Third-party premium has changed from 1st June. Renew now
ஹீரோ டூ வீலர் இன்சூரன்ஸ் பாலிசியை ஆன்லைனில் வாங்க/புதுப்பிக்க
ஹீரோ பைக்கை வாங்கப்போகிறீர்களா? உங்கள் வாகனத்திற்கு துணையாக ஒரு ஹீரோ பைக் இன்சூரன்ஸை வாங்குவதற்கு முன் அவை மிகவும் விரும்பத்தக்கவைகளாக இருப்பதற்கான காரணம் மற்றும் அவற்றை வாங்குவதற்கு முன் தெரிந்துக்கொள்ள வேண்டியவை யாவை என்பதை பற்றி அறிந்து கொள்ளுங்கள்.
ஹீரோ மோட்டோகார்ப் வெளியிட்ட சேல்ஸ் ரிப்போர்ட்டின் படி, 2018-19 நிதி ஆண்டில் இந்தியாவில் இந்த நிறுவனம் 7.8 மில்லியனுக்கு மேற்பட்ட டூ-வீலர்களை விற்பனை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.(1)
மேலும், அக்டோபர் மற்றும் டிசம்பர் 2018 க்கு இடையில், இந்த நிறுவனம் ரூ.7,800 கோடிக்கு அதிகமான வருவாயை எட்டியுள்ளது. (2)
ஆனால், இந்த பைக்குகளை இவ்வளவு பிரபலமாக்குவது எது? ஃபோர்ப்ஸ் நடத்திய உலகின் 200 மரியாதைக்குரிய நிறுவனங்களின் தரவரிசையில் ஹீரோ மோட்டோகார்ப் இடம்பெறச்செய்தது எது? மேலும், ஏன் உரிமையாளர்கள் ஹீரோ பைக் இன்சூரன்ஸ் பாலிசியைப் பெறுவது மிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது?
சொல்லப்போனால், முதன் முறை இன்சூரன்ஸ் வாங்குபவர்களுக்கு 1988 ஆம் ஆண்டு மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் தேர்ட் பார்ட்டி லயபிலிட்டி இன்சூரன்ஸ் பாலிசியைப் பெறுவது கட்டாயமாகும். குறைந்தபட்சமாக, தேர்ட் பார்ட்டி பாலிசியின் கீழ் உங்கள் ஹீரோ பைக் இன்சூர் செய்யப்படவில்லை என்றால், போக்குவரத்து மீறலுக்காக உங்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம்.
அதுமட்டுமின்றி, உங்கள் பைக் விபத்து, திருட்டு, தீ, இயற்கை சீற்றம் மற்றும் பல எதிர்பாராத அபாயத்தினால் பாதிக்கப்படலாம். அதனால் தான், நீங்கள் இன்சூரன்ஸ் பாலிசியை பெறுவது அத்தியாவசியமாகும்.
ஆனால், ஹீரோ டூ-வீலர் இன்சூரன்ஸ் பாலிசியை வாங்கும் நுணுக்கங்களை அறிந்துகொள்வதற்கு முன், இந்த பைக்குகளை உற்பத்தி செய்யும் நிறுவனத்தின் சுருக்கமான வரலாற்றினை அறிந்துகொள்வதன் மூலம் துவங்குவோம்.
ஹீரோ பைக் இன்சூரன்ஸ் பாலிசியில் காப்பீடு செய்யப்படுவது யாவை?
இதில் பாதுக்காக்கப்படாதது எது
உங்கள் டூ-வீலர் இன்சூரன்ஸ் பாலிசியில் எவையெல்லாம் கவர் செய்யப்படவில்லை என்பதை அறிவது முக்கியம், இதனால் நீங்கள் கிளைம் செய்யும் போது எந்த ஆச்சரியமான சூழலும் ஏற்படாது. அத்தகைய ஆச்சரியமூட்டும் சில சூழ்நிலைகள் இங்கே:
தேர்டு பார்ட்டி அல்லது லையபிலிட்டி ஒன்லி பைக் பாலிசி இருக்கும் பட்சத்தில், சொந்த வாகனத்திற்கு ஏற்படும் சேதங்கள் இன்சூர் செய்யப்படாது.
நீங்கள் குடிபோதையில் அல்லது செல்லுபடியாகும் டூ-வீலர் உரிமம் இல்லாமல் வண்டி ஓட்டும் சூழ்நிலைகளில், உங்கள் பைக் இன்சூரன்ஸை நீங்கள் கிளைம் செய்ய முடியாது.
நீங்கள் கற்றல் உரிமத்தை மட்டும் வைத்திருந்து, செல்லுபடியாகும் உரிமம் இல்லாமல் உங்கள் டூ-வீலரை பில்லியன் இருக்கையில் இருந்தால்- அந்தச் சூழ்நிலைகளில் நீங்கள் கிளைம் செய்ய முடியாது.
விபத்தின் நேரடி விளைவாக இல்லாத ஏதேனும் சேதம் (எ.கா. விபத்துக்குப் பிறகு, சேதமடைந்த டூ-வீலர் வாகனம் தவறாகப் பயன்படுத்தப்பட்டு, என்ஜின் சேதமடைந்தால், அதனை கிளைம் செய்ய முடியாது)
ஏதேனும் அலட்சியத்தினால் ஏற்படும் சேதங்கள் (எ.கா. வெள்ளத்தில் டூ-வீலர் வாகனத்தை ஓட்டுவதால் ஏற்படும் சேதம், உற்பத்தியாளரின் ஓட்டுநர் கையேட்டின்படி பரிந்துரைக்கப்படாதது, இன்சூர் செய்யப்படாது)
சில சூழ்நிலைகளை ஆட்-ஆன்கள் மூலம் கவர் செய்யலாம். நீங்கள் அந்த ஆட்-ஆன்களை வாங்கவில்லை என்றால், அதற்குத் தொடர்புடைய சூழ்நிலைகள் இதில் உள்ளடக்கப்படாது.
நீங்கள் ஏன் ஹீரோ பைக் இன்சூரன்ஸை வாங்க வேண்டும்?
உங்கள் தேவைகளுக்கு பொருந்தும் பைக் இன்சூரன்ஸ்
தேர்டு பார்ட்டி பைக் இன்சூரன்ஸ் என்பது பைக் இன்சூரன்ஸின் மிகவும் பொதுவான வகைகளில் ஒன்றாகும்; இதில் தேர்டு பார்ட்டி நபர், வாகனம் அல்லது சொத்துக்கு ஏற்படும் சேதங்கள் மற்றும் இழப்புகள் மட்டுமே பாதுகாக்கப்படும்.
ஒரு காம்ப்ரிஹென்சிவ் (முழுமையானது) பைக் இன்சூரன்ஸ் என்பது பைக் இன்சூரன்ஸின் மிகவும் மதிப்புமிக்க வகைகளில் ஒன்றாகும். இது தேர்டு பார்ட்டி லையபிலிட்டிகள் மற்றும் உங்கள் சொந்த பைக்கின் சேதம் ஆகிய இரண்டையும் உள்ளடக்கும்.
தேர்டு பார்ட்டி | காம்ப்ரிஹென்சிவ் |
விபத்து காரணமாக சொந்த டூ-வீலருக்கு ஏற்படும் சேதங்கள்/இழப்புகள் |
|
தீ விபத்தினால் சொந்த டூ-வீலருக்கு ஏற்படும் சேதங்கள்/இழப்புகள் |
|
இயற்கைப் பேரிடரினால் சொந்த டூ-வீலருக்கு ஏற்படும் சேதங்கள்/இழப்புகள் |
|
தேர்டு பார்ட்டிக்கு ஏற்படும் சேதங்கள் |
|
தேர்டு பார்ட்டி சொத்துக்கு ஏற்படும் சேதங்கள் |
|
பர்சனல் ஆக்சிடென்ட் கவர் |
|
தேர்டு பார்ட்டிக்கு ஏற்பட்ட காயங்கள்/இறப்பு |
|
உங்கள் ஸ்கூட்டர் அல்லது பைக் திருட்டுப் போதல் |
|
உங்கள் ஐடிவி-யை (IDV) தனிப்பயனாக்குதல் |
|
தனிப்பயனாக்கப்பட்ட கூடுதல் ஆட்-ஆன்ஸ் |
|
Get Quote | Get Quote |
Know more about the காம்ப்ரிஹென்சிவ் மற்றும் தேர்டு பார்ட்டி பைக் இன்சூரன்ஸைப் பற்றி மேலும் அறிந்துக்கொள்ள
எவ்வாறு கிளைமை தாக்கல் செய்ய வேண்டும்?
எங்கள் டூ-வீலர் இன்சூரன்ஸ் திட்டத்தை நீங்கள் வாங்கிய பிறகு அல்லது புதுப்பித்த பிறகு, நீங்கள் எந்த வித டென்ஷன் இல்லாமல் வாழலாம். ஏனெனில், இந்த டிஜிட்டல் கிளைம் செயல்முறையை 3 எளிய ஸ்டெப்களில் செய்துவிடலாம் உள்ளது!
ஸ்டெப் 1
1800-258-5956-க்கு அழைக்கவும். எந்த படிவங்களும் நிரப்பப்பட வேண்டியதில்லை.
ஸ்டெப் 2
உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் சுய பரிசோதனைக்கான இணைப்பைப் பெறுங்கள். வழிகாட்டப்பட்ட படிப்படியான செயல்முறை மூலம் உங்கள் ஸ்மார்ட்போனிலிருந்து உங்கள் வாகனத்தின் சேதங்களை பதிவு செய்யவும்.
ஸ்டெப் 3
உங்களுக்கு விருப்பமான பழுதுபார்க்கும் முறையைத் தேர்வுசெய்யவும். அதாவது எங்களின் கேரேஜ் நெட்வொர்க் மூலம் ரீஇம்பர்ஸ்மெண்ட் அல்லது கேஷ்லெஸ் ஆகிய இரண்டில் ஒன்றை தேர்வு செய்யவும்.
ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்தை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை
டாக்டர் பிரிஜ்மோகன் லால் முஞ்சல் ஜி யால் 1984 இல் நிறுவப்பட்ட ஹீரோ மோட்டோகார்ப் லிமிடெட் முதலில் ஹீரோ ஹோண்டா என்று அழைக்கப்பட்டது. புது தில்லியில் அமைந்துள்ள தன் தலைமையகத்துடன் இணைந்து இந்த நிறுவனம் சைக்கிள்கள், ஸ்கூட்டர்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் போன்றவற்றை உற்பத்தி செய்யும் நாட்டின் முக்கிய உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாகும். இன்று, ஹீரோ மோட்டோகார்ப் உலகின் மிகப்பெரிய டூ-வீலர் வாகன உற்பத்தி நிறுவனமாக செயல்படுகிறது.
இந்தியாவில், இந்த நிறுவனம் டூ-வீலர் மார்க்கெட்டில் 46% க்கும் மேற்பட்ட பங்குகளை வைத்திருக்கிறது.1980 களில் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட வாகனங்கள் அவற்றின் எரிபொருள் திறன் காரணமாக பெருமளவில் பிரபலமடைந்தன. மேலும், இதன் குறைந்த விலையினால் பைக் அல்லது ஸ்கூட்டரை பெற எண்ணற்ற இந்தியர்கள் ஹீரோவின் டீலர்ஷிப்களின் கடை வாசலுக்கு முன்பு வரிசைக்கட்டி நின்றது வரலாற்றை புரட்டிப்போட்டது.
2010 ஆம் ஆண்டில், ஹோண்டா நிறுவனம் ஹீரோவுடனான கூட்டு முயற்சியில் இருந்து வெளியேற முடிவு செய்தது. பிறகு ஹோண்டாவுக்கு சொந்தமான பங்குகளை வாங்கி அதன் சொந்த துணை நிறுவனத்தை நிறுவ முடிவு செய்தது. இவ்வாறு ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியாவின் பயணம் தொடங்கியது.
இன்று, சில பிரபலமான ஹீரோ பைக்குகள் பின்வருமாறு:
ஹீரோ ஸ்ப்ளெண்டர் பிளஸ் ·
ஹீரோ HF டீலக்ஸ் ·
ஹீரோ பேஷன் புரோ ·
ஹீரோ சூப்பர் ஸ்ப்ளெண்டர் ·
ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 ·
ஹீரோ கிளாமர்
.மேலும் பல!
பல வருட கடின முயற்சியால், ஹீரோ நிறுவனத்தால் இந்தியர்கள் நம்பக்கூடிய ஒரு நம்பகமான பிராண்டாக மாற முடிந்தது.குறைந்த விலை மற்றும் உயர்தர சேவைகளுடன், ஹீரோவின் பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்கள் ஒவ்வொரு குடிமகனுக்கும் தேவையான ஏதோ ஒரு அம்சத்தைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..
ஹீரோ பைக்குகளை எது இவ்வளவு பிரபலாமாக்குகிறது?
மக்கள் மத்தியில் ஹீரோவினால் தொடர்ந்து அதன் பிரசித்தியை நிலைநிறுத்த முடிந்தது ஏன் என்பதற்கு பல காரணங்கள் உள்ளன. கீழே பட்டியலிடப்பட்டுள்ள இந்த காரணங்களில் சிலவற்றைப் பாருங்கள்-
எந்த நிறுவனத்திற்கும் குறை கூற முடியாத அளவு சேவை செய்யும் வாடிக்கையாளர் சேவை என்பது விரும்பத்தக்க பண்பு. ஹீரோ நிறுவனம் உயர்ந்த விற்பனை செய்வதில் மட்டும் முன்னோடியல்ல வாடிக்கையாளர்களுக்கு விற்பனைக்கு பின்னர் வழங்கக்கூடிய சேவையை வழங்கவதிலும் இந்தியாவில் இருக்கும் மற்ற டூ-வீலர் வாகன உற்பத்தியாளர்களுக்கு ஒரு உத்வேகமாக செயல்படுகிறது.
அவர்கள் புராடக்ட் போர்ட்ஃபோலியோவில் உள்ள பெரிய மாறுபாடு அவர்களின் மகத்தான வளர்ச்சிக்கு மற்றொரு காரணம். பல்வேறு பொருளாதார பின்னணியிலிருக்கும் நுகர்வோரினாலும் அவரவர் தேவை மற்றும் செலவு திறனுக்கு ஏற்ப புராடக்ட்டை வாங்க முடியும்.
இறுதியாக, பல ஆண்டுகளாக தன் தரத்தில் சிறுதுளிக்கூட மாற்றமின்றி அப்படியே வைத்திருக்க முடிந்த சில நிறுவனங்களில் ஹீரோவும் ஒன்றாகும். நீங்கள் அவர்களின் பைக்குகளில் ஒன்றை வாங்கும்போது, அதன் ஆன்-ரோட் செயல்திறன் மற்றும் ஆயுள் பற்றி நீங்கள் உறுதியாக நம்பலாம்.
இந்த பிராண்ட் மகத்தான புகழுக்கு வழிவகுத்ததற்கு மேற்கூறிய காரணங்களும் சில என்றாலும், ஹீரோ நிறுவனத்திற்கு வாடிக்கையாளர்களின் பேராதரவு தொடர்ந்து அதிகரிப்பதற்கான காரணமாக இருப்பது பயனுள்ள அம்சம் நிறைந்த அதன் வாகனங்கள் தான்.
ஹீரோ டூ-வீலர்களில் நீங்கள் எதிர்பார்க்க வேண்டிய அம்சங்கள்
உங்கள் பட்ஜட்டை பொருட்படுத்தாது, ஹீரோவின் பரந்த அளவிலான தயாரிப்புகள் உங்கள் தேவைகளை செயல்திறனுடன் பூர்த்தி செய்யும். இந்த நிறுவனமானது தான் தயாரிக்கும் வாகனங்களில் வழங்கும் அம்சங்களில் எந்தவித சமரசமும் செய்யவில்லை.
சிறப்பு அம்சங்கள் உயர்-ரக ஸ்கூட்டர்கள் மற்றும் பைக்குகளுக்கு மட்டுமே என்று நினைக்கிறீர்களா? சரி, மீண்டும் யோசிப்போம்..
எல்லா ஹீரோ டூ-வீலர்களுக்கும் இருக்கும் சில பொதுவான அம்சங்கள்:
- நம்பகத் தன்மை - இந்திய மார்க்கெட் என்று வரும் போது, மைலேஜ் மற்றும் பைக்கின் இன்ஜின் தரம் இரண்டும் முக்கிய காரணிகளாகும். ஸ்ப்ளெண்டர் மற்றும் பேஷன் மாடல்களில் ஆன்-ரோட் மைலேஜ்ஜில் கவனம் அளிக்கப்படுவதன் மூலம், உரிமையாளருக்கு ஆகும் எரிபொருள் செலவையும் ஹீரோவின் பைக்குகள் குறைகின்றன.
- நீடித்து உழைக்கும் தன்மை - பெரும்பாலான பொது மக்கள் பைக்குகளை வாங்க பணத்தை சேமிக்க வேண்டும். எனவே, வாங்கிய பிறகு வாகனத்திற்கு ஏற்படும் எந்த சேதமும் பெரும்பாலான வாங்குபவர்களுக்கு பேரழிவு தரும் அடியாக இருக்கலாம். ஹீரோ விலை குறைவாக இருந்தாலும் அதன் பைக் பாகங்களின் தரத்தில் சமரசம் செய்வதில்லை. இது பேரழிவுக்கான சேதத்திற்கு வழிவகுக்காமல் சிறிய மோதல் அல்லது விபத்துக்களை எளிதாக சரிசெய்யக்கூடிய உறுதியான வடிவமைப்புகளுக்கு வழிவகை செய்கிறது.
- புராடக்ட் வகை- ஹீரோ அதன் புராடக்ட்களுக்கான ஒரு குறிப்பிட்ட பொருளாதார வர்க்கத்தை பொருந்த செய்வதில்லை. மாறாக, ஆரம்பத்திலிருந்தே, நிறுவனம் பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்களை குறைந்த விலையில் உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது. இந்நிறுவனம் தங்கள் வாகனங்களின் பிரீமியம் அல்லது ஆடம்பர வாகன வகைகளை வழங்கும் போது, நிறுவனம் கண்டிப்பாக 'அனைவராலும் செலுத்தக்கூடிய' விலை கொள்கையைப் பின்பற்றுகிறது.
- தொழில்நுட்ப அதிசயங்கள் - இந்நிறுவனத்தின் வாகனங்களில் புதிய தொழில்நுட்பத்தை இணைக்கும் போது நிறுவனம் பின்தங்கியிருக்காது. உதாரணமாக, ஹீரோ சமீபத்தில் வெளியிட்ட பிரீமியம் ரேஞ்ச் ஸ்போர்ட்ஸ் பைக் XTREM 200 S. மற்றொரு சுவாரஸ்யமான புராடக்ட் XF3R ஆகும், இதன் வடிவமைப்பு பிரபல வீடியோ கேம் ஸ்ட்ரீட் ஃபைட்டரின் கருத்தியலின் அடிப்படையாகக் கொண்டது.
இருப்பினும், இந்திய சாலைகள் விபத்துக்கள் மற்றும் பிற அபாயங்களுக்கு பேர்போனவை. துரதிருஷ்டவசமாக, இதுபோன்ற சாலை விபத்துக்கள் ஏற்பட்டால் உங்கள் அன்புக்குரிய ஹீரோ வாகனத்தைப் பாதுகாக்க மேலே குறிப்பிட்ட அம்சங்கள் எதுவும் போதுமானதாக இருக்காது.
அத்தகைய இக்கட்டான திடீர் செலவுகளில் இருந்து உங்கள் பணத்தை பாதுகாக்க விரும்பினால் ஹீரோ பைக் இன்சூரன்ஸ் திட்டத்தைத் தேர்ந்தெடுப்பது அவசியமாகும்.
நீங்கள் ஏன் அவசியம் ஹீரோ பைக் இன்சூரன்ஸை வாங்க வேண்டும்?
எந்த இன்சூரன்ஸ் கவரேஜூம் இல்லாமல் உங்கள் பைக்கை ஓட்ட முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
சட்டப்படி சொல்லப்போனால், உங்களால் அது முடியாது.
- சட்ட விதிமுறைகள் - 1988 ஆம் ஆண்டின் மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, இந்திய சாலைகளில் இயக்கப்படும் அனைத்து மோட்டார் வாகனங்களுக்கும் தேர்ட் பார்ட்டி இன்சூரன்ஸ் பிளானை வாங்குவது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. செல்லுபடியாகும் இன்சூரன்ஸ் இல்லாமல் பைக் அல்லது ஸ்கூட்டர் அல்லது பிற வாகனத்துடன் பிடிபட்ட எந்தவொரு தனிநபரும் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். மோட்டார் வாகனங்கள் (திருத்தம் செய்யப்பட்ட) சட்டம் 2019-ன் கீழ், இன்சூரன்ஸ் பாலிசி இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.2000மும் மீண்டும் மீண்டும் அதே குற்றத்தை செய்யும் குற்றவாளிகளுக்கு ரூ.4000 அபராதமும் விதிக்கப்படும்.
சட்ட விதிமுறைகள் தவிர, பைக் இன்சூரன்ஸ் பாலிசியை வாங்குவது ஏன் அவசியம் என்பதற்கு இது சில காரணங்கள் பின்வருமாறு:
- தேர்ட் பார்ட்டி சொத்துக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு ரீஎம்பர்ஸ்மென்ட்டை கோருதல் -தேர்ட் பார்ட்டி ஹீரோ மோட்டோகார்ப் இன்சூரன்ஸ் திட்டங்கள் உங்கள் வாகனம் சம்பந்தப்பட்ட விபத்துக்களிலிருந்து ஏற்படும் சேதங்களுக்கான இழப்பீட்டை கோர உங்களை அனுமதிக்கின்றன. இந்த நிதி உதவி மற்ற தரப்பினரின் வாகனம் அல்லது சொத்துகளால் ஏற்படும் எந்த சேதத்தையும் சரி செய்வதை பொருத்து இருக்கிறது என்றாலும், விபத்துக்கள் ஏற்பட்டால் உங்கள் லீகல் லையபிலிட்டிகளை இது கட்டுப்படுத்துகிறது. தேர்ட் பார்ட்டியின் சொத்துகளால் ஏற்பட்ட நிதி இழப்பைத் தவிர, அத்தகைய இன்சூரன்ஸ் பிளான் எந்தவொரு தேர்ட் பார்ட்டியினருக்கு விபத்தினால் காயமடைந்தாலும், இறந்தாலும் கூட அதே நிதி உதவியை வழங்குகிறது.
- சொந்த பைக் சேதங்களை சரிசெய்ய நிதி உதவி கோருதல் - நீங்கள் காம்ப்ரிஹென்சிவ் ஹீரோ பைக் காப்பீட்டு பாலிசியைத் தேர்ந்தெடுத்தால், விபத்துக்கள் அல்லது சாலை விபத்துக்களின் விளைவாக உங்கள் பைக் பாதிக்கப்படும் சேதங்களை சமாளிப்பதற்கான நிதி உதவியை கோரலாம். இத்தகைய கொள்கைகள் தேர்ட் பார்ட்டி மற்றும் சுயமாக ஏற்படும் சேதம் இரண்டிற்கும் பாதுகாப்பை வழங்குகிறது. விபத்துக்கள் தவிர, இயற்கை சீற்றங்கள், தீ விபத்துக்கள், வெடிப்புகள், இழப்பு, திருட்டு மற்றும் பலவற்றிலும் ஏற்படும் சேதம் காம்ப்ரிஹென்சிவ் இன்சூரன்ஸ் காப்பீடுகளின் கீழ் வருகிறது.
- மொத்த இழப்பு அல்லது வாகனத் திருட்டு போன்ற சூழ்நிலையில் இன்சுர்டு டெக்லேர்டு வேல்யூவை பெறுதல் - சில சூழ்நிலைகளின் கீழ், ஹீரோ பைக் பழுதுபார்க்க முடியாத அளவுக்கு சேதமடையலாம். இல்லை, யாராவது உங்கள் டூ வீலரை திருடலாம். அத்தகைய சந்தர்ப்பங்களில், உங்களிடம் காம்ப்ரிஹென்சிவ் இன்சூரன்ஸ் காப்பீடு இருந்தால், உங்கள் வாகனத்திற்கான இன்சுர்டு டெக்லேர்டு வேல்யூவை நீங்கள் பெற முடியும். ஐடிவி என்பது ஹீரோ டூ வீலரின் தற்போதைய விலையிலிருந்து அதன் தேய்மானத்தை கழிப்பதே ஆகும். காப்பீடு செய்யப்பட்ட பைக்கிற்கு மொத்த இழப்பு ஏற்படுதல் அல்லது திருட்டு போனால் உங்கள் இன்சூரர் உங்களுக்கு மொத்த ஐடிவி தொகையையும் செலுத்த வேண்டியிருக்கும்.
- தனிநபர் விபத்துக்கான காப்பீடு - காப்பீடு செய்யப்பட்ட வாகனம் சம்பந்தப்பட்ட விபத்து காரணமாக ஒருவேளை பாலிசிதாரர் உயிரிழக்க நேர்ந்தால், அவரது குடும்பத்தினர் காப்பீட்டு வழங்குநரிடமிருந்து பண இழப்பீட்டைப் பெறுவதற்கான தகுதியுடையை பெறுவார்கள். இந்த நன்மை காப்பீட்டு பாலிசியுடன் கட்டாயமயமாக்கப்பட்ட தனிநபர் விபத்து ஆட்-ஆன் காப்பீட்டின் கீழ் வழங்கப்படுகிறது.
பைக் உரிமையாளர் உயிருடன் இருந்தாலும் விபத்து காரணமாக உடல் ஊனத்திற்கு ஆளானால் சில இன்சூரர்கள் இதே போன்ற நிதி உதவியை வழங்கலாம்.
இந்த பாதுகாப்பு முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட காலம் வரை மட்டுமே என்பதை நினைவில் கொள்ளுங்கள். பாதுகாப்பு தொடர்கிறதா என்பதை உறுதி செய்ய நீங்கள் தொடர்ந்து PA கவர் ஆட்-ஆன்களுடன் ஹீரோ பைக் இன்சூரன்ஸை தொடர்ந்து புதுப்பிக்க வேண்டும்.
தற்போதைய இன்சூரன்ஸ் வழங்குநரிடம் உங்களுக்கு திருப்தி ஏற்படவில்லையா? இன்சூரர்களை எப்போது வேண்டுமானாலும் மாற்றலாம் என்று உங்களுக்குத் தெரியுமா?
உங்கள் தற்போதைய இன்சூரரின் பல்வேறு நன்மைகள் மற்றும் அம்சங்களை ஒப்பிடுங்கள். உங்களுக்கு தெளிவாக புரியவில்லை என்றால், டிஜிட்டின் டூ வீலர் வாகன இன்சூரன்ஸ் பிளான்களை பாருங்கள்.
ஹீரோ டூ-வீலர் இன்சூரன்ஸ் பிரீமியம்களை பெரும்பங்கு குறைத்தல்
ஒரு இன்சூரன்ஸ் பாலிசி வாங்க உங்களுக்கு அதிக பிரீமியம் தான் தடையாக உள்ளது என்றால், நீங்கள் உங்கள் நிதி சுமையினைக் குறைக்க பின்வரும் ஒன்றை மேற்கொள்ளலாம் -
- நோ கிளைம் போனஸ் பெனிஃபிட்டை அனுபவிக்கலாம் - உங்கள் இன்சூரன்ஸ் வழங்குநர் நோ கிளைம் போனஸ் பெனிஃபிட் வழங்குவதை உறுதி செய்து கொள்ளவும். அதோடு கிளைம் எழுப்பும் அவசியத்தை குறைத்து, நீங்கள் நோ கிளைம் போனஸை எளிதில் பெற்றுக் கொள்ளும் வகையில் இருக்கிறதா என்றும் உறுதி செய்து கொள்ளவும். இது உங்கள் பிரீமியத்தை குறைக்க உதவும்.
- வாலண்ட்டரி டிடக்டிபிளை தேர்வு செய்யவும் - வாலண்ட்டரி டிடக்டிபிள்களை உள்ளடிக்கிய பாலிசி ஒன்றைத் தேர்வு செய்ய வேண்டும். இந்த பாலிசிகள் இன்சூரரிடம் இடம் நிதி உதவி பெறுவதற்கு முன் நம்மை பகுதி அளவிலான கிளைம்களை செலுத்தும் வாய்ப்பினைக் கொடுக்கும். இதன் மூலம், பாலிசிக்கான பிரீமியம் தொகை குறையும்.
- நேரடியாக இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் இருந்து பாலிசியை வாங்க வேண்டும் - இன்சூரரிடமிருந்து நேரடியாக பாலிசியை வாங்க வேண்டும். இடைத் தரகர்கள் அல்லது இன்சூரன்ஸ் ஏஜென்ட்டுகள் தங்கள் சேவைகளுக்கு கூடுதல் கட்டணம் (கமிஷன்) வசூலிப்பார்கள். இந்த கூடுதல் கட்டணம் உங்கள் ஹீரோ டூ-வீலர் இன்சூரன்ஸ் பிரீமியத்தை கண்டிப்பாக அதிகரிக்கும்.
- உங்களுக்குத் தேவையான ஆட்-ஆன்களை தேர்வு செய்யவும் - உங்களுக்குத் தேவையான ஆட்-ஆன்களை மட்டுமே தேர்வு செய்யவும். கூடுதல் பாதுகாப்பு அவசியமானது என்றாலும், ஒவ்வொரு ரைடரையும் வாங்குவது என்பது முட்டாள்தனம் என்றும் சொல்லலாம். உங்கள் தனிப்பட்ட தேவைக்கேற்ப தேர்வு செய்வது தான் நல்லது. உதாரணமாக நீங்கள் வெள்ளம் வரக்கூடிய பகுதியில் இருந்தால், நீங்கள் எஞ்சின் பாதுகாப்பு கவரைத் தேர்வு செய்யலாம்.
பிரீமியம் குறைவாக இருக்கிறது என்பதற்காக மட்டும் ஒரு பிளானை தேர்வு செய்தல் கூடாது. உங்கள் பைக்கை பாதுகாத்து உங்களுக்கு போதுமான நிதி உதவியை வழங்கும் ஒரு சரியான இன்சூரன்ஸ் பாலிசியைத் தேர்வு செய்ய வேண்டுமெனில், நீங்கள் அதன் ஒவ்வொரு அம்சத்தையும் அலசி ஆராய வேண்டும்.
ஹீரோ ஸ்கூட்டர் மற்றும் பைக்குகள் ஒரு விலைமதிப்புள்ள சொத்து என்றும் சொல்லலாம். அதனை நீங்கள் சரிவர பராமரித்து வந்தால், அது பல்லாண்டுகளுக்கு நீடித்து உழைக்கும். கூடுதலாக ஹீரோ டூ-வீலர் இன்சூரன்ஸ் கவர் வைத்திருப்பது மேலும் பலம் சேர்க்கும்!
இந்தியாவில் ஹீரோ பைக் இன்சூரன்ஸ் தொடர்பாக அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
ஹீரோ டூ-வீலர் இன்சூரன்ஸ் பாலிசியின் கீழ் கிளைம் எழுப்ப நான் என் இன்சூரன்ஸ் வழங்குநரிடம் இது பற்றி எத்தனை மணிநேரத்திற்குள் நான் தெரிவிக்க வேண்டும்?
பெரும்பாலான சூழலில், விபத்து ஏற்படும் பட்சத்தில் டூ-வீலர் இன்சூரன்ஸ் பாலிசியின் கீழ் கிளைம் எழுப்ப அந்த விபத்து குறித்து தெரியப்படுத்த பாலிசி ஹோல்டர்களுக்கு இன்சூரன்ஸ் வழங்குநர் 7 நாட்கள் அவகாசம் வழங்குவார்கள். ஆனால், ஒரு சில இன்சூரன்ஸ் வழங்குநர்கள் விபத்து குறித்து தெரியப்படுத்த பாலிசி ஹோல்டர்களுக்கு 24 மணிநேரம் முதல் 48 மணிநேரம் வரை தான் வழங்குவார்கள்.
நோ கிளைம் போனசைப் பெற நான் எவ்வளவு சீக்கிரம் என்னுடைய ஹீரோ டூ-வீலர் இன்சூரன்ஸ் திட்டத்தைப் புதுப்பிக்க வேண்டும்?
பொதுவாக, காலாவதியான இன்சூரன்ஸ் பாலிசியை காலாவதியாகி 90 நாட்களுக்குள் புதுப்பிக்க வேண்டும். இதற்குப் பின் நீங்கள் புதிப்பித்தால், நீங்கள் உங்களுடைய நோ கிளைம் போனஸை இழக்க நேரிடும்.
என்னுடைய ஹீரோ பைக்/ஸ்கூட்டருக்கான பிரீமியத்தை நிர்ணையிக்கும் காரணிகள் யாவை?
பொதுவாக பிரீமியம் தொகையை இன்சூரன்ஸ் வழங்குநர்கள் பின்வரும் காரணிகளை கருத்தில் கொண்டு நிர்ணயிப்பார்கள்:
வண்டி வாங்கி எத்தனை மாதங்கள்/வருடங்கள் ஆகின.
வண்டியின் மாடல்.
ஜியோகிராபிக்கல் சோன்.
இன்சுர்டு டெக்லேர்டு வேல்யூ.
பைக் எஞ்சினின் கியூபிக் திறன்.