நாம் ஒரு இன்டர்நேஷ்னல் டிரிப் பிளான் செய்யும் போது, நம் மனதில் வரும் முதல் யோசனை விசாவிற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்பது தான். சில நேரங்களில், நீங்கள் செல்ல வேண்டிய நாட்டிற்கு எப்படி விசாவிற்கு விண்ணப்பிக்கலாம் என்று ஆன்லைனில் தேடுவதற்கு நீங்கள் மணிக்கணக்கில் செலவிட வேண்டி இருக்கும்.
இருப்பினும், பல நாடுகளுக்குச் செல்ல இந்தியர்களுக்கு விசா தேவைப்படுவதில்லை என்றும், சில நாடுகளுக்கு உங்கள் வருகைக்கான விசா வாங்கினால் போதும் என்றும் உங்களுக்கு தெரியுமா?
ஆம், உண்மை தான்!
மார்ச் 2023 வருடத்தின் படி, ஹென்லீ மற்றும் பார்ட்னர்ஸ் எழுதிய பாஸ்போர்ட் இண்டெக்ஸ், பல நாடுகளில் இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் விசா இல்லாமலேயே அல்லது வருகைக்கான விசாவைப் பெறலாம் என்று குறிப்பிட்டுள்ளது.
ஆனால், எந்தெந்த நாடுகளுக்கு இந்தியன் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் விசா இல்லாமல் போகலாம்? கீழ் கொடுக்கப்பட்டிருக்கும் பட்டியலைப் பாருங்கள்!
1. அல்பேனியா | 15. மைக்குரோனீசியா |
2. பார்படோசு | 16. மொன்செராட் |
3. பூட்டான் | 17. நேபால் |
4. பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகள் | 18. நியுவே |
5. குக் தீவுகள் | 19. ஓமன் |
6. டொமினிக்கா | 20. கதார் |
7. எல் சல்வடார் | 21. செனகல் |
8. பிஜி | 22. செயிண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் |
9. கிரெனடா | 23. செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரனடைன்ஸ் |
10. ஹைட்டி | 24. ஸ்ரீலங்கா |
11. ஜமைகா | 25. டிரினிடாட் மற்றும் டொபாகோ |
12. கசகஸ்தான் | 26. துனிசியா |
13. மக்காவ்(SAR சைனா) | 27. தாய்லாண்டு |
14. மொரிஷியஸ் | 28. வனுவாட்டு |
பொதுவாக, வருகைக்கான விசா பெற, இமிக்ரேஷன் அதிகாரிகள் விசிட்டர்களின் பாஸ்போர்ட், அவர்களது பையோமெட்ரிக்ஸை பரிசோதித்து, அவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களை வாங்கி, அதற்குப் பிறகு விசா பெர்மிட்டை வழங்குவார்கள். நாட்டிற்குள் நுழையும் முக்கிய இடங்களில் வருகைக்கான விசா வழங்கப்படும், எனவே நீங்கள் போகும் போது எங்கு விசா வழங்கப்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
2014 ஆம் ஆண்டில் இந்தியர்களுக்கு செயல்பாட்டுக்கு வந்த மின்னணு பயண அங்கீகார (ஈ.டி.ஏ) வசதி, 2015 ஆம் ஆண்டில் தகுதிவாய்ந்த நாடுகளின் திருத்தப்பட்ட பட்டியலுடன் கொடுக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டில் இந்திய குடிமக்களுக்கு வருகைக்கான விசா மற்றும் இ-விசா வழங்கும் நாடுகளை நாங்கள் குறிப்பிட்டுள்ளோம்.
29. பொலிவியா | 45. மவுரித்தேனியா |
30. போட்ஸ்வானா | 46. மொசாம்பிக் |
31. புருண்டி | 47. மியான்மர் |
32. கம்போடியா | 48. பலாவ் தீவுகள் |
33. கேப் வேர்டே தீவுகள் | 49. ருவாண்டா |
34. கொமோரோ தீவுக்கூட்டம் | 50. சமோவா |
35. எதியோப்பியா | 51. சீஷெல்ஸ் |
36. காபோன் | 52. சியரா லியோன் |
37. கினியா-பிசாவு | 53. சோமாலியா |
38. இந்தோனேசிய | 54. செயின்ட் லூசியா |
39. இரான் | 55. தான்சானியா |
40. ஜோர்டன் | 56. திமோர்-லெஸ்தே |
41. லாவோஸ் | 57. டோகோ |
42. மடகாஸ்கர் | 58. துவாலு |
43. மால்தீவ்ஸ் | 59. உகாண்டா |
44. மார்ஷல் தீவுகள் | 60. சிம்பாவே |
61. அங்கோலா |
|
62. ஆன்டிகுவா மற்றும் பார்புடா |
75. மால்டோவா |
76. மொராகோ |
|
64. அஸர்பய்ஜன் |
|
65. பஹ்ரைன் |
78. சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி |
66.பெனின் |
|
67. கொலம்பியா |
80. சுரினாம் |
68. ஜிபூட்டி |
81. தாய்வான் |
69. ஜார்ஜியா |
82. தஜிகிஸ்தான் |
70.கென்யா |
|
84. உஸ்பெகிஸ்தன் |
|
72. கிர்கிஸ்தான் |
|
73. லெசோத்தோ |
86. ஜாம்பியா |
அவை குறிப்பிட்ட நாட்டின் அரசாங்கம், அந்நாட்டிற்கு வருகைத் தர விரும்பும் வெளிநாட்டினருக்கு அனுமதி வழங்க, வழங்கப்படும் ஆவணங்கள் ஆகும். நீங்கள் குடியுரிமைப் பெற்ற நாட்டின் சான்றாக செயல்படும் பாஸ்போர்ட்களைப் போலல்லாமல், விசாக்கள் நீங்கள் வெளிநாட்டில் தங்க அனுமதிக்கப்படும் காலத்தைக் குறிக்கும் மார்க்கர்களாக செயல்படுகிறது.
இப்போது, பல்வேறு நாடுகள் தங்கள் விசா செயல்முறை குறித்துப் பல்வேறு வகையான விதிமுறைகளை தீர்மானித்துள்ளன. பின்வரும் அட்டவணை அதை விளக்குகிறது:
விசாவின் வகை |
இது எதைக் குறிக்கிறது? |
விசா இல்லாமை |
விசா இல்லாத பயணம் என்பது விசா பெறாமலேயே ஒரு நாட்டிற்குச் செல்லக்கூடிய சிறப்பு பயன்பாடு. பயணத்துக்குட்பட்ட இரு நாடுகளும் இதற்கான ஒப்பந்தம் செய்திருந்தால், அல்லது ஒருவர் பார்வையிடும் நாடு அதன் எல்லைகளை ஒருதலைப்பட்சமாக வெளிநாட்டினரின் பார்வைக்கு மட்டும் திறந்திருந்தால், விசா இல்லாத பயணம் பொருந்தும் |
வருகைக்கான விசா |
வருகைக்கான விசா ஆனது ஒருவருக்கு ஒரு நாட்டின் நுழைவு போர்ட்டில் வழங்கப்படும். விசா வழங்கப்படுவதற்கான முழு செயல்முறையும் நீங்கள் போகும் நாட்டின் நுழைவு போர்ட்டில் அரசாங்க அதிகாரிகளால் தொடங்கப்பட்டு முடிக்கப்படுகிறது. |
இ-விசா |
இ-விசாக்கள் என்பவை சாராம்சத்தில், ஒரு நாட்டின் குடிவரவு அதிகாரியால் ஆன்லைனில் வழங்கப்படும் அதிகாரப்பூர்வ ஆவணங்கள். இவை ஒருவருக்கு உள்ளே நுழைய அனுமதி அளிக்கிறது. இவை ஒரு நாட்டின் தூதரகம் வழங்கும் வழக்கமான காகித அடிப்படையிலான விசாக்களுக்கு மாற்றாக வழங்கபடுகிறது. |
நுழைவு அனுமதி |
நாடுகள் தங்கள் பார்வையாளர்களுக்கு விசாக்களுக்கு பதிலாக நுழைவு அனுமதியை வழங்குகின்றன. இந்த நுழைவு அனுமதிகள் குறிப்பிட்ட காலத்திற்கு வெளிநாட்டினர் தான் செல்லும் நாட்டிற்குள் நுழையவும் தங்கவும் அனுமதிக்கும் ஆவணங்களாகும். |
ஆம்! உலகெங்கிலும் உள்ள இந்த 34 நாடுகளில் சுற்றுலாப் பயணிகளுக்கு டிராவல் இன்சூரன்ஸ் கட்டாயமயமாக்கப்பட்டிருக்கிறது. வெளிநாடுகளில் மருத்துவச் செலவு அதிகமாக இருப்பதும் இதற்கு முக்கியக் காரணம். அதுமட்டுமின்றி, உங்கள் பயணங்களின் போது ஏற்படக்கூடிய எதிர்பாராத சூழ்நிலைகளிலிருந்து உங்கள் நிதி நிலையும் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய விரும்புவீர்கள், இல்லையா?
டிராவல் இன்சூரன்ஸ் பாலிசிகளில் நீங்கள் பெறக்கூடிய பல நன்மைகள் உள்ளன. அவற்றுள் சில:
மருத்துவ அவசரநிலைகளுக்கான பாதுகாப்பு - உங்கள் பயணத்தின் போது, உங்களுக்கு தற்செயலான அல்லது நோய் தொடர்பான அவசர மருத்துவ உதவி தேவைப்படலாம். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் உங்கள் மருத்துவமனை கட்டணங்கள் மற்றும் சிகிச்சை செலவுகளை டிராவல் இன்சூரன்ஸ் பாலிசி ஈடுசெய்யும்.
பயண ரத்து அல்லது விமான தாமதங்கள் - விமான தாமதம், தவறவிட்ட இணைப்பு விமானம் அல்லது ஆல் -ஓவர் பயண ரத்து ஆகியவை டிராவல் இன்சூரன்ஸ் பாலிசியின் கீழ் அடங்குபவை.
தாமதம் / பொருட்களின் இழப்பு - உங்கள் விடுமுறையை கொண்டாட நீங்கள் ஆவலாக இருக்கும் போது உங்கள் செக்-இன் பொருட்கள் உங்களைத் தாமதமாக வந்து சேர்ந்தால் எப்படி இருக்கும்? இந்த சூழ்நிலைகளில், உங்கள் டிராவல் இன்சூரன்ஸ் பாலிசியால் பொருட்களின் தாமதமான வருகை அல்லது இழப்புக்கு பண இழப்பீட்டை வழங்க முடியும்.
வேலட் இழப்புக்கான பாதுகாப்பு - உங்கள் வேலட் இழப்பு அல்லது திருட்டு என்பது உங்கள் வெளிநாட்டு பயணங்களின் போது எழும் மிக முக்கியமான பிரச்சனைகளில் ஒன்று. இதுபோன்ற சூழ்நிலைகளில் சிக்கித் தவிப்பதைத் தவிர்க்க உங்கள் டிராவல் இன்சூரன்ஸ் பாலிசி அவசரகால நிதியுதவியை வழங்குகிறது.
நீட்டிக்கப்பட்ட அல்லது பயனர் பயணிக்காத பயணத்திற்கான இன்சூரன்ஸ் - வேலைநிறுத்தங்கள், கலவரங்கள், இயற்கை பேரழிவுகள் மற்றும் பிற ஆபத்தான நிகழ்வுகள் ஏற்பட்டால், உங்கள் பயண காலம் தடைபடலாம். இது போன்ற சூழ்நிலைகள் மின்னல் போல் தாக்குவதால், நீங்கள் குறிபிட்ட இடத்தில் நீண்ட காலம் தங்கலாம் அல்லது பயணிக்காமல் போகலாம். ரத்து செய்யப்பட்ட அல்லது நீட்டிக்கப்பட்ட பயணத்திற்கு உங்கள் டிராவல் இன்சூரன்ஸ் வழங்குவதால் செலவுகளைப் பற்றி கவலைப்பட வேண்டாம்.
பவுன்ஸ் செய்யப்பட்ட முன்பதிவுகள் - நீங்கள் எப்போதாவது ஏற்கனவே பதிவுசெய்யப்பட்ட தங்குமிடம் மற்றும் ஈவென்ட்களின் புக்கிங்கை உறதிசெய்தும், அங்கு சென்ற பின் ஏற்கனவே ஹோட்டல் அதிகமாக புக்கிங் செய்யப்பட்டுள்ளது மற்றும் உங்கள் புக்கிங் பவுன்ஸ் ஆகிவிட்டது என்ற சூழலுக்கு தள்ளப்பட்டிருகிறீர்களா? இதுபோன்ற விரக்தியான சூழ்நிலைகளில், புக்கிங் கவருடன் இருக்கும் டிராவல் இன்சூரன்ஸ் அந்த நாளை காக்கும்!
எனவே, உங்கள் பயணத்தை பாதுகாப்பானதாக மாற்றவும், நிதி பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் நீங்கள் விரும்பினால், ஆரம்பத்திலேயே டிராவல் இன்சூரன்ஸ் திட்டத்தை வாங்குவது சிறந்தது! சந்தையில் பல திட்டங்கள் அமலில் இருக்கின்றன, எனவே, கட்டணத்தைச் செலுத்துவதற்கு முன்பு, மலிவு விலையில் சிறந்த நன்மைகளை வழங்கும் டிராவல் இன்சூரன்ஸ் திட்டங்களை ஒப்பிட்டு பார்த்து வாங்க வேண்டும்.