Third-party premium has changed from 1st June. Renew now
டூ வீலர் இன்சூரன்ஸை புதுப்பிப்பது தொடர்பான அனைத்தும்
ஓரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல தற்போது பல வகையான போக்குவரத்து வசதிகள் இருந்தாலும், போக்குவரத்து நெரிசலில் செல்வது போன்ற பலவற்றிற்கு வசதியாக இருப்பது டூ வீலர்கள் தான்.
வண்டி ஓட்டுவதற்கு முன்னரே, ஒவ்வொரு பைக் ஓட்டுனரும் அனைத்து போக்குவரத்து விதிகளையும் நன்கு தெரிந்து வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். அதாவது, ஸ்பீட் லிமிட்டை பரிசோதிப்பது, ஹெல்மெட் அணிவது மற்றும் தேவையான டூ-வீலர் இன்சூரன்ஸைப் பெற்றுக் கொள்வது போன்றவைகளை அறிந்து கொள்ள வேண்டும்.
நீங்கள் புதியது வாங்கினாலும் அல்லது பழையதை விரைவில் புதுப்பித்தாலும், குறைந்தபட்சம் மூன்றாம்-தரப்பினர் டூ-வீலர் இன்சூரன்ஸை வைத்திருப்பது சட்டப்படி கட்டாயமாகும்.
ஏன் பைக் இன்சூரன்ஸை ஆன்லைனில் புதுப்பிப்பது நல்ல யோசனையாகும்?
பைக் இன்சூரன்ஸ் பாலிஸி என்பது சேதம், திருட்டு, கலவரம் மற்றும் வேலைநிறுத்தம், தீவிரவாதம், மற்றும் பிற இயற்கை பேரிடர்கள் போன்றவற்றில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது. உங்கள் பைக்கின் பாலிஸி தேதி காலாவதியானதற்கு பின்னரும், இன்சூரன்ஸைத் தொடர்ந்து உபயோகப்படுத்துவதென்பது, பைக் இன்சூரன்ஸ் புதுப்பிப்பு ஆகும்.
தற்போதைய இன்சூரன்ஸ் பாலிஸி முடிவடையும் தருணத்தை குறிப்பதே இன்சூரன்ஸ் காலாவதி தேதியாகும். உங்கள் பைக் இன்சூரன்ஸை அதே விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு புதுப்பிக்கலாம் அல்லது உங்கள் தர்போதைய பாலிஸியில் வேறு தேவையான ஆட்-ஆன்களை (add-on) சேர்த்து மேம்படுத்திக் கொள்ளலாம்.
பைக் பாலிஸியை எந்தவொரு இடைநிறுத்தமுமின்றி புதுப்பித்துக் கொண்டால், பாலிஸிதாரருக்கு போனஸ் கிடைக்கும். முந்தைய பாலிஸியில் எந்தவொரு கிளெய்ம்களும் செய்யப்படவில்லையெனில் மட்டுமே இந்த சலுகை கிடைக்கப்பெறும்.
பைக் இன்சூரன்ஸ் புதுப்பிப்பதற்கான விருப்பத்தேர்வுகள்
பைக் இன்சூரன்ஸ் பாலிஸியை புதுப்பிப்பதற்கு, நீங்கள் கீழ்க்கண்டவற்றில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம்:
#அதே இன்சூரருடன் தொடர்தல்: உங்கள் பைக்கின் தற்போதைய பாலிஸி உங்களுக்கு பிடித்திருக்கிறதென்றால், நீங்கள் அதே இன்சூரரை தேர்வு செய்து கொள்ளலாம்.அதே சமையம், நோ-கிளெய்ம் போனஸைத் தவறாமல் பெறுவதற்கு, உரிய நேரத்தில் அதனை புதுப்பிக்க வேண்டுமென்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
காலாவதி தேதிக்கு முன்பே பிரீமியத்தை டெபாசிட் செய்து விடுங்கள். ஏனென்றால், இன்சூரருக்கு பேமெண்ட் தொகை வந்தடைந்த பின்னரே பாலிஸி செயல்பாட்டிற்கு வருகிறது.
# புதிய இன்சூரருக்கு மாறுதல்: தகுந்த சேவை அளிக்கப்படாத காரணத்தால், நீங்கள் தற்போதைய இன்சூரருடன் தொடர விரும்பவில்லையெனில், நீங்கள் இன்சூரரை மாற்றிக் கொள்ளலாம். புது இன்சூரர், இன்சூர் செய்வதற்கு முன்பு பைக்கை பரிசோதித்துப் பார்ப்பார்.
நீங்கள் அனைத்து தகவல்களையும் ஆன்லைனிலேயே பெறலாம் மற்றும் பிரீமியத்தையும் அவ்வாறே செலுத்தலாம். தற்போதைய பாலிஸி முடிவடைவதற்கு முன்னரே இந்த அனைத்து நடைமுறைகளும் செய்யப்பட வேண்டும்.
பைக் இன்சூரன்ஸ் பாலிஸியை புதுப்பிப்பதற்கு முன்பு கருத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள்
பைக் பாலிஸியை புதுப்பிப்பதற்கு முன்பு நான் நன்றாக சிந்தித்துப் பார்ப்பதொன்றும் தவறில்லை. ஏதேனும் வாங்குவதற்கு முன்பு, குறிப்பாக நீண்ட கால உபயோகத்திற்கான பொருட்களை வாங்கும் போது நாம் இரண்டு முறை சிந்தித்துப் பார்க்கிறோமல்லவா?
அதே போன்று, உங்கள் பைக் இன்சூரன்ஸ் பாலிஸியை புதுப்பிப்பதற்கு முன்பு, நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் இவை:
புது இன்சூரரிடம் இன்சூர் செய்யும் போது நீங்கள் என்னென்ன எதிர்பார்க்கலாம்?
நிறைய மொபைல் ஹார்ட்வேர் பிளேயர்கள் இருப்பினும், அவற்றில் சில மட்டுமே அதிகம் விற்பனையாகின்றன. அதே போன்று, பல இன்சூரர்கள் இருப்பினும், சிலர் மட்டுமே நன்றாக விற்பனை செய்கின்றனர்.
புது இன்சூரரிடம் செல்வதற்கு முன்பு, இவ்வாறான விற்பனையை சாத்தியப்படுத்தக் கூடிய பல காரணிகளைப் பற்றி ஒருவர் தெரிந்து கொள்வது அவசியமாகும். அவற்றில் சில:அனைத்து இன்சூரன்ஸ் திட்டங்களையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். இது உங்களுக்கு திருப்திகரமாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே, புது இன்சூரருக்கு மாறுவதை பற்றி நீங்கள் சிந்திக்க வேண்டும்
# உங்கள் சௌகரியத்தை தெரிந்து கொள்ளவும்: வேறு இன்சூரருக்கு மாறுவது சுலபமானது, ஆனால் அது உங்களுக்கு அதிக செலவினை ஏற்படுத்தக் கூடியதா என்பதை நன்றாக ஆய்ந்து பார்த்து தெரிந்து கொள்ளவும்.
# உங்கள் சௌகரியத்தை தெரிந்து கொள்ளவும்: வேறு இன்சூரருக்கு மாறுவது சுலபமானது, ஆனால் அது உங்களுக்கு அதிக செலவினை ஏற்படுத்தக் கூடியதா என்பதை நன்றாக ஆய்ந்து பார்த்து தெரிந்து கொள்ளவும்.
# கிளெய்ம் ரிவியூஸ் பற்றி படித்துப் பார்க்கவும்: ஆன்லைனில் கிடைக்கக்கூடிய அனைத்து இன்சூரர்கள் தொடர்பான ஃபீட்பேக்கைப் பார்த்துத் தெரிந்து கொள்ளவும். இன்சூரரை பற்றிய தகவல்களை ஆராய்ந்து வழங்கக் கூடிய கூடிய பல நிறுவனங்கள் உள்ளன.
# இன்சூரரின் பொருளாதார வலிமையை உறுதி செய்து கொள்ளவும்: இன்சூரரின் பொருளாதார வலிமையைப் பற்றி உறுதி செய்து கொள்வது புத்திசாலித்தனமாகும். இந்த தகவல்கள் அவர்களின் வலைதளங்கள் மற்றும் அது போன்ற பிற மூலங்களிலிருந்தும் கிடைக்கப்பெறும்.
# திட்டங்களை ஒப்பிட்டுப் பார்க்கவும்: அனைத்து இன்சூரன்ஸ் திட்டங்களையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். இது உங்களுக்கு திருப்திகரமாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே, புது இன்சூரருக்கு மாறுவதை பற்றி நீங்கள் சிந்திக்க வேண்டும்
ஆன்லைனில் பைக் இன்சூரன்ஸை புதுப்பிப்பதற்கான முதன்மை காரணங்கள்
மற்ற துறைகளைப் போலவே, ஆன்லைன் தளங்கள் மற்றும் மீடியாக்களில் இன்சூரன்ஸ் நன்றாக செயல்படுகிறது. இப்போது புதுப்பிப்பதற்கு, நீங்கள் பின்வரும் காரணங்களினால் ஆன்லைன் முறையைத் தேர்ந்தெடுக்கலாம்:
# நிறைய நேரத்தை சேமிக்கலாம்: பிரௌஸ் செய்வதற்கும், ஒப்பிட்டுப் பார்ப்பதற்கும், ஆன்லைன் மிகவும் சுலபமானது. தேர்ந்தெடுப்பதற்கு சௌகரியமானதும், சுலபமானதும் கூட. அதாவது, நீங்கள் இதன் மூலம் உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தலாம்.
# பிரீமியம்கள் குறைவானது: ஆன்லைனில் இன்சூரன்ஸ் பாலிஸியை தேர்ந்தெடுப்பது குறைவான செலவினையே ஏற்படுத்தும். ஏனென்றால், இந்த வகையில் இன்சூரர்கள், விநியோக அலைவரிசை மற்றும் பிற தலைமைகளுக்கு செலவழிக்கும் பணத்தை மிச்சப்படுத்தலாம்.
# துரிதமானது மற்றும் எளிமையானது: ஆன்லைன் பாலிசி வாங்குவதென்பது துரிதமானது மற்றும் எளிமையானது. பாலிசிகளுக்கான ஒப்பீட்டினை இது உடனுக்குடன் செய்து விடுகிறது.
# விமர்சனங்கள்: இன்சூரன்ஸ் நிறுவனம் அல்லது அதன் திட்டங்களைப் பற்றிய விமர்சனங்கள் மற்றும் விரைவான செய்திகள் உங்களுக்குக் கிடைக்கும். மேலும் திட்டங்களைப் பற்றிய கருத்துக்களையும், ஆலோசனைகளையும் வெவ்வேறு நபர்களிடமிருந்து நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
# சிரமமற்ற சேவை: ஆன்லைன் சேவை என்பது ஏஜென்ட்டுகள் அல்லது தரகர்களற்ற சேவை முறையாகும். இன்சூரர்களுடன் நீங்கள் நேரடியாக தொடர்பு கொள்ளலாம். எனவே, நீங்கள் ஆன்லைன் பாலிசி வாங்கும் போது சிரமமிருக்காது. மேலும் முழுமையான வெளிப்படைத்தன்மை இருக்கும்.
ஆன்லைனில் பைக் இன்சூரன்ஸை புதுப்பிப்பது எவ்வாறு?
- ஸ்டெப் 1 - பைக் இன்சூரன்ஸ் பக்கத்திற்கு செல்லுங்கள், உங்கள் வாகன அமைப்பு, மாடல், மாறுபட்ட வடிவம், ரெஜிஸ்டிரேஷன் தேதி முதலியவற்றை பூர்த்தி செய்யவும். ‘கெட் கோட்’ (Get quote), அதாவது ‘தோராய மதிப்பீட்டினை வழங்கவும்' என்பதனை அழுத்தவும், பின்னர் உங்களுக்கான திட்டத்தை தேர்ந்தெடுக்கவும்.
- ஸ்டெப் 2 - மூன்றாம் தரப்பினர் பைக் இன்சூரன்ஸ் அல்லது விரிவான பைக் இன்சூரன்ஸ் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றினை தேர்ந்தெடுக்கவும்.
- ஸ்டெப் 3 - உங்கள் முந்தைய இன்சூரன்ஸ் பாலிசி பற்றிய தகவல்கள் - அதாவது காலாவதியாகும் தேதி, கடந்த வருடத்தில் மேற்கொள்ளப்பட்ட கிளெய்ம், நீங்கள் பெற்ற நோ கிளெய்ம் போனஸ் போன்றவற்றை தெரிவிக்கவும்.
- ஸ்டெப் 4 - உங்கள் பிரீமியத்திற்கான தோராய மதிப்பீட்டினை (quote) நீங்கள் பெறுவீர்கள். நீங்கள் ஸ்டான்டர்ட் பிளானை தேர்ந்தெடுத்திருந்தால், IDV-ஐ அமைத்துக் கொள்வதன் மூலமாக ஆட்-ஆன் (add-on)களை தேர்ந்தெடுத்து, அதனை மேலும் தனிப்பயனாக்கிக் கொள்ளலாம். அடுத்த பக்கத்தில் நீங்கள் கடைசி பிரீமியத்தை காணலாம்.