வியட்நாம் ஒவ்வொரு ஆண்டும் உலகெங்கிலும் இருந்து மில்லியன் கணக்கான டிராவலர்களை ஈர்க்கிறது. 2018 ஆம் ஆண்டில், நாடு 15.5 மில்லியனுக்கும் அதிகமான இன்டர்நேஷனல் டூரிஸ்ட்களைப் பெற்றது. (1)
வளமான கலாச்சார பாரம்பரியம், வரலாறு மற்றும் இயற்கை அழகு ஆகியவற்றைக் கொண்ட வியட்நாமின் மாறுபட்ட நிலப்பரப்புகள் சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு அற்புதமான விடுமுறையை உறுதி செய்கின்றன. நீங்கள் வியட்நாம் செல்ல திட்டமிட்டுள்ள இந்திய குடிமகனாக இருந்தால், இந்த கட்டுரையை ஸ்கிப் பண்ணாமல் தொடர்ந்து படிக்கவும்.
ஆம், இந்தியப் பயணிகள் வியட்நாமிற்குள் நுழைய வியட்நாம் விசா தேவை. இருப்பினும், இந்திய குடிமக்களுக்கு விசா ஆன் அரைவலை அந்நாடு வழங்குகிறது
ஆம், இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் வியட்நாம் செல்ல திட்டமிட்டால் அவர்களுக்கு விசா ஆன் அரைவல்விருப்பம் உள்ளது. இந்த வியட்நாம் விசா ஆன் அரைவலானது நாட்டிற்கு வந்த நாளிலிருந்து 30 நாட்களுக்கு செல்லுபடியாகும்.
இந்த விசாவுக்கு, இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் முதலில் ஆன்லைனில் இ-விசாவுக்கு விண்ணப்பிக்க வேண்டும், ஒப்புதல் லெட்டரைப் பெற வேண்டும் மற்றும் வியட்நாம் வந்தவுடன் விசா ஆன் அரைவலை பெற வேண்டும்.
வியட்நாம் செல்லும் விண்ணப்பதாரர்களுக்கு இ-விசா மற்றும் விசா ஆன் அரைவல் விண்ணப்பதாரர்களுக்கு ஃபீ பொருந்தும். இருப்பினும், விண்ணப்பத்திற்கு நீங்கள் தேர்வு செய்யும் ப்ராசஸ் பொறுத்து ஃபீ மாறுபடும். கீழே உள்ள அட்டவணையைப் பாருங்கள்:
விண்ணப்பிக்கும் முறை |
ஃபீ |
இ-விசாவிற்கு விண்ணப்பித்து, விமான நிலையத்திற்கு வந்தவுடன் விசா ஆன் அரைவலைப் பெறுங்கள் (30 நாட்களுக்கு செல்லுபடியாகும்) - ஆன்லைன் ப்ராசஸ் |
இ-விசா ப்ராசஸிங் ஃபீ-க்கு ₹2066 ($25) செலுத்தவும் |
தூதரகத்தில் விசாவுக்கு விண்ணப்பிக்கவும் (30 நாட்களுக்கு செல்லுபடியாகும்) (VFS குளோபல் மூலம்) - ஆஃப்லைன் ப்ராசஸ் |
சிங்கிள் என்ட்ரி டூரிஸ்ட் விசாவுக்கு ₹4500 |
பொறுப்புத் துறப்பு: இங்கே குறிப்பிடப்பட்டுள்ள புள்ளிவிவரங்கள் அந்நிய செலாவணி விகிதத்தின்படி அமெரிக்க டாலரில் இருந்து இந்திய ரூபாய்க்கு மாற்றப்பட்டுள்ளன. மேலும், பல அரசு அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் உள்ளனர், எனவே விசா லெட்டரை பெறுவதற்கான இ-விசா ஃபீ தேர்ந்தெடுக்கப்பட்ட முகவரைப் பொறுத்து மாறுபடும்.
இந்திய குடிமக்கள் மற்ற விசா வகைகளுக்கு (நீண்ட காலம் தங்குவதற்கு) விண்ணப்பிக்கலாம் என்பதையும் நினைவில் கொள்ளவும். விண்ணப்பிக்கும் முன் அதற்கான தேவைகள் மற்றும் அவற்றின் ஃபீஸை சரிபார்க்கவும்.
வியட்நாம் விசாவிற்கு விண்ணப்பிக்க, நீங்கள் பின்வரும் ஆவணங்களை வழங்க வேண்டும்.
இந்திய பாஸ்போர்ட், வியட்நாமிற்கு பயணம் செய்த நாளிலிருந்து குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு செல்லுபடியாகும். விசா ஸ்டாம்ப்பிற்கு உங்கள் பாஸ்போர்ட்டில் குறைந்தது இரண்டு வெற்றுப் பக்கங்கள் தேவைப்படும்.
இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்.
நீங்கள் விசா ஆன் அரைவலைப் பெற விரும்பினால், பின்வரும் கூடுதல் ஆவணங்களையும் நீங்கள் வழங்க வேண்டும்.
விசா ஆன் அரைவலுக்கு முறையாக பூர்த்தி செய்யப்பட்ட அப்ளிக்கேஷன் ஃபார்ம். இது M3 ஃபார்ம் என்றும் அழைக்கப்படுகிறது.
வியட்நாமின் விமான நிலையத்திற்கு வந்தவுடன் விசாவைப் பெற உங்களை அனுமதிக்கும் முறையான அப்ரூவல் லெட்டர்.
விசா ஆன் அரைவலுக்கு, நீங்கள் ஸ்டாம்பிங் ஃபீயை பணமாக செலுத்த வேண்டும். இந்த கட்டணம் அதிகாரப்பூர்வ வியட்நாமிய நாணயமான வியட்நாமிய டாங்கில் செய்யப்பட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்.
இந்திய குடிமக்களுக்கான வியட்நாம் விசா தேவைகள் இப்போது உங்களுக்குத் தெரியும், விண்ணப்பத்திற்கான விரிவான நடைமுறையைப் பாருங்கள்.
இ-விசா அப்ளிக்கேஷன் ப்ராசஸை ஆன்லைனில் முடிப்பதற்கான ஸ்டெப் பை ஸ்டெப் ப்ராசஸ் இங்கே உள்ளது.
ஸ்டெப் 1: வியட்நாமிற்கான அதிகாரப்பூர்வ இ-விசா அப்ளிக்கேஷன் வெப்சைட்டை திறந்து 'விண்ணப்பிக்கவும்' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
ஸ்டெப் 2: உங்கள் பாஸ்போர்ட் போட்டோ மற்றும் தகவல் பக்கத்தை ஸ்கேன் செய்யவும். இவற்றை jpg ஃபார்மட்டில் வெப்சைட்டில் அப்லோடு செய்யவும்.
ஸ்டெப் 3: அப்ளிக்கேஷன் ஃபார்மில் உங்கள் பயணம் தொடர்பான தேவையான தனிப்பட்ட தரவு மற்றும் தகவல்களை நிரப்பவும்.
ஸ்டெப் 4: சப்போர்ட்டாகும் டிஜிட்டல் மோடுகளில் ஏதேனும் ஒன்றின் மூலம் இ-விசா ஃபீ-ஐ ஆன்லைனில் கிளியர் செய்யவும்.
ஸ்டெப் 5: ஃபார்மை வெற்றிகரமாகச் சமர்ப்பித்த பிறகு, நீங்கள் ஒரு தனிப்பட்ட ரெஜிஸ்டரேஷன் கோடைப் பெறுவீர்கள்.
ஆன்லைன் வியட்நாம் விசா அப்ளிக்கேஷன் ப்ராசஸை முடித்த பிறகு மூன்று வேலை நாட்கள் காத்திருக்கவும், உங்கள் விசாவிற்கான அப்ரூவல் லெட்டர் உங்களுக்கு வழங்கப்படும். அடுத்து,
ஸ்டெப் 6: உங்கள் அப்ரூவல் லெட்டரை சரிபார்க்க வியட்நாமின் இ-விசாவுக்கான அதிகாரப்பூர்வ வெப்சைட்டிற்கு செல்லவும். அதை அணுக உங்கள் ரெஜிஸ்டரேஷன் கோடு, பிறந்த தேதி மற்றும் இமெயில் ஐ.டி ஆகியவற்றை உள்ளிடவும்.
லெட்டரை PDF ஃபைலாகச் சேவ் செய்து, உங்கள் பயணத்தின் போது அதை பிரிண்ட்அவுட் செய்து வைத்துக்கொள்ளவும். நீங்கள் வியட்நாமிற்கு வந்தவுடன், நீங்கள் இந்த அப்ரூவல் லெட்டரை சமர்ப்பிக்க வேண்டும் அத்துடன் அங்கீகரிக்கப்பட்ட இடத்திலிருந்து உங்கள் விசாவைப் பெற வேண்டும்.
முக்கியமானது: எங்கள் பயனர்களிடமிருந்து நாங்கள் பெற்ற ஃபீட்பேக்கின் அடிப்படையில், விசா கட்டணத்துடன் கூடுதல் சர்வீஸ் சார்ஜிங்களை வசூலிக்கும் விசா வழங்குநர்கள் உள்ளனர். அதைத் தொடர்வதற்கு முன், விவரங்களைச் சரியாகச் சரிபார்க்கவும். அதே வெப்சைட் தங்கள் வாடிக்கையாளர்களிடம் சர்வீஸ் சார்ஜிங்கை வசூலிக்கத் தொடங்கியதால், ஸ்டெப்களில் இருந்து லிங்கை அகற்றியுள்ளோம். (30-10-2022 அன்று அப்டேட் செய்யப்பட்டது).
விசாவைப் பெறுவதற்கான ஆஃப்லைன் முறையை விரும்பும் நபர்கள் VFS குளோபல் (இந்திய அரசாங்கத்திற்கு நேரடியாகச் சேவை செய்யும் அவுட்சோர்சிங் சேவை நிறுவனங்களில் ஒன்று) மூலம் அவ்வாறு செய்யலாம்.
இந்திய குடிமக்கள் VFS குளோபல் வழியாக வியட்நாம் விசாவிற்கு விண்ணப்பிக்க கீழே குறிப்பிடப்பட்டுள்ள ஸ்டெப்களைப் பின்பற்றலாம்:
ஸ்டெப் 1: விசா அப்ளிக்கேஷன் ஃபார்ம் மற்றும் உங்கள் பாஸ்போர்ட்டுடன் அருகிலுள்ள VFS குளோபல் வியட்நாம் விசா விண்ணப்ப மையத்தைப் பார்வையிடவும்.
ஸ்டெப் 2: அங்குள்ள செக்கியூரிட்டியை அணுகி அவரிடமிருந்து டோக்கனைப் பெற்று, விசா அப்ளிக்கேஷன் சென்ட்டரில் உங்களின் முறைக்காக காத்திருக்கவும்.
ஸ்டெப் 3: உங்கள் டோக்கன் எண் அறிவிக்கப்பட்டதும், ஆவணம் சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட கவுண்டருக்குச் செல்லவும்.
ஸ்டெப் 4: பாஸ்போர்ட் அளவிலான புகைப்படங்கள், உங்கள் வருகைக்கான காரணத்தை விவரிக்கும் கவர் லெட்டர் உள்ளிட்ட தேவையான ஆவணங்களுடன் உங்கள் விசா அப்ளிக்கேஷனை VFS அதிகாரிக்கு அனுப்பவும்; உறுதிப்படுத்தப்பட்ட ரிட்டர்ன் டிக்கெட்டுகள் மற்றும் ஹோட்டல் ரிசர்வேஷன்களின் போட்டோகாப்பீஸும் தேவை. கூடுதலாக, கடைசி மூன்று மாத பேங்க் ஸ்டேட்மென்ட்களை வழங்குவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். நியமிக்கப்பட்ட VFS அதிகாரியிடம் விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதற்கு முன்பு உங்கள் விசா ஃபார்மை முறையாக பூர்த்தி செய்துள்ளீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
ஸ்டெப் 5: அடுத்து விசா ஃபீ மற்றும் சர்வீஸ் சார்ஜை செலுத்தவும். சர்வீஸ் சார்ஜிங்கை ரொக்கமாக செலுத்த வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
ஸ்டெப் 6: விசா அங்கீகரிக்கப்பட்டவுடன், ரூ.215 செலுத்தி கூரியர் மூலம் அதைப் பெறலாம்.
சென்னை, ஹைதராபாத் அல்லது பெங்களூருவில் அமைந்துள்ள VFS குளோபல் பிரான்ச்களில் ஏதேனும் ஒன்றில் நீங்கள் விசாவுக்கு விண்ணப்பிக்கலாம்.
இந்தியாவுக்கான வியட்நாம் தூதரகம் புதுதில்லியில் அமைந்துள்ளது. அதற்கான தொடர்பு விபரங்கள் பின்வருமாறு -
முகவரி - 20, கௌடில்யா மார்க், சாணக்யாபுரி, புது தில்லி - 110021
தொடர்பு எண் - 2687.9852 (+ Ext); 2687.9852 (+20) (துணைத் தூதரகம்)
விசா கிடைத்ததா? இப்போது, நீங்கள் பயணம் செய்யத் தயாராக இருக்கிறீர்கள்! ஆம் அல்லவா?
உங்கள் வியட்நாம் விடுமுறையை கவர் செய்ய ஒரு இன்சூரன்ஸ் பாலிசி பற்றி என்ன தெரிந்துகொள்ள வேண்டும்?
இன்டெர்நேஷனல் டிராவல் இன்சூரன்ஸ் வியட்நாமுக்கு கட்டாயமில்லை. இருப்பினும், நீங்கள் செல்ல வேண்டிய இடத்தைப் பொருட்படுத்தாமல், டிராவல் இன்சூரன்ஸை பெறுவது அவசியம். உங்கள் வியட்நாம் பயணத்திற்கு இன்சூர் செய்வது ஏன் அவசியம்:
வியட்நாமின் முக்கிய நகரங்களில் பிக்பாக்கெட் மற்றும் திருட்டு சம்பவங்கள் பொதுவானவை. உங்கள் பாஸ்போர்ட்டை நீங்கள் இழந்தால், அதை மாற்றுவதற்கான உங்கள் செலவுகளை டிஜிட் டிராவல் இன்சூரன்ஸ் ஈடுசெய்யும்.
டிஜிட்டின் டிராவல் இன்சூரன்ஸின் மூலம், நீங்கள் செய்யும் அவசர விபத்து மருத்துவமனை செலவுகள் முழுமையாக ஈடுசெய்யப்படும். மேலும், வியட்நாமில் இருக்கும்போது எந்தவொரு அட்வென்ச்சர் ஸ்போர்ட்டிலும் (ஒரு நாள் நடவடிக்கைகளுக்கு மட்டும்) பங்கேற்கும் போது ஏதேனும் விபத்து ஏற்பட்டால் ஏற்படும் மருத்துவமனை கட்டணங்களையும் இது உள்ளடக்கும்.
ஃப்ளைட் டிலே கவர், லக்கேஜ் டிலே கவர், டிரிப் கேன்சலேஷன் கவர், எமர்ஜென்சி கேஷ் பெனிஃபிட்கள், பர்சனல் ஆக்சிடென்ட் கவர் போன்ற பெனிஃபிட்களையும் நீங்கள் பெறலாம். உங்கள் டிராவல் இன்சூரன்ஸ் பாலிசியுடன்.
பொறுப்புத் துறப்பு - மேலே உள்ள தகவல்கள் பல்வேறு இணைய ஆதாரங்களை ஆராய்வதன் மூலம் சேகரிக்கப்பட்டுள்ளன. நீங்கள் வியட்நாமின் அதிகாரப்பூர்வ அரசாங்க வெப்சைட்டை பார்வையிடுவதையும், ஏதேனும் முன்பதிவுகளைச் செய்வதற்கு அல்லது விண்ணப்பிப்பதற்கு முன்பு தகவலைச் சரிபார்ப்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.