பழைய பைக் இன்சூரன்ஸ்

பழைய பைக்-கிற்கு பைக் இன்சூரன்ஸின் தோராய மதிப்பீட்டினை(quote) பெறவும்

Third-party premium has changed from 1st June. Renew now

பழைய டூ வீலர் இன்சூரன்ஸ் பற்றி அனைத்தும் விளக்கப்பட்டுள்ளது

நாம் எவ்வளவு தான் வளர்ந்தாலும், எப்போதும் நம் இறந்தகால தடங்களை சிறிது சுமந்து தான் வருகிறோம். நம் மனதிலும், இதயத்திலும் ஆழமாக பதியப்பட்டு, சில விலைமதிப்பற்ற பொருட்கள் என்றுமே நம்மை விட்டு நீங்குவதில்லை. நீங்கள் முதன் முதலில் வாங்கிய பைக் குறித்து உங்கள் எண்ண ஓட்டம் இவ்வாறாக இருக்கலாம். உங்கள் வயது அல்லது வாழ்க்கைமுறை மாற்றத்தின் காரணமாக, நீங்கள் உங்களுடைய பழைய பைக்-ஐ ஓட்டாமல் இருக்கலாம், ஆனாலும், நீங்கள் அதனை எப்போதும் விலைக்கு விற்பதற்கு விரும்ப மாட்டீர்கள்.

பழையதாக இருப்பினும், நீங்கள் பைக் இன்சூரன்ஸை பெறலாம். ஏனென்றால் நீங்கள் என்றாவது ஒரு நாள் அதனை பயன்படுத்த விரும்புவீர்கள். மேலும் இந்நாட்களில் இன்சூரன்ஸ் சுலபமாக கிடைக்கப்பெறுவதால் நீங்கள் அநாவசியமாக கவலை கொள்ள தேவையில்லை. 

பழைய பைக் இன்சூரன்ஸ் என்றால் என்ன?

வண்டிக்கு தேவைப்படுகிற சர்வீஸ் செய்தாலேயொழிய, பழைய டூ வீலரை ஓட்டுவது பாதுகாப்பானதல்ல என்னும் உண்மையை நாம் அறிந்திருக்கிறோம். உங்கள் பைக் 10 வருடத்திற்கும் மேற்பட்டதென்றால், நீங்கள் அதனை உண்மையிலேயே பழையதென்று கருதிக் கொள்ளலாம். நீங்கள் டூ வீலரை வாங்கும் சமயத்திலிருந்தே அதன் டிப்ரிஸியேஷன்(தேய்மானம்) ஆரம்பமாகிறது.

பழையதும், மதிப்பு குறைந்ததுமான பைக்-கிற்கு இன்சூரன்ஸ் வாங்குவதையே பழைய பைக் இன்சூரன்ஸ் என்று குறிப்பிடுகிறோம். நீங்கள் தேர்வு செய்யும் இன்சூரன்ஸ் காம்ப்ரிஹென்சிவ்(முழுமையான) பைக் இன்சூரன்ஸாகவோ அல்லது தேர்டு பார்ட்டி பைக் இன்சூரன்ஸாகவோ இருக்கலாம்.

பழைய பைக்-ஐ இன்சூர் செய்வது ஏன் அவசியமானதாக கருதப்படுகிறது?

உங்களுடைய பழைய வாகனத்தை கீழ்க்கண்ட அபாயங்களிலிருந்து பாதுகாப்பதன் பொருட்டு, நீங்கள் பைக் இன்சூரன்ஸ் வாங்க வேண்டும்:

  • தீ விபத்து அல்லது நம் கட்டுப்பாட்டை மீறி நடக்கின்ற ஏதேனும் நிகழ்வினால் ஏற்படும் சேதம்
  • திருட்டு
  • உங்கள் பைக் மோதி விபத்துக்குள்ளாகும் ஏதேனும் தேர்டு பார்ட்டி சொத்திற்கு ஏற்படும் சேதத்திற்கு நீங்கள் பொறுப்பேற்க வேண்டி வரும் தருணம்
  • உங்கள் பைக் மோதி விபத்துக்குள்ளாகும் ஏதேனும் தேர்டு பார்ட்டியினருக்கு நேரும் உடல்ரீதியான காயத்திற்கு பொறுப்பேற்க வேண்டி வரும் தருணம்

பழைய பைக்-ஐ இன்சூர் செய்யும் போது என்ன கவனிக்க வேண்டும்?

நீங்கள் ஒரு நல்ல மொபைல் ஃபோன் வாங்க கடைக்கு செல்கிறீர்கள். அப்போது நீங்கள் சமீபத்திய தொழில்நுட்பம், சேமிப்பு கொள்ளளவு, கேமரா தரம் மற்றும் இது போன்ற பிற ஒத்த அம்சங்கள் இருக்கின்றனவா என பார்ப்பீர்கள். உங்களுடைய பழைய லேப்டாப் புதிது போன்று செயல்படுவதற்கு விரும்புகிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதற்கு என்ன செய்வீர்கள்? அதன் ஆற்றலை அதிகரிப்பதற்கும், செயல்திறனை மேம்படுத்துவதற்கும், சமீபத்திய இயக்கு தளத்தை(ஆப்பரேட்டிங் சிஸ்டம்) வாங்கி இன்ஸ்டால் செய்வீர்கள்.

இப்போது நாம் பார்த்தது போலவே, உங்களுடைய பழைய பைக்-கிற்கு இன்சூரன்ஸ் வாங்குவதற்கு முன் சில விஷயங்களை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். நீங்கள் இதை குறித்து முடிவெடுப்பதற்கு கீழ்க்கண்ட காரணிகள் உதவி புரியும்:

பழைய பைக்-ஐ இன்சூர் செய்யும் போது நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய விஷயங்கள்

இன்சூரன்ஸ் வாங்குவதற்கு முன்னர் நீங்கள் சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். உங்கள் சரிபார்க்கும் பட்டியல்(செக்லிஸ்ட்/checklist) இதோ:

வண்டியின் வயது டிப்ரிஸியேஷன்(தேய்மானம்)
1 வருடம் < வயது < 2 வருடங்கள் 10%
2 வருடங்கள் < வயது < 3 வருடங்கள் 15%
3 வருடங்கள் < வயது < 4 வருடங்கள் 25%
4 வருடங்கள் < வயது < 5 வருடங்கள் 35%
5 வருடங்கள் < வயது < 10 வருடங்கள் 40%
10 வருடங்கள் < வயது 50%

  • ஆட்-ஆன்களை(மதிப்புக்கூட்டல்கள்/add-ons) சரிபார்க்கவும்: எந்தவொரு டூ வீலரை வைத்திருக்கும் உரிமையாளருக்கும் ஆட்-ஆன் கவர்கள் பெறுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. ஆனால் 15 வருடங்கள் வரை பயன்படுத்திய பழைய வாகனத்திற்கு ஆட்-ஆன்களை(மதிப்புக்கூட்டல்கள்/add-ons) சேர்க்கலாம். பாசஞ்ஜர் கவர், ஜீரோ டிப்ரிஸ்யேஷன்(தேய்மானம்) கவர், மெடிக்கல் கவர், மற்றும் அக்ஸசரிஸ் கவர் போன்ற ஆட்-ஆன்களை(மதிப்புக்கூட்டல்கள்/add-ons) நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.

இந்த கவர்களை பெறுவதற்கு நீங்கள் கூடுதல் பிரீமியத்தை செலுத்த வேண்டியிருக்கும்.

ஆன்லைனில் பழைய பைக் இன்சூரன்ஸை வாங்குவது/புதுப்பிப்பது எப்படி?

உங்கள் நெருங்கிய நண்பரிடமிருந்து, 10 வருடத்திற்கு மேல் உபயோகப்படுத்திய, பழைய இராயல் என்ஃபீல்டு புல்லட்-ஐ நீங்கள் வாங்குவதாக வைத்துக் கொள்ளுங்கள். பைக் ஓட்டுவதில் நீங்கள் மிகவும் ஆர்வமுள்ளவர், ஆனால் நீங்கள் பயன்படுத்த தொடங்குவதற்கு முன், அதற்கு இன்சூரன்ஸ் எடுக்க விரும்புகிறீர்கள்.

நீங்கள் புத்திசாலியாக இருப்பதினால், சவால்களை விடவும் உங்கள் பாதுகாப்பினை பெரிதாக விரும்புகிறீர்கள். ஆனால் நீங்கள் பழைய பைக் வாங்கும் போது வாங்கவிருக்கும் இன்சூரன்ஸ் பாலிசியின் நடைமுறையானது முற்றிலும் வேறானதாகும். அதற்கு நீங்கள் கீழ்க்கண்டவற்றில் ஒன்றை தேர்வு செய்யலாம்:

4 எளிமையான படிகளில் பழைய பைக் இன்சூரன்ஸை வாங்கவும்/புதுப்பிக்கவும்

படி 1 - பைக் இன்சூரன்ஸ் பக்கத்திற்கு செல்லவும். உங்கள் வண்டியின் அமைப்பு, மாடல், மாற்றுரு, பதிவீட்டு தேதி ஆகியவற்றை பூர்த்தி செய்யவும். ‘தோராய மதிப்பீட்டினை(quote) பெறவும்’ என்பதை அழுத்தி, உங்கள் பிளானை தேர்ந்தெடுக்கவும்.

படி 2 - தேர்டு பார்ட்டி பொறுப்பு மட்டும் அல்லது ஸ்டான்டர்ட் தொகுப்பு(காம்ப்ரிஹென்சிவ் இன்சூரன்ஸ்) ஆகிய இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுக்கவும்.

படி 3 - உங்கள் முந்தைய இன்சூரன்ஸ் பாலிசி பற்றிய விபரங்களை அளிக்கவும் - காலாவதியான தேதி, கடந்த வருடம் செய்யப்பட்ட கிளைம், ஈட்டிய நோ கிளைம் போனஸ்

படி 4 - உங்கள் பிரீமியத்திற்கான தோராய மதிப்பீட்டினை(quote) நீங்கள் பெறுவீர்கள். நீங்கள் ஸ்டான்டர்ட் பிளானை தேர்ந்தெடுத்திருந்தால், ஐடிவி-ஐ(IDV) அமைத்து, ஆட்-ஆன்களை உங்கள் பிளானில் சேர்த்து அதனை மேலும் தனிப்பயனாக்கிக் கொள்ளலாம். அடுத்த பக்கத்தில் நீங்கள் இறுதி பிரீமியத்தை பார்ப்பீர்கள்.

பழைய பைக் இன்சூரன்ஸிற்கு எவ்வாறு பிரீமியம் கணக்கிடப்படுகிறது?

எந்தவொரு வாகனத்தின் பிரீமியமும், அதன் ஐடிவி(IDV), முந்தைய கிளைம் அனுபவம், பொருத்தியிருக்கும் துணைப்பொருள்கள், ஏதேனும் இருப்பின் மற்றும் பிற காரணிகளை கொண்டே கணக்கிடப்படுகிறது. பழைய பைக்-கிற்கு, இன்சூரன்ஸ் பிரீமியம் கீழ்க்கண்ட காரணிகளை கொண்டே கணக்கிடப்படும்:

டிஜிட்-இன் பழைய டூ வீலர் இன்சூரன்ஸை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்?