ஆன்சைட் வேலை வாய்ப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மக்கள் தங்கள் குடும்பங்களை விட்டு மைல்களுக்கு அப்பால் சென்று தங்கள் தொழிலைத் தொடர்கின்றனர். இது எந்த ஒரு நிபந்தனையுமில்லாத ஒரு இலாபகரமான விருப்பமாகத் தோன்றினாலும், ஒருவர் வெளியேறும் முடிவை எடுப்பதற்கு முன் சரிபார்ப்புப் பட்டியலில் பல விஷயங்கள் உள்ளன; அதில் பெற்றோர்கள் முதன்மையான கவலைகளில் ஒன்றாக இருக்க வேண்டும். சமீபத்திய கோவிட் 19 தொற்றுநோய் என்.ஆர்.ஐ-களின் பெற்றோரின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இந்த கவலைகளை மேலும் அதிகரித்தது.
குடும்ப ஆரோக்கியத்தை நோக்கி எடுக்கப்பட்ட முக்கிய நடவடிக்கைகளில் ஒன்று ஹெல்த் இன்சூரன்ஸை வாங்குவது மற்றும் இது என்.ஆர்.ஐ-களுக்கும் பொருந்தும். இது சம்பந்தமாக, அடிக்கடி எழும் பொதுவான கேள்வி என்னவென்றால், "என்.ஆர்.ஐ-கள் இந்தியாவில் வசிக்கும் தங்கள் பெற்றோருக்கு ஹெல்த் இன்சூரன்ஸ் வாங்கலாமா?" இந்தக் கேள்விக்கு பதிலளிக்கையில், ஐஆர்டிஏஐ படி, ஆம், என்.ஆர்.ஐ-கள் கண்டிப்பாக இந்தியாவில் வசிக்கும் தங்கள் பெற்றோருக்கு ஹெல்த் இன்சூரன்ஸை வாங்கலாம்.
அதிக மருத்துவச் செலவுகள்: கடந்த சில தசாப்தங்களில் அதிகரித்த ஆயுட்காலத்திற்கு ஒரு மறுபக்கமும் உள்ளது. மருத்துவச் செலவுகள் உயர்ந்துவிட்டன, குறிப்பாக வயதான காலத்தில் விலையுயர்ந்த மருத்துவ உதவி தேவைப்படும் பன்மடங்கு சம்பவங்கள் இருக்கும். இது போன்ற சூழ்நிலைகளுக்கு, உங்கள் சேமிப்பிற்கு ஹெல்த் இன்சூரன்ஸ் உதவுகிறது.
மகிழ்ச்சியான நாட்களுக்கு ஓய்வூதியத்தை சேமிக்கவும்: உங்கள் பெற்றோர் ஓய்வூதியம் பெறுபவர்களாக இருந்தாலும், அவர்களின் தனிப்பட்ட செலவினங்களுக்காக ஓய்வூதியத்தை பாதுகாப்பாக வைத்திருங்கள். மருத்துவ அவசரநிலைகளுக்கு, சேமிப்பின் பெரும்பகுதியை உபயோகிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது, எனவே எப்போதும் ஒரு ஹெல்த் இன்சூரன்ஸை வைத்திருப்பது ஒரு புத்திசாலித்தனமான முடிவாகும்.
எதிர்பாராத காலங்களில் உங்கள் பெற்றோரை சுயசார்புடையவர்களாக ஆக்குங்கள்: இந்திய மக்கள் தொகையில் பெரும் பகுதியினருக்கு ஓய்வூதியம் கூட கிடைக்கவில்லை. இதுபோன்ற சந்தர்ப்பங்களில், பெற்றோர்கள் பெரும்பாலும் தங்கள் சம்பாதிக்கும் குழந்தைகளையோ அல்லது அவர்களின் வாழ்நாள் சேமிப்பையோ சார்ந்திருக்கிறார்கள். இரண்டிலும், ஹெல்த் இன்சூரன்ஸ் மருத்துவத் தேவைகளின் போது நமது சேமிப்பை பாதிக்காமல் பாதுகாக்கும். மேலும், கேஷ்லெஸ் காப்பீடு கையில் இருப்பதால், நம் பெற்றோர்களிடம் நாம் இல்லாதபோதும், சிரமமின்றி, எளிதாக மருத்துவ வசதியைப் பெற முடியும்.
சேமிப்பிற்கான நிதி சௌகரியம்: மருத்துவ பில்களை செலுத்துவது நிச்சயமாக ஒரு கடினமான வேலை மற்றும் சில திட்டமிடப்பட்ட நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் சேமிப்பில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த சுகாதார தேவைகள் நீங்கள் குறைவாக எதிர்பார்க்கும் போது வரும். அந்த சமயங்களில், உங்கள் திட்டமிடல்கள் மற்றும் சந்தோஷமான விஷயங்களுக்கு ஹெல்த் இன்சூரன்ஸ் செய்து கொள்ளுங்கள்
இன்னும் கொஞ்சம் வரிச் சேமிப்பு எப்போதும் வரவேற்கத்தக்கது: இந்தியாவில் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிக்கு செலுத்தப்படும் பிரீமியமும் இந்திய வருமான வரிச் சட்டத்தின்படி வரி விலக்குக்கு உட்பட்டது. சுய, மனைவி, சார்ந்திருக்கும் குழந்தைகள் மற்றும் சார்ந்திருக்கும் பெற்றோருக்கு செலுத்தப்படும் பிரீமியமும் இதில் அடங்கும். எனவே, என்.ஆர்.ஐ-கள் பிரிவு 80டியின் கீழ் இந்திய வருமானத்தில் தள்ளுபடி கோரலாம்.
வரிச் சலுகைகள் பற்றி மேலும் அறிக:
கோ-பேமெண்ட் |
இல்லை |
அறை வாடகை வரம்பு |
இல்லை |
கேஷ்லெஸ் மருத்துவமனைகள் |
இந்தியா முழுவதும் 10500+ நெட்வொர்க் மருத்துவமனைகள் |
உள்ளமைக்கப்பட்ட பர்சனல் ஆக்சிடன்ட் கவர் |
உள்ளது |
நல்வாழ்வு பலன்கள் |
10+ நல்வாழ்வு பார்ட்னர்களிடமிருந்து கிடைக்கும் |
நகர அடிப்படையிலான தள்ளுபடி |
10% வரை தள்ளுபடி |
உலகளாவிய கவரேஜ் |
உள்ளது* |
குட் ஹெல்த் தள்ளுபடி |
5% வரை தள்ளுபடி |
கன்ஸ்யூமபில் கவர் |
ஆட்-ஆனாகக் கிடைக்கிறது |