கிரிட்டிகல் இல்னெஸ் பாதுகாப்பு என்பது உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் பிளானில் அல்லது உங்கள் இன்சூரன்ஸ் நிறுவனம் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஹெல்த் இன்சூரன்ஸ் பிளானின் வகையைப் பொறுத்து கூடுதல் பாதுகாப்புடன் கிடைக்கும் ஒரு ஹெல்த் இன்சூரன்ஸ் ஆகும்.
இது குறிப்பிட்ட கிரிட்டிகல் இல்னெஸ் பாதிப்புகளுக்கு எதிராக உங்களுக்கு இது பாதுகாப்பு வழங்கும்; மிகவும் பொதுவானவையாக புற்றுநோய், நுரையீரல் அல்லது கல்லீரல் செயலிழப்பு, பக்கவாதம் மற்றும் பல ஆபத்தான நோய்களை சொல்லலாம். டிஜிட்டில், எங்களின் அனைத்து ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான்களிலும் கிரிட்டிகல் இல்னெஸ் பாதுகாப்பு பெனிஃபிட் தற்போது நிரந்தரமாக சேர்க்கப்பட்டுள்ளது. கூடுதல் கட்டணத்தை நீங்கள் செலுத்த வேண்டியதில்லை.
கிரிட்டிகல் இல்னெஸ் ஒரு தனிநபரின் ஹெல்த், வாழ்க்கை முறை மற்றும் நிதிநிலைகளை முக்கியமான அளவில் தீவிரமாக பாதிக்கும் தீவிர மருத்துவ நிலைகள் எனக் கூறலாம். புற்றுநோய், ஸ்க்லெரோசிஸ் (Sclerosis), கோமா, மாரடைப்பு, பக்கவாதம் (Paralysis) போன்ற இல்னெஸ் இதற்கான சில எடுத்துக்காட்டுகள்.
துரதிர்ஷ்டவசமாக, காலப்போக்கில் அதிகரித்து வரும் புற்றுநோய் நிகழ்வுகளைப் பற்றி நாம் அடிக்கடி படித்து அறிந்து கொள்கிறோம். அது உங்களுக்குத் தெரிந்த ஒருவராக இருந்தாலும் சரி, அல்லது செய்தித்தாளில் அல்லது இன்டர்நெட்டில் நீங்கள் படித்த கட்டுரையாக இருந்தாலும் சரி; புற்றுநோய் போன்ற கடுமையான நோய்கள் மற்றும் ஹார்ட் ஃபெயிலியர், லிவர் ஃபெயிலியர், நுரையீரல் ஃபெயிலியர் போன்றவை பலரின் வாழ்க்கையில் ஒரு சோகமான பகுதியாகவும் மாறியுள்ளன.
இது ஒருவரின் உடல்நலம் மற்றும் நல்வாழ்வை மட்டும் பாதிக்காது, அதேநேரம் ஒருவரின் நிதியையும் பாதிக்கிறது. அதிர்ஷ்டவசமாக, ஒரு ஹெல்த் இன்சூரன்ஸ், இதற்கு ஏற்படும் எக்ஸ்பென்ஸை மேனேஜ் செய்ய உங்களுக்கு உதவுகிறது. எனவே நீங்கள் அல்லது உங்கள் அன்புக்குரியவர்களின் சிறந்த ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் எளிதாக உறுதிப்படுத்த முடியும்.
நீங்களோ அல்லது உங்கள் அன்புக்குரியவரோ கிரிட்டிகல் இல்னெஸுக்கு சிகிச்சை பெறும்போது மருத்துவச் செலவுகளை ஈடுசெய்ய உதவும் ஒரு முக்கியமான ஹெல்த் பெனிஃபிட் என அர்த்தம் கொள்ளலாம்.
ஒரு ஹெல்த் இன்சூரன்ஸில், இந்த பெனிஃபிட் பெரும்பாலும் கூடுதல் கட்டணத்தில், ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை வாங்கும் போது தேர்வு செய்யக்கூடிய ஒரு கூடுதல் அம்சமாக வழங்கப்படுகிறது.
எனினும், டிஜிட் மூலம் ஹெல்த் இன்சூரன்ஸ் எடுத்தால், இந்த பெனிஃபிட்டை எங்கள் அனைத்து ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான்களிலும் உள்ளடக்கிய பலனாக இதை நாங்கள் வழங்குகிறோம். எல்லாவற்றிற்கும் மேலாக, இல்னெஸால் திடீரென பாதிக்கப்படுகிறோம், அவ்வாறு நீங்கள் எதிர்பார்க்காத நேரத்தில் பாதிக்கப்படும்போது நாங்கள் உங்களுக்கு பக்க பலமாக இருக்க விரும்புகிறோம்!
கூடுதலாக, எங்களின் ஹெல்த் இன்சூரன்ஸ் பிளானானது, கூடுதல் 25% இன்சூரன்ஸ் அமெளன்ட்டுடன் வருகிறது. இது உங்கள் இன்சூரன்ஸ் அமெளன்ட்டை நீங்கள் ஏற்கனவே தீர்த்துவிட்டிருந்தால் கூடுதலாக இந்த அமெளன்ட் உங்களுக்கு உதவும். குறிப்பாக ஆபத்தான இல்னெஸால் ஏற்படும் மருத்துவமனை மற்றும் சிகிச்சை எக்ஸ்பென்ஸுக்காக இந்த அமெளன்ட்டை பயன்படுத்திக் கொள்ள முடியும்.
உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸில் உள்ள ஒரு கிரிட்டிகல் இல்னெஸுக்கான பெனிஃபிட், மருத்துவமனையில் சேர்வதற்கு முந்தைய மற்றும் பிந்தைய அனைத்து எக்ஸ்பென்ஸ்களுக்கும் ஏற்றதாக இருக்கும்; இதில் நோயறிதல் மற்றும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின் ஏற்படும் எக்ஸ்பென்ஸ்கள் வரை அனைத்தும் அடங்கும்.
முக்கியமானவை: கோவிட் 19 ஹெல்த் இன்சூரன்ஸில் என்ன இருக்கிறது என்பதைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ளுங்கள்.
டிஜிட்டில், பின்வருபவை கிரிட்டிகல் இல்னெஸ் என்றழைக்கப்படும் கிரிட்டிகல் இல்னெஸுக்கான பெனிஃபிட்டின் கீழ் பாதுகாக்கப்படும் டிசீஸ் மற்றும் டிசீஸ்களின் பட்டியல்:
வகை |
கிரிட்டிகல் இல்னெஸ் |
வேகமாகப் பரவக்கூடியவை |
புற்றுநோயின் ஸ்பெசிஃபைடு செவரிட்டி (Cancer of Specified Severity) |
கார்டியோவாஸ்குலர் சிஸ்டம் |
மையோகார்டியல் இன்ஃபார்க்ஷன், ஓபன் ஹார்ட் அல்லது ஹார்ட் வால்வ்ஸ் ரிபிளேஸ்மெண்ட், சர்ஜரி டு ஆர்டா (Surgery to Aorta), பிரைமரி (இடியோபாடிக்) பல்மனரி ஹைப்பர்டென்ஷன்), ஓபன் செஸ்ட் சி.ஏ.பி.ஜி (CABG) |
மேஜர் ஆர்கன் டிரான்ஸ்பிளன்ட் |
எண்ட் ஸ்டேஜ் லிவர் ஃபெயிலியர், எண்ட் ஸ்டேஜ் நுரையீரல் ஃபெயிலியர், கிட்னி ஃபெயிலியர் ரிக்குயரிங் ரெகுலர் டயலிசிஸ், மேஜர் ஆர்கன்/போன் மாரோ டிரான்ஸ்பிளன்ட் |
நெர்வஸ் சிஸ்டம் |
அபாலிக் சிண்ட்ரோம், பினைன் பிரைன் டியூமர், கோமா ஆஃப் ஸ்பெசிஃபைடு செவரிட்டி, மேஜர் ஹெட் ட்ராமா, பர்மனென்ட் பாராலிசிஸ் லிம்ப்ஸ், ஸ்டிரோக் ரிசல்ட்டிங் இன் பர்மனென்ட் சிம்ப்டம்ஸ், மோட்டார் நியூரான் டிசீஸ் வித் பர்மனென்ட் சிம்ப்டம்ஸ், மல்டிபிள் ஸ்க்லெரோசிஸ் வித் பர்சிஸ்டிங் சிம்டம்ப்ஸ் |
மற்றவைகள் |
லாஸ் ஆஃப் இன்டிபென்டன்ட் எக்சிஸ்டன்ஸ், அப்லாஸ்டிக் அனீமியா |
இதற்கான எளிய, நேரடியான பதில் என்னவென்றால், நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த சேமிப்பை, கடுமையான டிசீஸ் ஏற்பட்டால் ஏற்படும் கடுமையான மெடிக்கல் எக்ஸ்பென்ஸ்களிலிருந்து பாதுகாக்கவே எனக் கூறலாம். திடீரென ஏற்படும் இதுபோன்ற நிகழ்வை நீங்கள் கையாளும் போது, பணம் ஒரு பெரிய முட்டுக்கட்டையாக உள்ளது.
உதாரணமாக, மார்பக புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ஹெர்செப்டின் என்ற புற்றுநோய் மருந்தை எடுத்துக் கொள்ளலாம். ஒரு மருந்து பாட்டில் விலையே குறைந்தபட்சம் ரூ.75,000 முதல் ரூ.1 லட்சம் வரை இருக்கும்.
மேலும் சிகிச்சைக்காக ஒரு நோயாளிக்கு 6 முதல் 17 மருந்து பாட்டில்கள் தேவைப்படும். அறுவைசிகிச்சை எக்ஸ்பென்ஸுகள் பல லட்சங்கள் வரை செல்லலாம். மருத்துவமனைக்கு முன், மருத்துவமனைக்குச் சென்ற பின், மருந்துகளின் எக்ஸ்பென்ஸ்கள் என ஒன்றாக உங்களிடம் எதிர்பார்த்து காத்திருக்கும். இத்தகைய சூழ்நிலைகளில் போதுமான பாதுகாப்பு கொண்ட ஒரு முக்கியமான கிரிட்டிகல் இல்னெஸ் பெனிஃபிட் உங்களுக்கு பாதுகாப்பை வழங்கும்.
வெளிப்படைத்தன்மையை நாங்கள் நம்புகிறோம், அதனால்தான் ஆரம்பத்திலிருந்தே கிரிட்டிகல் இல்னெஸுக்கான பெனிஃபிட்டைப் பற்றிய அனைத்தையும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என விரும்புகிறோம். டிஜிட்டின் கிரிட்டிகல் இல்னெஸ் பெனிஃபிட் தொடர்பான சில நிபந்தனைகள் இங்கே:
வாழ்க்கையில் முதன்முறையாக உங்களுக்கு ஏதேனும் கிரிட்டிகல் டிசீஸ் அல்லது அதற்குத் தேவையான அறுவை சிகிச்சை தேவைப்பட்டால் அதை மேற்கொள்ள எங்கள் இன்சூரன்ஸ் உங்களுக்கு பாதுகாப்பு வழங்கும்.
பாலிசியின் தொடக்கத் தேதியிலிருந்து 30 நாட்கள் வெயிட்டிங் பீரியட் உள்ளது. பின்னர் உங்களின் கிரிட்டிகல் இல்னெஸுக்கான பெனிஃபிட்கள் உள்பட எந்தவொரு பெனிஃபிட்களும் செயல்படுத்தப்படும்.
கடுமையான டிசீஸ், ஏற்கனவே டிசீஸ் இருக்கும் நிலை அல்லது டிசீஸால் ஏற்படும் விளைவாக கிரிட்டிகல் இல்னெஸ்கள் இருக்கக் கூடாது.
மது, புகையிலை மற்றும் போதைப்பொருள் உட்கொள்வதால் ஏற்படும் எந்தவொரு நோய்க்கும் இன்சூரன்ஸ் பாதுகாப்பு கிடைக்காது.
போர், பயங்கரவாதம் அல்லது இராணுவ நடவடிக்கைகளால் ஏற்படும் எந்தவொரு பாதிப்புக்கும் இன்சூரன்ஸ் பாதுகாப்பு வழங்காது.
எச்.ஐ.வி(HIV)/எய்ட்ஸ்(AIDS) ஆகிய பாதிப்புகளுக்கும் இந்த பெனிஃபிட்டின் கீழ் இன்சூரன்ஸ் பாதுகாப்பு வராது.
எதிர்காலம் உங்களுக்காக என்ன வைத்துக் கொண்டு காத்திருக்கிறது என்பதை நீங்கள் ஒருபோதும் அறிய மாட்டீர்கள். ஆனால் அவ்வாறு ஏதேனும் ஆபத்து நேர்ந்துவிட்டால் அப்போது உங்களை பாதுகாத்துக் கொள்ள நீங்கள் இப்போது சரியான நேரத்தில் செயல்படலாம். ஒரு புத்திசாலி ஒருமுறை சொன்னது இதுதான். 'நேரத்தில் செய்யும் ஒரு விஷயம் உங்களைக் காப்பாற்றும்'.
நாங்கள் இன்சூரன்ஸை மிகவும் எளிமையாக்குகிறோம். இப்போது 5 வயது குழந்தைகளும் அதை புரிந்து கொள்ள முடியும்.
இது ஒரு இனிமையான குளிர்காலத்தில் ஒரு காலை பொழுது என கற்பனை செய்து கொள்ளுங்கள். டினா என்பவர், குளிர்ந்த காலநிலையை அனுபவிக்க முடிவுசெய்து, ஜாக்கெட்டை அணிந்துகொண்டு நடைபயிற்சிக்கு செல்கிறாள். சில நிமிடங்களுக்குப் பிறகு, சூழ்நிலை குளிர்ச்சியாக மாறி, பனி பெய்யத் தொடங்குகிறது!
இப்போது, டினா, தீவிர காலநிலையில் போதிய பாதுகாப்பின்றி சிக்கிக் கொண்டாள் - அவள் கோட், கேப் மற்றும் ஹேண்ட் கிளவுஸ் ஆகியவற்றை தன்னுடன் கொண்டு வந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறாள். ஆனால் அவள் இதுபோன்று நடக்கும் என எதிர்பார்த்து முன்கூட்டியே தயாராக இல்லையே. ஆனால், ஒரு முக்கியமான இல்னெஸ் பெனிஃபிட் உங்களை எதிர்பாராத தருணங்களில் பாதுகாக்கிறது என்பதை இக்கதையின மூலம் புரிந்து கொள்ளுங்கள்.