இந்திய ரிசர்வ் வங்கி அனைத்து லோன் தகவல் நிறுவனங்களுக்கும் ஆன்லைனில் கிரெடிட் ஸ்கோரைச் சரிபார்க்கவும், ஒவ்வொரு ஆண்டும் ஒரு இலவச கிரெடிட் ஸ்கோர் அறிக்கையை வழங்கவும் பயனர்களை அனுமதிப்பதை கட்டாயமாக்கியுள்ளது. இதை சிபில் வலைத்தளம் மூலம் நீங்கள் எளிதாக செய்யலாம்.
ஆன்லைனில் சிபில் ஸ்கோரை எவ்வாறு சரிபார்க்கலாம்
பின்பற்ற வேண்டிய படிகள் பின்வருமாறு:
- படி 1: சிபில் வலைத்தளத்திற்குச் சென்று, உங்கள் சிபில் ஸ்கோரைத் தெரிந்து கொள்ளுங்கள் அல்லது உங்கள் சிபில் ஸ்கோரைப் பெறுங்கள் என்ற ஆப்ஷனைக் கிளிக் செய்யவும்.
- படி 2: உங்கள் லாகின் கிரேடன்ஷியல்களைப் பயன்படுத்தி லாகின் செய்யுங்கள் அல்லது புதிய அக்கவுண்ட்டை உருவாக்குங்கள். இதைச் செய்ய, உங்கள் பெயர், தொடர்பு எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தி பாஸ்வேர்டை உருவாக்க வேண்டும்.
- படி 3: நீங்கள் அடையாளச் சான்று (பாஸ்போர்ட் எண், பான் கார்டு, ஆதார் அல்லது வாக்காளர் அடையாள அட்டை) மற்றும் உங்கள் பின்கோடு மற்றும் பிறந்த தேதி போன்ற கூடுதல் தகவல்களையும் இணைக்க வேண்டும்.
- படி 4: இது முடிந்ததும் படிவத்தை சமர்ப்பிக்கவும்.
- படி 5: உங்கள் அடையாளத்தைச் சரிபார்க்க உங்கள் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் ஐடிக்கு ஓ.டி.பி (OTP)-ஐப் பெறுவீர்கள்.
- படி 6: நீங்கள் ஓ.டி.பி (OTP)-ஐ தட்டச்சு செய்து சரிபார்த்தவுடன், நீங்கள் உள்நுழைந்து உங்கள் சிபில் கிரெடிட் ஸ்கோரைச் சரிபார்க்க டாஷ்போர்டுக்குச் செல்லலாம்.
- படி 7: நீங்கள் myscore.cibil.com-க்கு திருப்பி விடப்படுவீர்கள். அங்கு உங்கள் விவரங்களைப் பயன்படுத்தி உள்நுழையலாம். இங்கே, உங்கள் கிரெடிட் ஸ்கோரைப் பார்க்க முடியும்.
உங்கள் கிரெடிட் அறிக்கையைப் பெற
- படி 8: உங்கள் டாஷ்போர்டில் "கிரெடிட் ரிப்போர்ட்" எனும் ஆப்ஷனைக் கிளிக் செய்யவும்.
- படி 9: உங்கள் லோன்கள் மற்றும் கிரெடிட் கார்டுகள் பற்றிய கேள்விகள் போன்ற உங்கள் லோன் வரலாறு தொடர்பான கூடுதல் தகவல்களை நிரப்ப வேண்டிய அங்கீகாரப் பக்கத்திற்கு நீங்கள் அழைத்துச் செல்லப்படுவீர்கள். சிபில் உடன் உங்கள் அடையாளத்தை அங்கீகரிக்க குறைந்தது 5 இல் 3 கேள்விகளுக்கு நீங்கள் சரியாக பதிலளிக்க வேண்டும்.
- படி 10: அங்கீகரிக்கப்பட்டதும், உங்களின் முழுமையான கிரெடிட் அறிக்கை 24 மணி நேரத்திற்குள் உங்கள் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் ஐடி-க்கு வழங்கப்படும்
உங்கள் கிரெடிட் ஸ்கோரை வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே இலவசமாகச் சரிபார்க்க முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் அடிக்கடி கிரெடிட் அறிக்கைகளைப் பெற விரும்பினால், இந்தத் தகவலுக்காக சிபிலுக்கு பணம் செலுத்துவதன் மூலம் நீங்கள் அவ்வாறு பெறலாம். தற்போது, கிரெடிட் அறிக்கைக்கான கட்டணம் ₹550 ஆக உள்ளது.
சிபில் ஸ்கோரை ஆஃப்லைனில் சரிபார்ப்பது எப்படி
பின்வரும் படிகளைப் பின்பற்றுவதன் மூலம் உங்கள் சிபில் கிரெடிட் ஸ்கோரை ஆஃப்லைனில் பெறலாம்:
- படி 1: கிரெடிட் ஸ்கோர் கோரிக்கைப் படிவத்தை சிபில் வலைத்தளத்தில் இருந்து பதிவிறக்கவும்.
- படி 2: அதை பிரிண்ட் அவுட் எடுத்துக் கொண்டு தேவையான அனைத்து தகவல்களையும் சரியாக நிரப்பவும்.
- படி 3: உங்கள் அடையாளச் சான்றின் நகலையும் (பாஸ்போர்ட் எண், பான் கார்டு, ஆதார் அல்லது வாக்காளர் அடையாள அட்டை போன்றவை) இணைக்க வேண்டும்.
- படி 4: "TransUnion CIBIL"-இல் உருவாக்கப்பட்ட டிமாண்ட் டிராஃப்டை இணைக்கவும். இது ₹164 (கிரெடிட் அறிக்கைக்கு) அல்லது ₹5500 (கிரெடிட் ரிப்போர்ட் மற்றும் கிரெடிட் ஸ்கோர் இரண்டிற்கும்) இருக்க வேண்டும்.
- படி 5: இது முடிந்ததும் மேற்கண்ட ஆவணங்களை மின்னஞ்சல், தபால் அல்லது கூரியர் மூலம் அனுப்பவும்:
- மின்னஞ்சல் மூலம் அனுப்பினால், ஸ்கேன் செய்யப்பட்ட ஆவணங்களை cibilinfo@transunion.com என்ற முகவரிக்கு அனுப்பவும்
- தபால் மூலம் அனுப்பினால், ஆவணங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
டிரான்ஸ்யூனியன் சிபில் லிமிடெட் (கிரெடிட் இன்ஃபர்மேஷன் பீரோ (இந்தியா)), ஒன் இந்தியாபுல்ஸ் சென்டர்
டவர் 2ஏ, 19வது ஃப்ளோர், சேனாபதி பாபத் மார்க்
எல்பின்ஸ்டோன் ரோடு
மும்பை- 400013
- படி 6: உங்கள் கிரெடிட் ஸ்கோரும் அறிக்கையும் நீங்கள் படிவத்தில் கொடுத்திருந்த முகவரிக்கு அல்லது உங்கள் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்.