இந்தியாவில் பிறந்த குழந்தைக்கான பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் போது உள்ள பல்வேறு படிகளைப் புரிந்துகொள்வதற்கு முன், இந்த ஆவணத்தில் உள்ள தகவல்கள் என்னவென்று பார்க்கவும்.
எந்தவொரு பெற்றோரும் தெரிந்து கொள்ள வேண்டிய முதல் விஷயம் குழந்தைபாஸ்போர்ட்டுகளுக்கான வயது வரம்புகளே. விண்ணப்பிக்கும் போது உங்கள் குழந்தையின் வயது 4 க்கும் கீழ் இருந்தால், அவர்/அவள் இந்த ஆவணத்தைப் பெற தகுதி பெறுவார்கள். அதை அவர்கள் சார்பாக பெற்றோர் அல்லது சட்டப்பூர்வப் பாதுகாவலர்களால் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
இந்தியாவில் பிறந்த குழந்தைக்கான பாஸ்போர்ட் விண்ணப்பம் என்பது ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் செயல்முறைகள் மூலம் நடைபெறுகிறது. இந்த இரண்டு செயல்முறைகளில் ஏதேனும் ஒன்றின் மூலம் நீங்கள் அதற்கு விண்ணப்பிக்கலாம். நீங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ள ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் செயல்முறைகள் இரண்டையும் தெரிந்துகொள்ளலாம்.
பிறந்த குழந்தைகளுக்கு ஆன்லைன் பாஸ்போர்ட் விண்ணப்பிக்கவும்
பிறந்த குழந்தைக்கு ஆன்லைனில் பாஸ்போர்ட் விண்ணப்பிக்க வேண்டுமெனில், நீங்கள் பின்பற்ற வேண்டிய செயல்முறைகள் பின்வருமாறு -
படி 1: பாஸ்போர்ட் சேவா கேந்திரா வலைத்தளத்தைப் பார்க்கவும்.
படி 2: இந்தப் போர்ட்டலில் துல்லியமான தகவல்களை வழங்கி கணக்கைப் பதிவுசெய்யவும். உங்கள் இமெயில் ஐடிக்கு அனுப்பப்பட்டிருக்கும் இணைப்பின் மூலம் இந்தக் கணக்கைச் சரிபார்க்கவும்.
படி 3: இந்த பி.எஸ். கே (PSK) கணக்கில் உங்கள் விவரங்கள் மூலம் உள்நுழையவும்.
படி 4: ஆன்லைன் பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் மாற்று விண்ணப்பம் 1 அல்லது மாற்று விண்ணப்பம் 2 என்பதில் ஒன்றைத் தேர்வு செய்யவும். முதல் விருப்பம் உடனடியாக ஆன்லைன் படிவத்தை நிரப்ப உதவும், இரண்டாவது விருப்பம் இந்தப் படிவத்தை பதிவிறக்கம் செய்து நீங்கள் ஓய்வாக இருக்கும் நேரத்தில் நிரப்ப உதவும்.
படி 5: நீங்கள் ஆன்லைன் படிவத்தை மாற்று 1 இன் கீழ் நேரடியாக சமர்ப்பிக்கலாம். நீங்கள் மாற்று விண்ணப்பம் 2 ஐத் தேர்வுசெய்தால், நிரப்பப்பட்ட படிவத்தை எக்ஸ்.எம்.எல்(XML) வடிவத்தில் சேமிக்க வேண்டும். அதன் பிறகு, நீங்கள் மாற்று விண்ணப்பம் 2 என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுத்த அதே பிரிவில் அதைப் பதிவேற்றவும்.
படி 6: அதற்கான விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தி, ஸ்லாட் நேரத்தை முன்பதிவு செய்யவும்.
குழந்தைக்கான ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை இத்துடன் நிறைவடைகிறது.
இருப்பினும், இது உங்களுக்கு ஒத்துவரவில்லை எனில், பாஸ்போர்ட் பெற ஆஃப்லைன் விண்ணப்பங்களையும் அரசாங்கம் அனுமதிக்கிறது.
பிறந்த குழந்தைகளுக்கான ஆஃப்லைன் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கவும்
எல்லா பாஸ்போர்ட் சேவா கேந்திராக்களிழும் பெரியோர்களுக்கான பாஸ்போர்ட்டுக்கு வாக்-இன் விண்ணப்பங்களை அனுமதிப்பதில்லை என்றாலும், மைனர் மற்றும் குழந்தை பாஸ்போர்ட்டுகளுக்கு இந்த வசதி அனுமதிக்கப்படுகிறது. எனவே, ஆஃப்லைன் செயல்முறை பின்வருமாறு -
படி 1: நீங்கள் விண்ணப்பித்த பாஸ்போர்ட் சேவை கேந்திரா/தபால் அலுவலக பாஸ்போர்ட் சேவா கேந்திரா/பாஸ்போர்ட் அலுவலகத்திற்குச் செல்லவும்.
படி 2: தேவையான விவரங்களைக் கொண்டு விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும்.
படி 3: பூர்த்தி செய்யப்பட்ட படிவத்துடன் தேவையான அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்கவும்.
படி 4: குழந்தை பாஸ்போர்ட் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்ய கட்டணங்களை செலுத்தவும்.
குழந்தை பாஸ்போர்ட்டுக்கு எப்படி, எங்கு விண்ணப்பிப்பது என்பது இப்போது உங்களுக்குத் தெரியும், இந்த செயல்முறை முடிவடைவதற்குத் தேவையான பல்வேறு ஆவணங்களைப் பற்றியும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.