இந்திய குடிமக்களுக்கான இலங்கை டூரிஸ்ட் விசா
இந்திய குடிமக்களுக்கான இலங்கை விசா பற்றி அனைத்தும்
இலங்கை உங்களுக்கு எளிதில் மிகவும் பிடித்துவிடும் நாடாக இருக்கும். இயற்கை மற்றும் விலங்கு ஆர்வலர்களுக்கு, இந்த இடம் பூமியில் ஒரு சொர்க்கம் என்றால் அது மிகையல்ல. பிரபலமான நம்பிக்கைக்கு மாறாக, இலங்கை அதன் அழகான கடற்கரைகளுக்கு அப்பாற்பட்டது. வைல்டுலைஃப் சஃபாரிகள், உயரமான மலைகள், பல தேயிலைத் தோட்டங்கள், உலகின் மிக அழகான ரயில் பயணம் மற்றும் பலவிதமான மலையேற்ற பாதைகள் வரை- சாகச விரும்பிகள், இளம் தேனிலவு ஜோடிகள் அல்லது ஒரு சிறிய விடுமுறையைத் தேடும் ஒரு குடும்பத்துக் கூட இந்த பட்டியலில் இலங்கை முதலிடம் வகிக்கிறது. உங்கள் பயணத்தைத் திட்டமிடுவதற்கு முன், உங்கள் பயணத்திற்குத் தேவையான சில விஷயங்களை உங்களுக்கு வழிகாட்டுவோம்-செல்லுபடியாகும் விசா மற்றும் டிராவல் இன்சூரன்ஸ்!
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு விசா தேவையா?
ஆம், இந்தியர்களுக்கு இலங்கைக்கு செல்ல விசா தேவை.
இந்திய குடிமக்களுக்கு இலங்கையில் ஆன் அரைவலுக்கான விசா உள்ளதா?
ஆம், இலங்கைக்கு பயணிக்கும் இந்தியர்களுக்கு ஆன் அரைவல் விசா இருக்கிறது, ஆனால் நீங்கள் முன்கூட்டியே இலங்கை ஈ.டி.ஏவைப் (ETA) பெற்றுள்ளீர்கள் என்பதை உறுதிப்படுத்த வேண்டும் மற்றும் உங்கள் பாஸ்போர்ட் நீங்கள் புறப்படும் தேதியிலிருந்து குறைந்தது மூன்று மாதங்களுக்கு செல்லுபடியாகும் என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
இந்திய குடிமக்களுக்கான இலங்கை விசா ஃபீ
இலங்கை விசாவிற்கான நிலையான காஸ்ட் டூரிஸ்ட் விசாவிற்கு $20 ஆகும், இது டபுள் எண்ட்ரிக்காக அந்நாட்டில் 30 நாட்கள் தங்க அனுமதிக்கிறது. டூரிஸ்ட் விசா மூலம் இலங்கைக்கு அதிகபட்சம் டபுள் எண்ட்ரிகளை மட்டுமே அனுமதிக்க முடியும். மல்டிபிள் எண்ட்ரிக்கான பிசினஸ் விசாவுக்கு, நிலையான காஸ்ட் $ 30 ஆகும்.
இலங்கை ஈ.டி.ஏ -க்கு அப்ளை செய்வது எப்படி?
சுற்றுலா, போக்குவரத்து, வியாபாரம் உள்ளிட்ட நோக்கங்களுக்காக இலங்கைக்கு பயணிக்கும் இந்தியர்கள் நாட்டிற்குள்ளும் பயணம் செய்வதற்கு ஈ.டி.ஏ (ETA) (எலெக்ட்ரானிக் டிராவல் ஆதரைசேஷன்) பெற்றிருக்க வேண்டும்.
எலக்ட்ரானிக் டிராவல் ஆதரைசேஷன்
விண்ணப்பதாரர்கள் www.eta.gov.lk அல்லது வெளிநாட்டிலுள்ள இலங்கைத் தூதரகங்களில் ஆன்லைனில் கிடைக்கும் ஈ.டி.ஏ (ETA) ஆன்லைன் அப்ளிக்கேஷன் பூர்த்தி செய்வதன் மூலம் இலங்கைக்கான செல்லுபடியாகும் எலக்ட்ரானிக் டிராவல் அங்கீகாரம் பெறலாம். ஆன்லைன் இலங்கை ஈ.டி.ஏ(ETA) அப்ளிக்கேஷன் எளிமையானது. இலங்கைக்கான அங்கீகரிக்கப்பட்ட ஈ.டி.ஏ (ETA) ஐப் பெறுவதற்கு நீங்கள் ஒரு ஆன்லைன் அப்ளிக்கேஷன் ஃபார்ம் பூர்த்தி செய்ய வேண்டும்.
ஈ.டி.ஏ(ETA) நடைமுறை
அபிசியல் வெப்சைட் மூலம் அப்ளிக்கேஷன் சமர்ப்பித்து ஒப்புகையைப் பெறுங்கள்.
அப்ளிக்கேஷனில் நீங்கள் வழங்கிய இமெயில் ஈ.டி.ஏ (ETA) அப்ரூவலை பெறுங்கள்.
இமெயில் பெறப்பட்ட ஒப்புதலின் பிரிண்ட் அவுட் எடுத்து, தேவைப்படும்போது விமான நிலையத்தில் உள்ள இமிக்ரேஷன் அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கவும்.
ஈ.டி.ஏ (ETA) அப்ரூவல் சான்றிதழ் வழங்கப்பட்ட 180 நாட்களுக்குள் பயன்படுத்தப்பட வேண்டும்.
இலங்கை டூரிஸ்ட் விசா ப்ராசஸிங் நேரம்
நீங்கள் ஃபார்ம் பூர்த்தி செய்தவுடன், ஈ.டி.ஏ (ETA) 3 நாட்களுக்குள் உங்களுக்கு இமெயில் செய்யப்படும்.
இலங்கைக்கான டிராவல் இன்சூரன்ஸ் ஒன்றை நான் வாங்க வேண்டுமா?
மெடிக்கல் எக்ஸ்பென்ஸ்கள் ஏறக்குறைய இந்தியாவைப் போலவே இருக்கும் ஒரு நாடு இது, ஆனால் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது மெடிக்கல் எக்ஸ்பென்ஸகளை ஈடுகட்டுவது எப்போதும் புத்திசாலித்தனம், இல்லையா? எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு டிராவல் இன்சூரன்ஸ் மெடிக்கல் எமர்ஜென்சிகளுக்கு அப்பாற்பட்ட சூழ்நிலைகளுக்கு கவர் செய்கிறது. விமான தாமதம், செக்-இன் லக்கேஜ் தாமதம், பண இழப்பு, பாஸ்போர்ட் இழப்பு, சாகச விளையாட்டுகள், திருட்டு, பெர்சனல் லையபிளிட்டி பத்திரங்கள் போன்றவை இந்த சூழ்நிலைகளில் சில.
இலங்கைக்கான டிராவல் இன்சூரன்ஸ் அத்தகைய அனைத்து சூழ்நிலைகளிலும் உங்களுக்கு பாதுகாப்பை வழங்கும்:
இந்திய குடிமக்களுக்கான இலங்கை விசா பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
இந்திய குடிமக்களுக்கு இலங்கை விசா வழங்குமா?
ஆம், ஆன் அரைவல் விசாக்கள் கிடைக்கின்றன. பயணத்தின் டீடைல்ஸ்களை முன்கூட்டியே வழங்க வேண்டும். மேலும், உங்கள் பாஸ்போர்ட் நீங்கள் பயணம் செய்ய திட்டமிட்டிருக்கும் தேதியிலிருந்து குறைந்தது 3 மாதங்களுக்கு செல்லுபடியாக வேண்டும்.