டே-கேர் சிகிச்சைகள், ஹாஸ்பிடலைஷேஷனுக்கான மருத்துவ சிகிச்சைகள் மற்றும் நடைமுறைகளைக் குறிக்கின்றன, ஆனால் மருத்துவ முன்னேற்றங்கள் மற்றும் தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரை 24-மணி நேரத்திற்கு மேல் செல்வதில்லை. சிகிச்சை நடைமுறைகளின் காலம் இப்போது மிகவும் குறைவு!
கண்புரை அறுவை சிகிச்சைகள், நேசல் சைனஸ் ஆஸ்பிரேஷன், புற்றுநோய் கீமோதெரபி, புற்றுநோய் கதிரியக்க சிகிச்சை போன்றவை டே-கேர் சிகிச்சையின் பிரபலமான எடுத்துக்காட்டுகள்.
டிஜிட் எளிமைப்படுத்தல்: தேவையான நடைமுறை ஒரு நாள் மட்டுமே எடுக்கும் போது தேவையில்லாமல் மருத்துவமனையில் ஏன் தங்க வேண்டும்!
குறிப்பு: டே-கேர் நடைமுறைகளைப் பற்றி மனதில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், அனைத்து குறுகிய கால சிகிச்சைகளும் டே-கேர் நடைமுறைகளாக கருதப்படுவதில்லை. எனவே, ஓ.பி.டி ஆலோசனைகளுடன் இதையும் குழப்பிக் கொள்ளக் கூடாது.
மருத்துவ தொழில்நுட்பங்கள் மற்றும் நடைமுறைகளில் முன்னேற்றம் காரணமாக 24 மணி நேரத்திற்கும் குறைவான ஹாஸ்பிடலைஷேஷன் சிகிச்சைகள், அறுவை சிகிச்சைகள் மற்றும் செயல்பாடுகளை மட்டுமே டே-கேர் சிகிச்சை கண்டிப்பாகக் குறிக்கிறது.
உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸில் 24-மணி நேரத்துக்கும் மேலான ஹாஸ்பிடலைஷேஷன் "மருத்துவமனைச் செலவுகள்" மற்றும் எலும்பு முறிவுகள், சுளுக்கு மற்றும் பிற மருத்துவர் ஆலோசனைகள் போன்ற சிறிய மருத்துவக் கவலைகளுக்குத் தேவைப்படும் ஓ.பி.டி ஆலோசனைகள், ஓ.பி.டி நன்மை அல்லது ஓ.பி.டி காப்பீட்டின் கீழ் உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியால் குறிப்பிடப்பட்டுள்ளது.
அக்காலத்தில், ஹெல்த் இன்சூரன்ஸ் கொள்கைகள் 24-மணிநேரத்திற்கு அப்பாற்பட்ட சிகிச்சை மற்றும் ஹாஸ்பிடலைஷேஷனை மட்டுமே உள்ளடக்கியது. இருப்பினும், மருத்துவ முன்னேற்றங்கள் மற்றும் தொழில்நுட்பத்திற்கு நன்றி, இன்று பல சிகிச்சைகள் முன்பை விட மிகக் குறைந்த நேரத்தில் செய்யப்படுகின்றன.
கண்புரை அறுவை சிகிச்சைகள், கீமோதெரபி, கதிர்வீச்சு சிகிச்சை, டயாலிசிஸ், ஹைமனெக்டோமி மற்றும் ஆர்த்ரோஸ்கோபிக் முழங்கால் சிகிச்சைகள் போன்ற சிகிச்சைகளும் இதில் அடங்கும்.
இதுபோன்ற பல சிகிச்சைகள் 24 மணி நேரத்திலும் செய்யப்படலாம். அதோடி பல நோயாளிகளுக்கு இது தேவைப்படுவதாலும், அதிக சுகாதாரச் செலவை உள்ளடக்கியதாலும், IRDAI (இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம்) இதையே ஹெல்த் இன்சூரன்ஸ் கொள்கைகளில் அறிமுகப்படுத்தியது.
அதற்காக கடவுளுக்கு நன்றி! இதன்மூலம், மருத்துவ முன்னேற்றம் காரணமாக 24-மணி நேரத்திற்கும் குறைவான ஹாஸ்பிடலைஷேஷன் வேண்டிய இத்தகைய சிகிச்சைகளை டே-கேர் நடைமுறைகள் என குறிப்பிடப்படுகின்றன.
கண்புரை அறுவை சிகிச்சைக்காக ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது, அவர்/அவள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, அதே நாளில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்.
|
டே-கேர் நடைமுறைகள் |
ஓ.பி.டி(OPD) |
இதற்கு என்ன அர்த்தம்? |
டே-கேர் நடைமுறைகள் ஹாஸ்பிடலைஷேஷன் வேண்டிய சிகிச்சைகளைக் குறிக்கின்றன, ஆனால் மருத்துவ முன்னேற்றங்கள் காரணமாக இவை 24-மணி நேரத்திற்கும் குறைவாகவே இருக்கும். |
ஓ.பி.டி என்பது அவுட் பேஷண்ட் டிபார்ட்மென்ட் என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது மற்றும் உங்கள் தினசரி மருத்துவ ஆலோசனைகள் அல்லது சிறிய தையல்கள் மற்றும் எலும்பு முறிவுகள் போன்ற சிறிய சிகிச்சைகளைக் குறிக்கிறது. |
ஹாஸ்பிடலைஷேஷன் |
< 24 மணிநேரம் ஹாஸ்பிடலைஷேஷன் தேவை |
ஹாஸ்பிடலைஷேஷன் தேவையில்லை |
எடுத்துக்காட்டுகள் |
தோலுக்கான வேதியியல் அறுவை சிகிச்சை, தோல் மாற்று அறுவை சிகிச்சை மற்றும் மறுசீரமைப்பு, தசைநார் கிழித்தல், கண்புரை அறுவை சிகிச்சை, கார்னியல் கீறல், கதிரியக்க சிகிச்சை மற்றும் கீமோதெரபி ஆகியவை டே-கேர் நடைமுறைகளின் எடுத்துக்காட்டுகளில் அடங்கும். |
ஓ.பி.டி-இன் எடுத்துக்காட்டுகளில், ஏதேனும் உடல்நலமின்மை அல்லது நோய்க்கான வழக்கமான மருத்துவ ஆலோசனைகள் அடங்கும், அதாவது பருவகால காய்ச்சல், காயம் காரணமாக சிறிய கட்டு போடுதல், வழக்கமான உடல்நலப் பரிசோதனைகள் மற்றும் ஆலோசனைகள் போன்றவை. |
என்னென்ன கவர் செய்யப்படும்? |
ஒரு ஹெல்த் இன்சூரன்ஸில், டே-கேர் நடைமுறைகள் பொதுவாக மொத்த காப்பீட்டுத் தொகை வரை கவர் செய்யப்படும். கோரப்படும் டே-கேர் சிகிச்சைக்கான அனைத்து ஹாஸ்பிடலைஷேஷனுக்கு முன் மற்றும் பிந்தைய செலவுகள் இதில் அடங்கும். |
ஹெல்த் இன்சூரன்ஸில் ஓ.பி.டி நன்மைகள் அல்லது ஓ.பி.டி கவர்கள் பொதுவாக ஒரு குறிப்பிட்ட தொகை வரை மட்டுமே இருக்கும் மற்றும் ஒவ்வொரு இன்சூரருக்கும் வேறுபடும். எடுத்துக்காட்டாக, பல ஹெல்த் இன்சூரர்கள் ஓ.பி.டி-க்கு, ஆண்டுக்கு ரூ. 5,000 வரை வழங்குகிறார்கள். |
டே-கேர் நடைமுறைகள் அறுவை சிகிச்சைக்கு அப்பாற்பட்டும் பொருந்தும். டே-கேர் சிகிச்சைகள் பொதுவாக நோய் கண்டறிதல், மருந்துகள், ஹாஸ்பிடலைஷேஷன், வைட்டல்கள், ஊசி மருந்துகள் மற்றும் ஹாஸ்பிடலைஷேஷனுக்கு பிந்தைய செலவுகள் போன்ற பல செலவுகளை உள்ளடக்கியது.
ஆதலால், இவற்றை ஒன்றாக்கும்போது; ஒரு குறிப்பிட்ட சிகிச்சைக்கான மொத்த பில் உண்மையில் அதிகமாக இருக்கும், மேலும் இது உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் பயன்பாட்டில் உள்ளது, ஏனெனில் இது உங்கள் சிகிச்சைக்கான நிதியை உள்ளடக்கும்.