிகள் தங்கள் குடும்ப உறுப்பினர்களை நிதி ரீதியாக சார்ந்துள்ளனர், மேலும் இதுபோன்ற சந்தர்ப்பங்களில், அவர்கள் குடும்பத்தின் ஒட்டுமொத்த வருமானத்தையும் சரிபார்ப்பார்கள். இந்த காரணிகளின் அடிப்படையில், தனிநபரை உள்ளடக்க வேண்டுமா இல்லையா என்பதை அவர்கள் தீர்மானிப்பார்கள்.
நீங்களோ அல்லது ஒரு குடும்ப உறுப்பினரோ குறைபாடுடன் வாழ்ந்தால், இப்போது நீங்கள் ஒரு ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை வாங்க என்ன செய்யலாம் என்பதைப் பற்றி உங்களுக்கு ஒரு சிறந்த யோசனை உள்ளது.
துரதிர்ஷ்டவசமாக, மாற்றுத்திறனாளி நபர்களுக்கான ஹெல்த் இன்சூரன்ஸ் என்று வரும்போது முன்னேற்றத்திற்கு இன்னும் நிறைய வாய்ப்புகள் உள்ளன. தற்போது, அதிக ஆபத்து என்று கருதப்படாத மாற்றுத்திறனாளி நபர்களுக்கு மட்டுமே தனியார் இன்சூரன்ஸ் பிளான்கள் கிடைக்கின்றன. ஆனால், எதிர்காலத்தில் சீர்திருத்தங்கள் மற்றும் மேம்பாடுகள் நிச்சயமாக இருக்கும், இதனால் அனைவருக்கும், கடுமையான குறைபாடுகளை கொண்டுள்ள மாற்றுத்திறனாளி நபர்களுக்கும் ஹெல்த் இன்சூரன்ஸ் கிடைக்கும்.