இந்தியாவிலிருந்து கனடா செல்வதற்கான டூரிஸ்ட் விசா
இந்தியாவிலிருந்து கனடா செல்வதற்கான டூரிஸ்ட் விசா பற்றிய அனைத்தும்
கனடாவில் நம் கண்களை கொள்ளைக்கொள்ளும் மலைத்தொடர்கள், பாலைவனங்கள், காடுகள் நிறைந்த பள்ளத்தாக்குகள், பிரமிக்க வைக்கும் ஏரிகள் நம் கண்களுக்கு விருந்தாக உள்ளன. நீங்கள் பாறைகள் வழியாக நடைபயணம் செய்ய விரும்பினாலும், கடல்சார் வரலாற்றைப் பற்றி அறிய விரும்பினாலும் அல்லது டொராண்டோ, மான்ட்ரியல் மற்றும் வான்கூவர் நகரங்களை ஆராய விரும்பினாலும், கனடா ஒவ்வொரு டிராவலரையும் கட்டி இழுக்கும் திறன் கொண்ட நாடு. ஆனால் இதையெல்லாம் அனுபவிக்க, உங்களுக்கு ஒரு டூரிஸ்ட் விசா தேவை! இந்தக் கட்டுரையில் டூரிஸ்ட் விசா பற்றி எல்லாம் படித்துவிட்டு திட்டமிடத் தொடங்குங்கள்.
கனடா செல்ல இந்தியர்களுக்கு விசா தேவையா?
ஆம், இந்தியர்கள் கனடா செல்ல விசா வைத்திருப்பது கட்டாயமாகும்.
இந்திய குடிமக்களுக்கு கனடாவில் விசா ஆன் அரைவல் உள்ளதா?
இல்லை, தற்போதைய விதிகளின்படி இந்தியர்களுக்கு கனடாவுக்கான விசா ஆன் அரைவல் வசதி இல்லை. எனவே, இந்தியர்கள் கனடாவுக்கு வருவதற்கு முன்பு செல்லுபடியாகும் விசா வைத்திருப்பது கட்டாயமாகும்.
கனடா டூரிஸ்ட் விசாவிற்குத் தேவையான ஆவணங்கள்
கனடா டூரிஸ்ட் விசாவிற்கு தேவையான ஆவணங்களின் பட்டியல் பின்வருமாறு:
கனடாவுக்கு வருகை தந்த தேதியிலிருந்து 6 மாதங்கள் செல்லுபடியாகும் ஒரிஜினல் பாஸ்போர்ட்கள் + பழைய பாஸ்போர்ட்கள் ஏதேனும் இருந்தால்.
விசா விண்ணப்பப் படிவங்கள்.
3 வண்ண புகைப்படம்: 35 மிமீ x 45 மிமீ, ஒயிட் பேக்கிரவுண்டு மேட் ஃபினிஷ், 80% ஃபேஸ் சைஸ்.
விண்ணப்பதாரரின் விவரங்கள், பயணம் மற்றும் உங்களுடன் பயணிக்கும் பிற உறுப்பினர்களின் விவரங்களைக் குறிப்பிடும் கடிதம்.
ஹோட்டல் புக்கிங்.
தினசரி சுற்றுப்பயண திட்டங்கள்.
விமான டிக்கெட்டுகள்
தொழில் வழங்குனர்/ பள்ளி/ கல்லூரியின் அசல் விடுப்புக் கடிதம்.
பணியில் இருந்தால் கடந்த 6 மாத சாளரி ஸ்லிப்.
சுயதொழில் புரிபவராக இருந்தால் - ஷாப் ஆக்ட் / MOA / பத்திரம்.
கடந்த 6 மாதங்களுக்கான அசல் தனிநபர் பேங்க் ஸ்டேட்மென்ட்கள் ஆரோக்கியமான மற்றும் போதுமான இருப்புடன் புதுப்பிக்கப்பட்ட ஸ்டேட்மென்ட்டாக இருக்கவேண்டும்.
கடந்த 3 ஆண்டுகளுக்கான வருமான வரி கணக்கு / படிவம் 16.
மாணவராக இருந்தால் - பள்ளி / கல்லூரி அடையாள அட்டையின் நகல்.
ஓய்வு பெற்றிருந்தால் - ஓய்வூதிய சான்று / பென்ஷன் பாஸ்புக் அல்லது ஸ்லிப்கள்.
எஃப்.டி, என்.எஸ்.சி, பி.பி.எஃப், பங்குகள், சொத்து ஆவணங்கள் போன்ற பிற நிதி ஆவணங்கள்.
இந்தியாவிலிருந்து கனடா செல்வதற்கான டூரிஸ்ட் விசா கட்டணம்
விசா டிபே | பீ |
---|---|
விசிட்டர் விசா (சூப்பர் விசா உட்பட) - ஒரு நபருக்கு | 78.18 USD |
விசிட்டர் விசா - குடும்பம் (5 அல்லது அதற்கு மேற்பட்டவர்களுக்கு) | 366.48 USD |
ஒரு விசிட்டராக உங்கள் தங்கும் காலத்தை நீட்டிக்கவும் - ஒரு நபருக்கு | 78.18 USD |
ஒரு விசிட்டராக உங்கள் ஸ்டேட்டஸை ரீஸ்டோர் செய்யவும் | 146.59 USD |
இந்தியாவில் இருந்து கனடா டூரிஸ்ட் விசாவுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
படி 1 - கனடாவுக்கான டூரிஸ்ட் விசாவுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எளிதானது, சிறந்தது அத்துடன் நீங்கள் பின்வரும் பெனிஃபிட்களையும் பெறுவீர்கள்:
கூரியர் கட்டணம் அல்லது மெயில் டெலிவரி டைம் இல்லை - உங்கள் விண்ணப்பத்தை உடனடியாக சமர்ப்பிக்கலாம்.
ஆன்லைன் விண்ணப்பங்கள் விரைவாக செயலாக்கப்படுகின்றன.
செயலாக்க தாமதங்களைத் தவிர்க்கலாம்.
முழுமையடையாத விண்ணப்பங்கள் உங்களுக்கே திருப்பி அனுப்பப்படும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பது உங்கள் விண்ணப்பத்தை நீங்கள் சமர்ப்பிப்பதற்கு முன்பு பூர்த்தியடைந்துள்ளதா என்பதை உறுதிப்படுத்த உதவுகிறது.
மேலும் ஆவணங்கள் தேவைப்பட்டால், அவற்றை விரைவாக ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம்.
உங்களிடம் கேட்கப்படும் வரை உங்கள் பாஸ்போர்ட்டை சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை.
உங்கள் விண்ணப்பத்தின் நிலை குறித்த புதுப்பிப்புகளை உங்கள் ஆன்லைன் கணக்கில் நேரடியாகப் பெறலாம்.
படி 2 - நீங்கள் ஆன்லைனில் விசாவுக்கு விண்ணப்பித்த பிறகு, அடுத்த கட்டமாக உங்கள் கைரேகை மற்றும் புகைப்படத்தை வழங்க வேண்டும்.
பெரும்பாலான சந்தர்ப்பங்களில், நீங்கள் பயோமெட்ரிக்ஸ் கொடுக்க வேண்டும். நீங்கள் பயோமெட்ரிக்ஸ் கட்டணத்தை செலுத்தி உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பித்த பிறகு, உங்கள் பயோமெட்ரிக்ஸ் கொடுக்க வேண்டும் என்று ஒரு கடிதம் கிடைக்கும். உங்கள் பயோமெட்ரிக்ஸை எவ்வாறு, எங்கு கொடுக்க வேண்டும் என்பது கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும். உங்கள் பயோமெட்ரிக்ஸை (நேரில்) கொடுக்க உங்களுக்கு சுமார் 30 நாட்கள் கால அவகாசம் இருக்கும். நீங்கள் பயோமெட்ரிக்ஸ் கட்டணம் செலுத்தினால் மட்டுமே அறிவுறுத்தல் கடிதத்தைப் (இன்ஸ்ட்ரக்ஷன் லெட்டர்) பெறுவீர்கள்.
படி 3 - பயோமெட்ரிக்ஸ் முடிந்ததும், உங்கள் விசா விண்ணப்பம் செயலாக்கப்படும். உங்கள் விண்ணப்பம் சரிபார்க்கப்படும் மற்றும் உங்கள் ஆவணங்கள் முழுமையடையவில்லை என்றால், அது செயலாக்கப்படாமல் திருப்பி அனுப்பப்படும்.
மேலும் தகவல்களை அனுப்பவும், மருத்துவ பரிசோதனை செய்யவும் உங்கள் நாட்டில் உள்ள அதிகாரிகளுடன் நேர்காணலுக்குச் செல்லுமாறு கேட்கப்படலாம்.
உங்கள் விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்ட பின்னர் உங்கள் பாஸ்போர்ட் மற்றும் பிற அசல் ஆவணங்கள் உங்களிடம் திருப்பித் தரப்படும். உங்கள் விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டால், விசா உங்கள் பாஸ்போர்ட்டிற்குள் முத்திரையிடப்படும். உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால், உங்களுக்கு ஒரு விண்ணப்பம் அனுப்பப்படும்.
படி 4 - செல்லுபடியாகும் விசிட்டர் விசா மற்றும் டிராவல் ஆவணம் நீங்கள் கனடாவுக்குள் நுழைய முடியும் என்பதற்கு உத்தரவாதம் அளிக்காது. நீங்கள் வரும்போது, கனடாவுக்கு பயணம் செய்ய அங்கீகரிக்கப்பட்ட அதே நபர் நீங்கள் என்பதை உறுதிப்படுத்த பிரைமரி இன்ஸ்பெக்ஷன் கியோஸ்க்கில் கைரேகைகள் மூலம் உங்கள் அடையாளம் சரிபார்க்கப்படும்.
படி 5 - நீங்கள் அடையாளச் சோதனையில் தேர்ச்சி பெற்று நுழைவுத் தேவைகளைப் பூர்த்தி செய்தால், எல்லைச் சேவைகள் அதிகாரி உங்கள் பாஸ்போர்ட்டை முத்திரையிடுவார் அல்லது நீங்கள் கனடாவில் எவ்வளவு காலம் தங்கியிருக்க முடியும் என்பதை உங்களுக்குத் தெரியப்படுத்துவார். நீங்கள் பொதுவாக 6 மாதங்கள் வரை கனடாவில் தங்க அனுமதிக்கப்படுவீர்கள்.
கனடா டூரிஸ்ட் விசா ப்ராசஸிங் டைம்
கனடாவுக்கான டூரிஸ்ட் விசாவுக்கான ப்ராசஸிங் டைம் அதிகபட்சம் 8 வாரங்கள் ஆகும். அப்ளிக்கேஷன் மையத்தின் இருப்பிடம், தனிப்பட்ட வழக்குகள் மற்றும் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களைப் பொறுத்து ப்ராசஸிங் டைம் மாறுபடும்.
விசா மற்றும் டிராவல் இன்சூரன்ஸ் ஆகியவை சர்வதேச பயணம் செய்யும் போது நீங்கள் வைத்திருக்க வேண்டிய இரண்டு மிக முக்கியமான விஷயங்கள். நாட்டிற்குள் நுழைவதற்கான விசா மற்றும் அங்கு பாதுகாப்பாகவும் மன அழுத்தமின்றியும் தங்குவதற்கான டிராவல் இன்சூரன்ஸ் மிக அவசியம். கனடாவில் உங்கள் ஒவ்வொரு மணி நேரத்தையும் திட்டமிட்டு அனுபவியுங்கள்.
நான் கனடா டிராவல் இன்சூரன்ஸை வாங்க வேண்டுமா?
நீங்கள் பக்காவாக பிளான் செய்திருந்தாலும் நீங்கள் வேறு நாட்டில் இருக்கும்போது தவறு நடக்க ஏராளமான வழிகள் உள்ளன. வீட்டிலிருந்து வெகு தொலைவில், அறியப்படாத ஒரு நாட்டில் நீங்கள் இருப்பதால், நீங்கள் குறிப்பாக பாதிக்கப்படக்கூடியதாக உணரும்போது, எதிர்பாராத மருத்துவ செலவுகள் மற்றும் பிற பயணம் தொடர்பான அவசரநிலைகளின் அபாயத்திலிருந்து கனடா டிராவல் இன்சூரன்ஸ் உங்களைப் பாதுகாக்கும்.
நீங்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது எதிர்பாராத நோய்கள் அல்லது விபத்துகள் ஏற்படும்போது அல்லது நீங்கள் பிற கடுமையான அவசரநிலைகளை எதிர்கொள்ளும்போது, டிராவல் இன்சூரன்ஸை வைத்திருப்பது உங்களுக்கு நிதி வசதியை அளிப்பதுடன் இது முழு அனுபவத்தையும் மிகவும் குறைவான அதிர்ச்சிகரமானதாக ஆக்குகிறது.
இதுபோன்ற அனைத்து சூழ்நிலைகளிலும் டிராவல் இன்சூரன்ஸ் உங்களுக்கு பாதுகாப்பை வழங்கும்:
இது உங்கள் லக்கேஜ்கள் திருடுபோனால் அல்லது தொலைந்து போனால் தேவையான கவரை அளிக்கும்.
உங்களுக்கு ஏதேனும் மருத்துவ உதவி தேவைப்பட்டால் அது உங்கள் பாக்கெட்டை காலிசெய்யாது.
அதுபோன்ற நிலையில் நீங்கள் கிளைம் செய்து உதவி கோரலாம்.
தனிநபர் விபத்து நடந்தால், அதற்கும் கவர் உண்டு.
ஏதேனும் காரணத்தால் தாமதமான விமானங்கள் அல்லது ரத்து செய்யப்பட்ட விமானங்கள் கவர் செய்யப்படும்.
டிராவல் இன்சூரன்ஸில் நாங்கள் உங்களுக்கு வழங்கும் கீழே குறிப்பிடப்பட்டுள்ள பெனிஃபிட்களைப் பாருங்கள்:
ஜீரோ டிடக்டபிள் - நீங்கள் உங்கள் பாக்கெட்டிலிருந்து பணம் செலுத்ததேவையில்லை, நாங்கள் எல்லாவற்றையும் கவனித்துக் கொள்வோம்
நீங்கள் டிராவல் செய்வதற்கேற்ற கவர் - எங்கள் கவரேஜில் ஸ்கூபா டைவிங், பங்கீ ஜம்பிங் மற்றும் ஸ்கை டைவிங் போன்ற ஆக்டிவிட்டிகள் அடங்கும் (கால அளவு ஒரு நாளுக்கு மட்டும் பொருந்தும்)
ஸ்மார்ட்போன் மூலம் செய்யப்படும் கிளைம் செயலாக்கம் - இது ஸ்மார்ட்போன் மூலம் செய்யப்படும் கிளைம் செயலாக்கம் ஸ்மார்ட்டானது. பேப்பர்ஒர்க் இல்லை, எங்கும் ஓட வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் கிளைம் செய்யும்போது உங்கள் ஆவணங்களைப் பதிவேற்றவும்.
மிஸ்டு கால் வசதி +91-7303470000 என்ற எண்ணில் எங்களுக்கு ஒரு மிஸ்டு கால் கொடுங்கள், நாங்கள் 10 நிமிடங்களில் உங்களை மீண்டும் அழைப்போம். சர்வதேச அழைப்பு கட்டணம் இல்லை!
இதைப் பற்றி மேலும் அறிந்துகொள்ளுங்கள்:
இந்திய குடிமக்களுக்கான கனடா டூரிஸ்ட் விசா பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
அப்ளிக்கேஷன் செயல்முறை பயோமெட்ரிக் விவரங்களை சமர்ப்பிப்பதை உள்ளடக்குகிறதா?
ஆம், ஒருவர் விசாவுக்கு விண்ணப்பிக்கும் போதெல்லாம் சில அடிப்படை பயோமெட்ரிக் விவரங்கள் சேகரிக்கப்பட வேண்டும் என்று கனேடிய அரசாங்கம் கட்டாயப்படுத்தியுள்ளது. உங்கள் விசாவை புதுப்பிக்கும் போது இதுபோன்ற விவரங்கள் சேகரிக்கப்படும்.
கனடாவுக்கான விசா ப்ராசஸிங்கிற்கு எவ்வளவு காலம் ஆகும்?
கனேடிய அதிகாரிகள் விண்ணப்பித்த 8 வாரங்களுக்குள் ப்ராசஸிங்கை முடிக்க வேண்டும். எவ்வாறாயினும், நீங்கள் ஒரு மாதத்திற்கு முன்பே விசாவுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
கனடாவுக்கு செல்வதற்கு டிராவல் இன்சூரன்ஸ் அவசியமா?
தற்போதுள்ள விதிமுறைகளின் கீழ், கனடாவுக்குச் செல்லும்போது டிராவல் இன்சூரன்ஸை வைத்திருப்பது கட்டாயமாகும். கவரை அணுகத் தவறினால் விசா நிராகரிக்கப்படலாம்.
கனேடிய விசாவிற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியுமா?
ஆம், ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இருப்பினும், பயோமெட்ரிக்ஸ் போன்ற சில விவரங்களை நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.
நான் ஏற்கனவே செயலாக்க கட்டணத்தை செலுத்தியுள்ளேன், ஆனால் எனது விசா விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. ரீஃபண்ட் பாலிசி நடைமுறையில் உள்ளதா?
இல்லை, சட்டவிதிகளின் கீழ், பணத்தைத் திரும்பப் பெற எந்த ஏற்பாடும் இல்லை. நீங்கள் ஏற்கனவே கட்டணம் செலுத்தியிருந்தால், திருப்பி பணம் கொடுப்பதற்கு எந்த வாய்ப்பும் இல்லை.