ஹெல்த் இன்சூரன்ஸ் கால்குலேட்டர் பற்றிய அனைத்து விபரங்களும் விளக்கப்பட்டுள்ளது
இந்தியா டுடேவில் பிரசுரிக்கப்பட்டுள்ள சமீபத்திய அறிக்கைகளின் படி, சராசரியாக இந்தியாவில் 2018-19-ஆம் ஆண்டிற்கான சில்லரை சுகாதார விலையேற்றம் என்பது 7.14% சதவிகிதமாக கண்டறியப்பட்டுள்ளது. இது முந்தைய வருடங்களில் இருந்த 4.39% சதவிகிதத்தை விடவும் இது கணிசமாக அதிகரித்துள்ளது. சுகாதார தயாரிப்புகளின் விலை மிக வேகமாக அதிகரித்துள்ளதையே இந்த புள்ளிவிவரம் காட்டுகின்றது. (1)
இப்பேற்பட்ட சூழ்நிலையில், ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி என்பது வெறுமனே ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மட்டுமின்றி, சிறப்பான மருத்துவ சிகிச்சையை பெறுவதன் பொருட்டு ஏற்படும் பெரும் நிதி நெருக்கடிகளை சமாளிப்பதற்கான ஒரு அவசியமாகவே கருதப்படுகின்றது.
இப்போது, நீங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி எடுப்பதாக வைத்துக் கொள்வோம், நீங்கள் அதனை பற்றி கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய முதன்மையான விஷயம் என்ன?
பிரீமியம் தொகையை குறித்த விபரங்கள் தான், நிச்சயமாக!
உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியத்தினை நீங்கள் எவ்வாறு கணக்கிடுவது என்பது குறித்தும், அதனை பாதிக்கின்ற காரணிகளை பற்றியும், மற்றும் அதனை குறைக்கும் வழிமுறையையும் பற்றி விரிவாக இனி தெரிந்து கொள்ளலாம்.
ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் கால்குலேட்டர் என்றால் என்ன?
தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக பெரும்பாலான இன்சூரன்ஸ் நிறுவனங்களும் கூட, தங்களுடைய செயல்பாடுகளை ஆன்லைன் பக்கம் திருப்பயுள்ளனர். பாலிசிதாரர்கள் எளிமையாக பயன்படுத்தும் பொருட்டு, உபயோகமான பல்வேறு ஆன்லைன் டூல்களையும் அறிமுகப்படுத்தியுள்ளனர்.
ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் கால்குலேட்டர் என்பது, உங்கள் இன்சூரன்ஸ் பிரீமியம் தொகையினை நீங்கள் உடனடியாக கணக்கிட்டுப் பார்ப்பதற்கு உதவுகின்ற ஒரு வகையான டூல் ஆகும்.
பிரீமியம் தொகையினை கணக்கிடுவதென்பது சிக்கலான வேலையாக இருக்கும் காரணத்தால், பெரும்பாலானோர் தங்களுடைய இன்சூரன்ஸ் வழங்குநர்கள் பரிந்துரை செய்கின்ற தொகையினையே ஏற்றுக் கொள்வார்கள். ஆயினும் ஆன்லைன் கால்குலேட்டரின் மூலமாக முயற்சி செய்யும் போது, தேவையான சில தகவல்களை மட்டுமே உள்ளிடுவதன் மூலம் எளிதாக சில நிமிடங்களிலேயே நீங்கள் பிரீமியம் தொகையினை கணக்கிட்டுப் பார்த்துக் கொள்ளலாம்.
நீங்கள் ஏன் ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியத்தினை ஆன்லைனில் கணக்கிட வேண்டும்?
இது உங்கள் நேரத்தையும், உதவியாதாரத்தையும் மிச்சப்படுத்துவதற்கு உதவுகின்றது. வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்றால் சிக்கலான வேலையை இது மிக எளிதாக்குகிறது.
இன்சூரன்ஸ் பாலிசிக்கள் என்பது சில சமயங்களில் புரிந்து கொள்வதற்கு மிகவும் சிக்கலாகவும், சிரமமாகவும் இருக்க வாய்ப்புள்ளது, ஏனென்றால் அவை பல்வேறு விதிமுறைகளையும், அவற்றின் கூறுகளையும் கொண்டிருக்கும். பல சமயங்களில், ஒவ்வொரு விதியிலும் சொல்லப்பட்ட குறிப்புகளையும் புரிந்து கொள்ள முடியாமலேயே மக்கள் இன்சூரன்ஸ் எடுக்க முயல்கிறார்கள், இதன் காரணமாக அவர்கள் எதிர்பார்த்ததை விடவும் அதிகமான தொகையினை செலுத்த நேரிடுகிறது. முன்னமேயே ஆன்லைனில் பிரீமியம் தொகையினை கணக்கிட்டு கொள்வதன் மூலமாக, இன்சூரன்ஸ் பிளானில் உள்ள நீங்கள் செலுத்த வேண்டிய தொகை விபரங்களை பற்றி நீங்கள் நன்றாக அறிந்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
மேற்கொண்டு, நீங்கள் துல்லியமான தகவல்களை உள்ளிடுவதன் மூலமாக, உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியத்தினை நீங்கள் கணக்கிடும் போது ஏற்படக் கூடிய எந்தவொரு தவறுகளையும் நேர விடாமல் இது தடுக்கிறது.
ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் கால்குலேட்டரின் 5 பலன்கள்
ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி பிரீமியம் கால்குலேட்டரை பயன்படுத்துவது எண்ணற்ற பலன்களை தருகிறது. உங்கள் பிரீமியம் தொகையினை கணக்கிடுவதற்கு நீங்கள் ஆன்லைன் ஹெல்த் இன்சூரன்ஸ் கால்குலேட்டரை பயன்படுத்தும் பட்சத்தில், உங்களுக்குக் கிடைக்கக் கூடிய பலன்கள் பின்வருமாறு:
- எளிமையான பொருளாதார திட்டமிடுதலுக்கு வழி செய்கிறது – இந்த கால்குலேட்டரை பயன்படுத்துவதன் மூலமாக, உங்கள் பாலிசியை வாங்குவதற்கு முன்னரே உங்கள் பிரீமியம் தொகையின் துல்லியமான மதிப்பீடு உங்களுக்குக் கிடைத்து விடும். இதன் மூலமாக எதிர்காலத்திற்கான உங்கள் பொருளாதாரத்தினை நீங்கள் மேலும் திறம்பட திட்டமிட்டுக் கொள்ளலாம்.
- பிரீமியம் தொகையினை செலுத்தத் தவறுகின்ற அபாயங்களை குறைக்கிறது – முன்கூட்டியே பிரீமியம் தொகையினை தெரிந்து கொள்வதினால், வருங்காலத்தில் பிரீமியம் தொகையினை செலுத்தத் தவறுகின்ற தருணங்கள் ஏற்படாமல் தடுக்க உதவும். நீங்கள் செலுத்துவதற்கு ஏற்ற பிரீமியம் தொகையினை தெரிந்து கொண்ட பின்னரே நீங்கள் பாலிசியை எடுத்துக் கொள்ளலாம்.
- உங்கள் தேவைகளுக்கேற்ப இன்சூரன்ஸ் பிளானை பெறலாம் – ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் கால்குலேட்டரின் மூலம், நீங்கள் பிளானிலுள்ள பல்வேறு அலகுகளை ஒழுங்குபடுத்திக் கொள்ளலாம். அதாவது, நீங்கள் செலுத்தக் கூடிய தொகை அளவினையும், உங்கள் காப்புறுதி தேவைகளுக்கு பொருந்துவது போன்றவை உள்ளிட்ட பிளானை நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கு இது உதவுகிறது.
- ஆட்-ஆன்களை(மதிப்புக்கூட்டல்கள்/Add-ons) தேர்வு செய்வதை எளிதாக்குகிறது – மெடிக்கல் இன்சூரன்ஸ் பிரீமியம் கால்குலேட்டர் என்பது உங்களுடைய பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்வதற்கு உதவுகின்ற உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிக்கான அனைத்து ஆட்-ஆன் கவர்களையும் காண்பிக்கிறது. உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியோடு நீங்கள் ஆட்-ஆன் கவர்களை வாங்கும் போது, நீங்கள் செலுத்த வேண்டிய பிரீமியம் தொகையினை கணக்கிடுவதற்கு இது உதவுகின்றது.
- சிறந்த ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை தேர்வு செய்வதற்கு உதவுகிறது – வெவ்வேறு இன்சூரன்ஸ் வழங்குநர்களின் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிக்களையும் பிரீமியம் கால்குலேட்டர் காண்பிக்கிறது, இது நீங்கள் அவற்றை ஒப்பிட்டு பார்ப்பதற்கு உதவும். இது சரியான இன்சூரன்ஸ் பாலிசியை எடுத்துக் கொள்ளும் நடைமுறையை மேலும் எளிமையாக்குகிறது.
ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் கால்குலேட்டரை எப்படி உபயோகப்படுத்துவது?
ஆன்லைன் இன்சூரன்ஸ் பிரீமியம் கால்குலேட்டரை பயன்படுத்தி நீங்கள் செலுத்த வேண்டிய பிரீமியம் தொகையினை கணக்கிடுவது மிகவும் எளிதாகும்!
நீங்கள் சில படிகளை மட்டுமே பின்பற்ற வேண்டும், உங்கள் விபரங்களை சரியாக உள்ளிடவும், அவ்வளவு தான்! ஹெல்த் இன்சூரன்ஸ் கவருக்கு செலுத்த வேண்டிய பிரீமியம் தொகையினை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
உதாரணத்திற்கு, நீங்கள் டிஜிட் இன்சூரன்ஸிலிருந்து ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி வாங்க விரும்பினால், நீங்கள் செலுத்த வேண்டிய பிரீமியம் தொகையினை எளிதாக கணக்கிட்டுப் பார்க்கலாம்.
இதோ பாருங்கள்!
ஆம், இது இவ்வளவு எளிதானது தான்!
செலவில்லை, தொந்தரவில்லை – சில நிமிடங்கள் மட்டுமே. ஹெல்த் இன்சூரன்ஸ் பிளானை நீங்கள் வாங்குவதற்கு செலுத்த வேண்டிய தொகையினை தெரிந்து கொள்ளலாம்!
உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியத்தினை பாதிக்கக்கூடிய காரணிகள் என்னென்ன?
இப்போது கால்குலேட்டரை பயன்படுத்தி ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியத்தினை கணக்கிடுவது எப்படியென நீங்கள் கற்றுக் கொண்டீர்கள், நீங்கள் செலுத்த வேண்டிய பிரீமியம் தொகையினை பாதிக்கக் கூடிய காரணிகளை பார்க்கலாம் –
1. சந்தைப்படுத்துதல் மற்றும் நிர்வகிப்பதற்கு செய்யப்படும் செலவுகள்
இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தங்களுடைய திட்டங்களை நிர்வகிப்பதற்கும், சந்தைப்படுத்துவதற்கும் பெருமளவில் செலவு செய்கின்றன. இந்த கட்டணங்கள் பாலிசிதாரர்களின் பிரீமியம் தொகையினில் பிரதிபலித்து, அவர்களையே சென்று சேருகின்றன.
2. நீங்கள் தேர்ந்தெடுத்திருக்கும் பிளானின் வகை
உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியின் பிரீமியம் தொகையானது, பெரும்பாலும் நீங்கள் தேர்வு செய்திருக்கும் பிளான் வகையை பொறுத்தே இருக்கிறது.
உதாரணத்திற்கு, ஃபேமிலி ஃப்ளோட்டர் பிளான்களை விடவும் இன்டிவிஜுவல் ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான்கள் விலைமிகுந்தது. இன்டிவிஜுவல் ஹெல்த் இன்சூரன்ஸிற்கு தான் நீங்கள் ஃபேமிலி ஃப்ளோட்டர் பிளான்களை விடவும் அதிக பிரீமியம் தொகை செலுத்த வேண்டியிருக்கும்.
மேலும் தெரிந்து கொள்ளவும்:
3. கோ-பேமெண்ட் விதிக்கூறுகள் மற்றும் டிடக்டிபிள்ஸ்
சில ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிக்கள் கட்டாய அல்லது தன்னிச்சையான கோ-பேமெண்ட் மற்றும் டிடக்டிபிள் விதிக்கூறுகளுடன் வருகின்றன. டிடக்டிபிள்ஸில், இன்சூரன்ஸ் பாலிசி உதவிக்கு வருவதற்கு முன்னர், பாலிசிதாரர் மருத்துவ சிகிச்சைக்காகும் செலவுகளில் ஒரு பகுதியை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
கோ-பேமெண்ட் விதிக்கூற்றுப்படி, மொத்த சிகிச்சை செலவுகளில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும், மீதமுள்ள செலவுகளை உங்கள் இன்சூரன்ஸ் வழங்குநர் ஏற்றுக் கொள்வார். ஆனால் கோ-பேமெண்ட் மற்றும் டிடக்டிபிள்ஸில் உள்ளபடி, இன்சூரன்ஸ் பாலிசிக்கான பிரீமியம் தொகை ஓரளவிற்கு குறைக்கப்பட்டுள்ளது. இவை உங்கள் பாலிசி பிரீமியம் தொகையினை பாதிக்கின்ற சில காரணிகள் ஆகும்.
கோ-பே, கோஇன்சூரன்ஸ் மற்றும் டிடக்டிபிள் பற்றி மேலும் தெரிந்து கொள்ளவும்
4. ஆட்-ஆன் கவர்கள்
ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் கால்குலேட்டரில் நீங்கள் பிரீமியம் தொகையை கணக்கிடும் போது, நீங்கள் வழங்க இருக்கின்ற அலகுகளில் ஆட்-ஆன் கவர்களும் ஒன்றாகும்.
ஏனென்றால், தற்போதைய ஹெல்த் இன்சூரன்ஸ் பிளானில் உள்ள பெனிஃபிட்களின் கூடவே நீங்கள் ஆட்-ஆன் கவர்களையும் தேர்வு செய்யும் போது, பாலிசிக்கான உங்கள் பிரீமியம் தொகை தானாகவே அதிகரிக்கிறது.
5. முதலீடு மற்றும் சேமிப்பு
பெரும்பாலான இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தங்கள் மூலதனத்தினை பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் முதலீடு செய்கின்றனர். இந்தியக் காப்பீடு ஒழுங்காற்று மற்றும் வளர்ச்சி முகமை (ஐஆர்டிஏ) வழங்குகின்ற வழிகாட்டுதல்களையே இந்த முதலீடுகள் பின்பற்றி வருகின்றன. இது பிற்காலத்தில் இணக்க பிரச்சினைகள் ஏற்படாதிருப்பதை உறுதி செய்கிறது.
இன்சூரன்ஸ் பாலிசிக்களுக்கு நீங்கள் செலுத்த வேண்டிய பிரீமியம் தொகையானது, ஓரளவிற்கு, சந்தை மூலதன மதிப்பாக்கத்திலிருந்து இன்சூரன்ஸ் வழங்குநர்களுக்கு கிடைக்கப்பெறும் இலாபத்தின் அடிப்படையிலும் அமைகிறது.
6. தரகர் மூலமாக இன்சூரன்ஸை வாங்குவது
உங்கள் பிரீமியம் தொகையினை இது அதிகப்படுத்தவில்லையென்றாலும் கூட, நீங்கள் பாலிசிக்கு செலுத்த வேண்டிய மொத்தத் தொகையை இது அதிகரிக்கவே செய்கிறது. ஏனென்றால் நீங்கள் தரகருக்கு அவர் செய்த பணிக்கேற்றவாறு கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
7. ஏற்கனவே இருக்கின்ற வியாதிக்கான காப்புறுதி
ஒரு வேளை நீங்கள் ஏற்கனவே இருக்கின்ற வியாதிகளுக்காக ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி எடுப்பதாக இருந்தால், காத்திருப்பு காலத்திற்கு (வெயிட்டிங் பீரியட்) பிறகு, பாலிசியின் நன்மைகளை நீங்கள் பெறலாம்.
ஆனாலும் இந்த காத்திருப்பு காலத்தை சமாளிப்பதற்கு ஒரு வழி உள்ளது – அதாவது கூடுதலாக பிரீமியம் தொகையை செலுத்துவது. ஆகவே, ஏற்கனவே இருக்கின்ற வியாதிக்கான கவரை நீங்கள் வாங்குகிறீர்களா என்பதை சார்ந்தும் கூட உங்கள் பிரீமியம் தொகை அமைகிறது.
8. இறப்பு விகிதம்
வாடிக்கையாளருக்கு நேரக் கூடிய எந்தவொரு விபரீதமான சூழ்நிலையிலும் ஏற்படும் இழப்பீட்டிற்கான செலவுகளை இன்சூரன்ஸ் வழங்குநர்களே ஏற்றுக் கொள்ள வேண்டியுள்ளதால், பிரீமியம் தொகை என்பது இறப்பு விகிதத்தை சார்ந்தே உள்ளது,
இதன் விளைவாக, பிரீமியம் தொகை என்பது வெவ்வேறு வயதினருக்கும் வெவ்வேறாக இருக்கிறது, பொதுவாகவே மூத்த மற்றும் மிக மூத்த குடிமக்களுக்கு அதிகமாக இருக்கும்.
9. மெடிக்கல் எழுத்துறுதி
ஒவ்வொரு இன்சூரன்ஸ் நிறுவனமும் இன்டிவிஜுவல் பாலிசிக்கள், குரூப் இன்சூரன்ஸ் பாலிசிக்கள், ஃபேமிலி ஃப்ளோட்டர் பாலிசிக்கள் போன்ற பல்வேறு வகையான திட்டங்களை வழங்குகின்றன.
இந்த பாலிசிக்களுக்கான எழுத்துறுதி என்பது, இந்த பாலிசிக்களின் மூலம் ஏற்படக் கூடிய அபாயங்கள் சமச்சீராக உள்ளதெனவும், இன்சூரன்ஸ் வழங்குநரின் லையபிலிட்டிஸ் (பொறுப்புகள்) சரியாக நிர்வகிக்கப்படுகின்றன எனப்படும் முறையிலேயே மேற்கொள்ளப்படுகின்றன.
ஆகவே, இன்சூரன்ஸ் பாலிசிக்களுக்கான பிரீமியம் தொகை என்பது, ஒரு தனிநபர் அவர்தம் மருத்துவ விபரங்களின் அடிப்படையில், பாலிசிதாரராக எந்தளவிற்கு நோய் அபாயம் உள்ளவராக இருக்கிறாரென்பதையும் சார்ந்தே இருக்கின்றது.
10. அடிப்படையான விலை (பேஸ் ரேட்டிங்/Base Rating)
இன்சூரன்ஸ் வழங்குநர்கள், பாலினம், வயது, குடும்ப அளவு, நிலவியல் அமைப்பு, அவர்தம் தொழில் போன்ற ஒரே மாதிரியான பண்புகளை கொண்ட ஒரு குறிப்பிட்ட தனிநபர்களின் குழுவிற்கு ஒரு அடிப்படையான விலையை தீர்மானிக்கின்றனர்.
உதாரணத்திற்கு, 25 முதல் 35 வரையிலுள்ள வயதினரை விடவும், 40 முதல் 50 வயது வரையிலுள்ள வயதினர் அதிக பிரீமியம் தொகை செலுத்த வேண்டுமென்பது அடிப்படை விலையாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியத்தினை எவ்வாறு குறைப்பது?
இதனை செய்வதற்கு சில எளிமையான வழிமுறைகள் உள்ளன! உதாரணத்திற்கு:
1. இள வயதிலேயே பாலிசி எடுப்பது
ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிக்களுக்கு செலுத்தப்படும் பிரீமியம் தொகையினை மிச்சப்படுத்துவதற்கான சிறந்த வழிகளுள் ஒன்று, இள வயதிலேயே இந்த காப்பீட்டினை தேர்வு செய்வது தான்.
பெரும்பாலான இன்சூரன்ஸ் நிறுவனங்களில், ஒரு நபரின் வயது அதிகரிக்கும் போது இன்சூரன்ஸ் பிரீமியம் தொகையும் அதிகரிக்கிறது. ஏனென்றால் அவர்கள் நோயுறுவதற்கு அதிக வாய்ப்புள்ளதால் இவ்வாறு கடைபிடிக்கப்படுகிறது. அதனால் தான் நீங்கள் இளமையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும் போதே இன்சூரன்ஸ் எடுப்பது சிறந்ததென கருதப்படுகிறது.
அது மட்டுமின்றி, உங்கள் பெற்றோருக்கு நீங்கள் பாலிசி வாங்குவதாக இருந்தால், அவர்கள் 60 வயதை தொடும் முன்னரே வாங்கி விடுங்கள். ஏனென்றால் மூத்த குடிமக்களுக்கு எடுக்கப்படும் ஹெல்த் இன்சூரன்ஸிற்கான பிரீமியம் தொகை அதிகமாகும்.
2. டிடக்டிபிள்ஸ்/கோ-பேமெண்ட்-ஐ தேர்வு செய்யவும்
டிடக்டிபிள்ஸ் மற்றும் கோ-பேமெண்ட்-ஐ தேர்வு செய்வதன் மூலம், உங்கள் இன்சூரன்ஸ் பாலிசியின் பிரீமியம் தொகையினை நீங்கள் குறைக்கலாம். டிடக்டிபிள்ஸ் மற்றும் கோ-பேமெண்ட் விதிக்கூறுகளின் படி உங்கள் சிகிச்சை செலவுகளின் ஒரு பகுதியை நீங்கள் ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில், உங்கள் இன்சூரன்ஸ் பாலிசிக்கு செலுத்தப்படும் பிரீமியம் தொகை குறைக்கப்படுகின்றது.
3. டாப்-அப் பிளான்களை தேர்ந்தெடுக்கவும்
அதிகமான காப்புறுதித் தொகையினை தேர்வு செய்வது அதிகமான பிரீமியம் தொகையினை செலுத்துவதற்கு இட்டுச் செல்வதால், நீங்கள் குறைவான காப்புறுதியை கொண்ட பாலிசியை தேர்வு செய்யலாம்.
மேற்கொண்டு, சிகிச்சை பெறுவதற்கான உங்கள் பொருளாதார லையபிலிட்டிஸ் (பொறுப்புகள்) குறைவாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு, உங்களுடைய இன்சூரன்ஸ் பிளானில் டாப்-அப்-ஐ நீங்கள் பெறலாம். இது நீங்கள் இன்சூர் செய்த அடிப்படையான தொகை தீர்ந்து போனவுடனே செயல்பாட்டுக்கு வரும்.
4. ஆட்-ஆன் கவர்களை தேர்வு செய்யும் போது கவனமாக இருக்கவும்
உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிக்கு நீங்கள் அதிக பணம் செலுத்தாமலிருப்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு, உங்கள் ஆட்-ஆன் கவர்களை தேர்வு செய்யும் போது கவனமாக இருக்கவும்.
உங்களுக்கு அவசியமில்லாதவற்றை தேர்ந்தெடுப்பது, உங்கள் இன்சூரன்ஸ் கவருக்கு நீங்கள் தேவையில்லாமல் அதிகமாக பணம் செலுத்துவதற்கு இட்டுச் சென்று விடும்.
5. உங்கள் இன்சூரன்ஸ் வழங்குநரிடமிருந்து நேரடியாக வாங்கவும்
உங்கள் இன்சூரன்ஸ் பாலிசியை தரகர் மூலமாக வாங்குவதனால், இன்சூரன்ஸ் பாலிசியை வாங்குவதற்கு அதிக செலவே ஆகிறது. ஏனென்றால் நீங்கள் அவர்களிடமிருந்து பெறும் சேவைக்கும் பணம் செலுத்த வேண்டியிருக்கும். இதனை தவிர்ப்பதற்கு, உங்கள் இன்சூரன்ஸ் வழங்குநரிடமிருந்தே நீங்கள் நேரடியாக இன்சூரன்ஸ் பாலிசியை வாங்கிக் கொள்ளலாம்.
6. உங்கள் ஸோனிற்கு தகுந்தவாறு பிளானை தேர்வு செய்யவும்
நீங்கள் ஸோன் சி-யில் வசிக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம், அங்கு ஸோன் ஏ அல்லது ஸோன் பி நகரங்களை விடவும் சிகிச்சை செலவுகள் மிக குறைவாக இருக்கிறது. ஸோன் சி நகரத்தில் சிகிச்சை செலவுகளுக்கு ஆகும் செலவுகளுக்கு காப்புறுதி வழங்கும் உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிக்கு நீங்கள் செலுத்தும் பிரீமியம் தொகையும் கூட, மற்ற இரண்டு ஸோனையும் விட குறைவாக தான் இருக்கும்.
டிஜிட்டில், எங்களிடம் இரண்டு சோன்கள் உள்ளன: சோன் A (கிரேட்டர் ஹைதராபாத், டெல்லி NCR, கிரேட்டர் மும்பை) மற்றும் சோன் B (இந்தியாவின் பிற பகுதி). நீங்கள் சோன் B-ஐ அடிப்படையாகக் கொண்டால் பிரீமியத்தில் கூடுதல் தள்ளுபடியைப் பெறுவீர்கள். அதுமட்டுமல்ல, சோன் அடிப்படையிலான கோ-பேமெண்ட் எதுவும் நாங்கள் பெறுவதில்லை.
அதனால்தான், நீங்கள் உங்கள் நகரத்தில் சிகிச்சை பெறத் திட்டமிட்டால், உங்கள் பிரீமியக் கட்டணத்தில் சேமிக்க அதற்கேற்ப திட்டத்தைத் தேர்வுசெய்து கொள்ள வேண்டும்.
7. நோ கிளைம் போனஸ் பாலிசியை சரிபார்க்கவும்
பாலிசி ஆண்டில் கிளைம்கள் இல்லையா? நீங்கள் போனஸைப் பெறுவீர்கள் - ஆரோக்கியமாக இருப்பதற்கும், கிளைம் செய்யாமல் இருப்பதற்கும் உங்கள் மொத்த காப்பீட்டுத் தொகையில் கூடுதல் போனஸ் வழங்கப்படும்!
இந்த போனஸ், குமுலேட்டிவ் போனஸ் என்றும் அழைக்கப்படுகிறது, இது ஒவ்வொரு கிளைம் இல்லாத வருடத்திற்கும், அடிப்படை காப்பீட்டுத் தொகையில் ஒரு குறிப்பிட்ட சதவீதமாக கணக்கிடப்படுகிறது .
டிஜிட்டில், உங்கள் திட்டத்தைப் பொறுத்து 10% அல்லது 50%, அதிகபட்சம் 100% வரை வழங்கப்படும்.
இதன் விளைவாக, உங்கள் மொத்த காப்பீட்டுத் தொகை அதிகரிக்கிறது. இருப்பினும், உங்கள் இன்சூரன்ஸ் பாலிசி காலாவதியான பிறகு புதுப்பிக்கத் தவறினால், இந்த போனஸ் ரத்து செய்யப்படும்.
8. ஃபேமிலி ஃப்ளோட்டர் பிளான்களை தேர்வு செய்யவும்
இன்டிவிஜுவல் பிளான்களை விடவும் ஃபேமிலி ஃப்ளோட்டர் பிளான்களை தேர்வு செய்வது, ஒரு பிளானில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களுக்கு காப்புறுதி செய்யப்பட்டிருக்கும் காரணத்தினால், பணத்தை மிச்சப்படுத்துவதற்கு உதவுகின்றது.
ஹெல்த் இன்சூரன்ஸ் வரிச்சலுகைகள்
வருமான வரிச் சட்டம், 1961-இன் பிரிவு 80டி-யின் கீழ் உள்ள விதிகளின்படி, உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியின் மீது நீங்கள் வரிச்சலுகைகளை பெறலாம்.
உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியின் மீது நீங்கள் பெறக் கூடிய வரிச்சலுகைகளை எடுத்துரைக்கின்ற கீழ்க்கண்ட அட்டவணையை பார்க்கவும்:
தகுதி | வரிவிலக்கு வரம்பு |
---|---|
சுயம் மற்றும் குடும்பத்திற்கு (துணை, சார்ந்திருக்கும் குழந்தைகள்) | ரூ.25,000 வரை |
சுயம், குடும்பம் + பெற்றோருக்கு (60 வயதிற்கு கீழே உள்ளவர்கள் | (ரூ.25,000 + ரூ.25,000) வரை = ரூ.50,000 |
சுயம் மற்றும் குடும்பத்திற்கு (மூத்த உறுப்பினருக்கு 60 வயதிற்கு கீழ் இருக்கும் பட்சத்தில்) + பெற்றோர் (60 வயதிற்கு மேற்பட்டோர்) | (ரூ.25,000 + ரூ.50,000) வரை = ரூ.75,000 |
சுயம் மற்றும் குடும்பத்திற்கு (மூத்த உறுப்பினருக்கு 60 வயதிற்கு மேலே இருக்கும் பட்சத்தில்) + பெற்றோர் (60 வயதிற்கு மேற்பட்டோர்) | (ரூ.50,000 + ரூ.50,000) வரை = ரூ.1,00,000 |
நீங்கள் இன்னமும் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி வாங்குவது குறித்து சிந்தித்துக் கொண்டிருந்தால், நிறுத்துங்கள்! இன்றே ஒரு பாலிசி வாங்கி விடவும்!
ஆனால் இன்சூரன்ஸ் வாங்குவதற்கு விண்ணப்பிக்கும் முன்னர், மெடிகிளைம் இன்சூரன்ஸ் பிரீமியம் கால்குலேட்டரை பயன்படுத்தி உங்கள் பிரீமியம் தொகையினை கணக்கிட்டுப் பார்ப்பதற்கு மறந்து விடாதீர்கள்!
மேலும் தெரிந்து கொள்ளவும்:
ஹெல்த் இன்சூரன்ஸ் கால்குலேட்டர் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
டிடக்டிபிள் என்றால் என்ன?
டிடக்டிபிள் என்பது, சிகிச்சை செலவுகளில் ஒரு பகுதியை பாலிசிதாரர் தாமே செலுத்துவதை குறிக்கும். அதற்கு பிறகு தான் அவர்களின் இன்சூரன்ஸ் காப்புறுதி செலவுகளை ஏற்றுக் கொள்கிறது.
ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியத்தின் மீது நீங்கள் ஜிஎஸ்டி செலுத்த வேண்டியிருக்குமா?
ஆம், ஹெல்த் இன்சூரன்ஸின் பிரீமியத்தின் மீது 18% ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது.
ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிக்களின் பிரீமியம் தொகை என்பது ஒரு இன்சூரன்ஸ் வழங்குநருக்கும் மற்றவருக்கும் வேறுபடுமா?
ஆம், செலுத்த வேண்டிய பிரீமியம் தொகையானது ஒரு இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கும் மற்றவைக்கும் இடையே வேறுபடும் தன்மையது.