சப்போர்ட்
closeஎங்கள் வாட்ஸ்அப் எண்ணை அழைப்புகளுக்கு பயன்படுத்த முடியாது. இது வெறும் அரட்டை எண்.
நம் அன்புக்குரியவர்களை இழப்பதை விட வேதனையானது எதுவுமில்லை. அதுவும் அவர்களுக்கு நல்லதொரு சிகிச்சை தர முடியாததால் அது நிகழும்போது அது இன்னும் மோசமானது. நீங்கள் துன்பத்தில் துவளும் போது, உங்களைத் தாங்கிப் பிடிப்பது உங்கள் அன்புக்குரியவர்கள், இல்லையா? நீங்கள் அனைவரும் அதை கேள்விப்பட்டு மட்டும் அல்ல, ஆனால் வாழ்க்கையில் பலமுறை அனுபவித்திருக்க வேண்டும்.
இந்தியாவில் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியானது, மருத்துவம் சார்ந்த வசதிகளின் விலை உயர்வைக் கருத்தில் கொண்டு மற்ற எதையும் விட சிறந்த காப்பாகும். உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்ய பல்வேறு வகையான இன்சூரன்ஸ் பாலிசிகள் உள்ளன. இந்தியாவில் கிடைக்கும் பல்வேறு வகையான ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிகளைப் பற்றி விவாதிப்போம்.
இன்டிஜுவல் ஹெல்த் இன்சூரன்ஸ் என்பது, நீங்கள், உங்கள் மனைவி, குழந்தைகள் மற்றும் பெற்றோர்களைப் பாதுகாக்க நீங்கள் வாங்கக்கூடிய பாலிசி. இந்த வகையான இன்சூரன்ஸ் பாலிசியானது காயம் மற்றும் நோய் தொடர்பான ஹாஸ்பிட்டலைசேஷனுக்கான உங்கள் மருத்துவச் செலவுகள், அறுவை சிகிச்சைச் செலவுகள், அறை வாடகை, தினப்பராமரிப்பு நடைமுறைகள் மற்றும் பலவற்றை உள்ளடக்கும்.
இன்டிஜுவல் ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டத்தின் கீழ் உள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும் இன்டிஜுவல் இன்சூரன்ஸ் தொகை கிடைக்கும். எடுத்துக்காட்டாக, உங்கள் மனைவி, 2 குழந்தைகள் மற்றும் உங்களை உள்ளடக்கிய 3 லட்சம் இன்சூரன்ஸ் தொகைக்கான, இன்டிஜுவல் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை நீங்கள் எடுத்துக் கொண்டால், இன்சூர் செய்யப்பட்ட ஒவ்வொரு நபருக்கும் ரூ.3 லட்சம் இன்டிஜுவல் இன்சூரன்ஸ் தொகை கிடைக்கிறது. இது பிரீமியத்தை ஒப்பீட்டளவில் அதிகமாக்குகிறது.
உங்களைப் போன்ற 18 வயது முதல் 70 வயது வரை உள்ளவர்கள் இந்தத் திட்டத்தை வாங்கத் தேர்வு செய்யலாம். இன்டிஜுவல் பாலிசியை வாங்குவதில் சிறந்த அம்சம் என்னவென்றால், அது உள்ளடக்கப்பட்ட ஒவ்வொரு உறுப்பினருக்கும் இன்டிஜுவலாக இன்சூரன்ஸ் தொகையை வழங்குகிறது.
உங்கள் குடும்பத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் மலிவு விலையில் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை நீங்கள் விரும்பினால், ஃபேமிலி ஃப்ளோட்டர் ஹெல்த் பாலிசி உங்கள் விருப்பமாக இருக்க வேண்டும்.
ஃபேமிலி ஃப்ளோட்டர் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியின் கீழ், பாலிசியின் கீழ் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் சிங்கிள் இன்சூர் செய்யப்பட்ட ஃப்ளோட்ஸ் தொகை கிடைக்கிறது. இன்டிஜுவல் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை விட ஒப்பீட்டளவில் பிரீமியம் குறைவாக இருப்பதால் ஃபேமிலி ஃப்ளோட்டர் ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டம் நன்மை பயக்கும். இந்தக் பாலிசியானது உங்களை, உங்கள் மனைவி, குழந்தைகள் மற்றும் பெற்றோரை உள்ளடக்கும்.
60 வயதுக்கு மேற்பட்ட உங்கள் குடும்ப உறுப்பினர்களைச் சேர்ப்பதை நீங்கள் கருத்தில் கொள்ளக்கூடாது. அவர்கள் நோய்வாய்ப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே இது பிரீமியத்தை பாதிக்கும்.
நீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தின் மூத்த உறுப்பினர் 60 வயதுக்கு உட்பட்டவராக இருந்தால், நீங்கள் ஃபேமிலி ஃப்ளோட்டர் பாலிசியை வாங்க வேண்டும்.
குரூப் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி என்பது ஒரு குழுவில் பணியாற்றும் ஊழியர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, உங்களிடம் ஒரு ஸ்டார்ட்-அப் அல்லது கார்ப்பரேட் ஹவுஸ் இருந்தால், உங்கள் ஊழியர்களுக்காக அத்தகைய திட்டங்களை வாங்க வேண்டும். இது ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஒரு வகையான நன்மை. ஒரு முதலாளியாக, பணியாளர் தக்கவைப்பு விகிதத்தை அதிகரிக்க நீங்கள் இந்த பாலிசியை வாங்கலாம்.
குரூப் ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டம் குறைந்த கட்டண பிரீமியத்துடன் வருகிறது. சில இன்சூரன்ஸ் நிறுவனங்கள், இன்சூர் செய்யப்பட்ட தொகை முடிவடையும் தருவாயில், அதனை எண்ணற்ற முறை ரீஃபில் செய்ய அனுமதிக்கின்றன. விபத்து, நோய், தீவிர நோய், மனநோய் மற்றும் மகப்பேறு ஆகியவற்றிற்கான ஹாஸ்பிட்டலைசேஷனை ஏற்றுக்கொள்ள குரூப் ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டம் உதவுகிறது.
குரூப் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை வாங்குவது உங்கள் ஊழியர்களுக்கு கவரேஜை வழங்குவது மட்டுமின்றி உங்கள் நிறுவனத்தின் நன்மதிப்பை மேம்படுத்துகிறது. இங்கே மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், ஊழியர்கள் உங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் வரை மட்டுமே இன்சூர் செய்யப்படுவார்கள்.
60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி சீனியர் சிட்டிசன்ஸ் ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டம் என்று அழைக்கப்படுகிறது. உங்கள் பெற்றோர் அல்லது தாத்தா பாட்டி 60 வயதுக்கு மேல் இருந்தால், இந்த பாலிசி உங்களின் சிறந்த தேர்வாக இருக்க வேண்டும்.
ஒரு சீனியர் சிட்டிசன்ஸ் பாலிசியானது மருந்துகளின் விலை, விபத்து அல்லது நோயால் ஏற்படும் ஹாஸ்பிட்டலைசேஷன், மருத்துவமனையில் சேர்வதற்கு முன் மற்றும் பின் சிகிச்சை மற்றும் சிகிச்சைக்கான கவரேஜை வழங்கும். இவற்றுடன், டோமிசிலியரி ஹாஸ்பிட்டலைசேஷன் மற்றும் மனநலப் சிகிச்சைகள் போன்ற வேறு சில மருத்துவ முறைகளுக்கும் இது காப்பீடு அளிக்கிறது.
சில இன்சூரர்கள், சீனியர் சிட்டிசன்ஸ் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை விற்கும் முன், முழுமையான உடல் பரிசோதனையை மேற்கொள்ளுமாறு கேட்கலாம். இதனை பெறுவதற்கான அதிகபட்ச நுழைவு வயது வரம்பு லைஃப்டைம் ரின்யூபிலிட்டியுடன் 70 வயதாக நீடிக்கப்பட்டுள்ளது. மேலும், நமக்குத் தெரிந்தபடி, சீனியர் சிட்டிசன்ஸ் அதிக அளவில் நோய்களுக்கு ஆளாகிறார்கள். ஆகவே, இந்தத் திட்டங்கள் மற்ற ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிகளை விட விலை அதிகம்.
அடிப்படை ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டத்துடன் மெட்டர்னிட்டி பாலிசியை சேர்த்து வாங்கலாம். மகப்பேறுக்கு முந்தைய நிலை, பிரசவம் மற்றும் பிரசவத்திற்குப் பிந்தைய நிலை ஆகியவற்றில் ஏற்படும் அனைத்து செலவுகளும் இதன் மூலம் ஈடுசெய்யப்படுகின்றன.
புதிதாக திருமணமான தம்பதிகள் அல்லது வரும் ஆண்டுகளில் குழந்தை வரவை திட்டமிடும் குடும்பங்கள் இந்த பாலிசியை வாங்க வேண்டும். இது பிரசவம் (மருத்துவ ரீதியாக அவசியமான முடிவு உட்பட), கருவுறாமை செலவுகள் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைக்கு அதன் முதல் 90 நாட்கள் வரை பாதுகாப்பு அளிக்கிறது. மெட்டர்னிட்டி பாலிசியின் குறைந்தபட்ச காத்திருப்பு காலம் 2 ஆண்டுகள்.
வாழ்க்கை முறை தொடர்பான நோய்கள் அதிகரித்து வருகின்றன. இதைக் கருத்தில் கொண்டு, இன்சூரன்ஸ் நிறுவனங்கள் கிரிட்டிக்கல் இல்னஸ் பாலிசியை வழங்கியுள்ளன.
நடுத்தரக் குடும்பங்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டமானது பின்வரும் நோய்களை உள்ளடக்கியது:
இந்த நோய்களுக்கு சிகிச்சை பெற அதிக பணம் தேவைப்படும். கிரிட்டிக்கல் இல்னஸ் திட்டத்தின் கீழ், உங்களுக்கு நோய் இருப்பது கண்டறியப்பட்டவுடன், சிகிச்சைக்கான உண்மையான செலவைப் பொருட்படுத்தாமல், அது உங்களுக்கு முன் வரையறுக்கப்பட்ட தொகையைச் செலுத்தும்.
கிரிட்டிக்கல் இல்னஸ் பாலிசியை வாங்குவதை விட புத்திசாலித்தனமான நடவடிக்கையாக எதுவும் இருக்க முடியாது. ஏனெனில், இது உங்கள் சேமிப்பில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. பாலிசி வாழ்நாள் முழுவதும் புதுப்பிக்கத்தக்கது. நீங்கள் கிரிட்டிக்கல் இல்னஸ் பாலிசியை எடுத்துக் கொண்டால், நோயைக் கண்டறிந்த பிறகு 30 நாட்களுக்கு உயிர்வாழ்வது அவசியம்.
குடும்ப நோய்கள் ஏதேனும் இருக்கும் பட்சத்தில் இந்த பாலிசியை வாங்குவது புத்திசாலித்தனமாக இருக்கும். மொத்தத் தொகையைத் தவிர, கிரிட்டிக்கல் இல்னஸ் பாலிசியானது, கவனிப்புக்கான செலவு மற்றும் ஹாஸ்பிட்டலைசேஷன் செலவுகளைத் திருப்பித் தருகிறது. கூடுதல் சுகாதார பரிசோதனையின் பலனையும் நீங்கள் பெறலாம்.
ஆனால், கிளைம் செய்யப்பட்டவுடன், இன்சூரன்ஸ் தொகை மொத்தமாக வெளியிடப்படும் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். இன்சூரன்ஸ் தொகை வெளியான பிறகு, பாலிசி முடிவடைகிறது.
அதிக தொகைக்கு கவரேஜ் தேடினால் டாப்-அப் பாலிசியை வாங்கலாம். ஆனால், அத்தகைய திட்டங்கள் "டிடக்டபிள் கிளாஸ்" உடன் வருகின்றன. எனவே, கிளைம் செய்யப்படும் போது பாலிசியில் குறிப்பிடப்பட்டுள்ள வரையறுக்கப்பட்ட வரம்புக்கு மேல் பணம் செலுத்தப்படும்.
நீங்கள் 15 லட்சத்துக்கான இன்சூரன்ஸ் பாலிசியை எடுத்து அதில் ரூ.3 லட்சம் டிடக்டபிளாக இருந்தால், நீங்கள் அந்த 3 லட்ச ரூபாயை உங்கள் கையிருப்பிலிருந்து செலுத்த வேண்டும். அதற்கு மேலாகும் மருத்துவ செலவுத் தொகை, இன்சூரரால் செலுத்தப்படும்.
எனவே, உங்கள் அடிப்படை ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிக்கு மேல் விரிவான இன்சூரன்ஸ் பாலிசியைத் தேடினால், இந்தத் திட்டத்தை நீங்கள் வாங்கலாம்.
ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டங்களின் கீழ், இன்சூரன்ஸ் நிறுவனத்தால் வழங்கப்படும் டெய்லி கேஷ் அலவன்ஸ் சலுகையையும் பெறுவீர்கள். இவை 30-45 நாட்களுக்குத் ரீஇம்பர்ஸ் செய்யப்படும் தினசரிச் செலவுகள் மற்றும் ஹாஸ்பிட்டலைசேஷன் செலவுகளில் இருந்து தனியானவை.
ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிகளுக்கான தேவை அதிகரித்ததால், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மற்றும் அவற்றின் தயாரிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்தது. மருத்துவச் செலவுகள் அதிகரித்து வருவதால் மேலே உள்ள பாலிசிகளில் ஏதேனும் ஒன்றை வாங்குவது புத்திசாலித்தனமானது ஆகும்.
நாம் அனைவரும் முடிந்தவரை கூடிய விரைவில் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை வாங்குவது அவசியம் என்பது பற்றி அதிகம் கேள்விப்பட்டிருக்க வேண்டும். நோய் வருவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருக்கும் போது, உங்கள் வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்திலேயே வெயிடிங் பீரியட் எதுவும் இல்லாமல், சிறு வயதிலேயே ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை வாங்கும்போது குமுலேட்டிவ் போனஸாக சிறந்த தொகையை வாங்குவதோடு, இன்சூர் செய்யப்பட்ட தொகையை வரும் ஆண்டுகளில் அதிகரிக்கலாம்.
ஆனால், ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை பெறுவதன் மற்ற முக்கிய அம்சங்களையும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்:
மார்க்கெட்டில் பல ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இருக்கும்போது, உங்கள் தேவைகளுக்கு ஏற்ப ஒரு ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டத்தைத் தேர்ந்தெடுப்பது சவாலானதாக இருக்கும். ஆனால், உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை எடுப்பதற்கு முன் கருத்தில் கொள்ள வேண்டிய விரைவான சரிபார்ப்புப் பட்டியல் இங்கே உள்ளது.