நீங்கள் ஒரு ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியைத் தேடும் போது, அதன் கவரேஜ் தவிர, விலக்குகள், கோ-பே செலுத்துதல் அல்லது காத்திருப்பு காலங்கள் போன்ற பல கூடுதல் அம்சங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும். மேலும், ஹெல்த் இன்சூரன்ஸில் கருத்தில் கொள்ள வேண்டிய மற்றொரு அம்சம் சப்-லிமிட் ஆகும்.
சப்-லிமிட் என்பது முன்னரே தீர்மானிக்கப்பட்ட பண வரம்பு ஆகும். இது இன்சூரன்ஸ் நிறுவனத்தால் உங்கள் கிளைம் தொகையில் வைக்கப்படுகிறது. ஹெல்த் இன்சூரன்ஸில் சப்-லிமிட் முழு பில் தொகைக்கும் பொருந்தாது, மாறாக சில நிபந்தனைகளுக்கு பொருந்தும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். இந்த லிமிட்கள் மருத்துவமனை அறை வாடகை, சில நோய்களுக்கான சிகிச்சை, ஆம்புலன்ஸ் கட்டணம் மற்றும் பலவற்றில் வைக்கப்படலாம்.
சில சந்தர்ப்பங்களில், இந்த சப்-லிமிட் உங்கள் இன்சூரன்ஸ் தொகையின் சதவீதமாகக் கணக்கிடப்படலாம். எடுத்துக்காட்டாக, உங்கள் எஸ்.எல் (SI) ரூ.5 லட்சம் என்றால், உங்கள் ரூம் வாடகைக் கட்டணங்கள் 1% என வரையறுக்கப்பட்டு, ₹5,000 வரை இன்சூரன்ஸ் கவரேஜ் வரும்.
இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தங்கள் ஒட்டுமொத்த கிளைம்களை குறைக்க சப்-லிமிட்களை விதிக்கின்றன. அவை வழக்கமாக பெரும்பாலான மருத்துவமனைகளால் வசூலிக்கப்படும் சராசரி விகிதங்களில் அமைக்கப்படுவதால், இது வாடிக்கையாளர்களால் மோசடி மற்றும் மருத்துவ கட்டணங்களை அதிகரிக்கும் நிகழ்வுகளையும் குறைக்கும்.
அனைத்து ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிகளுக்கும் சப்-லிமிட்கள் இருக்காது. மேலும் சில இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இதிலிருந்து விலகுவதற்கான ஆப்ஷன்களை வழங்குகின்றன. ஆனால், பொதுவாக, சப்-லிமிட்டுடன் கூடிய ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டமானது, சப்-லிமிட்கள் இல்லாததை விட குறைவான பிரீமியத்தைக் கொண்டிருக்கும்.
எனவே, நீங்கள் ஒரு ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியைத் தேர்ந்தெடுக்கும்போது, சப்-லிமிட்களை உன்னிப்பாக கவனியுங்கள். இவை உங்கள் பட்ஜெட்டுக்கு சிறந்ததாக இருந்தாலும், சப்-லிமிட்களுடன் கூடிய ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டங்கள் நீண்ட காலத்திற்கு மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட கவரேஜை வழங்க முடியும் என்பதால், அவை உங்கள் தேவைகளுக்கும் பொருந்துகின்றன என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
ஹெல்த் இன்சூரன்ஸில் மூன்று முக்கிய வகையான சப்-லிமிட்கள் உள்ளன. இன்சூரன்ஸ் பாலிசியைத் தேர்ந்தெடுப்பது உங்களுக்கு எளிதாக இருக்கும் வகையில் அவற்றைப் பார்ப்போம்:
ரூம் வாடகை என வரும்போது, உங்கள் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் வழக்கமாக ஒரு நாளுக்கான ரூம் வாடகையை என ஒரு லிமிட்டை வைத்திருக்கும். இந்தத் தொகை பொதுவாக இன்சூரன்ஸ் செய்யப்பட்ட தொகையில் 1-2% அல்லது வேறு சில நிலையான தொகைக்கு இடையே இருக்கும்.
எனவே, உங்கள் ரூம் வாடகை உச்சவரம்பு ஒரு நாளைக்கு ரூ .4,000 ஆக இருக்கிறது எனும்போது, நீங்கள் ஒரு நாளைக்கு ரூ.6,000 வாடகை கொண்ட ரூமைத் தேர்வுசெய்தால், நீங்கள் உங்கள் சொந்த சேமிப்பில் இருந்து ரூ .2,000-ஐ செலுத்த வேண்டியது இருக்கும்.
கூடுதலாக, சில இன்சூரன்ஸ் நிறுவனங்கள் ரூமின் வகைக்கு லிமிட்களை வைக்கும். அதாவது ஜெனரல் வார்டுகள் அல்லது செமி-பிரைவேட் ரூம்கள் ஆகியவை மட்டுமே இதில் உள்ளடங்கும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் ரூமின் வகையின் அடிப்படையில் மருத்துவரின் ஆலோசனைக் கட்டணம் அல்லது ஆக்ஸிஜன் விநியோகக் கட்டணம் போன்ற மருத்துவச் செலவுகள் மாறுபடலாம்.
குறிப்பிட்ட சிகிச்சைகள் மற்றும்/அல்லது நோய்களுக்கும் சப்-லிமிட்கள் பெரும்பாலும் பொருந்தும், குறிப்பாக சிறுநீரக கற்கள், கண்புரை, பைல்ஸ், பித்தப்பை, குடலிறக்கம், டான்சில்ஸ், சைனஸ் போன்ற மிகவும் பொதுவான மற்றும் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட நடைமுறைகளுக்குப் பொருந்தும். சப்-லிமிட் விதியின் கீழ், உங்கள் இன்சூரன்ஸ் வழங்கும் நிறுவனம் இந்த சிகிச்சைகளுக்கான பில்லில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை மட்டுமே ஏற்கும்.
எடுத்துக்காட்டாக, உங்கள் இன்சூரன்ஸ் தொகை ₹15 லட்சமாக இருக்கிறது, ஆனால் உங்கள் பாலிசியில் புற்றுநோய் சிகிச்சைக்கான 50% சப்-லிமிட் இருந்தால், இந்த சிகிச்சைக்காக ₹7.5 லட்சத்துக்கு மேல் நீங்கள் கிளைம் செய்ய முடியாது.
சில ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முந்தைய மற்றும் பிந்தைய செலவினங்களுக்கான சப்-லிமிட்களையும் உள்ளடக்கியுள்ளன.
உங்கள் பாலிசியில் மருத்துவமனைக்குச் செல்வதற்கு முந்தைய செலவுகள் (எ.கா. நோயறிதல் சோதனைகள்), மற்றும் மருத்துவமனைக்குப் பிந்தைய செலவுகள் (எ.கா. குணமடைந்து வரும்போது மருந்துகள், சிகிச்சைகள் அல்லது பரிசோதனைகள்), இவையும் சப்-லிமிட்க்கு உட்பட்டதாக இருக்கலாம்.
நாம் மேலே பார்த்தபடி, சப்-லிமிட் இருக்கும்போது, அது இறுதி கிளைம் தொகையைக் குறைக்கிறது. மருத்துவமனை ரூம் வாடகை, சில நோய்களுக்கான சிகிச்சைகள் அல்லது மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பிறகு வரும் கட்டணங்கள் போன்றவற்றுக்கு, சப்-லிமிட் விதியின்படி, அதையும் தாண்டினாலும், நிர்ணயிக்கப்பட்ட தொகைக்கு மட்டுமே நீங்கள் கிளைம் செய்ய முடியும், மீதிக்கு உங்கள் சொந்த நிதியில் இருந்து செலுத்த வேண்டியது இருக்கும்.
எனவே, உங்களிடம் அதிக காப்பீட்டுத் தொகை இருந்தாலும், இந்த சப்-லிமிட் காரணமாக, உங்கள் மருத்துவமனையில் சேர்க்கப்படும் அல்லது சிகிச்சைச் செலவுகள் அனைத்திற்கும் உங்களால் கிளைம் கோர முடியாது.
மன அழுத்தம் நிறைந்திருக்கும் நேரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும்போது அல்லது கிளைம் தாக்கல் செய்யும் போது கடைசி நிமிட குழப்பத்தைத் தவிர்க்க, இந்த சப்-லிமிட்களை கவனமாக அறிந்து நினைவில் கொள்ளுங்கள். இந்த வழியில் நீங்கள் தொந்தரவு இல்லாத கிளைம் செயல்முறையை அனுபவிப்பதை உறுதி செய்யலாம்.
சப்-லிமிட்களை வழங்காத பாலிசிகளை நீங்கள் ஷாப்பிங் செய்யலாம் என்றாலும், இவை பெரும்பாலும் அதிக பிரீமியங்களைக் கொண்டிருக்கும். சப்-லிமிட்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்தால் தீர்மானிக்கப்படுவதால், இந்த சப்-லிமிட் கொண்ட பாலிசியை நீங்கள் தேர்வுசெய்தால், உங்களால் தொகைகளை மாற்ற முடியாது.
எனவே, நீங்கள் பாலிசியை வாங்குவதற்கு முன், பாலிசி ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள சப்-லிமிட்களை நன்கு புரிந்துகொண்டு, என்னென்ன சேர்ந்திருக்கிறது, என்னென்ன விலக்குகள் மற்றும் கோ-பே எவ்வளவு செலுத்த வேண்டும் என்பது போன்ற பிற முக்கிய காரணிகளைச் சரிபார்க்கவும். பாலிசியில் வழங்கப்படும் கவரேஜ் உங்கள் குறிப்பிட்ட தேவைகள் அல்லது உடல்நலப் பாதுகாப்புக்கான செலவுகளைக் காட்டிலும் குறைவாக இருப்பதாக நீங்கள் உணர்ந்தால், உங்கள் இன்சூரன்ஸ் தொகையை அதிகரிக்கலாம் அல்லது வேறு ஒரு இன்சூரன்ஸ் நிறுவனத்தை தேர்வுசெய்யலாம்.
ஹெல்த் இன்சூரன்ஸில் உள்ள சப்-லிமிட்களைப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியமானது ஆகும். ஏனெனில் பாலிசி உங்கள் தேவைகளுக்குப் பொருந்துகிறதா இல்லையா என்பதை தீர்மானிக்கும் காரணியாக இது மாறும். சப்-லிமிட்டைக் கொண்ட ஒரு ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டமானது, சப்-லிமிட்கள் இல்லாததை விட குறைவான பிரீமியத்தைக் கொண்டிருக்கும் போது, நீண்ட காலத்திற்கு அவை மிகவும் வரையறுக்கப்பட்ட கவரேஜை வழங்க முடியும். எனவே, நீங்கள் ஹெல்த் இன்சூரன்ஸை வாங்குவதற்கு முன், உங்கள் உடல்நலத் தேவைகள் மற்றும் உங்கள் பட்ஜெட் ஆகிய இரண்டிற்கும் பொருந்தக்கூடிய பாலிசியைத் தேடுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.